ரத்த தானம் கொடுப்பவர்...
நமக்கு இருப்பதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவும் செயலை தானம் என்று சொல்கிறோம். எந்த பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு நாம் எதைக் கொடுத்தாலும் அது தானம்தான்.
ஒருவரது பசியைப் போக்குவது அன்னதானம். ஒருவருக்கு பார்வை கொடுப்பது கண் தானம். ஆனால் ஒருவருக்கு உயிரையேக் கொடுக்கலாம் ஒரு தானத்தின் மூலமாக. ஆனால் அதற்காக நாம் நமது உயிரைக் கொடுக்க வேண்டாம், ரத்தத்தைக் கொடுத்தால் போதும்.
சரி ரத்த தானம் செய்வது பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது. அது பற்றிய பயம், அறியாமை போன்ற எவ்வளவோ விஷயங்கள் மக்களிடம் உள்ளன. அவற்றை களைந்து உயிரைக் காக்கும் ரத்த தானத்தை அளிக்க முன் வர வேண்டும்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம். ஆனால் ரத்த தானம் அளிக்க விரும்புவோரது உடல் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
நல்ல ஆரோக்கியமாக இருக்கும் எந்த நபரும் ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ரத்த தானம் செய்ய முடியும்.
சாதாரண எடையுள்ள ஒவ்வொரு மனித உடம்பிலும் ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம் இருக்கும். அதில் இருந்து வெறும் 300 முதல் 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே ரத்த தானத்தின் போது எடுக்கப்படும்.
தானமாக அளித்த ரத்த அளவை நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும்.
0 ரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும்.
0 ரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
0 ரத்த தானம் செய்வதற்கு முன்பு தனக்கு ரத்த சோகை, ரத்த அழுத்தம் போன்ற எந்த நோயும் இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழை அளிக்க வேண்டும்.
0 ரத்த தானம் செய்யும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. குடித்திருக்கவும் கூடாது.
0 ரத்த தானம் செய்ய விரும்புவர்களுக்கு சர்க்கரை நோய், டிபி, எய்ட்ஸ் போன்று ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது.
0 ரத்த தானம் அளிக்க விரும்புபவருக்கு கடந்த 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.
யாரெல்லாம் ரத்த தானம் அளிக்க கூடாது...
0 கர்பமாக இருப்பவர்கள் அல்லது சமீபத்தில் கருக்கலைப்பு ஆனவர்கள்.
0 தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள்.
0 போதைப் பொருள் பழக்கம் அல்லது பலரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள்.
0 வரும் காலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்.
0 பெண்கள் தங்களது மாதவிலக்கு நேரத்தில் ரத்த தானம் செய்ய இயலாது.
0 இதய நோய், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் பழுதடைந்தவர்கள், ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் அளிக்க இயலாது.
ரத்த தானத்தினால் பாதிப்பு உண்டா?
ரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.
ஆனால், ரத்த தானம் அளிக்கும்போது நம்மிடம் இருந்து ரத்தம் எடுக்கப் பயன்படும் ஊசிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் புதிதாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை மட்டும் நாம் சோதித்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: "தமிழ் உலகம்" நிலா முற்றம்
செவ்வாய், மே 31
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக