Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, ஜனவரி 21

அவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான் உங்களை உயர்த்தற படிக்கட்டுகள் - சகோதரி ரைஹானா



அவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான் உங்களை உயர்த்தற படிக்கட்டுகள் - சகோதரி ரைஹானா



'ஒரு படி மட்டன் பிரியாணி 1,100 ரூபாய்... கோழி பிரியாணி 1,000 ரூபாய்..! எலும்பு, கத்தரிக்காய், பருப்பு போட்ட தாழ்ச்சா, ரெய்தா இலவச இணைப்பு!'



- அமர்க்களமாக அசத்திக்கொண்டுஇருக்கிறது, மதுரை கே.கே.நகரிலிருக்கும் ரைஹானாவின் 'எம்.எஸ்.ஆர். கேட்டரிங் சர்வீஸ்'! 'அதென்ன வித்தியாசமா படி கணக்கு..?' என்று ஆர்ச்சர் யத்துடனேயே ஆரம்பித்தோம் ரைஹானாவிடம்.

"சிறியவர், பெரியவர், முதியவர்னு கலந்துக்கற விசேஷங்கள்ல தலை கணக்கோ, இலை கணக்கோ, பிளேட் கணக்கோ சார்ஜ் செஞ்சா வீட்டுக்காரருக்கு நஷ்டம்தான் வரும். படி கணக்குங்கறது, நியாயமான விலையில நிக்கும். அதாவது, ஒரு படி பிரியாணி அரிசி, ஒண்ணரை கிலோ எடையிருக்கும். அதுக்கு ஒண்ணரை கிலோ தனிக்கறி, அதோட தரமான வீட்டு நெய், அவ்வப்போது தயார் செய்ற மசாலா... இத்தனையும் சேர்ந்ததுதான் ஒரு படி பிரியாணி.

வெறும் பிரியாணி மட்டும்னா ஒரு படி பிரியாணியை பதினஞ்சு பேர் வரை சாப்பிடலாம். நிறைய சைட் டிஷ், ரசம் சாதம், தயிர் சாதம்னு இருந்தா, இருபத்தி அஞ்சு பேர் வரை சாப்பிடலாம்!" என்று கணக்கு சொல்லும் ரைஹானா, கொடைக்கானலில் விவசாயத்துறையில் தொடர்ந்து 13 முறை விருதுகள் வாங்கிய 'கரிக்கல் எஸ்டேட்' உரிமையாளர் முகமது சுலைமான் ராவுத்தரின் மூத்த மகள்.

மூன்று சகோதரிகளுடன் பிறந்த ரைஹானாவுக்கு, சமையல் விருப்பமான ஒன்று! சிறு வயதிலேயே அவர் செய்யும் பிரியாணி, தாழ்ச்சா, ரெய்தா காம்பினேஷனுக்கு உறவினர்கள், நண்பர்களின் நாக்கு அடிமை! ஆனால், அவருடைய சமையல் சுவைத்த அளவுக்கு, வாழ்க்கை சுவையாக அமையவில்லை! குடும்பநல கோர்ட் படியேற வைத்துவிட்டது.


"ஒன்பதாம் வகுப்பு முடிச்ச அடுத்த ஆறே மாசத்துல எனக்குக் கல்யாணம். அடுத்த ஆண்டே முதல் பையன்... தொடர்ந்து ரெண்டு பையன்கள்! முப்பத்தேழு வயசுல என்னோட வாழ்க்கையை நானே, நான் மட்டும் சந்திக்க வேண்டிய கட்டாயத்துல சிக்கிட்டேன். அதுவரை எனக்கு பாதுகாப்பா இருந்த அப்பாவும் இறந்துபோக... சொத்து சம்பந்தமான வழக்குகளை சந்திக்கவேண்டியிருந்தது. இன்னொரு பக்கம், குழந்தைகளோட படிப்பும், அவங்க வளர வளர சேர்ந்து வளர்ந்த செலவுகளும் என்னை சுழற்றியடிக்க... ஏற்கெனவே கைவசம் இருந்த 'ஆப்டிக்கல்' கடை மூலமா வந்த வருமானம் அதுக்கு ஈடுகொடுக்க முடியாம திணற... ஒருவழியும் தெரியாம தவிச்சேன். எந்த ஓடத்தப் பிடிச்சு கரையேறலாம்னு யோசிச்சப்போ, 'சமையலைத் தவிர ஒண்ணும் தெரியாத நம்மளால, என்ன பண்ணிடமுடியும்'னு மனசு சோர்வாச்சு. ஆனா, 'அந்த சமையலையே தொழிலா செஞ்சா என்ன?'னு சடார்னு மனசுக்குள்ள வெளிச்சம் வர, தெரிஞ்சவங்க வீட்டு விசேஷத்துக்கு சமைச்சுக் கொடுக்கறதுனு முடிவு பண்ணி, கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பிச்சேன்.

"ஒரு நாள் சித்திரை திருவிழாவப்போ ஃப்ரெண்ட் ஒருத்தவங்ககிட்ட இருந்து போன். 'திருவிழாவுக்கு திடீர்னு வீட்டுக்கு விருந்தாளிங்க வந்துட்டாங்க... சைவ சாப்பாடு சமைச்சுக் கொடு'னு சொல்ல, அதுதான் ஆரம்பம். பிறகு... கற்கண்டு சாதம், வெஜிடபிள் ரைஸ், ஃப்ரைடு ரைஸ்னு சைவம்; பிரியாணி, சிக்கன் மசாலா, சுக்கா, மட்டன் மசாலா, மதுரை ஸ்பெஷல் தலைக்கறி இறால்னு அசைவம்... இது ரெண்டுலயும் ஏகப்பட்ட மெனுக்களோட வளர்ந்து நிக்குது இந்தத் தொழில்'' என்று ரைஹானா சுருக்கமாக சொன்னாலும், அவரின் ஆழ்மன நெருப்புக்கும்... அடுப்போடு சேர்ந்து கொழுந்துவிட்ட அவரின் வைராக்கியத்துக்கும் கிடைத்த பெருவெற்றி இது என்பது நமக்கு நன்றாகவே புரிந்தது!

'டச்சிங் த ஹார்ட் த்ரூ த ஸ்டொமக் (Touching the heart through the stomach) என்பதுதான் ரைஹைனாவின் பிஸினஸ் மந்திரம். தரமாக, சுத்தமாக, சுவையாக, வீட்டு முறையில் சமைத்ததால் விரிந்திருக்கும் அவரின் வாடிக்கையாளர் வட்டத்துக்கு, ரைஹானாவின் சமையல் போலவே விலையும் சுவையாகத்தான் இருக்கிறது. பிரியாணிகள் படி கணக்கு. சைடு டிஷ்கள், கிரேவிகள் கிலோ கணக்கு. ஒரு கிலோ ஆட்டுக்கறியில் எந்த உணவு தயார் செய்தாலும் விலை ரூ.350. கோழிக் கறி என்றால் ரூ.250. ஒரு கிலோவுக்கு விலை.

அலுவலகப் பெண்களின் அவசர சமையலுக்கான வத்தல், வடகம், ஊறுகாய் வகைகளுடன் புளியோதரை சாதம், தக்காளி சாதம், பூண்டு சாதம், வத்தக் குழம்பு, மல்லி சாதம், கறிவேப்பிலை சாதம், புதினா சாதம், வெங்காய சாதம், உடனடி முட்டை மசால், ரசம் ஆகியவை பேஸ்ட் வடிவத்திலும், உடனடி பிரியாணி, சில்லி சிக்கன் மசாலா, கிரேவி போன்ற இன்ஸ்டன்ட் வகைகளையும் தயாரித்து விற்கிறார். இருந்தாலும், அவரின் கேட்டரிங் அயிட்டங்களுக்கு, இந்த இன்ஸ்டன்ட்களை அனுமதிப்பது இல்லை!

"இன்ஸ்டன்ட் என்பது இயலாதவங்களுக்குத்தான். நாக்குக்கு ருசியா சாப்பாடு வேணும்னா அப்பப்போ வறுத்து, அரைச்சுதான் சமைக்கணும்!" என்று சிரிக்கும்  ரைஹானா, நிறைவாகச் சொன்னது.

'' 'அவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான் உங்களை உயர்த்தற படிக்கட்டுகள். நம்மள அவமானப்படுத்தினவங்க முன்னால நாம வாழ்ந்து காட்டணும்ங் கற வேகம், உறுதி, பிடிவாதம் பெண்களுக்கு கண்டிப்பாக தேவை'னு ஒரு கூட்டத்துல கேட்ட வாசகங்கள்தான்... இன்னிக்கு வரை என்னை தெம்போட வலம் வர வெச்சுக்கிட்டிருக்கு!''

-- 
With Best Regards,

Umar Farook

from Tamil Muslim Brothers Google Groups

5 comments:

Mohamed Faaique சொன்னது…

சகோதரி ரைஹானாவுக்கு வாழ்த்துக்கள்

Sulthan Allaudeen சொன்னது…

Good info. i shall give this message to my family !!

Thanks !!!
Peace be with you 1!

Sulthan Allaudeen சொன்னது…

Thanks for the post. Its really good.

may allah gives peace in your life..

Assalamu alaikum var.......

Jafarullah Ismail சொன்னது…

@ Mohamed Faaique,
வருகைக்கு நன்றி சகோதரா!

பெயரில்லா சொன்னது…

தன்னம்பிக்கை என்றும் வாழ்வை முன்னேற செய்யும்..பெரிய உணவகமாக மாற வாழ்த்துகள்...