Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, ஆகஸ்ட் 18

ஓர் ஒப்பற்ற விடுதலைப் போராட்ட தியாகி; மறக்கடிக்கப்பட்டது ஏன்?


காந்தியின் வரலாறை போற்றுகிறோம். மறைக்கப்பட்ட மற்றவர்களின் வரலாறு
அதுவும் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறுகளையும் வெளியே
கொண்டுவந்தால்தான் அது சமத்துவத்தின் முதல் படியாகும்.'

உண்மயிலும் உண்மை!! அரபு நாட்டில்(மக்கா நகரில்) பிறந்து கல்கத்தாவில்
குடியேறிய முஐய்னுதீன் எனும் இயற்பெயர் இருப்பினும் சுதந்திதத்திற்காக
படிப்பைத் துறந்து பாழ்சிறையில் வாடியவர்; “சுதந்திரத்திற்கான பேச்சின்
தந்தை’’(அபுல் கலாம் ஆசாத்) என்றே பட்டப்பெயரால் அழைக்கப்பட்டவர்;இறுதி
வரை இயற்பெயர் மறக்கப்பட்டு மக்களால் ”அபுல்கலாம் ஆசாத்” என்ற
பட்டப்பெயரிலேயே மதிக்கப்பட்டவர். அவரை இன்று மறந்து விட்டார்கள்;
அவர்களைப் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்:



நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.
சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள்
இத்துறையை வழிநடத்திச் சென்றார்.


ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர்.
தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த
கொள்கை

1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால்
பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும்என்று
ஆசாத் வலியுறுத்தினார்.


அனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல்
அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும்
என்பதில்ஆசாத் உறுதி காட்டினார்.


 10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர்
விரும்பினார்.


இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள
இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி
அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச,கட்டாயக் கல்வியை அடிப்படை
உரிமையாக்கியுள்ளது.


நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று
சொன்னவர் அவர்.

1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு
மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே
குரானை கற்றுத் தேர்ந்தார்.

17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார்.


கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது
அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு
லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.



1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார்.
நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர்
கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி
ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.


 இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு
பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது. (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற
பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக
ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.


இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல்
திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர்
வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத்
இயக்கத்தைத் துவக்கினார்.



முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத்
காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார்.


35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார்.
அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே.


1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின்
தலைமைசெய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில்
1946இல்நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய
பங்காற்றினார்.


காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள்

1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு
எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.


இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல்
கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார்.

1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி
(1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய
கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.



 ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள்
குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில்
இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத்,
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில்

சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.


 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க
வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல
சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை
சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்.
வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.



 உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய
மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து
பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க
வேண்டும் என்றார்.



தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.


1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும்
ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955 இல் திட்டமிடுதல் மற்றும்
கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. மதவாதத்தை ஒரேடியாக குழி
தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும்
அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.


1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த
காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும்
வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை
அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.


இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான
பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம்
கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.


அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை
எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு
மொழிபெயர்த்தார்.


 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான
அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து
-முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.

குறிப்பு: அன்னாரின் பட்டப்பெயர் எனக்கு இயற்பெயராய் இடப்பட்டுள்ளதை
எண்ணி மகிழ்கின்றேன்!



--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

புதன், ஆகஸ்ட் 15

மாவீரன் திப்பு சுல்தான்

மாவீரன் திப்பு சுல்தான் 



1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும்.

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று
லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் “ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company’ - The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பல யுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர் போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரியத் தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர் புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டனர். சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்து கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’ என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து கொண்டதால் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்தும்வரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடி கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம், கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர். குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம் “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர்த் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.

திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி

ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சி பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாகத் திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில் தான் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.

நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்

அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரைக் கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியைத் தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடை செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடை செய்தார்.

அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு

‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக நாயர் சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திரப் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணைக் கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகைய கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாக திப்பு கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்க
ள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்.”

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.

திப்புவின் மத நல்லிணக்கம்

திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டு தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது ‘திப்புவின் சமயக் கொள்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வு கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் ‘திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பார்ப்பனர்கள் தற்கொலைச் செய்து் கொண்டனர்’ என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி., ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்குக் காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார்.

போர்களத்தில் நேர்மை

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்துப் பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்

து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”

மக்கள் சக்தியை திரட்டியவர்

ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும். தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி ்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்” என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சஞ்சய்கான் ’the sword of tippu’ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிச்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ‘கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனைக் கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவு கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.

அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும்

, மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும் . அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.



ஆக்கம்: அபுரய்யான்.

ஞாயிறு, ஆகஸ்ட் 12

அரட்டைக்கு மட்டுமா ஃபேஸ்புக்?


அரட்டைக்கு மட்டுமா ஃபேஸ்புக்?
முகநூல் நண்பர்கள் சிலர் , சங்கம் அமைத்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்
 சம்பவம் - 1
புதுவையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சர்மிளா. அவளது தந்தை சக்திவேலிடமிருந்து முகநூல் நண்பர் வசந்தகுமாருக்கு ஒரு கடிதம் வருகிறது. சர்மிளாவின் இதய அறுவை சிகிச்சைக்கு மூன்று லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் இதில் புதுவை முதலமைச்சர் நிதியிலிருந்து 1,40,000 கிடைத்துள்ளதாகவும் சில இடங்களில் கடன்வாங்கி அவரே 30,000 ரூபாய் தயார் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மீதமுள்ள பணம் சிகிச்சைக்குத் தேவைப்படுவதாகக் கூறியிருந்தார் சக்திவேல் (கடிதத்துடன் மருத்துவமனை ஆவணங்களையும் இணைத்திருந்தார்).
உடனே இதுகுறித்து தனது முகநூல் சுவரில் நிலைத்தகவல் எழுதினார் வசந்தகுமார். அடுத்த சிலதினங்களிலேயே மீதம் தேவையான பணத்தை முகநூல் நண்பர்கள் முகப்பேர் எம்எம்எம் மருத்துவமனை வங்கிக் கணக்கிலும் நேரிலும் சென்று கொடுத்தனர். வசந்தகுமார் மற்றும் முகநூல் நண்பர்களான கலாராணியும் அவரது கணவரும் நேரில் சென்று சிறுமியை அருகில் இருந்து பார்த்துக் கொண்டனர். இப்போது, சிறுமி சர்மிளா சிகிச்சை முடிந்து நலமாக இல்லம் திரும்பி விட்டார். அதோடு, முகநூல் நண்பர்கள் புதுச்சேரி சென்று முதல்வர். ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்தார்கள்.
 சம்பவம் - 2  
ஈரோட்டைச் சேர்ந்த ஒரு மில் தொழிலாளியின் ஒரே மகன் சிவசங்கர். தாயார் லதா குடும்பத்தலைவி. எட்டாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு 9ம் வகுப்பு செல்லும் கனவுகளோடு இருந்தவனுக்கு திடீரென்று கையில் வீக்கம். கோவை கொங்கு நாடு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பதாகக் கூறி, உடனடியாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை செல்லுமாறு பரிந்துரைத்தனர்.
சென்னை புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு சோதனைகள் செய்த மருத்துவர்கள் குழு, ரத்தப் புற்றுநோய் தீவிரமடைந்து காணப்படுவதாகவும் பலமான வீரியமான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் முதல்கட்ட சிகிச்சையின்போது, குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு தினமும் இரண்டு யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும் கூறினர். அதிலும் குறிப்பாக ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் (PLATTELET) மட்டும் தேவைப்படுவதாகவும் தெரிவித்து விட்டனர்.
சக முகநூல் நண்பர் கயல்விழி லட்சுமணன் மூலம் இதுகுறித்துத் தகவல் அறிந்த வசந்தகுமார் மருத்துவமனை விரைந்தார். சிறுவனைப்போய்ப் பார்த்தார். தைரியமளித்தார். முகநூலில் சிறுவனுக்கு ரத்தம் வேண்டும் என்பதை நிலைத்தகவலாகவும் எழுதினார். அதனைப் படித்த நண்பர்கள், ஒருமாத சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை அட்டவணை போட்டுக்கொண்டு தொடர்ந்து வழங்கினர்.
தவிர, வசதியில்லாத அந்தச் சிறுவனின் மற்ற மருத்துவச் செலவுகளுக்காகவும் முகநூல் மூலம் நண்பர்களிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு முகமே அறியாத பல நபர்கள் வந்து சிறுவனின் தாயார் லதாவிடம் பண உதவி அளித்தனர். இதன் மூலம் கிட்டதட்ட ஒன்றரை லட்ச ரூபாய் பண உதவி கிடைத்தது. தற்போது முதல்கட்ட சிகிச்சை முடிந்து ஓரளவு உடல்நிலை தேறியுள்ள சிவசங்கர் அடுத்தகட்ட சிகிச்சைக்காகக் காத்திருக்கிறான்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் குறிப்பிடப்படும் வசந்தகுமார் யார்? அவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன உறவு?
வசந்தகுமார் ஒரு கணினி வரைகலைஞர் (Graphic Designer). தனது முகநூல் நண்பர்களுடன் இணைந்து, ‘முகநூல் நண்பர்கள் சங்கம்’ அமைத்து, பல்வேறு சமூக சேவைகளைச் செய்துவருகிறார். மேலே கண்ட இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்கள் முகநூல் நண்பர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களே. இந்தச் சங்கத்தின் பொறுப்பாளரான வசந்தகுமார் பேசுகிறார்.
சங்கம் கண்ட முகநூல்
"அடிப்படையில் நான் ஓர் ஓவியன், விளம்பரப் பதாகைகள், விளம்பர போர்டுகள் போன்றவைகளை பத்தாண்டுகளுக்கு முன் கையாலேயே வரைந்து டிசைன் செய்துவந்தேன். விஞ்ஞான வளர்ச்சியால் நானும் கணினி கற்று அதே வேலையை கணினி மூலம் செய்ய ஆரம்பித்தேன். என் வேலை பெரும்பாலும் இணையத்தை சார்ந்திருந்ததால் ஓய்வு நேரம் கிடைக்கையில் விளையாட்டாக முகநூல் வர ஆரம்பித்தேன். கிராஃபிக் டிசைனராக நான் இருப்பதால் நண்பர்களின் பிறந்தநாள், மணநாள் விழாக்களுக்கு வாழ்த்து அட்டைகள் டிசைன் செய்து அதனை நிலைத்தகவலாகப் போட்டேன். அதன் மூலம் நண்பர்கள் மகிழ்ந்தார்கள். நட்பு வட்டம் பெருகியது.
முதன் முதலில் நண்பர்களை வைத்து இணையம் மூலமாகவே பட்டிமன்றம் நடத்தி அதற்குப் பரிசுகளும் அளித்தோம். இதனால் என் நட்பு வட்டம் மேலும் பெருகியது. அதன் விளைவாக பிறந்தநாளுக்கு வாழ்த்து அட்டை வெளியிடுவதோடு நில்லாமல் திடீர் குருதித் தேவைகளையும் நிலைத்தகவலில் அறிவிப்பு செய்து சில அறுவைச் சிகிச்சைகளுக்கு குருதி பெற்றுக் கொடுத்தோம். பின்னர் வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் தங்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் ஆதரவற்றோர் ஆசிரமங்களில் உணவளிக்க விரும்பினர். அதை இங்கிருந்தே நாங்கள் செய்தோம். அவற்றையும் நிலைத்தகவலாகப் போட்டு மகிழ்ந்தோம்.
அந்நிலையில்தான் இதே செயலை ஏன் இன்னும் விரிவாக ஒரு பதிவு பெற்ற அமைப்பாக செய்யக் கூடாது என்று நினைத்தபோது எழுந்ததுதான் FFF. அதாவது, FACEBOOK FRIENDS FOUNDATION ˆ‡. இந்த அமைப்பை ஓர் அறக்கட்டளை போன்ற கட்டமைப்புடன் நிறுவி உள்ளோம். தவிர, அரசில் பதிவும் செய்திருக்கிறோம். தற்போது வரை எங்கள் சங்கத்தில் உலக அளவில் 170 உறுப்பினர்கள் உள்ளனர்.
கொள்கை ரீதியான முடிவுகளோ அல்லது பண பரிவர்த்தனைகளோ நான் தனி ஆளாக ஏதும் செய்திட இயலாத வண்ணம் சங்கம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் சங்கத்தின் பெயரைக் கூட முகநூலில் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்கள் எங்கள் நண்பர்கள்தான். எங்கள் ஸ்லோகனான ‘நட்பு சொல்வோம் நற்பணி செய்வோம்’ என்கின்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்ததும் எங்கள் நண்பர்கள்தான்.
எங்களின் எல்லா முயற்சிகளுக்கும் ஆரம்பம் முதலே ஆக்கமும் ஊக்கமும் அளித்து உற்சாகப்படுத்தி வரும் இருவரை நான் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒருவர் சந்திராயன் விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். முகநூல் மூலம் அவரும் பல சேவைகள் ஆற்றி வருகிறார். அந்த அனைத்து சேவைகளிலும் எங்களையும் இணைத்துக்கொண்டு எங்கள் சங்கத்துக்குப் பெருமை சேர்க்கிறார். அவரோடு இணைந்து இதுவரை உயர்கல்வி கற்க வழி இல்லாத ஏழை மாணவர்கள் பலருக்கு 1,50,000 ரூபாய் வரை முகநூல் மூலமே நன்கொடைகள் பெற்று உதவி அளித்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களை இன்று வரை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் மற்றொரு அன்பு நண்பர் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ். நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் ஊக்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதற்கான சிறு சிறு நன்கொடைகளையும் வழங்கி உள்ளார். முக்கிய நிகழ்வுகளில் நேரடியாக வந்து கலந்துகொண்டு சிறப்பு செய்கிறார்.
எங்களது கவனத்திற்கு வரும் விஷயங்களின் உண்மைத் தன்மையை முதலில் ஆராய்கிறோம். உதவி தேவைப்படுவது உண்மைதான் என்னும் பட்சத்தில் முகநூலில் நிலைத்தகவல் போடப்படும். அதைக் கண்ட நண்பர்கள், தானே முன்வந்து உதவிகள் அளிப்பார்கள். ஓர் ஊரில் ஒருவருக்கு உதவி தேவைப்படும் நிலையில் அந்த ஊருக்கு அருகிலுள்ள எங்கள் நண்பர்கள் சென்று அந்த உதவியைச் செய்து வருகிறோம். மதுரை, சேலம், காஞ்சிபுரம், புதுச்சேரி உட்பட பல்வேறு ஊர்களில் பல்வேறு உதவிகள் செய்திருக்கிறோம்.
எங்களின் ஒரே தைரியம், ஆயிரக்கணக்கான முகநூல் தோழமைகளும் தோழமைகளின் தோழமைகளும் இருக்கிறார்கள். அவர்கள் கைவிட மாட்டார்கள் என்பதுதான்" என்று கூறினார் வசந்தகுமார்.
பெ. கருணாகரன்

வெள்ளி, ஆகஸ்ட் 10

உடல் எடை குறைய உணவுக்கு முன் தேன்....


ணவுக்கு முன் தேன் 15 மில்லி அளவை 60 மில்லி காய்ச்சி ஆறிய நீரில் கலந்து அத்துடன் அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து இரண்டு முதல் மூன்று வேளை உணவின் முன் உட்கொள்ள உடலுக்கு ஆயாசமின்றி உடல் எடை குறையும்.

ஒரு கப் இளம் சூடான நீரில் இரண்டு கரண்டி தேன் கலந்து, தூங்க ஒரு மணி நேரத்திற்கு முன் அருந்தினால் நல்ல தூக்கம் வரும்.

இரைப்பைக்கு தேன் சிறந்த நண்பன். ஒரு கப் இளஞ்சூடான பாலில் 4 கரண்டி தேன் கலந்து அருந்த ஜலதோஷம் கட்டுப்படும். உணவிற்கு சற்றுமுன் அருந்தினால் ஜீரணசக்தி பெருகும்.

தேனில் அடங்கியுள்ள மாவுச்சத்து இரத்தக் குழல்களை விரிவாக்கி, இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தும். மேலும் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும் பெருக்கும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தேன் தரும். அத்துடன் உடலுக்கு ஊறுதரும் நோய்க்கிருமிகளையும் கொல்லும். பழங்கள், உணவுவகை, பலகாரங்கள் எதனுடனும் தேன் பொருந்தி, தின்றால் நன்மை புரியும். தேன் முதியோருக்கு இளமை நீடிக்கச் செய்து வலிமையுடனும் இருக்கத் துணைபுரியும். தேன் அபூர்வமாக சிலருக்கு ஒவ்வாமல் போவதுண்டு. புதிதாக துவங்குபவர் ஆறுமாத தேனாகப் பார்த்து உட்கொள்ளுதல் நல்லது. ஒரு நாளைக்கு 200 கிராமுக்கு மேல் தொடர்ந்து அருந்துவது நல்லது அல்ல.

முகத்தைக் கழுவி ஈரமில்லாமல் துடைத்துவிட்டு தேனுடன் சிறிது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக முகத்தில் பூசி ஊறவைத்து அரைமணிக்குப்பின் அழுத்தித் துடைக்கவும். வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகத்தில் நல்ல மெருகு ஏற்படும்.

தேன் காற்றிலுள்ள ஈரத்தை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது. அதனால் தேனை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காது காற்று படாது வறண்ட இடத்தில் வைத்து பாதுகாத்தல் நலம்.
Jashakkallah

புதன், ஆகஸ்ட் 8

உலகம் நடுங்கிய தினம்! -அ.செய்யது அலீ

6 Aug 2012 - அமைதியான சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள மரியானா தீவீல் இருந்து 1945-ஆம் காலை 6 மணிக்கு அமெரிக்க விமானப் படையின் பி-29 குண்டுவீச்சு விமானமான எனோலாகே புறப்பட்டது. விமானப்படையில் திறமைப்பெற்ற பைலட் பால் டிபட்ஸ் விமானத்தை இயக்கினார். டிபட்ஸின் தாயாரின் பெயர்தாம் அந்த விமானத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. அந்த அன்னைக்குள் ஓர் குண்டு இருந்தது. ‘லிட்டில் பாய்’ என்ற சங்கேத மொழியிலான ஒரு பேரழிவு அணுக்குண்டு. அன்று வரை உலகில் எங்குமே உபயோகிக்காத குறிப்பிட்ட ரக குண்டு அது. ஏழு மணிநேர நீண்ட பயணத்தின் இறுதியில் எனோலகே ஹிரோஷிமாவின் வான்வழியை அடைந்தது. நேரம் காலை 8.15 ஹிரோஷிமாவுக்கு மேலே 32 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து லிட்டில் பாயை கீழே வீசிவிட்டு எனோலாகே அதி வேகமாக பறந்து சென்றுவிட்டது. ஹிரோஷிமாவின் 800 அடி உயரத்தில் லிட்டில் பாய் அதிபயங்கரமாக வெடித்து சிதறியது. சின்னப் பையன்(லிட்டில் பாய்) ஒரு பெரும் பயங்கரவாதியாக மாற அதிக நேரம் தேவைப்படவில்லை. கறுப்பான மலை போன்ற மேகத்தின் படலம் ஹிரோஷிமாவை சூழ்ந்தது. ஒரு சில நிமிடங்களிலேயே ஜப்பானின் ஒரு சிறு நகரம் எரிந்து சாம்பலானது. ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வெடித்தது போல் இருந்தது அச்சம்பவம். என்ன நிகழ்கிறது என்பதை புரிந்துகொள்ளும் முன்பே பலருடைய உயிரும் உடலில் இருந்து பிரிந்து விட்டது. எரிந்து போன நகரத்தின் பாதி வெந்த உடலுடன் காணப்பட்ட சிலர் மரண வேதனையுடன் அங்குமிங்கும் ஓடினர். தீக்காயத்தில் தோல்கள் உருகிய உடலுடன் ஓடிக்கொண்டிருந்த சின்னஞ்சிறு குழந்தைகள் தாகத்தால் “தண்ணீர்! தண்ணீர்!” என கதறினார்கள். தீக்காயம் ஏற்படுத்திய வேதனையை சகிக்க முடியாமல் ஒடா நதியில் குதித்தனர். ஆனால், அந்த நதியோ அணுகுண்டு வெளியிட்ட வெப்பத்தால் கொதித்துக் கொண்டிருந்தது. நதியில் குதித்தவர்கள் உடல் வெந்து மரணித்தனர். கிட்டத்தட்ட 90 ஆயிரம் முதல் 1.66,000 பேர் ஹிரோஷிமாவில் இறந்து போயினர். அணுக்கதிர் வீச்சு ஏற்படுத்திய பின்விளைவுகளால் பிற்காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஹிரோஷிமாவில் பலியாகினர். உலகம் சாட்சியம் வகித்த முதல் அணு குண்டு துயரமாக ஹிரோஷிமா மாறியது. மன்ஹாட்டன் ப்ராஜக்ட்! 1942-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரை இரண்டாவது உலகப்போர் நிகழ்ந்த காலக்கட்டத்தில் அணுகுண்டை தயாரிக்க கனடா மற்றும் பிரிட்டனின் துணையுடன் அமெரிக்கா நடைமுறைப்படுத்திய திட்டம் தான் மன்ஹாட்டன் ப்ராஜக்ட். அமெரிக்க ஆர்மி எஞ்சீனியரிங் தலைவர் மேஜர் ஜெனரல் லெஸ்ஸி க்ரோவ்ஸின் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. டெவலப்மெண்ட் ஆஃப் ஸப்ஸ்ட்யூட் மெட்டீரியல்ஸ் என்ற சங்கேத பெயரில் மன்ஹாட்டன் மாவட்டத்தில் நடந்து வந்த இந்த ஆராய்ச்சி பின்னர் மன்ஹாட்டன் ப்ராஜக்ட் என அழைக்கப்பட்டது. 1939-ஆம் ஆண்டு இத்திட்டம் துவக்கப்பட்டது. இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட 25.8 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சமமான தொகை இத்திட்டத்திற்காக செலவழிக்கப்பட்டது. 1939-ஆம் ஆண்டு 2-ஆம் உலகப்போரின் ஆரம்ப நாட்களில் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்டிற்கு எழுதிய கடிதத்தில் இருந்து அணுகுண்டை குறித்த ஆய்வு துவங்கியது. “ப்ளூட்டோனியம் மற்றும் யுரேனியத்தின் ஐஸோடோபான யுரேனியம் 235 சுத்திகரித்து புதிய ரக குண்டை தயாரிக்க ஜெர்மனி நாஸிக்கள் திட்டமிட்டுள்ளனர்” என்பது ஐன்ஸ்டீனின் எழுதிய கடிதத்தின் உள்ளடக்கம் ஆகும். இது தொடர்பாக பிரபல இயற்பியல் விஞ்ஞானி லியோ ஸிலாண்ட் ஐன்ஸ்டீனுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து அணு குண்டு தயாரிப்பதில் ஆர்வம் காட்டிய அமெரிக்கா, மன்ஹாட்டன் ப்ராஜக்டை துவக்கியது. அணுகுண்டு தயாரிப்பில் உள்ள செயின் ரியாக்சனுக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியம் 235-ஐ தனியாக பிரித்தெடுப்பது அன்றைய விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலாகா மாறியது. அக்காலத்தில் யுரேனியம் 235-ஐ பிரித்தெடுக்க விஞ்ஞானிகளால் முடிந்தது எனினும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் மிகவும் குறைந்த அளவிலேயே கிடைத்தது. பின்னர் அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கிடைப்பதற்காக ஓக்ரட்ஜில் ஒரு பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பிரித்தெடுக்க கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஹரோல்ட் சி உரேயும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் எர்னஸ்ட் ஒ லாரன்சும் நவீன வழிகளை கடைப்பிடித்ததன் மூலம் திட்டப்பணிகள் வேகமாக நடந்தேறின. ஆறு ஆண்டுகள் நீண்ட ஆராய்ச்சியின் முடிவில் திட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை தலைமை தாங்கிய ராபர்ட் ஓபன் ஹைமரின் மேற்பார்வையில் 1945-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி காலை 5.29 மணிக்கு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஜெமஸ் மலைக் குன்றுகளில் தா காட்ஜட் என்ற சங்கேத மொழியில் அழைக்கப்பட்ட அணுகுண்டு பரிசோதனை நடத்தப்பட்டது. அணுகுண்டு சோதனையின் தீவிரத்தை 120 மைல்களுக்கு அப்பால் இருந்த மக்களும் உணர்ந்தனர். முதல் அணுகுண்டு சோதனையின் தீவிரத்தை கண்டறிந்த நாட்டு மக்கள், பீதிவயப்பட்டனர். பின்னர், இத்தகைய பரிசோதனைகள் தங்களுடைய பகுதிகளில் நடத்தக் கூடாது என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். லிட்டில் பாய் ஹிரோஷிமாவில் நடந்த மனித குல கோரப் படுகொலைக்கு காரணமான அணுகுண்டின் பெயர்தாம் லிட்டில் பாய். இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மன்ஹாட்டன் ப்ராஜக்ட் மூலம் லிட்டில் பாய் தயாரிக்கப்பட்டது. ப்ராஜக்ட் இயக்குநர் ராபர்ட் ஓபன் ஹைமரின் சீடரான ராபர் ஸெர்பர்தாம் அன்று தயாரித்த மூன்று குண்டுகளுக்கும் பெயரிட்டார். செறியூட்டப்பட்ட யுரேனியம் 235-இன் நியூக்ளியர் ஃபிஸன் மூலமாகத்தான் அணுக்குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. 16 டன் டி.என்.டி வெடிப்பொருளின் சக்தியுடன் வெடிக்கும் இதன் பாதிப்பு மிக மிக கடுமையானது. கிட்டத்தட்ட 300 செ.மீ நீளம், 71 செ.மீ அகலம், 4400 கிலோ கிராம் எடை ஆகியன லிட்டில் பாயின் தனித்தன்மையாகும். நியூக்ளியர் செயின் ரியாக்சன் மூலமாக குண்டு வெடிக்கிறது. குண்டில் அடங்கியிருக்கும் 64 கிலோ கிராம் யுரேனியம் நியூக்ளியர் ஃபிஸனுக்கு ஆளாகும் பொழுது வெளியிடப்படும் எரிபொருளின் வெப்பமும், ஒளியும் இணைந்து பயங்கரமாக வெடித்து சிதறல் உருவாகிறது. ஃபேட்மேன் நாகஸாகியை தகர்த்தது ஃபாட்மான்(குண்டு மனிதன்) அணுகுண்டு ஆகும். இங்கு 74 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். நாகஸாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் 18 கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் மாறியது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது. செப்டம்பரில் 3 குண்டுகளையும், அக்டோபரில் 3 குண்டுகளையும் அமெரிக்கா ஜப்பான் மீது வீச தயாராக இருந்ததாகவும், ஆனால் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் இந்த குண்டுகளை வீச இயலாது என உயர் இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் சூழல் மாறியதன் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஹிபாகுஷா ஜப்பானிய மொழியில் ஹிபாக்குஷா என்றால் அழிந்தும் உயிர் வாழ்பவர்கள் என பொருள். உலகில் அது வரை எங்கும் உபயோகிக்காத குண்டுகள் நாகஸாகியிலும், ஹிரோஷிமாவிலும் உபயோகிக்கப்பட்டது. அதிக அளவில் அணுக்கதிர்கள் வெளியாகி எதிர்கால தலைமுறையினருக்கும் கொடிய நோய்களை உருவாக்குகிறது. 1,66,000 பேர் மரணித்ததாக புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டாலும், அணுக் கதிர்வீச்சால்(ரேடியேசன்) பிற்காலத்தில் அதிகமான நபர்கள் மரணித்தனர். 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை, கால், கண், மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன. இந்த அணுகுண்டுகளை வீசியதால்தான் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா தனது மாபாதக செயலை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டது. அமெரிக்காவின் கொடூரம் இத்தோடு நிற்கவில்லை. ஈராக்கில் சதாம் ஹுஸைன் பேரழிவு ஆயுதங்களை சேகரித்து வைத்துள்ளார் என அவதூறாக குற்றம் சாட்டி கொத்துக் குண்டுகளையும், இன்னும் பல கொடிய வெடிக்குண்டுகளையும் வீசி குழந்தைகள், பெண்கள் உள்பட லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்தது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜூனியர் புஷ் கூறிய விளக்கம், கடவுள் எனக்கு கட்டளையிட்டார் என்பதாகும். இன்றும் ஈராக்கில் வெடிக்குண்டு சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலின் குற்றத்தை உஸாமா பின் லேடன் மீது சுமத்தி ஆப்கானிஸ்தானை இரத்தக் களறியாக மாற்றியது அமெரிக்கா. இன்று வரை அங்கு அமைதி மீண்டும் திரும்பவில்லை. ஆளில்லா விமானங்கள் மூலம் கோழைத்தனமாக பாகிஸ்தான், ஆஃப்கானில் உள்ள பழங்குடியினரை கொடூரமாக கொலைச் செய்து வரும் அமெரிக்கா, அதற்கு கூறும் காரணம் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்பதாகும். தற்பொழுது அணுகுண்டை தயாரிக்கிறார்கள் என குற்றம் சாட்டி ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக மேற்காசியாவின் பயங்கரவாத நாடான இஸ்ரேலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி வருகிறது அமெரிக்கா. ஜனநாயகத்தின் அப்போஸ்தலராக, உலக போலீஸ்காரராக நாடகமாடி அமெரிக்கா செய்துவரும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. மனிதகுல விரோதிகள் தாம் இன்று மனிதநேயத்தின் காவலர்களாக வேடம் பூண்டுள்ளார்கள் என்பதை நாம் இத்தினத்தில் புரிந்துகொள்ள வேண்டும்.

இரவில் பாதுகாப்பான டிரைவிங்.......



பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும்,தூரத்தையும்கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.தவிர,எதிரே வரும் வாகனங்களின்ம முகப்புவிளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும்.இதனால்,இரவுநேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில்,விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வைதிறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமேவெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்துஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...

கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க முடியாதகாரணங்களால் செல்லும்போது,டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர்காரில் இருப்பது அவசியம்.அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோமற்றொருவர் காரை ஓட்டலாம்.

கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால்,வெள்ளை நிற காரில் செல்வதுபாதுகாப்பானது.கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில்நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள்மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாகதெரியும்.

பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள்,முகப்பு விளக்குகள்,பின்பக்கமுள்ள எச்சரிக்கைவிளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்கவேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தைஏற்படுத்தும்.

மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம்,ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும்.

முன்னால் செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள்.மேலும்,வாகனத்தை பின்தொடரும்போதும்,எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.

தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்திடீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

எதிரில் அதிக வெளிச்சத்துடனும்,அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால்,வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.

நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால்,பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்கபகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள்.அதன்பின்,முகத்தைதண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.

எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும்,முன்னாள் செல்லும் வாகனத்தைஅவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம்.இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவுமற்றும் வேகத்தை கணிப்பது கடினம்.இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிகவிபத்துக்கள் நிகழ்கின்றன.

காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால்,உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.


Engr.Sulthan

புதன், ஜூலை 25

ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் முழுமையான‌ வ‌ர‌லாறு - த‌மிழில் (அர்ர ‌ஹீக்) [1 Attachment]


அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வ‌ர‌ஹ்)
 
இந்த‌ ர‌ம‌லானில் முழுமையாக‌ ஒரு த‌ட‌வை ந‌பி (ஸ‌ல் ) அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றை ப‌டிப்போம்,

இப்புத்த‌க‌த்தின் ப‌க்க‌ங்க‌ள் திரும்ப‌ திரும்ப‌ ந‌ம் வாழ்வின் ப‌க்க‌ங்க‌ள் க‌ண்டிப்பாக‌ மாறும், மாறியே தீர‌ வேண்டும்.
 
இத்தோடு த‌மிழ் ர‌ஹீக் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
 
வ‌ஸ்ஸ‌லாம்
 
பேரா. இஸ்மாயில் ஹ‌ஸ‌னீ

கீஇழே கிளிக் செய்யுங்கள்.