Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, மே 28

பெட்ரோல் போடப் போகிறீர்களா?

பெட்ரோல் போடப் போகிறீர்களா?

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா?

அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக் கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்பஅளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள்.

அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும்போதுதான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.

நன்றி; http://www.keetru.com/

பெட்ரோல் நிலையத்தின் உள்ளே நுழையும் முன், 
எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க, 
அனைவரின் பாதுகாப்புக்காகவும்,
உங்களது செல்போன் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டுள்ளதா 
என்று உறுதி செய்துகொள்ளுங்கள்.

8 comments:

ஷர்புதீன் சொன்னது…

mudalla naan bike vaanganum ,appuram itha padikkuren

:)

வே.நடனசபாபதி சொன்னது…

பயனுள்ள தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள் பல!

அஸ்மா சொன்னது…

ஸலாம் சகோ! அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி .

//பெட்ரோல் நிலையத்தின் உள்ளே நுழையும் முன், உங்களது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள்//

பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்களே ஒரு கையில் செல்ஃபோன் பேசிக் கொண்டு மறு கையால் நம் வண்டிக்கு பெட்ரோல் போடுகிறார்கள் :( என்னத்த சொல்ல!

Mohamed Faaique சொன்னது…

இவ்ளோ மேட்டர் இருக்கா????
நன்றி...

Jafarullah Ismail சொன்னது…

வாழ்த்துக்கள் ஷர்புதீன்,

Jafarullah Ismail சொன்னது…

வே.நடனசபாபதி கூறியது...
பயனுள்ள தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள் பல!

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

Jafarullah Ismail சொன்னது…

அஸ்மா கூறியது...
ஸலாம் சகோ! அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி .
பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்களே ஒரு கையில் செல்ஃபோன் பேசிக் கொண்டு மறு கையால் நம் வண்டிக்கு பெட்ரோல் போடுகிறார்கள் :( என்னத்த சொல்ல!

வ அலைக்கும் ஸலாம் சகோதரி அஸ்மா.
பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவர், அழைப்பிற்கு பதிலளித்த அந்த வினாடியே குபீரென்று பற்றிய நெருப்பில் எரிந்து கரிகட்டையான ஒரு வீடியோ கிளிப் பார்த்து அதிர்ந்து போனேன் சகோதரி.

Jafarullah Ismail சொன்னது…

Mohamed Faaique கூறியது...
இவ்ளோ மேட்டர் இருக்கா????
நன்றி...

கற்றது கையளவு. கல்லாதது கடலளவு.
வருகைக்கும் கர்த்துரைக்கும் நன்றி சகோதரா!