Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, செப்டம்பர் 17

சாலை விபத்து கற்றுத் தரும் பாடம்

சாலை விபத்து கற்றுத் தரும் பாடம்

 சமீபகாலமாக இந்தியாவில் 1,000 சிசி திறன் கொண்ட பைக்குகளை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்கேற்ப, சூப்பர் பைக்குகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கு ஏற்ற சாலை வசதிகளோ, பயிற்சி மையங்களோ நம் நாட்டில் இல்லை என்பது முக்கிய காரணம்.

மேலும், சாதாரண ரக பைக்குகளை ஓட்டுவதற்கும், சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், அதை சூப்பர் பைக் வாங்குபவர்கள் புரிந்துகொள்ளததால்தான் இதுபோன்று விபத்துக்களில் சிக்கி உயிரை விலையாக கொடுத்து விடுகின்றனர்.

இருப்பினும், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

சூப்பர் பைக்குகள் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்வாய்ந்த எஞ்சின்களுடன் வருகின்றன. இந்த பைக்குகளின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கே முறையான பயிற்சி கண்டிப்பாக தேவை.

எனவே, சூப்பர் பைக் வாங்குவதற்கு முன் உரிய பயிற்சி மையத்தில் சூப்பர் பைக் டிரைவிங் செய்வது குறித்த ஆலோசனைகளையும், நேரடி பயிற்சியையும் பெற்ற பின் சூப்பர் பைக் வாங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.


பிரத்யேகமாக உருவாக்கப்படும் ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையிலேயே சூப்பர் பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றை குண்டும குழியும் நிறைந்த நம்மூர் சாலைகளில் ஓட்டும்போது மிகமிக கவனமாக இருக்கவேண்டும்.

முக்கியமாக சூப்பர் பைக்கில் ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. சூப்பர் பைக்குகளின் பின் இருக்கைகள் அளவில் சிறியதாகவும், கூடுதல் உயரத்துடன் இருப்பதால் பைக் ஓட்டும்போது முழு பேலன்ஸ் கிடைக்காது.

சூப்பர் பைக் ஓட்டும்போது தரமான ஹெல்மெட்டுகளை அணிந்து செல்வது கூடுதல் பாதுகாப்பு. சாலை ஓரத்தில் விற்கப்படும் ஹெல்மெட்டுகளை வாங்கி அணிந்து செல்ல வேண்டாம்.

பல லட்சம் கொடுத்து வாங்கிய சூப்பர் பைக்கை கட்டை வண்டி மாதிரி ஓட்டுவதற்கா வாங்குகிறோம் என்பது காதில் விழுகிறது. கண்டிப்பாக வேகமாக ஓட்டலாம். அந்த பைக்கின் முழு கட்டுப்பாட்டை தெரிந்து கொண்ட பின்னர் சாலை நிலைமை அனுசரித்து ஓட்டினால் இதுபோன்ற விபத்துக்களை நிச்சயம் தவிர்க்கலாம்.

குறிப்பாக, சூப்பர் பைக்கை வேகமாக ஓட்டுவது எளிது, அதை உடனடியாகவும், சரியான இடத்திலும் நிறுத்துவது கடினம் என்பதை பிரபல பைக் ரேஸர் கவுரவ் கில் கூறியிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மேலும், சாதாரண பைக்குகள் மற்றும் வாகனங்களுக்கு லைசென்ஸ் வழங்குவது போல் அல்லாமல் சிறப்பு பயிற்சி பெறுவர்களுக்கு மட்டுமே சூப்பர் வாங்குவதற்கும், ஓட்டுவதற்கும் லைசென்ஸ் வழங்கவேண்டும். இந்த விஷயத்தில் உடனடியாக கட்டுப்பாடுகளை கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட சூப்பர் பைக் ஓட்டும்போது மிகுந்த கவனத்தோடும், மனக்கட்டுப்பாட்டோடும பாதுகாப்பாக ஓட்ட பழகிக்கொள்வது மிக அவசியம். இதனால், பைக் ஓட்டுபவருக்கு மட்டுமல்ல எதிரில் வரும வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. இவற்றை கடைபிடித்தால் விலை மதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்படாது என்ற நமது எண்ணம் திண்ணமாகும்
 

6 comments:

barathivishal சொன்னது…

<ungal karutthu migavum nanru.

Mohamed Faaique சொன்னது…

அருமையான விழிப்புணர்வுப் பதிவு. பகிர்வுக்கு நன்றி. வேகமாக வண்டி ஓட்டுபவர்களுக்கு மட்டும் பாதிப்பென்றாலும் பரவாயில்லை. அநியாயமாக சில அப்பாவிகளும் பாதிக்கப் படுவது கவலையளிக்கிறது

Jafarullah Ismail சொன்னது…

@ barathivishal கூறியது...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரா.

Jafarullah Ismail சொன்னது…

@ Mohamed Faaique கூறியது...

பாதிப்பு தனக்கும், தன்னால் பிறருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இப்பதிவு.

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரா.

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

நல்ல விழிப்புணர்வு பதிவு
வாழ்த்துக்கள்

Jafarullah Ismail சொன்னது…

@ ஹைதர் அலி கூறியது...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

நல்ல விழிப்புணர்வு பதிவு
வாழ்த்துக்கள்

வ அலைக்கும் ஸலாம் சகோ.ஹைதர்,
வருகைக்கு நன்றி.