Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், அக்டோபர் 13

செம்மறி ஆடுகளா?


மேற்கத்திய நாடுகளுக்கு ஈரான் கடும் கண்டம் அமெரிக்கா வெளிநடப்பு................!!

ஒசாமா பின்லேடனை நீதியின் முன் நிறுத்தாதது ஏன்?................!!

அமெரிக்காவுக்கு செருப்படி கொடுத்த ஈரான் அதிபர்.................!!


நியூயார்க், செப்டம்பர் 23 ஐ.நா. பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசிய ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத், மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடினார். அந்நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதைக் குறை கூறி அவர் அவ்வாறு சாடினார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் பொதுச் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஹிட்லர் செய்த கொடுமைகளை காரணமாக வைத்துக்கொண்டு இஸ்ரேலுக்கு மேற்கு நாடுகள் அசைக்கமுடியாத ஆதரவு தந்து வருகின்றன. அதேநேரத்தில் அவை பாலஸ்தீன மக்களின் மீதான ஒடுக்குமுறைக்குத் துணை போகின்றன என்று முகமது அஹமதி நிஜாத் கூறினார்.


தன்னுடைய உரையில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதல் சந்தேகத்திற்கிடமானது என்றும் இச்சம்பவத்துக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட ஒசாமா பின் லேடனை நீதியின் முன் நிறுத்தாமல், அவரைக் கொன்று கடலில் தூக்கி எறிந்தது ஏன் என்றும் முகமது அஹமதி நிஜாத் கேள்வி எழுப்பினார்.


தங்கள் ஆதாயம், ஏகாதிபத்தியம் ஆகிய இலக்குகளை நிலைநாட்ட மேற்கு நாடுகள் போலித்தனமாகவும் ஏமாற்றுவித்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. ராணுவத் தலையீடுகள் மூலம் பல்வேறு நாடுகளின் அடிப்படைக் கட்டுமானத்தை சீர்குலைப்பதுடன் அந்நாடுகளை பலவீனப்படுத்துகின்றன. தங்களையே சார்ந்திருக்க வைப்பதன் மூலம் அந்நாடுகளின் வளங்களை மேற்கு நாடுகள் கொள்ளையடித்து வருகின்றன என நிஜாத் கண்டித்தார்.

நிஜாத் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்க பிரதிநிதி பாதியிலேயே எழுந்து வெளியே சென்றார். இதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனின் 27 நாட்டுப் பிரதிநிதிகளும் ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.


செய்தி: தினமணி

1 comments:

Mohamed Faaique சொன்னது…

தமிழ் மணத்துல இணைச்சாச்சு...