Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, டிசம்பர் 31

2011 காலண்​டர் வேண்​டாம்,​​ 2005 போதும்!

2011 காலண்​டர் வேண்​டாம்,​​ 2005 போதும்!


வரும் 2011-ம் ஆண்டு காலண்டரும் 2005 காலண்டர் போலவே தேதி-கிழமை மாறாமல் வருகிறது.

புத்தாண்டு என்றவுடன் புது காலண்டர், புதிய டயரிதான் எல்லோர் நினைவுக்கும் வரும். எங்கிருந்தாவது ஒரு புதிய காலண்டர் கிடைக்காதா என்று பறப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஓசி டயரி கிடைக்கவில்லையே என ஏங்குபவர்கள் இன்னொருபுறம். ஆனால் 2011 காலண்டர் கிடைக்கவில்லையா? கவலையைவிடுங்கள்! அதில் அப்படியொன்றும் புதுமை இல்லை. காரணம் 2005-ம் ஆண்டு காலண்டரும், வரப் போகும் 2011-ம் ஆண்டு காலண்டரும் ஒன்று போல இருக்கிறது – நாள் தேதி மாறாமல்.

இரண்டு ஆண்டுகளும் சனிக்கிழமை தொடங்குகிறது. அதாவது ஜனவரி 1 வருவது சனிக்கிழமையில். அது போலவே ஒவ்வொரு மாதத்தின் தேதிகளும் ஒற்றுமையுடன் வருகின்றன. இரண்டு வருடங்களிலும் ஜனவரி 26 குடியரசு தினம் புதன்கிழமையன்று வருகிறது. சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 திங்கள்கிழமை வருகிறது.

இது குறித்து மத்தியப்பிரதேச மாநில உஜ்ஜயினியில் உள்ள ஜீவஜி வானியல் நிலையத்தின் இயக்குநர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியபோது, “”காலச்சக்கரத்தின் சுழற்சியில் இதுபோன்ற ஒரு சுவையான நிகழ்வு நடந்துள்ளது,” என்றார்.

இரு ஆண்டுகளிலும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை கிடையாது.
காரணம், அது வந்த நாளும் வரப்போகும் நாளும் ஞாயிற்றுக்கிழமை!
வருடம் முடிவது – அதாவது டிசம்பர் 31- வருவது சனிக்கிழமை.
அப்படியானால் 2012-ம் ஆண்டு தொடங்குவது ஞாயிற்றுக்கிழமை
எனவே 2012 ஆங்கிலப் புத்தாண்டுக்கு விடுமுறை கிடையாது!

Source: http://site4any.wordpress.com/2010/12/30/2011

2 comments:

வே.நடனசபாபதி சொன்னது…

தகவலுக்கு நன்றி.
1994 ம் ஆண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி சனிக்கிழமைதான்.
ஜனவரி 26 ந்தேதி புதன் கிழமைதான்.

Jafarullah Ismail சொன்னது…

மேலும் ஒரு தகவல் தந்த சகோதரர் வே.நடனசபாபதி அவர்களுக்கு எமது நன்றியும் வாழ்த்துக்களும்!