Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

புதன், டிசம்பர் 15

மனச்சுமையில் இருந்து விடுபட

ல்லோருக்கும் மனச்சுமைகள் அதிகம் . எல்லோரும் யோசிக்கிறார்கள் , சிந்திக்கிறார்கள் அவர்கள் தானே மனிதர்கள் . கவலை, துன்பம், இன்பம் வந்து போகின்றன . மனச்சுமைகள் கூட கூட அவர்களை அறியாமலே நோய்களும் அவர்களை தாக்குகின்றன . இதுதான் இப்போது எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை என்று கூறலாம் . மனிதன் யாராக இருந்தாலும் எதிலும் பூரண திருப்தி அடைய மாட்டான் . ஏதாவது குறை நிறைகள் சொன்ன வண்ணமே இருப்பர். நாம் எமது மனதில் உள்ள சுமையை இறக்கி வைத்தால் தான் மனம் லேசாகும் . ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் .


மனம் விட்டு உங்களது பிரச்சனைகளை கூறுங்கள் . யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களும் உங்களுக்கு ஏதாவது அறிவுரைகளை கூறுவர். உங்களுக்கும் ஒரு பாரம் குறைந்தது போல தென்படும் . மனதுக்குள் பிரச்சனைகளை பூட்டி , பூட்டி வைத்தால் ஒன்றும் நடவாது .


வாய் விட்டு சிரியுங்கள் . வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள் . உங்களது சுமைகள் குறைந்து போகும் . மனமும் லேசானது போல இருக்கும் . உடம்புக்கும் புத்துணர்வு ஏற்படும் . பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க அவற்றை எப்படியாவது சமாளிக்கலாம் என்று நினையுங்கள் . மற்றவர்களுடன் அளவளாவி பேசி சந்தோசமாக இருங்கள் . எந்த நேரமும் உங்களது பிரச்சனைகளை யோசித்து கொண்டே இராதீர்கள் .


சத்தான , நல்ல உணவுகளை சாப்பிடுங்கள் . விட்டமின்கள், உயிர்ச்சத்துகள் நிறைந்த உணவை உண்ணுங்கள் . நல்ல காய்கறி வகைகள், இலைவகைகளை தினமும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள் . அது உங்கள் உடலுக்கும் நல்லது .


நன்றாக இரவில் தூங்குங்கள் . நித்திரை இல்லாவிட்டால் சோம்பல் , அலுப்பு , பசியின்மை , வயிற்று பிரட்டல் என பிரச்சனைகள் தலை தூக்கும் . எனவே நன்றாக அமைதியாக தூங்குங்கள் . உங்களது மனச்சுமைகளை இரவில் இறக்கி வையுங்கள் .


உடல் பயிற்சி செய்யுங்கள் தினமும் . மனம் தென்பாகும். வேலை வேலை என்று இருக்காமல் ஓய்வும் சிறிது நேரம் எடுத்து கொள்ளுங்கள் . எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். நண்பர்களுடன் விளையாடி மகிழுங்கள் . இவற்றை எல்லாம் செய்தால் நீங்கள் மனச்சுமையில் இருந்து விடுபடலாம் .

http://pavithulikal.blogspot.com/

2 comments:

indian சொன்னது…

இதை மக்கள் தங்கள் அன்றாட வாழ்கையில் இதை கடைபிடிக்க யோசனை ஏதேனும் இருந்தால் கூறுங்கள், ஏன் என்றால் நம்ம ஆளுங்க படிகுரதொட சரி ! கடைபிடித்தலின் அவசியத்தையும் அதனால் வரும் நன்மைகளையும் இன்னும் விளக்கி இருந்திருக்கலாம் ! நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்

Jafarullah Ismail சொன்னது…

அறிவுரை சொல்லுவது எளிது பின்பற்றுவதுதான் கடினம்.என்றாலும் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பது எனது கருத்து.
கருத்துரைக்கு மிக்க நன்றி Mr.Indian.