Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

புதன், ஜூலை 6

மன்னிப்பாயா?, இறைவா! எனை மன்னிப்பாயா?.

மன்னிப்பாயா?, இறைவா! எனை மன்னிப்பாயா?.

நன்றி கெட்ட மனிதனிலே, நானே முதல்வனாகிவிட்டேன். வீணே,
பிஸ்மியில்லா உண்டு, உடல் வளர்த்தேன் நானே!.
ஆயினும் நீ எனக்கு உணவளித்தாய், என் ரஹ்மானே!,
நான் வீணாய்தான் போனதேனோ, என் மனமே....!.


உணவேயில்லா உடலாய், பலகோடி உயிர் நிதமுறங்க,
பசியேயில்லா உன் பயமேயில்லா, திமிரில் தினம் நானுறங்க!.
யுத்தத்தில்சாகும் மனிதருக்குள், நீ எத்தனைமுறை எனைகாத்தாய்!
ஆயினும் பண திமிர் மொத்தத்தில், உனை தொழ நான் மறந்தேன்!.


உடலுக்குள் உன்னதமாய், உறுப்புதனை அதிலமைத்து,
உவப்பாய் நான் வாழ்ந்திடவே, உதவிய என் இறைவா....!.
நீ எத்தனைமுறை எனக்காய், இதயமதை இயங்க நீ வைத்தாய்!.
ஆயினும் உனைதான் மறந்தேன், இருந்தும் நான் தொழமறந்தேன்!.


மணவாழ்வை நானடைந்து, மழலையையும் அதிலடைந்து,
தினம் என்னை மகிழ்வித்த, என் இறைவா....!.
மதிகெட்டு நானலைந்து, மமதையில் தான் வாழ்ந்து,
உனை வணங்கிவாழ மறந்ததேனோ, என் இறைவா....!.


உலகவாழ்வில் கண்ணியமாய், மறுமைவாழ்வில் நிச்சயமாய்,
வென்றிட அருள்மறையதை, எனக்கருளிய என் இறைவா....!.
மறைகழண்டு மதிமயங்கி, பிறைகண்டும் நோன்பிருக்கா,
மனிதனாகி நான் போனதேனோ, என் இறைவா?.


கோடிச்செல்வம் தானும்தந்தாய், குறையில்லா வாழ்வே தந்தாய்,
ஆயினும் உனைவணங்க நான் மறந்து விட்டேன் என்இறைவா...!.
ஏழைவரியை வழங்கவில்லை, இறுதி ஹஜ்ஜை நிறை வேற்றவில்லை,
நானோ,நன்றிகெட்ட மனிதனாகிப்போனேன், என் இறைவா....!.


நன்றி கெட்ட மனிதனிலே, நானே முதல்வனாகிவிட்டேன்!.
வீணே, உண்டு திண்று உடல் வளர்த்தேன், என் இறைவா!,
வீணாய் நான் போனதேனோ, நீயே அருள் தருவாய்!.


மீதமுள்ள காலமதில், உனை மீறாமல் நானும்வாழ,
நீயே எனக்கு அருள் புரிவாய் என் இறைவா..!.
இனி அடிபிறழா வாழ, நீயே எனக்கு அருள் தருவாய்!.


மன்னிப்பாயா, இல்லை எனை மஹஷரில் தண்டிப்பாயா?.
நானறியேன் இன் இறைவா.......!.

உன்னிடம் மன்றாடி கேட்கின்றேன், அருள் தருவாய்!
மன்னிப்பாயா?, இறைவா! எனை மன்னிப்பாயா?.


-அதிரை முஜீப்.