Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், ஜூலை 11

இன்றைய ஆட்சியாளர்களும் இஸ்லாமிய ஆட்சியாளர்களும்

இன்றைய ஆட்சியாளர்களும் இஸ்லாமிய ஆட்சியாளர்களும்

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் கொண்ட நாடு. இங்கு பல்வேறு இனங்களையும், மொழிகளையும் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் நம் இந்திய நாட்டை எல்லோரும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று அழைக்கின்றனர்.

நம் நாடு ஜனநாயகம் என்று சொல்லப்படும் மக்களாட்சி தத்துவத்தை அரசியல் நெறிமுறையாக கொண்ட நாடு. ஆட்சியாளர்களை ஆண்டியே தேர்ந்தெடுக்கலாம்! மாண்புமிகுகளை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என்று அழகிய அரசியல் வழிமுறை கொண்ட நாடு.

ஆனால் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு சேவை செய்கிறார்களோ இல் லையோ ஊழல் செய்வதில் வல்ல வர்களாக இருக்கிறார்கள். கடந்த கால பாஜக ஆட்சியில் பெட் ரோல் பங்க் ஊழல், சவப்பெட்டி (கார்கில்) ஊழல், இன்றைய காங் கிரஸ் ஆட்சியில் காமன்வெல்த், ஆதர்ஸ் குடியிருப்பு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என இந்தி யாவே ஊழலில் மிதக்கிறது.

ஒரு பக்கம் மெகா ஊழல்கள் என்றால் மறுபக்கம் வறுமை. இதுதான் இன்றைய இந்தியா!

கடந்த ஆகஸ்ட் 3, 2010 அன்று ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில நடந்த ஒரு மாநாட்டில் ஒற்றைக் கோரிக்கையை வைத்து உணவு பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நாடு விடுதலை அடைந்து 64 ஆண்டுகளுக்குப் பின் கொண்டு வரப்படக் கூடிய சட்டமல்ல இது! இச்சட்டம் காலதாமதமாக வந்திருக்கிறது. இச்சட்டம் வரும் முன் இந்தியா தன் குடிமக்கள் பலரது உயிர்களை பறிகொடுத்தது.

ஓர் அரசு அமைக்கப்பட்டவுடன் கொண்டு வரப்பட வேண்டிய சட்டம் இது. ஆனால் காலம் கடந்து வந்திருக்கின்றது.

உணவு பெறும் உரிமைச்சட்டத்தினை கொண்டு வர உறுதுணையாக இருந்த சமூக ஆர்வலர்கள், “உணவு மற்றும் தானியக் கிடங்குகளில் உணவுப் பொருட்கள் அழுகிப் போகிறது; ஆனால் மக்கள் பட்டினியில் இறக்கின்றனர். இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்...'' என கண்டனம் தெரிவித்தனர்.

உணவு கிடங்குகளில் கிடக்கும் பொருட்களை பட்டினியால் இறக்கும் மக்களுக்கு கொண்டு சேர்த்திட முடியாத அரசு என்ன அரசு? இப்படி மக்களின் நிலையை அறியாமல் அலட்சியம் காட்டும் அரசு எப்படி குடியரசாக - மக்கள் அரசாக இருக்க முடியும்?

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த நிகழ்வுகள் இன்றைய ஆட்சியா ளர்களுக்கு படிப்பினை என்றால் அது மிகையாகாது. அதில் ஒரு சம்பவம்...

இஸ்லாத்தின் இரண்டாவது கலிஃபாவான உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாம் ஆட்சி செய்த நிலப்பரப்பும் அகண்டு விரிந்தது. இன்றைக்கு இருப்பது போன்று அன்று போக்குவரத்து வசதி களோ, தகவல் தொடர்பு வசதி களோ இல்லாத ஒரு காலகட்டம் அது!

ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்கள் இரவுப் பொழுதில் நகர்வலம் வரும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் நகர்வலம் வந்து கொண்டிருந்தபோது பெண்மணி ஒருத்தி அடுப்பில் எதையோ கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அவளருகில் இரண்டு குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. உமர் (ரலி) அவர்கள் அந்தப் பெண்மணியை நெருங்கி (அவள் நாட்டுப்புறத்துப் பெண்மணி என்பதால் வந்திருப் பது ஆட்சியாளர் உமர்தான் என் பதை அவள் அறியவில்லை) “குழந் தைகள் ஏன் அழுகின்றன?'' எனக் கேட்டார்.

அதற்கு அப்பெண், “பசியால் அழுகின்றன என்றாள். “நீங்கள் என்ன கொதிக்க வைத்துக் கொண் டிருக்கிறீர்கள்?'' என்று ஆட்சியா ளர் கேட்டார். “அடுப்பில் தண் ணீர் கொதித்துக் கொண்டிருக் கின்றது'' என்று பதிலளித்தாள் அப்பெண். “ஏன்'' என ஆட்சியா ளர் கேட்க... “அடுப்பில் ஏதோ உணவு வெந்து கொண்டிருக்கின் றது என்ற எண்ணத்தில் குழந்தை கள் தூங்கி விடுவார்கள் என்பதற் காக தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். பின்னர் அல்லாஹ் எங்களுக்கும், ஆட்சியாளர் உமருக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்...'' என அந்தப் பெண் சொன்னாள்.

“இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மக்களின் கடமைகளை நிறைவு செய்யாவிட்டால் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்பது இஸ்லாத்தின் நியதி. அந்தப் பெண்மணி, “அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்...'' என்று இதைத் தான் குறிப்பிட்டாள்.

அந்தப் பெண்மணி இப்படி கூறியதும், “உமருக்கு (ஆட்சியா ளர்) உங்கள் நிலைமை எப்படித் தெரியும்...?'' என்று கேட்டார் உமர் (ரலி).

“எங்களுடைய நிலைமையைத் தானாகத் தெரிந்திட முடியாத உமர் ஏன் ஆட்சியாளர் என்ற பெரிய பொறுப்பைச் (செய லுக்கு) சுமந்திட வேண்டும்...?'' என்று பட்டென பதிலுரைத் தாள் அப்பெண்.

உடனே உமர் (ரலி) அவர்கள் பொது நிதிக்கருவூலத்தில் (பைத் துல்மால்) தானியங்கள் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார் கள். அங்கிருந்து அந்த குடும்பத் திற்கு தேவையான உணவுப் பொருட்களை எடுத்து தனது பணியாளர் அஸ்லம் அவர்களி டம் அவற்றைத் தன் முதுகி லேயே ஏற்றிடச் சொன்னார்கள்.

பணியாளரோ, “நானே எடுத்து வருகிறேன்...'' என்று கூற, அதற்கு உமர் அவர்கள் “நாளைய தீர்ப்பு நாளில் (மறுமையில்) நீ என்னுடைய பளுவைச் (சுமையை) சுமப்பாயா?'' எனக் கேட்டு விட்டு, தானே உணவுப் பொருட்களை சுமந்து சென்று அப்பெண்மணியிடம் ஒப்படைத் தார்கள்.

நாம் இங்கு கவனிக்க வேண் டிய விஷயம் என்னவெனில் அந்தப் பெண்மணி, “எங்களுக்கும் உமருக்குமிடையே இறைவன் தீர்ப்பு வழங்கட்டும்...'' என்று சொன்னது, "எங்களுடைய பட் டினியை (குறைகளை) தானாகத் தெரியாத ஆட்சியாளர் ஏன் பத வியில் இருக்க வேண்டும்?' என்ற பொருளில்தான் இஸ்லாமிய சமு தாய அமைப்பில் குடிமக்களின் குறைகளை கண்டறிந்து களைவ துதான் ஆட்சியாளர்களின் பொறுப்பு.

இதைத்தான் “சுதந்திர இந்தி யாவில் காங்கிரஸ் ஆட்சி அமையுமானால் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியை நடைமு றைப்படுத்த வேண்டும்...'' என்று சொன்னார் மகாத்மா காந்தி.

அப்போது இந்நாட்டை நீதி மிக்க உமர் (ரலி) போன்றவர்கள் தான் ஆள வேண்டும் என்று காந்தி நினைத்திருப்பார். ஆனால் இன்றோ எப்படிப்பட்டவர் ஆள்கிறார்கள் என்பது மக்கள் அறிந் ததுதான்.

- அஹ்மது அன்சாரி, சாயல்குடி

Source; http://www.keetru.com