Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், ஜூலை 11

இன்றைய ஆட்சியாளர்களும் இஸ்லாமிய ஆட்சியாளர்களும்

இன்றைய ஆட்சியாளர்களும் இஸ்லாமிய ஆட்சியாளர்களும்

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் கொண்ட நாடு. இங்கு பல்வேறு இனங்களையும், மொழிகளையும் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் நம் இந்திய நாட்டை எல்லோரும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று அழைக்கின்றனர்.

நம் நாடு ஜனநாயகம் என்று சொல்லப்படும் மக்களாட்சி தத்துவத்தை அரசியல் நெறிமுறையாக கொண்ட நாடு. ஆட்சியாளர்களை ஆண்டியே தேர்ந்தெடுக்கலாம்! மாண்புமிகுகளை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என்று அழகிய அரசியல் வழிமுறை கொண்ட நாடு.

ஆனால் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு சேவை செய்கிறார்களோ இல் லையோ ஊழல் செய்வதில் வல்ல வர்களாக இருக்கிறார்கள். கடந்த கால பாஜக ஆட்சியில் பெட் ரோல் பங்க் ஊழல், சவப்பெட்டி (கார்கில்) ஊழல், இன்றைய காங் கிரஸ் ஆட்சியில் காமன்வெல்த், ஆதர்ஸ் குடியிருப்பு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என இந்தி யாவே ஊழலில் மிதக்கிறது.

ஒரு பக்கம் மெகா ஊழல்கள் என்றால் மறுபக்கம் வறுமை. இதுதான் இன்றைய இந்தியா!

கடந்த ஆகஸ்ட் 3, 2010 அன்று ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில நடந்த ஒரு மாநாட்டில் ஒற்றைக் கோரிக்கையை வைத்து உணவு பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நாடு விடுதலை அடைந்து 64 ஆண்டுகளுக்குப் பின் கொண்டு வரப்படக் கூடிய சட்டமல்ல இது! இச்சட்டம் காலதாமதமாக வந்திருக்கிறது. இச்சட்டம் வரும் முன் இந்தியா தன் குடிமக்கள் பலரது உயிர்களை பறிகொடுத்தது.

ஓர் அரசு அமைக்கப்பட்டவுடன் கொண்டு வரப்பட வேண்டிய சட்டம் இது. ஆனால் காலம் கடந்து வந்திருக்கின்றது.

உணவு பெறும் உரிமைச்சட்டத்தினை கொண்டு வர உறுதுணையாக இருந்த சமூக ஆர்வலர்கள், “உணவு மற்றும் தானியக் கிடங்குகளில் உணவுப் பொருட்கள் அழுகிப் போகிறது; ஆனால் மக்கள் பட்டினியில் இறக்கின்றனர். இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்...'' என கண்டனம் தெரிவித்தனர்.

உணவு கிடங்குகளில் கிடக்கும் பொருட்களை பட்டினியால் இறக்கும் மக்களுக்கு கொண்டு சேர்த்திட முடியாத அரசு என்ன அரசு? இப்படி மக்களின் நிலையை அறியாமல் அலட்சியம் காட்டும் அரசு எப்படி குடியரசாக - மக்கள் அரசாக இருக்க முடியும்?

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த நிகழ்வுகள் இன்றைய ஆட்சியா ளர்களுக்கு படிப்பினை என்றால் அது மிகையாகாது. அதில் ஒரு சம்பவம்...

இஸ்லாத்தின் இரண்டாவது கலிஃபாவான உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாம் ஆட்சி செய்த நிலப்பரப்பும் அகண்டு விரிந்தது. இன்றைக்கு இருப்பது போன்று அன்று போக்குவரத்து வசதி களோ, தகவல் தொடர்பு வசதி களோ இல்லாத ஒரு காலகட்டம் அது!

ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்கள் இரவுப் பொழுதில் நகர்வலம் வரும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் நகர்வலம் வந்து கொண்டிருந்தபோது பெண்மணி ஒருத்தி அடுப்பில் எதையோ கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அவளருகில் இரண்டு குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. உமர் (ரலி) அவர்கள் அந்தப் பெண்மணியை நெருங்கி (அவள் நாட்டுப்புறத்துப் பெண்மணி என்பதால் வந்திருப் பது ஆட்சியாளர் உமர்தான் என் பதை அவள் அறியவில்லை) “குழந் தைகள் ஏன் அழுகின்றன?'' எனக் கேட்டார்.

அதற்கு அப்பெண், “பசியால் அழுகின்றன என்றாள். “நீங்கள் என்ன கொதிக்க வைத்துக் கொண் டிருக்கிறீர்கள்?'' என்று ஆட்சியா ளர் கேட்டார். “அடுப்பில் தண் ணீர் கொதித்துக் கொண்டிருக் கின்றது'' என்று பதிலளித்தாள் அப்பெண். “ஏன்'' என ஆட்சியா ளர் கேட்க... “அடுப்பில் ஏதோ உணவு வெந்து கொண்டிருக்கின் றது என்ற எண்ணத்தில் குழந்தை கள் தூங்கி விடுவார்கள் என்பதற் காக தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். பின்னர் அல்லாஹ் எங்களுக்கும், ஆட்சியாளர் உமருக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்...'' என அந்தப் பெண் சொன்னாள்.

“இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மக்களின் கடமைகளை நிறைவு செய்யாவிட்டால் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்பது இஸ்லாத்தின் நியதி. அந்தப் பெண்மணி, “அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்...'' என்று இதைத் தான் குறிப்பிட்டாள்.

அந்தப் பெண்மணி இப்படி கூறியதும், “உமருக்கு (ஆட்சியா ளர்) உங்கள் நிலைமை எப்படித் தெரியும்...?'' என்று கேட்டார் உமர் (ரலி).

“எங்களுடைய நிலைமையைத் தானாகத் தெரிந்திட முடியாத உமர் ஏன் ஆட்சியாளர் என்ற பெரிய பொறுப்பைச் (செய லுக்கு) சுமந்திட வேண்டும்...?'' என்று பட்டென பதிலுரைத் தாள் அப்பெண்.

உடனே உமர் (ரலி) அவர்கள் பொது நிதிக்கருவூலத்தில் (பைத் துல்மால்) தானியங்கள் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார் கள். அங்கிருந்து அந்த குடும்பத் திற்கு தேவையான உணவுப் பொருட்களை எடுத்து தனது பணியாளர் அஸ்லம் அவர்களி டம் அவற்றைத் தன் முதுகி லேயே ஏற்றிடச் சொன்னார்கள்.

பணியாளரோ, “நானே எடுத்து வருகிறேன்...'' என்று கூற, அதற்கு உமர் அவர்கள் “நாளைய தீர்ப்பு நாளில் (மறுமையில்) நீ என்னுடைய பளுவைச் (சுமையை) சுமப்பாயா?'' எனக் கேட்டு விட்டு, தானே உணவுப் பொருட்களை சுமந்து சென்று அப்பெண்மணியிடம் ஒப்படைத் தார்கள்.

நாம் இங்கு கவனிக்க வேண் டிய விஷயம் என்னவெனில் அந்தப் பெண்மணி, “எங்களுக்கும் உமருக்குமிடையே இறைவன் தீர்ப்பு வழங்கட்டும்...'' என்று சொன்னது, "எங்களுடைய பட் டினியை (குறைகளை) தானாகத் தெரியாத ஆட்சியாளர் ஏன் பத வியில் இருக்க வேண்டும்?' என்ற பொருளில்தான் இஸ்லாமிய சமு தாய அமைப்பில் குடிமக்களின் குறைகளை கண்டறிந்து களைவ துதான் ஆட்சியாளர்களின் பொறுப்பு.

இதைத்தான் “சுதந்திர இந்தி யாவில் காங்கிரஸ் ஆட்சி அமையுமானால் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியை நடைமு றைப்படுத்த வேண்டும்...'' என்று சொன்னார் மகாத்மா காந்தி.

அப்போது இந்நாட்டை நீதி மிக்க உமர் (ரலி) போன்றவர்கள் தான் ஆள வேண்டும் என்று காந்தி நினைத்திருப்பார். ஆனால் இன்றோ எப்படிப்பட்டவர் ஆள்கிறார்கள் என்பது மக்கள் அறிந் ததுதான்.

- அஹ்மது அன்சாரி, சாயல்குடி

Source; http://www.keetru.com

ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்களும்- அனுமதி கேட்ட அமீருல்முஃமினீனும்.

ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்களும்- அனுமதி கேட்ட அமீருல்முஃமினீனும்.

அதிகாரத்தை பயன்படுத்தி
அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும்
ஆட்சியாளர்களுக்கு மத்தியில்
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின்
அடியொற்றி வாழ்ந்த அருமை உமர்[ரலி] அவர்கள்,
ஆட்சி தலைவராக இருந்தபோதும்
அடுத்தவர் நில விஷயத்தில்
அதுவும் தனது உடலை அடக்கம் செய்ய தேவைப்படும்
ஆறு அடி நிலத்திற்க்காக சம்மந்தப்பட்டவரிடம்
அனுமதி கேட்ட அற்புதமான வாழ்க்கை பாரீர்;


அம்ர்இப்னு மைமூன் அல்அவ்தீ அறிவித்தார்;
உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன்.
தம் மகனை நோக்கி, அவர், 'அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் சொல்லிவிட்டு,
என்னுடைய தோழர்களான (நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடன்
நானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்'
எனக் கூறினார். அவ்வாறே கேட்கப்பட்டதும்.

ஆயிஷா(ரலி) நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன்.
இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதைவிட்டுக் கொடுக்கிறேன்" என்றார்.
இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி)
'என்ன பதில் கிடைத்தது?' எனக் கேட்டார்.
இப்னு உமர்(ரலி) 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!
உங்களுக்கு அவர் அனுமதியளித்துவிட்டார்' எனக் கூறினார்.
உடனே உமர்(ரலி) 'நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர
வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (என்னுடைய உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று
ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மீண்டும்) என்னுடைய ஸலாமைக் கூறி,
'உமர் அனுமதி கேட்கிறார்' எனக் கூறுங்கள்.
எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்;
இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள்.
[ ஹதீஸ் சுருக்கம் நூல்;புஹாரி]


இந்த ஹதீஸில், முதலில் தன் மகன் மூலம் அனுமதி பெற்ற உமர்[ரலி] அவர்கள்,
தன்னை அந்த இடத்தில் அடக்கம் செய்வதற்கு முன்பாக மறுபடியும்
அன்னை ஆயிஷா[ரலி] அவர்களிடம் அனுமதி கேட்குமாறு கூறுகிறார்கள் என்றால்,
எந்த அளவுக்கு அல்லாஹ் உமர்[ரலி] அவர்களின் உள்ளத்தை
விசாலமாக்கியிருக்கவேண்டும்? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்லிமல்லாத காந்தி அவர்கள்,
உமருடைய ஆட்சி போன்று ஆட்சி வேண்டும் என்று சிலாகித்து சொல்லும் அளவுக்கு உமர்[ரலி] அவர்களின் வாழ்க்கை/ஆட்சி இருந்தது.
அந்த உமர்[ரலி] அவர்களின் கொள்கை வழிவந்த நாம் இனியாகிலும் அடுத்தவர் நிலத்தையோ, பொருளையோ, அடுத்தவர் உரிமையையோ பறிக்காமல்
வாழ்ந்து மரணிக்க முயற்ச்சிப்போம்.

-சகோ.முகவை எஸ்.அப்பாஸ்
நன்றி: http://sahaabaakkal.blogspot.com/

சனி, ஜூலை 9

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல !

போர்களத்தில் சிந்தும் குருதியை விட அறிஞனின் பேனா மை க்கு வலிமை  அதிகம் -  இந்த சொல்லில் தான் எத்தனை எதார்தங்கள்...
பத்திரிக்கை துறை ... உலக வரலாற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்திய ஒரே துறை என்றால் அது பத்திரிக்கை துறை தான் ... எத்தனையோ மாற்றங்கள் .. உலக நியதிகளை புரட்டி போட்ட வரலாறுகள் பத்திரிகை துறையினால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடிகிறது .
 அவ்வளவு சாதனைகளை செய்ததாக நான் பீற்றிக்கொள்ளும் இந்த பத்திரிக்கைதுறைதான் என்னையும் என்னை போன்ற சிந்தனை கொண்ட எண்ணற்ற சகோதரர்களுக்கும் பெரும் சவாலாக மாறி நிற்கிறது ...
ஆம் ! மகாத்மா காந்தி அவர்கள் பத்திரிகை நடத்தினார் .சுதந்திரம் பற்றிய சிந்தனை வெளிக்கொணர்ந்தது.இந்தியா வெளிச்சம் அடைந்தது .
தந்தை பெரியார் அவர்கள் பத்திரிக்கை நடத்தினார் . ஆதிக்க சாதி வெறியர்கள் தடை செய்தார்கள் ...மறுநாள் பெயர் மாறி பத்திரிக்கை வரும் ....இப்படி தன் வாழ்நாளில் ஐம்பதற்கும் மேற்பட்ட பத்திரிகைகள் நடத்தினார் . தமிழ்நாடு தன்மானம் மிக்க நாடாய் மாறினது . இது போல் எண்ணற்ற தலைவர்கள் தங்களின் சிந்தனைகளை பரப்ப பத்திரிகை துறையை பயன்படுத்தி இருக்கிறார்கள் ! ஆனால் இன்றோ
இப்படி பட்ட ஒரு நல்ல துறை முழுக்க முழுக்க கெட்டு குட்டிசுவராகி நிற்கிறதே ! எனும் வேதனை பீறிட்டு எழுகிறது .
பத்திரிகைத்துறை இன்றோ அதன் நிலைப்பாடு என்னவென்று பார்த்தால் ...
செய்திகளை பரபரப்பாக கொடுக்க வேண்டும் ... அதனால் அதன் உண்மை தன்மைகளை அலசி ஆராய்ந்து கொடுப்பதில்லை .அடுத்து புலனாய்வு பத்திரிக்கைகள் என்ற பெயரில் சில பத்திரிகைகள் அடுத்தவர்களின் அந்தரங்கள் பற்றி தெரிந்து கொண்டு எழுதுவது சில சமயங்களில் ப்ளாக்மெயில் செய்து அவர்களிடம் தொகையை பெற்று கொள்வது .
 இதைவிட ஒரு மிகபெரும் கொடுமை ஒன்று உள்ளது அது குறிப்பிட்ட இனத்தை தொடர்ந்து அவமதித்தும் ,அவதூறுகளை அள்ளி தெளித்தும் ஒரு மிகபெரும் போரையே செய்து வருகின்றன .
ஆம் அது முஸ்லீம்களுகெதிரான சிந்தனையை வளர்க்கும் போர்
இதன் மூலம் முஸ்லிம்கள் என்றாலே மற்றவர்கள் எதிராக பார்க்கும் நிலையை உருவாக்கி விட திட்டம் தீட்டி செயல் படுகின்றனர் அதில் கிட்டதட்ட வெற்றியும் பெற்று விட்டனர் என்பதே யதார்த்த நிலை
இப்படிதான் கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது ஆயிஷா என்ற பெண் மிகபெரும் தீவிரவாதி என்று எழுதி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக சித்தரித்தனர் .
நடுநிலை நாளேடு என பீற்றிக்கொள்ளும் தினமணி கீழக்கரை வழியாக இலங்கை தப்பி செல்ல ஆயிஷா திட்டம் என்றும் அதற்கு கீழக்கரை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவருவதாகவும் ஒரு செய்தியை அந்த பகுதி பதிப்பில் மட்டும் வெளியிட்டது . இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி சகோதரர்கள் ஒரு அறிவுபூர்வமான வேலையை செய்தார்கள் ...
அது முதலில் தினமணிக்கு ஒரு கடிதம் எழுதி எதன் அடிப்படையில் இப்படி செய்தி வெளியிட்டுளீர்கள் ? அவ்வாறு துணை புரியும் இளைஞர்கள் விவரம் தாருங்கள், நாங்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டு எழுத அது தினமணியின் குப்பைக்கே சென்றது
விட வில்லை பத்திரிக்கை கவுன்சில் க்கு இந்த செய்தியை புகாராக அனுப்ப பின்பு
பஞ்சாயத்திற்கு வந்தார்கள் ... நம்ம ஆட்களும் தெளிவான டீலிங் செய்தார்கள் .அது எல்லா பதிப்புகளிலும் முதல் பக்கம் இந்த செய்தி பொய் என்று மறுப்பு போடவேண்டும் பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று அவ்வாறே எல்லா பதிப்புகளிலும் வந்தது . அத்துடன் நிற்க வில்லை எல்லா பகுதிகளிலிருந்தும் இது என்ன மறுப்பு செய்தி ?அப்படி என்ன தான் எழுதி இருந்தீர்கள் முஸ்லிம்கள் பற்றி ? என்று கேள்விகளை கேட்க செய்தனர் . அவர்களும் உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்!
தினமலர் சொல்லவெ வேண்டாம் ....அவதூறு செய்திக்காக விடியல் வெள்ளி மாத இதழ் ஆசிரியருக்கு நஷ்ட ஈடு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் தீர்ப்பே வழங்கப்பட்டது .... அவ்வப்போது அரிப்பை தீர்த்து கொள்ள கார்ட்டூன் போடுவது ...இது காவியின் பத்திரிக்கை என்பதால் பெரிய ஆச்சர்யம் இல்லை

ஆனால் இன்று தமிழக அரசியல் என்ற பத்திரிகை மயிலாடுதுறையில் விபச்சாரத்தை தட்டி கேட்ட இஸ்லாமிய பெரியவரை பற்றி எழுதி இருந்தது தான் உச்சகட்ட வேதனை!
இந்த அவதூறு பிரசாரத்தை செய்தவர் திருவாளர் ராகவன். இவரும் இதே பகுதியை சார்ந்தவர் தான் .அவருக்கு மன்சூர் கைலி சென்டர் சுமார் முப்பத்து ஆண்டு காலமாக தனது சொந்த இடத்திலேயே மிக பிரபல்யமாக வியாபாரதிலும்  அறநெறியை கொண்டு செயல்பட்டு வருவது தெரியும் ...பின்பு ஏன் ? ஆம் சகோதரரர் அப்துர் ரவூப் அவர்களின் இஸ்லாமிய பிரசாரங்கள் தான் இவருக்கும் இவரை பின்னின்று இயக்குபவர்களுக்கும் மிக கடுமையான எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கின்றன .
அன்பு சகோதரர் ராகவன் அவர்களே ! உங்களுக்கு சில கேள்விகள் ?
நீங்கள் எழுதிய ஃபாலோ அப் கட்டுரையிலிருந்தே சில கேள்விகள் ?
நேர்மையான காவல் துறை அதிகாரி ஒருவர் ...( இப்படிதான் உங்கள் கும்பல் ஆதராமில்லா செய்திகளை போடும் போது எழுதுகிறீர்கள் .. அது எப்படிப்பா உங்களுக்கு மட்டும் நேர்மையான அதிகாரிகள் கண்ணுக்கு தெரிகிறார்கள் ?
சரி அந்த நேர்மையான அதிகாரி பெயர் தான் என்ன? அவர் பெயரை வெளியீட்டால் என்ன ? ஏன் பயபடுகிறார் ? உண்மையை உரக்க சொல்லுவதற்கு பயபடுபவர்தான் உங்கள் அகராதியில் நேர்மையானவரா? இது எங்களுக்கு தெரியும் அப்படி ஒருவர் இருக்க வில்லை அது உங்களின் கற்பனை கதாபாத்திரம்- தினமலரின் பழைய படைப்பு இப்போது நீங்கள் ரீமேக் செய்துள்ளீர்கள் !
போன கட்டுரையில் ஷரியத் தீர்ப்பு ! தவறு செய்யும் பெண்களை திருத்துகிறார்.அடிக்கிறார் சூடு போடுகிறார்
என்ற எழுதிய கைகள் இப்போது ஒரே வாரத்தில் மாற்றி எழுதுகிறதே ! எங்களுக்கு புரிகிறது சார் !
நீங்கள் எழுதிய கட்டுரை பெரிய அளவில் மக்களிடம் சேரவில்லை என்றாலும் முஸ்லிம்கள் காவல்துறை, பத்திரிகைத்துறை பற்றி யும் இந்த கூட்டணியின் முஸ்லிம் எதிர்ப்பு நிலை பற்றியும் நன்கு அறிந்தே வைத்து தானே மறியல் செய்ய ஆரம்பித்தார்கள் . உங்களுக்கு ஆகா முஸ்லிம்கள் ஒன்று சேர்கிறார்கள் என்றவுடன் அவர் மேலயே பழி சுமத்துகிறீர்கள் .... நல்லா இருக்கிறது !

இறுதியாக உங்களுக்காக சில வரிகள் ...

தீயவன் ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால்
அதை தீர விசாரித்து கொள்ளுங்கள் இல்லையேல் அறியாமையினால் ஒரு குற்றமற்ற சமூகதிற்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம் .பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே வருத்தபடுவீர்கள் !- என்று அல் குர் ஆன் கூறுகிறது ... அதனால்
 எந்த செய்தி வந்தாலும் நாங்கள் தீர விசாரித்தே தான் அதை புரிந்து கொள்கிறோம்
அதனால் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது எங்களுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது .
 பத்திரிகையாளர்களுக்கும் இஸ்லாம் வழி காட்டுகிறது
தான் கேள்வி பட்ட எல்லாவற்றையும் பரப்புகிறவன் பொய்யன் - என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள் .
செய்தியாளர்களுக்கு nose for news என்பார்கள் ஆனால் நீங்கள் வெளியிடும் செய்திகளின் தரம் நாற்றம் அடிக்கறது நண்பர்களே!
தயவு செய்து உங்களால் பத்திரிகைத்துறை பெருமை அடையாவிட்டாலும்
மக்களின் நம்பிக்கையை இழந்து விடாமலாவது பார்த்து கொள்ளுங்கள் .

 



   

வியாழன், ஜூலை 7

கிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து ! கரப்பான் பூச்சி 'ஸ்பிரே' + சமையல் கேஸ்

கிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து ! கரப்பான் பூச்சி 'ஸ்பிரே' + சமையல் கேஸ்

'மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த அந்த இல்லத்தரசி, மே 13-ம் தேதியன்று வழக்கம்போல கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து சமையலை ஆரம்பித்தார். அப்போது, சமையல் மேடையில் அலைந்த கரப்பான் பூச்சியைக் கண்டவர், அதற்கான 'ஸ்பிரே’வை எடுத்து அழுத்தினார். அடுத்த நொடியே குபீரென தீப்பற்றி, கேஸ் சிலிண்டரும் வெடிக்க... 65 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காப்பாற்றச் சென்ற கணவருக்கும் தீக்காயங்கள்’

- இப்படி ஒரு தகவல், இன்டர்நெட்டில் 'தீ'யாக உலா வருகிறது. ஆனால், நாம் பலமாக 'வலை' வீசி தேடியும் எங்கேயுமே 'செய்தி'யாக அது பதிவாகியிருப்பதைக் காண முடியவில்லை. அதேசமயம், 'கேஸ் ஸ்டவ் எரியும்போது கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே அடித்தால் தீ விபத்துக்கான வாய்ப்பு இருக்கிறதா?' என்கிற கேள்வி நமக்கு எழ, சென்னை, எழும்பூரிலிருக்கும் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஷ் கண்ணனிடம் அதைப் பற்றிக் கேட்டோம்.

''கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே என்றில்லை... சென்ட், பாடி ஸ்பிரே, ரூம் ஸ்பிரே, நக பாலிஷ் என்று ஆல்கஹால் கலந்த பொருட்களை கிச்சனுக்குள் பயன்படுத்தவே கூடாது. அனைத்து ஸ்பிரேக்களுமே 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தி லேயே வெடிக்கக் கூடியவைதான். ஸ்பிரேக்களை சூரிய வெப்பத்தில் வைப்பதும் ஆபத்தானது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் என்று தெரிந்தும் இவற்றை கிச்சனுக்குள் அனுமதிப்பது எமனை வரவழைப்பதற்குச் சமம்!'' என்று எச்சரித்தவர், அடுப்படி ஆபத்து களைப் பற்றி பட்டியலே இட்டார்!

''கிச்சனில் சமையல் செய்யும்போது புடவை, சுடிதார், நைட்டி என்று எந்த உடை யானாலும், அதை காட்டனில் அணிய வேண்டும். ஒருவேளை ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், இந்த வகை துணிகள் உடம்போடு ஒட்டிக் கொள்ளும்; எளிதில் அகற்ற முடியாது. அது காயங்களை இன்னும் தீவிரமாக்கும்.

கிச்சன் பிளாட்ஃபார்ம் மேலாக ஒரு செல்ஃப் வைத்து, சமையல் பொருட்களை வைத்து, எடுப்பது கூடாது. கையை எட்டி மேலே இருக்கும் பொருட்களை எடுக்கும்போது, ஸ்டவ் எரிந்து கொண்டிருந்தால், உடையில் எளிதில் தீ பிடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன'' என்று அறிவுறுத்திய ராஜேஷ் கண்ணன்,

''கேஸ் சிலிண்டரை நூறு சதவிகிதம் பயன்படுத்த எண்ணி, படுக்கை வாட்டில் வைத்தெல்லாம் பயன் படுத்துவார்கள் சிலர். இது ஆபத்தானது. லீக்கேஜ் இருந்தால் வெடித்து விடும். அதேபோல பவர் கட் ஆனதும் மிக்ஸி, கிரைண்டர் ஸ்விட்ச்களை உடனடியாக ஆஃப் செய்துவிட வேண்டும். இல்லையெனில் நீங்கள் வெளியில் சென்றிருக்கும் சமயமாக பார்த்து கரன்ட் வந்தால்... மிக்ஸி, கிரைண்டர் தானாக 'ஆன்’ ஆகி, ஒரு கட்டத்தில் மோட்டாரின் வெப்பம் அதிகமாகி, வெடிக்கும் ஆபத்தும் உள்ளது'' என்று சொன்னார்.

''குழப்பமான மனநிலையும் விபத்துக்கான காரணிகளுள் ஒன்றுதான்'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தாரா, ''குழப்பமான மனநிலையில் கிச்சனுக்குள் நுழைந்து பொங்கும் பாலை பார்த்துக் கொண்டேஇருப்பது, கேஸை 'ஆன்’ செய்துவிட்டு பற்ற வைக்க மறப்பது போன்றவையும் விபத்துக்கான விதைகளே. செல்போனில் மூழ்கியபடி சமைப்பதும் ஆபத்தே! ஒன்று சமைத்துவிட்டுப் பேசலாம். அல்லது, பேசிவிட்டு சமைக்கலாம். தூக்க மாத்திரைகள், அலர்ஜி மாத்திரைகள் சாப்பிட்ட பிறகு அலர்ட்னெஸ் குறைவாக இருக்கும். அது மாதிரியான சமயங்களில் கிச்சனில் நுழைவதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்'' என்று அக்கறையோடு டிப்ஸ்களைத் தந்தார் தாரா!

Source: http://pettagum.blogspot.com/2011/07/blog-post_2334.html

உண்மையை சொல்வதே மிகபெரும் வீரம்

‎"சர்வதேச சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
"அமெரிக்காவினதும் அதன் துஷ்ட சகாவான ஸியோனிஸ இஸ்ரேலினதும் எதேச்சதிகாரப் போக்கின் விளைவாகவே இன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்று கடந்த புதன்கிழமை (29.06.2011) தெஹ்ரானில் இடம்பெற்ற 28ஆவது சர்வதேச திருக்குர்ஆன் போட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஈரானிய அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

"பண்பாடற்ற ஸியோனிஸ சக்திகள் தம்முடைய குறுகிய நோக்கங்களின் பொருட்டு முழு மனித குலத்தையும் தங்களுடைய சுயநல சடவாத, பொருள் முதல்வாத சித்தாந்தங்கள் எனும் இரும்புச் சக்கரங்களின் கீழிட்டு காலங்காலமாக நசுக்கிவருகின்றன" என்று அஹ்மதி நிஜாத் சாடியுள்ளார்.

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் பலஸ்தீன் நிலங்கள் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளமை, அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிய மற்றும் ஈராக்கிய யுத்தங்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை என்பன போன்ற துர்ப்பாக்கிய நிகழ்வுகள் அமெரிக்காவும் அதன் மத்திய கிழக்குச் சகாவான இஸ்ரேலும் ஒன்றிணைந்து தம்முடைய காலனித்துவ அடைவுகளுக்காக முழு மனித விழுமியங்களையும் பலிகொடுக்கத் தயாராக உள்ளமையைத் தான் நிரூபித்துள்ளன" என்று ஈரானிய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

"இன்று உலகில் ஒரு குற்றச்செயல், ஊழல், சர்வாதிகாரம் என மனித இனத்தை இழிவுபடுத்தும் எந்த ஒன்றையேனும் கடந்துபோக நேர்கையில், அதன் பின்னணியில் ஸியோனிஸ இராச்சியமும் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அவர்கள் எதனைக் காவு கொடுத்தேனும் தம்முடைய சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்வதில்தான் மும்முரமாக உள்ளனர். அதைத் தவிர, வேறு எதைப் பற்றியும் கவலைப்படும் நிலையில் அவர்கள் இல்லை" என்றும் ஈரானிய அதிபர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
-நன்றி- சதகதுல்லாஹ் -பேஸ்புக் மூலம்

புதன், ஜூலை 6

மன்னிப்பாயா?, இறைவா! எனை மன்னிப்பாயா?.

மன்னிப்பாயா?, இறைவா! எனை மன்னிப்பாயா?.

நன்றி கெட்ட மனிதனிலே, நானே முதல்வனாகிவிட்டேன். வீணே,
பிஸ்மியில்லா உண்டு, உடல் வளர்த்தேன் நானே!.
ஆயினும் நீ எனக்கு உணவளித்தாய், என் ரஹ்மானே!,
நான் வீணாய்தான் போனதேனோ, என் மனமே....!.


உணவேயில்லா உடலாய், பலகோடி உயிர் நிதமுறங்க,
பசியேயில்லா உன் பயமேயில்லா, திமிரில் தினம் நானுறங்க!.
யுத்தத்தில்சாகும் மனிதருக்குள், நீ எத்தனைமுறை எனைகாத்தாய்!
ஆயினும் பண திமிர் மொத்தத்தில், உனை தொழ நான் மறந்தேன்!.


உடலுக்குள் உன்னதமாய், உறுப்புதனை அதிலமைத்து,
உவப்பாய் நான் வாழ்ந்திடவே, உதவிய என் இறைவா....!.
நீ எத்தனைமுறை எனக்காய், இதயமதை இயங்க நீ வைத்தாய்!.
ஆயினும் உனைதான் மறந்தேன், இருந்தும் நான் தொழமறந்தேன்!.


மணவாழ்வை நானடைந்து, மழலையையும் அதிலடைந்து,
தினம் என்னை மகிழ்வித்த, என் இறைவா....!.
மதிகெட்டு நானலைந்து, மமதையில் தான் வாழ்ந்து,
உனை வணங்கிவாழ மறந்ததேனோ, என் இறைவா....!.


உலகவாழ்வில் கண்ணியமாய், மறுமைவாழ்வில் நிச்சயமாய்,
வென்றிட அருள்மறையதை, எனக்கருளிய என் இறைவா....!.
மறைகழண்டு மதிமயங்கி, பிறைகண்டும் நோன்பிருக்கா,
மனிதனாகி நான் போனதேனோ, என் இறைவா?.


கோடிச்செல்வம் தானும்தந்தாய், குறையில்லா வாழ்வே தந்தாய்,
ஆயினும் உனைவணங்க நான் மறந்து விட்டேன் என்இறைவா...!.
ஏழைவரியை வழங்கவில்லை, இறுதி ஹஜ்ஜை நிறை வேற்றவில்லை,
நானோ,நன்றிகெட்ட மனிதனாகிப்போனேன், என் இறைவா....!.


நன்றி கெட்ட மனிதனிலே, நானே முதல்வனாகிவிட்டேன்!.
வீணே, உண்டு திண்று உடல் வளர்த்தேன், என் இறைவா!,
வீணாய் நான் போனதேனோ, நீயே அருள் தருவாய்!.


மீதமுள்ள காலமதில், உனை மீறாமல் நானும்வாழ,
நீயே எனக்கு அருள் புரிவாய் என் இறைவா..!.
இனி அடிபிறழா வாழ, நீயே எனக்கு அருள் தருவாய்!.


மன்னிப்பாயா, இல்லை எனை மஹஷரில் தண்டிப்பாயா?.
நானறியேன் இன் இறைவா.......!.

உன்னிடம் மன்றாடி கேட்கின்றேன், அருள் தருவாய்!
மன்னிப்பாயா?, இறைவா! எனை மன்னிப்பாயா?.


-அதிரை முஜீப்.


மாமியார் மெச்சும் மருமகளாக!

o அம்மாவிடம் மகன் பாசமாய் இருப்பது இயல்பே!
o சிக்கலில் மிக நுட்பமான பகுதி!
o வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்!
o மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசுங்கள்!
o மாமியாருக்கு மதிப்பு கொடுங்கள்!
o புகுந்த வீட்டிலும் இயல்பாக இருங்கள்
o மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற காரணங்கள் பல!
o வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்!
o மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்துங்கள்!
o குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள்!
o பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். அதை வீட்டுக்கு வரும் மருமகள் மறக்க வேண்டாம்.
உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ?
அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க" என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் ''மேரிடல் கவுன்சிலிங்'' வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது. எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ இந்தியப் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் சர்வதேசப் பிரச்சினை இது!

செவ்வாய், ஜூலை 5

பேப்பர் கப் தயாரிக்கலாம் வாங்க!



வாரம் ஒரு தொழில்!


அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.
சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால் இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடை களிலும் இதுதான் நிலைமை

ஞாயிறு, ஜூலை 3

எப்போதும் இளமை, எப்போதும் ஆரோக்கியம்,



எப்போதும் இளமை, எப்போதும் ஆரோக்கியம், எப்போதும் நீண்ட உற்சாகமான வாழ்வு வாழ முன்பெல்லாம் சொல்லப்பட்டு வந்த ஒரே வாசகம் `தினமும் ஒரு ஆப்பிள்' என்பது தான். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதும்... எந்த ஒரு டாக்டரையும் சந்திக்க வேண்டி இருக்காது என்று நம்பப்பட்டு வந்த காலம் இப்போது இல்லை. அழகும், ஆரோக்கியமும் நிறைந்த நீடித்த வாழ்க்கைக்கு ஒரு ஆப்பிள் மட்டும் போதாது என்று அறிவியல் நிபுணர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். மூளையின் செயல்திறனைத் தூண்ட, இருதய நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க, தோல் இளமையும் பூரிப்பும் நிறைந்து மின்ன மருத்துவ நிபுணர்கள் வேறு சில வழிகளை பரிந்துரைக்கிறார்கள். கீழே கொடுக்கப்பட்டவற்றை கவனித்துப் பயன்படுத்துங்கள்.

சனி, ஜூலை 2

அறிவியல் இனி வாழ்விற்கே ! அழிவதற்கல்ல !!

உலகுக்குத் தீமை பயக்கும் அணுமின் நிலையங்களை இனி அமைப்பதில்லை என ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் 2022-க்குள் மூடிவிடவும் ஜெர்மனி முடிவு எடுத்துள்ளது.வளர்ந்த, தொழில் வளர்ச்சி அடைந்த  நாடுகளில் இத்தகைய முன்னுதாரண முடிவினை மேற்கொண்ட முதல் நாடு ஜெர்மனியாகும்.