Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, மார்ச் 25

முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் : முலாயம் வலியுறுத்தல்

முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் : முலாயம் வலியுறுத்தல்







"மாநில சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும்

முஸ்லீம்களுக்கென்று தனி இடஒதுக்கீடு செய்யப்படவேண்டும்"

என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில்

வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து, இன்று நாடாளுமன்றத்தில் விவாத நேரத்தின்போது

அவர் கேள்வி எழுப்பினார்.


நாடாளுமன்றத்தில் முலாயம் பேசுகையில்,



"மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை

மிகக் குறைவாக உள்ளது. 14 முக்கிய மாநிலங்கள் சார்பாக

மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு

அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம்.

இந்த நிலை மாறவேண்டுமானால்,

மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு

இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்."


என்று கருத்து பதித்துள்ளார்.


Source: http://www.inneram.com/

உங்கள் தொகுதியின் வேட்பாளரின் பின்னணியை அறிய

உங்கள் தொகுதியின் வேட்பாளரின் பின்னணியை
அறிய SMS செய்து அவரின் குற்றப் பின்னணியை
அறிந்து எச்சரிக்கையாக வாக்களியுங்கள்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் பொது மக்கள் பெற தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன்,தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள், சொத்து விவரம் ஆகியவற்றைத் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில், தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ஜனநாயக மாற்றங்களுக்கான சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டனர்.
இதன்படி, 2006 -ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 77 பேர் மீது மொத்தம் 176 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.


இதில் கட்சி வாரியாக உறுப்பினர்கள் விவரம்:

திமுக: 39,
பாமக: 15,
காங்கிரஸ்: 9,
அதிமுக: 8,
மதிமுக: 2,
இந்திய கம்யூனிஸ்ட்: 2.

2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 57 பேர் கோடீஸ்வரர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான மார்ச்
30-ம் தேதியில் இருந்தே வாக்காளர்கள்,தங்கள் பகுதி வேட்பாளர்களின் பின்னணி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர்கள் தங்களது செல்போனில் இருந்து தங்கள் பகுதி அஞ்சல் பின் கோடு எண் (உதாரணமாக தியாகராய நகர் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாக இருந்தால் 600017) எனக் குறிப்பிட்டு 56070 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அனுப்பினால், அந்தத் தொகுதி வேட்பாளர்களின் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் விவரம், அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்கள் அவரவர் செல்போன்களுக்கே அனுப்பப்படும் என ""ஜனநாயக மாற்றங்களுக்கான சங்க'' நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர்.

தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் !

தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் !

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள்அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிகமேலான நன்மையுடையதாகும். (அல் குர்ஆன்-62:9)

பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்துவெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வைஅதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (அல் குர்ஆன்-62:10)

மாமனிதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் மிகச் சிறந்தது ஜுமுஆ நாளாகும்.
[நூல் - முஸ்லிம்]

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள்நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்தநாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள்நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத்தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்துஅங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்குவிதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடிமவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலானபாவங்கள் மன்னிக்கப்படுகின்றன."
என ஸல்மான் பார்ஸி (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்அ நாள் வந்துவிட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டுமுதலில் வருபவரையும் அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவுசெய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும்அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும் அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போலவுமாவார்கள். இமாம் வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டிவிட்டுச் சொற்பொழிவைக்கேட்க ஆரம்பித்து விடுவார்கள்."
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் 'வாய்மூடு!' என்றுகூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்."
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

(
தகவல் :சம்சுதீன் ஜைனுலாப்தீன்

உயிர் காக்கும் முதலுதவிகள்

உயிர் காக்கும் முதலுதவிகள்


மனிதன் என்னென்னவோ ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறான். எதை எதையோ கண்டு பிடிக்கிறான். ஆனால் அடுத்த நொடியில் என்ன நடக்கக் கூடுமென்பதை அறிந்தவன் ஆண்டவன் ஒருவனே! நமது வாழ்வில் பற்பல நல்ல சம்பவங்களும் நடக்கின்றன, பற்பல விபத்துகளையும் சந்திக்க நேரிடுகிறது. அப்படி ஏதாவது ஒரு நெருக்கடி நிலை நேரிட்டால் தம்மையும் காத்துக் கொண்டு பிறரையும் எப்படிக்காப்பது என்பது தெரிந்திருப்பது நலமல்லவா? எனவே பொதுவாக நேரக்கூடிய விபத்துகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் ஆலோசனைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.

விபத்துகளின் பொழுது உங்களை நீங்களே சில மணி நேரம் காப்பற்றிக்கொள்ள முடியும். பிறருக்கும் அவசர காலங்களில் உதவவும் முடியும். அதற்குத் தனிப்பட எந்தக் கருவிகளும் தேவையில்லை. தேவையானதெல்லாம் நிதானமும் சமயோசித புத்தியும்தான். ஆபத்தின் பொழுது பீதியடையாமல் இருப்பது மிக முக்கியம். அது கடினம்தான் என்றாலும், பயமும் பதட்டமும் நம்மைச் செயல்பட விடாமல் தடுத்துவிடும். ‘ ஒரு விபத்தில் சிக்கிக்கொண்ட பின் அதில் தப்பித்தவர்களுக்கும் தப்பிக்காமல் இறந்தவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவெனில் தப்பிப்பவர்கள் தமது பயத்தை வெற்றிகொண்டு, நான் என்ன செய்யவேண்டும் என்று யோசித்து இறுதிவரை போராடுவதுதான்’ என்கிறார் முதலுதவிகள் குறித்து வகுப்புகள் நடத்தும் ஒரு பிரபல நிபுணர்.



அலுவலத்திலும் சரி, வீட்டிலும் சரி, அல்லது எங்காவது வெளியூருக்குச் செல்வதானாலும் சரி, கீழ்க்கண்ட பொருட்களைக் கொண்ட ஒரு முதலுதவிப் பெட்டியை தயாராக வைத்திருப்பது அவசியம். அவை – ஒரு பட்டை ஆஸ்பிரின் மாத்திரை, ஒரு பட்டை பாரசிடமால் மாத்திரைகள், ஒரு பட்டை ப்ரூபின் மாத்திரைகள், பாண்டேஜ் துணி, காயங்களுக்குப் போடக்கூடிய மருந்து, பாண்ட் எய்ட், வலி அல்லது வீக்கத்திற்குப் பயன்படுத்தும் மாத்திரை ORS பாக்கெட் (உப்பு சர்க்கரைக் கலவை) ஆகியவை. எக்காரணம் கொண்டும் இப்பெட்டியைப் பூட்டவேண்டாம். பின் அவசரத்தின்பொழுது இதற்கு சாவியைத் தேடி அலையவேண்டி வந்துவிடும். அதே நேரம் இந்தப் பெட்டி சிறுகுழந்தைகளின் கைக்கு எட்டாதவாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.



நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில தகவல்கள்:

எந்த அவசர நிலையிலும் பதட்டமின்றி இருப்பது முக்கியம். முதலுதவி தேவைப்படுபவருக்கு காற்று கிடைக்கவும், அவர் எளிதில் மூச்சு விடவும் ஏற்பாடு செய்தல் வேண்டும். கழுத்திலோ, முதுகுப்புறமோ அடிபட்டிருப்பின் கூடியமட்டும் அவரைத் தூக்கி இடம் மாற்றுவதைத் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவரிடம் அமைதியாகவும் நிதானமாகவும் பேசி அவரைத் திடப்படுத்தவேண்டும். பாதிக்கப் பட்டவர் மயக்க நிலையில் இருக்கும்பொழுது வாய்மூலம் எதுவும் கொடுக்கக் கூடாது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

நமக்கே ஏதாவது ஆபத்து நேர்கையில்:

தீ விபத்து:

ஒருவர் தமது அலுவலகத்தில் தீ விபத்தின் பொழுது சிக்கிக்கொள்கிறார் என்று கொள்வோம். கூடியவரை, புகை பரவாத ஒரு அறைக்குள் புகுந்துகொண்டு விட வேண்டும். முடியுமானால் ஈரமான துணி எதையாவது கதவுக்கடியில் தரையில் விரித்து புகை பரவுவதைத் தடுக்க முயலவேண்டும். உடைகளில் நெருப்புப் பிடித்துவிட்டால், நெருப்பு சிறிய அளவுள்ளதாக இருப்பின் தரையில் படுத்து உருளலாம். வீடாக இருப்பின், கனத்த போர்வை, கம்பளி இவற்றைப் போர்த்துக் கொள்ளலாம். நெருப்பை அணைக்க முற்படுவீர்களானால் அது எந்த வகை நெருப்பு, அதாவது எதனால் உருவான நெருப்பு என்று அறிந்துகொண்டு செயல்பட வேண்டும். நெருப்பை அணைக்கப் போராடுகையில், நீங்கள் வெளியேற வசதியாக நின்று கொண்டு முயற்சி செய்தல் வேண்டும். நெருப்பு அதிகம் பரவுவது போல் தோன்றினால், நீங்கள் வெளிவந்து விடுவது உத்தமம்.


நீச்சலடித்துக் கொண்டு இருக்கையில் தசைப்பிடிப்பு நேரிட்டால்:

ஆற்றில் அல்லது கடலில் நீச்சலடித்துக் கொண்டிருக்கையில் (சில்லென்ற நீர் பட்டதும்) கெண்டைக்கால் அல்லது முதுகில்/வயிற்றில் பிடிப்பு ஏற்படலாம். பதற்றத்தில் கன்னாபின்னாவென்று கை காலை அசைக்க முயன்றால் தப்பிப்பது கடினமாகிவிடும். நிதானத்தை வரவழைத்துக்கொள்ளுங்கள். பயப்படாதீர்கள். ஆழ மூச்சு விடுங்கள். வயிற்றுப்பகுதியில் பிடிப்பு ஏற்பட்டிருந்தால், மல்லாந்து படுத்துக்கொண்டு கை கால்களை விரித்தவாறு, வலி குறைந்து மீண்டும் நீந்த முடியும்வரை மெல்ல மிதந்துகொண்டிருக்கப் பாருங்கள்.

கெண்டைக்காலில் பிடிப்பு ஏற்பட்டிருக்குமானால், குப்புறப் படுத்துக்கொண்டு, மெல்ல கால்விரல்களைக் கைகளால் பற்றி நீவி விடுங்கள். பிடிப்பு நீங்கி வலி குறைந்துவிடும். பெரும்பாலும் இப்பிடிப்பு கால்களில்தான் ஏற்படுகின்றன. எனவே, எச்சரிக்கை, பதட்டமின்மை இரண்டுமே அவசியம்.


வெட்டுக்காயங்கள்:

எதிர்பாராத விதமாகக் காயமேற்பட்டு இரத்தம் அதிகம் வெளியேறும்பொழுது, ஏதாவது சுத்தமான துணி, கை துடைக்க உதவும் காகிதம், உங்கள் கைக்குட்டை, (இவை எதுவுமே கிடைக்கவில்லை என்றால்) உங்கள் கைகள் இவற்றைக்கொண்டு காயத்தை நன்கு அழுத்திக்கொள்ளவும். முன்பெல்லாம், வெட்டுக்காயமேற்பட்டால் இறுகக் கட்டவேண்டும் என்பார்கள். இப்பொழுது அது தவறு என்று மருத்துவ உலகம் கருதுகிறது. உங்கள் கையால் காயத்தை அழுத்திக்கொள்கையில், இரத்தம் வெளியேறும் குறிப்பிட்ட இரத்தக் குழாய் மட்டுமே மூடப்படுகிறது. நீங்கள் இறுக்கிக் கட்டுவீர்களானால், அந்த இரத்தக் குழாய் மட்டுமின்றி அந்தப் பாகத்தில் உள்ள அனைத்துக் குழாய்களும் மூடப்படுகின்றன. இதனால், கட்டுக்குக் கீழ் இருக்கும் பாகங்களிலும் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால், அந்தப்பகுதி முழுவதுமே செயலிழக்கும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.


நச்சுப்பொருட்கள்:

ஏதாவது நச்சுப்பொருட்களைத் தெரியாமல் உட்கொண்டுவிட்டால், (எவ்வளவு குறைவான அளவாக இருந்தாலும் சரி) மருத்துவரின் உதவியை நாடுவது முக்கியம். நீங்களாகவே ஏதாவது வாந்தி எடுப்பதைத் தூண்டும் மருந்தைச் சாப்பிட்டு வாந்தி எடுக்கமுயல வேண்டாம். ஏனெனில் நீங்கள் உட்கொண்ட ஏதாவது நச்சுப்பொருள் உங்கள் உங்கள் உடலுக்குள் செல்கையில் உங்கள் உணவுக்குழலை சேதப்படுத்தியிருக்கலாம். நீங்கள் வாந்தி எடுத்து அதை வெளிக்கொணர முயல்கையில் உங்கள் உணவுப்பாதையில் மென்மேலும் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.

அம்மோனியா, ப்ளீசிங் பவுடர், பூச்சிக்கொல்லிகள் இவற்றை முகர்ந்துவிட்டால், தலை சுற்றல் மயக்கம் முதலியவை ஏற்படும். உடனடியாக மூக்கை இறுக மூடிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடவேண்டும். விஷப்பொருட்கள், அமிலங்கள் முதலிவை உங்கள் உடம்பில் பட்டுவிட்டால், அந்த இடத்தை நன்கு நீரால் பலமுறை கழுவுங்கள். பின் மருத்துவ உதவியை நாடுங்கள்.


தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்படுகையில்:

உணவை உண்ணும்பொழுது நிதானமாகவும், நன்கு மென்றும் உண்ண வேண்டியது அவசியம். ஆனாலும், அவசரமாக எதையாவது விழுங்குகையில் அல்லது சில சமயம் அகஸ்மாத்தாக நம் தொண்டையில் ஏதாவது சிக்கிக்கொண்டுவிடக்கூடும். நமது மூச்சுக்குழல் மற்றும் தொண்டைக்குழல் ஆகியவை ஒன்றாக அமைந்திருப்பதால், இந்த அடைப்பு நம்மை மூச்சு விட இயலாதவாறு செய்துவிடும். இதற்கு உடனடியான முதலுதவி, நமக்கு நாமே செய்துகொள்ளக்கூடியது என்ன தெரியுமா? வேகமாகச் சென்று சமையலறை மேடையின் நுனிப்பகுதி, நாற்காலி அல்லது சோஃபாவின் கைப்பிடி இதன்மீது நமது மேல்வயிறு படும்படி வேகமாக இடிக்கவேண்டும். அதாவது, நமது விலா எலும்புக்குக்கீழ் உள்ள மென்மையான வயிற்றுப்பகுதி (உதரவிதானம் என்று அழைக்கப்படுவது) மிகவேகமாக கைப்பிடி அல்லது சமையல் மேடை மீது மோதவேண்டும். இது நம் தொண்டையில் அடைத்துக்கொண்ட பொருள் வெளியில் வரும்படி செய்துவிடும்.இவ்வாறே சிறு குழந்தைகள் காசு அல்லது சிறிய விளையாட்டுப்பொருட்களை வாயில் போட்டுக்கொண்டு அது தொண்டையில் சிக்கிக்கொள்ளுமானால், அவர்கள் முதுகில் வேகமாக அறைந்தால், அடைப்பு நீங்கிவிட வாய்ப்புண்டு.


மாரடைப்பு:

உங்கள் மார்பு அல்லது இடப்புறத்தோள்பட்டை மிக அதிகமாக வலிப்பது, மூச்சிறைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடியாக ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை விழுங்குங்கள். இது இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்த வல்லது. மேலும், உடனடியாகப் படுத்துக்கொள்வது நல்லது. வலுக்கட்டாயமாக இருமுங்கள். இது மருத்துவர்கள் மார்பில் குத்தி பிசைந்து இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க முயலும் அதே அளவு தாக்கத்தைக் கொடுத்து உங்கள் இதயத்தை சாதாரண நிலைக்குக்கொண்டு வரக்கூடும். பிறருக்கு இந்த அறிகுறிகள் தோன்றுமாயின் மருத்துவ உதவி வரும் வரையில் மார்பில் குத்திக்கொண்டிருங்கள். ஆஸ்பிரின் மாத்திரையை எப்பொழுதும் உடனடியாக எடுக்கக்கூடிய இடத்தில் வைத்திருப்பது அவசியம்.

நெருக்கடி நிலையில் விரைந்து எடுக்கும் முதலுதவி நடவடிக்கைகள் விலை மதிப்பில்லாத உயிர்களைக் காக்க வல்லது. வேகம் விவேகம் இரண்டையும் கடைப்பிடித்தால் எந்த விதமான சிரமத்தையும் எளிதில் சமாளிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.


நன்றி: http://www.hi2web.com/forum/
http://chittarkottai.com/wp/?p=2400

வியாழன், மார்ச் 24

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..


இன்னைக்கு சமுதாயத்துல நடக்குற எவ்ளவோ அனாவசியமான
விழாக்களில் மட்டமான, மிகவும் கேவலமான ஒரு விழானு சொன்னா
அது குடும்பங்கள்ல நடக்குற “பூப்புனித நீராட்டு விழா“ தான்.
“வயசுக்கு வந்துட்டா“னும் “பெரிய மனுஷியாயிட்டா“னும்,
பெண்களின் உடலில் ஏற்படக் கூடிய மிகச் சாதாரண மாற்றத்திற்கு,
தனியாக ஒரு விழாவே எடுத்துக் கொண்டாடும் அசிங்கம் இன்னும்
தொடர்ந்துகிட்டு தான் இருக்கு.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போதே
கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கருமுட்டைகளோடு பிறக்கிறாள்.
பெண் வயதுக்கு வந்தபின் மாதம் ஒரு கருமுட்டை முதிர்ச்சி அடைந்து
கருப்பையை நோக்கி நகர்கிறது. முதல் கருமுட்டை முதிச்சியடைந்து
வெளிவருவதையே வயதுக்கு வருதல் என்று கூறுகிறார்கள். இது அவள்
கருவுறுதலுக்குத் தகுதியாகும் அறிகுறியாகும்.

இது சராசரியாக எல்லாப் பெண்களுக்கும் நடக்கும் ஒரு சாதாரண
நிகழ்வு தான். இது சந்தோசமான மாற்றம் தான். ஆனாலும் இதுல
விளம்பரப்படுத்துறதுக்கு என்ன இருக்கு? இது தங்களைத் தாங்களே
கேவலப்படுத்திக்கிற மாதிரியான செயல் தான்.

அந்தக் காலத்தில் பெண்கள் பருவமடைந்ததும், திருமணம் செய்து
கொடுத்து விடுவது வழக்கமாயிருதுச்சு. பால்ய விவாகங்கள் அதிகமாக
இருந்த காலம் அது. தகவல் தொழில்நுட்பங்கள் குறைவாக இருந்ததால
அவங்க வீட்டுப் பொண்ணு, வயசுக்கு வந்துட்டா, `எங்கள் வீட்டில் பெண்
திருமணத்துக்கு தயாராகி விட்டாள், பெண் கேட்டு வருபவர்கள் வரலாம்'
என்ற பகிரங்க அறிவிப்பாகவே இந்த விழாக்கள் நடத்தப் பட்டன. ஆனால்
இன்றைய சூழலில் பெண் கல்வி மற்றும் பெண் சுதந்திரம் பற்றிய
தொலைநோக்குப் பார்வை விரிவடைந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது
இத்தகைய விழாக்கள் தேவையற்ற ஒன்று தான்.

முந்தைய நாள் வரைக்கும் அந்தக் குழந்தை சராசரியா சந்தோசமா
விளையாடிகிட்டு இருக்கும். வயதுக்கு வந்ததும் ஏன் தான் இப்படி
பாடாய்ப் படுத்துறாங்களோ தெரியல. அந்தச் சின்னப் பொண்ணுக்கு
ஒரு சேலைய கட்டிவிட்டு, கழுத்துல மாலையப் போட்டு Chair’ல
உட்கார வச்சு கண்காட்சிப் பொருளா ஆக்கிட்றாங்க. “மகா ஜனங்களே..
எங்க வீட்ல சைட் அடிக்கிறதுக்கு ஒரு ஃபிகர் இருக்கு“ங்குற மாதிரி,
அந்தப் பொண்ணு வயசுக்கு வந்தத தண்டோரா போட்டு எல்லாருக்கும்
சொல்றாங்க. இந்தப் பழக்கம் எப்ப தான் மாறுமோ..

தனக்கு என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்குற அளவுக்கு கூட அந்தப்
பொண்ணுக்குப் பக்குவம் இருக்காது. ஏதோ திருவிழால காணாமப்
போன குழந்தை மாதிரி திரு திருனு முழிச்சிகிட்டு உட்கார்ந்திருக்கும்.
பத்திரிக்கை அடிச்சு பந்தல் போட்டு மைக்செட்டெல்லாம் வச்சு
பெரிய விழாவாகக் கொண்டாடி மொய் என்ற பேரில் வசூல் செய்யும்
முட்டாள்தனம் இன்னமும் நடக்குது.

என்னதான் கலாச்சாரம், வழிவழியாக வந்த பழக்கம்னு சொன்னாலும்
ஒரு சின்னப் பெண்ணைக் காட்சிப் பொருளாக வைத்து வேடிக்கை காட்டுவது
முட்டாள்தனம் தான். நன்கு படித்தவர்கள், பக்குவமடைந்தவர்கள் கூட
இது மாதிரியான விழாக்களை நடத்துவதைப் பெருமையாக நினைக்கின்றனர்.
இந்தப் பாழாய்ப்போன சமூகம் இவர்களை இப்படியே பழக்கி வைத்துவிட்டது.
இதுபோன்ற விசேஷங்களைத் தங்களுடைய பகட்டுகளைக் காட்டுவதற்கெனவே
நடத்தும் கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இது பெண்களின் மன உணர்வுகளை இழிவுபடுத்தும் அநாகரீகமான
கொண்டாட்டமே தவிர வேறொன்றுமில்லை.


நன்றி: http://padikkaadhinga.blogspot.com/2011/03/blog-post_22.html

புதன், மார்ச் 23

அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை


முபாரிஸ் அலி -இஸ்லாமிக் பிரண்டஸ் தளத்திலிருந்து

தமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13 யை நோக்கி அசுர வேகத்தில் பயனிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிளக்கல்ல இதனை பார்க்கும் பொழுது அனைத்து தரப்பிலும் ஒரு அரசியல் சுனாமி அடித்திவிட்டு செல்லும் என்றே தோன்றுகிறது. இதில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தனது நிலைப்பாட்டையும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடுகளையும் பல்வேறு பிரச்சனைக்ளுக்கு மத்தியில் ஒருவழியாக அறிவித்துவிட்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவர்களாக அரசியல் பிரச்சார களத்தை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் என்றும் இல்லாத அளவிற்கு முஸ்லிம் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிதுவத்தை வெளிக்கொணரும் விதமாக தமிழகத்தில் 14 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட தயாராகிவருகின்றனர். இதில் பேசப்படும் பெரிய கட்சிகளாக முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சோஷியல் டெமாக்ரடிக் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (SDPI) ஆகியவை மக்களிடத்தில் தங்களை நிலை நிறுத்தி இருக்கின்றன. இதில் முஸ்லீம் லீக் ஆளும் கட்சியான திமுகாவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், மமக எதிர்கட்சியான அதிமுகாவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், தேசிய அரசியல் கட்சியான SDPI இவ்விரு அணிகளையும் சாராமல் தன்னிச்சையாக ஆறு தொகுதிகளிலும் களம் காணும் என்று அக்கட்சிகளின் தலைமை முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதே சூழலில் இன்னும் சில முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளையும் அறிவித்திருக்கின்றன. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அரசியலில் நாம் போட்டியிடுவதில்லை ஆனால் கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதரம் ஆகியவற்றில் முஸ்லிகல் முன்னேற ஆவன செய்யும் கட்சிகளுக்கு ஆதரவு என்றும் மமக எங்கு போட்டியிடுமோ அங்கு அவர்களை தோற்கடிப்பதற்காக வேலைகளை செய்வோம் என்று அறிவித்திருக்கிறது. இதே பொன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அதிமுக-விற்கு தங்கள் ஆதரவு எனவும் முஸ்லிம் வேட்பாளர்கள் எங்கு போட்டியிடுவார்களோ அங்கு அவர்களூக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என அறிவித்திருக்கிறது. இதே போன்று அகில இந்திய இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் தம் நிலைப்பாடு SDPI போட்டியிடும் அனைத்து இடங்களிலும் SDPI செயல்வீரர்களூடன் இணைந்து தங்கள் செயல்வீரர்களும் களப்பணி ஆற்றுவார்கள் என்று SDPI க்கான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்த நிலைப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சிலர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இல்லாமல் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒருங்கினைந்து ஒற்றுமையோடு ஒரே கட்சியாக போட்டியிட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் பரவலாக பேச்சு நடைபெறுகிறது. இனிமேல் அவ்வாறு பேசிக்கொண்டு இருப்பதில் பயனில்லை காரணம் இம்மூன்று கட்சிகளும் முடிவுகள் எடுத்துவிட்டது. இனி இதில் மாற்றங்கள் விளைய வாய்ப்புகள் இல்லை. நம் ஒற்றுமையை பற்றி இந்த தேர்தலை விட்டு விட்டு அடுத்த தேர்தல் வருவதற்கு முன் பேசி சுமூக தீர்வுகாண விளைவதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். நமக்கு இருக்கும் சிறிய கால அளவை வீணடிப்பதை விட்டு விட்டு இந்த மூன்று கட்சிகளில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி ஆராய்வோம்.

முஸ்லீம் லீக் – பல வருடங்கலாக அரசியலில் கூட்டனிவைத்து போட்டியிட்டு வருகின்றது வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் ஏதேனும் நலத்திட்டங்களோ அல்லது சமூக மாற்றத்திர்கான முயற்சிகளோ இதன் மூலம் ஏற்பட்டிருக்கின்றதா என்றால் அநேக மக்களின் கருத்து இல்லை என்பதாகும். நிதர்சனமும் இதுதான். சட்டசபைக்கும், பாராளுமன்றத்திற்கும் செல்லும் நம் தலைவர்கள் நம்மை பற்றி பேசுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். இதனால் மக்களுக்கு இவர்கள் மேல் இருந்த நம்பிக்கை மறைந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு காலம் அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நாம் இவர்களை தேர்ந்தெடுத்தோம் ஆனால் முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் இவர்களால் நமக்கு கிடப்பதற்கு வாய்புகளே இல்லை என்னும் அளவிற்கு போய்விட்டது. இதற்கு காரணம் சமூகத்தை பற்றி சிந்திக்காமல் சீட்டில் மட்டும் குறிவைத்து அதற்காக கூலைகும்பிடு போட்டுக்கொண்டு திரிகிறார்கள்.

எந்த அளவிற்கு என்றால் சமீப காலத்திற்கு முன்னால் தோன்றிய சிறிய அரசியல் கட்சிகள் கூட தனகென்று தனி சின்னத்தை போராடி பெற்று அதில் போட்டியிட்டு வெற்றியோ தோல்வியோ தன் பலத்தை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களோ காலம் முழுவதும் ஒரே சின்னத்தில் நின்று இரண்டு சீட்டிற்கும் மூன்று சீட்டிற்கும் காலில் விழாத குறையாக சமூகத்தின் தைரியத்தையும், பலத்தையும் சிதைத்துவிட்டனர். அதில் வெற்றி பெற்று சட்டசபை சென்றால் அங்கு குரல் கொடுக்க சொன்னால் கொரடாவில் இல்லாததை பேசக்கூடாது என்று விளக்கம் வேறு இவ்வாறு இருக்கும் இவர்களால் இந்த முஸ்லீம் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று எண்ண தோன்றுகிறது. ஆனால் இது ஒரு பழம் பெறும் கட்சி இது காயிதே மில்லத் சாஹிப் போன்ற சமூகத்திற்காக உழைத்த தன்னலமற்ற தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. தமிழக அரசியலின் கடந்த கால வரலாறுகளை புரட்டினால் ஆட்சியில் யார் அமர வேண்டும் எனும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலம் பொருந்திய கட்சியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்த கட்சியின் இன்றைய நிலையை சற்று சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

அதன் பிறகு உருவாகியுள்ள இரண்டு கட்சிகள். இதில் யாரை தேர்ந்தெடுப்பது மனித நேய மக்கள் கட்சியா அல்லது SDPI யா இதுவே இன்று நம் முன் இருக்கும் மிகப்பெறும் கேள்வி. இதில் சற்று தொலைநோக்கு பார்வையுடனும், நடுநிலையோடும் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். காரணம் இரண்டும் சமூகத்திறகாக கடினமாக உழைக்கும் கட்சிகள் இவர்கள் சட்டசபைக்கு சென்றால் நிச்சயம் நம் சமூகத்தின் நன்மைக்காக உறுதிகுழையாமல் உழைப்பார்கள். ஆனால் இதில் யாரை முதலாவதாக தேர்ந்தெடுப்பது. அவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் களத்தை சந்தித்து அதில் தோல்வி அடைந்திருந்தாலும் அந்த தோல்வி அரசியல் அறிவை பெற மமக விற்கு துணைபுரிந்திருக்கிறது. அந்த அனுபவத்தோடு இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வுடன் இணைந்து போட்டியிடயிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை தரும் கட்சியுடன் கூட்டனி அல்லது எங்கள் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அரசியல் கட்சிக்கு எங்களுடைய சமூகத்தின் முழு ஆதரவு என்று ஏதேனும் கோரிக்கை (Demand) வைத்ததாக நமக்கு தெரியவில்லை. இது சீட்டு தந்தால் போதும் என்று அதிமுக-வின் பின்னால் போய்விட்டார்களே என்று எண்ண தோன்றுகிறது. இருப்பினும் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது என்று அறிவித்திருக்கிறது.அதாவது திமுக வை தோறகடிக்க அரசியல் களம் காண இருக்கிறது மமக. எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் சீட்டை மட்டும் எதிர்பார்த்து ஏழு மாதங்களுக்கு முன்பே அதிமுக-வுடன் கூட்டனி பேச்சுவார்த்தை தொடங்கியது நம் சமூகத்தில் இவர்களுக்கு இருந்த நற்பெயரை சீர்குழைக்கும் விதமாக அமைந்துவிட்டது.

அதனோடு சேர்த்து விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது அதை கட்டுபடுத்த வேண்டும் என்ற ஓரிரு கோரிக்கைகளை முன்வைத்தது சமூகம் அதிகாரத்தை அடைவதற்கு போதாது, பொறுந்தாது என்றே நினைக்க தோன்றுகிறது. ஆனால் இந்த கோரிக்கைகள் சற்று மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றே குறிப்பிடமுடியும். இது போன்ற அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது இவர்களுடைய தலைவர்கள் நம் சமூகத்தில் உள்ள மக்களிடம் கலந்துரையாடாமல் தன் சுய கருத்தை சமூக கருத்தாக அறிவித்தார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆனால் இப்பொழுது இவர்கள் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் வாசகங்கள் நம்மை தடுமாற வைக்கிறது. காரணம் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரங்களில் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் அங்கம் பெற, கிடைத்த இட ஒதுக்கீட்டை முழுமைப் படுத்த, இது போன்ற சமுதாய கோரிக்கைகளை சட்டம் இயற்றும் அவைகளுக்குள் சொந்த அடையாளத்தோடு எடுத்துவைக்க நமக்கு அதிகாரம் தேவை அதற்காக நாம் பலவழிகளை கையால்வோம் அதில் ஒன்றுதான் இந்த கூட்டனி. சீட்டு பெறுவதற்கு முன்னால் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருந்த இவர்கள். சீட்டை பெற்ற பிறகு அதீத கவனமும், அதிகார வர்கத்தில் நாம் அமர்வதற்காக இவர்கள் நடத்திய நாடகாம இருக்குமோ என்றும் கூறத்தோன்றுகிறது. இதை தான் அரசியல் வித்தை என்பார்களோ என்று கூறுமளவிற்கு சிந்தனையில் ஆழ்த்துகிறது. அந்த அதிகாரம் பெற என்ற இவர்களது தேர்தல் பிரச்சாரங்ககலை பார்க்கும் போது புலி பதுங்கியது பாய்வதற்கு தான் என்று எண்ணம் எழாமலில்லை.ஆனால் சீட்டை பெறுவதற்கு முன்னமே மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யாதது தவறு என்பது மட்டும் உண்மை. அதை நிவர்த்தி செய்யும் விதமாக தான் இப்பொழுதாவது சமுதாய தலைவர்களை சந்தித்து கொண்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்.

SDPI – இது ஒரு தேசிய அரசியல் கட்சியாக பரிணமித்திருக்கிறது. இக்கட்சி தேசிய அளவில் தேர்தல் களம் கண்டு ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களில் வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் தமிழக அரசியலை பொறுத்தவரை புதிய அரசியல் கட்சிதான். இவர்கள் திருச்சி வார்டு எலக்சனில் சமீபத்தில் போட்டியிட்டார்கள் அது ஒன்றும் மிகப்பெறும் அரசியல் அனுபவத்தை கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்கள் வைக்கும் கோரிக்கைகளும், இவர்கள் விடும் அறிக்கைகளும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை மிஞ்சும் அளவிற்கு இருப்பது விந்தையானதே. தேர்தல் களத்தை சந்திப்பதற்கு முன்னால் இவர்கள் தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளுக்கு வைத்த கோரிக்கை நாங்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் சதவிகித அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு இந்த சட்டசபை தேர்தலில் வழங்கப்பட வேண்டும் அதாவது தமிழகத்தின் 234 தொகுதிகளில் 23-24 தொகுதிகளை முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கபட வேண்டும் அவ்வாறு அளிக்கும் கட்சிக்கு ஆதரவாகவும், அக்கட்சியின் வெற்றிக்காகவும் SDPI போராடும் என்ற அறிவிப்பு செய்தார்கள்.

இது சமூக மக்களிடத்திலும் சரி அரசியல் வ்ட்டாரங்களிலும் சரி புது விதமான யாரும் யோசித்திராத விதத்தில் அதே நேரத்தில் தனது கட்சியை பற்றி சிறுதும் கவலைப்படாமல் அறிவித்த அறிக்கையாகவே தெரிந்தது. காரணம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடத்தில் இந்த அளவு தைரியமாக அரசியல் கட்சிகளுக்கு Demand வைத்தது யாரும் இல்லை என்பதால். அதை தொடர்ந்து வக்பு சொத்துகளை முறைபடுத்துவது, சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிகளை விடுதலை செய்ய ஆவன செய்வது, பாபர் மசூதி இடிப்பு, மீனவர்கள் பிரச்சனை, கல்வி, வேலவாய்ப்பு, பொருளாதரத முன்னேற்றத்தை கொண்டுவருதல் என அடுக்கடுக்காக இவர்கள் வைத்த கோரிக்கைகள், இவர்கள் அரசியலில் ஆபத்தானவர்கள் என்று அரசியல்வாதிகளை மிரள வைத்தது. அத்தோடு தங்கள் ஒவ்வொரு கூட்டங்களிலும் ஒடுக்கபட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் அரவணைப்பது இவர்களது கூடுதல் பலம்.

அதன் தொடர்சியாக இவர்களிடத்திலும் சீட்டு பேறம் நடைபெற்றதாக தகவல். ஆனால் அதை உதறி தள்ளிவிட்டு தனித்து போட்டியிடுவோம் என அறிவித்தது இவர்களது தன்னிம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் காட்டுகிறது.. இவை அனைத்தையும் வைத்து பார்த்தால் இது தனி மனித மூளையால் சிந்த்திக்க முடியாது இந்த கட்சிக்கு பின்னனியாக ப்லமிக்க போராட்ட குணம் கொண்ட தன்னையும் தன் கட்சியையும் பற்றி கவலை கொள்ளாத, சமூகத்தின் வலிமையை தன் வலிமையாக கொண்டு சிந்திக்கும் நல்ல தலைமை இருக்குமோ என்று பாமரனையும் யோசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த போரட்ட குணம் இறுதிவரையில் இருந்தால் நல்லது.

கட்சிகளின் நிலைமைகள் இவ்வாறிருக்க போட்டியிடும் தொகுதிகளின் அடிப்படையில் இம்மூன்று கட்சிகளும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்கும் நிலைமை எற்பட்டுள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும், துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும், இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் அரசியல் களத்தில் சந்திக்கின்றன. இவர்கள் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். இந்த இடம் அல்லாமல் SDPI போட்டியிடும் போட்டியிடும் கடையநல்லூர்(நெல்லை மாவட்டம்), பூம்புகார்(நாகை மாவட்டம்), தொண்டமுத்தூர்(கோவை மாவட்டம்), நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்) ஆகிய நான்கு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் அனைவரும் SDPI-யை ஆதரிக்க வேண்டும். அதே போன்று மமக போட்டியிடும் சேப்பாக்கம்(திருவல்லிக்கேணி), ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் நாம் அனைவரும் மமக-வை ஆதரிக்க வேண்டும். முஸ்லீம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் முஸ்லீம் லீக்கை ஆதரிக்க வேண்டும். இதில் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கூட கருத்து வேறுபாடு இருக்காது என்று கூட கூற முடியும்.

இதில் குழப்பம் மிகுந்த இராமநாதபுரம் மற்றும் துறைமுகம் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளின் கொள்கை, அவர்களது கோரிக்கைகள், சமுதாயத்திற்கு பாடுபடும் மனநிலை, அரசியல் கட்சிகளிடம் இவர்கள் செய்த Demand ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். இதனை அந்த தொகுதிகளை சேர்ந்த மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இதில் குழப்பம் நிறைந்த தொகுதிகளில் அக்கட்சிகளின் கடின உழைப்பு தீர்மானிக்கும் அது போக மீதமுள்ள தொகுதிகளை நாம் குறிப்பிட்டபடி தேர்தல் களம் கண்டால் இன்ஷா அல்லஹ் நம்மிடமிருந்து 4+2+2 = 8 சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆதலால் ஒற்றுமையில்லை என்ற மனநிலையை அகற்றிவிட்டு முன்னால் இருந்ததைவிட இயக்கங்களின் வருகையினாலும், கட்சிகளின் தோற்றங்களாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பலன்கள் தானே தவிர இழப்புகள் இல்லை என்பதே நிதர்சனம்.இந்த அடிப்படையில் நாம் பயனித்தால் நிச்சயம் அடுத்த தேர்தலில் நாம் நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து ஓரணியில் அரசியல் களம் காண்பது சாத்தியமாகும். aசிந்திப்போம்…….

thoothu online 

எனக்குப் பிடிக்கும்...! உங்களுக்கு....?

எனக்குப் பிடிக்கும்...! உங்களுக்கு....?PrintE-mail

ஷப்பீர்






தாயின் முகம் பார்க்கப் பிடிக்கும்

அவள் பொழியும் பாசம் பிடிக்கும்

மனைவியின் கண்களை நேராக பார்த்துப்பேச பிடிக்கும்

அவள் பேசுவதே கண்களால் என்றால் ரொம்ப பிடிக்கும்

இதழ் பிரியாத புன்னகை பிடிக்கும்

புன்னகையில் மறைந்திருக்கும் நிஜமான நேசம் பிடிக்கும்

அதிர்ந்து பேசாத வார்த்தைகள் பிடிக்கும்

வார்த்தைகளற்ற மெளனம் பிடிக்கும்

அதிகாலையில் அவள் புரிந்திடும் காதல் பிடிக்கும்

மழலையின் மொழி பிடிக்கும்

பல சமயங்களில் குழந்தையாய் மாறிட பிடிக்கும்.

தூக்கத்தில் கனவுகள் பிடிக்கும்

கனவில் கண்டதை கவிதைகளாய் மாற்ற பிடிக்கும்

காலநேரம் தாண்டி படித்திட பிடிக்கும்

படித்த நல்ல கருத்துக்களை செயல்படுத்திட பிடிக்கும்

மனம் விரும்பும் சமயங்களில் எழுதிட பிடிக்கும்

படைப்பதைவிட படைத்ததை ரசித்திட பிடிக்கும்

ரோஜாவின் வண்ணம் பிடிக்கும்

மல்லிகையின் மணம் பிடிக்கும்

ஜில்லென்ற மழையில் நனைய பிடிக்கும்

கரைமணலில் அமர்ந்து கடலலைகள் ரசிக்க பிடிக்கும்

மின்சாரமில்லா இரவில் மெழுகுவத்தியின் ஒளி பிடிக்கும்

முழு நிலவொளியில் படகு பயணம் பிடிக்கும்

பட்டாம்பூச்சியின் படபடப்பு பிடிக்கும்

பூவிதழில் உள்ள பனித்துளி பிடிக்கும்

தாலாட்டும் ரயில் பயணம் பிடிக்கும்

தொலைத்தூர பயணங்களில் தோளில் சாய்ந்து தூங்க பிடிக்கும்

(அம்மாவின் தோளில் மட்டும், சமயங்களில் என்னவளிடமும்)

எதுவும் சுத்தமாக பளிச்சென்று இருப்பது பிடிக்கும்

செய்கின்றவைகளை நேர்த்தியாக செய்திட பிடிக்கும்

வாழ்வில் சின்ன சின்னதாய் நல்மாற்றங்கள் பிடிக்கும்

முயற்சிகளை விடாமல் முயற்சிப்பது பிடிக்கும்

புரிந்துக்கொண்டு விட்டுக்கொடுப்பது பிடிக்கும்

கோபங்களை புன்னகையால் வென்றிட பிடிக்கும்

தனிமையில் நினைவுகள் பிடிக்கும்

நினைவுகளால் சிந்திடும் கன்ணீர்த்துளி பிடிக்கும்!


Source: http://www.nidur.info

செவ்வாய், மார்ச் 22

பிறருக்கும் உதவலாமே!

பிறருக்கும் உதவலாமே!

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.



2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.


3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.


4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.


5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.


7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!


அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்
**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.


8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!


9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/


10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

11) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு வகை : புற்றுநோய்
முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.
--

நன்றி: சகோதரர் அஃப்ஸல் அபு

பறந்தது பட்டம் மட்டுமல்ல;!

மாஞ்சா நூல் எந்த நேரத்தில் எங்கிருந்து வரும் என்று தெரியாது.இதன் பிடியில் சிக்கினால் மரணம் நிச்சயம். சென்னையில் உயிர் பலிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த மாஞ்சா நூல் நச்சு பொருட்களின் கலவையாகவே உள்ளது. இதுவே உயிர் பலிக்கு முக்கிய காரணமாகும்.

ஆரொட்டா மாவை நன்றாக காய்ச்சி, டியூப்லைட், பாட்டில்களை பொடியாக்கி அதில் போடுகிறார்கள். பின்னர் மயில்துத்தம், வஜ்ரம், சப்பாத்திக்கள்ளி கரைசல் ஆகியவற்றையும் இதனுடன் சேர்க்கிறார்கள். பின்னர் இந்த பசையை நூலில் தடவி காயவைக்கிறார்கள்.மொறு... மொறு.... வென மாஞ்சா நூல் தயாராகி விடுகிறது. சென்னையில் வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் மாஞ்சா நூல் தயாரிப்பு குடிசைத் தொழில் போல நடைபெற்று வருகிறது. மாஞ்சா நூல் பண்டல் 300 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.

மாஞ்சா நாளைக் கொண்டு பட்டம் விடுவதை காவல்துறை தடை செய்துள்ளது. இருப்பினும் இந்த மாஞ்சா நூலால் ஏற்படும் உயிர்ப்பலி தொடர்கதையாக இருக்கிறது. சென்னையில் சில தினங்களுக்கு முன் காற்றாடி மாஞ்சா நூல் 4 வயது சிறுமியின் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக இறந்தது. பெற்றோர் கண்முன் குழந்தை துடி, துடித்து உயிரை விட்டது நெஞ்சை உருக்கும் காட்சியாக இருந்தது.
சென்னை பெரம்பூர் குருசாமி தெருவை சேர்ந்தவர் செய்யது ஷேக் முகமது இவரது 4 வயது மகள் செரீன் பானு எல்.கே.ஜி. படித்துவந்தாள்.
செரீன் பானுவை தனது பைக்கில் முன் பகுதியில் அமர்த்தி பீச்சுக்கு அழைத்துச்சென்ற வேளையில் யாரோ விட்ட காற்றாடியின் மாஞ்சா நூல் குழந்தை செரீன் பானுவின் கழுத்தை அறுத்தது. இதனால் ரத்தம் பீறிட்டு வடிந்தது.


உடனடியாக பெற்றோர் அழுது கொண்டு அந்த குழந்தையை அருகில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை செரீன் பானுவுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது.

பத்து மாதம் சுமந்த பெற்றோர் கண் முன்னே ஒரு பச்சிளம் பாலகன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறப்பதை விட கொடுமையான காட்சி உண்டா? உயிரிழந்த குழந்தையின் தந்தை செய்யது ஷேக் முகமது கண்ணீர் விட்டு அழுதபடி கூறும்போது, காற்றாடி விடுவதை இனிமேலும் அனுமதிக்கக்கூடாது. இதனால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது. எனது குழந்தைதான் இதனால் உயிரை விட்ட கடைசி குழந்தையாக இருக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


மாஞ்சா நூலால் உயிர்பலி நடைபெறும் நேரங்களில் மட்டுமே போலீசார் விழித்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலை மாற வேண்டும். மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மெயில் ; முகவை அப்பாஸ்

திங்கள், மார்ச் 21

வட்டியின் அடையாள அட்டை

வட்டியின் அடையாள அட்டை


வட்டிக் கொடுமையைப் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரையாக சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதரி ஹாஜிரா தாஜுன் எழுதி அனுப்பியதை இங்குப் பதிப்பதில் மகிழ்கிறோம்! எல்லாம் வல்ல அல்லாஹ் வட்டியின் அனைத்து வழிகளிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பானாக!

அடையாள அட்டை

பெயர்

:

வட்டி

புனைப்பெயர்

:

இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி, உயிர்க்கொல்லி

உடன் பிறந்தோர்

:

ஒரு பைசாவிலிருந்து பல பைசா வட்டி வகைகள், கந்து, மீட்டர், இன்ஷூரன்ஸ், வங்கிக் கடன், நிதியுதவி (எ) ஃபைனான்ஸ், க்ரெடிட் கார்டு வட்டிகள்

நண்பர்கள்

:

பணக்கார ஃபைனான்ஸியர்கள், சேட்டுகள், வட்டிக்குக் கடன் கொடுப்போர், லேவாதேவிக்காரர்கள்

எதிரி

:

தர்மம், ஸகாத்

தொழில்

:

சுரண்டல்

உபதொழில்

:

தற்கொலைக்குத் தூண்டுதல், கற்பை நஷ்ட ஈடாகப் பெறுதல்

முகவரி

:

வங்கிகள், அடகுக்கடை, ஃபைனான்ஸ் (நிதி நிறுவனங்கள்)

விருப்பம்

:

சொத்து, உயிர், கற்பு

வெறுப்பு

:

தனக்கெதிரான பிரச்சாரம், வட்டியில்லாக் கடன்

எதிர்காலத் திட்டம்

:

கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பது

சாதனை

:

உலக வங்கியில் வட்டிக்குக் கடன் வாங்கியதில் இந்தியாவுக்கு முதலிடம் (ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் 24,000 ரூபாய் கடன்).

பரிசு

:

நிரந்தர நரகம்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, எந்தவிதமான கஷ்ட காலங்களிலும் வட்டியின் பக்கம் மட்டும் தலைசாய்த்து விடாதீர்கள். ஏனெனில் வட்டி சம்பந்தப்பட்ட அனைத்தையும் அல்லாஹ் வெறுக்கின்றான்.

இதைப்பற்றி, அல்லாஹ் தன் திருமறையில்,

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை ( (2:276) என்றும்,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை(வாங்கி)த் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி(இதைத் தவிர்த்து)க் கொண்டால் வெற்றியடைவீர்கள் (3:130) என்றும் எச்சரிக்கிறான்.

"வட்டி வாங்குபவர்கள், வட்டி கொடுப்பவர்கள், அதை எழுதுபவர்கள் மற்றும் ஸதகா கொடுக்க மறுப்பவர்கள் இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். - அறிவிப்பாளர் : அலீ (ரலி); திர்மிதி 5347.

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். - அவ்னிப்னி அபீ ஜுஹைஃபா (ரலி); புகாரீ 2086.

"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "இறைத்தூதர் அவர்களே! அவை எவை?" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,

  1. "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது
  2. சூனியம் செய்வது
  3. நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வது
  4. வட்டி உண்பது
  5. அனாதைகளின் செல்வத்தை உண்பது
  6. போரின்போது புறமுதுகு காட்டி ஓடுவது
  7. அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின்மீது அவதூறு கூறுவது"

என்று (பதில்) கூறினார்கள். - அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி); புகாரீ 2766.

இப்படி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுக்கின்ற வட்டியின் பக்கம் நாம் போகலாமா?

"பிறரிடம் உதவி கேட்டால் தர மறுக்கிறார்கள். வட்டியில்லா கடனும் கொடுக்க மறுக்கிறார்கள். பிறகு என்னதான் செய்வது? வட்டிக்குத்தான் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது" என்று சிலர் கூறுகிறார்கள். செலவழிக்கப் பணம் இல்லாவிட்டால் வட்டிக்குப் பணம் கிடைக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டு வட்டியின் பக்கம் போகிறோம். வட்டி என்பதே கிடையாது என்று நினைத்தால் போவோமா? சற்றுச் சிந்தியுங்கள். தங்களது ஆடம்பரச் செலவுகளுக்கும் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிறர் பார்த்து மெச்சுவதற்காக ஊராருக்கு விருந்து போடுவதற்கும் வட்டிக்குப் பணம் வாங்கும் எத்தனையோ பேர் நம் சமுதாயத்திலும் உள்ளனர். பன்றிமாமிசம் ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும். எந்த அளவு பசியிருந்தாலும் பன்றி மாமிசத்தை உண்ண மாட்டோமல்லவா. உணவு எதுவும் கிடைக்காத, உயிர்போகும் பட்சதில் பன்றி மாமிசத்தை உண்ணலாம் என்று சலுகை இருந்தும் நாம் உண்ண மாட்டோம். அதேபோன்றே இந்த வட்டியையும் ஒரு பன்றி மாமிசமாகக் கருத வேண்டும்.

ஏனெனில் இந்த வட்டியின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் எத்தனை? தனது கற்பைப் பறிகொடுத்த பெண்கள் எத்தனை? தம் பெற்றோர், பிள்ளைகள், உறவினர்களை இழந்தோர் எத்தனை? இவை யாவற்றையும் கணக்கிட முடியாது. அந்த அளவிற்கு இந்த வட்டியின் கொடுமை தலை விரித்தாடுகிறது. வட்டிக்காகப் பணம் கொடுப்பது, வட்டிக்குப் பணம் வாங்குவது மட்டுமல்ல, அதற்காக சாட்சிக் கையெழுத்துப் போடுவதும் பாவமேயாகும். அதற்கு மறுமையில் மிகப்பெரும் வேதனை மட்டுமல்ல, நிரந்தர நரகமும் உண்டு.

இதைப்பற்றி அல்லாஹ் ன் திருமறையில்,

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழமாட்டார்கள். அதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதேஎன்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது. என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275) என்று எச்சரிக்கிறான்.

இன்னும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். என்னிடம் வந்தவர்கள் தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக் கொண்டு நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது, அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! "அவர் யார்?" என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள், "ஆற்றில் நீங்கள் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள். - அறிவிப்பாளர் : ஸமுரா (ரலி); புகாரீ 2085.

எனவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,

நம்மில் வசதியுள்ளவர்கள் ஏழ்மையில் உழல்வோருக்குக் கண்டிப்பாக வட்டியில்லாக் கடன் கொடுக்க முன்வர வேண்டும். வசதியற்றவர்கள் வட்டிக்காகப் பணம் வாங்குதலும், நகை அடகு வைத்தலும் செய்யாமல் இருக்க வேண்டும். வட்டியை ஒழிக்கப் போராட வேண்டும். வட்டியில்லாக் கடன் திட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் ஏற்படுத்த வேண்டும். அப்போது இந்த உயிர்க் கொல்லியான வட்டி, இந்த உலகை விட்டு ஒழியும், இன்ஷா அல்லாஹ்.

நிச்சயமாக நல்லது செய்வோருக்கு அல்லாஹ் எப்போதும் துணையிருப்பான்.

ஆக்கம் - ஹாஜிரா தாஜுன், நவி மும்பை.

http://www.satyamargam.com/