மாஞ்சா நூல் எந்த நேரத்தில் எங்கிருந்து வரும் என்று தெரியாது.இதன் பிடியில் சிக்கினால் மரணம் நிச்சயம். சென்னையில் உயிர் பலிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த மாஞ்சா நூல் நச்சு பொருட்களின் கலவையாகவே உள்ளது. இதுவே உயிர் பலிக்கு முக்கிய காரணமாகும்.
ஆரொட்டா மாவை நன்றாக காய்ச்சி, டியூப்லைட், பாட்டில்களை பொடியாக்கி அதில் போடுகிறார்கள். பின்னர் மயில்துத்தம், வஜ்ரம், சப்பாத்திக்கள்ளி கரைசல் ஆகியவற்றையும் இதனுடன் சேர்க்கிறார்கள். பின்னர் இந்த பசையை நூலில் தடவி காயவைக்கிறார்கள்.மொறு... மொறு.... வென மாஞ்சா நூல் தயாராகி விடுகிறது. சென்னையில் வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் மாஞ்சா நூல் தயாரிப்பு குடிசைத் தொழில் போல நடைபெற்று வருகிறது. மாஞ்சா நூல் பண்டல் 300 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.
மாஞ்சா நாளைக் கொண்டு பட்டம் விடுவதை காவல்துறை தடை செய்துள்ளது. இருப்பினும் இந்த மாஞ்சா நூலால் ஏற்படும் உயிர்ப்பலி தொடர்கதையாக இருக்கிறது. சென்னையில் சில தினங்களுக்கு முன் காற்றாடி மாஞ்சா நூல் 4 வயது சிறுமியின் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக இறந்தது. பெற்றோர் கண்முன் குழந்தை துடி, துடித்து உயிரை விட்டது நெஞ்சை உருக்கும் காட்சியாக இருந்தது.
சென்னை பெரம்பூர் குருசாமி தெருவை சேர்ந்தவர் செய்யது ஷேக் முகமது இவரது 4 வயது மகள் செரீன் பானு எல்.கே.ஜி. படித்துவந்தாள்.
செரீன் பானுவை தனது பைக்கில் முன் பகுதியில் அமர்த்தி பீச்சுக்கு அழைத்துச்சென்ற வேளையில் யாரோ விட்ட காற்றாடியின் மாஞ்சா நூல் குழந்தை செரீன் பானுவின் கழுத்தை அறுத்தது. இதனால் ரத்தம் பீறிட்டு வடிந்தது.
உடனடியாக பெற்றோர் அழுது கொண்டு அந்த குழந்தையை அருகில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை செரீன் பானுவுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
செரீன் பானுவை தனது பைக்கில் முன் பகுதியில் அமர்த்தி பீச்சுக்கு அழைத்துச்சென்ற வேளையில் யாரோ விட்ட காற்றாடியின் மாஞ்சா நூல் குழந்தை செரீன் பானுவின் கழுத்தை அறுத்தது. இதனால் ரத்தம் பீறிட்டு வடிந்தது.
உடனடியாக பெற்றோர் அழுது கொண்டு அந்த குழந்தையை அருகில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை செரீன் பானுவுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
பத்து மாதம் சுமந்த பெற்றோர் கண் முன்னே ஒரு பச்சிளம் பாலகன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறப்பதை விட கொடுமையான காட்சி உண்டா? உயிரிழந்த குழந்தையின் தந்தை செய்யது ஷேக் முகமது கண்ணீர் விட்டு அழுதபடி கூறும்போது, காற்றாடி விடுவதை இனிமேலும் அனுமதிக்கக்கூடாது. இதனால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது. எனது குழந்தைதான் இதனால் உயிரை விட்ட கடைசி குழந்தையாக இருக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாஞ்சா நூலால் உயிர்பலி நடைபெறும் நேரங்களில் மட்டுமே போலீசார் விழித்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலை மாற வேண்டும். மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இ மெயில் ; முகவை அப்பாஸ்
1 comments:
பரிதாபத்திற்குரிய சாவு.
கருத்துரையிடுக