Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், அக்டோபர் 4

யார் இந்த நிர்மோஹி அகரா?

யார் இந்த நிர்மோஹி அகரா?

பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தை சொந்தம் கொண்டாடும் சாதுக்களின் அமைப்பிற்கு பெயர்தான் நிர்மோகி அகரா. இவர்கள் ஹிந்து சமயத்தைச் சார்ந்த வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் அனுமாரின் தீவிர பக்தர்கள். மொத்தம் வடஇந்தியாவில் 14-அகரா பிரிவுகள் உள்ளன இந்த பிரிவுகளைத்தான் அகில இந்திய அகரா பரிஷத் (அகில் பாரதிய அகரா பரிஷத்) அங்கீகரித்துள்ளது
அகரா என்றால் என்ன?
அகரா என்ற சமஸ்கிருத வார்த்தையை அகதா என்றும் அழைப்பார்கள் அதாவது சாதுக்களின் பிரிவில் தற்காப்பு படையினர் என்று பொருள்படும். ஆதாரம் இதோ
ஹிந்து சமயத்தில் சாதுக்கள் என்றால் அமைதியானவர்கள் என்றும் புளு பூச்சியை கூட கொல்லமாட்டார்கள் என்றும்தான் நாம் அறிவோம் ஆனால் அதே சாதுக்களின் அமைப்பில் தற்காப்புக்காக கொலை செய்வதும் உண்டு என்பது இந்த அகரா என்ற அமைப்பின் மூலம் தெரியவருகிறது! இந்த சாதுக்களின் அமைப்பில் மிக முக்கிய பிரிவான அகரா என்ற சாதுக்கள் அமைப்பு தந்திரமான அமைப்பாகும் அதாவது இவர்கள் சாதுக்கள் போல் காட்சியளித்தாலும் தாங்கள் கொண்ட கொள்கைக்காக எதிரணியில் இருப்பவர்களுடன் போர் தந்திரத்தாலும், குஷ்டி மோதல்களாலும் சண்டையிட்டு தாங்கள் மட்டும் வெற்றி பெறுவதாகும் இதன் மூலம் சாதுக்கள் அசுர குணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பாபர் மசூதியின் பிரச்சினையில் உண்மையாகிறது. அகரா எனப்படும் இவர்களை சாதுக்கள் என்று கூறுவதைவிட அசுர வர்க்கத்தினர் என்று கூறுவதுதான் சிறந்ததாகும் எனவே இந்திய ஒற்றுமையை சீர்குலைக்க அரங்கேற்றிய கூத்துக்களை இங்கு முன்வைக்கிறோம்!
அகரா பிரிவின் வரலாறு

இந்து சமயத்தில் அகரா என்ற பிரிவு கி.மு 2500ம் ஆண்டு வாக்கில் ஆதி சங்கராச்சாரியாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது. இவர்களின் வரலாறுபடி இந்த ஆதி சங்கராச்சாரியார் 7 அகாரா பிரிவினரை தோற்றுவித்தவராகிறார் இவைகளின் பெயர்களாவான!
1.      மஹாநிர்வானி
2.      நிரஞ்சனி
3.      ஜுனா
4.      அடல்
5.      அவஹன்
6.      அக்னி
7.      அனந்த் அகரா
இந்த 7 அகரா பிரிவினர் பிற்காலத்தில் பல்கிப் பெருகி 14 பிரிவினராக மாறின இவைகளில் உள்ள பாபர் மசூதியை இடிக்க துணை நின்று பெயர் சம்பாதித்த ஒரு பிரிவுதான் நிர்மோகி அகரா!
சில அகாரா யோகிகள் தங்கள் அமைப்பை ஆதி சங்கராச்சாரியார் தோற்றுவிக்கவில்லை என்றும் தங்கள் மத குருவான கோரக்நாத் என்ற முனிவர்தான் தோற்றுவித்தார் என்று கூறுகின்றனர்.
அகரா பிரிவுகளின் பலம் மற்றும் பலவீனம்
கைகளில் வாள் ஏந்தும் நிர்வாண அகராக்கள் (சாது அசுரர்கள்)
மஹாநிர்வாணி, நிரஞ்சனி, ஜுனா ஆகிய அகரா சாதுக்களின் பிரிவுகள் மிகவும் பலமானதாகும். எனவே மற்ற பிரிவுகள் இந்த பலமான பிரிவுகளுடன் சமரசமாயின அவைகளாவன
  • அடல் அகரா என்ற பலவீனமான பிரிவு மஹாநிர்வாணி என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது!
  • அனந்த அகரா என்ற பலவீனமான பிரிவு நிரஞ்சனி என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது
  • அவஹன் என்ற பலவீனமான பிரிவு ஜுனா என்ற பலமான பிரிவுடன் கூட்டு சேர்ந்தது!
இந்த பலவீனமான பிரிவுகள் பலமான அகராவுடன் இணைந்தாலும் சிற்சில நேரங்களில் தங்களுடைய எண்ணங்கள், வெற்றி தோல்விகள், தங்கள் குருதேவ் ஆகிய விஷயங்களில் வேறுபாடு கண்டு பொறாமை மனப்பாண்மையினால் உயர்வுதாழ்வு கொள்ளும்
அகராக்களின் வழிபாட்டு முறைகள்
அகராக்கள் பல்வேறு பிரிவினராக இருப்பதுடன் தங்கள் இஷ்ட தெய்வங்களின் முறைப்படியும் சண்டையிட்டு பிரிந்துவிடுவார்கள்
கடவுள் வழிபாட்டு முறையில் வேறுபாடு
சிவ அகராக்கள் சிவனை வழிபடுபவர்கள்
கல்பவஸிஷ் அகராக்கள் பிரம்மாவை வழிபடுபவர்கள்
வைராகி அகராக்கள் விஷ்ணுவை வழிபடுபவர்கள்
கடவுளுக்கு தவம் இருப்பதில் வேறுபாடு
ஒரு அகரா பிரிவு 8 வகை தவங்களை மேற்கொள்ளும் அந்த 8 தவங்களுக்கும் 52 வகையான மர்ஹிஸ்கள் (MARHIS நடுவன்) உள்ளது. ஒவ்வொரு மர்ஹிசும் மஹந்த் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது.  இந்த நிர்வாகத்திற்கு தலைமை வகிப்பவர் ஸ்ரீ பஞ்ச் (பஞ்ச் என்ற ஐந்து தலைவர்கள் – பஞ்சாயத்து தலைவர் போன்று). இந்த ஸ்ரீ பஞ்ச் என்ற தலைவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவா, சக்தி, கணேசா ஆகிய கடவுள்களை பின்பற்று பவர்களாவர். இந்த ஸ்ரீபஞ்ச் என்ற 5 தலைவர்களையும் கும்ப மேளா என்ற விழாவின் போது தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கும்ப மேளா என்பது என்ன?
கும்பா என்பது சமஸ்கிருத வார்த்தையாகும் இதற்கு PITCHER என்று ஆங்கிலத்தில் அழைப்பர் அதாவது கலசம் என்று கூறப்படும் கைப்பிடி இல்லாத மண் பானையாகும். அதாவது கும்ப ராசிக்காக காட்டப்படும் ஒரு வகை பானை. மேளா என்பது சந்திப்பு, கூட்டம் கூடுதல், சந்தை என்று பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள்.
இந்த கும்ப மேளாவின் ஆரம்பத்தை பற்றி கி.பி. 602-664ன் இடைப்பட்ட காலத்தின்படி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட சீன துறவி (Huan Tsang or Xuanzang)யின் குறிப்பு படி ஹர்ஷவர்த்தனர் என்ற மன்னர்தான் இதை ஆரம்பித்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய யோகி முனிபர்கள் இதை மறுக்கின்றனர்.
கும்ப மோளாவில் என்ற நடைபெறுகிறது
இங்குதான் அகரா பிரிவுகள் சங்கமிக்கிறார்கள். நிவாணமாக நடனமாடுகிறார்கள், நிர்வாணமாக வழிபடுகிறார்கள், ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக குஷ்டி மோதல்களில் ஈடுபட்டு தங்கள் திறமைகளை அகரா சாதுக்களின் தலைவர்கள் முன் காட்டுகிறார்கள். இறுதியாக நிர்வாணமாக அனைவரும் ஆற்றில் குளிக்கிறார்கள்.
இதோ இவர்கள்தான் நிர்மோஹி அகரா!
நீங்கள் மேலே கண்ட அகரா பிரிவுகளில் நிர்மோஹி அகராவும் ஒன்றாகும் இது பிற்காலத்தில் தோன்றிய 14 பிரிவுகளில் இந்த நிர்மோஹி அகரா என்ற பிரிவை அகில இந்திய அகரா பரிஷத் (அகில் பாரதிய அகரா பரிஷத்) அங்கீகரித்தது!
நிர்மோஹி அகராவின் நோக்கமும் உண்மை நிலையும்!
இந்த அமைப்பு வைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி தோற்றுவிக்கப்பட்டது. இவர்களின் கடவுள் ஹனுமான் அதாவது ராமாயணம் என்ற இதிகாச கற்பனைக் கதையின் கதாநாயகனான ராமனுடை சேவகன் ஹனுமான்! இந்த அமைப்பின் தலைவர் மஹந்த் பாஸ்கர தாஸ் என்பவராவார்.  இந்த அமைப்பினுடைய பெயரான நிர்மோஹி அகார என்பதற்கு ஒரு பொருள் உள்ளது அதாவது யாருடனும் ஒன்றிப்போகாத குழு. (NIRMOHI AKHARA means GROUP WITHOUT ATTACHMENT) இதன் தலையயை கோட்பாடு யாருடனும் ஒத்துப்போகாமல் வாழ்வதே!
நிர்மோஹி அகராவின் ஆரம்பகால சதியும் தோல்வியும்!
இந்த நிர்மோஹி அகரா அமைப்பு 1949ம் ஆண்டுதான் பாபர் மசூதியுடன் தொடர்புடையது என்று அனைவராலும் பேசப்படுகிறது ஆனால் அது முற்றிலும் தவறான கருத்தாகும் இந்த அமைப்பு ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திலேயே இனக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டு 1885ல் பாபர் மசூதியின் இடத்தை சொந்தம் கொண்டாடியது!
அடிமை இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கத்தின் நீதிமன்றத்தில் 1885ம் ஆண்டு ஃபைசாபாத் (FAIZABAD) ஒரு சூட் பைல் (நீதி மன்ற வழக்கு) ஒன்றை தாக்கல் செய்தது அந்த வழக்கில் இவர்கள் முன்வைத்த வாதம் இதோ ”அயோத்தி என்ற பகுதியில் ராமர் (ராம் சபுத்ரா) கோவில் இருந்ததாகும்  இது பாபர் மசூதிக்கு மிக அருகாமையில் இருந்ததாகும் கூறப்பட்டிருந்தாக அறியப்படுகிறது. ஆனால் அன்றைய ஃபைசாபாத் நீதிமன்ற நீதிபதிகள் இந்த பிரச்சினையை வளர்க்கவிடாமலும் பிரச்சினை நீடித்தால் இனக்கலவரம் ஏற்பட்டு சமுதாயம் பிரச்சினைக்கு ஆளாக நேரிடும் என்றும் கருதி ஆங்கில ஏகாதிபத்திய அரசாங்கம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது! மேலும் கோவிலை கட்ட இந்த யோகி அமைப்பு முறையிட்ட பரிந்துரையின் மீதும் தடை விதிக்கப்பட்டது. இது நிர்மோஹி அகரா என்ற இந்த இந்துத்துவா அமைப்பின் மீது விழுந்த முதல் அடியாகும்!  இந்த பலமான இடியை தாங்கிக்கொள்ள இயலாத இந்த அமைப்பு 64 ஆண்டுகாலமாக பொங்கிக்கொண்டே இருந்தது! பின்னர் 1949ல் சுதந்திர இந்தியாவில் மீண்டும் தன் பழைய கதையை தொடர்ந்து வழக்கு தொடர்ந்தது! இந்த நேரத்தில் இவர்கள் முன்வைத்த வாதம் பாபர் மசூதி அந்த பகுதியில் இல்லை என்பதே!
இறுதியாக இந்த நிர்மோஹி அமைப்பு 1989ல் உத்திரப்பிரதேச அரசாங்கத்தின் மீதே லாசூட் (LAWSUIT) என்ற வழக்கை தொடர்ந்தது. அதன்படி இவர்கள் நீதிமன்றத்தை அணுகி பாபர் மசூதியின் இடத்தை தங்களுக்கு வழங்கி ராமரை வழிபட வழிவகை செய்வதேயாகும். இந்த வழக்கு உத்திரப் பிரதேச அரசாங்கத்தின் மீது தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் பிறகு நடைபெற்றவை படங்களாக உங்கள் முன் இதோ

இப்போது நிர்மோஹி அகரா அமைப்பு தீவிரவாத அமைப்பா இல்லையா?

மாற்றுமத சகோதரர்களின் பார்வைக்கு இந்த கட்டுரையை சமர்பிக்கிறோம்!

source -thanks

siraj abdullah   publised in islamicparadiseblog.wordpress

email from abu rifaayath kuwait  

 

2 comments:

supersubra சொன்னது…

//இந்து சமயத்தில் அகரா என்ற பிரிவு கி.மு 2500ம் ஆண்டு வாக்கில் ஆதி சங்கராச்சாரியாரால் தோற்றுவிக்கப்பட்டது//

wikipedia
Adi Shankara (Malayalam: ആദി ശങ്കരൻ, Sanskrit: आदि शङ्करः, IAST: Ādi Śaṅkara, pronounced [aːd̪i ɕaŋkərə]) (788 CE - 821 CE?)

which is correct 2500 bc or 788 ad

Sulthan Allaudeen சொன்னது…

which is the truth... Allah pls tell us !!