Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், நவம்பர் 8

மனத்தினை நேசியுங்கள்

மனத்தினை நேசியுங்கள்

நேசியுங்கள் வார்த்தைகளால் அல்ல உள்ளத்தால் .
அகத்தின் அழகு முகத்தில். .

உள்ளத்தில் இருந்து நேசம் வெளிப்பட்டால் அதனை கொடுப்பவருக்கும் பெருபவருக்கும் மகிழ்வு மலரும்.

மகிழ்ச்சி என்பது ஒரு செயல் அல்ல! செயலின் விளைவுதான். தோல்வி வெற்றிக்கு வழி காட்டி. நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில், செயல்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. .

உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உறுதியான ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட முடியும் .

வாழ்வு ஒரு முறைதான் அதனை சோகமாக்கிக் கொள்ளாதீர்கள்.

மகிழ்வு விலை கொடுத்து வாங்குவதல்ல. அது மனதினைச் சார்ந்தது .

பணம் பெற்றவர்கள் எல்லாம் மகிழ்வில் மூழ்கி உள்ளார்கள் என்பது தவறான கற்பனை .

பணம் வாழ்வின் வசதிகளை ஏற்படுத்தி தரலாம் அதனால் மகிழ்வினை தந்துவிட முடியாது .

நேசம் ,அன்பு ,பாசம் அறியாதவற்கு குடும்பம் ஒரு பாரமாகும்.

உதட்டின் விளிம்பில் ஒரு புன்னகை இருந்து கொண்டு இருக்கும்பொழுது உங்கள் உள்ளத்தில் உற்சாகம் பிறந்து வாழ்வில் மகிழ்வு தானே வரும் .


நோய்பட்ட ஒருவருக்கு மருத்துவர் வாழ்வின் காலக்கெடு கொடுக்க வீடு திரும்புகின்றார் . அங்கே வீட்டில் தொலைகாட்சியல் சார்லி சாப்ளின் சிரிப்பு படம் பார்த்துகொண்டு வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்க இவருக்கு கோபம் வந்தாலும் தன்னை அறியாமல் தானும் அப்படத்தினை பார்க்கின்றார் .
மருத்துவர் சொன்னதனை மறந்து படத்துடன் ஒன்றி வாய் விட்டு சிரித்து மகிழ்கின்றார் . ("வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.") இதனை தினமும் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்து சில நாட்கள் கழித்து மருத்துவரை பார்க்க செல்கின்றார் . அந்த மருத்துவருக்கே ஒன்றும் புரியாமல் அதிசயப்பட்டு என்ன மருந்து சாபிட்டாய்! உடலில் நல்ல மாற்றம் தெரிகின்றதே! என்று வினவ .
இவர் "நீங்க கொடுத்த மருந்து தான் சாபிடுகின்றேன்."
" சரி ,சரி இப்ப உன் உடம்பு நன்றாக இருக்கு கவலைப்படாதே" டாக்டர்
"நான் இப்ப கவலைப் படாமல் இருக்கத்தான் என்னுடன் சார்லி சாப்ளின் இருக்காங்களே"

அப்பொழுதுதான் தான் மருத்துவருக்கே புலப்படுகின்றது இவரின் உடலின் நல்ல மாற்றத்திற்கு காரணம் இவரின் மன மகிழ்வுதான் என.

எது வந்தாலும் சிரித்து மகிழு.
வளமான வாழ்வுக்கு மனம்தான் முக்கியம் .


நன்றிகள்;http://nidurseasons.blogspot.com/

1 comments:

mohamedali jinnah சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

பகிர்வுக்கு நன்றி..!