Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், பிப்ரவரி 15

இந்தியா எதிர் நோக்கி இருக்கும் அச்சுறுத்தல்கள்

இந்தியா எதிர் நோக்கி இருக்கும் அச்சுறுத்தல்கள் : ஜி.கே.பிள்ளை!!

புதுடெல்லி, பிப்.15: வளர்ந்துவரும் ஹிந்துத்துவா தீவிரவாதம் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார். நிரபராதிகளான இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்முகத்தில் அவர் இதனை தெரிவித்தார். மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவாரின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில்தான் ஜி.கே.பிள்ளையின் பேட்டி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிந்துத்துவா தீவிரவாதம் வலுவடைந்து வருவது பீதியூட்டுகிறது. தற்போது இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறவில்லை என புலனாய்வு விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், இத்தகைய அமைப்புகளில் மாறி மாறி ரகசிய திட்டங்கள் தீட்டுவதுக்கூட பீதிவயப்படுத்துகிறது என ஜி.கே.பிள்ளை கூறுகிறார். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட பல வழக்குகளில் பலர் தலைமறைவாக உள்ளனர். இவர்களில் குறைந்தது 20 பேரை கண்டுபிடிக்க என்.ஐ.ஏவும் சி.பி.ஐயும் முயற்சி மேற்கொண்டுள்ளன. தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் அனைவரும் தேசத்தின் எதிரிகளாவர். அனைவரையும் ஒரே ரீதியாகத்தான் எதிர்கொள்வோம்.

மலேகான் உள்பட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் செயல்பட்டது சங்க்பரிவார் என்பது அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் மூலம் உறுதியான சூழலில் இவ்வழக்குகளில் நிரபராதிகளான இளைஞர்களை கைதுச் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை பொறுத்துக் கொள்ளவியலாது என்றும் கூறினார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா சக்திகளுக்கு பங்குள்ளது என்ற விபரம் இந்தியாவை சிக்கலில் ஆழ்த்தவில்லை. அதுத் தொடர்பான விபரங்கள் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்த ஜி.கே. பிள்ளையிடம்,பொய் வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைச் செய்யப்படுவார்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன" என பதிலளித்தார்.'போலீஸிலும், ராணுவத்திலும் ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு அனுதாபிகள் உண்டா' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், 'சிலர் இருக்கின்றார்கள்' என ஜி.கே. பதிலளித்தார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.