Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, பிப்ரவரி 25

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலைப் பொருள்களுக்குத் தடை!

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலைப் பொருள்களுக்குத் தடை!


னைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலை பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று துணைவேந்தர் மருத்துவர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்தார்.

புகையிலைப் பொருள்களான சிகரெட், புகையிலை அடங்கிய பாக்கு, மெல்லும் புகையிலை ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் வர வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்ல இருதயநோய் அல்லது மாரடைப்புவர அதிகவாய்ப்பும் உள்ளது.


எனவே புகையிலைப் பொருள்களை பயன்படுத்தாதீர்கள் என்று உலக சுகாதார நிறுவனம் உலகம் முழுவதும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதைத்தொடர்ந்து இந்திய சுகாதாரத் துறையும் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து நூறு அடி தூரத்திற்குள் புகையிலைப் பொருள்கள் விற்க தடை விதித்துள்ளது.



இந்த நிலையில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகமும் புகையிலை பொருள்களை மருத்துவக்கல்லூரிகளில் தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கான கூட்டத்தை பிப். 23 அன்று நடத்தியது.


கூட்டத்தில் மருத்துவக்கல்லூரிகளின் முதல்வர்கள், பல் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழக முதல்வர்கள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவபல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் மயில்வாகனன் நடராஜன் பேசியதாவது:-
துணைவேந்தர் Dr.மயில்வாகனன் நடராஜன்


தமிழ்நாட்டில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அனைத்து மருத்துவக்கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், சித்தமருத்துவம் உள்ளிட்ட அனைத்து இந்திய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் மொத்தம் 350 உள்ளன.


இந்த கல்வி நிறுவனங் களில் 10ஆயிரம் ஆசிரியர்களும், 55 ஆயிரம் மாணவ-மாணவிகளும் உள்ளனர். புகையிலைப் பொருள்கள் பயன்படுத் தக்கூடாது என்றும் புகையிலை பயன்படுத்தாத நிறுவனம் என்று அறிவிக்கப்படுகிறது.


அதற்கான விளம்பர பலகைகள் முக்கிய இடங்களில் வைக்கப்படும். கல்லூரிகளின் வாயில் களில் கண்டிப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்படும். நூலகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் விளம்பரப் பலகைகள்
வைக்கப்படும். கல்லூரி வளாகத்தில் புகையிலைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.


மாணவப் பருவத்தில் புகையிலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அது மாணவர் சமுதாயம் முழுவதும் சென்றடையும். விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய பின்னர் புகையிலை பொருட்களை ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பயன்படுத் தினால் அபராதம் மட்டு மல்ல அவர்கள் தற்காலிக பணிநீக்கம் கூட செய்யப்படுவார்கள். இவ்வாறு மருத்துவர் மயில்வாகனன் நடராஜன் பேசினார்.


அடையாறு புற்று நோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா, இயக்குநர் மருத் துவர் டி.எஸ்.சாகர் உள் பட பலர் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பேசினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை புகையிலை கட்டுப்பாடு மய்ய மருத்துவர் வி.சுரேந்திரன், மருத்துவர் இ.விதுபாலா ஆகி யோர் செய்து இருந்தனர்.