Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, பிப்ரவரி 11

தம்பியைப் பார்த்து கத்துக்கோ

தம்பியைப் பார்த்து கத்துக்கோ

ஒரு பிஸ்கட் விளம்பரத்தில் எடுத்ததற்கெல்லாம் தன் பெரிய மகனைத் திட்டும் அம்மா, ?ரோஹனைப் பார்த்து கத்துக்கோ? என்று தன் இளைய மகனைப் புகழ்வார். விளம்பரத்தில் மட்டுமல்ல, பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான் இது. தங்களது குழந்தைகளை அவர்களது உடன் பிறந்தவர்களுடனோ அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுடனோ ஒப்பிட்டுப் பேசுவது வழக்கமாகிவிட்டது.

இப்படி குழந்தைகளை கம்பேர் செய்வது நல்லதா? சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் யமுனா என்ன சொல்கிறார்? கேளுங்கள்…

முன்பெல்லாம் நம்முடைய வீடுகளில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு குழந்தைகளாவது இருக்கும். அவர்களை வளர்ப்பது குறித்து யாரும் பெரிதாக எந்தவிதமான அக்கறையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குத் தேவையானதை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அதோடு அவர்களுக்கு அடுத்த குழந்தையின் தேவைகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்குள் பேட்டியோ பொறாமையோ அதிகம் இருக்காது. ஒவ்வொரு குழந்தையும் இன்னொரு குழந்தையின் வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும்.

ஆனால் இன்றோ நம்முடைய வீடுகளில் இருப்பது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான். அவர்களை சமாளிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு என்று நம் குழந்தைகளை கம்பேர் செய்கிறோம். ஆனால் அதுவே அவர்களின் மனதை பாதிக்கும் விஷயமாக மாறிவிடுகிறது. குழந்தைகளை ஒருவரோடு ஒருவரை கம்பேர் பண்ணாமல் எப்படி அவர்களை ஊக்கப்படுத்துவது என்ற கேள்விக்கு வழி சொல்லுகிறார் குழந்தைகள் நல மருந்துவர் யமுனா.


??இரண்டு என்று இல்லை; ஒரு குழந்தை இருக்கும் வீடுகளிலும் இந்த கம்பேர் செய்து பார்ப்பது இருக்கிறது. இன்றைய பெற்றோர்கள் இப்படி கம்ப்பேர் பண்ணுவதற்கு காரணம் அவர்களுக்கு வேறு குழந்தைகளைப் பற்றி தெரியாது. அதோடு கூட்டு குடும்பமும் கிடையாது. அதனால் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இவர்கள்தான் அவர்களுடன் இருக்கிறார்கள். நமக்குப் பிறந்த குழந்தை கட்டாயம் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்கிறார்கள். இவர்கள் இப்படி செய்யும் அப்ஸர்வேஷன் குழந்தைகள் மனதில் அப்படியே பதிந்துவிடும்.


குழந்தைகளிடம் கம்பேர் செய்வது என்பது இரண்டாவது குழந்தை பிறந்த நிமிடத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது. குழந்தையின் ஒவ்வொரு பருவத்தின் வளர்ச்சியிலும் இந்த ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது பெரியவர்கள் தங்களையும் அறியாமல் செய்கிற விஷயம். இரண்டாவது குழந்தை கவிழ்ந்துகொள்ளும் போது, நடக்கும் போது, ஆட்களை கவனிக்கும்போது, சாப்பிடும்போது, உடம்பு சரியில்லாமல் போகும்போது, அழும்போது என ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்பீடு நடக்கிறது. இவ, அவனைவிட வேகமா செய்யறா. அவன் உன்னை மாதிரி இல்ல? என்று சொல்வார்கள். இதுபோன்ற ஒப்பீடுகள் ஒரு குழந்தையின் மனதில் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தும்.


ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய இயல்பின் அடிப்படையில் வளரும். விஷயங்களை பொறுமையாக அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் விதம் அவர்களை கம்பேர் செய்வது போல இருக்கக் கூடாது.


தொடர்ந்து கம்பேர் செய்து காண்பிக்கும்போது குழந்தைகள் மனதில் விரக்தி வந்து விடும். ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் ?உன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன?? என்று கேட்டால் நான் என் அக்காவைவிட அழகு குறைவு. நான் அவளைவிட குறைவான வேகத்தில் எல்லாவற்றையும் செய்வேன் என்றுதான் சொல்லும். தன்னுடன் பிறந்தவர்களைத் தவிர்த்து வேறு எதைப் பற்றியும் அவர்களால் யோசிக்க முடியாது.


தன்னுடைய தனித்திறமை என்னவென்றும் அவர்களுக்கு தெரியாமலே போய்விடும். அவர்களுடைய இலக்கு என்ன என்பது தெரியாது. அந்த இலக்கை அடைவதற்கான எந்தவிதமான முயற்சியும் அவர்களால் எடுக்க முடியாது. இந்த விஷயத்தில் பெற்றோர்கள்தான் ஒரு முடிவை எடுக்க வேண்டும். நான் எந்தக் காரணத்திற்காகவும் என்னுடைய குழந்தையை யாருடனும் ஒப்பிட மாட்டேன் என்று முடிவு எடுக்க வேண்டும்.


தினமும் குழந்தைகள் செய்யும் நல்ல காரியங்களை, அன்று இரவு துங்குவதற்கு முன்பு, ?நீ இன்று இதை எல்லாம் சிறப்பாக செய்தாய்? என்று அனைவரின் முன்பும் சொல்ல வேண்டும். அதோடு ஒப்பிடுதல் என்பது அவனுக்கு நிகர் அவனே என்ற அடிப்படையில்தான் இருக்க வேண்டும். அதாவது ?இந்த முறை நீ குறைவாக மார்க் வாங்கி இருக்கிறாய். ஆனால் போன முறை இதைவிட அதிகமாக வாங்கி இருந்தாய். இதற்காக நீ வருத்தப்பட வேண்டாம் அடுத்த முறை இதையெல்லாம் சரிக்கட்டும் விதமாக நிறைய மார்க் வாங்க வேண்டும்? என்று சொல்ல வேண்டும். அதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும்.


இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக்கொண்டால் அதைப் பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர இடையில் புகுந்து பஞ்சாயத்து பண்ணக் கூடாது. ?நீ பெரியவன் அதனால் அவனுக்கு இதை விட்டுக் கொடு? என்று சொல்லும் போது பெரிய குழந்தைக்கு அடுத்த குழந்தையின் மீது வெறுப்புதான் வரும். இதுதான் பின்னாளில் வெட்டுக்குத்து வரை சொல்லும். சம வயதுடைய எந்தக் குழந்தை-யுடனும் அவர்களை ஒப்பிட்டு பார்க்கவே கூடாது?? என்கிறார் டாக்டர் யமுனா.


Source; http://puduvaimalar.com/