பத்திரிக்கை துறை ... உலக வரலாற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்திய ஒரே துறை என்றால் அது பத்திரிக்கை துறை தான் ... எத்தனையோ மாற்றங்கள் .. உலக நியதிகளை புரட்டி போட்ட வரலாறுகள் பத்திரிகை துறையினால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடிகிறது .
அவ்வளவு சாதனைகளை செய்ததாக நான் பீற்றிக்கொள்ளும் இந்த பத்திரிக்கைதுறைதான் என்னையும் என்னை போன்ற சிந்தனை கொண்ட எண்ணற்ற சகோதரர்களுக்கும் பெரும் சவாலாக மாறி நிற்கிறது ...
ஆம் ! மகாத்மா காந்தி அவர்கள் பத்திரிகை நடத்தினார் .சுதந்திரம் பற்றிய சிந்தனை வெளிக்கொணர்ந்தது.இந்தியா வெளிச்சம் அடைந்தது .
தந்தை பெரியார் அவர்கள் பத்திரிக்கை நடத்தினார் . ஆதிக்க சாதி வெறியர்கள் தடை செய்தார்கள் ...மறுநாள் பெயர் மாறி பத்திரிக்கை வரும் ....இப்படி தன் வாழ்நாளில் ஐம்பதற்கும் மேற்பட்ட பத்திரிகைகள் நடத்தினார் . தமிழ்நாடு தன்மானம் மிக்க நாடாய் மாறினது . இது போல் எண்ணற்ற தலைவர்கள் தங்களின் சிந்தனைகளை பரப்ப பத்திரிகை துறையை பயன்படுத்தி இருக்கிறார்கள் ! ஆனால் இன்றோ
இப்படி பட்ட ஒரு நல்ல துறை முழுக்க முழுக்க கெட்டு குட்டிசுவராகி நிற்கிறதே ! எனும் வேதனை பீறிட்டு எழுகிறது .
பத்திரிகைத்துறை இன்றோ அதன் நிலைப்பாடு என்னவென்று பார்த்தால் ...
செய்திகளை பரபரப்பாக கொடுக்க வேண்டும் ... அதனால் அதன் உண்மை தன்மைகளை அலசி ஆராய்ந்து கொடுப்பதில்லை .அடுத்து புலனாய்வு பத்திரிக்கைகள் என்ற பெயரில் சில பத்திரிகைகள் அடுத்தவர்களின் அந்தரங்கள் பற்றி தெரிந்து கொண்டு எழுதுவது சில சமயங்களில் ப்ளாக்மெயில் செய்து அவர்களிடம் தொகையை பெற்று கொள்வது .
இதைவிட ஒரு மிகபெரும் கொடுமை ஒன்று உள்ளது அது குறிப்பிட்ட இனத்தை தொடர்ந்து அவமதித்தும் ,அவதூறுகளை அள்ளி தெளித்தும் ஒரு மிகபெரும் போரையே செய்து வருகின்றன .
இதன் மூலம் முஸ்லிம்கள் என்றாலே மற்றவர்கள் எதிராக பார்க்கும் நிலையை உருவாக்கி விட திட்டம் தீட்டி செயல் படுகின்றனர் அதில் கிட்டதட்ட வெற்றியும் பெற்று விட்டனர் என்பதே யதார்த்த நிலை
இப்படிதான் கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது ஆயிஷா என்ற பெண் மிகபெரும் தீவிரவாதி என்று எழுதி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக சித்தரித்தனர் .
நடுநிலை நாளேடு என பீற்றிக்கொள்ளும் தினமணி கீழக்கரை வழியாக இலங்கை தப்பி செல்ல ஆயிஷா திட்டம் என்றும் அதற்கு கீழக்கரை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவருவதாகவும் ஒரு செய்தியை அந்த பகுதி பதிப்பில் மட்டும் வெளியிட்டது . இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி சகோதரர்கள் ஒரு அறிவுபூர்வமான வேலையை செய்தார்கள் ...
அது முதலில் தினமணிக்கு ஒரு கடிதம் எழுதி எதன் அடிப்படையில் இப்படி செய்தி வெளியிட்டுளீர்கள் ? அவ்வாறு துணை புரியும் இளைஞர்கள் விவரம் தாருங்கள், நாங்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டு எழுத அது தினமணியின் குப்பைக்கே சென்றது
விட வில்லை பத்திரிக்கை கவுன்சில் க்கு இந்த செய்தியை புகாராக அனுப்ப பின்பு
பஞ்சாயத்திற்கு வந்தார்கள் ... நம்ம ஆட்களும் தெளிவான டீலிங் செய்தார்கள் .அது எல்லா பதிப்புகளிலும் முதல் பக்கம் இந்த செய்தி பொய் என்று மறுப்பு போடவேண்டும் பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று அவ்வாறே எல்லா பதிப்புகளிலும் வந்தது . அத்துடன் நிற்க வில்லை எல்லா பகுதிகளிலிருந்தும் இது என்ன மறுப்பு செய்தி ?அப்படி என்ன தான் எழுதி இருந்தீர்கள் முஸ்லிம்கள் பற்றி ? என்று கேள்விகளை கேட்க செய்தனர் . அவர்களும் உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்!
தினமலர் சொல்லவெ வேண்டாம் ....அவதூறு செய்திக்காக விடியல் வெள்ளி மாத இதழ் ஆசிரியருக்கு நஷ்ட ஈடு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் தீர்ப்பே வழங்கப்பட்டது .... அவ்வப்போது அரிப்பை தீர்த்து கொள்ள கார்ட்டூன் போடுவது ...இது காவியின் பத்திரிக்கை என்பதால் பெரிய ஆச்சர்யம் இல்லை
ஆனால் இன்று தமிழக அரசியல் என்ற பத்திரிகை மயிலாடுதுறையில் விபச்சாரத்தை தட்டி கேட்ட இஸ்லாமிய பெரியவரை பற்றி எழுதி இருந்தது தான் உச்சகட்ட வேதனை!
இந்த அவதூறு பிரசாரத்தை செய்தவர் திருவாளர் ராகவன். இவரும் இதே பகுதியை சார்ந்தவர் தான் .அவருக்கு மன்சூர் கைலி சென்டர் சுமார் முப்பத்து ஆண்டு காலமாக தனது சொந்த இடத்திலேயே மிக பிரபல்யமாக வியாபாரதிலும் அறநெறியை கொண்டு செயல்பட்டு வருவது தெரியும் ...பின்பு ஏன் ? ஆம் சகோதரரர் அப்துர் ரவூப் அவர்களின் இஸ்லாமிய பிரசாரங்கள் தான் இவருக்கும் இவரை பின்னின்று இயக்குபவர்களுக்கும் மிக கடுமையான எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கின்றன .
அன்பு சகோதரர் ராகவன் அவர்களே ! உங்களுக்கு சில கேள்விகள் ?
நீங்கள் எழுதிய ஃபாலோ அப் கட்டுரையிலிருந்தே சில கேள்விகள் ?
நேர்மையான காவல் துறை அதிகாரி ஒருவர் ...( இப்படிதான் உங்கள் கும்பல் ஆதராமில்லா செய்திகளை போடும் போது எழுதுகிறீர்கள் .. அது எப்படிப்பா உங்களுக்கு மட்டும் நேர்மையான அதிகாரிகள் கண்ணுக்கு தெரிகிறார்கள் ?
சரி அந்த நேர்மையான அதிகாரி பெயர் தான் என்ன? அவர் பெயரை வெளியீட்டால் என்ன ? ஏன் பயபடுகிறார் ? உண்மையை உரக்க சொல்லுவதற்கு பயபடுபவர்தான் உங்கள் அகராதியில் நேர்மையானவரா? இது எங்களுக்கு தெரியும் அப்படி ஒருவர் இருக்க வில்லை அது உங்களின் கற்பனை கதாபாத்திரம்- தினமலரின் பழைய படைப்பு இப்போது நீங்கள் ரீமேக் செய்துள்ளீர்கள் !
போன கட்டுரையில் ஷரியத் தீர்ப்பு ! தவறு செய்யும் பெண்களை திருத்துகிறார்.அடிக்கிறார் சூடு போடுகிறார்
என்ற எழுதிய கைகள் இப்போது ஒரே வாரத்தில் மாற்றி எழுதுகிறதே ! எங்களுக்கு புரிகிறது சார் !
நீங்கள் எழுதிய கட்டுரை பெரிய அளவில் மக்களிடம் சேரவில்லை என்றாலும் முஸ்லிம்கள் காவல்துறை, பத்திரிகைத்துறை பற்றி யும் இந்த கூட்டணியின் முஸ்லிம் எதிர்ப்பு நிலை பற்றியும் நன்கு அறிந்தே வைத்து தானே மறியல் செய்ய ஆரம்பித்தார்கள் . உங்களுக்கு ஆகா முஸ்லிம்கள் ஒன்று சேர்கிறார்கள் என்றவுடன் அவர் மேலயே பழி சுமத்துகிறீர்கள் .... நல்லா இருக்கிறது !
இறுதியாக உங்களுக்காக சில வரிகள் ...
தீயவன் ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால்
அதை தீர விசாரித்து கொள்ளுங்கள் இல்லையேல் அறியாமையினால் ஒரு குற்றமற்ற சமூகதிற்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம் .பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே வருத்தபடுவீர்கள் !- என்று அல் குர் ஆன் கூறுகிறது ... அதனால்
எந்த செய்தி வந்தாலும் நாங்கள் தீர விசாரித்தே தான் அதை புரிந்து கொள்கிறோம்
அதனால் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது எங்களுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது .
பத்திரிகையாளர்களுக்கும் இஸ்லாம் வழி காட்டுகிறது
தான் கேள்வி பட்ட எல்லாவற்றையும் பரப்புகிறவன் பொய்யன் - என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள் .
செய்தியாளர்களுக்கு nose for news என்பார்கள் ஆனால் நீங்கள் வெளியிடும் செய்திகளின் தரம் நாற்றம் அடிக்கறது நண்பர்களே!
தயவு செய்து உங்களால் பத்திரிகைத்துறை பெருமை அடையாவிட்டாலும்
மக்களின் நம்பிக்கையை இழந்து விடாமலாவது பார்த்து கொள்ளுங்கள் .
11 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஜபருல்லாஹ்,
அருமையான எழுத்துக்கள் சகோ.
ஜசாக்கல்லாஹ் க்ஹைர்.
இந்த மயிலாடுதுறை செய்தி பற்றி நானும் கவனித்து வருகிறேன்.
இந்த பொய்க்குற்றச்சாட்டுகளுக்கும் கைதுகளுக்கும் பின்னணியில் உள்ள கயவர்கள் மக்கள் முன் அடையாளம் காட்டப்பட்டாக வேண்டும்..!
இனி, பொய்ச்செய்திகளை பரப்பும் வெகுஜன பிரபல பத்திரிக்கைகளை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.
நம் கையில் இணையம் தரும் இலவசங்களான வலைப்பூவும், முகநூல், ட்விட்டர், மெயில் குழுமம் என எல்லாம் இருக்கையில்... இனி நாமே நம்மூரில் ஊர்க்காரர்களைக்கொண்டு புலனாய்வு செய்து உண்மைகளை எழுதவேண்டும்.
இப்படி விழிப்புணர்வூட்டிய இக்கட்டுரைக்கு மிக்க நன்றி சகோ.ஜபருல்லாஹ்.
MASHA ALLAH.... WELL SAID...!!
தெளிவாக சொன்னிர்கள் நண்பரே ... ஷைத்தானை வெருண்டோட செய்வது ... மிக சுலபம் ... ஆயினும் ஈமானில் பலம் இல்லாதவர் .. மருளுவது கண்டு ... இத்தகைய கொழுப்பெடுத்த வர்கள் ... அடிமேல் அடி அடித்து கொண்டுதான் இருப்பார்கள் ... நாம் அச்சப் பட தேவை இல்லை என்கிற கருத்தாக்கம் இன்னும் அழுந்த பதிய வைக்கப் பட வேண்டும் ... நன்றி உங்கள் முயற்சிக்கு ... அல்லா உங்களுக்கும் எனக்கும் ... நம் சகோ தரர் கள் அனைவருக்கும் ... EEமானில் உறுதியும் .. தவறு கண்டால் ... தடுத்து நிற்கும் உரமும் தர வல்லோன் அல்லா விடம் உதவி தேடுகிறேன்
வ அலைக்கும் ஸலாம்.வரஹ்...
சகோ.முஹம்மத் ஆஷிக்.
”இந்த பொய்க்குற்றச்சாட்டுகளுக்கும் கைதுகளுக்கும் பின்னணியில் உள்ள கயவர்கள் மக்கள் முன் அடையாளம் காட்டப்பட்டாக வேண்டும்..!
இனி, பொய்ச்செய்திகளை பரப்பும் வெகுஜன பிரபல பத்திரிக்கைகளை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.
நம் கையில் இணையம் தரும் இலவசங்களான வலைப்பூவும், முகநூல், ட்விட்டர், மெயில் குழுமம் என எல்லாம் இருக்கையில்... இனி நாமே நம்மூரில் ஊர்க்காரர்களைக்கொண்டு புலனாய்வு செய்து உண்மைகளை எழுதவேண்டும்.”
இந்த காவி பத்திரிகைகளின் உண்மைத்தன்மையை பெரும்பாலான முஸ்லிம்கள் அறிந்தே உள்ளார்கள்.மயிலாடுதுறை பகுதி இணைய தள சகோதரர்கள் தங்களின் வலைப்பூக்களில் உண்மையை உடனுக்குடன் அறிய தந்தார்கள்.அவர்களின் பணி மிகவும் பாராட்டப்படவேண்டியது.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
இக்கட்டுரை எனது இளைய சகோதரர் மு.ரஹ்மான் ஸாதிக் எழுதியது.
அலைக்கும் அஸ்ஸலாம் ஆஷிக் பாய் !வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
அலைக்கும் அஸ்ஸலாம் பாய் ஹாரூன் பாய் !வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
அன்பு சகோதரர் ஜபருல்லாஹ் அவர்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும்,
மயிலாடுதுறை சம்பவம் "தமிழக அரசியல்" இதழில் மிக கேவலமாக சித்தரிக்க பட்டுள்ளது,இவர்களின் நோக்கம் இழிவு படுத்த வேண்டும் என்பதே.
kiliyanur.net போன்ற தளங்கள் உண்மை செய்திகளை புட்டு புட்டு வைத்தது மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது, அதில் ஈடுபட்ட சஹோதரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உண்மையை எடுத்துரைக்க பல தளங்கள் உருவாக வேண்டும் என்பதே பலரின் விருப்பம்.
thanks for ur visit & valuble comment
பத்திரிகைகள் மட்டுமின்றி காட்சி ஊடகங்களும் நமக்கு எதிராகத்தான் இருக்கின்றன.சென்னையில் சிறுவன் தில்சான் முன்னாள் ராணுவ அதிகாரியால் சுட்டு கொல்லப்பட்டவுடன் ராணுவத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டன குரல் ஒலித்தது.அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது.உண்மையில் இது நிச்சயம் வரவேற்கத்தகுந்த விஷயம்.ஆனால் காஸ்மீரில் இதே ராணுவத்தால் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டு தினம் தினம் அப்பாவி குழைந்தைகளும்,ஆண்களும்,பெண்களும் கொல்லபடுவதை குறித்து எந்த செய்தியும் வெளியிடுவதில்லையே ஏன்?இளம்பெண்கள் ராணுவ வெறியர்களால் வன்புணர்ச்சிக்கு தினமும் ஆளாக்கபடுவது கொடுரம் இல்லையா?இதெல்லாம் கண்டும் காணாமல் இருப்பதுதான் பத்திரிக்கை தர்மமும்,சுதந்திரமுமா?குண்டுகள் வெடித்தவுடன் சில வாரங்களாக நம் சமுதாயத்தினர் மீது அபாண்ட பழி சுமத்தி கற்பனை கதைகளை கட்டவிழ்த்துவிட்டனரே!ஆனால் உண்மை குற்றவாளிகளான சங்பரிவார் பிடிபட்டவுடன் அதை மூடி மறைப்பதுதான் பத்திரிக்கை தர்மமும்,நியாயமும் போல.சமுதாய இயக்கங்ககள் நடத்தும் பத்திரிக்கைகளோ சகோதர யுத்தம் நடத்தவும்,தாங்கள் செய்த உதவிகளை புகைப்படம் பிடித்து தம்பட்டம் அடிப்பதிலும்,யாக செய்திகளை வெளியிடுவதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளது.அதிலும் அந்தந்த இயக்க பத்திரிக்கையை அந்த இயக்கத்தவரை தவிர வேறு யாரும் படிப்பதில்லை.நம்மிடமிருந்து ஒரு நாளிதழ் அவசியம் தேவை.அது இயக்க,பக்க சார்புடையதாக இல்லாமல் அனைத்து மக்களும் படிக்ககூடியவகையில் அமையவேண்டும்.அதற்க்கான ஆக்கபூர்வமான முயற்சியில் சமுதாய புரவலர்கள் முயலவேண்டும்.அதுவரை நமக்கு எதிராக நடக்கும் விசயங்களை மக்களிடம் அம்பலபடுத்தி பரப்புவதோடு பொதுகருத்தை(சிறுவன் தில்சான் சம்பவம் போன்று) உண்டாக்க முயலவேண்டும்.
பத்திரிகைகள் மட்டுமின்றி காட்சி ஊடகங்களும் நமக்கு எதிராகத்தான் இருக்கின்றன.சென்னையில் சிறுவன் தில்சான் முன்னாள் ராணுவ அதிகாரியால் சுட்டு கொல்லப்பட்டவுடன் ராணுவத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டன குரல் ஒலித்தது.அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது.உண்மையில் இது நிச்சயம் வரவேற்கத்தகுந்த விஷயம்.ஆனால் காஸ்மீரில் இதே ராணுவத்தால் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டு தினம் தினம் அப்பாவி குழைந்தைகளும்,ஆண்களும்,பெண்களும் கொல்லபடுவதை குறித்து எந்த செய்தியும் வெளியிடுவதில்லையே ஏன்?இளம்பெண்கள் ராணுவ வெறியர்களால் வன்புணர்ச்சிக்கு தினமும் ஆளாக்கபடுவது கொடுரம் இல்லையா?இதெல்லாம் கண்டும் காணாமல் இருப்பதுதான் பத்திரிக்கை தர்மமும்,சுதந்திரமுமா?குண்டுகள் வெடித்தவுடன் சில வாரங்களாக நம் சமுதாயத்தினர் மீது அபாண்ட பழி சுமத்தி கற்பனை கதைகளை கட்டவிழ்த்துவிட்டனரே!ஆனால் உண்மை குற்றவாளிகளான சங்பரிவார் பிடிபட்டவுடன் அதை மூடி மறைப்பதுதான் பத்திரிக்கை தர்மமும்,நியாயமும் போல.சமுதாய இயக்கங்ககள் நடத்தும் பத்திரிக்கைகளோ சகோதர யுத்தம் நடத்தவும்,தாங்கள் செய்த உதவிகளை புகைப்படம் பிடித்து தம்பட்டம் அடிப்பதிலும்,யாக செய்திகளை வெளியிடுவதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளது.அதிலும் அந்தந்த இயக்க பத்திரிக்கையை அந்த இயக்கத்தவரை தவிர வேறு யாரும் படிப்பதில்லை.நம்மிடமிருந்து ஒரு நாளிதழ் அவசியம் தேவை.அது இயக்க,பக்க சார்புடையதாக இல்லாமல் அனைத்து மக்களும் படிக்ககூடியவகையில் அமையவேண்டும்.அதற்க்கான ஆக்கபூர்வமான முயற்சியில் சமுதாய புரவலர்கள் முயலவேண்டும்.அதுவரை நமக்கு எதிராக நடக்கும் விசயங்களை மக்களிடம் அம்பலபடுத்தி பரப்புவதோடு பொதுகருத்தை(சிறுவன் தில்சான் சம்பவம் போன்று) உண்டாக்க முயலவேண்டும்.
-அம்ஜத்கான் -amzathkhan82@gmail.com
தமிழ் முஸ்லிம் பிரதர்ஸ் குழுமத்தின் மூலமாக
நன்றி சகோதரர் அம்ஜத்!
இறைவன் நாடினால் இது சாத்தியமான ஒன்று தான்
கருத்துரையிடுக