Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், பிப்ரவரி 17

பேரன்பிற்குரிய இஸ்லாமிய சமுதாயமே........!!

பேரன்பிற்குரிய இஸ்லாமிய சமுதாயமே........!!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

பேரன்பிற்குரிய இஸ்லாமிய சமுதாயமே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

3:26. (நபியே!) நீர் கூறுவீராக: 'அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.


6133. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்> இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்


என புஹாரி கிரந்தத்தில் காணப்படும் ஹதீஸ் எச்சரித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் நம்மை பலமுறை நெஞ்சிலும் முதுகிலும் மாறி மாறி குத்தி வரும் அநியாயக்காரர்களுக்கு எதிராக மட்டுமே என்ற விளக்கத்துடன் நம் சமுதாயத்தின் நலம் நாடும் என்னுடைய எண்ணங்கள் சில உங்களின் நேர்கொண்ட பார்வைக்கு.


ஒன்றை தெளிவுபடுத்திவிட்டு எனது கருத்திற்குள் நுழைவது நலமென்று கருதுகிறேன். இங்கே நான் பதிந்துள்ளவை இந்து சமுதாயத்திற்கும் நியாயவான்களுக்கும் எதிரான ஒன்றல்ல மாறாக கட்டப்பஞ்சாயத்தின் மூலம் பாபரி மஸ்ஜித் நிலத்தை இழந்து விட்டு நிற்கும் நம்மை நோக்கி முதலில் தமிழக சட்டசபைத் தேர்தல் வரவிருக்கின்றது. இந்தத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்றும்> கட்டப்பஞ்சாயத்தை வரவேற்ற கட்சிகளுக்கு எப்படிப்பட்ட படிப்பினைகளை நாம் தர வேண்டும் என்றும் இன்றிலிருந்தே நாம் ஓர் சமுதாயமாக ஆலோசித்து ஒரு முடிவு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அண்மித்துவிட்ட தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக இன்றைய நிலையில் எந்த கூட்டணியும் இறுதி செய்யப்படவில்லை> இன்னும் தேர்தல் தேதியோ வேட்பாளர்களோ அறிவிக்கப்படவில்லை> எந்த முஸ்லீம் அமைப்புகளும் கட்சிகளும் யாரை நாம் ஆதரிக்க வேண்டும் என அவர்களின் பார்வையிலிருந்து நமக்கு சொல்லித்தர துவங்கவுமில்லை எனவே> இந்த சூழலில் தமிழக முஸ்லீம்களாகிய நாம் சுயமாக சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுப்போம். ஒவ்வொரு அமைப்பும் கட்சியும் தங்களின் சிந்தனைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு முடிவெடுத்து இவர்களை ஆதரியுங்கள் அவர்களை ஆதரியுங்கள் என்று சொல்லுமுன் நமது சமுதாயத்தின் முடிவை இயக்கங்களும் முஸ்லீம்களின் கட்சிகளும் ஏற்று செயல்படுத்திடும் நிர்பந்தத்தினை ஏற்படுத்துவோம் ஏனென்றால் கடந்த காலங்களில் வெற்றிவாய்ப்புள்ள கட்சிகளை நாம் ஆதரித்தால் தான் நம்முடைய கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்று சமுதாயத்தின் மத்தியில் பலமாக விதைக்கப்பட்ட வாதம் நம் ஆதரவைப்பெற்று ஆட்சி கட்டிலேறிய கட்சிகளின் செயல்களின் மூலம் பரிகசத்திற்குள்ளாக்கப்பட்டுவிட்ட நிதர்சன காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுதல் நலம்.

காட்டுமிராண்டிகளின் தொகுப்பான பிஜேபியின் நிழலுலக பயங்கரவாதங்களுக்கு ஜனநாயக வடிவம் கொடுத்து தொடர் துரோகமிழைத்து வரும் காங்கிரஸையும் சமதூரத்தில் வைத்து நாம் துணிவுடன் சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்ற நிலையில் முஸ்லீம்களின் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் மற்றும் வாக்காளர்களுக்கும் கீழ்க்காணும் கோரிக்கைகளை நம் அனைவரின் சார்பாகவும் முன் வைக்கின்றோம்.

தேர்தலில் போட்டியிடும் முஸ்லீம் கட்சிகளுக்கான கோரிக்கைகள்:

1. இந்த தேர்தலில் நாம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த நிற்கவில்லை என்ற உண்மையை உணர்ந்துள்ள நீங்கள் அதேவேளை முடிந்த மட்டும் இறைக்கட்டளைகளை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களை இத்தேர்தலில் பின்பற்றிட முற்படுங்கள்.

844. முகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்.

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் ஏகன் அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்கு உரியது. புகழும் அவனுக்கு உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்புடையவனும் உன்னிடம் எந்த பயனுமளிக்க முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் கூறக்கூடியவர்களாக இருந்தனர்.

2. வெற்றி தோல்விகளை மட்டும் முன்வைத்து கூட்டணி அமைக்காதீர்கள் இந்தத் தேர்தலைப் பொருத்தவரை முஸ்லீம்களின் ஒருங்கிணைக்கப்பட்ட பலம் மற்றும் துரோகிகளுக்கான பாடத்தினை படிப்பித்திட தயாராகுங்கள் என்றாலும் நமக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காணவும் அதில் போட்டியிடவும் தவறாதீர்கள்.

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

3:103. இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும் நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

3. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள முஸ்லீம்களின் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு கூட்டமைப்பை அமைக்க முன் வாருங்கள். அப்படி நீங்கள் செய்தால் இறைவன் உங்களுக்கு இவ்வாறு வாக்களிக்கின்றான்.

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ

15:47. மேலும் அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.

4. முஸ்லீம் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக மட்டுமே பெரிய கட்சிகளிடம் தொகுதி பேரம் பேசுங்கள்.

5. உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

என்று ஸஹீஹூல் புஹாரியில் காணப்படும் ஹதீஸின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உங்களுக்கிடையே தொகுதி உடன்பாடு செய்து கொள்ளுங்கள்.

6. பிஜேபி கூட்டணியை பற்றி கனவிலும் சிந்திக்க வேண்டாம் அதேபோல் தொடர் துரோக காங்கிரஸிற்கும் கட்டாயம் ஆதரவு தர வேண்டாம் நீங்கள் அதே கூட்டணியில் இருந்தாலும் சரியே. கூட்டணி தர்மம் என்ற இருமுகம் தேவையில்லை.

7. காங்கிரஸ் முஸ்லீம்களே தயவுசெய்து இந்தத் தேர்தலில் நீங்கள் ஒரு முஸ்லீமாக மட்டும் கடமையாற்ற முன்வாருங்கள் அல்லது தேர்தல் முடியும் வரையாவது அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் ஒதுங்கியிருங்கள்.

8. கிருஸ்தவர்கள் நமது உற்ற தோழர்கள் அல்ல அவர்கள் இத்துத்துவ பயங்கரவாதிகளுக்கு சற்றும் குறையாதவர்கள் எனவே அவர்களுடைய கட்சியுடனோ அல்லது இயக்கங்களுடனும் சேர்ந்து சிறுபான்மையினர் என்ற போர்வையை போர்த்த முயலாதீர்கள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تُطِيعُوا فَرِيقًا مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ يَرُدُّوكُم بَعْدَ إِيمَانِكُمْ كَافِرِينَ

3:100. நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை நீங்கள் ஈமான் கொண்டபின் காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.

9. எங்களின் பெயரால் அரசியல் கட்சி நடத்தும் நீங்கள் வௌ;வேறு அணியில் இருக்கும் சூழல் ஏற்பட்டாலும் ஒரே தொகுதியில் இரு முஸ்லீம் கட்சிகள் மோதுவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள், எங்களுக்கு உங்களின் விளக்க காரணகாரியங்கள் இத்தேர்தலில் தேவைப்படவில்லை.

10. எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அவர்களை முஸ்லீம்களின் அரணாக அவர்களை சமுதாயத்தின் மத்தியில் தயவுசெய்து மீண்டும் அறிமுகப்படுத்த முயலாதீர்கள் மாறாக இந்த தேர்தலுக்கு மட்டுமே தொகுதி உடன்பாடு செய்துள்ளோம் என்ற அளவில் உங்களுடைய பிரச்சாரங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.

11. முன்பகை அல்லது வெட்டி கௌரவத்தை மனதில் சுமந்து கொண்டு எந்த முஸ்லீம் அமைப்பிடமும் ஆதரவு கோராமல் இருக்க வேண்டாம்.


إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.

12. தேர்தலுக்குத் தேர்தல் வாக்காளர் பட்டியலிலிருந்து முஸ்லீம்களின் பெயர் மட்டும் திட்டமிட்டு பெருமளவில் நீக்கப்பட்டுவரும் அநியாயத்தை தடுக்கத் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய முன்வாருங்கள்.

13. நமது கண்காணிப்பையும் மீறி இறுதிப்பட்டியலிலிருந்து திட்டமிட்டு நீக்கப்படும் முஸ்லிம் வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் இப்போதே தேர்தல் ஆணையத்தை அணுகி மாற்று ஏற்பாடுகளை செய்துதர முன்வாருங்கள்.

தேர்தலில் போட்டியிடாத முஸ்லீம் அமைப்புகளுக்கான கோரிக்கைகள்:

1. மேலே காணும் ஆலோசணைகள் தேர்தலில் நீங்கள் நேரடியாக போட்டியிட விட்டாலும் பொதுவாக உங்களுக்கும் பொருந்தும்.

2. உங்கள் அமைப்புகள் மற்றும் முஸ்லீம்களின் கட்சிகளுக்கிடையே நிலவும் முன்னாள் மற்றும் இன்னாள் பிரச்சினைகளை தேர்தல் முடிகின்ற வரையாவது பரணில் தூக்கிப் போடுங்கள்.

3. முஸ்லீம்களின் கட்சிகள் சார்பாக களத்தில் நிற்கும் அனைத்து முஸ்லீம் வேட்பாளர்களை ஆதரிக்கவும் அவர்களுக்காக களம் காணவும் முன்வாருங்கள்.

4. முஸ்லீம் கட்சிகள் போட்டியிடாத தொகுதிகளில் நிற்கும் (பிஜேபி கூட்டணி மற்றும் காங்கிரஸ் தவிர்த்த) பிற கட்சி சார்புள்ள மற்றும் சுயேட்சை முஸ்லீம் வேட்பாளர்களையும் ஆதரிக்க முன்வாருங்கள்.

5. இரு முஸ்லீம் வேட்பாளர்கள் களத்தில் நின்றால் வெளிப்பார்வையில் தொழுகையாளிக்கு ஆதரவு கொடுங்கள் அல்லது தரத்தில் இருவரும் சமமென்றால் வெளிப்படையான தீய காரியங்களில் ஈடுபடாத முஸ்லீம் வேட்பாளரை ஆதரிப்போம் அதிலும் அவர்கள் சமமென்றால் முதலில் அறிவிக்கப்பட்டவருக்கே முன்னுரிமை கொடுப்போம். (இருவருக்கு மேல் நின்றாலும் இதே அளவுகோல் தான்).

وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ

2:45. மேலும் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும் நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

6. எந்த முஸ்லீம் கட்சி ஆதரவு கோரினாலும் சரி கோரவிட்டாலும் சரியே பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் வழங்கப்பட்ட அநீதியை நினைவில் கொண்டு உங்களின் ஆதரவையும் களப்பணியையும் வலிய வழங்கி உங்களின் பெருந்தன்மையையும் சமுதாய அக்கறையையும் வெளிப்படுத்த முன்வாருங்கள்.

لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

58:22. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில் (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.

7. முஸ்லீம்கள் போட்டியிடாத தொகுதிகளில் பாபரி மஸ்ஜித் மீதான கட்டப்பஞ்சாயத்திற்கெதிராக குறைந்தபட்ச குரல் கொடுத்த திருமாவளவன் கட்சியினர் போன்ற மற்றும் பலரையும் அடையாளம் கண்டு ஆதரிக்க வேண்டும்.

முஸ்லீம்களுக்கான வேண்டுகோள்கள்:

1. முஸ்லீம்களின் கட்சிகள் மற்றும் இயக்கங்களை நோக்கி நாம் விடுத்திருக்கும் மேற்காணும் கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்றுக் கொள்வீர்களேயானால் வாருங்கள் பூனைக்கு மணிகட்டி புதிய சரித்திரம் படைப்போம்.

2. இந்தத் தேர்தலில் தொகுதிவாரி ஆதரவை நடைமுறைபடுத்தி நம்மவர்களும் இந்து சமயத்தின் நல்லவர்களும் வெற்றிபெற நம்மால் முடிந்தவரை பாடுபடுவோம்.

3. நாம் அனைவருமே சமுதாயத்தின் அங்கம் எனவே> நமக்காக கட்சிகள் மற்றும் இயக்கங்கள் நடத்துவோர் தங்களின் கூற்றை நிரூபிக்க கடமைப்பட்டுள்ளனர் அதற்கு இத்தேர்தலை ஒரு வாய்ப்பாக வழங்குவோம்.

4. தாயகத்தில் வாழும் நாம் அனைவரும் இந்தத் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்கச் செல்ல வேண்டும்.

5. மேற்காணும் நமது கோரிக்கைகளை ஏற்று முடிந்தவரை ஒன்றாக இணைந்து வரும் முஸ்லீம் கட்சிகளுக்கு நமது வாக்குகளை கண்டிப்பாக வழங்கி நாமும் நமது ஆதரவில் உண்மையாளர் என நிரூபிப்போம்.

6. நமது கோரிக்கைகளில் காணும் நியாயத்தை ஏற்காமல் தேவையற்ற வியாக்கியானங்களை நம் மீது திணிக்க முயலும் கட்சிகளையும் இயக்கங்களையும் இத்தேர்தலில் புறக்கணிப்போம்.

7. தேர்தல் நேரத்தில் தரப்படும் அரசியல்கட்சிகளின் இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும் ஒட்டுப்போட வேண்டாம் மாறாக அனைத்து கட்சிகளும் நம்மிடம் மானாவாரியாக கொள்ளையடித்ததிலிருந்து கடுகளவில் திருப்பித் தருகிறார்கள் அதற்காக நீங்கள் நன்றி செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பொதுவான கோரிக்கைகள்:

1. சகோதரர்களே! மேற்காணும் கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் உங்களின் ஆலோசணைகளை தாருங்கள் மேலும் செம்மைப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

2. இந்த கோரிக்கைகளை உங்களால் முடிந்தவரை ஈமெயில்> குழுமங்கள்> வலைப்பூக்கள்> இணையதளம் என செய்தி ஊடகங்கள் அனைத்தின் வழியாகவும் தமிழக முஸ்லீம்கள் மத்தியிலும் இயக்கங்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லுங்கள்.

3. கட்சிகளும் இயக்கங்களும் சமுதாயத்தின் சார்பான இக்கோரிக்கைகளை செவிமடுக்க மறுத்தால் நாம் அனைவரும் இணையத்தின் மூலம் ஒன்று கூடுவோம் தேர்தல் முடியும் வரை இணைந்தே நல் ஆலோசணைகளை மக்களுக்கு தொடர்ந்து வழங்குவோம்.

4. ஒவ்வொரு கட்சியும் தொகுதிவாரி வேட்பாளர் பட்டியல் வெளியிடத் துவங்குவது முதல் இறுதியாக களத்தில் நிற்கும் வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும் வரை நாம் அனைவரும் 'ஒர் சமுதாயமாக' இணையத்தில் ஒன்றுகூடி ஒவ்வொரு தொகுதிக்கும் மேற்காணும் வழிகாட்டல்களின் அடிப்படையில் தொகுதிவாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்து மக்களுக்கு அறிவிப்போம்.

5. நமது கோரிக்கைகளை கட்சிகளும் இயக்கங்களும் புறந்தள்ளும் நிலை ஏற்பட்டால் அந்தந்த தொகுதியை சேர்ந்த சகோதரர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளித்து பரிசீலிப்போம்.

6. இந்த ஒற்றுமை முயற்சியின் வாயிலாக நம்மிடையே எற்படும் சகோதரத்துவ நெருக்கத்தை வைத்து இன்னொரு இயக்கம் கட்டும் முயற்சிகளில் நாம் இறங்காதிருக்கவும் பிற அமைப்புகளிடம் கட்சிகளிடமும் நாம் அடகு போய்விடாமல் இருக்கவும் ஆனால் சமுதாயத்தின் பொதுப்பிரச்சனைகளில் இதுபோல் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக ஒன்று கூடவும் நமது கருத்தை ஏற்ற கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் நல்லாதரவை வழங்கிடவும் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்தித்து திட சங்கற்பமேற்போம்.

7. இங்கே ஆலோசணையாக சொல்லப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களுக்கும் களத்தில் செயல்வடிவம் கொடுத்திட தமிழகத்திலேயே வாழும் தன்னலமற்ற சகோதரர்களாலான உங்களால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து உங்களின் பங்களிப்பை பெருமளவில் செய்திட வாருங்கள் என சமுதாயத்தின் சார்பாக அழைக்கின்றேன்.

فِي مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُّقْتَدِرٍ

54:55. உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் அண்மையில் இருப்பார்கள்.

எனும் மேற்காணும் கிடைத்தற்கரிய பரிசை நீங்களும் நானும் மறுமையில் பெற்றுக் கொள்வதற்காக கருத்துக்கள் இன்னும் வரும் உங்களிடமிருந்தும் கருத்துக்களை பெறுவோம் தமிழக தேர்தல் நெருங்கும் வேலையில் இறுதி வடிவம் தருவோம் இன்ஷா அல்லாஹ்.

இவண்

உங்களின் இஸ்லாமிய சகோதரன்

அதிரை அமீன்

2 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஜபருல்லாஹ், காலத்திற்கு தேவையான மிக நல்ல பதிவு. பொதுவாக மக்கள் பெரும்பாலோரின் ஆவல்தான் இப்பதிவில் உள்ளவை. சகோ.அமீன் அவற்றை எல்லாம் சொல்லி இருக்கிறார்.

இதை நம் இயக்க அமைப்புகள், கட்சிகள் உணரவேண்டும். இவர்கள்தான்... கொஞ்சம் அப்படியும் இப்படியும்... முடிவு எடுத்து விடுவார்கள். நம்மக்கள் அரசியல் விஷயத்தில் எப்போதுமே தெளிவானவர்கள்தான்...

Jafarullah Ismail சொன்னது…

சகோ.முஹம்மத் ஆஷிக்,
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

நம்மக்கள் அரசியல் விஷயத்தில் எப்போதுமே தெளிவானவர்கள்தான்...
ஆனால் இன்னும்? யாருக்கு? ஏன் வாக்களிக்கவேண்டும் என்ற தெளிவுபிறக்கவில்லையே?
இதுநாள் வரை சரியானவர்களையா தேர்ந்தெடுத்தோம்? இனியாவது தெளிவு வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
வருகைக்கு மகிழ்ச்சி சகோதரா!