Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், ஏப்ரல் 21

கார்ப்பரேட் வேலை...கம்பசூத்திரம் இல்லை!

'கார்ப்பரேட் வேலை...கம்பசூத்திரம் இல்லை!'



பெரிய பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேர இங்கு எல்லோருக்கும் விருப்பம்தான்! ஆனால், டிகிரியை முடித்துவிட்டு தங்களிடம் பணிபுரிய ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் ஃப்ரெஷர்களிடம் நிறுவனங்கள் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கின்றன? பிரபல ஆட்டோமொபைல், ஐ.டி., செல்போன் மற்றும் வங்கி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பேசுகிறார்கள் இங்கு...

சுமித் கர்பந்தா (ஜெனரல் மேனேஜர், கார்ப்பரேட் ஹெச்.ஆர்., ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்):


'தரமான கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறோம். குறிப்பாக, மெக்கானிக்கல் இன்ஜினீயர்களுக்கு டபுள் வெல்கம். அவர்களின் மதிப்பெண்கள் அவர்களுக்கான முதல்கட்ட தேர்வின் வாசலைத் திறந்துவிடுகின்றன. பின், ஆப்டிடியூட் டெஸ்ட், குரூப் டிஸ்கஷன், இறுதியாக ஹெச்.ஆர். இன்டர்வியூ... இதுதான் எங்களின் தேர்வு பிராசஸ். ஹெச்.ஆர் இன்டர்வியூவில், நாங்கள் முக்கியமான தகுதியாக கருதுகிற, ஒரு விஷயத்தை அதன் உள்ளார்ந்த புரிதலோடு அணுகும் 'அனலட்டிகல் திங்க்கிங்’கில் விண்ணப்பதாரர் எந்தளவுக்கு பூரணமாக இருக்கிறார் என்பதைக் கவனிப்போம். ஆங்கிலப் புலமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இப்படி இன்டர்வியூவை க்ளியர் செய்கிறவர்கள், ஆரம்பத்தில் டிரெயினியாக பணியமர்த்தப்பட்டு, ஒரு வருட காலத்துக்குப் பின் திறமையைப் பொறுத்து பணி நிரந்தரம் செய்யப்படுவார். ஃப்ரெஷர்கள் என்றால், ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் வரை சம்பளம் காத்திருக்கிறது.


இன்ஜினீயர்கள் மட்டுமல்ல... ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும் வாகன உற்பத்தி துறையில் அதிக தேவை இருப்பதால், டிப்ளமா படித்த ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், புரொடக்ஷன், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பட்டதாரிகளுக்கும் கதவு திறந்திருக்கிறது!''

டாக்டர் ஷரவணன் (ஜெனரல் மேனேஜர் அண்ட் ஹெட் ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன், 'சின்டல்’ ஐ.டி. மற்றும் பி.பீ.ஓ.):

''மதிப்பெண்களை மட்டுமே ஒரு மாணவனை மதிப்பீடு செய்வதற்கான தராசாக நாங்கள் பார்ப்பதில்லை. 'டீம் வொர்க்’ எனப்படும் குழு மனப்பான்மைக்கும் மதிப்பெண்ணுக்கு ஈடான முக்கியத்துவத்தை அளிக்கிறோம். காரணம், ஐ.டி. துறை என்பது குழுவாக வேலை செய்ய வேண்டிய ஒரு துறை. இங்கு தனியாளாக யாரும், எந்தச் சாதனைகளையும் செய்துவிட முடியாது. எனவே, அவர்களுடைய பயோடேட்டாவில் 'எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்’-ஆக ஃபுட்பால், பாஸ்கட் பால் போன்ற டீம் ஸ்போர்ட்ஸ்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், அவருக்கு மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றும் நுணுக்கமும், தலைமைப் பண்பும் இருக்கும் என்பதால், அந்த பயோடேட்டா தேர்வு செய்யப்படும்.

'இண்டிவிஜுவல் புராஜெக்ட்களை’விட 'குரூப் புராஜெக்ட்’ செய்பவர்களை ஆர்வத்துடன் அலசுகிறோம். ஒரு மாணவர் 90 சதவிகிதம் மதிப்பெண்களுடன் இருந்தாலும், அவரிடம் டீம் வொர்க் செய்யும் மனப்பான்மை இல்லாவிட்டால்... யோசிக்காமல் 'ரிஜெக்ட்’ செய்து விடுவோம்.''

டி.சவுந்தரராஜன் (தலைமை ஹெச்.ஆர்., நோக்கியா தொழிற்சாலை, சென்னை):

''டாப் ரேங்க் கல்லூரிகள்தான் என்றில்லாமல், அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனத்தில் படிப்பவர்களுக்கும் நாங்கள் வாய்ப்புகள் வழங்கத் தவறுவதில்லை. ஆனால், வெளியாட்கள் மூலமாகவோ 'கன்சல்டன்ஸி’கள் மூலமாகவோ ரெக்ரூட் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்ச தகுதியாக பத்தாவது தேர்வானவர்களில் தொடங்கி, அதற்கு மேல் படித்துள்ள அனைவரும் எங்களிடம் விண்ணப்பிக்கலாம். படிப்புக்கு ஏற்ப புரொடக்ஷன், டெக்னீஷியன், சூப்பர்வைசர், மேனேஜர் என எல்லா படிநிலைகளிலும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒரு வருடம் டிரெயினியாக பணியாற்றுவார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்களின் செயல்பாடுகளை சீனியர்கள் கூர்ந்து கவனித்து, அவர்களைத் திருத்துவார்கள். செய்யும் வேலையின் கிரேடைப் பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படும்!''

பி.டி.குப்புசாமி (எம்.டி., சி.இ.ஓ., கரூர் வைஸ்யா பேங்க், சென்னை):

''தரமான கல்லூரி மாணவர்களுக்கே நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பொதுவாக வங்கியைப் பொறுத்தவரை கிளார்க் மற்றும் புரபேஷனரி ஆபீஸர் பதவிகளுக்கான தேர்வுகளை கன்சல்டன்ஸி மூலம் நடத்திவிடுவோம். அதில் தேர்வானவர்கள் ஹெச்.ஆர் இன்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக கற்றுக் கொள்கிற ஆர்வம், வங்கியை வளப்படுத்துவதற்கான ஐடியாக்கள், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்வது போன்ற எண்ணங்கள், தானாக எந்த ஒரு செயலையும் முன் வந்து எடுத்து செய்கின்ற லீடர்ஷிப் குவாலிட்டி, வளர்ந்து வரும் கார்ப்பரேட் கோல்களை பூர்த்தி செய்யக்கூடிய சிந்தனைகள், வங்கிக்கு உண்மையாக இருப்பது போன்றவை எல்லாம் விண்ணப்பதாரர்களிடம் எதிர்பார்க்கப்படும் தகுதிகள்.

எழுத்து தேர்வு, இன்டர்வியூ மூலம் கிளார்க் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், இரண்டு மாத டிரெயினிங் காலம், ஆறு மாதம் புரபேஷன் காலத்துக்குப் பிறகு கன்ஃபார்ம் செய்யப்படுவார்கள்.

அடுத்ததாக, புரபேஷனரி ஆபீஸர்களைப் பொறுத்தவரை ஆறு மாத டிரெயினிங், அதற்கு அடுத்த ஆறு மாத புரபேஷன் காலத்துக்குப் பின் கன்ஃபார்ம் செய்யப்படுவார்கள். 'ஆபீஸர்கள்’ எனப்படும் 'ஸ்கேல் ஒன்’ பதவியை வகிப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயில் சம்பளம் தொடங்கும்.

அக்கவுன்டன்ஸி, ஃபைனான்ஸ் மற்றும் டெக்னாலஜி படித்த எல்லா மாணவ மாணவிகளும் வங்கி பதவிகளுக்கு தகுதியானவர்களே!''

என்ன... இன்டர்வியூ இருள்கள் விலகுகின்றனவா!


நன்றி: அவள் விகடன் 11-மார்ச் -2011