Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், ஏப்ரல் 26

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !




நாம் அடிக்கடி செய்திடும் ஒரு "நல்ல' காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதாகும். குளியலறைகளுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கு நாம் வைத்திடும் இடம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். பின்னர் இருப்பதை மறந்து வேறு ஒன்றை இழுக்கையில் போனை தண்ணீர் உள்ள வாளியில் தள்ளிவிடுவோம். அல்லது அழைப்பு வருகையில், வைப்ரேஷன் ஏற்பட்டு தானாக, போன் தண்ணீரில் விழலாம்.
சில வேளைகளில் நம் அன்புச் செல்வங்களான குழந்தைகள், மொபைல் போனை எடுத்து, தண்ணீரில் போட்டு விளையாடலாம்.
இது போன்ற வேளைகளில் என்ன செய்திட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.

1.முதலாவதாக, மொபைல் போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ, அவற்றை எல்லாம் பிரித்து எடுத்திடவும். மொபைல் கவர், பேட்டரி கவர், பேட்டரி, சிம் கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும்.

2. அடுத்து, மொபைல் போனில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ, அங்கு சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து, நீரை உறிஞ்சி எடுக்கவும். போனை முழுவதுமாக உலரச் செய்திடவும்.

3. ஹேர் ட்ரையர் ஒன்று இருந்தால், அதனை எடுத்து, மொபைல் போன் மீதாகப் பயன்படுத்தி, ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக, பேட்டரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்கவும். இவ்வாறு உலர வைக்கையில், ஹேர் ட்ரையரை, மொபைல் போனுக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது மொபைல் போனின் சில பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து, 20 முதல் 30 நிமிடம் வரை இவ்வாறு உலரவைக்கும் வேலையை மேற்கொள்ளவும்.


இந்த வேலையை மேற்கொள்கையில், மொபைல் போனை வெவ்வேறு நிலையில் வைத்து உலர வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி உலரும்.

இதே போல பேட்டரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும்.

நன்றாக உலர்ந்த பின்னர், காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர், பேட்டரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக இயங்கவில்லை எனில், இன்னும் சில மணி நேரம் காத்திருந்து, ஈரம் தானாக உலரும் வரைப் பொறுத்திருக்கவும். அதன் பின்னரும் இயங்கவில்லை எனில், மொபைல் போன் சரி செய்திடும் பணியாளரிடம் சென்று, நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி, நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும்.

Source: http://mytamilpeople.blogspot.com

1 comments:

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பகிர்வுக்கு நன்றி சகோ

இப்போது வட்டர் ப்ரூப் மொபைல் வந்து விட்டது சகோ