Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, செப்டம்பர் 3

சிகரெட் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமைகள்


சிகரெட் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமைகள்


*சிகரெட் மற்றும் புகையிலையில் 4,000 வகையான வேதிப்பொருள்கள் உள்ளன
* இதில் 400 வகை உயிரை பறிக்கவல்லது.
* வாய் துர்நாற்றம் ஏற்படுதல்.
* பற்களில் காரை மற்றும் கரைகள் ஏற்படுதல்.
* பற்களில் எனாமல் சிதைவு ஏற்படுவதால் பற்களில் பற்சொத்தைகள் உண்டாகின்றன.
* சிகரெட் மற்றும் புகையிலை தொடர்ந்து பிடிப்பதினால் வாயினுள் ஈறு, உதடுகள் மற்றும் கன்னப்பகுதிகளில் வாய் புற்றுநோய் ஏற்படுகின்றன.
* வாய் புற்றுநோயினால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானது.
* இவைகளினால் நுரையீரல் புற்றுநோய்களும் ஏற்படுகின்றன.
* வாய்புற்றுநோயினால் உயிர் இழப்போர் எண்ணிக்கை நமது மாநிலத்தில் அதிகம்.
THE BEST TIME TO QUIT SMOKING IS NOW
SMOKING IS SUICIDE QUIT TODAY

விளைவுகளை தவிர்க்க சில வழிகள்
* புகைபிடிக்க மற்றும் புகையிலை உண்ண நினைக்கும் போது தண்ணீர் குடிப்பது அல்லது பபுள்காம் மற்றும் கேரட் போன்ற பொருட்களை உண்பதினால் புகை பிடிக்கும் எண்ணத்தை மாற்றலாம்.
* நாம் செய்யும் வேலையை மிகவும் ஆர்வத்துடன் திறமையுடன் செய்யும்பொழுது புகை பிடிப்பதில் இருந்து நம் எண்ணங்களை மாற்றலாம்.
* புகைபிடிக்கும் உங்கள் நண்பர்களிடம் இருந்து விலகி இருக்கவும் ( புகை பிடிக்கும் நேரங்களில் மட்டும் )
* தகுந்த மருத்துவர்களிடம் காண்பித்து ஆலோசனையும் பெற்று இதனை தவிர்க்கலாம்.
பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுவோர்
இந்திய பல் மருத்துவர்கள் சங்கம்,
மதுரை கிளை.
தவிர்ப்போம் புகையிலை ! நீட்டிப்போம் ஆயுளை !!