Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், செப்டம்பர் 7

பெருநாள் தொழுகை

பெருநாள் தொழுகை
ஷவ்வால் பிறை ஒன்றிலும், துல்ஹஜ் பிறை பத்திலும் ஆக இரண்டு பெருநாள் தொழுகைகளை மார்க்கம் கடமையாக ஆக்கியுள்ளது. இவ்விரண்டும் மிக அவசியமாக நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகையாகும். இவ்விரண்டு பெருநாளும் இஸ்லாமிய மக்களுக்கு சந்தோஷமான நாட்களாகும்.
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு உண்ணாமல் நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள். ஹஜ்ஜ‚ப் பெருநாளில் தொழுகைக்கு முன் உண்ணமாட்டார்கள். அறிவிப்பவர் : புரைதா (ர ) நூல் : திர்மிதி 497

நோன்புப் பெருநாள் அன்று நபி (ஸல்) அவர்கள் காலை உணவாக பேரித்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள். ஹஜ்ஜ‚ப் பெருநாள் அன்று தொழுதுவிட்டு வந்த பின்னரே குர்பானி இறைச்சியி ருந்து உண்பார்கள்.அறிவிப்பவர் : அனஸ் (ர ) நூல் : புகாரி 953

பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.பெருநாள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ர ), நூல் : புகாரி

பெருநாள் தொழுகைக்கு பாங்கோ, இகாமத்தோ முன்பின் சுன்னத்தோ கிடையாது. நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒருமுறை அல்ல இருமுறை அல்ல பலமுறை பெருநாள் தொழுகை தொழுதிருக்கிறேன். அதில் அவர்கள் பாங்கு, இகாமத் கூறியதில்லை. அறிவிப்பவர் : சமுரா (ர ) நூல் : திர்மிதி 489

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை. அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ர ), நூல்கள் : புகாரீ (1431)

நபிவழியைப் பின்பற்றுவோம் சுவர்க்கம் செல்வோம்