Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், செப்டம்பர் 30

திருடனாய் பார்த்து

உலக நாடுகளில் உள்ள ஊழல் பெருத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 84 வது இடமாம். நல்லவேளை 84 என்று சந்தோஷப்படுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இது மிகவும் அதிகமாக ஊழல் மிகுந்த நாடு என்பதற்கான தகுதி. மொத்தம் வரிசைப் படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா இந்த இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆய்வு பொதுத் துறைகளை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும். இந்த தர வரிசையினை Transperency International என்ற சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம் மேலும் கூறியதாவது, "மக்கள் பணத்திலிருந்து கொள்ளையடிக்கப்படும் பணங்களை பதுக்கிக்கொள்ள சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் அனுமதிக்க கூடாது என்றும், வங்கி கணக்கில் ரகசியம் தேவையில்லை" என்றும் கூறியுள்ளது.

இந்த தரவரிசையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள நாடுகள் சோமாலியா, ஆப்கானிஸ்தான், மியான்மார், சூடான், ஈராக் ஆகியனவாகும். ஊழலிருந்து விடுபட்டு சுத்தமான நாடு என்று பேரெடுத்த நாடுகளில் நியூசிலாந்து, டென்மார்க் மற்றும் சிங்கப்பூர் ஆகியன அடங்கும்.

இந்த வருடம் வளர்ந்து வரும் நாடுகளில் செர்பியா, புர்கினா, பெரு, கானா ஆகிய நாடுகள் இந்தியாவை விட சிறந்த நாடுகள் என்ற நற் பெயரை பெற்றிருக்கின்றன. இந்த நாடுகளுடைய தரவரிசையாவது, அந்நாடுகளின் வரிசைப்படி 83,79,75,69 ஆகும்.
சீன இந்தியாவை விட சற்று முன்னுக்கு நிற்கிறது. அதாவது இந்தியாவை விட ஊழலில் சற்று குறைந்த நாடாக இருக்கின்றது.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் நேபாளத்திற்கு 139 வது இடமும், பாகிஸ்தான் வங்காளதேசத்துடன் இணைந்து 139 வது இடமும், இலங்கைக்கு 97 வது இடமும் கிடைத்துள்ளது.

இந்த 180 நாடுகளில் பாதிக்கும் மேலான நாடுகள் பத்து மதிப்பெண்ணிற்கு மூன்று மதிப்பெண்ணிற்கும் குறைவாக பெற்று மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் என்ற அவப்பெயரை பெற்றுள்ளன.

இதன் மூலம் உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் கறை படிந்த கைகளையே வைத்திருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. இந்த தர வரிசையினை தயார் செய்ய 13 வெவ்வேறு நிபுணர்கள் மற்றும் வணிக ஆய்வுகளை பயன்படுத்தியிருக்கிறது இந்த நிறுவனம்.

இந்த ஆய்வு மூலம், Transperency International நிறுவனம், "ஊழலுக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இதனால் வறுமைக்கெதிரான சர்வதேச யுத்தத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்" என்று கூறுகிறது.

நன்றி,
டைம்ஸ் ஆப் இந்தியா.