ரமழான் ஆன்மிக பாசறை
உலக வாழ்வு அதன் முடிவை நோக்கி மிக வேகமாக ஓடிக்கொண்டி ருக்கிறது. எமது வாழ்நாளும் ஒவ்வொரு நிமிடமும் மறுமையை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. நாம் தினமும் அல்லாஹ் வுடைய நிஃமத்துக்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இதில் எவ்வித குறைவும் ஏற்படுவதில்லை.
ஆனால், எமது அன்றாட வாழ்வில் அல்லாஹ்வுக்காக நாம் செலவிடுகின்ற நேர அளவு எவ்வளவு? அதேபோன்று எங்களையும் படைத்து இந்தப் பிரபஞ்சத்தையும் எங்களுக்காய் வசப்படுத்தித் தந்த அல்லாஹ்வின் நிலை தான் என்ன? எங்களைவிடவும் பன்மடங்கு எதிர்பார்க்கும் தகுதி அவனுக்குண்டு. ஆனாலும் அவனு டைய ரஹ்மத்தின் வெளிப்பாட்டின் காரணமாக அவனை நிராகரிப்போர், அவனை மறுப்போர் அவனுக்கு நயவஞ்சகத்தனமாக நடப்போர் என அவனுக்கு விரோதமான பலருக்கும் அவனது அருள் இருக்கிறது.
அவனது கோபத்திற்குள்ளானவர்களை அவன் கண்டிக்கிறான். ஆனாலும் அவனது ரஹ்மத்தின் வெளிப்பாடாக யாரெல்லாம் மன்னிப்பு கோருகின்றார்களோ அவர்களை அவன் மன்னித்து விடுகிறான். அந்த நரகத்திலிருந்து விடுதலை பெற துடிப்போருக்கு அவன் விடுதலை கொடுக்கிறான்.
இப்படியான இந்த சிந்தனைகளோடு எம்மை நெருங்கி வந்துள்ள ரமழானுக்குள் நாம் நுழைவோம். அதிஷ்டவசமாக ஒரு மனிதனுக்கு அவன் செய்கின்ற எல்லா நல்ல விடயங்களுக்குமான கூலி எழுபது மடங்குவரை உயர்த்தப்படுகின்றது. சாதாரணமாக எங்கள் வாழ்வில் அடைந்து கொள்ள முடியாத ஆயிரம் மாதங்களை விட சிறந்த (லைலதுல் கத்ர்) என்ற இரவை ஒரே இரவில் பெற்றுக்கொள்ள எமக்கு முடிகின்றது.
இப்படியான நல்ல பல விடயங்களை உள்ளடக்கிய ரமழான் மாதம் இன்று எம்மை வந்தடைந்துள்ளது. இந்த மாதத்தை நாம் நல்ல முறையில் வரவேற்று, நாம் தமது விருப்பங்கள் அனைத்தையும் தியாகம் செய்து, இதுதான் எமது இறுதி ரமழான் என நினைத்து மனோ இச்சைகளுக்கு அடிபணியாமல் இரவு – பகல் முழுவதும் இபாதத்களிலும் ஏனைய நபிலான சுன்னத்தான வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு நன்மைகள் பூத்துக் குலுங்கும் இந்த ரமழானின் பலன்களை அடையப் பெற்ற தக்வாவுடைய நல்லடியார்கள் கூட்டத்தில் அல்லாஹ் எம் அனைவரையும் சேர்த்து வைப்பானாக.
http://ipcblogger.net/mjabir/?p=702
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக