Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

ஞாயிறு, ஆகஸ்ட் 21

விருத்த சேதனம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?

முந்தைய பதிவில் பெயர்சொல்லா நண்பர் எழுதிய கருத்துக்காக இந்த பதிவு.
விருத்த சேதனம் அல்லது ஆண் விருத்த சேதனம் எனப்படுவது, ஆண்குறியின் முன் தோலை நீக்கும் மத சடங்கு அல்லது அறுவை சிகிச்சையாகும். பெரும்பாலும் மத மற்றும் கலாச்சார ரீதியிலும், சில இடங்களில் சுகாதார நோக்கிலும் இவை செய்யப் படுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 30% ஆண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்படுகின்றது.
வட கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடிகளிடம்தான் முதன் முதலில் விருத்த சேதனம் செய்யும் முறை
நடைமுறைக்கு வந்தது.
எகிப்தில் காணப்படும் பழங்கால குகை ஓவியங்களில் இருந்து இதனை அறியலாம்.
விருத்த சேதனம் எழுதப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே வட கிழக்கு ஆப்பிரிக்க மக்களிடம் நடைமுறையில் இருந்தது
. இல்லற வாழ்வின் சுகத்தை விட்டு விலகி, கடவுளிடன் தங்களை முழுமையாக அர்ப்பணிப்பதன் அடையாளமாக இந்தச் சடங்கு நடத்தப்பட்டது. மேலும் விருத்த சேதனம் செய்யப்படுவது ஒரு ஆணின் மன இச்சையை கட்டுப்படுத்துவதாகவும், அதன் மூலம் அவனால் பாவங்களை விட்டு விலக முடியும் எனவும் அந்த மக்களால் நம்பப்பட்டது.
இதன் பிறகான காலக்கட்டத்தில் யூதர்களால் விருத்த சேதனத்துக்கு சமய அடையாளம் கொடுக்கப்பட்டது. மித்வா அசா என்ற பெயரில் யூதர்களால் விருத்த சேதனம் அழைக்கப்படுகின்றது. ஏறக்குறைய கிமு 600 முதல் விருத்த சேதனம் செய்து கொள்ளும் பழக்கம் யூதர்களிடம் உள்ளதாக நம்பப்படுகின்றது. கடவுளின் கட்டளைப்படி ஆபிரகாமும் அவரின் புதல்வர்களும் விருத்த சேதனம் செய்து கொண்டதாக ஆதியாகமம் கூறுகின்றது
இதன் படி அனைத்து குழந்தைகளுக்கும் விருத்த சேதனம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதி கிருத்துவத்திலும் விருத்த சேதனம் நடைமுறைப்படுத்தப் பட்டது.
கிருத்துவத்தை பொருத்தவரை தொடக்கத்தில் அது தன்னை யூத மதத்தின் ஒரு சீர்திருத்தப் பிரிவாகவே கருதியது. எனவே விருத்த சேதனம் செய்து கொள்ளும் பழக்கம் ஆதி கிருத்துவர்களிடம் இருந்தது.
இயேசுவுக்கும் யூத மரபு படி பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம் செய்யப்பட்டது.
இருப்பினும் இயேசுவின் மரனத்திற்க்குப் பின் கிருத்துவம் தன்னிடம் உள்ள யூதத்தின் அடையாளங்களை விலக்குவதின் ஒரு பகுதியாக விருத்த சேதனத்தை கைவிட்டது.
ஏறேக்குறைய கிபி 50ல் செருசலேம் நகரில் கூடிய முதலாவது கிருத்துவ ஆலய மன்றக் கூட்டம் (The first Christian Church Council in Jerusalem) இதனை உறுதி செய்தது. பிற்பாடு அதிக அளவில் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்ட ரோமர்களிடம் இருந்த விருத்த சேதனத்தின் மீதான வெறுப்பும், முதலாம் பாப்பரசர் பேதுருவின் எதிர் அறிக்கையும் விருத்த சேதனத்தை கிருத்துவர்களிடம் இருந்து இல்லாமல் செய்தது.
இருப்பினும் இன்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சில கிழக்கு மரபு வழி காப்திக், எத்தியோப்பியன் மற்றும் எறித்தீன் ஆகிய பிரிவுகளில் விருத்த சேதனம் வழமையான ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக கென்யாவில் உள்ள நோமியா பிரிவு போன்றவை, தனது உறுப்பாண்மைக்கு விருத்த சேதனத்தை கட்டாயமாக்கி உள்ளது.
பிற்பட்ட காலத்தில் இசுலாமியர்களின் எழுச்சி நடு கிழக்கு நாடுகள் முழுவதிலும் விருத்த சேதனத்தை அறிமுகப்படுத்தியது.
முறையே 1865, 1870 களில் யூதர்களின் மூலமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில்
விருத்த சேதனம் அறிமுகமாகியது.
இதனைப் பற்றி ஆராய்ந்த நதானியேல் யாக்போர்ட் (Nathaniel heckford), லீவிசு சைர் (Lewis A. Sayre), மோசசு (M.J. Moses) போன்றவர்கள் விருத்த சேதனம் வலிப்பு, கனவு ஒழுக்கு (சொப்ன லிகதம்), கண் பார்வைக் குறைபாடு ஆகியவற்றைத் தடுப்பதோடு சுய இன்ப இச்சையையும் குறைப்பதாக அறிவித்தனர். முறையான ஆதாரங்கள் இல்லாத போதிலும், இது போன்ற கருத்துக்களைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை விருத்த சேதனம் அமெரிக்காவில் அதிக அளவில் நடைமுறைப்படுத்தப் பட்டது. இதன் பிறகு 1971ல் அமெரிக்க குழந்தை மருத்துவக் கழகம் (American Academy of Pediatrics), விருத்த சேதனத்தால் குழந்தைகளுக்கு எந்த விதமான நன்மைகளும் கிடைக்காது
என அறிவித்தது. இதன் பிறகே விருத்த சேதனம் அமெரிக்கர்களிடம் செல்வாக்கை இழந்தது.
இதே நேரத்தில் இரண்டாம் உலகப் போர் மற்றும் கொரியப் போர் ஆகியவற்றின் மூலம் அமெரிக்க போர் வீரர்களிடம் இருந்து விருத்த சேதன முறை தென் கொரிய மக்களிடமும் பிரபலமானது.

இஸ்லாம் இதை இயற்கையாக செய்யவேண்டிய நல்ல செயல் என்றே குறிக்கின்றது
.உலகம் முழுவதும் விருத்த சேதனம் செய்து கொள்ளும் ஆண்களில் 68% பேர் இசுலாமியர்கள் ஆவர்.

விருத்த சேதனம் பால்வினை நோய்கள், ஆண்குறி புற்றுநோய், பெண் துனையின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகின்றது.
எயிட்சு தாக்கப்படுவதர்க்கான இடறும் இதன் மூலம் சிறிது குறைவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
சுகாதார நோக்கோடு செய்யப்படும் குழந்தை விருத்த சேதனங்களுக்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இவ்வகையான எதிர்ப்புகள் அதிக அளவில் உள்ளன. குழந்தைகளுக்கு செய்யப்படும் விருத்த சேதனமும் ஒரு வகையான மனித உரிமை மீறலே என்பது இவர்களின் வாதம். பிரிட்டிசு மருத்துவக் கழகம் (British Medical Association) மற்றும் ராயல் அசுத்ரேலியன் மருத்துவக் கல்லூரி (Royal Australasian College of Physicians) போன்றவையும் இவர்களை ஆதரிக்கின்றன. குழந்தைக்கு தேவையானதை பெற்றோர்களே முடிவு செய்ய முடியும் என்ற போதிலும், அவர்களின் மீதான உரிமைகள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அளவிலே இருக்க வேண்டும் என்பது இவர்களின் வாதம் ஆகும். இருப்பினும் பெரும்பாலான மருத்துவக் கழகங்கள் குழந்தை விருத்த சேதன முறையை ஆதரிக்கவே செய்கின்றன.
இயற்கையான ஒரு மரபு வழி செயலை இஸ்லாமியர்களும் பின்பற்றுகின்றார்கள். அதிக அளவில் முஸ்லிம்கள் அதை கடைபிடிப்பதால் சுகாதார அணுகுமுறையை கூட எதிர்ப்பது சரியா?

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்கிறோம் என்ற கருத்திற்கு......

sources from -
New Data on Male Circumcision and HIV Prevention: Policy and Programme Implications. World Health Organization. March 28, 2007. Retrieved 2007-08-13.
"Male Circumcision and Risk for HIV Transmission and Other Health Conditions: Implications for the United States". Centers for Disease Control and Prevention. 2008.
Robert Darby (2003). "Medical history and medical practice: persistent myths about the foreskin". Medical Journal of Australia 178(4): 178–9.
"Policy Statement On Circumcision" (PDF). Royal Australasian College of Physicians. September 2004.
Warren J, Bigelow J. The case against circumcision. British Journal of Sexual Medicine, September/October 1994:6-8.