இந்த ஆண்டு 1500 பேருக்கு வேலை வாய்ப்பு: இண்டிகோ விமான நிறுவனம்
2011 ஆம் வருடத்தில் 1200 முதல் 1500 பேருக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இண்டிகோ அறிவித்துள்ளது.இவர்களில் 400 - 500 பேர் விமான உள்சேவை பணியாளர்கள் என்றும், 200 - 300 பேர் விமானம் இயக்கும் வளவர் என்றும் மற்றவர்கள் பொறியாளர்களாகவும், நிலையக் கட்டுப்பாட்டுப் பணியாளர்களாகவும் இருக்கும் என்று இவ்விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த அளவு பணியாளர் சேர்க்கை மூலம் நிறுவனத்தின் பணியாளர் தொகை 5,000 ஆக உயரும் என்றார் நிறுவனத் தலைவர் ஆதித்ய கோஷ். கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய விமான வடிவமைப்பு நிறுவனமான "ஏர் பஸ் நிறுவனத்திடம் 180 எ-320 ரக விமானங்களுக்கு 15.6 அமெரிக்க டாலர் மதிப்பில் வியாபாரம் செய்திருந்தது இண்டிகோ. இதன் மூலம் விமான சேவை உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் அது ஈர்த்திருந்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு 100 ஏர்பஸ் விமானங்களை, சுமார் ஆறு பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இண்டிகோ வாங்கியிருந்ததும் குறிக்கத்தக்கது. நிறுவனம் தொடங்கி ஐந்து வருடம் நிறைவடைவதால், இவ்வருட மத்தியிலிருந்து, சர்வதேச விமான சேவைகளுக்கு அது மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதும் நோக்கத்தக்கது.
நன்றி: இந்நேரம்.காம் செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக