இப்படிபட்ட எம் எல் ஏ க்களை கௌரவிக்கவில்லையெனில்
அந்த சமூகம் சீர்ழிந்து சின்னாபின்னப்பட்டுத்தான் போகும்.
ஃகாயிதே மில்லத் மர்ஹூம் இஸ்மாயீல் ஸாஹிபும் இத்தகைய எளிமையாளராக
இருந்தார் என அவரது நண்பர்கள் கூற கேட்டுள்ளேன்.
மர்ஹூம் இப்ராஹீம் சுலைமான் சேட் சாஹிபின் சட்டையில் ஒட்டு போடப்பட்டு
இருந்ததை பலரும் பார்த்துள்ளார்கள்.
ஒருமுறை அகில இந்திய முஸ்லிம் பர்ஸனல் லா போர்டின் மிக முக்கிய கூட்டத்தில்
கலந்து கொண்டு இரவு 11 மணிக்கு அந்த டெல்லியின் கடும் குளிரில் taxi யை
எதிர் பார்ர்த்து காத்திருந்தார் (அப்போது அவர் Sitting MP) என்னும் தகவலை
டெல்லியிலிருந்து வெளிவரும் "ரேடியன்ஸ்" (RADIANCE) வார இதழின் ஆசிரியர்
மௌலானா இஃஜாஸ் அஹ்மத் அஸ்லம் ஸாஹிப் விவரிக்க நான் கேட்டு இருக்கிறேன்.
முஸ்லிம் அரசியல் வாதி இப்படித்தான் இருப்பார்கள் என்பதற்க்கு இவர்கள் ஒரு சான்று.
இனி வர இருக்கும் சட்ட,பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் இதே
நடைமுறைகளை பின்பற்றுவார்களா என்பதை காலம்தான் கூர்ந்த்து
கவனித்து பதிவு செய்யும்.
முன்பு திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த
சாதிக் பாட்சா அவர்களும் மிகவும் எளிமையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவர் இறக்கும்வரை சொந்த வீடு கூட இல்லாதவராகவும் இருந்தார்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கட்சியில் அவருக்கு ஒதுக்கியிருந்த வீட்டில்தான்
இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஹிந்துகள் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ. ஆகிய முகம்மது இஸ்மாயில் சாகிப்
இன்றுவரை சொந்த வீடு கிடையாது ஒரு மகள் மட்டும்தான் உண்டு மகளும்
விதவை ஆகி மறுமணம் முடித்துகொடுக்க வசதி இல்லாமல் வரும் பென்சன்
தொகையில் மனைவியின் மருத்துவ சொலவை மட்டுமே பார்க்கமுடியும்
என்கின்ற நிலைமையில் தக்கலையில் வாசித்து வறுகிறார்.
இந்திரா காந்தி கவர்நர் பதவிதருகிறேன் என்று கூறிய போதும் கட்சி மாறாமல்
இப்போதும் மதசாற்பட்டஜனதா தளத்தில் தமிழ்நாடு தலைவாராக உள்ளார்.
மெயில் அனுப்பியவர்கள்:
Tamil Muslim Brothers;
AbuFaaiz, Zafarulla Rahmani, H.K.Nasar & YassarArafat
2 comments:
அந்தப் புகை வண்டிச் சம்பவம் ஏதோ நேற்று நடந்தது போல இருக்கிறது
ஆனால் மூளையில் கல்வெட்டு போல பதிந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன.
ஏப்ரல் 2006 இல், ஒரு வெள்ளிக் கிழமை அன்று எழும்பூரில் இருந்து நாகர்கோயில் செல்ல கன்யாகுமரி அதி விரைவு புகை வண்டியில் இரண்டாம் படுக்கை வகுப்பு பெட்டியில் ஏறி அமர்ந்தேன்.
எனக்கு எதிரே ஒரு ஆணும் , பெண்ணும் அமர்ந்து இருந்தார்கள். நாங்கள் மூன்று பேர் தான் அந்த கம்பார்த்மேன்ட்டில். அவர் என்னிடம் எங்கே போகிறீர்கள் என்ன பெயர் என்ன வேலை என்றார். நான் அவரிடம் பெயரை மட்டும் கேட்டு விட்டு உரையாடலை முடித்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து அவரிடம் இருந்த தமிழ் முரசு செய்தி தாளை படிக்க கேட்டேன்.
செய்தித் தாளின் முதல் பக்கம் பார்த்ததும் எனக்கு ஆச்சர்யம். அதில் மார்க்சிய கம்ம்யுநிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் கலைஞரை சந்தித்து ஆசி பெற்ற புகைப்படம். அந்தப் புகைப்படத்தில் இருந்தவர்களில் என் எதிரே இருந்த இவர்கள் இருவரும் புகைப்படம்
உடனே நாளிதழை கீழே வைத்து விட்டு அவரிடம் உரையாடத் தொடங்கினேன்.அவர் சொன்னார் என் பெயர் ஜான் ஜோசப் விளவங்கோடு தொகுதி வேட்பாளர், இவர்கள் பெயர் லீமா ரோஸ் திருவட்டார் வேட்பாளர்.
பின்பு மூவரும் பல தொகுதிகளின் வெற்றி வாய்ப்புக்கள் அன்றைய அரசியல் ( நூர் இஸ்மாயில், மணி, பச்சைமால், ரத்தினராஜ், குமாரதாஸ், ஆஸ்டின்) குறித்து பேசினோம். இடை இடையே லீமா ரோஸ் தன் பெண்ணிற்கு தொலை பேசி செய்து நாளை கணக்கு பரீட்சை அதில் லாக்ரிதம் டேபிள் கேட்பார்கள் எனவே அதை நன்கு படி என்றார். ஜான் ஜோசப்போ பல நேரம் மிச்சேத கால்ஸ். ரயிலில் வந்த சப்பாத்தி, இட்லி உணவு களையே வாங்கி சாப்பிட்டனர்.
இறங்கும் பொது ஜான் ஜோசப் அவர்களின் தொலைபேசி வாங்கி கொண்டேன். ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு அறிவிக்கும் நாளில் அவர் வெற்றி என்றதும் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து சொன்னேன். சார் இப்போதுதான் எங்கள் நகர செயலாளர் வாழ்த்து சொன்னார், இரண்டாம் வாழ்த்து சொல்பவர் நீங்கள் என்றார்
சகோ. ராம்ஜி_யாஹு, உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
தங்கள் வருகைக்கும் மேலதிக தகவலுக்கும் நன்றி.
கருத்துரையிடுக