Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், ஆகஸ்ட் 23

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?

இஸ்லாத்தின் மீது மிக அதிக அளவில் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளில்ஒன்று , முஸ்லிம்கள் அதிக திருமணம் செய்கிறார்கள் ! நான்கு பெண்களை மனமுடிக்கிறார்கள் . ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது , அதுதான் நமது கலாசாரம் என்றெல்லாம் விமர்சிக்கின்றார்கள் . அதிலும் உச்சகட்டமாக நம்முடைய முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அன்பர் ,பலதார மனம்,எளிய விவாகரத்து போன்றவற்றால் எயிட்ஸ் அதிக அளவில் முஸ்லிம்களை தான் தாக்கும் அபாயம் இருப்பதாக எழுதியும் இருந்தார் . நமக்கு தெரிந்த சில விசயங்கள் ......
ஒருவனுக்கு ஒருத்தி ...
பொதுவாக உலகில் ஆண்,பெண் பிறப்பு விகிதம் சமமாகத்தான் உள்ளது . எனினும் பிறக்கும் ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள்தான் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறக்கின்றன .
ஆண் குழந்தைகள் இறப்பு விகிதம் பெண் குழந்தைகளை விட அதிகமாகின்றது .ஆண் இனமானது அதிக அளவில் போர்,விபத்து,போன்றவற்றினாலும் பெருமளவு இறப்பை சந்திக்கின்றது .இது உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரம். உலகளவில் தற்போது ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர் .
உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.
அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது.
அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும்.
ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும்.

மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாகக் கலைக்கப்படுவதும் பிறந்து விட்ட குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுக்கொலை செய்ய விடுவதுமே இதற்கு க் காரணம் ஆகும். இந்தியாவில் மாத்திரம் ஒரு வருடத்திற்குப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் - பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன அதாவது அழிக்கப் படுகின்றன. இந்தக் கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களின் எண்ணிக்கையைவிட ப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்களுக்குத் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்). அதுபோல, பிரிட்டனில் 40 லட்சம் பெண்களுக்கும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்களுக்கும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்களுக்கும் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும்.

திருமணமே ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும் கைவிடப்படுவதும் மலேசிய இந்துச் சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். ( மலேசிய நண்பன் நாளிதழ் - 05.01.2002)

1948ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகில உலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரச்னை பற்றிப் பலவாறு விவாதிக்கப்பட்டும் இறுதிவரை எந்தத் தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதார மணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும், இதைக் கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர், பலதார மணம் ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக, மாநாட்டின் இறுதித் தீர்மானங்களில் ஒன்றாகப் பலதார மணமும் சேர்க்கப்பட்டது.

திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் , நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் பெண்களின் வாழ்க்கை காலத்தைவிடக் குறைவாகவே இருப்பதால் எந்த காலகட்டத்திலும் மனைவியை இழந்த கணவர்களை விட, கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

சராசரியாகப் பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு, ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகப் பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.
ஆக ஆண் பெண் எண்ணிக்கை விகிதம் ஏற்றதாழ்வுடன் இருந்தே வருகின்றது . திருமண வாழ்வு என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையில் அமைத்து கொள்வது முடியாதது என்பதற்கு இதுவும் ஒரு காரணம் .
அடுத்து பலதாரமணம் -அனைத்து மதங்களிலும் ஒரு பார்வை . இன்ஷாஅல்லாஹ்



10 comments:

Mohamed Faaique சொன்னது…

மிகச் சிறந்ததொரு பதிவு நன்பரே... அழகான முறையில் கருத்துக்களை முன் வைத்தீர்.

அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ரஹ்மத் செய்யட்டும்.

திருபுவனம் வலை தளம் சொன்னது…

வருகைக்கும் ,கருத்துரைக்கும் மிக்க நன்றி !

பெயரில்லா சொன்னது…

good article, very nice thougths
keep it up

திருபுவனம் வலை தளம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் ,கருத்துரைக்கும் மிக்க நன்றி !

பெயரில்லா சொன்னது…

பெண்கள் குறைவாகவும் ஆண்கள் அதிகமாகவும் இருந்தால் ஒரு பெண் நான்கு ஆண்களை திருமணம் செய்யலாமா ?

திருபுவனம் வலை தளம் சொன்னது…

நடை முறைக்கு சாத்தியமானதையே இஸ்லாம் போதிக்கும் . எல்லா கால கட்டத்திற்கும் எல்லா இடங்களுக்கும் ஏற்பவே இஸ்லாமிய வழிகாட்டல்கள் அமைந்திருக்கும். உங்களின் கேள்விக்கு பதில்.ஒரு பெண்ணால் எல்லா காலங்களிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது. மெனோபாஸ் வந்துவிட்டால் அவர்களுக்கு ஈடுபாடு குறைய ஆரம்பித்துவிடும் . வயதாகிவிட்டால் பெண்ணால் குழந்தை பெற்று கொள்ளமுடியாது.ஆணினால் முடியும்.
ஒரு ஆண் நான்கு பெண்ணை மணந்து நான்கு பெண்ணிற்கும் வாரிசை கொடுத்தால் இனிசியலில் இருந்து சொத்து பிரசனை வரை சுலபமாக தீர்க்கலாம் .ஆனால் ஒரு பெண் பலரை கணவராக கொண்டு குழந்தை பெற்றால் யார் அதற்கு பொறுப்பேற்பார் ? மேற்கண்ட பிரச்சனைகளை யார் தீர்வு சொல்வார் ?
இறுதியாக ஒரு விஷயம் தோழரே .
இந்த சட்டம் இறைவனிடமிருந்து வந்துள்ளது .படைத்த இறைவனுக்கு தெரியும் ...மனிதர்களுக்கு சாத்தியமானது எது என்று ? இதில் உங்கள் நலனும் இருக்கிறது ...சற்று சிந்தித்து பாருங்கள் ...நிறைய கேள்விகள் உங்கள் முன் இருக்கிறது தோழா... நன்றி

பெயரில்லா சொன்னது…

எந்த திருடனும் தன் திருட்டை நியாயப்படுத்துவான், அதுபோல இருக்கிறது இந்தக் கட்டுரை.மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு கடவுளைக் காரணமாக காட்டுவது தவறு

திருபுவனம் வலை தளம் சொன்னது…

அன்பரே மனிதர்கள் தவறு செய்ய கூடாது என்பதற்கு தான் இந்த கட்டுரை ? நீங்கள் பலதார மணத் தை எதிர்கிறீர்கள் என்றால் கள்ள தொடர்பு , சின்ன வீடு , அதனால் ஏற்படும் பக்க விளைவுகளான குற்றங்களுக்கு மறை முகமான ஆதரவை அளிக்கிறீர்கள் என்று அர்த்தம் .

Sundaram சொன்னது…

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், நியூயார்க் அல்ல

திருபுவனம் வலை தளம் சொன்னது…

தவறுக்கு வருந்துகின்றோம் .
அமெரிக்க நகரமான நியூ யார்க்கில் என்று திருத்தி வாசிக்கவும்