Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

புதன், ஆகஸ்ட் 31

யாருக்குப் பெருநாள்?

யாருக்குப் பெருநாள்?

உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
காலையில் எழுந்து டீ அல்லது காஃபி
குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும்...
என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும்
என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்...!

தன் ஆணவத்தை அடக்கி
அலட்சியப் போக்கை அழித்து
பகலில் பட்டினி கிடந்து
இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
பசி, தாகத்தால் இச்சையை வென்று
இறை கடமைகளை நிறைவேற்றி
தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்...!

வறியவர்களின் தேவைகளை கவனித்து
பட்டினியையும், பசியையும் அடக்கி,
நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
இறைவனுக்காக நோன்பிருந்த
இறைமறையை ஓதி உணர்ந்த
இறைகடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்...!

ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
கருமித்தனத்தை அடியோடு ஒழித்து
சிறியவர்களை போற்றி - பாராட்டி
பெரியவர்களை மதித்து நடந்து
அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
இனி பாவமே செய்யமாட்டேன்
என்ற உறுதி கொண்ட
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!

எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்...!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!

6 comments:

அந்நியன் 2 சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள்

வாழ்த்துக்கள்.

அருமையான சிந்திக்க வைக்ககூடிய வரிகள்.

வாஞ்ஜூர் சொன்னது…

MAY THE BLESSINGS OF ALLAH

KEEP YOUR HEART & HOME

HAPPY & JOYOUS !

EID MUBARUK TO YOU AND YOUR FAMILY.



வாஞ்சையுடன் வாஞ்ஜூர்

.

Gulam Ghouse சொன்னது…

ஸலாம்...

நல்ல கவிதை...

யாருடைய கவிதை இது? பெயரையே காணோம்...!

- குலாம் கவுஸ், குவைத்

Jafarullah Ismail சொன்னது…

@அந்நியன் 2 கூறியது...

வாழ்த்துக்களுக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.அய்யூப்!

Jafarullah Ismail சொன்னது…

@ வாஞ்ஜூர் கூறியது...

தங்களின் வாழ்த்துக்கள் உண்மையிலேயே மிக்க மகிழ்வையும். மன நிறைவையும் தருகிறது.

தங்களின் தந்தையார் போல தாங்களும் சமூகநலனுக்காக செய்யும் பணிகள்,
மேலும் விரிவடைய வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்.

தங்கள் பெருநாள் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

Jafarullah Ismail சொன்னது…

@ Gulam Ghouse கூறியது...

வ அலைக்கும் ஸலாம்.

இக்கவிதை, குவைத் நண்பர்
அ.பா.கலீல் அஹ்மத் பாகவி அவர்கள்
எழுதி சென்ற வருட பெருநாளுக்கு எம்து வலைதளத்தில் பதிவிட்டது.
பெயர் விடுபட்டமைக்காக அல்லாஹ் என்னை மன்னிப்பானாக.

தங்கள் வருகைக்கும்,தவறை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி சகோதரா!