Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, அக்டோபர் 6

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்டஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம். அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.

முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது.

உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

நன்றி:
http://tamilcnn.com

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். அல்-குர்ஆன் 24;31


பெண் அடிமைத்தனம் என்று கூப்பாடு போடுபவர்களே....
மனித வாழ்க்கைக்கு அல்-குர்ஆன் நல்ல அறிவுரைகளை மட்டுமே வழங்கிய ஒரு அற்புதம் என்பது மீண்டும் நிரூபனம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....

15 comments:

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
பகிர்வுக்கு நன்றி

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.ஜபருல்லாஹ், வித்தியாசமான புதிய கோணத்தில் அமைந்த மருத்துவ கருத்துக்கள் அடங்கிய பதிவு.

சிம்பிளா சொல்லனும்னா... க்ளோபலைசேஷனுக்கு முன்னாடி ஃபாரின் போயிட்டு வர ஆட்கள் கிட்டே நம்மூரில் அறிமுகமாகி இருக்கும் புதிய விஷயங்களை ஆச்சர்யமாக காட்டினால்... "ஹே..ஹே...ஹே.... இதெல்லாம் இப்போதான் உங்ககிட்டே வருதா..?! நாங்கல்லாம் எப்போவோ யூஸ் பண்ணிட்டோம் இதை", என்பார்கள். நமக்கு புஸ்ஸ்ஸ் ன்னு ஆயிரும். நமக்கே இப்டின்னா இவங்களுக்கு..?

சவூதியை பொறுத்தமட்டில் தன் வீட்டில் இருப்பது எருக்கம்பூவாக இருந்தாலும் மல்லிகையே. காரணம், மாற்றான் தோட்டத்தில் இருப்பது தெரியாது. எனவே ஒவ்வோர் வீட்டிலும் மல்லிகையே.

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

சலாம் சகோ....நல்லதொரு பகிர்வு....

சிராஜ் சொன்னது…

சலாம் சகோ...

ஆராய்ச்சி முடிவுகள் குரான் வசனத்திற்க்கு எதிராக இருதாலும் ஆராய்ச்சி தான் தவறாக இருக்க முடியும்...

பெண்களின் புர்க்கா விஷயத்தில் அதை எதிர்ப்பவர்களுக்கே தெரியும் அது ஒரு கண்ணியமான ஆடை என்று.. அவர்கள் வீட்டில் உள்ளவர்களை அவ்வாறு செய்யச் சொல்ல இவர்களால் முடியாது... அந்த ஆற்றாமையே இந்த கூப்பாடுகள்....

suvanappiriyan சொன்னது…

சலாம்! சிறந்த பகிர்வு!

//சவூதியை பொறுத்தமட்டில் தன் வீட்டில் இருப்பது எருக்கம்பூவாக இருந்தாலும் மல்லிகையே. காரணம், மாற்றான் தோட்டத்தில் இருப்பது தெரியாது. எனவே ஒவ்வோர் வீட்டிலும் மல்லிகையே.//

கருத்தை வழி மொழிகிறேன்.

Jafarullah Ismail சொன்னது…

வ அலைக்கும் ஸலாம்
வருகைக்கு நன்றி சகோ.ஹைதர் அலி

Jafarullah Ismail சொன்னது…

சகோ.முஹம்மத் ஆஷிக்
வ அலைக்கும் ஸலாம்.
சிறப்பான கருத்துரைக்கு நன்றி.

Peer Mohamed சொன்னது…

Good one brother !!

Jafarullah Ismail சொன்னது…

@ NKS.ஹாஜா மைதீன் ,

வ அலைக்கும் ஸலாம் சகோ.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

Jafarullah Ismail சொன்னது…

@ சிராஜ்,
வ அலைக்கும் ஸலாம் சகோ.
அவர்கள் மாறினால் வெட்கம் என்று நினைக்கிறார்களோ என்னவோ.....

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்ற் சகோ.

Jafarullah Ismail சொன்னது…

@ சுவனப்பிரியன்,

வ அலைக்கும் ஸலாம்.
அண்ணே! உங்களோடு என்னை ஒப்பிட்டு விட்டார்கள்.அந்த அளவுக்கு எனக்கு தகுதி இருக்கிறதா?
இருந்தாலும் இனி முயற்சிக்கிறேன். இறை அருளோடும், உங்கள் வழிகாட்டுதலோடும்!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

Jafarullah Ismail சொன்னது…

@ Peer Mohamed.

தங்கள்து முதல் வருகைக்கு நன்றி சகோ.

Jafarullah Ismail சொன்னது…

@ முல்லை மயூரான்
அநாகரீகமான கருத்து நீக்கப்பட்டது,

Unknown சொன்னது…

يتممل

Unknown சொன்னது…

Nandri