Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, நவம்பர் 24

கம்ப்யூட்டரால் கண் வலியா?

கம்ப்யூட்டரால் கண் வலியா? டிவென்டி-20 ரூல்சை ஃபாலோ பண்ணுங்க

கடந்த 11ம் தேதி உலக பார்வை தினமாக கடைபிடிக்கப்பட்டது. முன்பெல்லாம் 40 வயதை 
தாண்டியவர்கள்தான் மூக்கு கண்ணாடி அணிவார்கள். ஆனால், தற்போது 2ம் வகுப்பு படிக்கும் 
மாணவன் கூட மூக்கு கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு, அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பது, உணவுப்பழக்கமே காரணம் என்கிறார் அமெரிக்கன் ஐ கேர் சென்டர் டாக்டர் டி.பி.பிரகாஷ். 


கண் மருத்துவ பரிசோதனையில் தற்போது வந்துள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்தும், கண் பார்வை குறைபாடுக்கான காரணங்கள் குறித்தும் இதோ அவரே விளக்கம் தருகிறார்... 


செவ்வாய், அக்டோபர் 30

புயல் எச்சரிக்கை கூண்டுகள் ...

மழைகாலங்களில்  தொலைகாட்சிகளில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு ரமணன் அவர்களை அடிக்கடி பார்க்கின்றோம் ....
அவர் வழக்கமாக காற்றழுத்த  தாழ்வு நிலை ... மண்டலம் ..... இப்படி அடிக்கடி சொல்வார் .
செய்திகளிலோ புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற பட்டது என்றும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு எண் சொல்கிறார்கள் அல்லவா ? அதன் விளக்கம் தான் என்ன ?
பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகளையும், அந்த குறியீடுகள் குறித்த விளக்கங்களையும் பார்க்கலாம்

வியாழன், அக்டோபர் 25

மக்களுக்காகவே ஒரு மக்கள் மருத்துவமனை!மக்களுக்காகவே ஒரு மக்கள் மருத்துவமனை!

ரு டாக்டர், நோயாளிகளிடம் கொஞ்சம் கருணையோடு நடந்துகொண்டாலே, 'மக்களின் மருத்துவர்’ எனக் கொண்டாட ஆரம்பித்துவிடுவோம். உண்மையிலேயே, ஏழை மக்களே சேர்ந்து ஒரு மருத்துவமனையை நடத்தினால் எப்படி இருக்கும்? இந்தக் கனவை நனவாக்கி இருக்கிறது, சுகம் சிறப்பு மருத்துவமனை.

மதுரை ஃபாத்திமா கல்லூரி அருகே உள்ள ஜெயராஜ் நகரில் அமைந்திருக்கிறது, 23 படுக்கைகளுடன் கூடிய சுகம் சிறப்பு மருத்துவமனை. மதுரை மாவட்டத்தில் களஞ்சியம் சுய உதவிக் குழுக்களின் கீழ் உள்ள சுமார் 15 ஆயிரம் பேர் தலா  100 வீதம் பங்குத்தொகை கொடுத்துத் தங்களுக்கென உருவாக்கிய மருத்துவமனை இது. களஞ்சியம் குழுவில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு செய்து இங்கே இலவச சிகிச்சை அளிக்கிறார்கள்.

வெள்ளி, அக்டோபர் 12

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்


தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், 

அதற்கான தீர்வும்


தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு[1].
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

சனி, அக்டோபர் 6

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்டஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

வெள்ளி, அக்டோபர் 5

இன்னலை நோக்கி ஒரு அமைதி பயணம்


அனுப்புதல்

இடிந்தகரை பெண்கள்
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை
திருநெல்வேலி மாவட்டம்

அன்புள்ள சகோதரி,

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இது நாங்கள் எழுதும் நான்காவது கடிதம். இந்த முறை உங்களுக்குச் சொல்ல எங்களிடம் அதிக செய்திகள் இல்லை.

நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். ஆம்! செப்டம்பர் 10ம் தேதி நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒரு மாதம் ஓடிவிட்டது. ஆனால் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்து இந்திய அணுசக்திக் கழகம் தெரிவிக்கும் முரண்பட்ட தகவல்கள், உச்ச நீதிமன்றத்தின் விமர்சனங்கள் இவற்றுக்கு நடுவே எங்களுடைய வாழ்க்கை அந்தரத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது.

வியாழன், அக்டோபர் 4

யாருக்கு விரோதி ஆக போறீங்க ?

ஸ்ரீலங்கா - பாகிஸ்தான் செமிஃபைனல் 

பாகிஸ்தான் ஜெயிக்கணும்னு ஆசைப்பட்டா 
தேசவிரோதி ஆயிடுவோம்.

ஸ்ரீலங்கா ஜெயிக்கணும்னு ஆசைபட்டா
தமிழினவிரோதி ஆயிடுவோம்.

# மொத்தத்துல கிரிக்கெட்டே வேணா ன்னு சொல்லலாம்னு
பாத்தா
 "ஒட்டுமொத்த மனித குலத்துக்கே விரோதியா"
ஆயிருவோம்ய்யா ஆயிருவோம் .
இது என் நண்பர் முஹம்மது முபாரக் போட்ட மொக்கை 

திங்கள், அக்டோபர் 1

பர்தா "சவுகரியமா? இதன் மூலமா?"-சகுந்தலா நரசிம்ஹன்

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன் 

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார். 

ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சனி, செப்டம்பர் 29

இருளும் இருள் சார்ந்த இடமும் -தமிழகம்

தமிழகம் எனும் திறந்த வெளியில்
எங்கும் இருட்டு எதிலும் இருட்டு
சென்னையில் மட்டும் ஒரு மணி நேரம்
மற்ற எல்லா மாவட்டங்களிலும்
கிட்டதட்ட 16 மணி நேரங்கள் மின் தடை

எட்டு மணி நேர வேலையை மக்கள் விரும்புவது போல்
மின்சாரமும் இப்போ வெறும் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறது  .

அது சரி மின் வெட்டு என்பதை மக்கள் இப்போது பழகி கொண்டே விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .

வியாழன், செப்டம்பர் 20

கருத்து சுதந்திரம் ? கிலோ எவ்வளோங்க ..?


கருத்து சுதந்திரங்கறது இதுவரை எமது பூமியில் இருந்துள்ளதா ? முஸ்லிம்கள் ஒரு மோசமான படத்திற்கு எதிராக போராடுகிறார்களே  அவர்கள் மட்டும்தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்களா?
அவர்களை பற்றி சொல்வதற்கு முன் நமக்கு என்னா தகுதி இருக்குன்னு பார்க்கலாமே ?

டாம் 999 படம் நினைவு இருக்கா ? தமிழ்நாட்டில் அது ஓடுச்சா..?

ஜெயராம் எனும் நடிகர் தமிழச்சிகளின் கலரை பற்றி பேசியபோது அவர் வீடு தாக்கபட்டதே..? அது என்னா சுதந்திரம் ?
ஓ தீபா மேத்தா  ....வாட்டர் ... திரைப்படம்.... இந்துத்துவா .... அட அதெல்லாம் பெரிசா பேச படாது...
ஓவியன் உசேன் என்பார் இந்து தெய்வங்களை நிர்வாணமாக வரைந்தாராமே  அப்பு அப்ப எங்கேப்பா போச்சு உங்க கருத்து சுதந்திரம் ?

திங்கள், செப்டம்பர் 17

ஆபத்துகள் ஆரம்பமாகி விட்டனவா ...?

 ஆபத்துகள் ஆரம்பமாகி விட்டனவா ...? 

இந்தியாவிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட, துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட கொள்கலனில் செயற்கை கதிர்வீச்சு பதார்த்தங்கள் இருப்பது கொழும்பு துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவித்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

125 தொகுதி துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட இக்கொள்கலனில் கோபால்; -60 எனும் மிக ஆபத்தான செயற்கை கதிர்வீச்சு பதார்த்தம் காணப்பட்டதாக இலங்கை அணுசக்தி அதிகார சபையின்தலைவர் கலாநதி ஆர்.எல். விஜேவர்தன, டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.

“தண்ணீரைக் காப்பாற்று; உயிரைக் காப்பாற்று”

கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல.

1986 இல் ‘தினமணி’யில் அணுஉலையின் பாதிப்புகள் பற்றி டி.என்.கோபாலன் அவர்களின் மிக விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது. இந்தக் கட்டுரை அன்றைய காலகட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணுஉலை எதிர்ப் பியக்கங்களின் செயல்பாடும் இந்த விவாதங்களின் வழி தொடங்கியது.
 கூடங்குளம் அணுஉலையை எதி

ர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது.
 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.
    1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம்.

வியாழன், செப்டம்பர் 13

இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால்


இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால் என்ன‌ ஆகும், இந்த‌ பேர‌ழிவின் போது யார் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குவ‌து, எவ்வ‌ள‌வு வ‌ழ‌ங்குவ‌து என்ப‌து தொட‌ர்பான ஒரு ச‌ட்ட‌த்தை பாராளும‌ன்ற‌த்தில் கொண்டுவ‌ர‌ உள்ள‌து. அதாங்க‌ "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010". இந்த‌ ச‌ட்ட‌த்திலுள்ள‌ சாத‌க‌, பாத‌க‌ங்க‌ளை ப‌ற்றி பார்ப்போம்...
அணு உலை ஆத‌ரவு நண்பர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி -‌ ஏங்க‌ ம‌கிழுந்து(Car), பேருந்து, தொட‌ருந்து(Train) கூட‌ தான் அடிக்க‌டி விப‌த்திற்குள்ளாகுது அதுக்காக‌ நாம‌ அதில‌ போகாம‌ இருக்கோமா ? ஏங்க‌ அணு உலை விப‌த்து ந‌ட‌ந்துருன்னு ப‌ய‌ப்ப‌டுறீங்க‌ன்னு, அவ‌ர்க‌ளுக்கான‌ ப‌திலை அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌த்தின் முத‌ல் வ‌ரியிலேயே சொல்லியிருக்காங்க‌
இந்த சட்டம் அணு உலை அழிவால் பாதிக்கப்படும் பின்வருபவர்களுக்கும் பொருந்தும்.

வறுமையின் வரலாற்று பயணம்- சோமாலியா

சமீப காலமாக முகநூலில்சோமாலிய இப்தார் படம் ...
சோமாலியரின் கேள்விக்கு அழுத தொலைகாட்சி நிகழ்ச்சி ...
 மீடியா அவ்வப்போது உமிழும் சோமாலிய கடற்கொள்ளை.... சோமாலியாவின் உண்மை முகம்தான் என்ன?
அந்த வறுமையின் வரலாறு தான் என்ன ?

 ஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் சோமாலியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.
இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், |மேற்கே எதியோப்பியா] ஆகியன அமைந்துள்ளன.

 நபிகளின் தோழர்களுக்கு நாடு கொடுத்த நஜ்ஜாசியின் பிரதேசம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அதாவது (கி மு 3000 ) இந்த பகுதி மிக முக்கியமான வியாபார கேந்திரமாக பல பகுதிகளுக்கு இருந்துள்ளது . அப்போதைய பேரரசுகள் இந்த பகுதியுடன் வியாபார தொடர்பை கொண்டிருந்தன.
அரேபிய பகுதிகளிலும் இவர்களது வணிகதொடர்பு நெருக்கமாகவே தொடர்ந்து வந்திருக்கின்றது.
       முஹம்மத் நபி (ஸல்)அவர்கள் பகிரங்க பிரசாரத்தை ஆரம்பித்த உடன் அப்போதைய மக்கத்து குரைஷிகள் எண்ணற்ற தொல்லைகள் கொடுக்க நபி அவர்களுக்கு தான் கஷ்டபட்டாலும் தனது தொண்டர்கள் கஷ்டப்பட கூடாது என சிறந்த தலைமை பண்பின் வெளிப்பாடாய் முத்ல் ஹிஜரத் செய்ய அனுமதிக்கிறார்கள் ..
                                அதற்கு முன்பே அதற்கான சாதகமான இடத்தை தேர்வு செய்து அபிசீனியா அதாவது இன்றைய சோமாலியா உள்ளடக்கிய பகுதிக்கு அனுப்புகிறார்கள் ..
           அங்கே நஜ்ஜாசி எனும் மன்னர் ஆட்சி செய்கிறார் ...
அங்கு புகலிடத்தை கண்டார்கள்.
இன்னொரு குழுவும் மக்காவிலிருந்து அபிசீநியாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொள்கிறது .
        மக்கத்து குறைஷிகள் நஜ்ஜாசி மன்னரிடம் மிகுந்த வியாபார தொடர்பு உடையவர்கள் என்ற சிறப்பு அந்தஸ்தின் காரணமாக முஸ்லிம்களை திருப்பி அனுப்பிவிட கோரிக்கை வைக்கபடுகின்றது.
ஆனால் விசாரித்து நீதமாக முடிவெடுத்து முஸ்லிம்கள் தனது நாட்டில் கண்ணியத்துடன் தங்க அனுமதித்தார்.
( இங்கே அகதிகள் முகாம் அமைக்க வில்லை ... எல்லா உரிமைகளையும் கொடுத்து வாழவே அனுமதித்திருக்கிறார் .. மத சுதந்திரம் உட்பட ..)

இஸ்லாமிய வரலாற்றில் ஹபச எனும் பெயர்பெற்ற இப்பகுதிக்கு கலிபா உத்மான் ரலி அவர்கள் காலத்தில் இஸ்லாம் முழுமையாக சென்றடைந்தது .

என்ன வளம் இல்லை அந்த திருநாட்டில் ....

   சோமாலியா மிகபெரும் கடற்கரையை கொண்டுள்ள நாடு ..
மிக முக்கிய இயற்கை வணிகமாக மீன்பிடி தொழில் அதிக அளவில் நடைபெற்ற நாடாக ஒரு காலத்தில் இருந்த நாடு தான் சமீபகாலமாக வறுமைக்கு எடுத்துகாட்டு சொல்லும் நாடாக மாற்ற பட்டிருக்கின்றது .
   உலகின் இன்றைய ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிக்கும் எண்ணெய் வளம் மிக்க நாடாக மட்டுமல்லாது தகரம் மற்றும் யுரேனியம் ஆம் இன்று உலகை ஆட்டிபடைக்கும் அணுகுண்டின் அடிப்படையான யுறேனியமும் சோமாலியாவில் அதிகமாகவே கிடைக்கின்றது ...
அப்புறம் என்ன எண்ணெய் உண்டு
யுறேனியமும் உண்டு
விடுவார்களா ..?
உலக நாட்டான்மைகள் .....இருந்தும் ஏன் வறுமை ...?

                                                       ........   இறைவன் நாடினால் அலசுவோம் ......
    

வெள்ளி, ஆகஸ்ட் 31

கருணையும் – வெறியும்! – தினமணி, தினமலரின் இருமுகங்கள்!!


கசாப்பின் நிழலில் ஒரு கொலைவெறிக் கூட்டம் அனைவரது ஆதரவோடு பதுங்கிக் கொள்வதைத்தான் அம்பலப்படுத்துகிறோம்
“166 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு” இது தினமலரின் இன்றைய சுவரோட்டி வாசகம். இதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியில் “மும்பையை உலுக்கிய கசாப்புக்கு தூக்குத் தண்டனை உறுதி” என்று கொட்டை எழுத்தில் போட்டிருப்பதோடு, தண்டனையை வரவேற்று பா.ஜ.க மட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்கள் கூறியிருப்பதை செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதாவது தேசத்தின் ஒட்டு மொத்த கருத்தாம் இது.
நடுப்பக்கத்தில் கசாப்பை தூக்குக்கயிறோடு படமாக போட்டிருக்கும் தினமலர் இந்த வழக்கு வந்த பாதையை காலக் குறிப்போடு விளக்கமாக போட்டிருக்கிறது. கசாப் தூக்கு என்பது மேலோட்டமாக செய்தியாக மட்டுமல்லாமல் ஒரு ஆவணம் போன்று வாசகர் மனதில் பதிய வேண்டும் என்பது தினமலரின் அவா. அநேகமாக இன்றைய தினசரிகள் பல பெரும்பான்மை இப்படித்தான் வெளியிட்டிருக்கின்றன.
முதல் பக்க கசாப் செய்திக்கு மேலே வேளாங்கண்ணி கொடியேற்று விழாவை போட்டிருப்பதன் மூலம் தினமலர் தனது சர்வமத நேயத்தை வெளிப்படுத்துவதாக காட்டுகிறது. ஆனால் அது பொய் என்பதற்கு அது முன்னிலைப்படுத்தாமல் விட்ட ஒரு செய்தி உண்டு. கசாப்புக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கிய தினமலர் குஜராத் கலவரம் குறித்த நரோடா பாட்டியா கொலை வழக்கு தீர்ப்பை 13 ஆம் பக்கத்தில் காலரை பக்க செய்தியாக பத்தோடு ஒன்றாக வெளியிட்டிருக்கிறது.
தலைப்பு என்ன தெரியுமா? “மாஜி அமைச்சர் உட்பட 32 பேர் குற்றவாளிகள்”. கசாப் செய்தி பாணியில் வெளியிடுவதாக இருந்தால், “97 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்புத் தீர்ப்பு” என்றல்லவா வெளியிட்டிருக்க வேண்டும்? கசாப் மீதான தீர்ப்புக்கு முழு இந்தியாவுமே வரவேற்பதாக காட்டிய தினமலர் இந்த செய்தியில் தீர்ப்பை வரவேற்பதாக யாருடைய கருத்தையும் சொல்லவில்லை. ஏனெனில் தினமலருக்கே கூட இந்த தீர்ப்பு பிடிக்கவில்லை எனும் போது என்ன செய்ய முடியும்?
கசாப்புக்கு தூக்குக்கயிறு போட்ட படத்தை போட்ட தினமலர் இங்கு குடும்பப் பெண் போன்ற அடக்கத்துடன் சோகமாக நடக்கும் கோட்னானி படத்தை வெளியிட்டிருக்கிறது. நரோடா பாட்டியாவில் கொல்லப்பட்ட ஒருவரது படம் கூடவா தினமலரிடம் இல்லை? மற்றபடி இந்த தீர்ப்பினால் பா.ஜ.க, மோடிக்கு பின்னடைவாகவெல்லாம் தினமலர் நினைக்கவில்லை. அதனால் இந்தச் செய்தியில் அந்த இதழின் கருத்தாக ஒன்றுமில்லை.
இணையத்தில் தினமலரின் தலைப்பு என்ன தெரியுமா? ” பயங்கரவாதி ‘ கசாப் ’ கடைக்கு போகிறார்; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உறுதி செய்தனர் !“ இதே போன்று பாபு பஜ்ரங்கிக்கும் தலைப்பு கொடுப்பார்களா? பொதுவில் கசாப்பு கடை யார் வைத்திருப்பார்கள்? தினமலரின் கொண்டாட்டத்தை இதை விட சிறப்பாக எந்த தலைப்பும் கொடுத்துவிடாது.
தூக்குக் கயிற்றில் தொங்கும் கசாப்பின் படத்தோடு “கசாப் தூக்கு தண்டனை உறுதி” என்று தலைப்புச் செய்தியாக தினமணியும் வெளியிட்டிருக்கிறது. இங்கும் வழக்கு கடந்து வந்த பாதை, தீர்ப்பை வரவேற்ற தலைவர்களின் கருத்து எல்லாம் உண்டு. ஆனாலும் தினமணி ‘நடுநிலை’ பத்திரிகையாக காட்டிக் கொள்ள வேண்டுமென்பதால் முதல் பக்கத்தின் கீழேயே நரோடா பாட்டியா வழக்கு தீர்ப்பு குறித்த செய்தியும் வெளிவந்திருக்கிறது.
“கரசேவகர்கள்” கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரம் என்று ‘வரலாற்றை’ கவனமாக ஆரம்பிக்கிறது தினமணி. வி.இ.பரிஷத் நடத்திய பந்தில் ஒரு கும்பல் நடத்திய வன்முறையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக எச்சரிக்கையாக தெரிவிக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்று இரு காங்கிரசு தலைவர்கள் கூறியதை வெளியிட்டிருக்கும் தினமணி, பா.ஜ.கவிற்கு இது பின்னடைவாக இருக்குமென்று கருதப்படுவதாக கூறுகிறது. யார் அப்படி பின்னடைவு என்று கருதுகிறார்கள்? நிச்சயம் தினமணி இல்லை என்பதால்தான் அந்த படுகிறது எனும் அனாமதேய முகம்.
இதெல்லாம் கூடப் பரவாயில்லை. இந்தச் செய்திக்கு தினமணி போட்டிருக்கும் படம் என்ன தெரியுமா? “நரோடா பாட்டியா கலவர வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, தன் மகளைக் கண்டு கண்கலங்குகிறார்” என்ற வரிகளுடன் ஒரு படம். போலீசு வாகனக் கம்பி வலைக்குள்ளே அழுதுகொண்டிருக்கும் தந்தை; கம்பியை எட்டிப்பிடித்தபடி அப்பாவைப் பார்த்துக் கலங்கும் ஒரு சிறுமி. நரோடா பாட்டியாவில் 97 முசுலீம்கள் கொல்லப்பட்ட கொடுமையை மறக்கச் செய்ய இந்த படம் ஒன்றே போதும்.
பார்ப்பவர்கள் அந்த சிறுமியின் கதறலில் இந்து தர்மத்திற்காக சிறைக்குச் செல்லும் அந்த ‘தியாகி’யை நினைத்து வருந்துவது உறுதி.
பஜ்ரங் தள் தலைவரலான பாபு பஜ்ரங்கி சிறைக்குச் செல்லும் போது தனது கட்டை விரலை உயர்த்தி இறுமாப்புடன் செல்கிறார். இன்னும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், முக்கியமாக தேசத்தின் மனசாட்சி, தினமணி, தினமலர் போன்ற ஊடகங்களின் காவி ஆதரவு….. எல்லாம் இருக்கையில் அவர் ஏன் வருந்த வேண்டும்?
கசாப்புக்கு தண்டனை அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கசாப்பின் நிழலில் ஒரு கொலைவெறிக் கூட்டம் அனைவரது ஆதரவோடு பதுங்கிக் கொள்வதைத்தான் அம்பலப்படுத்துகிறோம். தினமணி , தினமலரும் அந்தக்கூட்டத்தில் இருப்பது எத்தனை பெருக்குத் தெரியும்?
நன்றி : வினவு தளம் .


வியாழன், ஆகஸ்ட் 30

மனசாட்சி மடிந்துபோன நரோடா பாட்டியா!


2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ரா ரெயில்வே ஸ்டேஷனில் ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-6 பெட்டி தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கோரத்தாண்டவம் ஆடிய இந்திய வரலாறு காணாத குஜராத் இனப் படுகொலையின் போது மிகப்பெரிய கூட்டுப்படுகொலை நரோடா பாட்டியாவில் நிகழ்ந்தது.

அயோத்தியில் இருந்து திரும்பிய 59 ஹிந்துக்கள் பயணம் செய்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீயில் வெந்த மரணித்த சம்பவத்தின் பின்னணியில் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தாம் காரணம் என அநியாயமாக குற்றம் சுமத்தி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் அடுத்து வந்த தினங்களை குஜராத்தை கொலைவெறிக் களமாக மாற்றினார்கள்.

நரோடா பாட்டியாவில் கொலைச் செய்யப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலோர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து குடியேறியவர்கள் ஆவர். கொலைச் செய்யப்பட்டவர்களில் 94 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 84 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கர்ப்பிணியான கவுஸர் பானுவின் வயிற்றை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திரிசூலத்தால் குத்திக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை தீயில் பொசுக்கிய மிகக்கோரமான சம்பவம் நரோடாபாட்டியாவில் தான் நிகழ்ந்தது. இவ்வழக்கை துவக்கத்தில் விசாரணை நடத்தியது குஜராத் மாநில க்ரைம் ப்ராஞ்ச் ஆகும். பின்னர் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

பா.ஜ.கவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் கனவில் மூழ்கியிருக்கும் நரேந்திர மோடிக்கு இவ்வழக்கின் தீர்ப்பு பெரும் பின்னடைவாகும். நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்த வழக்கில் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் கண்டறிந்தவர்களில் ஒருவரான டாக்டர். மாயா கோட்னானி, அன்றைய நரேந்திர மோடி அரசில் அமைச்சராக பதவி வகித்தவள் ஆவார்.

2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோட்னானி கைது செய்யப்பட்டார். முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்ந்த வேளையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார். ஒரு மாத சிறைவாசத்திற்கு பிறகு நீதிமன்றம் கோட்னானிக்கு ஜாமீன் வழங்கியது. நரோடா சட்டப்பேரவை தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ பதவியையும் கோட்னானி வகிக்கிறார்.

எஸ்.ஐ.டி விசாரணை நடத்திய இதர இனப்படுகொலை வழக்குகளின் தீர்ப்பு விபரம்:

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) ஒன்பது வழக்குகளை விசாரணைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இவற்றில் சில வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகியுள்ளன.

குஜராத் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட மிக்கொடூரமான கூட்டுப் படுகொலையான ஓடே வழக்கில் 18 பேருக்கு ஆயுள்தண்டனையும், ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தீர்ப்பாக வழங்கப்பட்டன.

குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய இனப்படுகொலையின் போது அஹ்மதாபாத்தில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஓடே கிராமத்தில் ஒரு கட்டிடத்தில் அடைக்கலம் தேடிய பெண்கள், குழந்தைகள் உள்பட 23 முஸ்லிம்களை ஹிந்துத்துவா வெறிக் கும்பல்கள் கொடூரமாக கொலைச் செய்த வழக்குதான் ஓடே கூட்டுப் படுகொலை வழக்கு.

பெண்கள், குழந்தைகள் உள்பட 33 பேரை கொடூரமாக தீவைத்துக் கொளுத்திக் கொலைச் செய்த கூட்டுப்படுகொலை வழக்கான ஸர்தார்புரா கூட்டுப்படுகொலை வழக்கில் 31 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில் 42 பேரை நீதிமன்றம் விடுவித்தது. விடுவிக்கப்பட்டவர்களில் 31 பேர் சந்தேகத்தை ஆதாயமாக கொண்டு விடுவிக்கப்பட்டனர். 2011 நவம்பர் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீப்தா தர்வாஸா கூட்டுப்படுகொலை வழக்கில் 21 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. போலீஸ் இன்ஸ்பெக்டரான எம்.கே.பட்டேல் என்பவருக்கு ஒருவருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் 11 பேரை கோரமாக கொலைச்செய்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 83 பேரில் 61 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ பிரஹ்லாத் கோஸா, மூத்த பா.ஜ.க தலைவர் தயாபாய் பட்டேல் ஆகியோர் விடுவிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
thanks to 

www.thoothuonline.com

வியாழன், ஆகஸ்ட் 23

மன்னிப்பு . உங்களுக்கு பிடிக்காத வார்த்தையா..?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலை கழகத்தில் 
ஒரு ஆய்வு அது.

மனிதர்களின் மனதிற்கும் உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு .
.
ஆராய்ச்சிக்காக வழக்கம் போல் மனிதர்கள் பயன்படுத்தபட்டார்கள்
200 பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் நூறு பேரிடம் உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்?, அவரை எப்படி பழிவாங்குவதுபோல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மீதமுள்ள நூறு பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஐந்து நிமிடம் கழித்து அதே சம்பவங்களை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட நூறு பேரின் ரத்தம் அளவிற்கு அதிகமாக வேகமாக பாய்ந்தது. மறப்போம், மன்னிப்போம் கொள்கையை கொண்ட நூறு பேரின் ரத்த அழு
த்தம் இயல்பு நிலையில் இருந்ததும் தெரிய வந்தது.


இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைமைப் பேராசிரியர் மருத்துவர் பிரிட்டா லார்சன், மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் ரத்த அழுத்தம் ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பை சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்த கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம். அதேசமயம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அது பலம் அடைந்ததும் சோதனையில் தெரிந்தது. இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்'' என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


ஓகே வழக்கம் போல நம்ம விசயத்திற்கு வந்துவிடுவோம்....


மனிதனின் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியம் என்றால் அது கண்டிப்பா
நம்ம இஸ்லாத்தில் இருக்குமே ....
ஆம்!  இருக்கின்றது!!
நமது அன்றாட வாழ்க்கையில் தினமும் பல சம்பவங்கள் நிகழ்கின்றன.. பல தவறுகளை நாம் செய்கிறோம்.. பல தவறுகள் நமக்கு செய்யப்படுகிறது. அதனால் நாம் பொருள் இழப்பு, மனக்கஷ்டங்கள் இன்னும் பல கஷ்டங்களுக்கு ஆளாகிறோம். இதன் விளைவினால் உறவுகள் முறிந்து போகிறது. இது அனைவர் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்கள். இதை எந்த முறையில் நம்மை அனுகவேண்டும் என குர்ஆன் மற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வழிமுறைகள் கற்றுக்கொடுத்திருக்கிறது என்று சற்று ஆராய்வோம்.
மனிதன் நண்பர்கள், மனைவி, உடன் பிறந்தவர்கள் என அனைவரிடமும் சில எதிர்பார்புகளை வைத்திருக்கிறான். அந்த எதிர்பார்ப்புகள் பொய் ஆகும் போது கோபப்படுகிறான். அதன் விழைவுகளால் சில வார்த்தைகளை கொட்டி விடுகிறான் இதனால் சிறு பிளவு அதன் பிறகு அதுவே பெரிய விரிசலாக போய் உறவே முறிந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் அவசரத்தில் நாவை பேணாமல் சில வார்த்தைகளை கொட்ட அதனாலும் பிளவு ஏற்படுகிறது. சற்று ஆராய்ந்து பார்கும் போது மனிதனுக்கு சட்டென்று வரும் கோபம் தான் முக்கிய காரணமாக அமைகிறது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (அறிவிப்பாளர்: அத்தியா அஸ் ஸஅதி ரளியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி)
சிந்தித்து பாருங்கள் சகோதரர்களேகோபத்தை கட்டுபடுத்தினாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்;. இன்னும் அண்ணல் நபி அவர்களிடம் ஒரு மனிதர், "எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், "கோபம் கொள்ளாதீர்" என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், "எனக்கு அறிவுரை கூறுங்கள்!" என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் "நீர் கோபம் கொள்ளாதீர்!" என்றே பதில் தந்தார்கள். நூல்: புகாரி
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமைநாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "மூன்று விஷயங்களை இறைநம்பிக்கையாளாின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:
1. ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது.
2. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
3. அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உாிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது." அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் அந்த நேரத்தில் எப்படிங்க கட்டுப்படுத்துகிறது? என்று தாங்கள் கூறுவது காதில் விழுகிறது. கோபம் வருவது மனித இயற்க்கை அதை கட்டுப்படுத்த வழி இருக்கிறதா? என்று ஆராய்ந்தால் அல்ஹம்துலில்லாஹ், அருமையான வழிமுறைகளை அண்ணல் நபி அவர்கள் காட்டிதந்திருக்கிறார்கள்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும்."  (நூல்: அபூதாவூத்)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்." (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்)
இந்த நபிமொழியிலும் இதற்கு முந்திய நபிமொழியிலும் கோபத்தை ஒழித்திட அண்ணலார் காட்டிய வழிமுறைகள் எவ்வளவு சரியானவை, பொருத்தமானவை என்பதற்கு அனுபவமே சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றது.
சரி கோபப்பட்டாகிவிட்டது. உறவும் முறிந்து விட்டது இப்போது என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?
இஸ்லாம் கூறும் பதில் உடனே மன்னித்து விடுங்கள்.
அதெப்படி அவர்கள் எங்களுக்கு இந்த துரோகம் செய்து விட்டார்கள் எப்படி எங்களை மன்னிக்க சொல்கிறீர்கள் என்று கூறுகிறீர்களா? சிந்தித்து பாருங்கள் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா? சிந்தியுங்கள் சகோதரர்களே...
சரி மன்னிப்பவர்கள் பற்றி திருமறை என்ன கூறுகிறது என்று பார்ப்போம்(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)
திருமறை எவ்வளவு அழகாக கூறுகிறது பார்த்தீர்களா.. பிறாின் பிழைகளை மன்னிப்போர்களை அல்லாஹ் நேசிக்கின்றானாம் இதை விட ஒரு மூமினுக்கு வேறு என்ன வேண்டும் சகோதரர்களே.. அதுமட்டுமல்ல
நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான (4:149)
"ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும். (42:37)
அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (42:37)
மூமினுகளைப்பற்றி அல்லாஹ் திருமறையில் அழகாக கூறுகிறான், அவர்கள் தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள் என்று. அவன் கூறிய மூமினாக நாம் ஆக வேண்டாமா? சரி என்ன தவறு செய்தாலும் மன்னித்து விட வேண்டுமா? என்று கேட்பது காதில் விழுகிறது.
"இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குறிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்." (42:40)
பார்த்தீர்களா திருமறை கூறுவதை. ஒருவன் செய்த தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், அதனை மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குாிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது. அளவற்ற அருளாளன், அவன் கொடுக்கும் கூலி எப்படி இருக்கும் சிந்தியுங்கள் சகோதரர்களே...சரி அடுத்து என்ன கூறுகிறார்கள் என்றால் "தவறு செய்தாலும் பொறுத்துக்கொண்டால் என்னை கோழை என்று நினைக்க மாட்டார்களா?"
அல்லாஹ் கூறுகிறான்
"ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்" (42:43)
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு சான்றிதல் கொடுக்கும் போது வேறு யாருடைய சான்றிதலும் அதற்கு ஈடாகாது.
இதுவரை திருமறை கூறியதைப்பற்றி பார்த்தோம், இனி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை பார்ப்போம். "இரு நண்பர்களில் ஒருவரின் தவறு அவ்விருவருக்குமிடையே பிரிவினை ஏற்படுத்திவிட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள்." அல் அதபுல் முஃப்ரத்: "இதில் எவர் மீது தவறு என்று பார்க்கவில்லை இருவருமே அல்லாஹ்விற்காக அல்லது மார்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்
இன்னும் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள் : "என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்?" இறைவன் கூறினான்: "எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குாியவர் ஆவார்." அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத்
அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். ஆனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்யக்கூடாது), ஸலாமை முந்தி சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்" நூல்கள்: புகாரி, முஸ்லிம்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களுக்கு மேல் ஆகி விட்டால் அவரை சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலுருந்து நீங்கி விட்டார்" அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அல் அதபுல் முஃப்ரத்
மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை என்று நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். எத்தனை குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக பிறிந்து இருக்கிறது. அல்லாஹ் இது பற்றி நம்மிடம் கேட்க மாட்டானா?
அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்: ஒருவர் அல்லாஹ்விற்காகப் பணிந்து நடந்தால் அல்லாஹ் அவரை உயர்த்தியே தீருவான் நூல்கள்: முஸ்லிம்
சிந்தித்து பாருங்கள்.. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவாதம் தருகிறார்கள். அல்லாஹ்விற்காகப் பணிந்தால் அல்லாஹ் நம்மை உயர்த்தியே தீருவான் என்று. சிந்தியுங்கள் சகோதரர்களே..
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மட்டும் மன்னிக்கப்பட மாட்டான். அப்போது சொல்லப்படும், "இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள்". நூல்கள்: முஸ்லிம்
இப்படி மன்னிப்பு அளிக்கும் கூட்டத்தில் நாமும் இருக்க வேண்டாமா? அது மட்டுமல்ல இருவரிடையே சமரசம் செய்வது நோன்பு நோற்பதை விட, தர்மம் செயவதை விட சிறந்ததொறு செயல் என்றும் கீழே கூறப்பட்டுள்ள ஹதீஸ் மூலம் விளங்கப்படுகிறது.
அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "நோன்பு நோற்பதை விட, தர்மம் செயவதை விட சிறந்தவொறு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவரிடையே இணக்கத்தை ஏற்ப்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக்கூடியதாகும்" நூல்: அல் அதபுல் முஃப்ரத்
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சாிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். (64:14)
இதை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் வாழ்நாளில் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். தாயிப் நகரத்தில்; கல்லடி பட்ட போதும் அவர்களை மன்னித்தார்கள். மக்கா வெற்றியிலும் அவர் நினைத்திருந்தால் அனைவரையும் கொன்று குவித்திருக்கலாம். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிாியைப் போர்க்களத்தில் தோற்கடிப்பதை ஒருபோதும் தம் குறிக்கோளாகக் கொள்ளவில்லை என்பதற்கு மக்காவின் வெற்றி ஓர் எடுத்துக்காட்டாகும்.
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை அமைதியாகக் கைப்பற்றியதும் குறைஷிகள் தங்கள் முந்தையச் செயல்களுக்காக வருத்தம் தெரிவிக்கும் அளவிலே இருந்தனர். இக்ரிமா இப்னு அபூ ஜஹல் என்பவர் மட்டும் சிறு குழப்பம் விளைவித்தார். முஸ்லிம்களுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் சில பகுதிகளில் மட்டுமே பதற்ற நிலை இருந்தது. பொதுவாக அமைதியே நிலவியது. கஃபாவுக்கு அழைக்கப்பட்டபோது மதீனாவில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தோரும்கூட புறப்பட்டுச் சென்றனர். பழமைமிக்க இந்தப் புகலிடத்தில் பாதுகாப் பினைத் தேடி வருவோருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதால் கணிசமான மக்கள் அங்கே கூடினார்கள். இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கஃபாவின் மேற்கூரையில் ஏறி 'அதான்' எனும் தொழுகைக்கான அழைப்பொலி எழுப்பும்படி பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
கொடூரமான எஜமானனிடம் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட நீக்ரோதான் இந்த பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'அதான்' கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவின் வாசலில் நின்றார்கள். பல்லாண்டு காலமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், அவர்களின் தோழர்களையும் துன்புறுத்தி அவர்களை நிம்மதியாக மதீனாவுக்குச் செல்லவிடாமல் கொலை செய்யத் திட்டம் போட்ட அதே குறைஷிகளிடம் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்படையாகப் பேசினார்கள்.வணங்கத்தக்கவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவனுக்கு யாதொரு துணையும் கிடையாது. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றித் தன் அடியார் முஹம்மதுக்கு (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உதவினான். சதிகாரர்களை அவன் ஓடச்செய்தான். பிறப்பினாலோ, பந்தங்களாலோ, சொத்துக்களாலோ கோரப்படும் தனியுரிமைகள் மற்றும் அந்தஸ்துகள் என்னால் ஒழிக்கப்படுகின்றன. கஃபாவை மேற்பார்வையிடுவது மற்றும் ஹஜ் பயணிகளுக்கு நீர் விநியோகிப்பது ஆகிய இரண்டைத்தவிர! குறைஷிகளே! அறியாமைக் காலத்தில் உங்களோடிருந்த கர்வத்தை அல்லாஹ் போக்கிவிட்டான்; முன்னோர்களிடம் நீங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அல்லாஹ் நீக்கி விட்டான். ''மனிதன் ஆதமிலிருந்து தோன்றினான். ஆதம் மண்ணிலிருந்து தோன்றினார்'' அதற்குப்பின்,
''மனிதர்களே! உங்களை ஒரே ஆண் மற்றும் ஒரே பெண்ணிலிருந்தே படைத்துள்ளோம். நீங்கள் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை (பல) கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியுள்ளோம். உங்களில் இறைவனிடத்தில் சிறந்தவர் இறையச்சம் மிகுந்தவரே.'' (49:13)
என்ற வசனத்தை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
கூடியிருந்த குறைஞகளிடம் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நான் உங்களோடு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு குறைஷிகள்
''நல்லது. நீங்கள் சிறந்ததொரு சகோதரர்; மரியாதைக்குரிய சகோதரரின் மகன்''
என பதிலளித்தார்கள். அதற்கு இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
''இன்று நீங்கள் பதிலளிக்க வேண்டியது எதுவுமில்லை; நீங்கள் விடுதலை செய்யப்பட்டவர்கள்''  என்று கூறினார்கள்.
சகோதரர்களே...! குர்ஆன் மற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வழிமுறைகள் மூலம் பகைகையை பற்றி ஆராய்ந்தோம். அல்லாஹ் திருமறையிலே கூறுகிறான்
"இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.)" (25:73)
மேலே கூறப்பட்ட திருவசனப்படி மன்னிக்கப் போகிறீர்களா? இல்லை இன்னும் அவர் அது செய்தார் இது செய்தார் என்று கூறப்போகிறீர்களா?
தினமும் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா? சிந்தியுங்கள் சகோதரர்களே... நாம் ஒருவரை மன்னிக்காமல் நம்மை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா?
ஆகவே சகோதரார்களே அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான். நாம் அனைவரும் பகைமையை மறந்து அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்வோமாக

(இக்கட்டுரைக்கு உதவிய நன்றிகுரியவர்கள்  : விடுதலை நாளி தழ், மற்றும் சகோதரர் முகம்மது ஆரிப் சிங்கப்பூர் 
மற்றும் முஹம்மது ரசீன்  )

திங்கள், ஆகஸ்ட் 20

உயிரை குடித்தது மெஹந்தி யா ? வதந்தி யா ?

இன்று தமிழக முஸ்லிம்கள் ரம்ஜான் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாட தயாராகி கொண்டு இருந்த வேளையில்
தமிழகத்து முஸ்லிம் பெண்கள் மருதாணி இட்டு தங்களை அழகுபடுத்தி கொண்டிருந்த அந்த வேளையில்
 நேற்று நள்ளிரவில் திடீர் என ஒரு வதந்தி....

எல்லாமே பாக்கெட் என மாறிப்போன இந்த நேரமில்லா...? காலத்தில்..
மெஹந்தி என கோன் வடிவில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் மருதாணி ரக சாயபூச்சு திரவத்தை உபயோகித்த பெண்கள்,
கையில் அரிப்பு ஏற்பட்டு கொத்து கொத்தாக பலி யாகி வருவதாக வதந்தி இரவு நேரத்திலும் மின்னல் வேகத்தில் பரவ ஆரம்பித்தது .

 வாழ்த்து செய்தி வரும் முன்  மெஹந்தி செய்தி  வதந்தியாகா வேகமாய் பரவ செல்போன்கள் அலற ஆரம்பித்தன

பெரிய ஊர்களில் எல்லாம் நள்ளிரவிலும் பள்ளிவாசல் மைக் குகளை போட்டு அவசர அறிவிப்புகளை அறிவித்தனர்

இதில் முதலுதவியாக கையை வெண்ணீரில் கழுவி, தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்

மார்க்க விசயங்களில் அதிகம் அறிவுடையோர் கூட இதை ஆராய முற்படவில்லை .

 கையில் தடவும் மருதானியால் அலர்ஜி ஏற்படுமே தவிர
உயிரா போகும் ..?

இதனால் பீதியடைந்த மக்கள் இரவு நேரத்தில் தங்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு மருத்துவமனைகளை நோக்கி ஓடியது ..அட கடவுளே !

இந்த நேரத்தில் ஒரு ஆறுதல்......

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எனும் அமைப்பின்
மாநில செயலாளர் அன்சாரி எனும் அன்பர்
சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று
விசாரித்து இது வெறும் வதந்தி தான் என அறிவிப்பை செய்தார்.
அதன் பின்னரே கொஞ்சம் இயல்பு நிலை திரும்பியது

இதற்கு முன்  சொட்டுமருந்து போட்ட குழந்தைகள் பலி என வதந்தி கிளம்பியது நினைவிருக்கலாம்  .

தான் கேள்விப்பட்டதை எல்லாம் பரப்புகின்ற்வன் பொய்யன் -இது நபிமொழிதீயவன் ஒரு செய்தியை கொண்டு வந்தால் அதை ஆராய வேண்டும் எனவும் கட்டளை இடுகின்றது இஸ்லாம்சரியான நேரத்தில் சரியான செயலை செய்த அன்பு சகோதர் அன்சாரி அவர்களுக்கு அல்லாஹ் நன்மைகளை அள்ளி தருவானாக.

சனி, ஆகஸ்ட் 18

ஓர் ஒப்பற்ற விடுதலைப் போராட்ட தியாகி; மறக்கடிக்கப்பட்டது ஏன்?


காந்தியின் வரலாறை போற்றுகிறோம். மறைக்கப்பட்ட மற்றவர்களின் வரலாறு
அதுவும் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறுகளையும் வெளியே
கொண்டுவந்தால்தான் அது சமத்துவத்தின் முதல் படியாகும்.'

உண்மயிலும் உண்மை!! அரபு நாட்டில்(மக்கா நகரில்) பிறந்து கல்கத்தாவில்
குடியேறிய முஐய்னுதீன் எனும் இயற்பெயர் இருப்பினும் சுதந்திதத்திற்காக
படிப்பைத் துறந்து பாழ்சிறையில் வாடியவர்; “சுதந்திரத்திற்கான பேச்சின்
தந்தை’’(அபுல் கலாம் ஆசாத்) என்றே பட்டப்பெயரால் அழைக்கப்பட்டவர்;இறுதி
வரை இயற்பெயர் மறக்கப்பட்டு மக்களால் ”அபுல்கலாம் ஆசாத்” என்ற
பட்டப்பெயரிலேயே மதிக்கப்பட்டவர். அவரை இன்று மறந்து விட்டார்கள்;
அவர்களைப் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்:நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.
சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள்
இத்துறையை வழிநடத்திச் சென்றார்.


ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர்.
தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த
கொள்கை

1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால்
பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும்என்று
ஆசாத் வலியுறுத்தினார்.


அனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல்
அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும்
என்பதில்ஆசாத் உறுதி காட்டினார்.


 10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர்
விரும்பினார்.


இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள
இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி
அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச,கட்டாயக் கல்வியை அடிப்படை
உரிமையாக்கியுள்ளது.


நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று
சொன்னவர் அவர்.

1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு
மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே
குரானை கற்றுத் தேர்ந்தார்.

17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார்.


கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது
அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு
லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார்.
நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர்
கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி
ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.


 இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு
பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது. (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற
பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக
ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.


இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல்
திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர்
வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத்
இயக்கத்தைத் துவக்கினார்.முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத்
காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார்.


35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார்.
அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே.


1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின்
தலைமைசெய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில்
1946இல்நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய
பங்காற்றினார்.


காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள்

1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு
எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.


இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல்
கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார்.

1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி
(1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய
கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள்
குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில்
இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத்,
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில்

சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.


 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க
வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல
சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை
சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்.
வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய
மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து
பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க
வேண்டும் என்றார்.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.


1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும்
ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955 இல் திட்டமிடுதல் மற்றும்
கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. மதவாதத்தை ஒரேடியாக குழி
தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும்
அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.


1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த
காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும்
வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை
அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.


இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான
பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம்
கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.


அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை
எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு
மொழிபெயர்த்தார்.


 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான
அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து
-முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.

குறிப்பு: அன்னாரின் பட்டப்பெயர் எனக்கு இயற்பெயராய் இடப்பட்டுள்ளதை
எண்ணி மகிழ்கின்றேன்!--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com