Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, அக்டோபர் 28

பண்டிகைக்காலச் சலுகை அறிவிப்புகள்

ண்டிகைக்காலச் சலுகை அறிவிப்புகள்



வணிகத்தில், வணிகர்களின் மக்கள் ஈர்ப்புத் தூண்டில் ஒன்று உண்டு - ‘பண்டிகைக்காலச் சிறப்புச் சலுகை தள்ளுபடிகள்’. இன, மொழி பேதமின்றி உலகமெங்கும் இது பொது. தமிழகத்தில் தலைநகர் சென்னை மாநகரிலே ஆடித் தள்ளுபடி, தீபாவளி விசேஷத் தள்ளுபடி, ரம்‘ஜா’ன் தள்ளுபடி என்று வஞ்சனையில்லாமல் ஏதாவது விசேஷம் அடிக்கடி வந்துவிடுகின்றது. இவ்வாறு சீஸனில் அறிவிக்கப்படும் தள்ளுபடி சலுகை விற்பனை விலையில் இதர நாட்களைவிட எந்தளவு மக்களுக்குச் சகாயம் உள்ளது என்பதைக் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு ஏதாவது ஒரு நிறுவனம் புள்ளிவிவரம் எடுத்துச் சொன்னால் தள்ளுபடி விலையில் அவர்களுக்கு ஒரு கைக்குட்டை பரிசளிக்கலாம்.

மற்றபடி, தள்ளுபடி 'விசையால்' ஈர்க்கப்படும் மெல்லிய மனம் கொண்ட பெண்களையும் அவர்களின் பரிதாப வாழ்க்கைத் துணையின் பர்ஸ்களையும் இவ்வியாபாரிகள் மானசீகமாக நம்புவதால், உள்ளே நுழையும் வாடிக்கையாளர்களின் கூடையில் தள்ளுபடிக்கு ஒட்டோ, உறவோ இல்லாத இதரப் பொருட்களெல்லாம் மாயமாய் இடம்பிடித்து, கழிவைச் சமன் செய்துவிடும் என்பது ஊரறிந்த ரகசியம். அதைப்பற்றி யாருக்குக் கவலை?

இதைப் போலவே, ச்சீட்டிங் சீட்டுக் கம்பெனிகள், “அதிக வட்டி” போன்ற விளம்பரங்கள். இவற்றுக்கு மக்களுடைய ஆதரவு குறைவதே இல்லை. பெரிய படிப்பாளியாக இருந்தாலும் சரி; பத்திரிகையில் 'சீட்டுக் கம்பெனி முதலாளி மாயம்' என்று அவ்வப்போது வரும் செய்திகளைப் படித்திருந்தாலும் சரி; பாய்ந்து சென்று ‘இந்தா’ என்று கட்டிவிட்டுத்தான் மறுவேலை. மோகம், ஆசை, பேராசை என்பதைத் தவிர இதில் நியாயமான காரணங்கள் ஏதும் ஒளிந்திருப்பதில்லை.
இத்தகு உதாரணங்களால் நாம் அறிந்து கொள்ளக்கூடியது யாதெனில் - குறைவான நோவில் கணக்கிலடங்கா நுங்கு சாப்பிட வேண்டும் எனும் மக்களின் யதார்த்த மனோபாவம்.
படைத்தவன் இவற்றை அறியாதவனா? நம் பலவீனங்களையும் அவசரத்தையும் சுட்டிக்காட்டுபவன் ஆயிற்றே! எனவே, அவனிடமிருந்து நமக்காக நிறைய சகாய அறிவிப்புகள் உண்டு. ஆனால்,
அவற்றில் மிகப்பெரும் வித்தியாசம் ஒன்று உண்டு. வணிகர்களுடைய நோக்கமானது மிக எளிது - சுய இலாபம். மற்றபடி மக்கள் சேவை, கரிசனம், அன்பு, பாசம் போன்ற எந்த மண்ணாங்கட்டியும் இல்லை. இறைவன் அறிவித்தவை எல்லாம் முழுக்க முழுக்க மக்கள் நமக்கானது; நம் ஈடேற்றத்துக்கானது.
மனிதனின் ஆயுள் மிகக் குறுகிய ஆயுள். ஈருலக வெற்றிக்கு இந்த அற்ப ஆயுள் முழுவதும் இறைவனுக்குச் சிரம் குப்புற விழுந்து வணங்கியே கிடந்தாலும் அவனது அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லிமாளாது. இருப்பினும் எல்லாம் அறிந்தவனல்லவா இறைவன்? அதனால் சகாயங்களும் சிறப்பு அறிவிப்புகளும் ஏகப்பட்டது வழங்கியுள்ளான். ஒப்பற்ற உன்னதம் அவை.
கைச்சேதம் யாதெனில் - 25 சதவிகிதம் தள்ளுபடியில் வாங்கும் அணிகலன்களில் நாம் கொள்ளும் மகிழ்வும் பெருமையும் இந்த அறிவிப்புகளில் நம்மில் பெரும்பாலானவருக்குக் கண்ணில் படுவதே இல்லை. அதனால் நமக்கான சிறப்புச் சலுகைகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசரமோ, அக்கறையோ நமக்கு இருப்பதில்லை.
ஓர் அறிவிப்பை மட்டும் இங்கு எடுத்துக் கொண்டு சற்றுக் கூர்ந்து பார்ப்போம். விசேஷ அறிவிப்பின் பலன் புரிய வரலாம்.
நாளும் கிழமையும் மாதங்களும் எப்பொழுதும்போல் வந்துபோய்க்கொண்டிருந்தாலும் சில நாட்களை, சில கிழமைகளை, சில மாதங்களைத் தேர்ந்தெடுத்து அதைச் சிறப்பாக்கி அதில் நமக்குச் சலுகைகளும் அளித்துவிடுகிறான் அவன் - அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா. குர்ஆனில் 89-ஆவது சூரா அல்-ஃபஜ்ரு. அதன் இரண்டாவது வசனத்தில் “பத்து இரவுகளின் மீது சத்தியமாக!” என்று இறைவன் செய்திகள் சில கூறுகிறான். சத்தியமிடும் அளவிற்குப் பெருமைவாய்ந்த அந்தப் பத்து நாட்களும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாள்கள் என்பது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வியாக்கியானம். 
எல்லா நாட்களையும் படைத்த அந்த இறைவனே ஆணையிட்டுக் கூறும் அந்தப் பத்து நாட்களின் சிறப்பைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறியவையும் ஹதீதுகளில் இடம் பெற்றுள்ளன. ஓர் அறிவிப்பில், (துல்ஹஜ்ஜின் முதல்) பத்து நாட்களில் செய்யும் நல்லறங்கள் (அவற்றை அடுத்து வரும்)அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் செய்யும் நல்லறங்களைவிடச் சிறந்தவை” என்று நபி (ஸல்) கூறினார்கள். “அறப்போரைக் காட்டிலுமா?” என்று நபித் தோழர்கள் வினவினர். “ஆம், அறப்போரைக் காட்டிலும்“ என்று கூறிவிட்டு, “ஆனால், தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு, இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர” என்று நபி (ஸல்) சேர்த்துச் சொன்னார்கள் – புகாரீ 969.
இங்குச் சற்றுக் கூடுதல் கவனம் தேவை. இறைவனுக்கான வழிபாட்டில், அர்ப்பணிப்பில் கடினமானது, உயிரை வாளில் ஏந்தி, களம் புகும் அறப்போர். அத்தகைய போருக்கு இணையாய் ஒப்பிட்டுச் சொல்லப்படும் அளவிற்கு இந்தப் பத்து நாட்களில் அல்லாஹ்வுக்காகச் செய்யப்படும் நல்லறங்கள் விதந்து பேசப்படுகின்றன என்பது செய்தியின் கரு. அவ்வளவு உயர்வு எனில், பெரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்குமோ? என நினைத்தால்... ‘அச்சம் தவிர்ப்பீர்!’.
இயலுமான, எளிதான, நற்காரியங்கள் – அவற்றைச் செய்தல் போதுமானது. தேவையெல்லாம் இவை இறைவனுக்கு என்ற மனவுறுதியும் கருமமே கண்ணான செயல்பாடும் மட்டுமே. 
ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லாதவர்கள் துல்ஹஜ்ஜின் பெருநாள் வரைக்கும், அதாவது 1-9 நாள்கள் நோன்பிருக்கலாம்.  குறிப்பாக ஹஜ்ஜுடைய அரஃபா நாளில் நோன்பிருந்தால் கிடைக்கக்கூடிய சிறப்பு வெகுமதி பற்றி நபிகள் நாயகம் அறிவித்த செய்தி ஹதீதில் பதிவாகியுள்ளது.
அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் “அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி - முஸ்லிம், திர்மிதி).
அது மட்டுமின்றி, அரஃபா நாளின்போது, நோன்பிருந்துகொண்டு ஒருமித்த மனத்தோடு, படைத்தவனை நினைத்து, பிரார்த்தனை புரிவதற்கான பலன் என்னவாயிருக்கும்? என்பதையும் ஹதீது விவரிக்கின்றது.

“அல்லாஹ், தன் அடியார்களை நரகிலிருந்து அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும். இதைவிட வேறு எந்த நாளிலும் அவன் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. இந்நாளில் இறைவனே பூமியின் வானுக்கு இறங்கி வந்து 'என் அடியார்கள் என்ன விரும்புகிறார்கள்? (அவர்கள் கேட்பதைக் கொடுப்பேன்)' என வானவர்களிடம் பெருமையோடு கூறுவான்” என நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
ஆச்சா? 
அடுத்து மிகமிக எளிய கூற்றுகளால் எண்ணிலடங்கா நன்மைகளையும் இந்தப் பத்து நாட்களில் பெற்றுக் கொள்ளும் சலுகை அறிவிப்பை நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நாட்களுள் இந்த (துல்ஹஜ்) பத்து நாட்களைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் வேறு எதுவுமில்லை. ஆகவே இந்த நாட்களில் அதிகமதிகமாக 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்னும் தஹ்லீலையும் 'அல்லாஹு அக்பர்' என்னும் தக்பீரையும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்னும் தஹ்மீதையும் கூறிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். -அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், (தப்ரானீ).
இவை மட்டுமன்றி உபரித் தொழுகை, தான தர்மம், இன்னபிற நற்செயல்கள் அனைத்தும் பல மடங்குகளாகச் சிறப்புச் சலுகை பெறுகின்றன. இந்தப் பத்து நாட்களும் பைசா செலவில்லாமல் மூட்டை கணக்கில் இறைந்து கிடக்கும் வெகுமதிகளை அளவற்று அள்ளி எடுத்துக்கொள்ளலாம் எனும்போது, இன்னும் என்ன? பணம் இருந்து, பயணத்துக்குரிய சௌகரியங்களும் படைத்தவர்களுக்கு ஹஜ் கடமை. இதர மக்களுக்கு அவரவர் இருக்குமிடத்திலேயே வாய்ப்புகள், வெகுமதிகள்.
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் ஆற்றப்படும் நல்லறங்களுக்குத் தனிச் சிறப்பு வழங்கப்படுவதற்குக் காரணம் தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய தலையாய வணக்கங்கள் அனைத்தும் அந்நாட்களில் ஒருங்கே அமையப் பெற்றிருப்பதுதான் எனத் தோன்றுகிறது. மற்ற தினங்களில் இவ்வாறு அமைவதில்லை” என்பதாக இமாம் இப்னு ஹஜர் அஸ்லானீ (ரஹ்) தமது நூலான ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுள்ளது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. ஒன்பது நாட்களின் மற்ற நல்லறங்களோடு பத்தாம் நாளில், (ஓரளவு வசதியுள்ளவர்களால்) கொடுக்கப்படும் உயிர்ப்பலியான குர்பானியும் சேர்ந்து கொள்ள, எண்ண முடியாத சலுகைகள் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.
கண்ணுக்குப் புலப்படும் ஜட வஸ்துகள், அதன் பலா பலன் போலன்றி இவை, இவற்றின் சிறப்புகள் உள்ளார்ந்து உணரப்பட வேண்டும். பிரச்சினை என்னவென்றால் நவநாகரீக உலகில் நம் மனங்களை அலைக்கழிக்கும் கவனக் கலைப்பு சமாச்சாரங்கள் எக்கச்சக்கம். அதைப் புறந்தள்ளிவிட்டால் போதும். மேலும் உறங்கும் முன்போ, தனிமையிலோ அமைதியாக அமர்ந்து கொண்டு, இறைவனும் அவன் தூதரும் அறிவித்துள்ள இந்தச் சிறப்பு சலுகையை மனக் கண்ணில் வலமும் இடமும் ஓடவிட்டுக் கொண்டால், பட்டென இதன் சத்தியம் மனதில் ஆழப்பதியும். 
பிறகு? உள்ளார்ந்த செயல்பாடுகள் எளிய சாத்தியம். 
இதோ! துவங்கப்போகின்றன இந்தப் புனித மாதத்தின் சுப தினங்கள். விசேஷ சலுகைக்குத் தயாராகுங்கள். அள்ளிக் கொள்ளுங்கள் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ்.

ஜஸாக்கல்லாஹ் கைர்: http://www.satyamargam.com/1817


வியாழன், அக்டோபர் 27

திட்டம் போட்டு திருடுற கூட்டம் ...

மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் கணக்கு முதல் இடத்தில் உள்ளது. மின்னஞ்சல் வசதியை அடிக்கடி பயன்படுத்தாதவர்களும், எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு ஜிமெயில் கணக்கை வைத்திருப்பார்கள்.ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது “Last account activity” என அழைக்கப்படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால் உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது.




கணணி பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது கைபேசி மூலமோ எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப்பட்டிருந்தாலும் அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.

வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப்பட்டிருந்தால் அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக்கின்றன.இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.

இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில்(பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது.இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை(பயனர் பெயர், கடவுச்சொல்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக நீங்கள் கைபேசி வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் கைத்தொலைபேசி வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் கணக்கு திருடு போயுள்ளது என அறியலாம்.அடுத்ததாக Location(IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் கணக்கை அணுகிய பத்து ஐ.பி முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால் உடனடியாக உங்கள் ஜிமெயில் கணக்கின் கடவுச்சொல்லினை மாற்றுவது நல்லது.

உங்களுடைய ஐ.பி முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும்.எடுத்துக்காட்டாக 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன்படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும்.

அதே போல கைபேசி வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, கைபேசி வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.ஒரே நேரத்தில் இருவேறு கணணிகளில் இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் கணக்கினை அணுகினால் அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.

தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து கணக்கு பார்க்கப்பட்டதாக இருந்தால் அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.

உங்களுடைய கணக்கு தகவல்கள் திருடப்பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால் கடவுச்சொல்லை மாற்றுவதுடன் கூகுள் http://www.google.com/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும்.
நன்றி - http://www.paristamil.com

தன்னம்பிக்கை

‎500 ரூபாய்

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க..

Thanks: Leena Siva, and puthiya thalaimurai news channel

புதன், அக்டோபர் 26

வாய்ப்புண் (Mouth Ulcer)

வாய்ப்புண் (Mouth Ulcer)
வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி... அவதிதான். தெரியாதவர்கள் "இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!" என்றால் "வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!" என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே? இது, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக சகோ. அபூஸாலிஹா ஆக்கியளித்த மருத்துவக் கட்டுரை.
வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன? 
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் "சுர்ர்" என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்? 
  1. மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.
  2. பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.
  3. ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம்.
  4. உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.
  5. காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.
  6. பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.
  7. இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.
  8. உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.
  9. பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.
  10. மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

தடுக்க வழியுண்டா?

அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:

- நல்ல உணவுப் பழக்க வழக்கம்
- தினசரி மிதமான உடற்பயிற்சி
- மன அழுத்தத்தைக் குறைப்பது
- தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது

இத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.

வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?

வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.
  1. தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.
  2. வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.
  3. தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும்.
  4. மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.
  5. மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.
  6. மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.
கவனத்தில் கொள்ள வேண்டியது: 

வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
- அபூ ஸாலிஹா

 ஜஸாக்கல்லாஹ் : http://www.satyamargam.com/1810

ஞாயிறு, அக்டோபர் 23

வருகுது ஷார்ட்டி ரன்னர்ஸ்!


வருகுது ஷார்ட்டி ரன்னர்ஸ்!

சென்னையில் உள்ள கனரா வங்கி, எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற சில வங்கி​களின் ஏ.டி.எம். மெஷின்களில் கடந்த சில நாட்களில் டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு பயங்கர அதிர்ச்சி! அவர்களின் வங்கிக் கணக்குகளில் கொத்துக் கொத்தாகப் பணம் காணாமல் போயிருப் பதைப் பார்த்துத் திடுக்கிட்டனர். உடனே பதறியபடி வங்கிகளுக்கு ஓடினர். வங்கியின் வழிகாட்டுதலை அடுத்து போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் படையெடுத்தனர். 

சென்னையில் உள்ள வங்கிகளின் ஏ.டி.எம். மற்றும் கிரடிட் கார்டு மோசடிகளை விசாரிப்பதகு என்றே, துணைக் கமிஷனர் ராதிகா தலைமையில் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு (போன்: 2345 2317) செயல்படுகிறது. இதன் உதவி கமிஷனர் ஜான் ரோஸிடம் பேசினோம்.

''கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில்  35 லட்சம் வரை கொள்ளை போனதாக சுமார் 65 புகார்கள் பதிவாகி உள்ளன. அதேபோல், இந்த மாதம் 19-ம் தேதி வரையில் சுமார் 50-க்கும் அதிகமானவர்கள், ரூ. 2 கோடி வரை கொள்ளை போனதாக புகார் செய்திருக்கிறார்கள்.

கிரடிட் மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்​பவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்ளும் அறிவுரை எச்சரிக்கை இதுதான். 'ஏ.டி.எம். கார்டுகளின் பின் நம்பரை அடிக்கடி மாற்றி புது எண்ணைப் பதிவு செய்யுங்கள். ஏனென்றால், பழைய எண்ணை கொள்ளையர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அந்தத் தகவல் மூலம் வெளிநாடுகளில் இருந்து உங்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். அதனால் புதிய எண்ணுக்கு மாறுங்கள்'.

இந்த கொள்ளைகளின் சூத்திரதாரியான ஷார்ட்டி (எ) உமேஷ் என்ற இலங்கைக்காரரை அக்டோபர் முதல் வாரத்திலேயே கைது செய்துவிட்டோம். ஆனால், அதற்குப் பின்னரும் பணத்தைப் பறிகொடுத்ததாக பலரும் புகார் செய்யவே, தீவிரமாக விசாரணையில் இறங்கினோம்.

அப்போதுதான், இந்த ஷார்ட்டி இங்குள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களை நூதனமுறையில் திருடி, வெளிநாடுகளில் பிரபல கும்பல்​களிடம் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இந்தத் தகவல்களை விலைக்கு வாங்கிய கும்பல்தான், வெளிநாடுகளில் இருந்து இங்குள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் புகுந்து களவாடி வருகிறார்களோ?’ என்று சந்தேகப்படுகிறோம்!'' என்றவரிடம், ''எப்படி இந்த மோசடி நடக்கிறது?'' எனக் கேட்டோம்.

''ஸ்கிம்மர் என்கிற கருவி  25 ஆயிரத்துக்கு சீனாவில் கிடைக்கிறது. மெல்லிய ஸ்டிக்கர் மாதிரி இருக்கும். இதை ஏ.டி.எம். மையங்களில் கார்டு நுழைக்கும் இடத்தில் யாருக்கும் தெரியாதபடி பொருத்தி விடுவார்கள். நாம் பணம் எடுக்க கார்டை நுழைக்கும்போது அது, ஸ்கிம்மரைத் தாண்டித்தான் மிஷினுக்குள் போகும். அப்போது கார்டு நம்பர், பின் நம்பர் உள்பட அனைத்து விவரங்களையும் பதிவு செய்துவிடும். அந்த ஸ்கிம்மரை வெளியே எடுத்து, 'என்கோடர்' என்கிற சி.டி. ரைட்டர் மாதிரியான மெஷினுடன் இணைத்து அனைத்துத் தகவல்களையும் பெற்றுக் கொள்வார்கள்.

பிறகென்ன, போலி கார்டுகள் தயாரித்து ஏ.டி.எம். மெஷின்களில் பணத்தைக் களவாடி விடுவார்கள். இதைத்தவிர, கீ ஹோல் கேமராவை ஏ.டி.எம். வளாகத்தில் எங்காவது மேலே பொருத்தி, அதன் மூலமும் பின் நம்பரைத் தெரிந்து கொள்வார்கள்...'' என்றார்.


''ஷார்ட்டி என்ற குற்றவாளியை எப்படிப் பிடித்தீர்கள்?''

''எங்களுக்கு வந்த புகார்களில் எந்த நேரத்தில் பணம் களவாடப்படுகிறது என்பதை கவனித்தோம்.ஷார்ட்டி கும்பல் இரவு 11 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை ஏ.டி.எம். மையத்தில் குறிப்பிட்ட அளவு பணத்தையும், மறுநாள் கணக்கில் அதாவது இரவு 12 மணிக்கு மேல் அதே மையத்தில் காத்திருந்து, மேலும் பணம் எடுத்திருப்பதையும் கண்டுபிடித்தோம். இதுதான் முதல் க்ளூ. அந்த நேரத்தில் ... அந்த ஏ.டி.எம். மைய வளாகத்தில் இருந்து சென்ற செல்போன் எண்களைக் கிராஸ் செக் செய்தபோது, குறிப்பிட்ட எண் சிக்கியது. அதுதான், ஷார்ட்டியின் செல்போன். இவன் ஏற்கெனவே எங்களிடம் இரண்டு முறை கிரடிட் கார்டு மோசடியில் சிக்கியவன். அந்த வகையில், இவனது ஜாதகமே இருந்தது. கோவிலம்பாக்கம் ஏரியாவில் வாடகைக்கு வீடு எடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துவந்தான். அவனது வீட்டை நாங்கள் நள்ளிரவு முற்றுகையிட்டபோது, கூட்டாளி களுடன் சிக்கினான். ஷார்ட்டி தயார் செய்த போலி டெபிட் கார்டுகளை வைத்து, 'ரன்னர்ஸ்' என்று அழைக்கப்படும் அவனது கூட்டாளிகளான திவ்யன், உதயகுமார், ராஜேந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் தனித்தனியாகப் போய் ஏ.டி.எம். மையங் களில் பணத்தைத் திருடி வருவார்களாம். நாங்கள் ஷார்ட்டி வீட்டில் மூன்று சொகுசு கார்கள், 5 லேப் டாப்கள், விலை உயர்ந்த 10 ஐ-போன்கள், ஸ்கிம்மர் மற்றும் என்கோடர் கருவிகளைக் கைப்பற்றினோம். அவற்றை கோர்ட்டில் ஒப்படைத்து இருக்கிறோம். இப்போது வெளிநாட்டில் இருந்து திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வழியை ஆராய்ந்து வருகிறோம். அவ்வப்போது பின் நம்பரை மாற்றி னால் மட்டுமே, இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தப்பித்துக் கொள்ள முடியும்'' என்றார்.

மின் அஞ்சல்: தமிழ் முஸ்லிம் நண்பர்கள் குழுமம்.

வெள்ளி, அக்டோபர் 21

கல்வி வளர்ச்சியில் நூலகங்கள்


கல்வி வளர்ச்சியில் நூலகங்கள்

-ஆளுரான் M.S அமானுல்லா, M.A(Eng);M.A(soc);ML.I.S;M.Phil(Eng);M.Phil(LIS)

 மனிதன் தான் கண்டதையும் தனக்கு தேவையானவற்றையும் தன்னையொத்த மாந்தருக்கு அவன் தெரிவிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

  அவ்வுந்துதல் விளைவாக தன் கருத்தில் பட்டவற்றை முதலில் சைகையாலும், அடுத்து மெல்ல, மெல்ல ஒலியெழுப்பி கூக்குரலிட்டும் புலப்படுத்த முற்பட்டான்.

  பின்னர் அவன் தான் கண்டதைக் களிமண்ணில் உருவாக்கியும், கல்லில் செதுக்கியும் உருவங்களைப் படைக்க முயன்றான்.

  பின்னர் வளர்ச்சியுற்ற மனிதன், தன் எண்ணத்தையும் கருத்தையும் மரப்பட்டையிலும், ஓலையிலும், தோலிலும், துணியிலும் பதிக்கலானான்.

  பின்னர், மனிதன் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை நூல்களில் பதிவு செய்தது மனித நாகரிக வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். நூலைப் படைத்தவன் ஒரு நாள் இறப்பான். ஆனால், நூல்கள் “சாகா” வரம் பெற்றவை.

  புத்தகங்கள் மகத்தான சக்தி படைத்தவை. புதிய சிந்தனைகள் உருவாகவும், நொடிக்கு நொடி புதிய கருத்துக்கள் தோன்றவும் புத்தகங்கள் தான் ஆதாரம்.

  சிந்திப்பவனே மனிதன். அத்தகைய சிந்தனையை செம்மையாக்க உதவுபவை நூலகங்கள் ஆகும். தகுதி, வாய்ந்த தலைவர்கள் சிறந்த தொண்டர்கள், சீருடைய செம்மல்கள், சிறப்பான வேந்தர்கள், வீரத்தளபதிகள், பேரறிஞர்கள், பாவலர்கள், நாவலர்கள் முதலியோரை  தோற்றுவிக்க உதவும் நூல்கள் ஆதரவற்றவர்களுக்கும் உரிய நண்பனாக விளங்குகின்றன. புத்தகங்கள் தொட்டறியக்கூடிய பயன்படுத்தவும் உதவ வேண்டும் 

  நூலகப் பணிகளை மேம்படுத்த நூலகர், வாசகர் வட்டம் அமைத்து சிறப்பு சொற்பொழிவு நடத்த வேண்டும். அறிஞர்கள் மேதைகள் பிறந்த நாட்களில் அவர்கள் சம்பந்தமான நூல்கள் வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். கலந்துரையாடல் வழி நுலகத்தின் எதிர்கால திட்டத்திற்கு வழி வகுக்க வேண்டும்.

  மத்திய அரசு மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் தேறுவதற்கு (I.A.S;I.P.S;UPSC TNPSC etc) தேவைப்படும் புத்தகங்கள், குறிப்புதவி, நூல்கள், கல்வி வழிகாட்டும் நூல்கள் இடம் பெற செய்ய வேண்டும். உயர்கல்வி சம்பந்தமான வலைத்தளங்கள் மேற்படிப்பு கையேடுகள், கல்விக்கடன், கல்வி ஊக்கத்தொகை அளிக்கும் நிறுவனங்களின் பட்டியல் தயாரித்து மாணவர்களுக்கு வாசகர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

  “சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்”
  என்ற வரிகளுக்கேற்ப படிக்கும் பழக்கத்தினை வளர்க்க வேண்டும். ஒரு மனிதருடைய அறிவு வளர்ச்சியில் நூலகங்கள் பெரிதும் துணை புரிகின்றன. நல்ல நூல்களை நாம் வாசிக்கும் போது நற்பண்புகளும், நற்குணங்களும் நம்மிடம் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

    ‘நவில்தொரும் நுல்நயம் போலும்’ நல்ல நூலின் நற்பொருள் கற்க மேலும் இன்பம் தருவது என்கிறார், வள்ளுவர்.

  லண்டன் நூலகத்தில் தன்னுடைய ஆய்வை மேற்கொண்டதினால் தான் காரல் மார்க்ஸ் பின்னாளில் பொதுவுடைமை தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.

  ‘தான்’ வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கியிருப்பதால் அதை முடிக்கும் வரை தமக்கு நடைபெறவிருந்த உயிர்காக்கும் அறுவை சிகிச்சையை தள்ளிப்போட முடியுமா’ என்று டாக்டர் மில்லரிடம் கேட்டாராம் அறிஞர் அண்ணா

  எனவே நம் சமுதாயத்தில் நிலவிவரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நல்ல தரமான நூலக சேவை மூலம்  நிவர்த்தி செய்யலாம்.

  புத்தகங்களால் தங்களது வாழ்க்கையை மாற்றி கொண்டவர்கள், உயர்த்தி கொண்டவர் பல லட்சக்கணக்கானோர் உண்டு. எனவே நம் இளம் தலைமுறையினர் இளமையிலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதானது வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும்; வளம் பெறச்செய்யும் என்பது திண்மை.

      “அறிவு அற்றம் காக்கும் கருவி செருவார்க்கு
       உள்ளழிக்க லாகா அரண்”
  என்பதை உணர்ந்து நூலகர்கள் தம் அறிவையும் நிர்வாகத் திறமையையும் பெருக்கி கற்றோர் மெச்ச தம் கல்வித் தொண்டை தொடர்ந்து கடமையாற்ற வேண்டும்.

  கல்லாமை இல்லாமை ஆக்குவோம். வீட்டிற்கொரு நூலகம் அமைப்போம். 
வாசிப்போம்; வளம் பெறுவோம்.

Source: 
http://www.mudukulathur.com/?p=8081



வியாழன், அக்டோபர் 20

தீ விபத்தில் பூத்த அரசியல் ஒற்றுமை!



தீ விபத்தில் பூத்த அரசியல் ஒற்றுமை!

நேற்று (19.10.11)மாலை 6.30 மணியளவில் மயிலாடுதுறை பெரிய கடைத்தெருவில் சம்பவித்த பெரும் தீ விபத்தில்  செருப்புக்கடை ஒன்றும்  சில துணிக்கடைகளும் எரிந்து சேதமடைந்தன. இந்த வருத்தத்துடன் புறமெங்கும் வெப்பமும் அனலும் வாட்டி எடுத்த போதிலும்  மயிலாடுதுறை அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடில்லாமல் ஒன்று சேர்ந்து உதவி செய்தது மக்கள் மனங்களைக் குளிர வைத்தது.
சுற்றிலும் அநேக கிராமங்களைக் கொண்டிருக்கும் மயிலாடுதுறை எப்போதும் வியாபாரம் களைகட்டும் வணிக நகரமாகும். தீபாவளிப் பண்டிகை, உள்ளாட்சி தேர்தல் என்று 'கொண்டாட்டக் காலமாய்' போய்விட இப்போது இன்னும் மும்முரம். உள்ளாட்சித் தேர்தலுக்காக விடுமுறையும் விடப்பட்டிருந்ததால், மினி ரங்கநாதன் தெருவைப் போலவே பெரிய கடைத் தெரு 'காட்சி'யளித்துக் கொண்டிருந்த போது தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

மூன்றடுக்கு செருப்புக் கடையான "ஜனதா சப்பல்ஸில்" 'எப்படியோ' தீ பிடித்துவிட, அந்தத் தீ மளமளவென்று பரவத் தொடங்கியது. தீபாவளி நேரம் என்பதால் பட்டாசுக் கடைகள் வேறு உள்ளுக்குள் 'பயமாய் பயமுறுத்திக் கொண்டிருந்தன.  ஆனாலும், தீ மேலும் பரவாமல் அணைப்பதில் மயிலாடுதுறை அரசியல்வாதிகள் காட்டிய அக்கறையும் ஒற்றுமையும் மெச்சத் தகுந்த விதத்தில் இருந்தன என்றால், இந்த 'ஆர்வக்கோளாறு'  பொதுமக்கள் தான்  தீயணைப்பு வண்டிகளின் நடமாட்டத்திற்குத் தடையாக அமைந்திருந்தனர்.  வேதனை நேரத்திலும் வேடிக்கை மட்டுமே  பார்க்கவும் சிலர் இருக்கிறார்களே!

உயிரிழப்பு ஏற்படாமல் இருந்தது பெரும் ஆறுதல். அதைப்போலவே, அந்தத் தேர்தல் மும்முரத்திலும் 'தேர்தலாவது, மண்ணாவது' என்று  ஓடோடி வந்து உதவிய அதிமுகவின் செந்தமிழன், திமுக வின் செல்வராஜ் (குண்டாமணி),  தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பால அருள்செல்வன், திமுகவின் எஸ்கொயர் சாதிக், வர்த்தகர் சங்க பாண்டு, சீமாட்டி கடை உரிமையாளர்,  பாஜகவின் நாஞ்சில்பாலு, உடனடியாக நேரில்  வந்திருந்து, வேண்டிய  உதவிகளைத் தனது கைபேசி மூலமே முடுக்கி விட்ட ஒ.பி.எஸ் மணியன் (நாடாளு மன்ற உறுப்பினர்)  ஆகிய  அரசியல்வாதிகளின் ஒற்றுமை இங்கு நன்றியுடன் குறிப்பிடத்தக்கது.

அசம்பாவிதங்கள் நிகழும் போது மட்டும் அபூர்வமாக வெளிப்படும் இந்த ஒற்றுமை, எல்லா காலங்களிலும் வெளிப்பட்டால் எப்படியிருக்கும்!. பேரிடர் தீயில் பூத்த இந்த ஒற்றுமை உணர்வு, எந்தப் பெருமழையிலும் அடித்துச் செல்லப்படாதிருக்கப் பிரார்த்திப்போம்!.

செவ்வாய், அக்டோபர் 18

தமிழ்மணம் ??????

1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...

2.தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.

3.தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!

4.தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

5.தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!

6.தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?

7.தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..

8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க 

9.மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!

10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..? 

11.தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா 

12.அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >

13.தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா??? 

14.தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்

15.தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!

16.விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?

17.தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...

19.தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்

20.தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!

21.யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

22.பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். 

23.தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ? 

24.சீ தமிழ் மனமே .. 

25.தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?



26.மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்

27.தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?

28.அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்ம'ண/ன‌'ம் 

29.தமிழ்மணமே மன்னிப்புக்கேள் 3

30. தமிழ்மணம் பெயரில் மட்டும் 

31.தமிழ்மணத்தின் வக்கிர புத்தி

32. தமிழ்மணத்தை நான் போடா வெண்ணை என்றேனா, இல்லை தமிழ்மணம் என்னை போடா வெண்ணை என்று சொல்லுமா...??? 

33. தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்

34. தமிழ்மணத்துக்கு ஒரு பகிரங்க கடிதம்..... 



35. தமிழ்மணத்தின் பெயரிலியே ......


37. நறுமணத்தை தவிர மற்றதெல்லாம் பரப்பும் தமிழ்மணத்திற்கு !!


38. தமிழ் மணம்

வியாழன், அக்டோபர் 13

செம்மறி ஆடுகளா?


மேற்கத்திய நாடுகளுக்கு ஈரான் கடும் கண்டம் அமெரிக்கா வெளிநடப்பு................!!

ஒசாமா பின்லேடனை நீதியின் முன் நிறுத்தாதது ஏன்?................!!

அமெரிக்காவுக்கு செருப்படி கொடுத்த ஈரான் அதிபர்.................!!


நியூயார்க், செப்டம்பர் 23 ஐ.நா. பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசிய ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத், மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடினார். அந்நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதைக் குறை கூறி அவர் அவ்வாறு சாடினார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் பொதுச் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஹிட்லர் செய்த கொடுமைகளை காரணமாக வைத்துக்கொண்டு இஸ்ரேலுக்கு மேற்கு நாடுகள் அசைக்கமுடியாத ஆதரவு தந்து வருகின்றன. அதேநேரத்தில் அவை பாலஸ்தீன மக்களின் மீதான ஒடுக்குமுறைக்குத் துணை போகின்றன என்று முகமது அஹமதி நிஜாத் கூறினார்.


தன்னுடைய உரையில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதல் சந்தேகத்திற்கிடமானது என்றும் இச்சம்பவத்துக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட ஒசாமா பின் லேடனை நீதியின் முன் நிறுத்தாமல், அவரைக் கொன்று கடலில் தூக்கி எறிந்தது ஏன் என்றும் முகமது அஹமதி நிஜாத் கேள்வி எழுப்பினார்.


தங்கள் ஆதாயம், ஏகாதிபத்தியம் ஆகிய இலக்குகளை நிலைநாட்ட மேற்கு நாடுகள் போலித்தனமாகவும் ஏமாற்றுவித்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. ராணுவத் தலையீடுகள் மூலம் பல்வேறு நாடுகளின் அடிப்படைக் கட்டுமானத்தை சீர்குலைப்பதுடன் அந்நாடுகளை பலவீனப்படுத்துகின்றன. தங்களையே சார்ந்திருக்க வைப்பதன் மூலம் அந்நாடுகளின் வளங்களை மேற்கு நாடுகள் கொள்ளையடித்து வருகின்றன என நிஜாத் கண்டித்தார்.

நிஜாத் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்க பிரதிநிதி பாதியிலேயே எழுந்து வெளியே சென்றார். இதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனின் 27 நாட்டுப் பிரதிநிதிகளும் ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.


செய்தி: தினமணி

திங்கள், அக்டோபர் 10

நூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்து ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக விழுவதுபோல்,...



நூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்து ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக விழுவதுபோல்,...PrintE-mail


தன்னிடம் பாதுகாப்பதற்காகக் கொடுத்து வைக்கப்பட்ட
அமானிதத்தை 
உரியவரிடம் ஒப்படைக்காமல்
தான் உபகோப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படுமானால்,


ஸகாத்தை வரியாக கருதப்படுமானால்,


தீனுக்காக இல்லாமல் 
உலக ஆதாயத்துக்காகக் கல்வி கற்கப்படுமானால்,


ஒருவர் தன் மனைவிக்கு வழிபட்டு 
தாய்க்கு மாறு செய்யத் துவங்கினால்,


தன் நண்பனை நெருக்கமானவனாகவும் 
தந்தையை தனக்குத் தூரமாகவும் கருதுவானேயானால்,


மஸ்ஜித்களில் பகிரங்கமாகக் கூச்சல் போடப்படுமானால்,


பெரும்பாவி ஒரு சமுதாயத்தினருக்குத் 
தலைவனாக ஆக்கப்படுவானேயானால்,



ஒரு கூட்டத்தினரின் நிர்வாகப் பொறுப்பு 
மிகக் கேவலமானவனிடம் ஒப்படைக்கப்படுமேயானால்,



ஒருவனின் கெடுதியை விட்டும் தப்பிப்பதற்காக 
அவனுக்கு கண்ணியமளிக்கப்படுமேயானால்,


மது அருந்துவது சர்வ சாதாரணமாக ஆகிவிடுமேயானால்,


சமுதாயத்தின் முன்னோர்களை பின்னோர்கள் தூற்றுவார்களேயானால்,


செந்நிறக்காற்று, பூமியதிர்ச்சி, பூமியில் புதையுண்டு போதல், 
மனிதர்களின் முகங்கள் உருமாற்றப்படுதல், 
வானத்திலிருந்து கல்மாரிப் பொழிதல் 
ஆகிய வேதனைகளை எதிர்பார்த்திருங்கள்.
அதே போல் நூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்துவிட்டால் 
ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக விழுவதுபோல், 
தொடர்ச்சியான வேதனைகள் வருவதையும் எதிர்பார்த்திருங்கள்.’ 
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள், நூல்: திர்மிதீ)
  
எந்த சமுதாயத்தில் ஙனீமதட பொருளில் பகிரங்கமான மோசடி நடைபெறுமோ, அவர்களின் உள்ளங்களில் எதிரியைப் பற்றிய 
திடுக்கம் போடப்படும்.


விபச்சாரம் எந்த சமுதாயத்தில் பொதுவாகப் போய்விடுமோ, 
அவர்களில் மரணம் அதிகரித்துவிடும்.


எந்தச்சமுதாயம் அளவை, நிறுவையில் குறைவு செய்யுமோ, 
அவர்களுடைய உணவு எடுக்கப்பட்டுவிடும்.
அச்சமுதாயத்தினரின் தேவைகள் நிறைவேறாமல் போய்விடும்.


தீர்ப்பு வழங்குவதில் எந்தச் சமுதாயம் அநியாயம் செய்யுமோ, 
அவர்களில் ரத்தம் ஓட்டுவது அதிகரித்துவிடும்.


எந்தச்சமுதாயம் ஒப்பந்தத்தை மீறுமோ, 
அவர்களின்மீது எதிரிகள் சாட்டப்படுவர்.’ 
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: முஅத்தா)


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
"முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பானவர்,
ஒருவரை தன் உறவினர் அல்லது நண்பர் என்ற ஒரு 
காரணத்திற்காக மட்டுமே முஸ்லிம்கள் மீது அதிகாரியாக
 நியமித்து விடுவாராயின், அவர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும்.
மறுமைநாளில் அவன் தரப்பிலிருந்து எந்தவித மீட்புப்பணம் 
கொடுக்கப்பட்டாலும் அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டான். 
இறுதியில் அவனை நரகத்தில் வீசியெறிவான்!''
(அறிவிப்பாளர்: யஸீத் பின் அபீஸுயான் ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: கிதாபுல் கராஜ், இமாம் அபூ யூஸுஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி

http://www.nidur.info/

ஞாயிறு, அக்டோபர் 9

இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை கருவி.

இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை கருவி.
இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கைக்கான முழு சோதனை வருகிற 12ம் திகதி நடைபெறுகிறது.மக்கள் வெளியேற்றம் உட்பட இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் சோதனை நடவடிக்கைகள் இதில் இடம்பெறுகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டரில் 9.2 புள்ளிகளாக பதிவான அதனால், சுனாமி பேரலைகள் எழுந்து இந்தியா உட்பட 14 நாடுகளின் கடலோர பகுதிகளை தாக்கின. நிலநடுக்கம் ஏற்பட்டு 12 மணி நேரத்துக்கு பிறகு கடைசியாக தென் ஆப்ரிக்க கடலோரத்தில் சுனாமி தாக்கியது.இந்த இயற்கை சீற்றத்துக்கு 2.3 லட்சம் பேர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் காணாமல் போயினர். இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரள கடலோரங்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

இதையடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை நடைமுறை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ நடவடிக்கை எடுத்தது. 2005ம் ஆண்டு இதற்கான இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.அதன் பிறகு நிலநடுக்கம் ஏற்படும்போதெல்லாம் ஜப்பான் புவியியல் மையம் மற்றும் சுனாமி எச்சரிக்கை அமைப்பின் மூலம் 28 நாடுகளுக்கு உடனுக்குடன் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

2012ம் ஆண்டு வரை அது தொடரும் என்ற போதிலும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு தனி சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான சோதனை வருகிற 12ம் திகதி நடக்கிறது.அதில் இந்தியா, மலேசியா உட்பட பல நாடுகள் ஒத்துழைக்க உறுதி அளித்துள்ளன. அதன்படி போலியான சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு கடலோர பகுதி மக்கள் மீட்பு மற்றும் சுனாமி நிர்வாகம் ஆகியவை சோதனை செய்யப்பட உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

12ம் திகதி சோதனையில் பங்கேற்க இந்தியா, அவுஸ்திரேலியா, வங்கதேசம், காமரோஸ், பிரான்ஸ், இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், செஷல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, திமோர், ஏமன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

வெள்ளி, அக்டோபர் 7

மனிதன் காலடித்தடம் பதிக்காக 10 இடங்கள்!!


மனிதன் காலடித்தடம் பதிக்காக 10 இடங்கள்!! – 

புகைப்படங்கள்


மனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் இருக்கிறது! – (The Unexplored Area)
அதில் முக்கிய பத்து (10) இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. Northwest Siberia – வடமேற்கு சைபீரியா
Northwest-Siberia



2. Caves – குகைகள்
இன்றும் பல குகைகள் உலகில் கண்டறியப்படவில்லை, இதன் காரணம் அதில நிறைந்த பல மர்மங்கள், பல அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்பதால் மனிதன் இன்னும் தயங்குகிறான்.
Caves



3. Amazon Rain-forest – அமேசான் மழை காடுகள்!
Amazon-Rainforest



4. Antarctica – அன்டார்டிகா
Antarctica



5. Mariana Trench & Deep Sea Ocean – மரியானா அகழி & ஆழ்கடல்கள்!
Mariana-Trench-Deep-Sea-Ocean



6. Deserts – பாலைவனங்கள்!
Deserts



7. Gangkhar Puensum, Bhutan – கங்க்கார் பியுன்சும் – புட்டான்
Gangkhar-Puensum-Bhutan



8.Icecap; Greenland – உறைபனிக்கட்டி, கிரீன்லாந்து
Icecap-Greenland



9. Mountains of Northern Columbia – வட கொலம்பியாவின் மலைகள்
Mountains-of-Northern-Columbia



10. Central Range, New Guinea – புது குனியா மலைத் தொடர்கள்
Central-Range-New-Guinea