Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், பிப்ரவரி 28

மொபைல் போனை எப்படி யூஸ் பண்ண வேண்டும்?

மொபைல் போனை எப்படி யூஸ் பண்ண வேண்டும் கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க!!* சார்... உங்க மொபைல் ரிங் டோன் சத்தம் உங்களுக்கு கேட்டால் மட்டுமே போதும். சும்மா ஊரையே கூப்பாடு போடற மாதிரி வைக்க வேண்டாம். * தேவையிலாத இடத்துல லவுடு ஸ்பீக்கர் போடாதிங்க.. அது உங்களுக்கும் இடைஞ்சல். உங்கள சுத்தி இருக்கறவங்களுக்கு இம்சை. அதோடு உங்களுக்கு பிரச்சனையும் வர வாய்ப்பு உள்ளது.


* அடுத்தவங்க மொபைல் போனை தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. அப்படி யூஸ் பண்ற நெலமை வந்துச்சுன்னா அந்த மொபைல் போனை நோன்டாதிங்க. அதுல இருக்கற எஸ் எம் எஸ் பாக்கிறது, பிக்சர்ஸ் பாக்கிறது, போன்ற விசயங்களை தவிர்த்துருங்க.


* அப்புறமா கான்பிரன்ஸ் கால் ஒருவருக்கு தெரியாம போடாதிங்க. எல்லோருக்கும் இன்பார்ம் பண்ணிட்டு கான்பிரன்ஸ் போடுங்க. அது உங்களுக்கும் நல்லது எதிர் தரப்புக்கும் நல்லது.


* ஸ்க்ரீன் சேவர் படங்கள் வச்சிருப்பிங்க. அதுல என்ன வச்சிருக்க கூடாது என்ற விசயத்தில் கவனமா இருங்க. நடிகர், நடிகைகள், சாமியார்கள் போன்றோர்களின் படங்களை வைத்து நீங்கள் இப்படித்தான் என மற்றவர்கள் நினைக்கும் படி வைக்காதிங்க.


* ஆபீஸ் லீவு, இறப்பு அறிவிப்பு, விபத்து போன்ற சில விசயங்களை எஸ் எம் எஸ் மூலமா அனுப்பாதிங்க. கால் பண்ணி பேசிருங்க. அது தான் நல்லது.


* ஒருத்தருக்கு கால் பண்றதுக்கு முன்னாடி நாம் பேச வேண்டிய விஷயத்தை தெளிவா சுருக்கமா செய்தியோட முக்கியத்துவத்தை தெரிஞ்சு வச்சிட்டு பேசணும்.


* தேவையான விசயத்த மட்டும் பேசுங்க... தேவையில்லாத அரட்டையை கொறச்சுக்கங்க. தேவையில்லாத அரட்டையினால மொபைல் பேலன்ஸ் கொறஞ்சும், டைமும் வேஸ்டா போயிரும்.


* ஆபீசில் உங்கள் மேல் அதிகாரிக்கு தெரிவிக்கும் அன்றாட விசயங்களை தினமும் போன் செய்து இன்பார்ம் செய்யாமல் அவர் அனுமதி வாங்கி எஸ் எம் எஸ் அனுப்பிருங்க. அவரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தாலும் தொந்தரவு இல்லாம சொல்ல வேண்டிய செய்தியை சொல்லிரலாம்.


* போன் பேசும் போது தேவையிலாத சத்தங்களை கொறச்சு வச்சிருங்க. டி வி, ரேடியோ போன்றவைகளின் சத்தத்தை கொறைங்க. அதனால் எதிர் தரப்பில் பேசுபவர்க்கு தேவையில்லாத தொந்தரவை தவிர்க்கும்.


* வெரி லோ பேலன்ஸ், லோ பேட்டரியில் சுவிட்ச் ஆப் போன்ற நிலைகளை தவிர்க்க பாருங்க. இதனால சில முக்கிய கால்கள் பேச முடியாமல் போயிரும்.


* ஆபீஸ்ல உங்க மொபைல் பில்லை கட்டினாலும் நீங்க வரைமுறை தாண்டாம அளவா யூஸ் பண்ணுங்க. தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. கரெக்டா யூஸ் பண்ணினா உங்களை பத்தி ஆபீசுல நல்ல நேம் கிடைக்கும்.Jasahkallah khair: Mohamed Sidik From Facebook

திங்கள், பிப்ரவரி 27

திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!

திருட்டு வாகனமா..? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, 
அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், 
சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை 
உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.

92123 57123 என்ற எண்ணுக்கு vahan TN49L8426 வாகனத்தின் பதிவு எண்ணை 

இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், 
அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர்,வாகனத்தின் வகை, 
வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி 
ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.

இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட 

வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். 
அல்லது, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக 
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.

- மோட்டார் விகடன் (http://www.facebook.com/MotorVikatan)

புதன், பிப்ரவரி 15

புற்றுநோயை தடுக்கும் உண்ணாவிரதம்!


புற்றுநோயை தடுக்கும் உண்ணாவிரதம்!

Prostate cancer cells photo
சிறிய கால அளவிலான உண்ணாவிரதம் புற்றுநோயை தடுக்கும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

சிறிய கால அளவிலான உண்ணாவிரதம் புற்றுநோயை தடுப்பது மட்டுமல்லாது, நாம் எடுத்து வரும் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் பலனை விரைந்து கிடைக்கச் செய்யும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் புற்றுநோய் கட்டிகள் மற்ற இடங்களில் பரவுவதையும் தடுக்கிறது. 

கீமோதெரபி சிகிச்சையின் போது இந்த சிறிய கால அளவிலான உண்ணாவிரதம் இருத்தல், சில வகை புற்றுநோய்களையும் குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த மேல் ஆராய்ச்சிக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், அதுகுறித்த பணிகள் நடைபெற்று வருவதாக ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த ஆராய்ச்சி குறித்து எலியை வைத்துக் கொண்டு சோதனை நடத்தியதாகவும், அதில் இம்முடிவுகள் வெளிப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாப்பிடாமல் இருக்கும் போது புற்றுநோய் செல்கள் ஓய்வுநிலை அல்லது உறக்கநிலைக்கு சென்றுவிடுவதாகவும், இதன்மூலம் அவைகள் பெருக்கமடைவது மற்றும் பிரிந்துசெல்வது தடுக்கப்பட்டு இறுதியில் அழிந்தும் விடுவதும் கண்டறியப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


நோன்பை பற்றி அல்-குர் ஆன் வசனங்கள்:
2:183ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
2:184(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்)நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).

வெள்ளி, பிப்ரவரி 10

அறியாத சில விசயங்கள் பகுதி-3

அறியாத சில விசயங்கள் பகுதி-3


o இடிதாங்கி எவ்விதத்தில் வேலை செய்கிறது? 

ஆகாயத்தில் உள்ள மேகங்களின் அடிப்பரப்பில் நேர்மின் (+) தோன்றுவதாக உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். அப்போது தரையில் எதர்மின் (-) தோன்றும். இந்த மின்னானது கூர்மையாக உள்ள பகுதிகளில் திரண்டு நிற்கும் தன்மையுடையது. கூர்மையான பகுதிகளில் காற்று துகள்கள் படும்போது அவற்றிலிருக்கிற மின்கள் கூர் முனை விளைவு என்ற முறையில் அடித்து செல்லப்பட்டு விடும். இதனால் தரையிலுள்ள் மின்னின் வீ¡¢யம் குறைந்து விடும். அப்படி மேலே போகிற மின், மேகத்திலுள்ள நேர்மின்னின் வீ¡¢யத்தையும் குறைத்துவிடும். இதனால் தான் இடிதாங்கிகளின் மேல்முனைகள் கூர்மையாக அமைக்கப்படுகின்றன. அதையும் மீறிய அளவில் மின்கள் தோன்றி இடி விழுகிற நிலை ஏற்பட்டால், இடியிலுள்ள மின்சாரம் சுலபமாகக் கடந்து செல்லக் கூடிய உலோகப் பொருள்களைத் தேடிப்பிடித்து இறங்கும். அதற்காக இடிதாங்கியில் ஒரு செப்புக் கம்பியை இணைத்துத் தரையில் புதைத்து விட்டால் இடி மின்சாரம் கட்டடத்துக்கு வெளிப்புறமாக உள்ள அந்தக் கம்பியின் வழியாகப் பாய்ந்து தரையிலிறங்கிவிடும். கட்டடத்துக்குச் சேதம் ஏற்படாது.o மின்சாரக் கசிவு எதன் காரணமாக ஏற்படுகிறது?
இதைத் தடுத்து விபத்திலிருந்து மீளுவது எப்படி?மின் கம்பிகளின் மேலுள்ள் இன்சுலேட்டர் சேதமடைந்து கம்பி ஏதாவது மின் கடத்துகிற பொருளின் மேல் படுவதால் மின் கசிவு ஏற்படும். இதைத் தடுக்க வேண்டுமானால் கையில் ஒரு டெஸ்டரை வைத்துக் கொண்டு சந்தேகப் படுகிற இடத்தையெல்லாம் தொட்டுப் பார்த்து அங்கங்கே இன்சுலேஷன் சா¢யாக உள்ளதா என்று சோதித்து விட வேண்டும்.


o குடிநீரை ஒரு சி்ரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் என்ன நிகழும்?


குடிநீரை ஒரு சிரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் நிகழ்வது நீ¡¢ன் தன்மையைப் பொருத்து உள்ளது. கொதிக்க வைக்கப்பட்ட, வடிகட்டப்பட்ட, சுத்தமான நீராக இருந்தால், இரத்தத்தில் கிரகிக்க்பட்டு சிறு நீ¡¢ல் வெளியேறி விடுகிறது. அசுத்தமான நீர் உட்செலுத்தப்பட்டால் சீழ்கட்டி உண்டாகும். பெரும்பாலான ஊசி மருந்துகள் நீ¡¢ல் கலக்கப்படடே கொடுக்கப்படுகின்றன.

o ஹெலிகாப்டர் அந்தரத்தில் ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரம் நிலையபக நிற்கிறது இது எப்படி?அவ்வாறு நிற்பதற்கு ஹெலிகாப்டர் பெற்றுள்ள் தகவமைப்புகள் என்ன? ஹெலிகாப்டா¢ன் மேலே உள்ள விசிறி காற்கைக் குடையும் போது மேலே இழுக்கப்படுகிறது. திருகாணியைச் சுழற்றினால் அது மரத்துக்குள் போகிறதல்லவா? அதேபோல திருகு வடிவத்தில் காற்றைக் குடையும் படி அந்த விசிறிகள் அமைந்திருக்கும். விசிறிகள் மேலே தூக்கப்படும்போது ஹெலிகாப்டரும் மேலே உயர்த்தப்படும். ஆனால் இவ்வாறு மேலே உயர்த்துக்கிற விசை ஹெலிகாப்டா¢ன் எடைக்குச் சமமாக இருக்கும்போது ஹெலிகாப்டர் அந்தரத்தில் அசையாமல் நிற்கும். விசிறியோடு சேர்ந்து ஹெலிகாப்டரும் சுழலாமலிக்க அதன் வால்பகுதியில் ஒரு விசிறி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கும்.


o தாமரை இலையில் தண்ணீரை விட்டுப் பார்த்திருக்கிறீர்களா?


அது ஒட்டவே ஒட்டாது. முத்து முத்தாகத் தண்ணீர் உருண்டு ஒடும். அது போலவே வாத்தின் முதுகிலும் நீர் ஒட்டாது.
o ஒட்டகம் போல் தண்ணீர் உணவு ஏதுமின்றி நீண்ட நாட்கள் வாழக் கூடிய இன்னொரு பிராணி எது தொ¢யுமா?


காட்டு ஆடு.
o பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகளே கிடையாது.
o யானையின் துதிக்கையிலே 40000 தசைகள் உண்டு. ஆனால் ஒர் எலும்புக் கூட கிடையாது.
o இரண்டு மனிதர்களை சுமந்து கொண்டு குதிரையைப் போல வேகமாக ஒடவல்ல சக்தி வாய்ந்தது, தீக்கோழி.


o உடம்பில் சிலருக்குத் திட்டுத் திட்டாக தேமல் முகம், உடம்பில் படரும். இதை நீக்க ஒரு புதிய மருந்து:
ஹைபோ உப்பைச் சுடுநீ¡¢ல் கரைத்து ஒரு பஞ்சினால் தடவி வ்நதால் தேமல் மறைந்து விடும். ஹைபோ உப்பு என்பது பிலிம் நெகடிவ்களைக் கழுவ உதவும் ஒர் இரசாயனப் பொருள்.


o அதிக அளவில் ரப்பரை உற்பத்தி செய்து வரும் நாடு 
மலேசியா.o நீரிலும் விண்ணிலும் நன்கு செயல்படக் கூடிய திறனுடைய விமானப்படகு இப்போது இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்த நேரங்களில் இது பெரிதும் உதவும் என்பதால் இங்கிலாந்திடம் இது பொ¢தும் உதவும் என்பதால் இஙகிலாந்திடம் ஒரு மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க பல நாடுகளும் வரிசையில் நிற்கின்றனவாம். உலகில் இத்தகைய இரகப்படகு இது ஒன்றுதான். இந்த படகின் பெயர் என்ன தெரியுமா? சுந்தர் லேண்ட்


o பூமியிலிருந்து பார்க்கும் பொழுது வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது. ஆனால் விண்வெளியில் வானம் கறுப்பாகத் தோன்ற காரணம் என்ன?

பூமியின் மேல் உள்ள காற்றுமண்டல அடுக்குகளில் ஏற்படும் ஒளிச் சிதறலால் நீல நிறம் தெரிகிறது. விண்வெளியில் இவ்விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
o நம் உடம்புக்கு சிறிதளவு அயோடின் என்ற இராசாயனப் பொருள் தேவைப்படுகிறது. இது உணவின் மூலம் கிடைக்காவிட்டால் காய்டர் கட்டிகள் உண்டாகின்றன. அயோடின் கடல்மீன், கடல் பாசிகளில் அதிகம் இருக்கிறது. மீன் மற்றும் கடல் உணவுகளில் அயோடின் இருப்பதால் இவற்றைச் சாப்பிடுகிறவர்களுக்கு காய்டர் கட்டிகள் உண்டாவதில்லை. கடற்கரைக் காற்றில் அயோடின் கலந்து வருவதால் காற்று வாங்கக் கடற்கரைக்குப் போகலாம்.o உலகிலேயே பாராசூட் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் ஈடுபடும் வீரர்கள் ரஷ்யாவில் தான் இருக்கிறார்கள். இந்த விளையாட்டில் செய்யப்பட்ட 63 உலக சாதனைகளுள் 50 சாதனைகளை ரஷ்ய வீரர்கள் தாம் செய்துள்ளனர். எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள இது சம்பந்தமான பயிற்சியில் பங்கு கொள்கின்றனர்.


o உலகிலேயே கென்யா நாட்டில் தான்அதிக அளவில் பிறப்பு விகிதம் அதிகமாகிறது. 1000 பேர்களுக்கு 55 குழந்தைகள் என்ற கணக்கில் குழந்தைகள் பிறப்பு விகிதம் உள்ளது. மிகப் பொ¢ய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நாடு இது. பால் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆப்பி¡¢க்க நாடுகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலும் எல்லோரும் விவசாயிகள். நன்கு உழைக்கக் கூடியவர்கள். அதனால் குழந்தைகளும் ஆரோக்கியமாகவே பிறக்கின்றன.o ஆசியாவிலேயே மிகப் பெரிய காற்றாலை மின்சார நிலையம் இந்தியாவில் தான் உள்ளது. 10 மெகாவாட் மின்சாரம் தயா¡¢க்கும் திறனுடைய இந்த மின்சார நிலையம் குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்திலுள்ள லம்பா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


o டெலஸ்கோப் எவ்விதம் செயல்படுகிறது?

டெலஸ்கோப்பில் இரண்டு சமதள கண்ணாடிகள் ஒன்றுக்கொன்று இணையாக 4 சாய்வில் பொருத்தப்பட்டிருக்கும். மேலேயுள்ள பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள் முதல் ஆடியில் பட்டு ஆடி 45 சாய்வில் உள்ளது. 90 யில் பிரதிபலித்து கீழே உள்ள அடியில் படும் அந்த அடி 45 சாய்வில் உள்ளதால் 90 யில் பிரதிபலித்து ஒளிக்கதிர் பார்ப்பவருடைய கண்ணை வந்தடையும். இந்த டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி கடலுக்கடியில் மூழ்கியிருந்தபடியே கடலின் மேலே கப்பல் வருவதையும், குகைகளில் பதுங்கிக் கொண்டே வெளியில் வருகின்ற அபாயக்களையும் அறிந்து கொள்ள முடியும்.


o பாம்பு எவ்விதம் ஒடுகிறது? அதற்குக் கால் உண்டா?

பாம்புக்குக் கால்கள் கிடையாது. அடிப்புறச் செதில்களாலேயே பாம்பு தரையைப் பற்றி ஒடுகிறது. செதில்கள் பின்புறமாகத் தரையில் பிடிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே பாம்பு முன்னோக்கி நகர்ந்து பின்னர் பின்னோக்கி நகரும் போது செதில்கள் தரையில் மோதிக் கொள்வதால் உந்திக் கொண்டு மறுபடியும் முன்னோக்கி நகர்ந்து, இப்படித்தொடர்ந்து செல்கிறது.


o பல்லி தலை கீழாகக் கூட எப்படி நடக்க முடிகிறது?

பல்லியின் கால் பாதங்களில் உட்குழவு இருக்கும். தன் பாதங்களினால் முதலில் சுவர் அல்லது தரையில் பதிய வைக்கும். பிறகு பாதத்தைச் சுருக்கும்போது உட்குழிவுகளில் வெற்றிடம் உண்டாகிறது. வெற்றிடம் உண்டாவதால் அதனை நிரப்ப வெளிக்காற்று அங்கு வரும். அதனால் பாதம் பிடிப்பை விடாது. இவ்விதம் பல்லி தலை கீழாக நடக்க முடிகிறது.

o இரததம் உறைதல் என்றால் என்ன?

உடலில் ஏதேனும் வெட்டுக்காயம் ஏற்பட்டால் அப்போது இரத்த நாளங்கள் வெட்டுபடும் போது அதனின்று இரத்தம் பீறிக் கொண்டு வெளியேறும். ஆனால் சிறிது நேரத்தில் அது தானாகவே நின்று விடும். ஏனென்றால் இரத்தத்திலுள்ள் ·பைப்ரினோஜன்' எனப்படும் நார்புரதம் வெளிக்காற்றில் பட்டவுடன் ஒர் வலை போலப் பின்னிக் கொண்டு மேற் கொண்டு இரத்தம் வெளியேறாமல் காக்கும். இதற்கு இரத்தம் உறைதல் என்று பெயர்.


o பயத்தினால் சிலருக்கு வாயிலும் மூக்கிலும் இரத்தம் வடிந்து இறந்து விட நோ¢டுவது எதனால்?

பயத்தின் போது இதயம் மிக வேகமாகச் சுருங்கி வி¡¢கிறது. அப்போது திடீரென இரத்தம் அதிக அழுத்தத்தில் இரத்தக் குழாய்களின் மூலம் செலுத்தப்படுகிறது. அதிக அழுத்தத்துடன் இரத்தம் இவ்வாறு இரத்தக் குழாய்களின் வழியே செல்லும்போது திடீரென சில வேளைகளில் இரத்தக் குழாய் வெடித்து விடும். அதனால் இரத்தம் வெளியேறி வாய், மூக்கு வழியாக வடியும், அதனால் மனிதன் இறந்து விடக்கூடும்.


o வெற்றிலை போடும் பழக்கம் நல்லதா கெட்டதா?

வெற்றிலை போடும் பழக்கம் ஒரு வகையில் நல்லதே. ஆனால் அதிகமாகப் போடக் கூடாது, கட்டாயமாகப் புகையிலை சேர்கக்க் கூடாது. வெற்றிலை ஜீரணத்திற்கு தேவையான பொருள்கள் அடங்கியுள்ளன. அத்துடன் சேர்த்து நாம் உட்கொள்கிற சுண்ணாம்பில் கால்ஷியம் இருப்பதால்நம் உடலுக்குக் கால்ஷியம் சத்து கிடைக்கிறது.


o இறைக்க இறைக்கக் கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்?

கிணற்று நீரை இறைக்காமல் இருக்கும்போது அதிலுள்ள் நீரின் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது.
ஆனால் நீரைவெளியேற்றும்போது அங்குள்ள நீரின் அழுத்தம் குறைகிறது. அப்போது கிணற்றின் சுற்றுப்புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின் வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு செய்கிறது.


o மண் பானையில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சியாக இருப்பதேன்?

மண்பானையில் நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர் வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான அதிகப்படி உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீ¡¢லிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நீ¡¢ன் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து காணப்படும். அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.


o ஒர் இரும்புக் குண்டை கடலில் போட்டால் மூழ்கிவிடும். அதே இரும்பு தட்டையாக, தகடாக கடலில் போடப்பட்டால் மூழ்குவதில்லை. காரணம் என்ன தெரியுமா?

தண்ணீரில் போடப்படும் பொருளின் எடையை விட அது வெளியேற்றும் நீரின் எடை அதிகமாக இருந்தால் அது மிதக்கிறது. எனவே தட்டையான இரும்பு மிதக்கிறது.


ஜசகல்லாஹ் கைர் Engr.Sulthan