Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், நவம்பர் 28

முப்பதுக்குள் வரும் முடிவு

முப்பதுக்குள் வரும் முடிவு

SIster கீதா

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது சுவரில் இப்படி எழுதியிருந்தார்.

‘முன்னாடியெல்லாம் பாண்டிச்சேரின்னா, ‘கிர்ர்ர்’ருன்னு இருக்கும். இப்போ அந்தப் பேரைக் கேட்டாலே, ‘கொர்ர்’ன்னு இருக்கு. தமிழ்நாடுன்னு சொன்னால்தான் இப்பல்லாம் ‘விர்ர்’ன்னு இருக்கு’ - இந்தக் கருத்தில் நையாண்டி இருக்கலாம். ஆனால், இதற்குப் பின்னே உள்ள வேதனையை குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களால்தான் உணர முடியும்.


முதல்வர் ஜெயலிதா கடந்த தனது ஆட்சியில் டாஸ்மாக்கைக் கொண்டு வந்தபோது, அவரே அது இந்த அளவுக்குப் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது ஆண்டுக்கு கிட்டதட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தருகிறது டாஸ்மாக். இந்த வருமானம், அரசாள்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், டாஸ்மாக் கடைகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைக் கேட்டால், கண்களில் ஓரம் நீர்த்துளிகளே வெளிப்படும். கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக்தான் லட்சக் கணக்கானவர்களின் உடல்நலனைப் பாதித்து, அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களை நடுவீதியில் நிறுத்தியிருக்கிறது. அதுவும் முப்பது வயதுக்குள்ளேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, கணையம் செயலிழப்பு, பக்கவாதம், கிட்னி ஃபெயிலியர் என்று மீள முடியா பெருந்துயரங்களுக்கு ஆளாகி, வைத்தியத்துக்கு செலவு செய்ய வழியற்ற நிலையில் இறந்து போகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியும், சோகமும் கலந்த உண்மை. முப்பது வயதுக்குள் மேற்கண்ட பாதிப்புகள் மிகவும் அரிதாக நடக்கக் கூடியவைதான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இந்தப் பாதிப்புகளின் சதவீதம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கார்டியாலஜிஸ்ட் ஒருவர்.


கண்ணனுக்கு 27 வயது. சேலம்தான் சோந்த ஊர். இரண்டு ஆண்டுகளாக பொருத்தமான பெண்ணைத் தேடியலைந்து, அபிராமியை நிச்சயம் செய்துவைத்தார்கள். திருமணத்திற்கு முதல் நாள் நண்பர்கள் ரொம்ப வற்புறுத்தியதால், ‘பார்ட்டி’ வைத்தார். மதுபான பார்ட்டி களை கட்டியபோது, திடீரென்று கண்ணனுக்குத் தாங்க முடியாத வயிற்று வலி. விடிந்தால் கல்யாணம், என்ன செய்வது? ‘எப்படியோ சமாளி, தாலி கட்டியபிறகு டாக்டரிடம் காட்டிக் கொள்ளலாம்’ என்று நெருங்கியவர்கள் அட்வைஸ் செய்ய, திருமணம் முடிந்த கையோடு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்த டாக்டர்கள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்டான்லியில் தீவிர சிகிச்சை தரப்பட்டது. நான்கைந்து அறுவைச் சிகிச்சைகளும் நடந்தன. இருந்தாலும் எந்தப் பலனும் இல்லை. கண்ணனைக் காப்பாற்ற முடியவில்லை.


இந்தச் சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றைக்கும் கண்ணனுக்கு ட்ரீட்மெண்ட் செய்த டாக்டர் சுரேந்திரன் நினைவுகளில் பெரும் சோகமாகத் தங்கியிருக்கிறது கண்ணனின் நினைவுகள். "அவருக்கு வந்த பிரச்சினை, அக்யூட் பேங்க்ரியாடிடிஸ் (acute pancreatitis). ரெகுலராக அவருக்கு குடிப்பழக்கம் இல்லை. முதன்முறையாக அன்றுதான் குடிக்கிறார். இந்த அக்யூட் பேங்க்ரியாடிடிஸ் முதன்முறையாகக் குடிப்பவர்கள் பலருக்கு வரும் பிரச்சினை. கண்ணனுடன் ஒரு வார்த்தை கூட பேசியிராத, முகத்தைச் சரியாகப் பார்க்கக்கூட அவகாசம் வாய்க்காத அந்தப் பெண், ‘எப்படியாவது காப்பாத்துங்க’ என்று பார்க்கும் டாக்டர்களை எல்லாம் கைகளைக் கூப்பி கெஞ்சியதுதான் இன்னும் என் நினைவுகளில் இருந்து நீங்காமல் தங்கியிருக்கிறது. ஒரே நாளில் எல்லாம் முடிந்து விட்டது" என்கிறார் டாக்டர் சுரேந்திரன் பெருமூச்சுடன்.

ஆண்டுதோறும் மதுகுடிப்பவர்களின் சதவீதம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். கூடவே மதுப்பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்படுபவர்களின் சதவீதமும் ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு டாஸ்மாக் கடைக்குப் போய்ப்பார்த்தால் ஜேஜே என்று திரண்டிருக்கும் கூட்டத்தில் 20, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கூட்டம்தான் 60 சதவீதம் இருக்கும். "இதில் இன்னொரு அதிர்ச்சியான தகவலும் உண்டு. இத்தகைய மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் நன்கு படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களும் உண்டு. பொதுவாக, பரம்பரை நோய் என்று கூறப்படும் நீரிழிவு போன்ற நோய்கள் இன்று லைஃப் ஸ்டைல் நோய்களாக மாறியுள்ள நிலையில், உடல் உழைப்பு இல்லாத டெட்லைன், டார்கெட் போன்ற நெருக்கடிகளில் பணிபுரியும் இவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இந்த நிலையில் இவர்கள் மதுப்பழக்கத்தையும் தொடரும்போது கல்லீரல் பாதிப்பு, கணையம் செயலிழத்தல், கிட்னி சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்ற அதிர்ச்சித்தகவலைத் தருகிறார், டி.டி.கே. மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் அனிதா ராவ்.

"கடந்த சில ஆண்டுகளாகக் குடிப்பழக்கத்தால் இளைஞர்களின் உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான்" என்று கூறும் டாக்டர் சுரேந்திரன், குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல், கணையம் பாதிப்பு என்று அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறுகிறார். மேலும் அதுபற்றிக் கூறும்போது, "1969லிருந்து 77வரை இதே கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பை நாங்கள் முடித்த காலத்தில் acute pancreatitis Severe pancreatitis போன்ற பாதிப்புகள் பற்றி எல்லாம் புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் பார்த்ததில்லை.

ரொம்ப அபூர்வமாக வட இந்தியாவில் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும். அப்படி இருந்தாலும் இவர்களின் இறப்பு சதவீதம் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும். ஆனால், தற்போது ஸ்டான்லி மருத்துவமனையிலேயே சர்வ சாதாரணமாக தினமும் நோயாளிகள் வருவதைப் பார்க்கலாம். தற்போது இறப்பு விகிதம் 70 சதவீதம். அதிலும் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் மிக அதிகம். ஐ.டி., மென்பொருள் போன்றவற்றில் வேலை பார்ப்பவர்களுக்கு கல்லீரல், கணையப் பாதிப்பு இன்று சர்வ சாதாரணம். மது குடிப்பது மேற்கத்திய நாடுகளில் கலாசாரத்தோடு இணைந்தது என்பதால் அங்கு பாதிப்புகளும் அதிகமாக இருந்தன. இன்று வரையும் நவீன மருத்துவத்தில் ஜெர்மனி நாட்டில் அளிக்கப்படும் சிகிச்சை முறையைத்தான் இங்கும் அளிக்கிறோம். இங்கு ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல வேண்டும்... கடந்த மாதம் கொச்சியில் நடந்த சர்வதேச மருத்துவ மாநாட்டில் ஜெர்மனி டாக்டர்கள் கலந்துகொண்டார்கள். மேற்கத்திய நாடுகளில் தற்போது வியக்கத்தகும் விதமாக மக்களிடம் மதுப்பழக்கம் குறைந்திருப்பதாகக் கூறினார்கள். ஆனால், நம் நிலையோ அதற்கு நேரேதிராக உள்ளது" என்று வேதனையுடன் கூறுகிறார் டாக்டர் சுரேந்திரன்.


"எப்போதாவது குடிக்கிறேன். வாரத்தில் ஒருநாள்தான் குடிப்பேன். பார்ட்டியில மட்டும்தான் குடிப்பேன். அளவான மதுப்பழக்கம் உடலுக்கு நல்லது’ போன்ற எல்லா காரணங்களும் குற்ற உணர்ச்சியில் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானங்கள்தானே தவிர, அதில் உண்மையில்லை. ஒரு சொட்டு விஷமாய் இருந்தால் என்ன? ஒரு குடமாய் இருந்தால் என்ன? விஷம் விஷம்தான். பீர் மட்டும்தான் குடிப்பேன் என்றும் சிலர் சொல்கிறார்கள். மதுவின் பெயர்கள்தான் வேறு வேறானவையே தவிர, அதனால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் ஒரே ரகமானவையே. சமீபத்தில் தில்லியில் பல வெளிநாட்டு டாக்டர்களும் கலந்துகொண்ட கல்லீரல் நோய்கள் தொடர்பான தேசியக் கருத்தரங்கில் குடிப்பழக்கம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் உடல் உறுப்புகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்று மருத்துவ அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர்.அடையாறில் உள்ள டி.டி.கே. மருத்துவ மையத்தில் பல ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களுக்கு கவுன்சலிங் நடக்கிறது. "10 ஆண்டுகளுக்குமுன் இந்த கவுன்சலிங்கில் நடுத்தர வயதுப் பெண்கள், கணவனை இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி மீட்பது என்பதைத் தெரிந்துகொள்ள தவறாமல் கலந்துகொள்வார்கள். தற்போது இந்த கவுன்சலிங்கில் ஏராளமான நாற்பது, ஐம்பது வயது பெற்றோர்கள் கலந்துகொள்கிறார்கள். மிகச் சிறிய வயதிலேயே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகரித்து விட்ட அவலம் இது" என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவமனை ஊழியர் ஒருவர்.

"குடிப்பழக்கம் உள்ளவர்களில் 20 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இது உடல் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, மனம் சார்ந்ததும்கூட. கல்லூரி மாணவன் ஒருவன், தற்போது எங்கள் மையத்தில் தொடர் சிகிச்சையில் இருக்கிறான். 20 வயதான அவன், நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தவன், கொஞ்ச நாட்களிலேயே மதுவுக்கு அடிமையாகி விட்டான். குடும்ப கவுரவம் போய்விடுமே என்று பயந்தவர்கள் முதலில் வீட்டில் வைத்து, ‘இது தப்பு’ என்று சொல்லி திருத்தப் பார்த்திருக்கிறார்கள். யாருமே இல்லாத சமயத்தில் அமைதியாக இருப்பவன், வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது, பயங்கரக் கலாட்டா செய்வது, மிரட்டுவது, குடிப்பதற்கு பணம் தராவிட்டால் விருந்தினர்களுக்கு தருவதற்கு எடுத்துச் செல்லும் தேநீரைப் பிடுங்கி, எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது கொட்டுவது என்று அவன் செயல்பாடுகள் மிக மோசமாக இருக்க... இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை தருகிறோம்" என்கிறார் டாக்டர் அனிதா.

"குடிக்கு அடிமையாகி, சிகிச்சைக்குச் சேர்க்கப்படுபவர்களின் ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலைக் குறைக்கவே 3லிருந்து ஐந்து நாட்கள் ஆகும். அதன் பிறகே சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள். குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் வருவதும் சகஜம். இவர்களின் ரத்தத்தில் ஆல்கஹாலைக் குறைப்பதற்கு 20 நாட்கள் ஆகும். முற்றிலும் மதுவை நிறுத்தி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே ஓரளவு உடல் நிலை தேறும். ஆனால், அதே நேரம் ஒருமுறை கணையத்தில் பிரச்சினை வந்தால், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். அதன் பிறகு மதுவையே தொடாவிட்டாலும் சிகிச்சையும் தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பும் தேவை. கணையம் பாதிப்பினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க அரசுக்கு ஆகும் செலவு 50 முதல் 60 லட்சங்கள்" என்று கூறுகிறார், அரசு மருத்துவர் ஒருவர்.

இதயநோய் மருத்துவரான டாக்டர் சொக்கலிங்கம், "கடந்த 20 ஆண்டுகளில் ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் குடிப்பழக்கம் அதிர்ச்சியளிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. ஆல்கஹாலில் உள்ள எத்தனால் உடலில் போய் வளர்சிதை மாற்றம் ஆகும்பொழுது (metabolism) அசிட்டேன், அசிட்டால்டிஹைடு இரண்டும் மூளை, கல்லீரல், இதயத் தசைகள் போன்றவற்றைப் படுமோசமாகப் பாதிக்கிறது. இதயத் தசைகள் நாளடைவில் விரிவடைந்து இதயம் பெரிதாகும். 42 ஆண்டுகள் என் மருத்துவ அனுபவத்தில் சமீப காலங்களில் இளைஞர்கள் குடியால் மோசமாகப் பாதிக்கப்படுவதை அதிகம் பார்க்கிறேன். மது அருந்துபவர்களுக்கு hdl (tri glycerise) எனப்படும் நல்ல கொழுப்பிற்குப் பதிலாக, hdl 3 எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். இது, ரத்தக் குழாய்களை அடைத்து, இதயத்திற்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும்" என்கிறார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் மது பாதிப்பால் ஏற்படும் உடல் பிரச்சினைகளுக்குச் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், இதனை வேறு விதமாகப் பார்க்கிறார். குடல் இரைப்பைத் துறைத் தலைவர் டாக்டர் சந்திர மோகன். "குடியின் பாதிப்பு தற்போது அதிகமாக இருந்தாலும் ஒரே நாளில் திடீரென்று இந்த எண்ணிக்கை உயர்ந்து விடவில்லை. வயிற்று வலி என்றால், தெரிந்த டாக்டரிடம் காட்டுவார்கள். இப்போது அதற்கான சிறப்பு மருத்துவரிடம் போக வேண்டும் என்று தெரிந்து வருகிறார்கள். அதனால் குறிப்பிட்ட துறையில் நோயாளிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது என்றாலும் எந்த அரசு மருத்துவமனையை எடுத்துக்கொண்டாலும் மதுவினால் பாதிப்பு என்பது அதிகரித்தே உள்ளது என்பதை மறுக்க முடியாது" என்கிறார்.


"தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனியார், கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் இதே அவல நிலைதான். பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டுமல்ல, குடிக்கு அடிமையாகும் பெண்கள் வட சென்னையில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு வருவதும் சகஜமான ஒன்றுதான்" என்று கூறி, வேதனையை அதிகரிக்க வைக்கிறார்கள் அங்கிருக்கும் மருத்துவர்கள்.

மதுப்பழக்கமுள்ளோர் வயது விகிதம்50+ வயதினர் = 18%

15 - 20 வயதினர் = 10%

30 - 50 வயதினர் = 37%

20 - 30 வயதினர் = 35%கணையம்: மதுவின் முதல் டார்கெட் கணையம். இதிலிருந்து சுரக்கும் ஜீரண நீர், உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மதுவில் உள்ள ஆல்கஹால் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது (TONAR போன்ற அழகு சாதனப் பொருட்களில் ஆல்கஹால் பயன்படுத்துவது அதன் பரவும் தன்மைக்காகவே). இது, கணைய நீர் வெளிவரும் பாதையைச் சென்று அடைத்துவிடும். இதனால், சுரக்கும் ஜீரண நீர் கணையத்திலேயே தங்கிவிடும். ஜீரணத்திற்காக சுரக்கிற நீர் வெளியேறாமல் அதே இடத்தில் தங்கும்போது கணையம் வீங்கத் தொடங்கும். இது, கழிவு நீர் தேங்குவது போன்றதுதான். இதனால், கணையத்தில் கிருமிகள் சேர்ந்து அதனை அழுகச் செய்துவிடும். அழுகிய பகுதியை வெட்டி எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. உமிழ் நீர், இரைப்பையில் சுரக்கும் நீர், கணைய நீர் மூன்றும் செரிமானத்திற்கு உதவுகின்றன. இதில் ஒன்று கெட்டு விட்டதால், உணவு செரிமானம் ஆவது பாதிக்கப்படும்.

இரைப்பை: மதுவில் உள்ள ஆல்கஹால், இரைப்பையின் உட்புறம் உள்ள மிக்கஸ் என்ற மெல்லிய சுவரை அரித்து, அல்சர் வரவழைக்கும்.

கல்லீரல்: உடலின் பெரிய உறுப்பான கல்லீரலில் உள்ள செல்கள், மதுவில் இருக்கும் நச்சு பாக்டீரியாக்களால் அழிக்கப்படுகின்றன. 80 சதவீதப் பகுதியை வெட்டி எடுத்துவிட்டாலும் வளரும் இயல்பு கொண்டது கல்லீரல். ஆனாலும் அழிந்து போன செல்கள், கல்லீரல் முழுக்க திட்டுத் திட்டாக தழும்புகளாக மாறிவிடும். இதனால், கல்லீரல் வீக்கம், ஹெபாடிடிஸ், சிரோசிஸ் என்று பல பிரச்சினைகள் வரும்.

சிறு மூளை: நம்முடைய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது சிறு மூளை. ஆல்கஹால் குடித்தவுடன் நேராக சிறு மூளையைத்தான் பாதிக்கும். குடிப்பவர்களின் கட்டுப்பாடு மொத்தமும் போய்விடும். நேராக நடக்க முடியாது. ஒழுங்காகப் பேச முடியாது. ஆல்கஹாலுக்குப் பரவும் தன்மை அதிகம் என்பதால், வேகமாக ரத்தத்தில் கலந்து உடல் முழுக்கப் பரவும். இதனால், எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லா உறுப்புகளும் பாதிக்கும். குறிப்பாக, இனப்பெருக்க்க உறுப்புகள் பாதித்து மலட்டுத் தன்மை அதிகமாகும். கர்ப்பமாக இருக்கும்போது, பெண்கள் மது அருந்தினால் குழந்தைக்கு மனநிலை பாதிக்கும். சீக்கிரத்திலேயே மறதி நோய் (dementia) வரும்.

மது குடித்தவுடன் அதில் உள்ள ஆல்கஹாலில் 20 சதவீதம், இரைப்பையில் உடனடியாகப் பரவி தங்கிவிடும். மீதி 80 சதவீதம், பெருங்குடலில் தங்கிவிடும். மது குடித்த 20 நிமிடங்களில் ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு உயரும். குடித்த மூன்று நாட்களுக்கு உடலில் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் என்று அனைத்துப் பாகங்களிலும் ஆல்கஹால் அப்படியே தங்கியிருக்கும்.

எல்லா மது பானங்களைத் தயாரிக்கும்போதும், பார்லி, காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இவற்றை ஈஸ்ட் சேர்த்து நொதிக்கச் செய்கிறார்கள். அத்துடன் சர்க்கரை சேரும்பொழுது எத்தில் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது. இத்துடன் சோடியம் ஹைட்ராக்சைடு, சோடியம் சல்பர், சோடியம் குளோரைடு, சோடியம் தியோசல்பர், கால்சியம் கார்பனேட் போன்ற எல்லா வகையான உப்புகளும் இதில் சேர்க்கப்படுகின்றன. இந்த உப்புகள் ஆல்கஹாலுடன் சேர்ந்து உட்கொள்ளப்படுவதால், கிட்னி உள்ளிட்ட பகுதிகளில் இவை படிந்து, தமது விஷம வேலைகளைக் காட்ட ஆரம்பிக்கின்றன.

போலி நம்பிக்கைகள்


இளைஞர்களிடையே ஒரு போலி நம்பிக்கை உள்ளது. மது குடிப்பதற்குமுன் சில மாத்திரைகளை போட்டுக் கொண்டால் சிறுநீரகங்கள், கல்லீரல் பாதிக்காது என்று. ஆனால், யாருக்கும் அது என்ன மாத்திரை என்று தெரியாது. நண்பர்கள், குடிப்பழக்கம் இல்லாதவர்களையும் தங்கள் பார்ட்டியில் சேர்த்துக்கொள்ள வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்து ஏமாற்றுவார்கள். ஏமாற வேண்டாம். எந்த முன்னெச்சரிக்கைச் செயலும் மதுவால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்காது.

அதேபோல கள்ளு குடிப்பது உடலுக்கு நல்லது என்பதும் உண்மையில்லை. பனையில் இருந்து பெறப்படும் பொருட்கள் இயற்கையானவை என்பதால் அவற்றால், உடல் நலத்திற்கு நல்லது. ஆனால், கள் அப்படியல்ல. புளிக்க வைப்பதால் இதில் பாக்டீரியாக்கள் அதிகம். இது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். தவிர, கள் என்கிற பெயரில் மாத்திரைகளைப் போட்டும் ஏமாற்றுவார்கள். இது உடலுக்கு மிகவும் கெடுதி.

வசூல்ராஜா


இந்த ஆண்டு எப்படியும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக டாஸ்மாக் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும் என்பது தமிழக அரசின் இலக்கு. தினமும் சுமார் 38 கோடி ரூபாய் வருவாய் தரும் துறையை உள்ளாட்சித்தேர்தலுக்காக ஐந்து நாட்கள் மூடிவிடப் போவதாக அரசு அறிவித்தவுடன் அதற்கு முந்தைய சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் விற்பனை வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகரித்தது. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் என்று எல்லா வகை மதுபானங்களும் கடை திறந்த சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்து விட்டதாக டாஸ்மாக் ஊழியர் ஒருவர் சொன்னார்.

அலைமோதும் கூட்டத்தைப் பார்த்து, எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதட்டத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்கியவர்களும் இருக்கிறார்கள். சாதாரண நாட்களில் ஒரு குவார்ட்டருக்கு 3 ரூபாய் அதிகம் கொடுத்தவர்கள், அன்று 10 ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்கள். தமிழகம் முழுக்க அரசுக்குச் சொந்தமான 6,500 மது விற்பனைக் கடைகளில் வேலை செய்யும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கும் அன்று நல்ல வருவாயாம். இப்படி கூடுதலாக வசூலான பணம் மட்டும் ஒரே நாளில் கிட்டதட்ட 3 கோடி ரூபாய்.

சனி, நவம்பர் 26

12 நாள் குழந்தைக்கு அபூர்வ அறுவை சிகிட்சை: மருத்துவர்கள் சாதனை!


12 நாள் குழந்தைக்கு அபூர்வ அறுவை சிகிட்சை: மருத்துவர்கள் சாதனை!


பிறந்து 12 நாட்களே ஆன குழந்தைக்கு நெஞ்செலும்பு பிரிந்திருந்த நிலையில், மதுரை மருத்துவர்கள் அபூர்வ அறுவை சிகிட்சை செய்து குழந்தையைக் காப்பாற்றினர்.
மதுரை செல்லூர் பகுதியைஹ்ச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் தலைப் பிரசவத்திற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு மதுரை ராஜாஜி அரச மருத்துவமனையின் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன், அந்தக் குழந்தை நலமாக இருக்கிறதா என்று குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் கண்காணிப்பது வழக்கம். அது போன்று வேளாங்கண்ணியின் பெண் குழந்தையும் கண்காணிக்கப்பட்டது. அப்போது குழந்தையின் நெஞ்சுக் கூடு பகுதி மிகவும் பள்ளமாக இருப்பதை மருத்துவர்கள் கண்டனர். உடனே, ஸ்கேன் செய்து பார்த்த போது குழந்தையின் நெஞ்சுக் கூடு பகுதியில் உள்ள விலா எலும்பு ஒன்றாக சேரும் இடத்தில் உள்ள "ஸர்ணம்" என்ற எலும்பு வளர்ச்சி அடையாமல் பிரிந்து இருப்பதைக் கண்டனர்.
இதனால் குழந்தை அழும் போதும் இதயம் துடிக்கும் போதும் வெளியே துருத்திக் கொண்டு வந்தது. இதை உடனே அறுவை செய்து சரிசெய்யாவிட்டால் குழந்தைக்குப் பின்னர் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் கருதினர்.
இது குறித்து குழந்தையின் தாயிடம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குழந்தை நலப்பிரிவு அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் அதியமான் தலைமையில், நெஞ்சக அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர் பாலநாயகம் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, 12 நாட்கள் கழித்து அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிட்சை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிட்சை முடிவில் குழந்தைக்கு நெஞ்சு எலும்பு பகுதி சேர்க்கப்பட்டது. குழந்தை இப்போது எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நலமாக உள்ளது.
இந்த அபூர்வ அறுவை சிகிட்சை குறித்து மருத்துவர் அதியமான் கூறியதாவது:
"இது போன்ற பிறவி குறைபாடு 50 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வரும். குழந்தையின் நெஞ்சுக்கூடு பகுதியில் உள்ள விலா எலும்புகளை ஒன்றாக இணைக்கும் எலும்பு நடுவில் இருக்கும். இந்த நடு எலும்பு சரியாக வளர்ச்சி அடையாததால் விலா எலும்புகள் விலகிக் கொண்டன. இதனால் இருதயம் விலா எலும்பில் இருந்து துருத்திக் கொண்டு குழந்தை அழும் போது வெளியே வருவது போன்று காணப்பட்டது.
இருதயத்திற்குப் பாதுகாப்பைத் தருவதே இந்த விலா எலும்பு தான். அது விலகிக் கொண்டால், குழந்தை பெரிதாகி வளர்ந்த பிறகு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு சிறிய கல்லோ, ஊசியோ குத்தினால் கூட அது இருதயத்தைப் பாதிக்கும்.
எனவேதான் நெஞ்ச எலும்பைச் சேர்க்க அறுவை சிகிட்சை செய்யப்பட்டது. இதனைச் சிறிது காலத்திற்குப் பிறகு செய்தால் எலும்பின் வளர்ச்சி பெரிதாகி அறுவை செய்வது சற்று கடினமாக இருக்கும். எனவே தான் குழந்தைக்கு இப்போதே அறுவை சிகிட்சை செய்யப்பட்டது. இதன் மூலம் எலும்பும் விரைவில் சேர்ந்து, பின்னால் அந்தக் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தற்போது அந்தக் குழந்தை நன்றாக உள்ளது.
குழந்தைக்கு இது போன்ற பிறவிக் குறைபாடுகள் ஏற்பட காரணம் கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகள், கால்சியம் நிறைந்த வில்லைகளைச் சாப்பிடாமல் இருப்பதுதான். எனவே பெண்கள் கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் அறிவுரையின்படி மருந்து மாத்திரைகள், உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
மதுரை பெரிய மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் இது போன்று பிறவிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அதிக அளவில் அறுவை சிகிட்சை செய்து சரிசெய்து உள்ளோம். எனவே தாய்மார்கள் இது போன்று குறைபாடு உள்ள குழந்தைகளை எதுவும் செய்து விடாமல், மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று பெரிய மருத்துவமனைக்கு அழைத்து வரலாம். எங்கள் பிரிவில் ஒவ்வொரு வாரமும் 150 குழந்தைகளுக்கு அறுவை சிகிட்சை செய்யப்படுகிறது. குறிப்பாக கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு 12 நாள் குழந்தைக்கு நெஞ்சு எலும்பைச் சேர்க்கும் அறுவை சிகிட்சையினை முதல் முறையாக இப்போது தான் செய்து உள்ளோம்."
இவ்வாறு டாக்டர் அதியமான் தெரிவித்தார்.
இந்த அறுவை சிகிட்சை குழுவில் குழந்தைகள் நலப்பிரிவு தலைமை மருத்துவர் ரகுநந்தன், மருத்துவர்கள் ஹேமந்த்குமார், ரவிக்குமார், கருப்பச்சாமி, முதுகலை பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சீனிவாசன், கற்பகவிநாயகம் ஆகியோர் இருந்தனர்.

வெள்ளி, நவம்பர் 25

மறக்கப்படும் இஸ்லாமிய புத்தாண்டு...


மறக்கப்படும் இஸ்லாமிய புத்தாண்டு...
இஸ்லாமிய மாதங்களில் முஹர்ரம் முதல் நாளை 
இஸ்லாமிய புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. 


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த பந்தங்களையும் 
சொத்து சுகங்களையும் அல்லாஹ்விற்காக துறந்து 
சொந்த மண்ணை விட்டு பிரிந்து மதீனா நகருக்குப் பிரவேசித்த 
அந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் 
இஸ்லாமிய புத்தாண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.

நபியவர்கள் அனைத்தையும் துறந்து மற்றொரு மண்ணில் 
தஞ்சம் புக வேண்டிய அவசியம் ஏன் உருவானது? 
என்பது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் 
தெரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றனர்.

மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை 
ஆகிய இம்மூன்று தீய குணங்களை தன்னகத்தே குடிகொண்டிருந்த 
ஒரு காட்டரபி சமூகத்தில் பிறந்து அம்மக்களிடையே மண்டிக்கிடந்த 
இனவெறி குலவெறி என மனித சமூகத்திற்கு 
ஒவ்வாத கொள்கைகளை எதிர்த்து ஓரிறை கோட்பாட்டை 
பரப்புரை செய்ததால் சினங்கொண்ட அம் மக்கா நகரத்து 
காட்டுமிராண்டிகள் அவரை கொலை செய்யத் துணிந்தனர்.

சத்திய மார்கத்தை இப் புவியெங்கும் பரப்பிட 
சபதம் கொண்ட அம்மாமனிதர் 
தமது இலட்சியத்தைக் காக்க நாடு துறந்தார்.

அம்மாபெரும் தியாகத்தை நினைவு கூறுவது 
இப்புத்தாண்டு தினத்தின் முக்கிய அம்சமாகும்.

ஆனால் இன்றைய சமூகம் அந்த தினத்தை 
நபிகளார் செய்த தியாகத்தை மறக்கத்துனிந்து விட்டதோ 
என அஞ்சக்கூடிய அளவிற்கு இந்த நாளை 
தெரியாமல் இருந்து வருகின்றனர்.

இந்த அவல நிலையைக் களைந்து 
முஸ்லிம்களின் தேசிய அடையாளங்களில் ஒன்றான 
இந்த இஸ்லாமிய புத்தாண்டை நினைவில் கொண்டு 
நபியவர்களைப் போல நாடு துறக்கும் தியாகம் செய்ய 
நம்மால் முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 
இஸ்லாம் தடுத்திருக்கும் பாவமான காரியங்களிலிருந்து 
நம்மை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன் 
என இந்நாளில் நாமனைவரும் சபதம் கொள்வோமாக.

அனைவருக்கும் இனிய இஸ்லாமிய நல்வாழ்த்துக்கள்.

facebook தளத்திலிருந்து :

கொள்ளுமேடு எப்.எம்.ரிபாயி, அல்-அய்ன்

மின்சார சிக்கனம்-எளிய வழிகள்


மின்சார சிக்கனம்-எளிய வழிகள்


 மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பது தெரியும். சில வேளை மின்சார வாரியம் வழங்கும் பில்கள் கூட ஷாக் அடிக்கும். மின்சாரத்தை நாம் அதிகமாக உபயோகிக்கும் போது ஒரு மீட்டரில் அது செலவுக்கணக்கில் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் இது போன்ற ஷாக் தவிர்க்கலாம். மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில எளிய வழிகளை கடைபிடித்தாலே போதும்.முதலாவது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மின்சாரவாரியம் கட்டணங்களை அளவிடும் முறை. மின்சாரம் அறவே உபயோகிக்காவிட்டாலும் குறைந்த பட்ச கட்டணம் செலுத்தியாக வேண்டும். பயனீட்டு அளவு அதிகரிக்கும் தோறும் ஒரு யூனிட்டுக்கான கட்டணம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகும்.எவ்வளவு குறைவாக மின்சாரம் செலவளிக்கிறோமோ அதற்கேற்றபடி ஒரு யூனிட்டுக்கான கட்டணம் குறைவாக இருக்கும். அதற்காக வீட்டில் எல்லா விளக்குகளையும் அணைத்து போட்டுவிட்டு இருளில் இருப்பதால் எங்கேயாவது போய் முட்டிக்கொண்டு ஆஸ்பத்திரி பில் கட்ட வேண்டி வரும். பின் எப்படித்தான் மின்சாரத்தை எப்படி சிக்கனப்படுத்துவது?சாதாரண குண்டு பல்புகள் எரியும் போது மின்சாரத்தின் பெரும்பகுதி வெப்ப சக்தியாக வீணாக வெளியிடப்படுகிறது. இது புவி வெப்பம்(Global warming) அடையவும் காரணமாகிறது. எனவே இதை ஒழித்துக்கட்டிவிட்டு குழல் விளக்குகள் (Flourescent Tube lights) அல்லது C.F.L (Compact Flourescent lights) விளக்குகள் பயன்படுத்தினால் மின்சாரம் பெருமளவு சிக்கனப் படுத்தலாம்.குழல் விளக்குகள அதிக வெப்பம் அடைவதில்லை. ஆனால் அவற்றில் பயன் படுத்தப்படும் பாதரச வாயு நச்சுத்தன்மை வாய்ந்தது எனவே ஃபியூஸ் ஆன குழாய் விளக்குகளை உடைக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். ஒரு சி.எஃப்.எல். பல்பு, வழக்கமான பல்பைக் காட்டிலும் ஐந்து மடங்கு வெளிச்சத்தைத் தருகிறது. நீங்கள் 60 வாட்ஸ் சாதாரண பல்புக்கு பதிலாக 15 வாட்ஸ் சி.எஃப்.எல். பல்புகளை உபயோகித்தால், குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு 45 வாட்ஸ் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.மேலும் மஞ்சள் ஒளிக்கு பதில் வெள்ளை ஒளி தருகிறது.சாதாரண குழாய் விளக்குகளிலும் Ballast எனப்படும் பழைய சோக்குகளில் தாமிரம் அல்லது அலுமினிய கம்பிகள் சுற்றப்பட்டு இருக்கும்.இதிலும் உண்டாகும் மின் தடை (Resistance) காரணம் கொஞ்சம் மின்சக்தி வெப்ப சக்தியாக வீணாகிறது. இந்த சோக்குகளை மாற்றி விட்டு எலெக்ட்ரானிக் சோக்குகள் பயன் படுத்தினால் மின்சாரம் சேமிக்கலாம்.அதோடு இதற்கு ஸ்டார்ட்டர் தேவையில்லை எனவே சுவிட்ச் இட்டதும் எரியும். குறைந்த மின் அழுத்தத்திலும் வேலை செய்யும். 50 Hz துடிப்புள்ள வீட்டு மின்சாரம் எலெக்ட்ரானிக் சோக்கில் அதிக அதிர்வெண்ணுடைய மின் துடிப்ப்பாக மாற்றப்படுவதால் குழல் விளக்கு ஒளியில் FLicker இருக்காது, Eficiency யும் 20%அதிகம்.கொஞ்சம் வெளிச்சம் குறைவாக போதும் என்ற இடங்களில் Hi Power LED விளக்குகள் உபயோகிக்கலாம். 0.6 watts மின் சக்தி மட்டுமே எடுத்து கொள்ளும் இத்தகைய Power LED (Light Emitting Diodes) யின் ஒளி 25 Watts பல்புக்கு அல்லது 11 Watts CFL விளக்கின் ஒளிக்கு சமம். மின்சாரம் இல்லாத இடங்களிலும் பாட்டரி மற்றும் சூரிய மின்கலன்கள் மூலம் இயக்கலாம். அந்த அளவு மிக குறைந்த மின் சக்தி தான் தேவை. இப்போது குழல் விளக்கிற்கு பதிலாகவும் , கார் முகப்பு விளக்கிலும் கூட LED க்கள் பயன் படுகின்றன. இதற்காகும் குறைந்த செலவை விரைவில் மின்சார சேமிப்பால் ஈட்டிவிடலாம். LED ஒளியில் வெப்பம் ஏற்படாது. இதன் Efficiency 90%. நீங்களே செய்ய LED Lamp Projectசமையல் அறையில் உணவருந்தும் இடங்களில் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும். தொலைக் காட்சிப் பெட்டி இருக்கும் அறையில் மெல்லிய வெளிச்சம் போதும். அதுவும் டிவிக்கு பின்புறமிருந்து வர வேண்டும். படுக்கை அறையிலும் மெல்லிய விளக்குகள் போதும்.வீட்டில் விளக்குகள் அமைக்கும் போது சரியான இடங்களில் சரியான வெளிச்சம் தரும் விளக்குகளை அதிக நிழல் விழாமல் சிறப்பாக அமைக்க வேண்டும். கண்ணை உறுத்தும் பிரகாச விளக்குகள் தேவை இல்லை.வெப்பம் அதிகம் வெளியிடப்படும் அறை விளக்குகளால். குளிரூட்டிகள், குளிர் பதன பெட்டிகளின் மின் செலவு அதிகரிக்கிறது.வீட்டில் எல்லா இடங்களிலும் ஏசி அவசியமற்றது. அதிலும் ஏசி இருக்கிற அறையின் சுவர்களும் கதவுகளும் உள்ளே இருக்கும் குளிர் காற்று வெளியேறாமல் இருக்கும்படி அமைக்கப்பட வேண்டும். திறந்தே உள்ள இடங்களில் ஏசி பயனற்றது. அதிக நபர் புழங்கும் மூடப்பட்ட அறைகளில் அடைபட்டு கிடக்கும் காற்றில் சுத்தமான பிராண வாயு இருப்பதில்லை.
இந்தியாவில் ஏசி தேவையற்ற ஒன்று வீட்டை சுற்றி நல்ல மரங்களும் சாதாரண மின் விசிறியும் இருந்தாலே போதும் . தண்ணீர் காற்றில் ஆவியாவதால் காற்றை குளிரச்செய்யும் Air Cooler கள் காற்றில் ஈரப்பதம் குறைந்த இடங்களிலேயே நன்றாக வேலை செய்யும். காற்றில் ஈரம் நிறைந்த நம் நாட்டுக்கு சரிப்படாது.ஏசி குளிர் அளவை சரியான வெப்பநிலையில் வைக்கவும். நடுங்கும் அளவு குளிர வைத்து விட்டு மூன்று போர்வை போர்த்திவிட்டு இருக்கத் தேவையில்லை. நம் உடல் சரியாக இயங்கவே அதற்குரியவெப்பம் தேவை.வெளி வெப்பநிலை அதற்கு கீழே போனால் உடலே தன் சக்தியை வெப்பமாக செலவளித்து உடலை சரியான வெப்பநிலையில் வைக்க முயலும். இதை புரிந்து கொண்டு ஏசியானாலும் மின் விசிறியானாலும் தேவைப்படும் அளவில் வெப்ப கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.மின் விசிறிகளில் உள்ள பழைய மின்தடை ரெகுலேட்டர்களை மாற்றி விட்டு எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்கள் உபயோகித்தால் மின்சாரம் சேமிக்கலாம். மின்தடை ரெகுலேட்டர்களில் மின் விசிறி வேகம் குறைவாக வைக்க மின் தடையை பயன் படுத்துகிறோம்.இந்த மின் தடை கொஞ்சம் மின்சாரத்தை வெப்பமாக மாற்றி வீணாக்குகிறது. எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்கள் மூலம் வீட்டு மின்சார அலையின் ஒரு பகுதியை மட்டும் பயன் படுத்தி மின் விசிறி வேகத்தை கட்டுப்படுத்துகிறது. எனவே குறைந்த வேகத்தில் சுழலும் விசிறி குறைவான சக்தியே பயன்படுத்தும்.

படுக்கை அறையில் லைட் மற்றும் ஃபேன் சுவிட்சுக்கள் படுக்கைக்கு அருகே இருப்பது நலம். நடு இரவில் குளிர் அதிகமானால் ஃபேன் வேகத்தை குறைக்கவோ நிறுத்தவோ எளிது.சிறிய குடும்பமென்றால் ஒரே அறையில் தூங்குவதால் தனித்தனி விசிறி தேவைப்படாது. தினமும் இரவும் பகலும் ஓடும் மின் விசிறிகள் தான் மின்செலவை அதிகப்படுத்துவதில் முதலிடத்திலிருப்பது.அதிக efficiency உடைய சில உயர்தர மின் விசிறிகள் சக்தி குறைவாக செலவளிக்கும்.வீடுகள் அமைக்கும் போது நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் வரும்படி ஜன்னல்கள் அமைப்பதால் பகலில் மின்சாரம் பெருமளவு மிச்சப்படுத்தலாம்.சில வீடுகளில் யாரும் பார்கிறார்களோ இல்லையோ காலை முதல் இரவு வரை டீவி ஓடிக்கொண்டிருக்கும். இதை தவிர்க்க வேண்டும். தொலைகாட்சி பார்க்கவேண்டுமென்றால் அதற்குரிய நேரம் ஒதுக்க வேண்டும். அளவாக வைத்துக்கொள்ள வேண்டும்.குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்திருந்து கொஞ்ச நேரம் பார்க்கலாம். மற்றபடி எந்த வேலைகளையும் பாதிக்காமல் எஃப் எம் ரேடியோ கேட்கலாம்.மின்சாரத்தை விரயம் செய்து ஊர்முழுக்க மின் விளக்குகளால் அலங்கரித்து காது கிழிய மைக்செட் வைத்து அலறும் பொது விழாக்களையும் வீட்டு விழாக்களையும் ஊக்குவிக்க கூடாது. விழாக்கள் எதுவானாலும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மகிழ்சியை பகிர்ந்து கொள்வதாகவும், சுற்று சூழலக்கு கேடு செய்யாமலும் இருக்க வேண்டும்.ரேடியோ கேட்க விரும்பினால் ஒலிபெருக்கியின் அளவை குறைத்து உங்களுக்கு மட்டும் கேட்கும்படி செய்வதும் மின் சேமிப்பு மட்டுமல்ல சுற்று சூழலுக்கும் நல்லது.குளிர் பதன பெட்டிக்குள் ஒரு மாதத்திற்கு தேவையான காய்கறிகளை போட்டு அடைதது வைக்க தேவையில்லை. அவ்வப்போது Fresh ஆக வாங்கிப் பயன்படுத்தவும்.உங்கள் குடும்பத்துக்கு தேவையான சைசில் உள்ள ஃபிரிட்ஜ் வாங்கவும் சிறிய குடும்பத்திற்கு பெரிய ஃபிரிட்ஜ் தேவையில்லை.தேவையற்ற பொருட்களை ஃபிரிட்ஜுக்குள் திணித்து வைக்காதீர்கள்.ஃபிரிட்ஜை மின்சாரம் சேமிக்கிறேன் என்று அடிக்கடி அணைத்து போடாதீர்கள். தேவையான அளவு குளிர்ந்ததும் ஃபிரிட்ஜ் தானாகவே ஆஃப் ஆகிவிடும்.தேவையின்றி அடிக்கடி ஃபிரிட்ஜை திறந்து மூடாதீர்கள். உள்ளே இருக்கும் குளிர் வேளியே வெளியேறினால் அதை ஈடுகட்ட ஃபிரிட்ஜ் அதிக நேரம் இயங்கும்.ஃபிரீசருக்குள் ஐஸ் கட்டிகள் நிறைந்திருந்தால் மட்டும் கொஞ்ச நேரம் அணைத்துப் போடவும்.அவசரம் இல்லையெனில் வாஷிங் மெஷினில் ட்ரையர் பயன் படுத்துவதை தவிர்த்து துணிகளை கொடியில் உலர்த்தலாம்.அதிகம் கசங்காத நல்ல ரக துணிகள் குறைவாக இஸ்திரி செய்தால் போதும். டீ ஷர்ட்,பனியன்கள் போன்றவை மூலம் இஸ்திரியில் மின் சேமிக்கலாம். அடிக்கடி இஸ்திரி போடுவதை தவிர்த்து மொத்தமாக ஒரே நேரம் இஸ்திரி போடுவது நல்லது.மின்சார அடுப்பில் சாதாரண நிக்ரோம் கம்பியிலான ஹீட்டிங் எலிமென்ட் உள்ள அடுப்பு, மின்சார குக்கர் அதிக மின் விரயம் செய்யக்கூடியதும் ஆபத்தானதும் கூட. அதற்கு பதிலாக இன்டக்சன் அடுப்பு பயன் படுத்தலாம். இதில் அடுப்பு சூடாவதில்லை. அதில் வைக்கப்பட்ட இரும்பு, ஸ்டீல் பாத்திரம் மட்டுமே சூடாவதால் இதன் Eficiency மற்றும் பாதுகாப்பும் அதிகம். இது மின்சாரத்தை செலவு செய்தாலும் சமையல் Gas ஐ சேமிக்கிறது. மைக்ரோ வேவ் அடுப்பு பாத்திரத்தை கூட சூடாக்காமல் உணவை நேரடியாக சூடாக்குவதால் அதன் efficiency யும் அதிகம் என்றாலும் இந்திய சமையலுக்கு அதன் பயன்பாடு சற்று குறைவே.வாட்டர் ஹீட்டர் அதிக சக்தி விழுங்கக்கூடியது. தேவையின்றி பயன் படுத்த வேண்டாம்.சூரிய சக்தியை பயன்படுத்தி, தண்ணீர் சூடாக்கலாம், தண்ணீர் சுத்தீகரிக்கலாம்,சமையல் செய்யலாம்,மின்சாரம் பெறலாம், விளக்குகள் எரிக்கலாம்.தண்ணீரை சிக்கனமாக செலவளிப்பதன் மூலம் அடிக்கடி நிலத்தடி நீரை டாங்கிற்கு பம்ப் செய்ய வேண்டிவராது மின்சாரம் சிக்கனமாகும்.காற்றின் உதவியால் இயங்கும் பம்ப் அமைத்து நிலத்தடி நீரை மேலே கொண்டு வரலாம்.பழைய CRT (Cathode Ray Tube) டைப் டீவி,மானிட்டர் ஆகியவற்றுக்கு விடுதலை கொடுத்து புதிய LCD (Liquid Crystal Display) டைப் டிவி ,மானிடருக்கு மாறுங்கள். மின்சாரத்தை பெருமளவு சேமிக்கலாம். X-Ray போன்ற ஆபத்தான Radiation பிரச்சனைகளும் இல்லை. விலை கொஞ்சம் அதிகமானாலும் இன்னும் புதிய LED(Light emitting DIode) வகை டிவி,மானிட்டர்கள் LCD மானிட்டர்களை விட பல மடங்கு குறைந்த மின்சக்தியில் இயங்க வல்லது.ஒரு வீட்டில் ஒவ்வொரு அறைக்கும் டிவி தேவையில்லை. குறிப்பாக படுக்கை அறையில் தேவையில்லை.அறையின் சைசுக்கு ஏற்ற டிவி வாங்கவும். பெரிய ஹாலுக்கு தான் பெரிய டிவி. சின்ன அறைக்கு சின்ன டிவி போதும். சைசுக்கு ஏற்ப மின் செலவு அதிகரிக்கும்.கணியை தேவைப்படும் போது மட்டும் பயன் படுத்தவும்.நீண்ட நேரம் கழித்து தான் மீண்டும் உபயோகப்படுத்துவோம் என்றால் டிவி,டிஷ் ரிசீவர்,கம்பியூட்டர்,டி.வீ.டி பிளேயர் போன்றவற்றை Stand-by யில் வைக்காமல் பவர் ஆஃப் செய்து விடவும்.தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் நேரம் மட்டும் விளக்குகள், ஃபேன்கள் பயன் படுத்த வேண்டும்.மின்சாரத்தில் இயங்கும் எந்த பொருளும் அது மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தக் கூடியது தானா என பார்த்து வாங்க வேண்டும்.எல்லா பொருட்களிலும் அதன் மின் செலவை Watts அளவில் குறிப்பிட்டிருப்பர்கள். அதை படித்து புரிந்து கொள்ள வேண்டும் ஒரு Watts என்பது ஒரு மணி நேரம் அது செலவளிக்கும் மின்சக்தியின் அளவு. எந்த கருவி எவ்வளவு சக்தி செலவளிக்கும் என இங்கே தெரிந்து கொள்ளலாம்.

''Jazaakallaahu khairan'' Muhammad Hanif

http://www.nidur.info/

செவ்வாய், நவம்பர் 22

ஆறே மாதங்களில் அதிரடி சாதனைகள்

ஆறே மாதங்களில் அதிரடி சாதனைகள்


பதவி ஏற்று ஆறே ஆறு மாதங்களில் 
அதிமுக அரசின் அதிரடி சாதனைகள் 
(பட்டியல் தொடரும்)


1 . சமச்சீர் கல்வி ரத்து 
2 . தலைமை செயலகம் மாற்றம் ( 1200 கோடி ) 
3 . செம்மொழி பூங்கா மராபரிக்க படாதது 
4 . பரமக்குடி துப்பாக்கி சூடு ( 7 பேர் பலி ) 
5 . இலவச கான்கிரிட் வீடு திட்டம் ரத்து 
6 . இலவச இன்சூரன்ஸ் திட்டம் ரத்து 
7 . மக்கள் நல பணியாளர்கள் டிஸ்மிஸ் 
8 . TNPSC தேர்வு ஆனவர்கள் பணி கொடுக்காதது 
9 . பேருந்து கட்டண விலை உயர்வு 
10 . பால் விலை உயர்வு 
11 . விரைவில் மின் கட்டண உயர்வு 
12 . விலை வாசி கடும் உயர்வு 
13 . கட்டுமான பொருட்கள் விலை உயர்வு 
14 . அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றம் 
15 . மெட்ரோ ரயில் திட்டம் மாற்றம் 


இன்னும் மீதம் இருக்கும் நாலரை வருடங்களில் சாதனைகள் மேலும்
தொடர்ந்திட தமிழக மக்கள் வழக்கம்போல் கண்டிப்பாய் பேரதரவு
தருவார்கள் என்று நம்புகிறோம்! (வேற வழி.......?) 


டிஸ்கி:அந்த 356ன்னு ஏதோ நம்பர் சொல்லுவங்களே ! 
அது இன்னாத்துக்கு நைனா?

திங்கள், நவம்பர் 21

விருந்துத் துறையை நாடுகின்ற நாம் மருந்துத் துறையை நாடுகின்றோமா...?


விருந்துத் துறையை நாடுகின்ற நாம் மருந்துத் துறையை நாடுகின்றோமா...?

மருத்துவத் துறையிலும், சேவை மைய்யங்கள் அமைப்பதிலும் கிறிஸ்துவர்களும், ஜைனர்களும் முன்னனியில் இருக்கின்றனர். இந்த இரண்டிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு கடைநிலையில் உள்ளது.

கிறிஸ்துவர்கள் நடத்தும் சென்னை கல்யாணி மருத்துவ மனையில் ஒரு கண் அறுவை சிகிச்சைக்கு நான்காயிரம் ரூபாய் பெறப்படுகிறது. இதே அறுவை சிகிச்சைக்கு முப்பதாயிரத்துக்கு மேல் வாங்கும் மருத்துவ மனைகளும் உண்டு.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சகோதர சமுதாய மருத்துவ மனையில் கண் அறுவை சிகிச்சைக்கு ஏழைகள் என்றால் ரூபாய் 3000/- வசதியுள்ளோர்க்கு ரூபாய் 25,000/- கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஜைனர்கள் அறக்கட்டளை, அனாதைகளாக இருக்கும் எந்த மதத்தினருக்கும், ஏழைகள் என்றால் இலவச கண் சிகிச்சையும், மூக்குக் கண்ணாடியும் வழங்குகிறது. (பல முஸ்லிம்கள் இவர்களிடம் பயனடைந்துள்ளனர்).

மருத்துவத் துறைக்குள் இது போன்ற சேவையைச் செய்ய முஸ்லிம்கள் முன் வராத நிலையே உள்ளது. கோடிக்கணக்கானோர் வாழும் சென்னையில், சேவை மனப்பான்மையோடு ஏழைகள் பயன்பெறும் வகையில் புற நோயாளிகளுக்காகச் செயல்பட்டு வரும் ஒரே முஸ்லிம் மருத்துவமனை 'கிரஸண்ட் மருத்துவமனை'.

இது போன்று மருத்துவமனைகள் மற்ற மாவட்டங்களில் அமைந்துள்ளனவா? என்றால், இல்லை என்றே தெரிகிறது.. நிரம்ப மருத்துவமனைகள் மாவட்டங்கள் தோறும் உள் நோயாளிகளாகச் சேர்த்துக்கொள்ளும் வகையில் முஸ்லிம்களால் அமைக்கப்பட வேண்டும்.

மத்திய திட்டக் கமிஷன், நர்ஸிங் உதவியாளர்களும், லேப் டெக்னீஷியன்களும் 10 லட்சம் பேர் தேவைப்படுவதாக மூன்று ஆண்டுக்கு முன் அறிவித்தது. ஆனால், மருத்துவர் ஆகும் படிப்பைத்தவிர மற்ற படிப்புகளை நடாத தன்மை நம்மிடம் காணப்படுகிறது. மருந்து படிப்புத்துறையிலும், நர்ஸிங் படிப்புத் துறையிலும் ஆயிரம் பேருக்கு ஒரு முஸ்லிமே காணப்படுகின்றனர்.

இறக்குமதி மருந்துகளான 20 வகைத் தடுப்பூசிகளைப் போட்டு வீரியமுள்ள மருந்தையே எதிர்காலத்தில் உட்கொள்ள வேண்டிய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொள்வோர் ரூபாய் 7./- க்கு விற்க வேண்டிய மாத்திரையை ரூபாய் 30/- க்கு மேல் விற்கின்றனர். இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாத நாம் கலயாண மண்டபங்கள், லாட்ஜுகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், பொழுதுபோக்கு வணிக வளாகங்கள் கட்டுவதில் மட்டுமே அக்கரை செலுத்தி வருகிறோம்.

முஸ்லிம்களுடைய போக்கை அறிந்திருக்கும் அரசு மகப்பேறு மருத்துவமனைப் பணியாளர்கள், நர்ஸுகள் பிரசவத்திற்காகத் தங்களை நாடிவரும் முஸ்லிம் பெண்களிடம், அசிங்கமான, கொச்சையான வார்த்தைகளால் ஏசிப் பேசும் நிலையும், இந்த ஏச்சையும், பேச்சையும் பொருத்துக் கொள்வதோடு, ஆண் மருத்துவர்களிடம் பிரசவம் பார்க்கும் நிலையும் சென்னையில் இன்றைக்கும் தொடர்கிறது.

உணவுப் பழக்க வழக்கம், ஓய்வில்லா உழைப்பு, உடல் நலம் பேணாமை, நடைப்பயணம் இல்லாமையால் ஐம்பது வயதுக்குள்ளாகவே முஸ்லிம்களுக்கு முதுமை தட்டிவிடுகிறது. (நாற்பது வயதுக்கு மேல்தான சமுதாயத்தினர் வாழ்க்கையையே ஆரம்பிக்கின்றனர்). இன்றைக்கு 60 வயதுக்குள் முஸ்லிம்களுக்கு வாழ்க்கையே முடிந்து விடுகிறது.

இந்த நிலைப் பாட்டிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுக்க தொண்டுள்ளம் கொண்ட முஸ்லிம் மருத்துவர்களும், ஆண் நர்ஸுகளும் முன்வர வேண்டும். மஸ்ஜிதுகள் தோறும், மருத்துவர்கள் தங்கள் பணி நேரம்போக இரண்டு மணி நேரம் மாலையில் வருகை தந்து ரத்த அழுத்தம், நீரழிவு ஏனைய வகை நோய்களைக் கண்டறிந்து முஸ்லிம்களுக்கிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். (சென்னையிலுள்ள சில மஹல்லாக்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பரவலாக்கப்பட வேண்டும்). காரணம், முன் குறிப்பிட்ட இரண்டு வகை நோய்களும் முற்றிய நிலையில் தான் முஸ்லிம்கள் மருத்துவ மனைக்கே செல்கின்றனர்.

வசதியுள்ளோர், மருத்துவர்களைக் கொண்டு ஏழைகள் வாழும் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். மறுபடியும் சொல்கிறோம் வசதியுள்ளோர், மருத்துவர்களைக் கொண்டு ஏழைகள் வாழும் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். வசதியற்ற ஏழைப் பெண்களுக்கு முழு சிகிச்சையும் அளிக்க முன்வர வேண்டும்.

இதற்கு மாவட்டந்தோறும் மருந்து ஸ்டாக்கிஸ்டுகளாக உள்ள முஸ்லிம்களும், ஆங்கில மருத்துவர்களும் உதவ வேண்டும்.

மருத்துவத் துறையில் உச்சம் முதல் கடைசி வரை உள்ள பல படிப்புகளில் எல்லா வகைப் படிப்பையும் தங்களது மதிப்பெண்ணுக்கொப்ப கற்க முஸ்லிம் மாணவர்கள், மாணவிகள் முன்வர வேண்டும். எல்லாப் படிப்புகளுக்கும் தேவை அதிகமாக உள்ளது. படித்தால் உச்சத்தில் தான் படிப்பேன் என்ற நிலைப்பாட்டை நமது பிள்ளைகள் மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளின் மூலமே முஸ்லிம்களை மற்ற சமூகத்தினர் அன்னியர்களாகப் பாவிக்கும் போக்கு மாறும்.

வசதிபடைத்தோரின் சேவை இவ்விஷயத்தில் அவசியம் தேவை. அவர்கள் முயன்றால் சமுதாயத்தை ஆரோக்கியத்துடன் வாழ வைக்க முடியும். உண்மையான இறையச்சமுள்ள வசதிபடைத்தோர் விரைவில் களமிறங்குவார்கள் என நம்புவோமாக. அல்லாஹ் உதவியும், நல்லருளும் புரிவானாக.

-முஸ்லிம் முரசு, நவம்பர் 2008 தலையங்கம்

www.nidur.info

வியாழன், நவம்பர் 17

McAfee Anti virus Plus 2012 தரவிறக்கம் செய்வதற்கு!!


McAfee Anti virus Plus 2012 தரவிறக்கம் செய்வதற்கு!!


இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது
.
நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணணியில் புகுந்து நம் கணணியில் வைத்திருக்கும் தகவல்களை முடக்கி கடைசியில் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.


இந்த வைரஸ்களை அழிக்க பல ஆன்ட்டி வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணணியில் உள்ள வைரஸ்களை அளிப்பதில் McAfee Anti virus Plus 2012 என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது.இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல. இது ஒரு கட்டண மென்பொருளாகும். இந்த மென்பொருளை முழுமையாக பெற இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.ஆனால் தற்போது இந்த தளத்தில் ஒரு புதிய சலுகையையை வெளியிட்டு உள்ளனர். அதாவது McAfee Anti virus Plus 2012 ஆறு மாத காலத்திற்கு இலவசமாக அனைவருக்கும் வழங்கி உள்ளனர்.
இந்த புதிய சலுகையை பெற முதலில் இந்த Promotional Offer கிளிக் செய்து செல்லுங்கள்.உங்களுக்கு ஒரு விண்டோ வரும். அதில் உள்ள GET STARTED NOW என்ற பட்டனை அழுத்தவும்.அந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு Register விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் ஈமெயில் ஐடியை கொடுத்து Register செய்து கொள்ளுங்கள்.பின் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு activation link அனுப்பி இருப்பார்கள் அந்த லிங்கில் கிளிக் செய்து Activate செய்து கொள்ளுங்கள்.


ஈமெயில் ஆக்டிவேட் செய்தவுடன் படத்தில் காட்டியுள்ள Get My Trial என்ற பட்டன் மீது கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் I Agree பட்டனை அழுத்தினால் முடிவில் உங்களுக்கு டவுன்லோட் பகுதி வரும்.இதில் மென்பொருளை எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற தகவல்களை கொடுத்து இருப்பார்கள்.தரவிறக்கம் செய்து முடித்தவுடன் மென்பொருளை உங்கள் கணணியில் இன்ஸ்டால் செய்து ஆறு மாதத்திற்கு இலவசமாக உபயோகித்து விடுங்கள்

புதன், நவம்பர் 16

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை


பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி
கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது
பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
                                                     
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா 

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். 

இது தமிழகம்  எங்கும் கிடைக்கிறது.
வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. 
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; 
பரோட்டாவும் பிரபலமடைந்தது. 

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .


இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும்  Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .


இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
  
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல 

மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்


இதில் சத்துகள் எதுவும் இல்லை 


குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , 

எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு ,
நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


இப்போதாவது  நாமும் விழித்து கொள்வோம் 
நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் . 


இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்கள் .


thanks: Bro. seeralan
 http://enathukaruthu.blogspot.com/2011/11/blog-post.html

திங்கள், நவம்பர் 14

LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு


LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு

ஆக்கம்: சகோ.வடகரை தாரிக்.
இப்போது பழைய மாடல் TV வாங்குவது குறைந்து, ப்ளாட் பேனல் டிவிக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது.இந்த வகையில் LCD, LED மற்றும் Plasma டிவிக்கள் மார்க்கட்டில் உள்ளன. இதில் அதிகம் உள்ளது எல்.சி.டி. டிவிதான். ஆனால் சில கடைகளில் நம்மைப் பல்வேறு சொற்களைச் சொல்லி குழப்பி விடு கிறார்கள். எனவே ப்ளாட் பேனல் டிவி வாங்குவதில் எதனை வாங்கலாம் என்று பார்ப்போம்.


ஸ்கிரீன் அளவு: 

முதலில் நாம் வாங்க இருக்கும் டிவி யின் அளவை அதன் திரை அளவை வைத்துத்தான் கூ றுகிறார்கள். பணம் உள்ளது என்பதற்காக மிகப் பெரிய திரை உள்ளதை வாங்கக்கூடாது. அல்லது பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்பத ற்காக மிகச்சிறிய திரை உள்ளதை வாங்கக்கூடாது.


சரியான திரை அளவு என்பது டிவியை வைத்துப் பார்க்க இருக்கும் அறையின் விஸ்தீரணத்தைப் பொறுத்தது. நாம் எவ்வளவு தூரத்தில் வைத்து வாங்க இருக்கும் டிவியை இயக்கிப் பார்க்கப் போகிறோம் என்பதே, அந்த டிவி யின் திரை அளவினை நிர்ணயம் செய்திடும். திரையின் அளவை (அங்குலத்தில்) 1.8 ஆல் பெருக்கினால், உங்கள் டிவியைக் கண்டு ரசிக்க நீங்கள் எவ்வளவு தூர த்தில் அமரலாம் என்பது தெரிய வரும். எடுத்துக் காட்டாக 32 அங்குல டிவி எனில், அதனைப் பார்க்க அமரும் தூரம் 5 அடியாகும். பெரிய அறையில் சிறிய அளவிலான டிவியையும், சிறிய அளவிலான அறையில் பெரிய டிவியையும் வைத்துப் பார்ப்பது கூடாது.
LCD, LED, PLASMA

அனைத்து நாடுகளிலும் இது குறித்து பட்டிமன்றம் நடக்காத குறையாக கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் ஒரு தொழில் நுட்பத்தைக் குறிக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றவற்றைக் காட்டிலும் சிறந்தது என்பதற்கான வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன.
பொதுவாக 42 அங்குல அகலத்திரை வரை எல்.சி.டி. டிவி மற்றதைக் காட்டிலும் சிறந்தது என்றும் , அதைக் காட்டிலும் பெரிய அளவிலான டிவிக்குச் செல்கையில் பிளாஸ்மா டிவி சரியானது என்றும் சொல்கின்றனர். இது தொழில் நுட்பத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட பழைய தகவல்கள். இப்போது தொடர்ந்து இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் மாறி வருவதனால், இந்த கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. இதில் இரண்டு நிரூபிக்கப்பட்ட தகவல்களை மனதில் கொள்ள வேண்டும். நன்றாக வெளிச்சம் கொண்ட அறைகளில் எல்.சி.டி. டிவி சிறப்பாகச் செயல்படும். பிளாஸ்மா டிவிக்கள் ஸ்போர்ட்ஸ் போன்ற வேகமான இமேஜஸ் கொண்ட காட்சிகளைச் சிறப்பாகக் காட்டும். இரண்டு வகை டிவிக்களும் பயன்படும் வாழ்நாள் ஒரே அளவுதான். இந்த போட்டியில் புதிதாக வந்துள்ளது எல்.இ.டி. டிவி. இது ஒரு எல்.சி.டி. டிவி, ஆனால் இதற்கான பேக் லைட்டிங் எல்.இ.டி.யால் வழங்கப்படுகிறது. இந்த எல்.இ.டி க்களுக்கெல்லாம் கூடுதலாகச் செலவழித்துக் கொண்டிருக்க வேண்டாம். எனவே மீதமிருக்கும் இரண்டில் எது வாங்கலாம்? இரண்டு வகையையும் பல்வேறு வெளிச்சங்களில் போட்டுப் பார்த்து உங்களுக்குப் பிடித்ததனை வாங்கலாம்.

அடுத்து இன்னொரு தகவலையும் சொல்கின்றனர். அது எச்.டி. ரெடி டிவி (HD Ready TV) மற்றும் புல் எச்.டி. டிவி (Full HD) நம்மை அதிகம் குழப்புவது இந்த வகைகள் தான். எச்.டி. ரெடி டிவிக்களின் திரை ரெசல்யூசன் 1366 x 768 அல்லது 1366 x 768 பிக்ஸெல்கள் இருக்கும். Full HD டிவியில் 1920 x 1080 பிக்ஸெல்கள் இருக்கும். நீங்கள் எச்.டி. வீடியோ வகை படங்கள் எக்ஸ் பாக்ஸ் 360, புளு–ரே, பி.எஸ்.3, உயர்வகை மீடியா பிளேயர்கள், எச்.டி. சாடலைட் பாக்ஸ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால் Full HD டிவி வாங்கவும்.
இவ்வாறு இல்லாமல், உங்கள் நோக்கம் சாடலைட் டிவி இணைப்பில் பொழுது போக்கு நிக ழ்வுகள் மற்றும் சினிமா பார்ப்பதாக இருந்தால் HD Ready TV போதும். நம் ஊரில் இயங்கும் டி.டி. எச். ஆப்ப ரேட்டர்கள் நேரடியாகத் தரும் டிவி நிகழ்ச்சிகள் இணைப்பு அனைத்தும், சாதாரண பிக்ஸெல் திறன் கொண்ட திரைகளில் நன்றாகவே தெரியும். வழக்கமான டிவிக்களைக் காட்டிலும் எல்.சி.டி. டிவிக்கள் சற்று விலை கூடுதல்தான். எனவே கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை, நல்ல சாதனங்களில் முதலீடு செய்திடுங்கள். பிரபலமான நிறுவனங்கள்வழங்கும் டிவிக்களையே வாங்கவும். டிவி பேனலின் தன்மை, விற்பனைக்குப் பின் பராமரிப்பு சேவை ஆகிய வற்றை நல்ல நிறுவனங்களே தர முடியும். எனவே மார்க்கட்டில் விற்பனை செய்யப்படும் டிவிக்கள் மற்றும் சொற்ப அளவிலே பெயர் பெற்ற டிவிக்களை, அவை எவ்வளவு டிஸ்கவுண்ட் தந்தாலும், வாங்க வேண்டாம். அதிக அளவில் டிஸ்கவுண்ட் தரும் எந்த டிவியையும், சற்று சந்தேகத்துடனே பார்க்கவும். குறிப்பாக வாரண்டிக்கான சரியான வழி காட்டாத டிவிக்களை அறவே ஒதுக்கவும்.

காண்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் ரெஸ்பான்ஸ் டைம்
காண்ட்ராஸ்ட் ரேஷியோ இதில் அதிகம்; அதனால் விலை கூடுதல் என்றெல்லாம் சொல்வதை டிவி விற்பனை மையங்களில் கேட்கலாம். இந்த விகிதங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் வித்தியாசத்தினை ஏற்படுத்தாது. இதனை ஒவ்வொரு நிறுவனமும் ஒரு முறையில் அளந்து தெரிவிக்கின்றன. ஒவ்வொரு டிவிக்கும் அதனைப் பார்க்கும் சூழ்நிலை வேறு படுவதால்,காண்ட்ராஸ்ட் ரேஷியோவினை ஒரு பெரிய அடிப்படை விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.  ஆனால் ரெஸ்பான்ஸ் டைம் என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு பிக்ஸெல் முழு கருப்பிலிருந்து முழு வெள்ளை நிறத்திற்கு மாறும் நேரமே ரெஸ்பான்ஸ் டைம் ஆகும். பிளாஸ்மா டிவிக்களில் இந்தரெஸ்பான்ஸ் டைம் மிக வேகமாக இருக்கும். ஆனால் எல்.சி.டி. டிவிக்களில் அவை 8 மில்லி செகண்டுகளுக்கும் குறைவாக இருந்தால் நல்லது. (ஆனால் இந்த வித்தியாசத்தை நம் கண்களால் கண்டறிய முடியாது). வேகமான விளையாட்டுகள், வேகமான நிகழ்வுகளைக் கொண்ட திரைப்படங் களைப் பார்க்கும்போதும், கன்ஸோல் வழியாக விளையாடு கையிலும் இந்த வேறுபாடு தெரிய வரலாம்.

சுவருடனா? டேபிளிலா?


இந்த வகை டிவிக்கள் அனைத்துமே சுவர்களில் இணைத்துப் பார்க்கும் வகையில் வெளிவருகின்றன. இவற்றை டேபிளில் வைத்துப் பார்க்கவும் ஸ்டாண்ட் வழங்கப்படுகிறது. இதற்கான சரியான வால் மவுண்ட் ஸ்டாண்ட் கொண்டு, அதற்கான பயிற்சி பெற்றவரைக் கொண்டு சுவற்றில் மாட்டுவதற்கான சிறிய ஸ்டாண்ட் அமைக்கப்பட வேண்டும்.
ஆனால் நீங்கள் டிவியை அப்படி, இப்படி சிறிது தூரம் நகர்த்தி வைத்துப் பார்ப்பவர் என்றால், பாதுகாப்பான டேபிளில், உரிய ஸ்டாண்டில் வைத்து இணைத்துப் பயன்படுத்துவது நல்லது. இப்படி வைக்கும் போது 20% திருப்பிக் கொள்ளலாம்.

இணைப்புகள்:

இன்றைக்கு வீடியோ இணைப்புகள் நிறைய வகைகளில் கிடைக்கின்றன. HDMI, Component, Composite, PC எனப்பலவகை இணைப்புகளை டிவிக்களில் பயன்படுத்தலாம். பெர்சனல் கம்ப்யூட்டர்களையும் இணைக்கலாம். இப்போது வரும் டிவிக்களில்குறைந்தது 10 வீடியோ இணைப்புகள் உள்ளன.
இவற்றிற்கான சரியான கேபிள்களை தேர்ந்தெடுத்து, அதற்கான ஸ்லாட்டுகளில் பயன்படுத்துவது சிறப்பான வெளிப்பாட்டினைத் தரும். புதிய வசதியாக யு.எஸ்.பி. போர்ட்களும் இந்த டிவிக்களில் தரப்படுகின்றன. யு.எஸ்.பி. டிரைவ்களில் இருந்து பாடல்கள் மற்றும் வீடியோக்களை இயக்கலாம் இந்த இணைப்புகளில் பெரும்பாலானவை டிவிக்களின் பின்புறம் தரப்பட்டுள்ளன. எனவே சுவர்களில் மவுண்ட் செய்யப்படும் டிவிக்களில், மாட்டிய பின்னர் இணைப்புகளைச் செருகுவது சிக்கல் நிறைந்ததாக மாறுகிறது.
சுவரில் பொருத்தும் முன்பே, சரியான நீள முள்ள கேபிள்களை இணைத்து வை த்துக்கொள்ள வேண்டும். அல்லது எப்படி கவனமாகச் சேதம் ஏற்படாமல் டிவியைக் கழட்டி பொருத்துவது என்று தெரிந்து கொள்ள வெண்டும். டிவிக்களை வாங்கு முன் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று மேலே சொல்லப்பட்ட தொழில் நுட்பவசதிகள் நீங்கள் வாங்க இருக்கும் டிவி யில் எந்த அளவில் உள்ளது என்று பார்க்கவும். இது மற்ற டிவிக்களுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க உதவும். கடைகளில் விற்பனையாளர்கள் சொல்வதை மட்டும் கேட்டு வாங்குவதைத் தவிர்க்கலாம்.

பிளாக் ஸ்ட்ரெட்ச்: 

டிவி திரையில் தோன்றும் காட்சிகளைச் செம்மைப்படுத்த டிவிக்களில் பலவித தொழில் நுட்பங்கள் கையாளப்படுகி ன்றன. கருப்பு சிக்னல்களைத் திறன் ஏற்றி காட்சிகளைச் சீராக்குவது பிளாக் ஸ்ட்ரெட்ச் என அழைக்கப்படுகிறது. பொதுவாக வெள்ளை மற்றும் கருப்பு சிக்னல்கள் அடுத்தடு த்து அமையும் போது கருப்பு அதன் தன்மையிலிருந்து சிறிது குறை வாகக் காட்டப்படும். காட்சி இதனால் சற்று வெளிறித் தெரியலாம். இந்தக் குறையை பிளாக் ஸ்ட்ரெட்ச் நீக்குகிறது.

பி.ஐ.பி.: 

பிக்சர் இன் பிக்சர் என்பதன் சுருக்கம் இது. இதில் டிவி ட்யூனர்கள் கூடுதலாக இருக்கும். ஒரு சேனலைப் பார்க்கயில் அதே திரையில் சிறிய கட்டத்தில் இன்னொரு சேனலையும் பார்க்கலாம். சிறிய கட்டத்தில் உள்ளதைப் பார்க்க விரும்பினால் அதனைப் பெரிதாக்கி பெரிய அளவில் தோன்றியதனைச் சிறிய திரையாக மாற்றலாம். சில டிவிக்கள் 9 சிறிய கட்டங்களை ஒரே திரையில் கொண்டு வரும் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளன.

ஷார்ப்னெஸ் கண்ட்ரோல்: 

படக் காட்சியின் தெளிவு மற்றும் கூர்மையினை இதன் மூலம்பெறலாம். ரிமோட் கண்ட்ரோலிலும் இந்த வசதி உண்டு. இரவு இருட்டில் டிவி பார்க்கையில் படக்காட்சி அதிக ஒளியுடனும் ஷார்ப்பாகவும் தோன்றி கண்க ளை எரிச்சல் அடையச்செய்யலாம். தேவையான லைட் வெளிச்சம் உள்ள அறையில் காட்சிகள் இன்னும் ஷார்ப்பாக இருக்கலாமே என்று தோன்றும். இதற்கான மாற்றத்தை ஷார்ப் னெஸ் கண்ட்ரோல் மூலம் மேற்கொள்ளலாம்.

பிரைட்னெஸ் சென்சார்: 

அறையில் உள்ள ஒளிக்கேற்ற வகையில் டிவி தன் திரைக் காட்சியின் ஒளி அளவை மாற்றி கண்ணுக்கு இதமான காட்சியைத் தருவதே பிரைட் சென்சார் வசதி.

காண்ட்ராஸ்ட் ரேஷியோ: 

பிரைட் மற்றும் டார்க் கலர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டு விகிதத்தினை இது குறிக்கிறது.ரெசல்யூசன்:


திரையில் காட்சிகளைக் காட்டும் புள்ளிகளின் எண்ணிக்கையை இது தருகிறது. எவ்வளவு கூடுதலாக இந்த புள்ளிகள் உள்ளனவோ அந்த அளவிற்கு காட்சிகளின் ஆழம் மற்றும் தெளிவு இருக்கும். பின்வருமாறு: வி.ஜி.ஏ. (Video Graphics Array) 640 x 480, சூப்பர் விஜிஏ 800 x 600, எக்ஸ் ஜி.ஏ. (எக்ஸெடெண்டட்) 1024 x 768, சூப்பர் எக்ஸ்.ஜி.ஏ. 1280 x 1024, டபிள்யூ எக்ஸ்.ஜி.ஏ. (வைட் எக்ஸெடெண்டட்) 1366 x 768 மற்றும் இறுதியாக ட்ரூ எச்.டி. ரெசல்யூசன் 1980 x1080.


ஆஸ்பெக்ட் ரேஷியா: 

காட்டப்படும் தோற்றத்தின் அகலம் மற்றும் உயரம் குறித்த விகிதம். வழக்கமான டிவிக்களில் இது 4:3 என்ற விகிதத்தில் இருக்கும். அதாவது 4 பங்கு அகலம், 3 பங்கு உயரம். அகல த்திரையின் இந்த விகிதம் 16:9 என்று உள்ளது.

கோம்ப் பில்டர்: 

வண்ணங்களையும் ஒளியையும் பிரித்து சரியான ரெசல்யூசனைத் தரும் தொழில் நுட்பம். படக் காட்சி திரித்துக் காட்டப்படுதல், இடையே புள்ளிகள் தோன்றுதல், நடுங்குவது போல் காட்சி அளித்தல் போன்றவற்றை இது நீக்கும்.

பி.எம்.பி.ஓ: 

பீக் மியூசிக் பவர் அவுட்புட்: (Peak Music Power Output) ஒரு டெலிவிஷன் எந்த அளவிற்குக் கூடுதலாக ஒலி அளவைத் தர முடியும் என்பதனை இது குறிக்கிறது. சிறிய அறையில் தெளிவாக ஒலியைக் கேட்டு மகிழ 30 வாட்ஸ் போதுமானது.

ஸ்டீரியோ பிளே பேக்: 

டிவியிலிருந்து சவுண்ட் சிக்னல்களை ஆடியோ சிஸ்டத்திற்கு மாற்றுவதனை மேற்கொள்ளும் தொழில் நுட்பம். இதனால் தெளிவான டைனமிக் ஸ்டீரியோ ஒலியை தனி ஸ்பீக்கர்களில் கேட்டு மகிழலாம்.

ரெஸ்பான்ஸ் டைம்:

டிவியின் திரை ஒரு கட்ட ளையை ஏற்றுச் செயல்படுத்தும் கால அவகாசம். பொதுவாக லட்சத் தில் ஒரு பகுதி நேரம் என்று இதனைச் சொல்வார்கள். ஒரு பிக்ஸெல் கருப்பிலிருந்து வெள்ளைக்கும் பின் மீண்டும் கருப்புக்கும் மாறும் கால அவகாசம் இது. இந்த தொழில் நுட்பம் எல்.சி.டி.,டிவியை வாங்குகையில் அதிகம் கவனிக்க வேண்டிய ஒன்று. ரெஸ்பான்ஸ் டைம் திறன் கொண்டது இல்லை என்றால் காட்சி சிதறும்.

நன்றி; சகோதரர். வடகரை தாரிக்