அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களை ஒரு படையுடன் ‘ஜுஹைனா’ குலத்தாரைச் சேர்ந்த ‘ஹுரைக்கத்’ கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள்.
(நாங்கள் அவர்களுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தோம்) அவர்களில் ஒருவனை நான் தாக்க முயன்ற போது அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” எனக் கூறினார்.
எனினும் நான் அவரைத் தாக்கிக் கொன்றுவிட்டேன். அது என் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது.
நான் இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறியபோது, “லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்ன பிறகா நீர் அவரைக் கொலை செய்தீர்?” என்று கேட்டார்கள்.
“ஆயுதத்தைப் பார்த்து பயந்துதான் அவர் அவ்வாறு சொன்னார் அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூறினேன். அதற்கு அன்னார்,
“அவர் அதற்காகத்தான் சொன்னார் என்பதை அவரது நெஞ்சைப் பிளந்து பார்த்தீரா?” என்று (கடிந்து) கேட்டார்கள்.