Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

புதன், ஏப்ரல் 17

பன்மொழிகள் கற்றுக் கொள்ள ஆர்வமா?


பன்மொழிகள் கற்றுக் கொள்ள ஆர்வமா?

புரனவுன்சியேட்டர் (Pronunciator) என்ற இணையதளம் 60க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக்கொள்ளும் வசதியை வழங்குகிறது.பிற மொழியைக் கற்க உதவும் மற்ற இணையதளங்களில் இருந்து இந்தத் தளம் மாறுபட்டது. நாம் எந்த மொழியைப் பயில விரும்புகிகின்றோமோ, அந்த மொழியை, நம் தாய்மொழியிலிருந்தே கற்கலாம்.

www.pronunciator.com என்ற இத்தளத்திற்குச் சென்று I speak என்பதில் நாம் எந்த மொழி பேசுபவர் அல்லது எந்த மொழியில் இருந்து கற்க விரும்புகின்றோமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து இருக்கும் I want to learn கட்டத்திற்குள் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஹீப்ரு, ஸ்பானிஷ் என 60க்கும் மேற்பட்ட உலக மொழிகள், நம் நாட்டு மொழிகள் இருக்கும். எந்த மொழி கற்க விரும்புகின்றோமோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.