Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, டிசம்பர் 31

ஒரு வாழைப்பழம் 4 ஆப்பிளுக்கு சமம்

இளமை, ஆரோக்கியம் நிச்சயம் 
ஒரு வாழைப்பழம் 4 ஆப்பிளுக்கு சமம்


தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்’ என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:

வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.
 
ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.

 
ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.
நன்றி: பூந்தைஹாஜா முகநூலிலிருந்து.

செவ்வாய், டிசம்பர் 27

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வலியுறுத்துவதேன்?

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வலியுறுத்துவதேன்?
இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?

பதில்:

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் – இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு இஸ்லாம் தோன்றும் முன்பு – உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

1. முந்தைய காலங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு – போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள்.

பண்டைய காலங்களில் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் கீழத்தரமாக மதிக்கப்பட்டு – மனிதனுக்கு உண்டான அடிப்படை கௌரவம் கூட மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வரலாற்று உண்மைகள் நமக்கு போதுமான விளக்கத்தை தருகின்றன.

A. பாபிலோனிய நாகரீகம்:

பாபிலோனிய சட்டப்படி பெண்கள் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் பாபிலோனிய நாகரீகத்தில் இருந்தது.

B. கிரேக்க நாகரீகம்:

பண்டைகால நாகரீகங்களில் கிரேக்க நாகரீகம் பெருமைக்குரியதாக கருதப்பட்டது. மேற்படி ‘பெருமைக்குரிய’ நாகரீக காலத்தில் – பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். ‘பண்டோரா’ என்றழைக்கப்பட்ட ‘கற்பனைப் பெண்மணி’ யே மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாக அமைந்தவள் என்று கிரேக்க புராணங்கள் பறை சாற்றுகின்றன. கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழந்தவர்கள் என்றும் – ஆண்களுக்கு அடிமைகள் என்றும் கருதினார்கள். கிரேக்க நாகரீகத்தின் பிற்பட்ட காலத்தில் பெண்கள் – உயர்வானவர்களாக மதிக்கப்பட்டாலும் – ஆண்களுக்கு உரிய தான் என்ற அகம்பாவத்தாலும் – பாலியியல் பலாத்காரங்களுக்கும் – பெண்கள் உட்படுத்தப்பட்டார்கள். கிரேக்க சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் – விபச்சாரம் பரவலாக காணப்பட்டது.

C. ரோமானிய நாகரீகம்:

ரோமானிய நாகரீகம் புகழின் உச்சநிலையில் இருந்தபோது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கொண்டிருந்தான். விபச்சாரமும் – பெண்களை நிர்வாணமாக பாhப்பதுவும் – ரோமானியர்களின் மிகச் சாதாரண பழக்க வழக்கமாக இருந்தது.

D. எகிப்திய நாகரீகம்:

எகிப்தியர்கள் பெண்களை ஒரு தீமையாகவும் – சாத்தானின் சின்னமாகவும் கருதினார்கள்.

E. இஸ்லாமிய மார்க்கம் தோன்றுவதற்கு முன்பிருந்த அரேபிய நாகரீகம்:

அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு – அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள்.

2. இஸ்லாம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது.. அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை வலியுறுத்தியது.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது.

ஆண்களுக்குரிய ‘ஹிஜாப்’

வழக்கமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு மாத்திரம்தான் ‘ஹிஜாப்’ முறை உள்ளதாக பொதுமக்கள் வாதிடுவார்கள். ஆனால் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான ‘ஹிஜாப்’ பற்றி அறிவிப்பதற்கு முன்பாக ஆண்களுக்கான ‘ஹிஜாப்’ பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான்.

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் ‘(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.‘ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் – வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் – அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

பெண்களுக்குரிய ‘ஹிஜாப்’

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் ‘(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்…………….ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

1) ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்: நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் – கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் – ஆண்களுக்கும் – பெண்களுக்கும் சமமானவையே.

2) அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.

3) அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது – உரத்த ஆடையாக இருக்க வேண்டும்

4) அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் – ஆண்கள் – பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.

5) ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் – பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

6) அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம் – கருப்பு நிறம் – போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

3. இஸ்லாமிய ஆடை மனிதர்களின் நடத்தையையும் – பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கியது.

மேற்கூறிய ஆறு நெறிமுறைகள் தவிர மனிதனின் நன்னடத்தை அவனது பழக்கவழக்கம் அவனது மனோபாவம் மற்றும் தனிமனித எண்ணங்கள் ஆகியவையும் இஸ்லாமிய ஆடை முறையில் உள்ளடங்கும். ஒரு மனிதர் ஆடைகளில் மாத்திரம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பாரேயானல் – இஸ்லாமிய ஆடையின் ஒரு பகுதியை மாத்திரம் பின்பற்றுவது போன்றதாகும். ஆடைகளிலும் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பதோடு – தனது கண்களிலும் – தனது உள்ளத்திலும் – தனது எண்ணத்திலும் – இஸ்லாமிய ஹிஜாப் முறையை கடைபிடிக்க வேண்டும். இஸ்லாமிய ஹிஜாப் என்பது – ஒருவர் நடக்கும் விதத்திலும் – அவர் பேசும் விதத்திலும் – அவர் பழகும் விதத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.

5. ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:

பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் – அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் – ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

இரட்டை சகோதரிகள் – ஓர் உதாரணம்:

இரட்டைப் பிறவியான சகோதரிகள் – இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் – மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் – கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?.

கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். மேற்படி வகையான ஆடைகள் ஆண்பாலரை கேலியும் கிண்டலும் – தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

7. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.

இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் – அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். சிலர் இஸ்லாம் கருணையில்லாத – காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு சிறிய கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ – அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு – தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?. நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் – வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் – யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு – வல்லுறவு கொண்டு விட்டால் – மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் – வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ – அல்லது தாயோ வல்லறவு கொள்ளப்பட்டு – வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.

8.மேற்கத்திய சமூகம் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து விட்டதாக தவறான கருத்தை கொண்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள் சொல்லும் பெண் விடுதலை என்பது – பெண்களின் உடலை பயன் படுத்திக்கொள்வதற்கும் – பெண்களின் ஆன்மாக்களை கொச்சைப் படுத்தவதற்கும் – பெண்களின் கௌரவத்தை இழக்கச் செய்யவும் – மேலை நாட்டினர் அணிந்திருக்கும் மாறுவேடமே தவிர வேறில்லை. மேற்கத்திய உலகம் – சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்திவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்களின் உயர்வான நிலை என்பது – பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ளவும் – அவர்களை சமூகத்தின் காட்சிப்பொருளாக மாற்றுவதையுமே – பெண்விடுதலை என்கிறார்கள். ‘கலை’ மற்றும் ‘கலாச்சாரம்’ என்கிற பெயரில் வண்ணத்திரைகளில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பதற்கு பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதைத்தான் பெண் விடுதலை என்கிறார்கள்.

9. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் – அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1756 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை சொல்கிறது. பின்னர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. குற்றம் நிகழ்ந்த ஆண்டு குறிப்பிடப் படவில்லை. அந்த ஆண்டு – 1992 அல்லது 1993 ஆக இருக்கலாம். பிறகு வந்த ஆண்டுகளில் அமெரிக்கர்கள் இன்னும் ‘தீவிரமாக’ வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

அமெரிக்காவில் இஸ்லாமிய ‘ஹிஜாப்’ முறை நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் – அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி – மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் – அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய ஆடை முறை அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் – அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?.

10. இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும்.

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – தூய்மையான சமுதாயம் அமைவதை எவராலும் தவிர்க்க முடியாது. அமெரிக்காவாக இருக்கட்டும் – ஐரோப்பாவாக இருக்கட்டும் – அல்லது உலகில் எந்த நாடாக இருந்தாலும் எங்கெல்லாம் இஸ்லாமிய சட்டத் திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகிறதோ – அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். எனவே இஸ்லாமிய ஆடை முறை பெண்களை இழிவுபடுத்துவதில்லை. மாறாக பெண்களின் மானத்தையும் – கற்பையும் காப்பாற்றி அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக மாற்றுகிறது.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

ஞாயிறு, டிசம்பர் 25

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

அறியாத சில விசயங்களை 
தெரிந்து கொள்வோம் வாங்க! 

 • இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது. 

 • *வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம். 

 • *வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது. 

 • *உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள். 

 • *வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். 

 • *கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

 • *கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை' என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும். 

 • *ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன. 

 • *நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது. 

 • *கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது. 

 • *கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

 • *முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது. 


 • *ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன. 

 • *ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்.. 

 • *உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது. 

 • *வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது. 

 • *வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?... அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது !
ஜஸாக்கல்லாஹ்:
 
தொகுப்பு: சகோ.Engr.Sulthan

Mohammad Sultan er_sulthan@yahoo.com

சனி, டிசம்பர் 17

தேவை: சமூக அக்கரை கொண்ட ஒரு புதிய தலைமுறை!

தேவை: சமூக அக்கரை கொண்ட ஒரு புதிய தலைமுறை!

இறைவன் தனது திருமறையிலே கூறுகிறான்:
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்.  (3:110)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு கூட்டத்தாரைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது.
கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது).
அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள்.
அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.
என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். (நூல்: ஸஹீஹுல் புகாரி)

பொதுவாகவே முஸ்லிம்களாகிய நாம் நமது சொந்தப் பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பாபரி மஸ்ஜித்,  இட ஒதுக்கீடு, போன்ற பிரச்னைகளுக்கு நாம் குரல் கொடுக்கிறோம். குரல் கொடுக்கத் தான் வேண்டும். உரிமைகளைப் பெற்றிடப் போராடித் தான் ஆக வேண்டும்.
ஆனால் அது மட்டும் போதாது. பொதுவாக மக்கள் அனைவரையும் பாதிக்கின்ற பிரச்னைகள் அனைத்துக்கும் நாம் குரல் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.

லஞ்சம், ஊழல், விலைவாசி, வறுமை, மது, போதைப் பொருட்கள், ஆபாசம், விபச்சாரம், வன்முறை, பெண்களுக்கெதிரான கொடுமைகள், குழந்தைகளுக்கெதிரான கொடுமைகள், இன்னும் இது போன்ற எல்லாவிதமான மக்கள் பிரச்னைகளுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்; மக்களின் அவலங்களைக் களைந்திட நம்மால் இயன்ற வரை களம் இறங்கிப் பணியாற்றிட வேண்டும்.

இவை மட்டும் அல்ல. மன அழுத்தம், மனச்சோர்வு, தற்கொலை எண்ணம், முதியோர் பிரச்னைகள், விவாகரத்து, குழந்தைகளைப் பாதிக்கும் மன நலப் பிரச்னைகள், குடும்ப வன்முறை, மாணவர்களைப் பாதிக்கின்ற பிரச்னைகள் போன்ற அனைத்து விதமான பிரச்னைகள் குறித்தும் பொது அரங்குகளில் நாம் விவாதித்திட வேண்டும்.

பிரச்னைகளுக்கான சரியான தீர்வு குறித்து மற்றவர்களுடன் விவாதித்திட வேண்டும். இஸ்லாம் – மேற்கண்ட பிரச்னைகள் அனைத்துக்கும் தருகின்ற நடைமுறைத் தீர்வு குறித்து மக்களுக்குப் புரிய வைத்திட வேண்டும்.  இதில் நமது சமூக அக்கரை வெளிப்பட வேண்டும். கிஞ்சிற்றும் உள் நோக்கம் இருந்திடக் கூடாது. இதில் நாம் சுய நலம் இன்றி நேர்மையாகவும், மனத் தூய்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இறைவன் ஒருவனின் திருப்திக்காகவே நமது ஒவ்வொரு செயலும் அமைந்திட வேண்டும்.
மேற்கண்ட நபிமொழியின் கருத்து நமக்குச் சொல்கின்ற செய்தியை சற்று ஆழமாக சிந்தியுங்கள்:

பொதுப் பிரச்னைகளுக்காக நாம் குரல் கொடுக்காவிட்டால் – அதே பிரச்னைகளில் நாமும் சிக்கிக் கொண்டு விடுவோம். மதுவும் போதைப் பொருட்களும் நம் சமூகத்தையும் பாதிக்கும். விபச்சாரம் நம்மை மட்டும் விட்டு வைக்காது. விலை வாசி நம்மையும் சேர்ந்துத் தான் வாட்டும். எல்லாப் பிரச்னைகளின் நிலையும் அப்படித் தான்.

எனவே தேவை என்னவென்றால் – ஒரு புதிய தலைமுறை!
இளைய தலைமுறை.
தெளிவாக சிந்திக்கின்ற தலைமுறை.
தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்கின்ற ஒரு தலைமுறை.
உணர்ச்சி வசப்படாத ஒரு தலைமுறை.
தொலை நோக்கு சிந்தனை கொண்ட ஒரு தலைமுறை.
இஸ்லாத்தைப் புரிந்து கொள்கின்ற ஒரு தலைமுறை.
இஸ்லாத்தைப் பின் பற்ற விரும்புகின்ற ஒரு தலைமுறை.
மக்களைப் பற்றிக் கவலைப் படக்கூடிய ஒரு தலைமுறை.
தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைமுறை.

ஆம்! அப்போது மட்டுமே கப்பல் காப்பாற்றப் படும்!

ஆக்கம்:  சகோ. S.A. மன்சூர்

http://meemacademy.com/?p=666#more-666

இஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றுமொரு மைல்கல்: உலகில் அழகிய பள்ளிவாசல்கள்.

இஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றுமொரு மைல்கல்:
 உலகில் அழகிய பள்ளிவாசல்கள்.
1.மிதக்கும் பள்ளிவாசல்-மலேசியா நீரால் சூழப்பட்ட ஒரு தீவைப்போன்று கோட்டா கின்பாலு பள்ளிவாசல்
 அமைந்துள்ளது.பள்ளிவாசலின்விம்பம் நீரில் விழும் காட்சி பார்ப்பவர்களின்
 உள்ளங்களை தொட்டுவிடுகிறது.
2.பளிங்குப் பள்ளிவாசல்-மலேசியா
 சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கும்வகையில் அமைக்கப்பட்டுள்ள
 இப்பள்ளிவாசல் ஆன்மீக மற்றும் வர்த்தககேந்திர நிலையமாகவும்    விளங்குகின்றது. மலேசியாவின் இஸ்லாமிய மரபுரிமை பூங்காவில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் 80மில்லியன் அமெரிக்கடொலர்கள் செலவில் அமைக்கப்பட்டதாகும்.3.ஷேய்க் ஸைத் பள்ளிவாசல்-ஐக்கிய அரபு ராச்சியம்ஐக்கிய அரபு ராச்சியத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேய்க் ஸைத் பின்
சுல்தான் அல்நஹ்யான் அவர்களால் 1996ஆம் ஆண்டு பள்ளிவாசலின்   நிர்மாணப்பணிஆரம்பமானது.உலகில் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாக கருதப்படும் ஷேய்க் ஸைத் பள்ளிவாசலில் ஒரேதடவையில் 40,000 பேருக்கு தொழக்கூடிய வசதிகாணப்படுகின்றது. உலகின் மிகநீளமான தரைவிரிப்பு(carpet) இந்தப் பள்ளிவாசலிலே உள்ளது. இதன் நிர்மாணப்பணிகளுக்கென 45மில்லியன் அமெரிக்க டொலர்கள்
செலவிடப்பட்டன.4.லுதுபுல்லாஹ் பள்ளிவாசல்-ஈரான்ஈரானின் இஸ்பஹான் மகாணத்தில் லுதுபுல்லாஹ் பள்ளிவாலானது அமைந்துள்ளது.1617ஆம் ஆண்டு 20வருட நிர்மாணப்பணிகளின் பின்னர் இப்பள்ளிவாசலானது கட்டி முடிக்கப்பட்டது.ஐக்கிய நாடுகள் சபையின் யுனேஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமைச் சொத்தாக இது பிரகடணப்படுத்தப்பட்டது.குர்ஆனிய வசனங்களாகளால்லுதுபுல்லாஹ் பள்ளிவாசல் அலங்கரிக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.5.குல்ஷரீப் பள்ளிவாசல்-ரஷ்யா

ரஷ்யாவின் கஸான் பிரதேசத்தில் அமைந்துள்ள குல் ஷரீப் பள்ளிவாசலே ஐரோப்பாவின் மிகப்பெரியபள்ளிவாசல் ஆகும். உலகில் பல்வேறு நகரங்களில் வாழ்ந்த,இஸ்லாமியத் தலைவர்களின் ஆயிரமாவது வருடத்தை அடையாளப்படுத்தும் முகமாக இம்மஸ்ஜிதானது,2005ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் திகதி திறக்கப்பட்டது.வெள்ளை மற்றும் நீலநிறமுடைய இப்பள்ளிவாசலானது,பழமைவாய்ந்த குல் ஷரீப்பள்ளிவாசல் அமைந்திருந்த இடத்திலேயே கட்டப்பட்டுள்ளது.

பழமைவாய்ந்த குல் ஷரீப் மஸ்ஜித் மற்றும் மேலும்பல பள்ளிவாசல்கள் 1552ம் ஆண்டு கஸான் பிரதேசம்ரஷ்யாகளால் வெற்றி கொள்ளப்பட்டபோது அழிக்கப்பட்டது. பழமையான குல்ஷரீப்பள்ளிவாசலானது 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும்.இப் பள்ளிவாசலானது ஒட்டோமன் கட்டிடக்கலைச் சிறப்பியல்புகளைக் கொண்டிருந்தது.
6.ஹஸன் II பள்ளிவாசல்-மோரோக்கோ


20ஆம் நூற்றாண்டில் மோரோக்கோவில் அமைக்கப்பட்ட சிறந்த பள்ளிவாசலாகஹஸன்II பள்ளிவாசல் விளங்குகி;றது.700அடி உயரத்தைக்கொண்ட மினாராவுடன்  இப்பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.இப்பள்ளிவாலானது 10,000 தொழிலாளர்களைக்
 கொண்டு ஏழுவருடங்களின் பின்னர் நிர்மாணிக்கப்பட்டது.உலகில் காணப்படும்ஏழு மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாக மோரோக்கோவின் ஹஸன்II  பள்ளிவாசல் இடம்பிடித்துள்ளது. 7.சுல்தான் உமர் அல்ஷைபுத்தீன் பள்ளிவால்-புரூனை


புரூனையின் தலைநகரில் இஸ்லாத்தின் சின்னமாக சுல்தான் உமர் அல்ஷைபுத்தீன் பள்ளிவசால் காணப்படுகின்றது.தங்கமுலாம் பூசப்பட்ட குப்பாவே இப்பள்ளிவாசலின் விஷேட அம்சமாகும்.Jasakkallah khair: http://muslimulakam.blogspot.com/2011/12/blog-post_02.html

புதிய Laptop வாங்க வேண்டுமா ?


புதிய Laptop வாங்க வேண்டுமா ?

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....

SONY
HP
TOSHIBA
DELL
ACER
SAMSUNG
ASUS
LENOVO

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...

Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ Intel Core i7, Intel Core i5, Intel Core i3 என்று உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். 

Intel- i3, i5, i7 - வேறுபாடு அறிய இங்கே சென்று பார்க்கவும்

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம். 

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது. 

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும். ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.

பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள். 

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ? 

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared graphics ) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது. இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared graphics ) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள். போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared graphics ) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.  ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு. இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.   
  
அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக், வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

நன்றி : சகோ. கான் 

வெள்ளி, டிசம்பர் 2

வெற்றியின் விலாசம் !


வெற்றியின் விலாசம் !


துபையின் புகழ் பெற்ற நிறுவனம் ETA Ascon Star குழுமம். பாலைவனமாக இருந்த துபையில் 1973 ல் ஒரு கட்டுமான நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த காலங்களில் சரியானமுறையான நிர்வாகத் திறமையாலும்அங்கு பணியாற்றும் ஊழியர்களின் இடையறாத உழைப்பின் காரணமாகவும் இன்று அந்நிறுவனம் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்குத் தலை நிமிர்ந்து நிற்கிறது.

கட்டுமானத்துறையை மையப்புள்ளியாகக் கொண்டு இடப்பட்ட முதல் விதை அப்படியே வளர்ந்து ஆல விருட்சமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மின்னணுவியல்இயந்திரவியல்இயந்திரம் தூக்கிகள்,கட்டுமானப் பொருட்கள்ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம்சுற்றுச் சூழல் மேலாண்மைகல்வி இப்படி அவர்கள் தடம் பதித்துள்ள துறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ETA Ascon Star 
குழும நிறுவனங்கள் வெறுமனே ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் மட்டும் செயல்படவில்லை. உலகின் 22 நாடுகளில் அவை கிளைகளைப் பரப்பியுள்ளன. தாங்கள் காலடி வைத்த அனைத்து நாடுகளுக்கும் மாதமொன்றுக்கு பல பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டிக் கொடுத்து வருகின்றன. இன்று அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 67,000.

இவ்வளவு உயரத்தை எட்டிப் பிடித்துவிட்ட போதும் தாங்கள் சாதிக்க வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது என்கிறார், ETA Ascon Star குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்  மரியாதைக்குறிய செய்யது முஹம்மது ஸலாஹுத்தீன். அண்மையில் சிங்கப்பூர் வந்த போது அவர்களோடு உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. இறைவனின் மகத்தான கருணையும்,தம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அயராத உழைப்பும் தான் தங்களுக்குரிய பெருமைகளின் மூலதனம் என்கிறார்கள் வெகு எளிமையாக. செய்யது முஹம்மத் ஸலாஹுத்தீன் அவர்களோடு உரையாடியதிலிருந்து சில துளிகள்....


பெரும்பாலான இந்தியர்கள் இன்று தொழில் துறையில் இருந்தாலும்அவர்களில் சாதனை வெளிச்சத்துக்குள் வந்தவர்கள் வெகு சொற்பம். வியாபாரம் என்பது ஒரு வகை விளையாட்டு. அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு இசைந்து நம்முடைய ஆட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் விளையாட வேண்டியதை ஒருவரே ஆடித் தீர்க்கலாம் என்று முனைந்து பார்ப்பது சவாலுக்குப் பொருத்தமாக இருக்கலாம். வாழ்க்கையில் வெற்றியைத் தருமாஎன்பது கேள்விக்குறி.

இந்தியர்கள் எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதை முதலில் ஒழுங்கமைவுக்கு (Systemize) உட்படுத்த வேண்டும். இன்னார் இருந்தால் மட்டுமே வியாபாரம் நடக்கும் என்ற நிலையை மாற்றியார் வந்து அமர்ந்தாலும் இறையருளால் கல்லா நிறைய வேண்டும். ஒருவரை மட்டுமே நம்பி ஒரு வியாபாரம் இருக்கக் கூடாது. இவ்வாறான ஒழுங்கமைவுத் திட்டமிடல் (Systematic Plan)வெற்றிக்கான முதல் படி.

வியாபாரம் - அலையாடும் கடல். படகை எப்படிச் செலுத்துகிறோமோ அதைப் பொறுத்தே பயணமும் இனிதாகும். இடையில் இயற்கை இடையூறுகள் வரலாம். ஆனால் அவற்றைச் சமாளிக்கும் வல்லமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை தோல்வி வந்தவுடன் ஒட்டுமொத்தத் தொழிலையும் இழுத்து மூடு! என்று மனமுடைந்து போய் விடக் கூடாது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்துதவறுகளைக் களைய வேண்டும்.

வெற்றியின் போதும்தோல்வியின் போதும் மனதைச் சமமமாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். வெற்றிக் கோட்டைத் தொட்டவுடன் மிதப்பில் இருந்து விடாமல்இன்னும் பலர் அதைத் தொட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தையும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான்பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

பொதுவாக ஒரு மனிதன் நான்கு வயதிலேயே போதுமான கல்வியைப் பெற்று விடுகிறான். அதன் பிறகு அவன் பள்ளிக்குச் சென்று பெருக்கிக் கொள்வதெல்லாம் அவனுடைய புத்திக் கூர்மையைத் தான். அதாவதுகல்வி ஒருவருக்குப் பள்ளியில் ஆரம்பிக்கவில்லை. அது தொடங்குவது அவரவர் வீடுகளில். பெற்றோர்கள் தான் அங்கு ஆசிரியர்கள். எனவே பெற்றோரைப் புறக்கணிப்பவர்கள் வெற்றி பெறுவது கடினம். அவர்களிடமிருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். பேரம் பேசுவதுயாரை ஒருமையில்இருமையில்பன்மையில் அழைப்பது இவையெல்லாம் நான்கு வயதுக்குள் மனிதன் தெரிந்து கொள்கிறான். அதற்குப் பெற்றோர்களின் துணை அவசியம். உடன் பணியாற்றுபவர்களை உறவினர் போல மதிக்கும் பண்பும் பெற்றோரிடமிருந்து தான் நமக்கு வரும்.

எங்கே சென்றாலும் புத்தாக்கச் சிந்தனைகளோடு (Innovative Ideas) தொழிலில் இறங்க வேண்டும். பிறர் செய்வது போன்று இல்லாமல்அவர்களிலிருந்து எந்த வகையில் தனித்து வெளிப்படுவது என்ற சிந்தனையோடு தொழிலை முறைப்படுத்த வேண்டும்.

தனித்துச் சாதிப்பது சற்று எளிமையான காரியம். ஆனால் மற்றவரோடு சேர்ந்து உழைக்கும் போது அதில் இருக்கும் சவால்கள் அதிகம். அவற்றைத் தெரிந்து கொண்டுசமாளிக்கும் உத்திகளைக் கற்றுக் கொண்டால் வெற்றியைத் தேடி நாம் போக வேண்டியதில்லை. அதுவே நம்மைத் தேடி வரும்.

-- ஸதக்கத்துல்லாஹ்

அன்பான வாசக நேசங்களே... !

கடந்த 2008 செப்டம்பர் மாதம் சகோ. ஸதக்கத்துல்லாஹ் அவர்களின் தமிழ் வாசம் என்ற வலைப்பூவில் வெளியான பதிவு. சாதிக்க துடிப்பவர்களுக்கு ஊக்கம் தருவிதமாக உள்ள இந்த பதிவை மீள் பதிவு செய்கிறோம்.

-- அதிரைநிருபர் குழு.


திங்கள், நவம்பர் 28

முப்பதுக்குள் வரும் முடிவு

முப்பதுக்குள் வரும் முடிவு

SIster கீதா

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது சுவரில் இப்படி எழுதியிருந்தார்.

‘முன்னாடியெல்லாம் பாண்டிச்சேரின்னா, ‘கிர்ர்ர்’ருன்னு இருக்கும். இப்போ அந்தப் பேரைக் கேட்டாலே, ‘கொர்ர்’ன்னு இருக்கு. தமிழ்நாடுன்னு சொன்னால்தான் இப்பல்லாம் ‘விர்ர்’ன்னு இருக்கு’ - இந்தக் கருத்தில் நையாண்டி இருக்கலாம். ஆனால், இதற்குப் பின்னே உள்ள வேதனையை குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களால்தான் உணர முடியும்.


முதல்வர் ஜெயலிதா கடந்த தனது ஆட்சியில் டாஸ்மாக்கைக் கொண்டு வந்தபோது, அவரே அது இந்த அளவுக்குப் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது ஆண்டுக்கு கிட்டதட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தருகிறது டாஸ்மாக். இந்த வருமானம், அரசாள்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், டாஸ்மாக் கடைகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைக் கேட்டால், கண்களில் ஓரம் நீர்த்துளிகளே வெளிப்படும். கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக்தான் லட்சக் கணக்கானவர்களின் உடல்நலனைப் பாதித்து, அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களை நடுவீதியில் நிறுத்தியிருக்கிறது. அதுவும் முப்பது வயதுக்குள்ளேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, கணையம் செயலிழப்பு, பக்கவாதம், கிட்னி ஃபெயிலியர் என்று மீள முடியா பெருந்துயரங்களுக்கு ஆளாகி, வைத்தியத்துக்கு செலவு செய்ய வழியற்ற நிலையில் இறந்து போகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியும், சோகமும் கலந்த உண்மை. முப்பது வயதுக்குள் மேற்கண்ட பாதிப்புகள் மிகவும் அரிதாக நடக்கக் கூடியவைதான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இந்தப் பாதிப்புகளின் சதவீதம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கார்டியாலஜிஸ்ட் ஒருவர்.


கண்ணனுக்கு 27 வயது. சேலம்தான் சோந்த ஊர். இரண்டு ஆண்டுகளாக பொருத்தமான பெண்ணைத் தேடியலைந்து, அபிராமியை நிச்சயம் செய்துவைத்தார்கள். திருமணத்திற்கு முதல் நாள் நண்பர்கள் ரொம்ப வற்புறுத்தியதால், ‘பார்ட்டி’ வைத்தார். மதுபான பார்ட்டி களை கட்டியபோது, திடீரென்று கண்ணனுக்குத் தாங்க முடியாத வயிற்று வலி. விடிந்தால் கல்யாணம், என்ன செய்வது? ‘எப்படியோ சமாளி, தாலி கட்டியபிறகு டாக்டரிடம் காட்டிக் கொள்ளலாம்’ என்று நெருங்கியவர்கள் அட்வைஸ் செய்ய, திருமணம் முடிந்த கையோடு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்த டாக்டர்கள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்டான்லியில் தீவிர சிகிச்சை தரப்பட்டது. நான்கைந்து அறுவைச் சிகிச்சைகளும் நடந்தன. இருந்தாலும் எந்தப் பலனும் இல்லை. கண்ணனைக் காப்பாற்ற முடியவில்லை.


இந்தச் சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றைக்கும் கண்ணனுக்கு ட்ரீட்மெண்ட் செய்த டாக்டர் சுரேந்திரன் நினைவுகளில் பெரும் சோகமாகத் தங்கியிருக்கிறது கண்ணனின் நினைவுகள். "அவருக்கு வந்த பிரச்சினை, அக்யூட் பேங்க்ரியாடிடிஸ் (acute pancreatitis). ரெகுலராக அவருக்கு குடிப்பழக்கம் இல்லை. முதன்முறையாக அன்றுதான் குடிக்கிறார். இந்த அக்யூட் பேங்க்ரியாடிடிஸ் முதன்முறையாகக் குடிப்பவர்கள் பலருக்கு வரும் பிரச்சினை. கண்ணனுடன் ஒரு வார்த்தை கூட பேசியிராத, முகத்தைச் சரியாகப் பார்க்கக்கூட அவகாசம் வாய்க்காத அந்தப் பெண், ‘எப்படியாவது காப்பாத்துங்க’ என்று பார்க்கும் டாக்டர்களை எல்லாம் கைகளைக் கூப்பி கெஞ்சியதுதான் இன்னும் என் நினைவுகளில் இருந்து நீங்காமல் தங்கியிருக்கிறது. ஒரே நாளில் எல்லாம் முடிந்து விட்டது" என்கிறார் டாக்டர் சுரேந்திரன் பெருமூச்சுடன்.

ஆண்டுதோறும் மதுகுடிப்பவர்களின் சதவீதம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். கூடவே மதுப்பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்படுபவர்களின் சதவீதமும் ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு டாஸ்மாக் கடைக்குப் போய்ப்பார்த்தால் ஜேஜே என்று திரண்டிருக்கும் கூட்டத்தில் 20, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கூட்டம்தான் 60 சதவீதம் இருக்கும். "இதில் இன்னொரு அதிர்ச்சியான தகவலும் உண்டு. இத்தகைய மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் நன்கு படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களும் உண்டு. பொதுவாக, பரம்பரை நோய் என்று கூறப்படும் நீரிழிவு போன்ற நோய்கள் இன்று லைஃப் ஸ்டைல் நோய்களாக மாறியுள்ள நிலையில், உடல் உழைப்பு இல்லாத டெட்லைன், டார்கெட் போன்ற நெருக்கடிகளில் பணிபுரியும் இவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இந்த நிலையில் இவர்கள் மதுப்பழக்கத்தையும் தொடரும்போது கல்லீரல் பாதிப்பு, கணையம் செயலிழத்தல், கிட்னி சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்ற அதிர்ச்சித்தகவலைத் தருகிறார், டி.டி.கே. மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் அனிதா ராவ்.

"கடந்த சில ஆண்டுகளாகக் குடிப்பழக்கத்தால் இளைஞர்களின் உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான்" என்று கூறும் டாக்டர் சுரேந்திரன், குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல், கணையம் பாதிப்பு என்று அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறுகிறார். மேலும் அதுபற்றிக் கூறும்போது, "1969லிருந்து 77வரை இதே கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பை நாங்கள் முடித்த காலத்தில் acute pancreatitis Severe pancreatitis போன்ற பாதிப்புகள் பற்றி எல்லாம் புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் பார்த்ததில்லை.

ரொம்ப அபூர்வமாக வட இந்தியாவில் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும். அப்படி இருந்தாலும் இவர்களின் இறப்பு சதவீதம் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும். ஆனால், தற்போது ஸ்டான்லி மருத்துவமனையிலேயே சர்வ சாதாரணமாக தினமும் நோயாளிகள் வருவதைப் பார்க்கலாம். தற்போது இறப்பு விகிதம் 70 சதவீதம். அதிலும் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் மிக அதிகம். ஐ.டி., மென்பொருள் போன்றவற்றில் வேலை பார்ப்பவர்களுக்கு கல்லீரல், கணையப் பாதிப்பு இன்று சர்வ சாதாரணம். மது குடிப்பது மேற்கத்திய நாடுகளில் கலாசாரத்தோடு இணைந்தது என்பதால் அங்கு பாதிப்புகளும் அதிகமாக இருந்தன. இன்று வரையும் நவீன மருத்துவத்தில் ஜெர்மனி நாட்டில் அளிக்கப்படும் சிகிச்சை முறையைத்தான் இங்கும் அளிக்கிறோம். இங்கு ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல வேண்டும்... கடந்த மாதம் கொச்சியில் நடந்த சர்வதேச மருத்துவ மாநாட்டில் ஜெர்மனி டாக்டர்கள் கலந்துகொண்டார்கள். மேற்கத்திய நாடுகளில் தற்போது வியக்கத்தகும் விதமாக மக்களிடம் மதுப்பழக்கம் குறைந்திருப்பதாகக் கூறினார்கள். ஆனால், நம் நிலையோ அதற்கு நேரேதிராக உள்ளது" என்று வேதனையுடன் கூறுகிறார் டாக்டர் சுரேந்திரன்.


"எப்போதாவது குடிக்கிறேன். வாரத்தில் ஒருநாள்தான் குடிப்பேன். பார்ட்டியில மட்டும்தான் குடிப்பேன். அளவான மதுப்பழக்கம் உடலுக்கு நல்லது’ போன்ற எல்லா காரணங்களும் குற்ற உணர்ச்சியில் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானங்கள்தானே தவிர, அதில் உண்மையில்லை. ஒரு சொட்டு விஷமாய் இருந்தால் என்ன? ஒரு குடமாய் இருந்தால் என்ன? விஷம் விஷம்தான். பீர் மட்டும்தான் குடிப்பேன் என்றும் சிலர் சொல்கிறார்கள். மதுவின் பெயர்கள்தான் வேறு வேறானவையே தவிர, அதனால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் ஒரே ரகமானவையே. சமீபத்தில் தில்லியில் பல வெளிநாட்டு டாக்டர்களும் கலந்துகொண்ட கல்லீரல் நோய்கள் தொடர்பான தேசியக் கருத்தரங்கில் குடிப்பழக்கம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் உடல் உறுப்புகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்று மருத்துவ அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர்.அடையாறில் உள்ள டி.டி.கே. மருத்துவ மையத்தில் பல ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களுக்கு கவுன்சலிங் நடக்கிறது. "10 ஆண்டுகளுக்குமுன் இந்த கவுன்சலிங்கில் நடுத்தர வயதுப் பெண்கள், கணவனை இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி மீட்பது என்பதைத் தெரிந்துகொள்ள தவறாமல் கலந்துகொள்வார்கள். தற்போது இந்த கவுன்சலிங்கில் ஏராளமான நாற்பது, ஐம்பது வயது பெற்றோர்கள் கலந்துகொள்கிறார்கள். மிகச் சிறிய வயதிலேயே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகரித்து விட்ட அவலம் இது" என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவமனை ஊழியர் ஒருவர்.

"குடிப்பழக்கம் உள்ளவர்களில் 20 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இது உடல் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, மனம் சார்ந்ததும்கூட. கல்லூரி மாணவன் ஒருவன், தற்போது எங்கள் மையத்தில் தொடர் சிகிச்சையில் இருக்கிறான். 20 வயதான அவன், நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தவன், கொஞ்ச நாட்களிலேயே மதுவுக்கு அடிமையாகி விட்டான். குடும்ப கவுரவம் போய்விடுமே என்று பயந்தவர்கள் முதலில் வீட்டில் வைத்து, ‘இது தப்பு’ என்று சொல்லி திருத்தப் பார்த்திருக்கிறார்கள். யாருமே இல்லாத சமயத்தில் அமைதியாக இருப்பவன், வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது, பயங்கரக் கலாட்டா செய்வது, மிரட்டுவது, குடிப்பதற்கு பணம் தராவிட்டால் விருந்தினர்களுக்கு தருவதற்கு எடுத்துச் செல்லும் தேநீரைப் பிடுங்கி, எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது கொட்டுவது என்று அவன் செயல்பாடுகள் மிக மோசமாக இருக்க... இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை தருகிறோம்" என்கிறார் டாக்டர் அனிதா.

"குடிக்கு அடிமையாகி, சிகிச்சைக்குச் சேர்க்கப்படுபவர்களின் ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலைக் குறைக்கவே 3லிருந்து ஐந்து நாட்கள் ஆகும். அதன் பிறகே சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள். குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் வருவதும் சகஜம். இவர்களின் ரத்தத்தில் ஆல்கஹாலைக் குறைப்பதற்கு 20 நாட்கள் ஆகும். முற்றிலும் மதுவை நிறுத்தி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே ஓரளவு உடல் நிலை தேறும். ஆனால், அதே நேரம் ஒருமுறை கணையத்தில் பிரச்சினை வந்தால், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். அதன் பிறகு மதுவையே தொடாவிட்டாலும் சிகிச்சையும் தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பும் தேவை. கணையம் பாதிப்பினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க அரசுக்கு ஆகும் செலவு 50 முதல் 60 லட்சங்கள்" என்று கூறுகிறார், அரசு மருத்துவர் ஒருவர்.

இதயநோய் மருத்துவரான டாக்டர் சொக்கலிங்கம், "கடந்த 20 ஆண்டுகளில் ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் குடிப்பழக்கம் அதிர்ச்சியளிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. ஆல்கஹாலில் உள்ள எத்தனால் உடலில் போய் வளர்சிதை மாற்றம் ஆகும்பொழுது (metabolism) அசிட்டேன், அசிட்டால்டிஹைடு இரண்டும் மூளை, கல்லீரல், இதயத் தசைகள் போன்றவற்றைப் படுமோசமாகப் பாதிக்கிறது. இதயத் தசைகள் நாளடைவில் விரிவடைந்து இதயம் பெரிதாகும். 42 ஆண்டுகள் என் மருத்துவ அனுபவத்தில் சமீப காலங்களில் இளைஞர்கள் குடியால் மோசமாகப் பாதிக்கப்படுவதை அதிகம் பார்க்கிறேன். மது அருந்துபவர்களுக்கு hdl (tri glycerise) எனப்படும் நல்ல கொழுப்பிற்குப் பதிலாக, hdl 3 எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். இது, ரத்தக் குழாய்களை அடைத்து, இதயத்திற்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும்" என்கிறார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் மது பாதிப்பால் ஏற்படும் உடல் பிரச்சினைகளுக்குச் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், இதனை வேறு விதமாகப் பார்க்கிறார். குடல் இரைப்பைத் துறைத் தலைவர் டாக்டர் சந்திர மோகன். "குடியின் பாதிப்பு தற்போது அதிகமாக இருந்தாலும் ஒரே நாளில் திடீரென்று இந்த எண்ணிக்கை உயர்ந்து விடவில்லை. வயிற்று வலி என்றால், தெரிந்த டாக்டரிடம் காட்டுவார்கள். இப்போது அதற்கான சிறப்பு மருத்துவரிடம் போக வேண்டும் என்று தெரிந்து வருகிறார்கள். அதனால் குறிப்பிட்ட துறையில் நோயாளிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது என்றாலும் எந்த அரசு மருத்துவமனையை எடுத்துக்கொண்டாலும் மதுவினால் பாதிப்பு என்பது அதிகரித்தே உள்ளது என்பதை மறுக்க முடியாது" என்கிறார்.


"தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனியார், கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் இதே அவல நிலைதான். பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டுமல்ல, குடிக்கு அடிமையாகும் பெண்கள் வட சென்னையில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு வருவதும் சகஜமான ஒன்றுதான்" என்று கூறி, வேதனையை அதிகரிக்க வைக்கிறார்கள் அங்கிருக்கும் மருத்துவர்கள்.

மதுப்பழக்கமுள்ளோர் வயது விகிதம்50+ வயதினர் = 18%

15 - 20 வயதினர் = 10%

30 - 50 வயதினர் = 37%

20 - 30 வயதினர் = 35%கணையம்: மதுவின் முதல் டார்கெட் கணையம். இதிலிருந்து சுரக்கும் ஜீரண நீர், உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மதுவில் உள்ள ஆல்கஹால் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது (TONAR போன்ற அழகு சாதனப் பொருட்களில் ஆல்கஹால் பயன்படுத்துவது அதன் பரவும் தன்மைக்காகவே). இது, கணைய நீர் வெளிவரும் பாதையைச் சென்று அடைத்துவிடும். இதனால், சுரக்கும் ஜீரண நீர் கணையத்திலேயே தங்கிவிடும். ஜீரணத்திற்காக சுரக்கிற நீர் வெளியேறாமல் அதே இடத்தில் தங்கும்போது கணையம் வீங்கத் தொடங்கும். இது, கழிவு நீர் தேங்குவது போன்றதுதான். இதனால், கணையத்தில் கிருமிகள் சேர்ந்து அதனை அழுகச் செய்துவிடும். அழுகிய பகுதியை வெட்டி எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. உமிழ் நீர், இரைப்பையில் சுரக்கும் நீர், கணைய நீர் மூன்றும் செரிமானத்திற்கு உதவுகின்றன. இதில் ஒன்று கெட்டு விட்டதால், உணவு செரிமானம் ஆவது பாதிக்கப்படும்.

இரைப்பை: மதுவில் உள்ள ஆல்கஹால், இரைப்பையின் உட்புறம் உள்ள மிக்கஸ் என்ற மெல்லிய சுவரை அரித்து, அல்சர் வரவழைக்கும்.

கல்லீரல்: உடலின் பெரிய உறுப்பான கல்லீரலில் உள்ள செல்கள், மதுவில் இருக்கும் நச்சு பாக்டீரியாக்களால் அழிக்கப்படுகின்றன. 80 சதவீதப் பகுதியை வெட்டி எடுத்துவிட்டாலும் வளரும் இயல்பு கொண்டது கல்லீரல். ஆனாலும் அழிந்து போன செல்கள், கல்லீரல் முழுக்க திட்டுத் திட்டாக தழும்புகளாக மாறிவிடும். இதனால், கல்லீரல் வீக்கம், ஹெபாடிடிஸ், சிரோசிஸ் என்று பல பிரச்சினைகள் வரும்.

சிறு மூளை: நம்முடைய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது சிறு மூளை. ஆல்கஹால் குடித்தவுடன் நேராக சிறு மூளையைத்தான் பாதிக்கும். குடிப்பவர்களின் கட்டுப்பாடு மொத்தமும் போய்விடும். நேராக நடக்க முடியாது. ஒழுங்காகப் பேச முடியாது. ஆல்கஹாலுக்குப் பரவும் தன்மை அதிகம் என்பதால், வேகமாக ரத்தத்தில் கலந்து உடல் முழுக்கப் பரவும். இதனால், எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லா உறுப்புகளும் பாதிக்கும். குறிப்பாக, இனப்பெருக்க்க உறுப்புகள் பாதித்து மலட்டுத் தன்மை அதிகமாகும். கர்ப்பமாக இருக்கும்போது, பெண்கள் மது அருந்தினால் குழந்தைக்கு மனநிலை பாதிக்கும். சீக்கிரத்திலேயே மறதி நோய் (dementia) வரும்.

மது குடித்தவுடன் அதில் உள்ள ஆல்கஹாலில் 20 சதவீதம், இரைப்பையில் உடனடியாகப் பரவி தங்கிவிடும். மீதி 80 சதவீதம், பெருங்குடலில் தங்கிவிடும். மது குடித்த 20 நிமிடங்களில் ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு உயரும். குடித்த மூன்று நாட்களுக்கு உடலில் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் என்று அனைத்துப் பாகங்களிலும் ஆல்கஹால் அப்படியே தங்கியிருக்கும்.

எல்லா மது பானங்களைத் தயாரிக்கும்போதும், பார்லி, காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இவற்றை ஈஸ்ட் சேர்த்து நொதிக்கச் செய்கிறார்கள். அத்துடன் சர்க்கரை சேரும்பொழுது எத்தில் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது. இத்துடன் சோடியம் ஹைட்ராக்சைடு, சோடியம் சல்பர், சோடியம் குளோரைடு, சோடியம் தியோசல்பர், கால்சியம் கார்பனேட் போன்ற எல்லா வகையான உப்புகளும் இதில் சேர்க்கப்படுகின்றன. இந்த உப்புகள் ஆல்கஹாலுடன் சேர்ந்து உட்கொள்ளப்படுவதால், கிட்னி உள்ளிட்ட பகுதிகளில் இவை படிந்து, தமது விஷம வேலைகளைக் காட்ட ஆரம்பிக்கின்றன.

போலி நம்பிக்கைகள்


இளைஞர்களிடையே ஒரு போலி நம்பிக்கை உள்ளது. மது குடிப்பதற்குமுன் சில மாத்திரைகளை போட்டுக் கொண்டால் சிறுநீரகங்கள், கல்லீரல் பாதிக்காது என்று. ஆனால், யாருக்கும் அது என்ன மாத்திரை என்று தெரியாது. நண்பர்கள், குடிப்பழக்கம் இல்லாதவர்களையும் தங்கள் பார்ட்டியில் சேர்த்துக்கொள்ள வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்து ஏமாற்றுவார்கள். ஏமாற வேண்டாம். எந்த முன்னெச்சரிக்கைச் செயலும் மதுவால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்காது.

அதேபோல கள்ளு குடிப்பது உடலுக்கு நல்லது என்பதும் உண்மையில்லை. பனையில் இருந்து பெறப்படும் பொருட்கள் இயற்கையானவை என்பதால் அவற்றால், உடல் நலத்திற்கு நல்லது. ஆனால், கள் அப்படியல்ல. புளிக்க வைப்பதால் இதில் பாக்டீரியாக்கள் அதிகம். இது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். தவிர, கள் என்கிற பெயரில் மாத்திரைகளைப் போட்டும் ஏமாற்றுவார்கள். இது உடலுக்கு மிகவும் கெடுதி.

வசூல்ராஜா


இந்த ஆண்டு எப்படியும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக டாஸ்மாக் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும் என்பது தமிழக அரசின் இலக்கு. தினமும் சுமார் 38 கோடி ரூபாய் வருவாய் தரும் துறையை உள்ளாட்சித்தேர்தலுக்காக ஐந்து நாட்கள் மூடிவிடப் போவதாக அரசு அறிவித்தவுடன் அதற்கு முந்தைய சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் விற்பனை வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகரித்தது. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் என்று எல்லா வகை மதுபானங்களும் கடை திறந்த சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்து விட்டதாக டாஸ்மாக் ஊழியர் ஒருவர் சொன்னார்.

அலைமோதும் கூட்டத்தைப் பார்த்து, எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதட்டத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்கியவர்களும் இருக்கிறார்கள். சாதாரண நாட்களில் ஒரு குவார்ட்டருக்கு 3 ரூபாய் அதிகம் கொடுத்தவர்கள், அன்று 10 ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்கள். தமிழகம் முழுக்க அரசுக்குச் சொந்தமான 6,500 மது விற்பனைக் கடைகளில் வேலை செய்யும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கும் அன்று நல்ல வருவாயாம். இப்படி கூடுதலாக வசூலான பணம் மட்டும் ஒரே நாளில் கிட்டதட்ட 3 கோடி ரூபாய்.