Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, ஆகஸ்ட் 28

star school thirubuvanam ஸ்டார் ஸ்கூலில் இப்தார் நிகழ்ச்சி

STAR MATRICULATION SCHOOL
திருபுவனம்  பகுதியில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆங்கில பள்ளியான ஸ்டார் ஸ்கூலில்  இன்று நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி  சிறப்பாக நடைபெற்றது

பள்ளியின் தாளாளர் மார்டின் அவர்கள் , பள்ளி தலைமை ஆசிரியை ,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சி மாலை  5 .30 மணிக்கு தொடங்கியது .
 மாணவ மாணவியர் இஸ்லாமிய போதனைகளை வழங்க
  இரண்டு இமாம்கள்
அதற்கு தலைமை தாங்கினார்கள்.
பிறகு அனைவருக்கும் சிறப்பான முறையில் நோன்பு திறக்க உணவுவகைகள் ஏற்பாடு செய்து அதை மாணவர்கள் பரிமாறியது சிறப்பாக இருந்தது

பின்பு மக்ரிப் தொழுகை நடைபெற்றது
வந்திருந்த  அனைவர்களையும் பள்ளியின் நிர்வாகிகள் வரவேற்று சிறப்பான உபசரிப்பை செய்தது அழகாக இருந்தது

அனைவரும் பள்ளியின் நலனுக்காக பிரார்த்தனை செய்தது  சிறப்பாக இருந்தது

பத்ரு போர்

பத்ரு களம் கண்ட வீரத் தியாகிகள் (ஷுஹதாக்கள்)

01. உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி)

02. ஸஃப்வான் இப்னு வஹப்(ரலி)

03. துஷ்ஷம்மாஃ இப்னு அப்து அம்ர்(ரலி)

04 . முஸஜ்ஜஃ இப்ன ஸாலிஹ்(ரலி)

05. ஆகில் இப்னுல் பக்ரு(ரலி)

06. உபைதா இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப்(ரலி)

07. உமைர் இப்னுல் ஹம்மாம்(ரலி)

08 .யஸீது இப்னுல் ஹாரித் இப்னு கைஸ்(ரலி)

09 .அவ்ஃப் இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ (ரலி)

10 .மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ(ரலி)

11 .மஸ்அத் இப்னு ஹத்மா(ரலி)

12 .முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர்(ரலி)

13 .ஹாரிதா இப்னு ஸுராக்கா (ரலி)

14 .ராஃபிஃ இப்னுல் முஅல்லா (ரலி)

பத்ரு போர் காட்சிகள்

பத்ரு போர் காட்சிகள்

இறைத்தூதரான முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்காவில் 13 ஆண்டுகளும் அதன் பிறகு மதினாவில் 10 ஆண்டுகளும் வாழ்ந்தார்கள். மதீனாவில் ஒரு ஆட்சியை அமைத்து இறை சட்டங்களை நிலை நாட்டி வாழ துவங்கிய போது கூட எதிரிகளின் தொல்லை கொடுக்கும் மனப்பான்மையிலிருந்து இறைத்தூதரும் அவர்களின் சக தோழர்களும் தப்பவில்லை. இதன் காரணமாக எதிரிகளோடு பல தற்காப்பு போர்களை மேற்கொள்ள வேண்டி வந்தது. இதில் முதலாவதாக நடைப்பெற்ற போர் இஸ்லாமிய வரலாற்றில் மிக பிரசித்திப்பெற்ற 'பத்ரு போர்' ஆகும்.

பத்ரு (முதல்) போரின் காட்சிகளை ஆதாரத்தோடு தெரிந்துக் கொள்வோம்.

1, நபி(ஸல்) நேரடியாக களத்தில் நின்று எதிரிகளை சந்தித்த போர்கள் மொத்தம் 19 ஆகும். (ஜைத் பின் அர்கம்(ரலி) புகாரி 3949) அதில் முதலாவது போர் பத்ருதான்.

2, பத்ரு போர் ஹிஜ்ரி 2, ரமளான் மாதத்தில் பிறை 17ல் நடைப் பெற்றது.

3, குர்ஆனின் 3:123முதல்127வரையுள்ள வசனங்கள், 8:7,9-13வரையுள்ள வசனங்கள் பத்ரு பற்றி பேசுகின்றன. (இப்னு மஸ்வூத்(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 3952,3953,3954)

4, பத்ரு போரில் 60க்கும் கூடுதலான முஹாஜிர்(மக்காவாசி)களும், 240க்கும் கூடுதலான அன்சாரி(மதினாவாசி)களும் கலந்துக் கொண்டனர். (பரா இப்னு ஆஸிப்(ரலி) புகாரி 3956,3957,3958)

5, குர்ஆனின் 22:19,20,21 ஆகிய வசனங்கள் பத்ருபோரின் ஆரம்ப நிலை குறித்து இறக்கப்பட்டது. (அலி(ரலி) அபுதர்(ரலி) புகாரி 3965,3966,3967)

6, பத்ரு களத்தில் கலந்துக் கொள்ள போர்கவசங்களுடன் ஜிப்ரயீல்(அலை) இறங்கி வருவதை நபி(ஸல்) அறிவிக்கிறார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 3995)

7, அபூஜஹல் என்ற பெரிய எதிரியை பத்ரில் கொன்றவர்கள் முஆத், முஅவ்வித் என்ற இரு சிறுவர்கள். (அனஸ்(ரலி) புகாரி 3962,3963,3988,4020)

8, 24 காபிர்களின் சடலங்கள் பத்ரு போர் நடந்த இடத்திலுள்ள கிணற்றில் தூக்கிப் போடப்பட்டன. 'நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை இப்போது உணர்கிறீர்களா..' என்று நபி(ஸல்) கேட்டார்கள். (ஆய்ஷா(ரலி) அபூதல்ஹா(ரலி) இப்னுஉமர்(ரலி) புகாரி 3976,3980,4026)

9, பத்ரில் கொல்லப்பட்ட ஹாரிஸா பின் சுராகா(ரலி)க்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என நபி(ஸல்) நன்மாராயம் கூறுகிறார்கள். (அனஸ்(ரலி) புகாரி 3952)

10, ஒரு திருமணத்தின் போது பத்ரு போரில் கொல்லப்பட்டவர்களை புகழ்ந்து சிறுமிகள் தப்ஸ் அடித்து பாட்டுப்பாடுகிறார்கள். (பின்த் முஅவ்வித் - புகாரி 4001)

11, பத்ரு போரில் கலந்துக் கொண்ட முஹாஜிர்களுக்காக போர் செல்வத்திலிருந்து 100 பங்கு ஒதுக்கப்பட்டது. (ஜூபைர் பின் அவாம்(ரலி) புகாரி 4027நன்றி= நமக்குள் இஸ்லாம் ஜி.என்.

வெள்ளி, ஆகஸ்ட் 27

பத்ரு போர் நினைவு

திருபுவனம் பெரிய பள்ளிவாசலில் தராவிஹ் தொழுகைக்கு பின் பத்ரு போர் நினைவு நாளான இன்று  பத்ரு போர் வரலாறு  சிறப்பு பயான் செய்யபட்டது
இஸ்லாத்தின் ஜீவ மரண போராட்டமான பத்ரு போர்  மிக குறைந்த அளவே  ஆயுத பலம் மற்றும் ஆள் பலம் கொண்ட இப்போரில் இறை நம்பிக்கையும் அளவற்ற இறை பயமும் மட்டுமே  வெற்றிக்கு மூல காரணமாக அமைந்தது
  இந்த பத்ரு போரின்போது ரமலான் நோன்பை  வைத்திருந்தனர் என்பது கூடுதல் பலமாகும்
 முன்னூற்று பதிமூன்று சஹாபாக்களின் அந்த அளவிலா தியாகத்தை நினைவு கூர்ந்து அதில் படிப்பினை பெறவும்  பயான் செய்யபட்டது
அவர்களுக்காக சிறப்பு யாசின் ஓதி துவா வும் செய்ய பட்டது

புதன், ஆகஸ்ட் 25

திருபுவனம் அப்துல் ரெஜாக் மரணம்

திருபுவனம்  புது முஸ்லிம் தெரு நாட்டாண்மையும்
 அப்துல் ரெஜாக்  அவர்கள்
(இரண்டாம் வார்டு முன்னாள் கவுன்சிலர் நூர்ஜஹான் கணவர் ,R K S  வேன்உரிமையாளர்  சிராஜ்  தந்தை  மதிமுக பிரமுகர் )
இன்று இரவு  ஒன்பது மணியளவில்  மாரடைப்பால் காலமானார்

வெள்ளி, ஆகஸ்ட் 20

தீக்குளித்த இளைஞர் மரணம்

சர்வமானிய தெரு நாகூர் பிச்சையின் கடைசி  மகன் பக்கர் கடந்த புதன் கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்
தீவிர சிகிச்சை பலனின்றி இன்று காலை ஏழு மணியளவில் மரணமடைந்தார்

ஞாயிறு, ஆகஸ்ட் 15

மழை

திருபுவனத்தில் இரவு எட்டு மணி முதல் பதினோரு மணி வரை அடை மழை
பெய்தது  வழக்கம்போல் பத்து மணிக்கு மின்சாரம் தடை பட்டு நள்ளிரவு மூன்று மணிவரை இருளில் மூழ்கியது

சனி, ஆகஸ்ட் 14

திருபுவனம் ஜமாஅத் நிகழ்வுகள்

இரண்டு ஜமாத்திலும் ரமலான் துவங்கியது
வெள்ளிக்கிழமை ஜும் ஆ விற்கு பின் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் கூட்டத்தில்
 மதரசா வின் புதிய பொறுப்பாளர்களாக சிராஜுதீன் தலைவர் ,ரஹ்மான் சாதிக் செயலாளர் ,ஜபருல்லா  பொருளாளர் என மதரசாவின் நிர்வாக குழு தீர்மானம் இயற்றியதை ஜமாஅத் அங்கீகரித்தது
புதிய பள்ளிவாசல் மேல் மாடியில் மழை நீர் கசிவு ஏற்படுவதை தடுக்க பராமரிப்பு பணிகள் செய்ய ஆலோசனை செய்யப்பட்டு அதற்கான நிதி வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது 
கூடி இருந்த நன் மக்கள் தங்களால் இயன்ற பண உதவியை தர மனமுவந்து எழுதி சென்றார்கள்
 ஊரின் பணியாளர் இமாம் அலி  அவர்களுக்கு ருபாய் ஐம்பது நோன்பு கால ஊதியமாக ஒவ்வொரு வீட்டினரும் கொடுக்க முடிவு செய்யப்பட்டது
இதுவரை ரூபாய் ஐம்பதாக இருந்த ஊர் வரி இனி நூறு ரூபாய் என்று மாற்றம் செய்யபட்டது
ரமலான் சிறப்பு அன்பளிப்பு வழக்கம் போல் வசூல் செய்து ஊரின் பணியாளர்களான இமாம்,பிலால்,பக்கீர்ஷா ஆகியோருக்கு வழங்கவும் முடிவு செய்ய பட்டதுசெவ்வாய், ஆகஸ்ட் 3

திருபுவனம் பெண்கள் மதரசாவில் பட்டமளிப்பு விழா

திருபுவனம் பெரிய பள்ளிவாசல் அருகில் பெண்களுக்கான அரபி மதரசா  அன்னை ஆயிஷா ரலி தர்பியதுன் நிஸ்வான் மதரசா  கடந்த ஒன்பது ஆண்டுகளாக இயங்கி வருகின்றது
இதில் மூன்று ஆண்டுகாலம் முழு நேர ஆலிமா பட்ட படிப்புகள் உயர்ந்த கல்வி திட்டத்தின் படி சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது
ஐந்தாவது ஆலிமா பட்டமளிப்பு விழாவும் தையற்க்கலை சான்றிதழ் வழங்கும் விழாவும் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழாவும்  முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது
விழாவிற்கு முத்தவல்லி ஹாஜி அப்துல் குத்தூஸ் தலைமை தங்கினார்
பிலால் முஸ்தபா கிரா அத் ஓதி தொடங்கிவைக்க சிராஜுதீன் வரவேற்புரை ஆற்றினார்
ஆண்டறிக்கை செயலாளர் ஜபருல்லாஹ் வாசித்தார்
இரண்டு ஜமாஅத் நாட்டான்மைகள் முன்னிலை வகித்தனர்
இமாம்கள் ஜமால் மைதீன் சிராஜி,அப்துல் ஜமீல் ரியாஜிஆகியோரின் வாழ்த்துரையும்
நீடூர் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா வின் பேராசிரியர் முஹம்மத் இஸ்மாயில் பாஜில் பாகவி அவர்கள் பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார்கள்
ஆறு மாணவிகள் தையற்க்கலை சான்றிதழ்களும்
நான்கு மாணவிகள் ஆலிமா பட்டமும் பெற்றனர்
ஆலிமாக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன
மடரசாவின் பொருளாளர் ரஹ்மான் ஸாதிக் நன்றி நவில இனிய துவா வுடன் நிறைவு பெற்ற  இவ்விழாவில் சுமார் அறுநூறு பேர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்