கோவிலுக்கு கோபுர வாசல்கள்!
மனித முகத்துக்கு?
நல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்
ஆசிரியர்: கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் வெளியீடு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
மலேசியாவில் சக தமிழக கட்டிட தொழிலாளர்களோடு நான் டி ஷர்ட்டை இன் பன்னி இருக்கிறேன் |
கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதில் மூன்று நன்மைகள் உண்டு.
இரண்டு – கடந்த காலத் தவறுகளுக்குத் “தவ்பா” செய்து தூய்மை அடையலாம்.
மூன்று – கடந்த கால செய்திகளை நம் சந்ததிகளுக்காக ஆவணப் படுத்தி வைக்கலாம்.
இது தவிர – கடந்த காலத்தை அசை போடுவதில் வேறு எந்த நன்மையும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.
ஆனால் நம்மில் பலர் - கடந்த காலத்தைத் தாங்கள் “கவலைப் படுவதற்காகவே” நினைவு கூர்கிறார்கள். ”ஆகா, இப்படி செய்து விட்டோமே…. அப்படிச் செய்திருந்தால் இப்படி நடந்திருக்காதே”.
இப்படிப் பட்ட நினைவுகளுக்கு ஒருவர் வாழ்வில் பஞ்சமே இல்லை என்பதால் இவர்கள் கடந்த காலத்திலேயே “வாழ்ந்து திளைப்பவர்கள்” என்று சொல்லலாம்.
வேறு சிலர். இவர்கள் எதிர் கால “மாயையில்” மூழ்கிக் கிடப்பவர்கள். ”நாளை என்ன நடக்குமோ.. ஏது ஆகுமோ…விபத்து நடந்து விடுமோ… மவுத் ஆகி விடுவோமோ….நஷ்டம் வந்து விடுமோ…. தோற்றுப் போய் விடுவோமோ…பெயில் ஆகி விடுவோமோ…. வேலை போய் விடுமோ….”
ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இவர்களில் யாரும் நிகழ் காலத்தில் வாழ்வதே இல்லை!
ஆனால் நமது வாழ்க்கை என்பது என்ன? நமக்குத் திரும்பவும் கிடைக்க வாய்ப்பில்லாத கடந்த காலமா? நமக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிச்சயமற்ற எதிர்காலமா? அல்லது நம் கைகளில் இறைவன் வழங்கி நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிகழ் காலமா?
“காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்” – என்று அல்லாஹு தஆலா குறிப்பிடுவதை சிந்தித்துப் பார்த்தால் மனிதன் தனக்கு நஷ்டம் விளைவித்துக் கொள்வது என்பது அவன் தன் நிகழ் காலத்தைப் பாழ் படுத்திக் கொள்வதால் தான்!
மனிதனை நஷ்டவாளியாக ஆக்குவது யார்?
வேறு யார்? ஷைத்தான் தான்!
அவன் என்ன செய்கிறான்?
நம்மை -நமது நிகழ் காலத்தைப் பற்றி சிந்திக்க விடுவதில்லை. ஒன்று – நம்மைக் கடந்த கால சிந்தனைகளில் தள்ளி விட்டு விடுவான். அல்லது -நம்மை நமது எதிர் காலம் குறித்த சிந்தனைகளில் மூழ்க வைத்திட முயல்வான்.
அதனால் நாம் நமது நிகழ் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதனைப் பற்றிய உணர்வே இல்லாமல் ”கடமையே” என்று காரியம் ஆற்றிக் கொண்டிருப்போம்.அதனால் அதன் பயன்களை நாம் வெகுவாக இழந்து விடுவோம்.
இப்படித் தான் நம்மில் பெரும்பாலோரின் வாழ்க்கை “இயந்திரத் தனமாக” ஓடிக் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து விடு பட இறைவன் நமக்கு அருட்கொடை ஒன்றை வழங்கியிருக்கின்றான். அது என்ன தெரியுமா?
அது தான் தொழுகை!
அனு தினமும் ஐவேளை தொழுகையை அல்லாஹ் நமக்குக் கடமை ஆக்கியுள்ளான்.
“நிகழ் கால விழிப்புணர்வுக்காக” சற்று ஆழமாக சிந்திப்போம் இக்கடமை குறித்து.
இப்படி சிந்தித்துப் பாருங்கள்.
அதான் – தொழுகை அழைப்பொலி – காதில் விழுகிறது. அச்சமயத்தில் நாம் எந்தக் “காலத்தில்” மயங்கிக் கிடந்தாலும் - இந்த அழைப்பொலி நம்மை நிகழ் காலத்துக்குக் கொண்டு வந்து விடுகிறதா இல்லையா? நீங்கள் சும்மா இருந்து விட முடியாது; அழைப்புக்கு பதில் சொல்லியாக வேண்டும். இது முதற் கட்டம்.
அடுத்து நீங்கள் உங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்வதற்காக – உளூ செய்வதற்காக – தயார் ஆகிறீர்கள். நீங்கள் அதனைப் பரிபூரணமான முறையில் நிறைவேற்றிட வேண்டும் – இது நபி வழி. இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால் உங்கள் உளூ ஏற்கப் பட மாட்டாது. எனவே தொழுகையும் வீணாகி விடும். எனவே நீங்கள் உளூவின் சமயத்திலும் நிகழ் காலத்துக்கு வந்தே ஆக் வேண்டும்.
அடுத்து நீங்கள் பள்ளிவாசல் நோக்கி நடக்கிறீர்கள். ஆம். கம்பீரமாக நடந்திட வேண்டும். எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடிக்கும் நமக்கு கூலி எழுதப் படுகிறது அல்லவா? உங்கள் சிந்தனையும் நிகழ் காலத்துக்கு வந்து விடுகிறது.
பள்ளிவாசலை நெருங்குகிறீர்கள். “இகாமத்” கூட்டுத் தொழுகைக்கான அழைப்பு – காதில் விழுகிறது. நமது அவசர புத்தி நம்மை ஓடச் சொல்லித் தூண்டுகிறது. அதாவது சற்றே படபடப்பு. அதாவது Anxiety. அங்கேயே அல்லாஹ் நம்மைத் தடுத்து நம்மை நிகழ் காலத்துக்குக் கொண்டு வந்து விடுகிறான்.
இகாமத் சொல்லப் பட்டால் – நீங்கள் ஓடி வர வேண்டாம்; நடந்தே வாருங்கள்; கிடைப்பதில் சேர்ந்து கொள்ளுங்கள்; கிடைக்காததை முழுமை செய்து கொள்ளுங்கள் என்பது நபி மொழி. நாம் தொழுகைக்காக நடந்து வரும் போதே நாம் தொழுகையில் தான் இருக்கின்றோம் என்பதும் நபி மொழியே. சுப்ஹானல்லாஹ்!
ஆனால் – இகாமத் கேட்டதும் வேகமாக ஓடி வரக்கூடிய பல் பேர்களை நாம் அடிக்கடி பார்த்திட முடியும். இது கூடாது.
அடுத்து தொழுகை துவங்குகிறது; ஷைத்தான் ஓடோடி வந்து விடுவான்; நாம் நிகழ் காலத்தை விடுத்து கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் போய் வந்து கொண்டிருப்போம்.
ஆனால் அல்லாஹ் நம்மிடம் என்ன எதிர் பார்க்கிறான்?
நீங்கள் அல்லாஹ்வைப் பார்ப்பது போல் தொழுங்கள்; அது இயலாவிட்டால் அல்லாஹ் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்றாவது தொழுகையை நிறைவேற்றுங்கள். இதுவே தொழுகைக்கு அழகு! இதுவும் நபி மொழிக் கருத்து என்பதை நாம் அறிவோம்.
தொழுகையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நூற்றுக் கணக்கான நபி மொழிகள் நமக்கு வழி காட்டுகின்றன. ஆனால் நாம் தொழுகையை இயந்திரத் தனமாக அன்றாடம் நாம் செய்கின்ற ஒரு “பழக்கமான செயலாக” (habitual act) செய்து வருகிறோம்.
இப்போது நாம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் – இன்றிலிருந்து முயற்சி செய்யுங்கள்; உடனேயே “முழு வெற்றி” கிடைத்து விடும் என்று எதிர் பார்க்காதீர்கள்; தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள்; உங்களின் முயற்சி அளவுக்கு வெற்றி கிடைக்கும்.
தொழுகையில் உங்களுக்குக் கிடைக்கும் இந்தப் பயிற்சியை நம் வாழ்வின் இதர செயல்களுக்கும் கடைபிடித்துப் பாருங்கள்.
சான்றாக – உணவு உண்ணும் சமயம் – நீங்கள் உணவு உண்ணுவது குறித்தே சிந்தித்திட வேண்டும். பிஸினஸ் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
உணவு உண்ணும் போது - இறைவன் பெயரால் துவக்குகின்றீர்கள். அதனைத் தந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றீர்கள்.அதன் ருசிக்காக உங்கள் மனைவிக்கு நன்றி செலுத்துகின்றீர்கள். அருகில் இருப்பவருடன் பகிர்ந்து உண்ணுகிறீர்கள். நிதானமாக உண்ணுகிறீர்கள். அழகாக உண்ணுகிறீர்கள்;
மனைவியுடன் பேசுகிறீர்களா? அப்போதும் கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு மனைவி பேச்சுக்கு “உம்” “உம்” போட்டுக் கொண்டிருக்க வேண்டாம். முழுமையாக மனைவி சொல்வதை காதில் வாங்குங்கள்; அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.
மனைவியை நெருங்கும் நேரமா? அது குறித்து மட்டும் நினையுங்கள்;
இப்படி வாழ்வின் எல்லா – பெரிய சிறிய – கட்டங்களிலும் – நிகழ் காலத்தில் வாழ்ந்து பாருங்கள். அதுவே வாழ்க்கை!
இப்பயிற்சியை அலட்சியம் செய்வதால் என்ன ஏற்படுகிறது? அதாவது – “கடந்த கால-எதிர்கால” வாழ்க்கையாளர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?
கவலையோடு காணப் படுவார்கள்.
படபடப்போடு எதையும் செய்வார்கள்.
எந்த ஒன்றையும் முழுமையாக முடிக்க மாட்டார்கள்.
அவசரப் படுவார்கள். வேக வேகமாக நடப்பார்கள்.
யாரிடம் பேசும் போதும் கவனமாகக் கேட்க மாட்டார்கள்.
அவசர முடிவுகள் எடுப்பார்கள்; அந்த முடிவுகள் அவருக்கு நன்மை பயக்காது.
நண்பர்களை இழந்து விடுவார்கள்; பணியிடத்தில் திட்டு விழும்;
விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
வேண்டாம் நண்பர்களே! நிகழ் காலத்தில் வாழ முயற்சிப்போம். நிம்மதியாக வாழ்வோம்!!
நீடூர் மன்சூர் அ லி
-நீடூர் எஸ் ஏ மன்சூர் அலி
ஆண்களும் அடுப்பாங்கறையும்.. |
வெளிஉலகம் ஆண்களுடைது. வீடு பெண்களுக்கானது. வீட்டின் நிர்வாகம் - குறிப்பாக சமையலறை நிர்வாகப் பெண்களின் அதிகாரத்திற்குட்பட்டது. அங்கே அவர்களே முடிசூடாராணிகள். அந்த ராணிகளின் தயவால்தான் இங்கே அநேக ராஜாக்களின் கதை ஓடுகிறது. தாய் வழிச் சமூகத்தில் கணவன் மற்றும் குழந்தைகளை பராமரிப்பது வீட்டு நிர்வாகம் என்பதோடு சமயலறைப் பொறுப்பும் பெண்ணின் பொறுப்பாகிப் போனது. ஆயகலை அறுபத்து நான்கிலும் சமையல் கலை மிக அத்யவசியமானது. ஒரு பெண்ணுக்கு கட்டாயம் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமைக்கத் தெரியாத பெண்ணுக்கு எதிர்காலம்; அவ்வளவு பிரகாசமாக இருக்காது என்று சொல்லும் அளவுக்கு சமையல் கலை பெண்களின் வாழ்வோடு இரண்டறக்கலந்தது. அவள் ஊனோடும் உயிரோடும் ஒன்றாகிப் போனது. ஆனால் இன்றைய நவீன உலகில் இது பெண்களுக்கான சுமையாக மட்டும் இல்லாமல் இதில் ஆண்களும் பங்கேற்ற தலைப்படுகிறார்கள். இதில் ஆண்களின் பங்கு என்பது சமையலுக்கான பொருட்கள் (அதாவது இறைச்சி மீன் காய்கறிகள்) வாங்குவதிலிருந்து தொடங்குகிறது. இதிலும் கூட பெண்களின் வழிகாட்டலோடுதான் அவர்கள் தொடங்குகிறார்கள். 1. வெண்டைக்காய் முனையை உடைத்துபார்த்து அது முற்றலா? ஏன சோதிக்க வேண்டும். 2. முருங்கைகாயை முறுக்கிப்பார்த்து அது இளசா என சோதித்துப் பார்க்க வேண்டும். 3. நாட்டுத் தக்காளியா? ஆப்பிள் தக்காளியா? 4. நாட்டுக் கோழியா? கிரிராஜாவா? 5. இறைச்சி வாங்கும் போது கால்கறி சந்துக்கறி! இப்படிப் போகும் அது பெரும்பாலான ஆண்கள் நாளடைவில் இந்த பர்ச்சேஸ் தேர்வில் தேறி பெண்டாட்டியின் நன்மதிப்பை பெற்றுக் கொள்கிறார்கள். என்றாலும் சமயங்களில் இதில் ஏமாந்து விடும் போது ராணிகள் சகிப்பதில்லை. ராஜாக்களை வறுத்தெடுத்து விடுவார்கள். "எந்த இளிச்சவாயனவது வருவான்" என உங்களுக்காக காத்திருந்தான் போலிருக்கிறது. நீங்கள் போய் அகப்பட்டீர்கள். தலையில் கட்டிவிட்டான்" "எத்தனை தடவை படிச்சி... படிச்சி... சொல்றது நாட்டுக் கோழின்று இப்படி கிரிராஜா கோழியை வாங்கி வந்திருக்கீறீர்களே... எனக்கு வேண்டாம். உங்க உம்மா வீட்ல கொண்டு போடுங்கோ..." "உம்மாவும் இதை திங்கமாட்டாப்ப..." "அப்போ தங்கச்சிகிட்ட கொண்டு குடுங்கோ... அவள்தான் ஓசியில் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்வாளே...! |
இப்படியாகத் தொடங்கும் ஆண்களின் பங்கேற்பு நாட்கள் செல்லச் செல்ல ஒரு கட்டத்தில் சமையலில் நேரடியாக பங்கேற்கும் நிலை ஏற்படுவது எப்போது...? ஆண்கள் தொழில் வியாபாரம் செய்யவோ அல்லது அரபு நாடுகளுக்கும் செல்லும் போதோ வேறுவழியின்றி அகப்பை பிடிக்க நேர்கிறது. அந்த காலத்தில் சென்னை பம்பாய் ஆந்திரா கல்கத்தா என பிழைப்பு தேடி போகும் நம்மவர்கள் கூடவே சமையலுக்கும் ஆட்களைத் தேடி பிடித்துக் கூட்டிச் செல்வார்கள். ஆனால் இப்போது சமையல்காரர்கள் எல்லாம் நான்கு இலச்சம் சம்பளம் கேட்பதால்... பலர் தன்கையே தனக்குதவி என்று ஆரம்பித்துவிட்டார்கள். பலர் புறப்படும் போதே திருமதிகளிடம் ரெசிப்பி எழுதி வாங்கிவிட்டுப் போகிறார்கள். ஸபரில் இருக்கும் போது மனைவியின் சமையலுக்கு ஏங்கினாலும் வேறு வழியில்லை. இரண்டொரு மாதங்களில் ஊர் வரும் போது நாக்கை சப்புக்கொட்டி அந்த ஏக்கத்தை தீர்த்துக் கொள்வார்கள். இதில் திரை கடலோடி திரவியம் தேட அரபு நாடுகளுக்கும் செல்வோரின் நிலைதான் பரிதாபமானது. சமையல் குறித்து அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை இருக்கும் இவர்கள் தங்கும் கேம்ப்பில் பல நாட்டவர்கள் இந்தியாவின் பல மாநிலத்தவர்கள் ஒரு சேரத் தங்கியிருந்தாலும் சமையல் என வரும் போது இனம் இனத்தோடு வெள்ளாடு தண்ணியோடு என்பது போல இனவாரியாக மொழிவாரியாக சேர்ந்து கொள்வார்கள். தமிழருக்கும் மலையாளிக்கும் உணவு விஷயத்தில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை என்பதால் இவர்கள் சேர்ந்து சமைப்பதை பல இடங்களில் காணலாம். ஸ்ரீலங்காவின் சிங்களர் தவிர்த்த தமிழ் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தவர்களும் நம்மோடு கூட்டுச் சேர்வதுண்டு. இவர்கள் தமிழர்கள்தான் என்றாலும் இவர்களின் உணவுமுறை நம்மிலிருந்து பெரிதும் வேறுப்பட்டது. அதிகமாகக் காரம் சேர்ப்பார்கள். மாட்டிறைச்சிதான் இவர்களின் பிரதான உணவு. மாதம் 30 நாட்களும் மாட்டிறைச்சிதான் சமைக்க வேண்டும் என்பார்கள். சமையல் செய்ய சுழற்சி முறையில் இவர்கள் முறை வரும்போது நாங்கள் பெப்சிடப்பா வோடுதான் சாப்பிட அமர்வோம். ஒரு கவனம் சோறு ஒரு சிலர் பெப்சி என்றுதான் சாப்பிடமுடியும். இல்லையெனில் காரம் மூறை வரை எகிறிவிடும். இவர்களுக்கு (ஸ்ரீலங்கா) நாங்கள் ரகசியமாக 80x20 என்று பெயர் வைத்திருந்தோம். அதாவது 80மூ காரம் 20மூ ஆயில் என்பது இதன் பொருள். அவர்களது காரம் சில சமயம் அவர்களுக்கே தாங்க முடியாமல் போகும் போது சர்க்கரை பால் மாவு போன்ற பொருட்களை சற்றும் தயக்கமின்றி குழம்பில் சேர்த்துவிடுவார்கள். காரமுமின்றி இனிப்பும் இன்றி ஒரு வித புதிய சுவையில் அந்த பதார்த்தம் இருக்கும். சாப்பாடு மட்டும் முன்னேயும் போகாது பின்னேயும் போகாது. நாம் இறைச்சிக்கு இஞ்சிபூண்டு தயிர்விட்டு தாழிப்பதை பேரதிசயமாக பார்பப்பார்கள். அதன் மணம் நாசியில் ஏறும் போது 'சூப்பர்" என்பார்கள். நான் ரியாதில் பாண்டா சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் போது அங்கே கம்பெனி சாப்பாடுதான். இந்தியர்களும் பங்களா தேஷிகளும் தான் அங்கு அதிகம் பணியில் உள்ளனர். எனவே 2நாள் இந்தியச் சமையல் 2 நாள் பங்களா தேஷ் சமையல் என்றிருக்கும். (இந்திய சமையல் பெரும்பாலும் மலையாளிகள் சமைப்பார்கள்) இதில் என்ன வேடிக்கை என்றால் மலையாளிகள் ரசம் வைக்க மாட்டார்கள். ஆனால் பங்களாதேஷிகள் இந்தியர்களுக்காக ரசம் வைப்பார்கள். சாப்பாடு வாங்க தட்டோடு கவுண்டருக்குப் போகும் போது "பாய்சாப் ரசம் வேற" என்பார்கள். அவர்கள் வைக்கும் ரசமும் ஒரு மாதிரி நன்றாகவே இருக்கும். பங்களாதேஷிகளின் சமையலில் கண்டிப்பாக அவர்கள் நாட்டு மீன் ஒன்றிருக்கும் பெரிய பெரிய துண்டாக கட்டை மாதிரி இருக்கும் கறுப்பாகவும் இருக்கும் வாயில் வைக்க விளங்காது. அதை பார்க்கும் போதே ஒரு மாதிரி குமட்டும். என்ன செய்வது? அவர்களின் "ரச" அன்புக்காக அந்த மீனiயும் வாங்கிக் விடுவோம். அவர்கள் பார்க்காத போது டஸ்ட்பின்னில் போட்டு விடுவோம். இன்னுமொன்றும் இதில் இருக்கிறது. இன்றைக்கு அந்த மர கட்டை மீனை இன்று வேண்டாம் என்றால் நாளை பொரித்த சிக்கன் துண்டுகள் சரியாக தட்டில் விழாது. எங்குமே சமையல்காரனோடு பகை வைத்துக் கொள்ளக்கூடாது. இவைகளும் கூட ஆண் சமையல்தான் வீட்டில் கைப்பக்குவமாக பெண்கள் சமைத்தாலும் கல்யாணவிருந்து பெரிய பெரிய ஹோட்டாக்கள் கட்சி மாநாடுகள் நிலா சோறுகள் போன்றவைகளில் ஆண்களே சமைக்கிறார்கள். இவைகள் ஆண் சமையலையே வேண்டி நிற்கின்றன. அரிசிக்குக் கூட Kitchen King என்றுதான் பெயர் வைக்கிறார்களே தவிர kitchen Queen என்று எந்த பெயரும் இருப்பதாகத் தெரியவில்லை. "அறுசுவை அரசு" என்று பட்டமெல்லாம் கூட ஆண்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. அறுசுவை அரசிகள் குறித்து யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. எவ்வளவு பெரிய 'அரசாக' இருந்தாலும் ஏதாவது ஒரு 'அரசி'யிடம் தான் அடிப்படை பாடம் கற்றிருக்க வேண்டும். சாலப்பரிந்தூட்டுவதும்; தாயல்லவா...! என்ன அறுசுவை விருந்து எனினும் 2 நாட்களுக்கு மேல அவைகளை சாப்பிட முடிவதில்லை..தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு வந்து விடும். விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு என்பது உவமான சொல். ஆனால் மனைவியின் சமையலை தாயின் சமையலையோ நாம் அந்தக் கணக்கில் சேர்க்க முடியாது சேர்க்கவும் கூடாது அரபு நாடுகளில் சமைத்துப் பழகுபவர்களில் சிலர் ஊரில் ஹோட்டல் வைத்து பிழைக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்று விடுகின்றனர். சிலர் வீட்டில் பெண்டாட்டிக்கு நல்ல உதவியாக இருக்கின்றனர். அடுப்பாங்கரை வேலையை ஆண்கள் பார்த்தால் அவனை பொன்னையன் (முன்னாள் மந்திரி அல்ல) என்று கேவலமாக விமர்சிக்கும் வழக்கம் மெல்ல மெல்ல மாறி அடுப்படியில் உதவும் ஆபத்பாந்தவனாக கணவனை மதிக்கும் மனைவிமார்கள் உருவாகி விட்ட காலம் இது. ஒரு உதவி என்று ஒரு சமயம் சமையல் வீட்டினுள் புகுந்து வேலை செய்தால். அதையே சாக்காக வைத்து 'இன்னாங்கோ அந்த வெங்காயத்தை கொஞ்சம் நறுக்கித் தாங்கோ..." "அந்த இஞ்சி பூண்டை கொஞ்சம் மிக்சியில் போட்டு அரைத்துத் தந்தால் என்ன கொறஞ்சா போவீங்கள் ..." என்றறெல்லாம் உதார்விடும் புண்ணியவதிகளும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் உம்மா சோறாகினா குழந்தைகள் சாப்பிடுவதில்லை. வாப்பா சமைத்தால் மட்டுமே வாண்டுகள் சாப்பிடும் இது எப்படி இருக்கிறது? அப்படியானால் Kitchen King என்ற பெயர் பொருத்தம்தான் என்கிறீர்களா...? ஏம்ப்பா... சர்வர் இது தான் ஸ்பெஷல் தோசையா? இதில் அப்படி என்ன ஸ்பெஷல் !" "இது இன்னிக்கு போட்டது சார்!" ஆக்கம்: கே.எஸ்.முஹம்மத் ஷுஐப் |
கோவிலுக்கு கோபுர வாசல்கள்!
மனித முகத்துக்கு?
“வாய், மூக்கு, காது, கண் இவைதாம்!’சிரித்தபடி சொல்கிறார், காது, மூக்கு, தொண்டை நிபுணர் பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன்!
“உடம்பின் உள் கோளாறுகளைச் சரியாக எச்சரிக்கும் இண்டிகேட்டர்கள் இவை’ என்கிறார்.
ஹார்ட் அட்டாக் கேள்விப்பட்டிருக்கிறோம்… இயர் அட்டாக்…?
“நாம் ஓரளவு பாலன்ஸ்ட் ஆக நாடமாடுகிறோம் என்றால் காது என்ற அற்புத உறுப்பில் உள்ள திரவத்தால் தான்.’
ஸடன் சென்ஸரிநியூரல் ஹியரிங் லாஸ் சுருக்கமாக எஸ்.எஸ்.ஹெச்.எல் (Sudden Neural Hearing Loss) என்பதுதான் இவ்வகை பாதிப்புக்கான மருத்துவப் பெயர். திடீரென்று காது கேட்காமல் போய்விடும்!
“இயர் அட்டாக் ஏற்பட பல காரணங்கள் உண்டு… சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், மூச்சுப் பாதையில் இன்ஃபெக்ஷன் இவற்றுள் எது ஏற்பட்டாலும் திடீரென்று காது கேட்காமல் போய்விடும். பெரும்பாலானோருக்கு சரியான சிகிச்சை கொடுத்தால் இரண்டு வாரங்களுள் குணமாகி விடுவார்கள்…’ என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன்.
காதில் வெளிகாது, நடுக்காது, உள் காது என்று மூன்று அமைப்புகள் உள்ளன அல்லவா… அதில் உள் காது பாதிக்கப்பட்டால்தான் இத்தகைய பாதிப்பு திடீரென்று வருமாம்!
“உள்காதே இல்லாமல் பிறந்த ஒரு குழந்தைக்கு அதன் இரண்டாவது வயதில், அறுவை சிகிச்சை செய்து மூளையில் “சிப்’ (கம்ப்யூட்டர் போல) ஒன்று வைத்தோம்… மூளை நரம்புகளுடன் இணைந்து செயல்பட்டு, இன்று நான்கு வயதாகும் அக் குழந்தைக்கு நன்றாக கேட்கிறது… பேசுகிறது… இவ்வகை பிரெயின் ஸ்டெம் ட்ரான்ஸ்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை நடந்தது ஆசியாவிலேயே இதுதான் முதல் முறை…’
“உள் காதில் இருக்கும் காக்லியா (Cochlea) என்ற அமைப்பை இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாத பல குழந்தைகளுக்கு அத்திறனைக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று அவர்கள் வளர்ந்து ஐ.ஐ.டி.யிலும் கல்கலைக் கழகங்களிலும் படிக்கிறார்கள்’ என்று பெருமிதப்படுகிறார் டாக்டர் காமேஸ்வரன்.
நன்றி-மங்கையர் மலர்
இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று ஆறுவித சுவைகளை நமது நாக்கு அறியக்கூடியது என்று சொல்வதுண்டு. மேலைநாட்டவர்களின் மொழிகளில் சுவைகள் ஐந்து மட்டும்தான் உள்ளன. அவர்கள் துவர்ப்புச் சுவையை விட்டு விட்டார்கள். இது இப்படியிருக்க ஜப்பானியர்கள் "யுமாமி" என்ற ஒரு சுவையைக் குறிப்பிடுகிறார்கள். இந்தச் சுவை மாமிசம் சாப்பிடும்போது அனுபவிக்கும் சுவை என்பது அவர்கள் விளக்கம். இதையறிந்ததும் ஆங்கிலத்தில் சேவரி (Savory) என்று புது சுவை உணர்வை அவர்கள் மொழியில் சேர்த்துக் கொண்டார்கள். உண்மையில் நமது நாக்கு 25 க்கும் மேற்பட்ட சுவைகளை உணரக்கூடியது. அத்தனைக்கும் நம் தமிழில் பெயர்கள் இல்லை.
இனிப்புச் சுவையுடைய சக்கரைப் பொருள்கள் உடலும் மூளையும் தொடர்ந்து வேலை செய்வதற்குத் தேவையான எரிசக்தியை வழங்குகின்றன. உப்புச்சுவை இரத்தத்திற்கு வேண்டிய "எலெக்ட்ரோலைட்" எனப்படும் உலோக அயனிகளை வழங்குகிறது. இரத்தத்தில் உப்பு அளவு குறைந்தால் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்துவிடும். சேவரி அல்லது யுமாமி என்று அழைக்கப்படும் மாமிசச் சுவை (தமிழில் இதற்கு இணையான சொல் இல்லை) உடலுக்கு உரம் தரும் புரதத்தை வழங்கும் பொருள்களுக்குச் சொந்தமானது. எனவே இனிப்பு, உவர்ப்பு, சேவரி (சைவ உணவுப் பழக்கமுடையவர்களுக்கு பருப்பிலிருந்து அந்தச் சுவை கிடைக்கிறது) ஆகிய மூன்றையும் நாம் விரும்பிச் செல்கிறோம்.
மனிதன் வேட்டைக்காரனாக வாழ்ந்த காலத்தில் இம்மூன்று சுவைகளையும் நாடி ஒடித் திரிந்ததில் ஒரு காரணமிருக்கிறது. அன்று அவனுக்கு கரும்பாலையோ, உப்பளங்களோ, பிராய்லர் கோழிக்கடைகளோ கிடையாது. உடம்பில் உயிர் தரித்திருக்க வேண்டுமானால் மேற்கூறிய மூன்று சுவைகளும் அவனுக்கு முக்கியம். இன்றும் அதே மூன்று சுவைகள் நம்மை ஆட்டிப் படைப்பதால் அளவின்றி அவற்றைப் புசித்து சக்கரைநோய், மனப்பதற்றம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களால் துன்புறுகிறோம்.
ஐஸ்கிரீம் வேண்டும் ஆனால் அதில் சக்கரையிருக்கக் கூடாது, ஊறுகாயில் உப்பு உறைக்க வேண்டும் ஆனால் அதில் உப்பு இருக்கக்கூடாது, மாமிசச் சுவைவேண்டும் ஆனால் சைவமாக இருக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. இது சாத்தியமா?
நாம் நாக்குக்கு அடிமைதான். அதிலிருந்து நம்மால் விடுபட முடியாது. நாக்கின் பிடியிலிருந்து தப்பிக்க ஒரு வழியிருக்கிறது. துளி சக்கரை போட்டாலும் அது இரண்டு கரண்டி சக்கரையின் இனிப்பைத் தரவேண்டும்; சிட்டிகை உப்பிலிருந்து கால்கரண்டி உப்பின் கரிப்பு கிடைக்க வேண்டும்; மாமிசமே இல்லாமல் மாமிச சுவையை ஏதாவது தரவேண்டும். இப்படி ஒரு தந்திரம் கிடைத்து விட்டால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், எடை கூடுவது போன்ற பிரச்சனையில்லாமல் நாம் இஷ்டம்போல சாப்பிடலாம். எப்படி சக்கரைக்கு அதிகமாக இனிப்பைத் தருவது? உப்புக்கு எப்படி அதிக உவர்ப்பைத்தருவது, மாமிசத்திற்கு எப்படி திகட்டும் அளவுக்கு அதிக சுவையூட்டுவது.. ?
மோனோசோடியம் குளுட்டமேட் என்ற உப்பினை இப்போது பிரியாணி போன்ற புலால் சமையல்களில் சேர்த்துக் கொள்கிறார்கள். அஜினோமோட்டோ என்றால் உங்களுக்கு உடனே தெரியும். அஜினோமோட்டடோ தரும் சுவையைத்தான் சேவரி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். அஜினோமோட்டோ மாமிசச் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. இதுபோல சக்கரையின் இனிப்பை தூக்கலாக்க ஒரு பொருள் இருந்தால் இரண்டு கரண்டி சக்கரை போடுமிடத்தில் அரைக் கரண்டி அல்லது அதற்கும் குறைவை போட்டுச் சமாளிக்கலாம்.
சேக்கரைன், அஸ்பார்ட்டேம் போன்றவை செயற்கையாக இனிப்பைத் தருபவை. அவை பொய்யானவை. அவை தரும் இனிப்பு சக்கரைபோல இருப்பதில்லை, இதனால்தான் சக்கரை நோய்க்காரர்கள் வேண்டா வெறுப்பாக செயற்கை இனிப்பைப் பயன்படுத்துகிறார்கள்.
சுவை மொட்டுகள்
பள்ளிக்கூடப் புத்தகங்களில், நாக்கின் படம்போட்டு, அதில் பல பகுதிகளை கோடிட்டுக்காட்டி இந்த இடத்தில் இனிப்பு, இங்கே கசப்பு, இங்கே காரம்.. என்று குறிப்பிட்டிருப்பார்கள். அடிநாக்கில் கசப்பு உணர்வு இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கும். அப்படி நாக்கில் சுவைகளுக்கான மேப் எதுவும் இல்லை என்று சார்லஸ் ஸூக்கர் (1996 Charles Zuker, Professor of Biology. University of California) என்பவர் கண்டுபிடித்தார். நாக்கில் எல்லா இடத்திலும் எல்லா சுவைகளையும் அறியமுடியும்; இனிப்பு. புளிப்பு, கசப்புக் கென்று தனித்தனி இடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்தார். நம் நாக்கின் மேல்பரப்பு சுற சுறப்பாக இருக்கிறதல்லவா, அவையாவும் மொட்டு வடிவ மேடுகள். அவற்றை சுவை அரும்புகள் அல்லது சுவை மொட்டுகள். ஒவ்வொரு சுவை மொட்டிலும் நூற்றுக்கணக்கான செல்கள் உள்ளன. அச்செல்கள் மூலம் நாம் ஆறு அல்ல 25 வகை சுவைகளை அறிகிறோம்.
ஒவ்வொரு சுவைக்கும் தனியாகச் செல்கள் உண்டு. அதாவது ஒரு செல் ஒரு சுவையை மட்டும் அறியும். அதன் வேலை உணவில் உள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து தகவலை மூளைக்கு அனுப்புவது. ஒரு மொட்டு ஒரு சுவைக்கு என்பதும். குறிப்பிட்ட நாக்குப்பகுதி ஒரு சுவையை மட்டும் அறியும் என்பதுதான் தவறான கருத்து. நாக்கில் எல்லா பகுதியிலும் உள்ள எல்லா மொட்டுகளிலும் 25 வகை சுவைகளை அறிவதற்கான செல்கள் உள்ளன.
சுவை உணரும் செல்களின் மேற்புறத்தில் உள்ள சவ்வில் சுவையை அறிவதற்கான புரதங்கள் நிறைய உள்ளன. பாயாசத்தில் முந்திரிப்பருப்பு மிதப்பதுபோல (கொஞ்சம் அதிகமாகவே) சுவை அறியும் புரதங்கள் செல்லின் வெளிச் சவ்வில் மிதந்தபடியுள்ளன. இப் புரதங்களின் முப்பரிமான வடிவம் ஒரு கிண்ணம்போன்றது. ஒரு சுவைக்கு ஒரு கிண்ணம் என்று 25 சுவைகளுக்கும் தனித்தனி கிண்ணங்கள் உள்ளன. தேனை நக்கும்போது குறிப்பிட்ட கிண்ணத்தின் பள்ளத்தில் சுவைக்குக் காரணமான மூலக்கூறு வந்து உட்காரும். சாடிக்கு ஏற்ற மூடி போல புரதமும் அதன் சுவை மூலக்கூறும் ஒன்றுடன் ஒன்று டக் கென்று பொருந்திக்கொள்கின்றன. பூட்டும் சாவியும், காலும் செருப்பும் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இதனால் இந்தக் கிண்ணங்களை "ஏற்பி" என்கிறார்கள். அறிஞர் ஸூக்கர், நாக்கிலுள்ள சுவை ஏற்பிகளை எல்லாம் பிரித்து ஆராய்ந்து பார்த்தபோது மனிதருக்கு 25 வகைக்கும் மேற்பட்ட ஏற்பிகள் இருப்பதை அவர் அறிந்தார். அதனடிப்படையில் நம்மால் அத்தனைவகை சுவைகளையும் அறிய முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார். அவற்றை நாம் தொகுத்து ஆறு அல்லது ஐந்து சுவை வகைகளாகப் பிரித்துக்கொள்கிறோம். உண்மையில் கன்னல், தேன், திராட்சை, மாம்பழம், பலா, சப்போட்டா ஆகியவை அனைத்தும் இனித்தாலும் அவற்றில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அல்லவா இருக்கின்றன.
இந்தக் கட்டுரையின் முக்கியமான இடத்திற்கு வந்துவிட்டோம். ஸூக்கர் சுவை ஏற்பி மூலக்கூறுகளை கூர்ந்து ஆராய்ந்தபோது ஒவ்வொன்றின் கிண்ணப்பகுதியிலும் இரண்டு அறைகள் இருப்பதைப் பார்த்தார். ஒரு அறை சுவைக்குக் காரணமான சக்கரை, உப்பு, அமிலம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளின் மூலக்கூறுகள் அமர்வதற்காகவும் அருகே உள்ள இன்னொரு சிறிய அறை சுவையில்லாத ஆயினும் சுவை உணர்வை பலமாகத் தூண்டிவிடும் இன்னொரு பொருளுக்காகவும் இருப்பதைக் கண்டுபிடித்தார். அஜினோமோட்டோ என்ற உப்பு தன்னளவில் சுவையற்றதாக இருந்தாலும் மாமிச உணவில் கலந்ததும் மாமிசத்தின் சுவை பன்மடங்கு கூடுவதன் இரகசியம் இதுதான்.
இதன்படி பார்த்தால், இயற்கையில் சுவைகளைக் கூட்டுவதற்கென்றே பல பொருள்கள் இருக்கும்போலத் தோன்றுகிறது. இல்லாவிடில் ஏன் சுவை உணரும் ஏற்பிகளில் இரட்டை அறை அமைப்பு இருக்கவேண்டும்?
மேலும் ஆராய்ச்சிகள் மேற் கொண்டால் சுவை ஏற்பிகளின் இரண்டாம் அறையில் அமரக்கூடிய சுவைத்தூண்டிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம். சக்கரை முதலான பொருள்களின் சுவைகளை பலமடங்காக அதிகரிக்கச் செய்யலாம். மேலும் முயன்றால் கசப்பின் வீச்சையும் தணிக்கலாம். அதன்பிறகு எல்லோர் வீட்டிலும் மாதம் 5 கிலோ சக்கரைக்கு பதிலாக கால் கிலோதான் வாங்குவார்கள். துளி உப்பு போதும் என்று திருப்தியடைவார்கள். கசப்பையும் வெறுக்காமல் உண்பார்கள். மொத்தத்தில் மனிதன் உணவினால் கெட்டுப்போகாமல் வாழ்நாள் (சிறிதனாலும்) நோயின்றி வாழ்வான்.
நன்றி: சைன்டிஃபிக் அமெரிக்கன்.
முனைவர். க. மணி
(kmani52@gmail.com)
பயிரியல்துறை.
பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி.
கோயம்புத்தூர்