Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், நவம்பர் 29

இழுக்க இழுக்க இன்பமா?


அடுத்தவர் 'இழுத்தாலே' ஆறுலட்சம் என்றால், 'இழுப்பவரின்' நிலை..?
சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடானது. இதனால் இதயநோய்கள், புற்று நோய் போன்றவை ஏற்படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடிக்காதவர்களும், பலவித நோய்களால் பாதிக் கப்பட்டு உயிர் இழந்து வருகின்றனர்.
சிகரெட் பிடிக்காவிட்டாலும் கூட மற்றவர் விடும் புகையை சுவாசிப்பதால் இதயநோய் மற்றும் சுவாச நோயினால் பாதிக்கப்படு கின்றனர். அவ்வாறு பாதிக் கப்படுபவர்கள் குறித்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் 192 நாடுகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
\
சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர்.

மேலும், இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரை யீரல் புற்று நோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.

இவ்வாறு இறப்பவர்களில் இது உலக அளவில் 1 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. சுவீடன் தேசிய சுகாதார நலக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தைகள் இருக்கும் போதே பெரும்பாலான பெற்றோர் சிகரெட் பிடிக்கிறார்கள். அந்த புகை குழந்தையை பெருமளவில் பாதிக்கிறது. அது அவர்களை சாவை நோக்கி அழைத்து செல்கிறது.

காதுகளில் நோய் பரவுதல், ஆஸ்துமா, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களை அதிரடியாக பற்றிக் கொள்கின்றன. எனவே, குழந்தைகளை வைத்துக்கொண்டு பெற்றோர் சிகரெட் பிடிக்கக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


நன்றி; மாலைமலர்

ஞாயிறு, நவம்பர் 28

மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!

மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!

மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ஆம் தேதி
தேச கல்விதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் கல்வித் துறையைவடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச்சென்றார்.

ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும்என்று ஆசாத் வலியுறுத்தினார்.
அனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல்அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில்ஆசாத் உறுதி காட்டினார். 10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியாமுழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார்.


இலவச கல்வி உரிமை மசோதா மத்தியஅமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத்இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச,கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.நமது நாட்டின் செல்வம்வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர்.

1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயேகுரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்றஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார்பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரதுகுடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத்துவக்கி நடத்தினார்.

1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாகஎதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன்இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாகஇருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியாசுதந்திரத்தை வெல்கிறது (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற பிரசித்தி பெற்றநூலை எழுதினார்.சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பலஆண்டுகளைக் கழித்தார்.

இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராகவிளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார்.இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள்கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார். முஸ்லீம் லீக் கட்சி காந்தியின்உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன்பணியாற்றினார்.

தமது 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல்வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைசெய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல்நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார்.காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான்பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில்இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சாரஉறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத்உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பானஅம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும்முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராகஇருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில்சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்றுவலியுறுத்தினார்.

பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்றுகூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாகஇருந்தார்.

உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும்தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்துபயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்கவேண்டும் என்றார்.

தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவானஅமைப்பாக மாற்றினார். 1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல்திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.

மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத்மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மைகுறித்து அவர் வேதனைப்படுவார். 1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில்ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள்தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.

இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையானபயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம்கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார்

ஆசாத்.அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களைஎழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப்பிரசுரித்தது.

மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரைஇந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார். தேசிய கல்வி தினமாககொண்டாடப்படும் அவரின் பிறந்த தினத்தன்று ஆசாத் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூர்வோம்.


காந்தி மற்றும் நேரு ஆகியோருடன் மௌலானா ஆசாத்
கல்கத்தாவில் உள்ள ஆசாத் அருங்காட்சியகம்


எகிப்தில் உள்ள கலாச்சார மையம்


8000 புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் கலாச்சார மையம்

- ராஜகிரி கஸ்ஸாலி
http://www.moulanaazad.blogspot.com/

Mail from; அப்துல்ரஹ்மான்" s.abdulrahman786@yahoo.com

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி!

மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

“இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.” என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.

இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.

- சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.

- இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி

- இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

- மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

- செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

- மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

- தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

- மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும்.

எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நன்றி: முதுகுளத்தூர்.காம்

வெள்ளி, நவம்பர் 26

செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!யே!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911)

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 56)

''உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.'' (அறிவிப்பாளர்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு. நூல்: அஹ்மத் 19160)

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2915)


''பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2913)

''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5204)

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162)

''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மதி 1082)

''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 1442)

''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.

ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்.

பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.

பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 5200)

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள்.

வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள்.

அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள்.'' (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 2481)

நன்றி; www.nidur.info

ஹெச்.ஐ.வியைத் தடுக்கும் ஆண் ஜனன உறுப்பின் முன் தோல் அகற்றும் முறை

மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்!

2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் நேஷனல் ஹெல்த் இன்ஸ்டிடியூட்ஸ் ஆஃப் ஹெல்த் ஆண்களின் ஜனன உறுப்பின் முன் தோலை அகற்றுவதினால் அவர்களுக்கு ஹெச்.ஐ.வி பரவும் அபாயம் வெகுவாகக் குறைந்துள்ளது என்பதை இரண்டு சோதனைகள் மூலம் கண்டறிந்தது. இந்த இரண்டு சோதனைகளின் முடிவும் உலகின் பிரபல மருத்துவ இதழான லான்செட்டில் பிரசுரிக்கப்பட்டுவிட்டது.

கென்யாவில் கிசுமுவிலும், உகாண்டாவில் ரேகாயிலும் ஹெச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டிருந்த 7780 பேரில் இருவரைப் பொறுக்கி எடுத்து சோதனை நடத்தப்பட்டது. இப்படி மருத்துவ முறை மூலமாக ஜனன உறுப்பு முன் தோல் அகற்றப்பட்ட ஆண்களுக்கு பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதில் 51 சதவிகிதம் ஹெச்.ஐ.வி பாதிப்பு குறைந்து ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.

லான்செட் பத்திரிகையாசிரியர்கள் இந்தக் கண்டுபிடிப்பை "ஹெச்.ஐ.வி தடுப்பில் ஒரு புது யுக ஆரம்பம்" என்று வர்ணித்துள்ளனர். இப்படி ஆண்கள் செய்து கொள்வதால் பாலியல் நோய்கள் பெண்களுக்கும் வராமல் இருக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Thanks to - ச.நாகராஜன் http://www.nilacharal.com

இது 1400வருடங்களாக இஸ்லாமியர்கள் பின்பற்றி வரும் நடைமுறை என்பது பலரும் அறிந்த செய்தி.

எரிகிறது காஷ்மீர் மாநிலம்! எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்!!

இந்தியாவில், காஷ்மீர் சிக்கல் 63 ஆண்டுகளாக இழுபறியாக இருக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் நீண்டகாலமாக ஆட்சி செய்தது தேசிய மாநாட்டுக் கட்சி அடுத்து ஆண்டது காங்கிரசு - மக்கள் சனநாயக கட்சி கூட்டணி. தில்லியில் காங்கிரசுக் கூட்டணி ஆண்ட போதும், பாரதிய சனதாக் கூட்டணி ஆண்ட போதும் இவர்களே மாறி மாறி காஷ்மீரில் ஆட்சி செலுத்தினார்கள்.

காஷ்மீர் சிக்கலின் உண்மையான வடிவம் என்ன? சரியான தீர்வு என்ன? என்பது பற்றி இந்திய அரசு, எந்தக் கூட்டணி ஆட்சியின்போதும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதாவது ‘ஜம்மு - காஷ்மீர்’ மாநிலத்தை மட்டும் இந்தியாவுடன் இணைத்துக் கொண்டார்களா அல்லது ஆசாத் காஷ்மீர் என்பதையும் சேர்த்து இணைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதை வெளிப்படையாக இந்திய ஆளும் கூட்டணியினர் அறிவிக்கவில்லை. அப்படி அறிவிக்க பாகிஸ்தான் இடந்தரவில்லை.

அதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் முதன் முதலாக 1989இல் “ஆஸாதி” (விடுதலை) கோரிக்கை எழுந்தது. ஜம்மு -காஷ்மீர் தனிச் சுதந்தர நாடாக வேண்டும் என்று கோருவோர், பாகிஸ்தானோடு சேரவேண்டும் என்போர், இந்தியாவுடன் இணைந்தே இருக்க வேண்டும் என்போர் என்கிற பல கோரிக்கைகளைக் கொண்டவர்களாகவே ஜம்மு - காஷ்மீரில் இயங்கும் போராட்டக் குழுவினர் உள்ளனர். இவர்களிடையே ஒத்தக்கருத்து இல்லை. இந்த இரண்டு நிலைமைகளும் 63 ஆண்டுகளாக நீடிக்கின்றன.

இது இப்படியே நீடிப்பதற்கு முகாந்திரமாக, “எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் ஊடுருவல்” என்பது தொடர்ந்து ஒரு சிக்கலாக இருக்கிறது. “எல்லை” என்பது ஜம்மு - காஷ்மீருக்கும் ஆசாத் காஷ்மீருக்கும், இடையே உள்ள எல்லையாகவே கருதப்படுகிறது. கட்டுப்பாட்டு எல்லைக்கோடு (டுiநே டிக ஊடிவேசடிட) என்று இதற்குப் பெயர். இந்த எல்லைக் கோடு துல்லியமாக வரையறுக்கப்பட வில்லை. எல்லைக்கோடு நெடுகிலும் தடுப்புச் சுவரோ, முள்கம்பி வேலியோ போடப்பட வில்லை. 19.8.2010 அன்றுகூட இந்த எல்லையில் இருநாட்டுக்காரரும் சுட்டுக்கொண்டனர்.

இந்த எல்லைக் கோடு இழுபறியாக இருக்கும்படியாகவே பிரிட்டிஷார் விட்டுச் சென்றனர் என்று ஒரு பிரிட்டிஷ் அதிகாரி பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வெளிப்படையாக அறிவித்தார். எல்லைதாண்டும் பயங்கரவாதிகள் ஆசாத் காஷ்மிரிலும், பாகிஸ்தானிலும் பயிற்சி பெறுகிறார்கள். அப்படிப் பயிற்சி பெறுகிறவர்களில் ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களும், இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களும் இருக்கிறார்கள். இந்த ஒன்றைக் காரணமாக வைத்தே, “எல்லைதாண்டிய பயங்கார வாதத்தை பாக்கிஸ்தான் நிறுத்தாத வரையில் இந்திய அரசு பாக்கிஸ்தானோடு சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தாது” என்று 30 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப இந்திய அரசு கூறி வருகிறது.

காஷ்மீர் பிரச்சினை பற்றித் தங்களுடன் பேசாமல் - முத்தரப்புப் பேச்சாக இல்லாமல் இந்தியா எந்த முடிவையும் செய்யக் கூடாது; செய்ய முடியாது என்று. பாக்கிஸ்தான் தொடர்ந்து கூறுகிறது. 14.8.2010 கூட பாக்கிஸ்தான் பிரதமர் இப்படிக் கூறியுள்ளார். இதை மூடி மறைத்துப் பயன் இல்லை. அதே போல் ‘ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம்’ என்று ஒன்று 1957இல், ஜம்மு - காஷ்மீர் மக்களால் நிறைவேற்றப்பட்டு, இந்திய அரசால் ஏற்கப்பட்டிருக்கிறது என்கிற உண்மையையும் எல்லோரும் மறைக்கிறார்கள். அதன் படி

1. “ஜம்மு - காஷ்மீர் குடிமக்கள் என்கிற தனித்தகுதி அம் மாநில மக்களுக்கு உண்டு.”

2. அதற்கென்று தனித்தேசியக் கொடி உண்டு.

3. அந்நாட்டின் ஆட்சித் தலைவர் “குடி அரசுத் தலைவர்” ஆவார்

4. அந்த அரசின் தலைவர் “பிரதமர்” ஆவார்.

5. ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டது. “ஜம்மு காஷ்மீர் அரசமைப்புச் சட்ட” முகவுரையில் என்ன வாசகம் உள்ளது?

“ஜம்மு-காஷ்மீர் மாநிலக் குடிமக்களாகிய நாங்கள் ... என்றே உள்ளது. அதாவது, முதலில் அவர்கள், “ஜம்மு-காஷ்மீர் குடிமக்கள்”. பிறகுதான், “இந்தியாவின் குடிமக்கள்” இது தன்னுரிமையின் ஒரு கூறு. இந்த ஏற்பாடு ஜம்மு - காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமை வழங்குவதே ஆகும். ஆனால், இவ்வளவு தனி உரிமைகளையும் 1963க்குள் பறித்துக் கொண்டது நேருவின் தலைமையில் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சிதான்.

இவ்வளவு உரிமைப் பறிப்புகளும் நடைபெற்ற நெடிய காலத்தில் - காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த அரி சிங்கின் மகன் கரன் சிங் 20 ஆண்டுகள் ‘ஆளுநர்’ என்ற பதவியிலிருந்தார். தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லாவும், 1975 பிறகு பரூக் அப்துல்லாவும் முதலமைச்சர்களாகப் பதவி வகித்தார்கள். இந்த 60 ஆண்டுகள் இடைவெளியில் இந்தியப் படையும், எல்லைக் காவல் படையும், உள்ளூர் காவலர் படையும் ஜம்மு - காஷ்மீர் மக்களை அடக்கி ஆளுவதிலேயே அக்கறை காட்டினர். இந்திய அரசு பாதுகாப்புக்காக ஒதுக்கும் நிதியில் பெரும் பகுதியை ஜம்மு - காஷ்மீர் மக்களை அடக்கி வைக்கவும், பாக்கிஸ்தானோடு நடைபெற்ற போர்களில் செலவு செய்யவுமே பயன்படுத்தியது. இது தவிர்க்க முடியாத செலவினமாக ஆகிவிட்டது. இந்திய மக்களுக்கு இது ஒரு சுமை.

இதற்கிடையில் பாரதிய சனதா ஆட்சிக் காலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி உருவாக்கி அளித்த தன்னாட்சி பற்றிய ஆவணத்தை இந்திய ஆட்சி ஏற்க மறுத்துவிட்டது. அதன் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் முறையே அமைச்சராகவும், முதலமைச்சராகவும் மாறி மாறி இருப்பதிலேயே தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர்களான பரூக் அப்துல்லாவும், மகன் உமர் அப்துல்லாவும் குறியாக உள்ளனர். இந்தியாவுடன் இணைந்து இருப்பது போதும் என்று மக்கள் சன நாயக கட்சித் தலைவர் மெகபூப் முப்தியும் அவருடைய மகளும் நினைக்கிறார்கள். இதன் பொருள் என்ன? ஜம்மு - காஷ்மீரில் உள்ள தேர்தல் கட்சிகளின் தலைவர்கள் நல்ல ஏமாற்றுக்காரர்கள் என்பது தான்.

இவ்வளவு நெடிய காலத்தில் ஜம்மு - காஷ்மீர் இளைஞர்கள் அங்கேயே உயர்கல்வி பெறவோ, அங்கேயோ, இந்திய அரசிலோ அரசுப் பதவிகள் பெறவோ, வழிவகைகள் செய்யப்படவில்லை. இஸ்லாமியர்களைப் பெரிய எண்ணிக்கையில் கொண்ட ஜம்மு - காஷ்மீர் முறையான வளர்ச்சி பெறாத மாநிலமாகவே வைக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் படையினரும் காவலரும் போராட்டக்காரர்களை அடக்குவது என்கிற பேரால் இளைஞர்களையும் பொது மக்களையும் சுடுவதும் கொல்லுவதும் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகின்றன. இன்று அனைத்துத் தரப்பு மக்களும் ஏமாற்றப்பட்டு - நசுக்கப்பட்டு மேலும் மேலும் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்துத் தெருவுக்கு வந்து, உயிரைப் பணையம் வைத்துப் போராடுகிறார்கள்.

டாக்டர் மன்மோகன் சிங் முதல் தடவை 2004இல் பிரதமராக வந்த பிறகு 2006, 2007 இல் ஜம்மு - காஷ்மீர் பற்றி மூன்று வட்ட மேசை மாநாடுகளை நடத்தினார். சிக்கலில் அக்கரையுள்ள பல தரப்பினரும் இவற்றில் பங்கேற்றனர். இவற்றின் விளைவாக அய்ந்து ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று, மய்ய - மாநில அரசுகளுக்கிடையே ஆன உறவு பற்றிய ஆய்வைச் செய்வது. அந்த ஆய்வுக் குழு அளித்த அறிக்கையை இன்னமும் இந்திய அரசு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வில்லை. அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கும், இந்திய மக்கள் அவைக்கும் அரசு தெரிவிக்கவில்லை. ஆனால் படையை எதிர்த்துப் போராடுவோரை நோக்கிச் சுடுவது, கொல்லுவது என்பது மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன் உடனடி விளைவாக, 2008 கோடை காலத்தில் சிறீநகர் மக்கள் தெருவுக்கு வந்து படை வீரர்களையும் காவலர்களையும் கல்லால் அடித்து விரட்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 2010 ஏப்பிரலில் மூன்று இளைஞர்கள் மச்சில் என்ற இடத்தில், “பயங்கர வாதிகள் மீது தாக்குதல்” என்கிற போர்வையில் போலியான தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

11-6-2010 இல் பள்ளி மாணவர் டுபைல் மட்டூ என்பவர் கண்ணீர்ப் புகைக் குண்டுக்கு இரையானார். இவற்றை எதிர்க்கும் தன்மையில், இன்று எல்லாப் பகுதிகளிலும் இளைஞர்களும் குமரிகளும் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்; கண்டன ஊர்வலம் செல்கிறார்கள்; படையினர் மற்றும் காவல் துறையினர் பேரில் கல்லை எறிகிறார்கள்.

இவற்றைக் கட்டுப்படுத்த 7-7-10க்குப் பிறகு காஷ்மீரின் பலபகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமலாக்கப்பட்டது. ஆனால் எதற்குமே தீர்வு காணப்பட வில்லை. 27.7.10இல் காஷ்மீர் அமைச்சரவை கூடியது. 11-6-10க்குப் பிறகு காவல்படையால் கொல்லப்பட்ட 17 பேர்கள் தொடர்பான வழக்கை ஆய்வு செய்ய ஒரு குழு அமைப்பது என அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

27-7-10 இல் ஊரடங்குச் சட்டத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் மெக பூப் முப்தி காஷ்மீர் தலைமைச் செயலக வாயிலுக்குப் பூட்டுப் போட்டு விட்டு தன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மறியல் செய்தார். அத்துடன் சரி. ஆயினும் 30-7-10 அன்று எல்லா ஊர்களிலும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. வடக்குப் பகுதியில் சிறீநகர், சான்போர், பட்டான், சோப் போர், கரேரி முதலான இடங்களில் பெருங் கூட்டமாகக் கூடி ஊரடங்குச் சட்டத்தை மக்கள் மீறினர். படையினர் சுட்டதில் 4 பேர் செத்தனர்; 80 பேர் காயம் அடைந்தனர்.

தெற்குப் பகுதியில் ட்ரால், பிஜ் பெஹரா, சோபியான முதலான இடங்களில் மக்கள் பெருங் கூட்டமாகக் கூடி காவல் நிலையங்களையும், காவல் நிலைய வாகனங்களையும் தாக்கினார்.

31.7.10 அன்று சோப்போர் இரயில்வே நிலையக் கட்டடத்தை மக்கள் எரித்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டது. அதையும் மீறி மக்கள் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். படை மீது கல்வீசினர். ஈத்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

கமார் வாரி, சேக்புரா, ராம்பா, பாலம், பார்த்தனா, நாடிகால், திரெகம் முதலான பல ஊர்களில் துப்பாக்கிச் சூடு நடந்தது. காஷ்மீர் பற்றி எரிகிறது.

சோறு, ரொட்டி, வேலை இவற்றுக்கு உத்தரவாதம் தர வேண்டிய அரசு, ஜம்மு - காஷ்மீர் மக்களைப் “பிரிவினைவாதிகள்” என்று பெயரிட்டுக் கூறிவிட்டுக் கொல்லுவதற்கு அளவு கடந்த பணத்தைச் செலவிடுகிறது. 30-07-2010 முதல் 3-08-2010 முடிய 5 நாள்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 27 பேர் கொல்லப்பட்டு விட்டனர்.

13-8-2010இல் சோபோரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேரும், தெரகம் என்ற ஊரில் நடை பெற்ற - ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவர் மக்பூல் பாத் நினைவு ஊர்வலத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவரும் கொல்லப்பட்டனர். இந்தக் கேடுகளுக்கு இடையே, முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் வேண்டுகோளை ஏற்று, 2000 துணை இராணுவப் படையினரை இந்திய அரசு அனுப்பியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாகப் படை வீரர்கள், எல்லைக்காவல் படையினர், உள்ளூர்க் காவலர்கள் முகங்களையே நாள்தோறும் பார்ப்பதும். அவர்களால் சுடப்பட்டுச் சாவதும் மட்டுமே காஷ்மீர் மக்களின் அன்றாட வாழ்க்கை நடப்பு ஆகிவிட்டது.

10-8-2010 அன்று, உமர் அப்துல்லா தலைமையிலான அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவினர் புதுதில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். காஷ்மீர் மக்களின் உணர்வுகளைத் தாம் புரிந்து கொண்டதாகவும், அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் என்றுதான் பெரும்பாலான மக்கள் விரும்புவதாகவும் கூறிய பிரதமர், முதன் முதலாக, சுயாட்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் ரீதியாகக் கருத்து ஒற்றுமை ஏற்பட்டால், காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி வழங்குவது பற்றி, அரசியல் சாசன வரைமுறைகளுக்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும்” என்று பிரதமர் அப்போது குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசியல் சட்ட வரைமுறையின்படி, அரசமைப்பு விதி 370இல் காஷ்மீருக்கு என்று அளிக்கப்பட்டுள்ள சில விதி விலக்குகள் மட்டுமே உள்ளன. காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமை வழங்குவது பற்றிய கூறு எதுவும் இந்திய அரசமைப்பில் இல்லை.

பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்த்து பாரதிய சனதாக்கட்சி தன் கருத்தை வெளியிட்டுள்ளது. சிவசேனா அமைப்பின் நிறுவனர் பால் தாக்கரே தம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் 13-8-10 வெள்ளி அன்று சிறீநகரில் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் ஒரு பிரிவுத் தலைவர் மீர்வாஸ் உமர் பரூக் தலைமையில் ஜமியா மஸ்ஜிதில் நடை பெற்ற கூட்டத்தில் எண்ணற்ற மக்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில் எல்லைப்புறத்தில் குப்வாரா மாவட்டத்தில் தெரகம் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16வயது முடாசிர் என்கிற இளைஞர் கொல்லப்பட்டார்.

சிறீநகர் மக்கள் மாபெரும் கண்டன ஊர்வலத்தை அன்று நடத்தினர். 11-6-2010க்கும் 13-8-2010க்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் 14-8-2010 அன்று முதலமைச்சர் உமர் அப்துல்லா பின்வரும் அறிவிப்புகளைச் செய்துள்ளார்.

1. 50,000 இளைஞர்களுக்குப் பொது வேலைகள் அளிக்கப்பட காஷ்மீர் மாநில அரசு எல்லாம் செய்யும் என்றும்,

2. பிரிவினை கோரும் தலைவர்கள் அரசுடன் பேச்சு வார்த்தைக்கு முன் வந்து காஷ்மீர் சிக்கலைத் தீர்க்க வழிகாண வேண்டும் என்றும்,

3. இந்திய அரசு தன்னாட்சி உரிமையை வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இனியும் காவல்துறை, படைத்துறைத் தாக்குதல் தொடரவே வாய்ப்பு உள்ளது.

அப்படியானால் ஜம்மு - காஷ்மீர் சிக்கல் தீர்வுக்கு என்ன வழி?

1. இந்தியாவில் உள்ள எல்லா அனைத்திந்தியக் கட்சிகளும், மாநிலக்கட்சிகளும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு முழுத் தன்னாட்சி (குரடட யரவடிnடிஅல) வழங்க வேண்டும் என்கிற கொள்கையை முதலில் ஏற்க வேண்டும்.

இக்கொள்கையை இந்திய அரசும், நாடாளுமன்றமும் ஏற்க வேண்டும் என்று எல்லாக்கட்சிகளும் இந்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.

2. எல்லா அனைத்திந்தியக்கட்சிகளும், இந்திய அரசும் “ஜம்மு - காஷ்மீர் பகுதி மட்டுமே இந்தியக் கூட்டாட்சியின் பகுதிக்கு உட்பட்டது” என்பதாகத் துலாம்பரமாக அறிவிக்க வேண்டும்.

பாரதிய சனதா முதலான கட்சிகள் ஆசாத் காஷ்மீருக்கும் உரிமை கொண்டாடுவதை அடியோடு கைவிடவேண்டும்.

3. தமிழகம் தொடங்கி, தன்னுரிமைகோரும் எல்லா மொழிவழி மாநில அமைப்புகளும் இனியேனும், இந்திய அரசின் காஷ்மீர் உரிமைப் பறிப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அம் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த வேண்டும். இவ்வகையில் இப்போது, “இந்தியாவில் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு அணி” செயல்படுவது வரவேற்கத்தக்கது.

“சட்டப்படி வழங்கப்பட்ட தன்னுரிமை பறிக்கப்பட்ட மாநிலம் காஷ்மீர்தான்” என்பதை, இவ்வளவு நாள்கள் மற்ற மாநில மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது தவறாகும். இனியேனும் எல்லோரும் இதை உணர வேண்டும். இதற்கு எதிரான உணர்வை “இந்துத்துவா” கொள்கையினர் பரப்புவதை இவர்கள் அம்பலப்படுத்த வேண்டும்.


அல்கொய்தா தாக்குதலுக்குப் பிறகு, 2001இல் ஆப்கானிஸ்தான் பேரில் படையெடுத்த அமெரிக்கா, கடந்த 9 ஆண்டுகளாக அந்நாட்டைத் தாக்கிப் பாழாக்கி வருகிறது. ஆப்கானிஸ்தானத்துக்குப் படைகளை அனுப்பிட, பாக்கிஸ்தானின் உதவி அமெரிக்காவுக்கு வேண்டப்படுகிறது. இந்த அமெரிக்கா-பாக்கிஸ்தான் உறவு இந்திய அரசுக்கு ஆபத்தானது.

இந்திய அரசு, அமெரிக்காவுடன் ஆன உறவுகளை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொள்ளுவது, காலப்போக்கில், இந்தியா ஓர் ஏகாதிபத்திய வல்லரசாக உருவாகவும், இந்திய மாநிலங்களுக்கு இப்போது இருக்கிற உரிமைகளைப் பறிக்கவுமே வழிவகுக்கும்.

எனவே, இந்தியவிலுள்ள எல்லா மாநில மக்களும் இந்தியா ஓர் ஏகாதிபத்திய நாடாக உருவாவதை எதிர்த்துப் போராட வேண்டும். இதற்கு ஒரு நல்ல தொடக்கமாக ஜம்மு - காஷ்மீர் மக்களின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்துக்கு எல்லா ஆதரவையும் இவர்கள் அளிக்க முன்வரவேண்டும்.

உரிமை பறிக்கப்பட்ட எல்லா மாநிலங்களிலும் இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வைப் பரப்பிட எழுச்சியுடன் செயல்பட எல்லோரும் முன்வாருங்கள்.

இவையெல்லாம் நடைபெறாமல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குத் தானாகவே தன்னாட்சி உரிமை வந்துவிடாது.


நன்றி:வே.ஆனைமுத்து
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11606:2010-11-24-08-45-26&catid=1216:10&Itemid=477

வியாழன், நவம்பர் 25

பன்றி இறைச்சி தடை ஏன் ?

பன்றி இறைச்சி தடை ஏன் ?
பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.

ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...
"டேனியா சோலிய‌ம்" Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

"Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as cysticercosis in muscle and other sites."இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.
இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.
மனித உடல்உறுப்புகளில் எந்தபகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.

டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்.
ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைத்தப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் "பொதுவான தவறான கருத்து".அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண் நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை.
இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் "ஹைபர்டென்ஷன்"ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை.


நோய்களுக்கான காரணியாக மட்டுமின்றி, அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது.பண்டைய காலங்களில், நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன.
ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.
சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை.

பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன் அருளப் பெற்ற இறை வேதங்களில் பன்றி இறைச்சி தடை செய்யப் பட்டுள்ளதன் நோக்கம் நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.திருக்குர்-ஆனில் நான்கு இடங்களில் இக்கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது.இஸ்லாம் மட்டுமின்றி, கிறிஸ்துவர்களின் வேதமாகிய பைபிளிலும் பன்றி இறைச்சியைப் புசிப்பது தடுக்கப் பட்டுள்ளது.

திருக்குர்-ஆன் வசனங்கள் 2:173, 5:3, 6:145 மற்றும் 16:115.
பைபிள் [ Book of Deuteronomy 14:8] Leviticus 11:7-8 ]

****************************************************************
பி.கு: ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ்ப் பதம் கிடைக்காததால் நான் தொகுத்த தகவல்களை ஆங்கிலத்திலேயே தரவேண்டியதாகிவிட்டது.

தொகுப்பு;அ.மு.செய்யது @ இஸ்லாம் - வாழ்வியல் வழிகாட்டி

http://islampreaches.blogspot.com/2009/01/blog-post_11.html#links

செவ்வாய், நவம்பர் 23

எல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்


எல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்

நாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள், மீன் உணவுகள் சத்துள்ள உணவுகள் . அவற்றை நாம் நமது உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம் . சிறு பிள்ளைகள் முதல் பெரியோர்கள் எல்லோரும் மீன் சாப்பிடலாம் .

மீன் நல்ல உணவாவதோடு, நோய்களுக்குக், குறிப்பாக இதய நோய்களுக்கு ஏற்ற மருந்தாகவும் செயல்படுகின்றது. வாரத்திற்கு இருமுறை மீன் உணவுகளுடன் கூடிய உணவு முறைகளைக் கடைப்பிடிப்போருக்கு, இதயத்தாக்கு வருவதற்கான வாய்ப்பு
பாதியாகக் குறைக்கப்படுகிறது. எனவே மீன் உணவுகளை தவிர்க்காதீர்கள் .

ஒட்டி மீன் , சீலா மீன் , விள மீன் , நெத்தலி , சூவாப்பாரை , பாரை, இப்படி பல மீன் இனங்கள் இருக்கின்றன . மீன் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு நல்லது. பனிப்பிரதேசத்தில் வாழும் எக்ஸிமோ மக்கள் கொழுப்பு சேர்ந்த உணவுப் பொருட்களைக் கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுவார்களாம். எனவே, கொலஸ்ட்ராலுக்குப் பஞ்சம் இல்லை. நார்ச்சத்துள்ள உணவைக் குறைவாகவே உண்கிறார்கள். அப்படியும் அவர்களுக்கு அவ்வளவாக இதயநோய்கள் வருவதில்லையாம். எக்ஸிமோக்கள் சாப்பிடும் மீன்கள்தான் அவர்களை இதய நோயாளிகளாக்காமல் காப்பாற்றி வருகிறதாம் என்றால் பாருங்களேன் .

வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, வளர்முக நாடுகளிலும் நிகழ்கின்ற மரணங்களுக்கு இதயத்தாக்கும், மூளைத்தாக்குமே பெரும்பாலும் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. மூளைத் தாக்கினால் இறப்பவர்களை விட இதயத் தாக்கினால் இறப்பவர்களின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. மீன் மற்றும் மீன் பொருள்களை உணவில் கணிசமாகச் சேர்த்துக் கொள்வதன் மூலம் இவ்வகை இதயத் தாக்குகளைத் தவிர்க்கலாம் என்பதும் அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது.

மீன் உணவுகள் எமக்கு விட்டமின் சத்துக்கள் நிறைந்தவை . பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் மீன் சாப்பிட வேண்டும் . 100 - 200 கிராம் அளவு மீனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்த்துக் கொண்டால் அது இதய நோய்களைத் தவிர்க்க உதவும். மீன் சாப்பிடப் பிடிக்காதவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகளை தக்க மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும் கல்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன. இவை தவிர, சருமப் பாதுகாப்பளித்து, இரத்தவோட்டைத்தைத் தூண்டி செயல்படும் விட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.

இதயநோய் காரணமாக உடற் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு ஏற்ற வகையில் குறைந்த கலோரித் திறனையே மீன் தருகிறது. 100 கிராம் எடையுள்ள மீன் உணவை உண்கிற போது, கிடைக்கின்ற கலோரிகள் 100 -க்கும் குறைவானதுவே. மேலும் 100 கிராம் மீன் உண்ணும்போது கிடைக்கக்கூடிய கொழுப்பு 0.1 இருந்து 0.2 வரை மட்டுமே. நாம் ஏன் மீன்களை சாப்பிட வேண்டும் என்று விளங்குகிறது தானே . கல்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு கூட மீன்கள் மிகவும் பயன் அளிக்கின்றன . எலும்பு வளர்ச்சிக்கும் பயன்படுகிறது .

நாம் மீன் சாப்பிடுவதால் பல பயன்களை அடைகிறோம் . உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. சருமநோய் வராமல் தடுக்கிறது. முடக்குவாதம், மூட்டுப்பிடிப்பு போன்ற எலும்பு தொடர்புடைய கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது. மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அனைத்திற்கும் மேலாக, இதயத்தாக்கு வராமல் காக்கிறது. பார்த்தீர்களா மீன் உண்பதால் நாம் பெறும் நன்மை என்னவென்று.


ஒவ்வொருவரும் தங்கள் உணவில் சரியான விகிதத்தில் மீன் பொருட்கள் சேருமாறு கவனமுடன் திட்டமிடுவது அவசியம். இதன்மூலம் இதய நோய்கள் வராமல் காத்துக்கொள்ள முடியும். மேலும் மீன் இதயத்திற்கேற்ற அரிய உணவாக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளாலும், மருத்துவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.மீன் எண்ணெயில் உள்ள ‘ஒமேகா_3’ என்ற பொருள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு ரத்தம் உறையாமலும் பார்த்துக் கொள்கிறது. ரத்தம் சீராகப் பாயவும் உதவி செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

தாவர எண்ணெய்யையும், மீன் எண்ணெய்யையும் ஒப்பீட்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், நான்கு வாரங்கள் மீன் எண்ணெய் உட்கொண்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு அதே நான்கு வாரங்கள் தாவர எண்ணெய் எடுத்துக் கொண்டவர்களுடைய கொலஸ்ட்ரால் அளவை விட 5 மடங்கு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மீன்களின் ஒமேகா 3 எனப்படும் உயர்அடர்த்தி லிப்போ புரோட்டீன் மிகுந்தும் தாழ் அடர்த்தி புரோட்டீன் குறைந்தும் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீன் எண்ணெய் அடங்கிய பொருள்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. என்றாலும் மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் காட்லிவர் ஆயில் மற்றும் ஷார்க் லிவர் ஆயில் போன்றவைகளில் உடலுக்கு நன்மை அளிக்கும் செறிவுறா கொழுப்பு அமிலங்களுடன் விட்டமின்களும் அடங்கியுள்ளன. மீன்களின் தசைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயில் இவ்விட்டமின்கள் மிகுதியாக இருப்பதில்லை. எனவே இதய நோயுற்றவர்கள்
இவ்வகை மீன் எண்ணெயை உட்கொள்வது நல்லது.

எனவே மீன்கள் எல்லோருக்கும் நல்லது . சத்துக்கள் நிறைந்தது . நோய்கள் வராமல் தடுக்க கூடியது . சத்துள்ள மீன் வகைகளை உண்டு வாழுங்கள் . எல்லோரும் மீன் உண்பதை தவிர்க்காமல் மீன் உணவுகளை உண்ணுங்கள் .

Thanks to
இது பவியின் தளம் .............துளிகள்
http://pavithulikal.blogspot.com/

மனித உடம்பின் அதிசயம்!மனித உடம்பு எனும் அதிசயம்!

நாம் எதையெதையோ அதிசயம் என்று சொல்கிறோம். ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம்தான்.

கீழ்க்கண்ட உண்மைகளைப் படித்தால் நீங்களும் அதை ஒப்புக் கொள்வீர்கள்...


மனிதர்களுக்குச் சராசரியாக கனவு 2 முதல் 3 நொடிகளுக்கே நீடிக்கிறது.

மனித உடம்பில் பெரிய செல், பெண்ணின் அண்டம். சிறிய செல், ஆணின் உயிரணு.

நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200 தசைகளைப் பயன்படுத்துகிறோம்.

சராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்.

உங்களின் கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக்கின்றன. மற்ற விரல்களில் 3 எலும்புகள் இருக்கின்றன.

நமது மூளை செல்லால் `என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா' கலைக் களஞ்சியம் போல 5 மடங்கு தகவல்களை வைத்திருக்க முடியும்.

இரண்டு பாதங்களிலும் 2 லட்சத்து 50 ஆயிரம் வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன.

உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் ஒரு `பிளேடை' கரைத்துவிட முடியும்.

வாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்வதற்கு 7 நொடிகள் ஆகின்றன.

நமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணீரை அரை மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.

உங்கள் பல்லின் `எனாமல்'தான் உடம்பிலேயே கடினமான பொருளாகும்.

உங்களின் கட்டைவிரலும், மூக்கும் ஒரே நீளமாக இருக்கும்.

நன்றி; ***வாஞ்ஜுர்***
http://vanjoor-vanjoor.blogspot.com/2010/09/blog-post_15.html

3 வேளை சாப்பாடு ஏன்?


உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?


காலை

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைபடலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுபடுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுபாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.


மதியம்

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைபிடித்தால் சில வியாதிகளை கட்டுபடுத்த முடியும். காலை உணவுக்கு பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளி போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள். உணவுக்கு பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.


இரவு

இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம். மற்றொரு ஆய்வு, `பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை’ என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.

நன்றி; நதியலை
http://wwwnathiyalai.blogspot.com/2010/11/3.html

மகிழ்ச்சியை பரப்ப ஒரு மலிவான வழி !" நீங்கள் சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும் ! ஆனால், நீங்கள் அழுதால், நீங்கள் மட்டும் தனியாகத்தான் அழுதாக வேண்டும்!'' உலகத்தில் நாம் கேள்விப்பட்ட பொன்மொழி இது.

இதை ""முறுவலித்து முகம் மலர்ந்து நோக்குங்கள் ! உடனே உலகமும் அப்படியே உங்களை முறுவலித்து முகம் மலர்ந்து நோக்கும் !

ஆனால், நீங்கள் வெறுத்து முகத்தை முறுக்கிக் கொண்டால் நீங்கள் மட்டும் தனியாய் அப்படி வெறுத்து முகத்தை முறுக்கிக் கொண்டிருக்க வேண்டும்'' என்று சொல்லலாம்.

முகம் மலர்ந்து முறுவலிக்கும்போது ஒரு புன்னகையானது, இன்பம், மகிழ்ச்சி, அன்பு, தயை ஆகிய பேறுகளை வெளிப்படுத்துகிறது. அது பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதாகும். நன்றி பரிமாறிக்கொள்வதாகும். வாழ்த்திக்கொள்வதாகும்.

ஒருவர்மேல் ஒருவர் கொள்ளும் நட்பின் சைகை ஆகும். முறுவலித்துக்காட்டும் அந்த முக மலர்ச்சியானது ""ஒட்டுவார் ஒட்டி'' யாகும்.

அது ஒளிமயமான ஆளுமையுடனும், உவகைமயமான உணர்வுடனும் ஒருவரையொருவர் ""தொடுவதன்'' மூலம் பரவுகிறது. இந்த விருப்பத்துக்குரிய பழக்கம் உண்மையிலேயே ""கவர்ச்சி''கொண்டதாகும்.

உங்கள் இல்லத்திலாயினும் சரி, உங்கள் அலுவலகத்திலாயினும் சரி, பொருள் வாங்கும் கடையிலாயினும் சரி, அல்லது வழி நடக்கும் நடையிலானும் சரி உங்கள் நாளை முறுவல் ததும்பும் முக மலர்ச்சியுடன் தொடங்குங்கள் !

சற்றே கவனியுங்கள் ! நீங்கள் பார்க்கிற ஒவ்வொருவரும் உங்களுக்கு அறிமுகமற்ற அந்நியர் ஒருவரும்கூட ஒரு மகிழ்ச்சியான புன்னகையை உங்களுக்கு பதிலாக அளிக்கிறாரா, இல்லையா ? பாருங்கள் !

இந்தப் பரந்த மனப்பான்மை கொண்ட, மகிழ்ச்சி தோய்ந்த தோற்றத்தை போகுமிடமெல்லாம் உங்களுடன் நீங்கள் கொண்டு சென்றால், இது எவ்வளவு தூரம் உங்களுக்கு உதவுகிறது என்று தெரிந்து நீங்களே வியப்படைவீர்கள் !

உங்கள் தொழில் இதனால் சுலபமாகும். உங்களைச் சார்ந்த முழுச் சூழலும் மாறி விடும். உங்களுடன், ஒத்துவராதவர்களும்கூட, மகிழ்வையும், மனத்துணிவையும் பரப்பும் இந்த உங்கள்முயற்சியில் இணங்கி ஒத்துவருவார்கள்.

இது உங்கள் வாழ்வில் அற்புதமான வழியில் மனநிறைவான வழியில் பிரதிபலிக்கும்

நன்றி: மஞ்சரி
http://vanjoor-vanjoor.blogspot.com/2010/05/blog-post_31.html

திங்கள், நவம்பர் 22

தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?


தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?

ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல் தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால் அந்தக் கப்பல்கள் மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றன?

கப்பல் தண்ணீரில் இருக்கும்போது, அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். எனவே கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் அமிழ்ந்திருக்கும். 1000 டன் எடையுள்ள கப்பலின் உடற்பகுதி, அதே அளவு எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். இதை, ஒரு கப்பலின் வெளியேற்றும் திறன் என்று குறிப்பிடுவார்கள்.

தண்ணீரில் அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேநேரம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது. இந்த இரண்டு அழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களின் சக்தியே, கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அப்போது கப்பல் மிதக்கிறது. இது மிதத்தல் தொடர்பான ஆர்கிமிடீஸ் தத்துவம். ஒருநாள் குளியல் தொட்டியில் தன் உடலை அமிழ்த்தியபோது, அதே அளவு தண்ணீர் வெளியேறியதை வைத்தே ஆர்கிமிடீஸ் இதைக் கண்டுபிடித்தார். அப்போது ஏற்பட்ட உற்சாகத்தில் "யுரேகா, யுரேகா' (நான் கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

மேலும், கப்பலின் உட்பகுதியில் குறிப்பிட்ட அளவு காற்று இருக்கிறது. காற்றுக்கு வடிவமில்லாததால், நாம் அதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம். கப்பலில் உள்ள பொருட்களை வெறுமனே திரட்டி தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணம்.

ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அதற்கான கொள்ளளவு உண்டு. அதை மீறினால் அது மூழ்கிவிடும். இதற்கு எடுத்துக்காட்டு, 1914-ல் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக். டைட்டானிக் பனிப்பாறை மீது மோதியபோது, கப்பல் உடைந்து அதனுள் தண்ணீர் புகுந்துவிட்டது. அப்போது எடை தாங்காமல் அது மூழ்கிவிட்டது.

ஒரு பேப்பரை தண்ணீரில் மிதக்கவிட்டு அதன் மீது குண்டூசியை வைத்தால், பேப்பர் முழுகினாலும் குண்டூசி முழுகாது. ஆனால், நேரடியாக குண்டூசியை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். குண்டூசியை தண்ணீரில் போடும்போது, அது கிடைமட்டமாக விழாது. புவியீர்ப்பு சக்தியின் காரணமாக அதன் எடை கூடிய பகுதி கீழே வரும்படி விழுவதால் மூழ்கிவிடுகிறது. அதேநேரம்,பேப்பர் மீது தண்ணீரில் கிடைமட்டமாக இருப்பதால் அழுத்தம் சமநிலை அடைந்து மிதக்கிறது.

மனிதர்களான நாமும் இதேபோல் மிதக்க முடியும். மெத்தையில் படுப்பது போல் காலை நேராக நீட்டி கிடைமட்டமாக தண்ணீரில் படுத்தால், நாம் மூழ்க மாட்டோம். இப்படிச் செய்யும்போது கப்பலில் செயல்படும் அதே அழுத்தம் நமது உடலிலும் செயல்பட்டு மிதப்போம். இப்படி மிதப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நமது நுரையீரலில் அடைக்கப்பட்டுள்ள காற்று. அது ஒரு பலூன் போலச் செயல்படுகிறது.

கப்பலைப் போலவே காற்றில் அமிழ்ந்துள்ள பொருள்களுக்கும் ஆர்கிமிடீஸ் தத்துவம் பொருந்தும். தனது எடைக்குச் சமமான காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பலூன் பறக்கிறது. அதே அளவு காற்றை அதுவும் கொண்டிருந்தால், இரண்டிலும் ஏற்படும் அழுத்தம் சமநிலையை ஏற்படுத்திவிடும். அப்பொழுது பலூன் பறக்காது.


நன்றி : தினமணி

http://dilleepworld.blogspot.com

மதுவிலக்கே மந்திரமாகட்டும்


மதுவிலக்கே மந்திரமாகட்டும்
நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்

காலம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மனித குலத்துக்கு நன்மையை உடனடியாக அது செய்யாதபோது நீண்ட காலத்துக்கான அடிப்படையிலும் அது நன்மை தருவதில்லை. நன்மையைத் தராவிடினும் தீமையைத் தராமலாவது இருக்கலாம். குறிப்பாக பொழுதுபோகுக்கான பழக்கங்கள் ஒரு தலைமுறையை அழிப்பதோடு நான்கைந்து தலைமுறையையும் பாழ்படுத்தாமல் இருப்பதில்லை. பரம்பரையாய் உயிர்க் கொல்லி நோயாய் இருப்பது மதுப்பழக்கம்.

மது என்பது எந்த வகையாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தீமை பயப்பதுதான். இன்றைக்குக் 'கள்' இறக்குவதைச் சட்டப்படி குற்றமற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் 'கள்'ளை மதுபான பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரலும் எழுந்திருக்கிறது. அதற்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை எந்த லட்சியமும் அற்ற கொள்ளைக் கூட்டணியாகச் செயல்படுவதால் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஒரு காலத்தில் மாப்பிள்ளைக்குக் குடிக்கிற பழக்கம் இருக்கிறதா? என்றுதான் பார்ப்பார்கள். இப்போது படித்த மாப்பிள்ளைகள் 'பாரில்' அமர்ந்து குடிப்பதை நாகரிகமாகவும் 'பார்ட்டி' என்கிற பெயரில் குடித்துக் கும்மாளமிடுவதை உயர்வென்றும் கருதுவதும் குடியின் ஆதிக்கமாகக் கருதலாம். குடித்து விட்டுத் தெருவில் வீழ்ந்து கிடப்பதும் தகராறு செய்வதும் பண்பற்ற செயல்களாக இருந்த நிலைகூட மாறி, இதுவெல்லாம் இனித் தடுக்க இயலாது என்கிற பொதுப்புத்தி நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டு விட்டது.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் என்று சகல துறையினரும் குடிப்பதைப் பற்றிக் குற்றவுணர்வு ஏதும் இல்லாமல் இயல்பாக அதுபற்றி, இது தனிமனித சுதந்திரம் என்று கருத்துரைப்பதும் இதற்கு ஆதாரம் தேடி சங்க இலக்கிய உதாரணங்கள் என்று பிதற்றுவதும் வெட்கக் கேடான விஷயம் என்பது மட்டுமன்றி, ஒரு தலைமுறைக்கே தவறான வழிகாட்டும் கைகாட்டி மரங்களாகவும் இவர்கள் வலம் வருகிறார்கள்.

குடியால் உயர்ந்தவர்களைப் பற்றி இவர்களால் யாரேனும் ஒருவரை அடையாளம் காட்ட முடியுமா...? அரசுக்கு வருமானம் மதுக்கடைகள் என்று அரசுகள் பிதற்றுகின்றனவே, இது வரை வறுமை ஒழிந்திருக்கிறதா...? வேலை வாய்ப்புகள் தான் பெருகியுள்ளதா...?

படித்த பண்புள்ள இளைஞர்கள் பலரும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் வேலைக்குச் சேர்ந்தபின் புதிய குடிகாரர்களாய் மாறிப்போனதை யாராலும் மறுக்க இயலுமா...? மேலதிகாரிகளைச் சரிகட்ட, எப்படியாவது சம்பாதிக்கிற உத்திகளைப் பழகவில்லையென்றாவது கூற முடியுமா...? கல்லூரி மாணவர்களில் சிலர் மேலைநாட்டுத் தாக்கத்தின் விளைவாகக் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

குடிக்கிற ஆண்களைக் கண்டிக்க வேண்டிய மாதர்கள்கூட குடிக்கத் தொடங்கிய வரலாறுகளும் நம்மிடம் உண்டு. தாயே தன் மகனுக்கு ஊற்றிக் கொடுக்கிறாராம். வெளியே சென்று அதிகமாகக் குடித்துப் பழகி விடுவானாம். வீட்டிலேயே ஒரு 'பெக்கோ' இரண்டு 'பெக்கோ' கொடுத்து விட்டால் வெளியே சென்று சீரழிய மாட்டானாம். குடிக்கு வக்காலத்து வாங்குகிற வணிக ஊடகத்தில் பிதற்றுகிற பேட்டியின் குரல் இது.

குடியின் தீமைகளைப் பற்றிப் பல நூற்றாண்டுகளாக பலரும் குரல் கொடுத்து வரும்போது இந்த நூற்றாண்டிலும் தேவைதானா....? என்கிற ஒரு பழமைக் கேள்வி புதுமையாய் எழுந்து வரும்! எந்த நூற்றாண்டானால் என்ன? நெருப்பு சுடத்தானே செய்யும்! குடி, குடியை எப்போதும் கெடுக்கத்தான் செய்யும். மிகப் பெரிய சாதனையாளர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பகுதியில் குடித்தே அழிந்து போயிருக்கிறார்கள்.

சில கருத்துகளை ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது என்று ஒதுக்கி விட முடியாது. திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். புதிய தலைமுறைக்கு இந்தக் கருத்துகள் மிகவும் அவசியம் தான். ஒரு தவறை தவறே இல்லையென்று சமாதானப்படுகிற ஒரு தலைமுறை உருவாகி வருகிறபோது இத்தலைமுறையை யார் எப்படிக் காப்பாற்றுவது?

குடி, ஒருவகையில் தனிமனிதப் பிரச்னைதான். அவர்களின் பணம், செல்வம் குடியில் அழிந்து விடுகிறபோது மீறிப்போனால் அக்குடும்பம் பாழ்படும். இது மேலோட்டமானதுதான். குடிக்கிற ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் நோய்க்கூறு ஏற்படும். குறைந்த விலை மருந்து, உழைக்கும் திறன் குறைவதால் நாட்டுக்கு இழப்பு என்று தொடர் சங்கிலிபோல் குடிகாரர்கள் பிரச்னைகள் தொற்று நோயாகி விடுகின்றன.

குடியை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த இடைவிடாத பிரசாரமும் கருத்துப் பரிமாற்றமும் இன்றைக்குத் தேவை. இதற்கான வாய்ப்புகள் உருவாக்குகிற எந்தக் கட்சியையும் அமைப்பையும் ஆதரிக்கத்தான் வேண்டும்.

பூரண மதுவிலக்கே நம் நாட்டின் அறிவுச் செல்வத்தை தக்க வைக்கும். உழைக்கும் திறனை மேம்படுத்தும்! தனி நபர் சேமிப்பைப் பெருக்கும்! வாழ்க்கை வளமும் நலப்படும்! பூரண மதுவிலக்குக்கு யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை அமைப்பு ரீதியாக ஆதரித்துச் செயல்படுவது காலத்தின் கட்டாயம்!

நன்றி : - க. அம்சப்ரியா - தினமணி

http://www.satyamargam.com/1356

திருபுவனத்தில் இரத்ததான முகாம்

திருபுவனம் நகரில் பல்வேறு சமூக நல பணிகளை தொடர்ந்து செய்து வரும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்  மற்றுமொரு மகத்தான சேவையாக  நேற்றும் இன்றும் இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம்  சிறப்பாக நடைபெற்றது .
20.11.2010 காலை 10 மணிக்கு  SDPI  தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக் தலைமையில் முகாம் ஆரம்பமானது
துணைத்தலைவர் முஹமது ஜுபைர் முன்னிலை வகிக்க திருபுவனம் பேரூராட்சி தலைவர் S Kமணி அவர்கள் இரத்ததான முகாமை துவங்கி வைத்தார் . SM மார்டின் அவர்கள் இரத்த வகை கன்டறியும் முகாமை துவக்கி வைத்தார்கள். மாவட்ட அரசு மருத்துவமனை யும் SDPI யும் இணைந்து நடத்திய இம்முகாமில் சுமார் ஐம்பத்தி ஒன்று நபர்கள் தலா 250 மில்லி அளவில் இரத்த தானம் செய்தனர்.இரத்த வகை கண்டறிய கூட்டம் அலைமோதியதால் தொடர்ந்து இன்றும் முகாம் நடத்தபட்டது .

ஞாயிறு, நவம்பர் 21

கோடிக்கணக்கான ஊழல் பணம் வெளிநாடுகளில்இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் நடந்த லஞ்ச ஊழல், வரி ஏய்ப்பு போன்றவை காரணமாக பல பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக சட்ட விரோதமாக நடக்கும் பண பரிவர்த்தனை நடவடிக்களை கண்காணிக்கும் அமைப்பின் அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் தாரளமயமாக ஆரம்பிக்கப்பட்ட பிறகு நாட்டில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளதாக வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி என்ற அமைப்பு கூறியுள்ளது.

அதிலும் குறிப்பாக 2004--2008 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டுடொன்றுக்கு தலா 19 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் வெளியே சென்றதாக அந்த ஆய்வு கூறியுள்ளது.

திருட்டுத்தனமாக பெறப்பட்ட செல்வத்தை பதுக்கும் முயற்சிகள் காரணமாக பல கோடி இந்தியர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களும், மிகவும் செல்வம் படைத்தவர்களும் இது போல திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

B.B.C.Tamil.com செய்தியிலிருந்து....

சனி, நவம்பர் 20

அறிவுரை எப்படி இருக்க வேண்டும்?

அறிவுரை எப்படி இருக்க வேண்டும்?
உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது அறிவுரை.
இது நன்மை பயக்குமா! அல்லது பாதிப்பினை உண்டாக்குமா? இது கேட்காமலும் கிடைக்கும். அறிவுரை ஆலோசனையாக மாறும்சொல்லும் நன்மை தரலாம்.அறிவுரை கலந்துரையாடலாக இருந்தால் நல்லது, நமது மகனாக இருந்தாலும் மற்றவர் இருக்கும்பொழுது சொல்வது உறவினை பாதிக்கும் .

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உடல்நலன் மற்றும் டயட் (எடை குறைப்பு) சம்பந்தமாக ஆண்கள் சொல்லும் அறிவுரைகள் பெண்களிடம் எப்பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு அற்புதமாக அறிவுரை சொல்லும் நாம் அதன்படி நடப்பதில்லை.

அறிவுரையாக ஒருவரிடம் நாம் சொல்லும் போது கேட்பவர் இப்படியும் நினைக்கலாம் .
இவரிடம் இதனை யார் கேட்டார்கள் ,பரப்புவதற்கு ஒரு செய்தி கிடைத்துவிட்டது அல்லது இவரை கண்டால் நாம் ஓடி விட வேண்டியதுதான் .

அறிவுரை சொல்வது சிலருக்கு வியாதியாக மாறிவிடும்.யாருக்காவது அதனை சொல்லாமல் விடமாட்டார் .ஐயோ பாவம் என்று கேட்டு விடுவர் சிலர்.

குடும்பத்தில் உள்ள வயதான பெரியவர்கள் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அறிவுரை சொல்வது எல்லோருக்கும் பிடிக்காமல் போகின்றது. அதனால் அவர்களை (பெற்றோரை) முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடும் பரிதாப நிலை ஏற்படுகின்றது .

குழந்தைகளை நல்லவிதமாக வளரவேண்டுமானால் அவர்களுக்கு முன் மாதிரியாக முதலில் நீங்கள் நல்லவர்களாக வாழுங்கள், அவர்களுக்குரிய நேரத்தை அவர்களுக்கு வழங்குங்கள். நேரமின்மை காரணமாக அவர்களை குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பினால் நாளை அவர்கள் அதே காரணத்திற்காக உங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பலாம்.

காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! -அல்-குர்ஆன்(103:1-3)

அறிவுரை சொல்லலாமா!


Thanks to; http://nidurseasons.blogspot.com/

தலைவலி

தலைவலி

உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர். ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும், ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும். ஒரு சிலருக்கு காலையில் வரும். ஒரு சிலருக்கு மாலையில் வரும். ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும். ஒரு சிலருக்கு இருபுறமும் வரும். ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும். ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும். ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும். ஒரு சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும். ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும். ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும். ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும். ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும். ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும்.

ஒரு சிலருக்கோ எப்ப வரும்? எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும். வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.


நோய்க் காரணம்:

தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.

1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.

2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.

3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.

4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.

5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவதால் தலைவலி வரலாம்.

6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடையதால் தலைவலி உண்டாகும்.

7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலைவலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.

9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்கவாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.

10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.


மருத்துவர்கள் தலைவலியை வேறு வகையாக வகைப்படுத்துகின்றனர்.

1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache) 2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension) 3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation) 4. தசைச் சுருக்கம் (Muscle Spasm) 5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache) என மருத்துவர்கள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.


மருத்துவம்:

தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம். தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும். எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.

அதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

சரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் குணமடையும் என்பது நிச்சயம்.


மரு. இரா.கவுதமன்

(நன்றி: உண்மை மாதமிரு இதழ்)

கீற்று இணையதளத்திலிருந்து

வெள்ளி, நவம்பர் 19

ஒரு முஸ்லிமின் பார்வையில்

1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்டநேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா?

2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா?

3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா?

4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா?

5. ஒரு நாளுக்குரிய அனைத்து சுன்னத்தையும் தொழுதீர்களா?

6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா?

7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா?

8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா?

9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா?

10. பர்ளான தொழுகையை பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா? (ஆண்களுக்கு)

11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா?

12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா?

13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா?

14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா?

15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா?

16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா?

17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா? அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா?

18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா? யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா?

19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா?

20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா?

21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா?

22. தர்மம் செய்தீர்களா? (பொருளால்)

23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா?

24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா?

25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா?

26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா?

27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா?

28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா?

29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா? அஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா?

30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா? அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா?

31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா?

32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா?

33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா?

34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா?

35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா?

36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா?
-------------------------------------------------------------------------------------

வெள்ளிக்கிழமைகளில்

37. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா?

38. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா?

39. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா?

40. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா?
-------------------------------------------------------------------------------------

ஒரு வாரத்துக்கு - சிறப்பாக

1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா?

2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா? யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா?

3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா?

4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா?

5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா?
-------------------------------------------------------------------------------------

ஒரு முஸ்லிமின் பார்வையில் வாழ்வு என்பது அல்லாஹ்வின் வல்லமைகளை முடிந்தவரை புரிந்துகொள்வதற்கான பயணம்.

இந்தப் புரிதலே உலகின் கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டு முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் சுதந்திர உணர்வை மனிதனுக்குத் தருகிறது.

இப்புரிதலும் அதன் விளைவான அடிபணிதலும்

மனித வாழ்வின் இயல்பான தேவைகள்.


நன்றியும் வாழ்த்தும்; http://onlyoneummah.blogspot.com/ உம்மத் வலைப்பூ

குழந்தை வளர்ப்பு.....

1.ஆண் குழந்தையானாலும் பெண் குழந்தையானாலும் அது நம் குழந்தை.அதனால் பாரபட்சமில்லாமல் வளருங்கள்....எந்த குழந்தையையும் தனியாக செல்லக் குழந்தையாக பாவிக்காதீர்கள்.....

2.அவர்களிடம் மிகுந்த அன்பை செலுத்துங்கள்....நட்போடு பழகுங்கள்.அவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.

3.தன்னை படைத்தவனைப் பற்றிய சிந்தனையை இள மனதில் ஆழமாய் விதையுங்கள்.

4.ஐவேளை தொழுகையையும் நோன்பையும் எடுத்துக் கூறி அதன் மாண்பை விளக்குங்கள்.அவர்களை கடைப் பிடிக்க உற்சாகப் படுத்துங்கள்....

5.குர்ஆனை அர்த்தத்துடன் ஓதி அதைப்பற்றி சிந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்...நீங்களும் தினமும் அவர்களுடன் அமர்ந்து ஓதுங்கள்.....

6.இஸ்லாமிய வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்து உங்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியாய் இருங்கள்...

7.அவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள்....

8.நிறைய இஸ்லாமிய புத்தகங்களையும் அறிவை விசாலமாக்கக் கூடிய பல நல்ல புத்தகங்களையும் வாசிக்கக் குடுங்கள்.சிறு வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தீர்களானால் அது என்றும் பயண் தரும்.

9.உறவுகளை பேணுவதற்கு சொல்லிக் கொடுங்கள்....அடிக்கடி உறவினர் வீடுகளுக்கு அழைத்து செல்லுங்கள்.

10.வீட்டில் முதியவர்களிருந்தால் அவர்களிடம் மரியாதையுடன் அழகான முறையில் நடந்துக் கொள்ளுங்கள்.குழந்தைகளையும் அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்ய பழக்குங்கள்....

11.விடுமுறை தினங்களில் வீடியோ கேம்ஸிலும் டீவியிலும் மூழ்கச் செய்யாமல் உபயோகமான பொழுது போக்குகளை அறிமுகப்படுத்துங்கள்.(எ.டு) புத்தகம் வாசிப்பது,செடி வளர்ப்பது.....

12.பிள்ளைகளை தங்கள் வேலையை தாங்களே செய்துக் கொள்ள பழக்குங்கள்...

13.பிள்ளைகளை உற்சாகப் படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்து விடுங்கள்....அதுவே தலை கணம் ஆகிவிடாமல் கவணம் தேவை.

14.பல தொண்டு நிறுவனங்களுக்கும், ஆதறவற்றோர் இல்லங்களுக்கும் அழைத்து சென்று ஏழ்மையை புரிந்துக் கொள்ள அவர்களுக்கு உதவ பழக்குங்கள்.... (எடு) சிறு உண்டியல் கொடுத்து அதில் சேமித்து,அந்த சேமிப்பை பிறருக்கு உதவ பயன்படுத்த சொல்லுங்கள்....

15.ஓரே குழந்தையாய் இருந்தால் பிடிவாதம் மற்றும் பிறருடன் பகிர்ந்துக் கொள்ளாத குணம் கொஞ்சம் அதிகம் இருக்கும்.அது உங்கள் குழந்தையிடம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.....

16.டீவி,சினிமா போன்ற பொழுது போக்குகளில் நீங்கள் அதிகம் ஈடுபடாதீர்கள்....அவர்களும் தாங்களாகவே விலகிக் கொள்வார்கள்....

குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள்....அவர்கள் மீது எதையும் திணிக்காதீர்கள். இயல்பாய் எடுத்துக் கூறுங்கள். அவர்கள் புரிந்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் நம்மை விட புத்திசாலிகள்.....

Thanks to; http://islampreaches.blogspot.com/

உலகக் கோப்பை கிரிக்கெட்


விளம்பரக் கட்டணம் 10 விநாடிக்கு ரூ.4 லட்சம்!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது டி.வியில் ஒளிபரப்பப்படும் விளம்பரக் கட்டணம் 10 விநாடிக்கு ரூ.4 லட்சமாக உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இந்தியா, வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் போட்டியில் மொத்தம் 49 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இவற்றை டி.வி.யில் ஒளிபரப்பு செய்தல் உரிமத்தை இஎஸ்பிஎன் டிவி சேனல் பெற்றுள்ளது. மொத்தம் ரூ.700 கோடி வரை வருமானத்தை பெற வியாபார ஒப்பந்தங்களை இஎஸ்பிஎன் செய்து வருகிறது.

போட்டி நடக்கும் நேரங்களில் 10 வினாடிக்கு ரூ.4 லட்சம் விளம்பர கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilsaral.com/Espn

பக்தியின் பெயரால் செய்யும் வியாபார மோசடி!

بســــم الله الـر حـمـن الرحـــيــم

இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வை நம்பச்சொல்கிறது.
ஆனால் அல்லாஹ்வை நம்புவதற்கு கட்டுக் கதைகளை ஆதாரமாக கொண்டு நம்பச் சொல்லவில்லை. மாறாக, அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து, அவனை நம்பிக்கை கொள்ள சொல்கிறது.

அதுபோல் முஹம்மது[ஸல்] அவர்களை அல்லாஹ்வின் தூதராக நம்பிக்கை கொள்ளச் சொல்கிறது இஸ்லாம்.
அதற்கும் கட்டுகதைகளை ஆதாரமாக கொண்டு நம்பச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வாழ்க்கை வழிமுறையை அறிந்து, அதைக்கொண்டு அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நம்பச் சொல்கிறது இஸ்லாம்.

இத்தகைய பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்தை சேர்ந்தவர்கள் சிலர் பக்தியின் பெயரால் சில நேரங்களில் செய்யும் கூத்துக்கள், இஸ்லாத்தையும் மூட நம்பிக்கையுடைய மார்க்கமாக மாற்றார்கள் எண்ணுவதற்கு வழிகோலுகிறது. ஒரு மரத்திலோ, காய்கறியிலோ, கல்லிலோ, முள்ளிலோ, கால்நடையிலோ அல்லது வேறு எதிலாவது அல்லாஹ் எனும் எழுத்து உண்மையில் தோன்றினாலும் அப்பொருளுக்கு எந்த புனிதமுமில்லை. அதனுடைய இயற்கையான மதிப்பை விட அப்பொருளுக்கு கூடுதல் மதிப்புமில்லை. அதுபோலவே ஒரு பொருளில் முஹம்மது என்ற அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் பெயர் உண்மையில் தோன்றினாலும், அப்பொருளும் அதன் இயற்க்கை தன்மையை விட கூடுதல் புனிதம் பெற்றுவிடாது.

இஸ்லாமிய நிலைப்பாடு இவ்வாறிருக்க, தியாகத்திருநாளை முன்னிட்டு குர்பானி கொடுப்பதற்காக டெல்லியில் ஆடு விற்பனை நடந்துள்ளது. அந்த விற்பனை செய்யும் இடத்தில் ஒரு ஆட்டின் மீது, 'அல்லாஹ்' என்ற எழுத்தும், 786 என்ற எண்னும் இருந்ததாம். எனவே அந்த ஆட்டின் விலை நான்கரை லட்சம் என ஆட்டின் உரிமையாளர் தீர்மானித்துள்ளார். அதுபோல் அவரது மற்றொரு ஆட்டின் மீது 'முஹம்மது' என்ற பெயர் இருந்ததாம் . எனவே அந்த ஆட்டின் விலை இரண்டரை லட்சம் என அவர் தீர்மானித்துள்ளார். இவ்விரு ஆடுகளையும் வாங்க கடும் போட்டி நிலவிய நிலையில் இந்த இரு ஆடுகளும் விற்றுத் தீர்ந்துள்ளது.

அதிகபட்சம் பத்தாயிரம் மதிப்புள்ள ஆடுகள் லட்சங்களில் விற்கப்பட்டதற்கு காரணம் மூடநம்பிக்கை என்ற ஒன்றன்றி வேறு காரணம் உண்டா? அல்லாஹ் என்றோ-முஹம்மது என்றோ எழுதப்பட்டிருப்பதால் அந்த பிராணி ஆடு என்ற நிலையிலிருந்து வேறு புனித நிலைக்கு மாறிவிடுமா என்ன? சரி இவ்வளவு பக்தி சிரத்தையோடு லட்சங்களை கொட்டி வாங்கியவர்கள் அந்த ஆட்டை என்ன செய்யப் போகிறார்கள்? குர்பானி கொடுப்பார்கள். அந்த ஆட்டின் மீது அல்லாஹ் என்ற வார்த்தை உள்ளதால் அல்லாஹ்வையே குர்பானி கொடுத்ததாக அர்த்தமா? [அஸ்தஃபிருல்லாஹ்].

சரி! அந்த ஆட்டை குர்பானி கொடுக்காமல் வளர்த்தால் கூட சில ஆண்டுகளில் செத்து விடுமே? ஆடு செத்து விட்டால் அல்லாஹ் செத்து விட்டான்[அஸ்தஃபிருல்லாஹ்]. என்று அர்த்தமா?

சிந்தியுங்கள் முஸ்லிம்களே! ஒரு பொருள் அதன் இயற்கை வடிவத்திலிருந்து ஒரு போதும் மாறாது. புனிதமாகாது. ஒரு பொருளை அவ்வாறு புனிதமானதாக கருத வேண்டுமெனில், அதற்கு அல்லாஹ்வோ-அவனது தூதரோ கூறிய சான்றுகள் வேண்டும். எனவே கண்டதையும் கற்பனையால் புனிதமாக்கும் சிலரைப் போல் முஸ்லிம்களும் ஆகவேண்டாம் என்றும், அல்லாஹ்வின் மார்க்கத்தை கேலிக்குள்ளாக்க வேண்டாம் என்பதே எமது வேண்டுகோளாகும்.

மெயில்: முகவை அப்பாஸ்

செவ்வாய், நவம்பர் 16

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒப்பற்ற ஓரிறை கொள்கையை உலகில் நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னிய ஏந்தல் நபி இப்ராஹீம் அலை] அவர்களின் தியாகத்தையும், தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தன்னை அறுக்க தந்தை கோரியபோது,

இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்கு தன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாகத் திருநாளில் உலகமெங்கும் வாழும் எங்களின் இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு,

எல்லாம் வல்ல அல்லாஹ், ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.

என்றும் அன்புடன்
திருபுவனம் வலை தளம்

திங்கள், நவம்பர் 15

இஸ்லாமிய நாடாக மாறப்போகும் இந்தியா! (இன்ஷாஅல்லாஹ்)

( அதிரை முஜீப் )

குழந்தை கடத்தலில் ஈடுபடும் நபர்களை அரபு நாடுகளின் சட்டத்தில் தண்டிக்க வேண்டும் :
பெண் வக்கீல்கள் நலச்சங்கம் வேண்டுகோள்


கோவை பெண் வக்கீல்கள் நலச்சங்க செயலாளர் வெண்ணிலா விடுத்துள்ள அறிக்கை:
கோவையில் பள்ளி சிறுவன், சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளது. ஏதுமறியாத இளந்தளிர்களை கிள்ளி எறிந்த மனித மிருகங்களின் செயலால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மனதால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமுதாயத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொடியவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். "ராகிங்' குற்றத்துக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரப்பட்டது போல், குழந்தைகளை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். இதுபோன்ற குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து, ஒரு ஆண்டுக்குள் விசாரணையை முடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அளிக்கப்படும் தண்டனையால், கொடூரர்கள் மனதில் தண்டனை பற்றிய பயம் ஏற்படும். குற்றங்கள் குறையும்.
குறிப்பாக, குழந்தைகளை கடத்துபவர்கள், கொலை செய்பவர்களை அரபு நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் போல் இருக்க வேண்டும்.இதற்காக மத்திய, மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை:
ரிசர்வ் வங்கிக்கு மன்மோகன் பரிந்துரை


இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார். மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார். பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளார். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


வரதட்சனை கொடுமை:
மரண தண்டனை வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!


வரத‌ட்சணை‌க் கொடுமை செ‌ய்து கொ‌லை செ‌ய்த வழ‌க்குகளை கொலை வழ‌க்காக ப‌திவு செ‌ய்து மரண த‌ண்டனையை ‌வி‌தி‌க்கவே‌ண்டு‌ம் என்று உச்‌ச ‌நீ‌திம‌ன்ற‌ம் வரலா‌ற்று ‌சிற‌ப்பு ‌மி‌க்க ‌தீ‌ர்‌ப்‌பினை அளி‌த்து‌ள்ளது. இதுபோ‌ன்ற செய‌ல்களு‌க்கு வ‌ன்மையான க‌ண்டன‌த்தையு‌ம் உச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திக‌ள் ‌கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளன‌ர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்தியநாராயண திவாரி தனது மனைவி கீதாவை 2000-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி அன்று தன் தாயாருடன் சேர்ந்து கீதாவின் கழுத்தை நெரித்துக் கொன்று எரித்தனர். இது தொடர்பாக, வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. செசன்சு ‌நீ‌திம‌ன்ற‌ம், திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவரையும் விடுதலை செய்தது. அதை எதிர்த்து காவ‌ல்துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த அலகாபாத் உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம், இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவரும் உச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மேல் முறையீடு செய்தனர். அந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச ‌நீ‌திம‌ன்ற‌ அம‌ர்வு விசாரித்து தீர்ப்ப‌ளி‌க்க‌ப்ப‌ட்டது. அப்போது, வரதட்சணை கொலைகளுக்கு எதிராக நீதிபதிகள் கடுமையான கருத்துகளை கூறினார்கள். அந்த கொலைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவருக்கும் அலகாபாத் உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.


தீ‌ர்‌ப்‌பி‌ன் போது ‌நீ‌திப‌திக‌ள் கூ‌றியதாவது, வரதட்சணைக்காக மணமகளை கொல்லும் கொடூரச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மேல்முறையீடு செய்துள்ள குற்றவாளிகளுக்கு அலகாபாத் உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை. உண்மையில், இதுபோன்ற வரதட்சணை கொலைகளுக்கு இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்து மரண தண்டனை வழங்க வேண்டும். ஆனால், இந்த வழக்கை 302-வது பிரிவில் குற்ற‌ச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. வரதட்சணை கொடுமை சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்களால் மரண தண்டனை விதிக்க முடியவில்லை. இதுபோன்ற மணமகள் எரிப்பு வழக்குகள் அனைத்திலுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்.


நாடு முழுவதும் உள்ள ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளிலு‌ம் குவிந்து கிடக்கும் ஏராளமான வரதட்சணை வழக்குகளே இதற்கு ஆதாரம். மணமகளை கொல்வது காட்டுமிராண்டித் தனமான செயல் என்பது நிச்சயம். நாகரீக சமுதாயத்தில் ஏராளமான பெண்கள் இதுபோன்று கொடுமைப் படுத்தப்படுவது ஏன்?. இந்த வழக்கு, அதற்கு உதாரணமாக இருக்கிறது. சமூகத்தில் நிலவும் இத்தகைய கொடிய செயலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


மேலே படித்த இதுபோன்ற கருத்துக்கள் சில காலங்களாக இந்தியாவில் ஒலித்துக் கொண்டிருப்பவைகள். அதாவது நம் நாட்டிற்கும் இஸ்லாமிய சட்டங்களே சிறந்த தீர்வு!. அதனால் இஸ்லாமிய சட்டங்கள் இங்கு அமல்படுத்தப் படவேண்டும் என்பதை நேரிடையாகவே கேட்க மனசு வராமல் இது போன்ற கருத்துக்களால் மக்களும் நீதிமன்றங்களும் மறைமுகமாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இஸ்லாமிய சட்டங்களினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்பதை அரபுநாடுகளை மேற்கோள்காட்டி தற்போது கேட்க ஆரம்பித்துள்ளனர்.

அத்வானிகூட கற்பழிப்புக்கு மரணதண்டனை வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த இஸ்லாமிய சட்டங்கள் ஒன்றும் அரபு மக்களால் இந்தியாவில் உள்ளது போல் நாடாளுமன்றங்களின் மூலம் நிறைவேற்றப்பட்டதல்ல! மாறாக மனிதகுலத்திற்கு அவர்களை படைத்த இறைவனால் வழங்கப்பட்டதாகும். எனவே படைத்தவனுக்கு தெரியும் எது மனிதகுலத்திற்கு சிறந்தது என்று!.


எனவே இதுபோன்ற கருத்துக்கள் தற்போது ஒலிக்க ஆரம்பித்துள்ளதால் அதனை மேலும் வலுப்பெற வைக்க வேண்டியது முஸ்லீம்களாகிய நம் கையில் தான் உள்ளது. இதுபோன்ற கருத்துக்கள் எங்கெல்லாம் தெரிவிக்கப்படுகின்றதோ அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பங்கெடுத்து இதை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஏனெனில் இதை முஸ்லிம்களாகிய நாம் சொன்னால் அதற்குப்பெயர் “காட்டுமிராண்டி ஷரியத் சட்டத்தை” இந்தியாவில் இவர்கள் அமல்படுத்த முற்படுகின்றார்கள் என்று அர்த்தம்.... ஆனால் யாரிடம் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றோமோ, அவர்களே முன்வந்து இதை அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறும்போது, நாம் செவிடர்களாக இருந்துவிட்டு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் இனி எக்காலத்திலும் இதை வென்றெடுக்க முடியாது. சமீபமாக கோவையில் குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு கூட மனிதநேய மக்கள் கட்சி தன்பங்கிற்கு “குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும்” என்று சுவரொட்டிகள் மூலம் ஆதரவு தெரிவித்து இருப்பதும் பாராட்டுக்குரியது. இதேபோன்று ஏதாவது ஒரு வழியில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ நம் ஆதரவை தெரிவித்து தானாக தேடிவருவதை வசப்படுதிக் கொள்ளவேண்டும். இது பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போன்றது. இதுவும் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு செய்யும் ஒரு மறைமுக உதவியே!.

நன்றி:அதிரை முஜீப்
http://adiraimujeeb.blogspot.com/2010/11/blog-post.html

ஞாயிறு, நவம்பர் 14

நீடூர்-நெய்வாசல்J.M.H.A-வக்fப் மருத்துவக் கல்லூரி

புதிய சகாப்தம் படைக்க தயாராகிவிட்டார்கள் சமுதாய ஆர்வலர்கள்
J.M.H.A-வக்fப் மருத்துவக் கல்லூரி பணி துவக்கம்

“தமிழகம் முழுவதும் முக்கால் பகுதி வக்ப் வாரிய சொத்துக்கள் பயன்படுத்தப் படாமலும் ஆக்கிரமிலுமாக உள்ளன. இவற்றை சமுதாயத்தின் ஏழ்மை நிலலயிலுள்ளவர்களின் நிதித்தேவைக்குப் பயன்படுத்தலாம் அல்லது கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்று எண்ணியபோது கல்வி வளர்ச்சியே சிறந்ததாகத் தோன்றியது. சரி கல்வி வளர்ச்சிக்கு கல்லூரி துவக்கலாம் என்று எண்ணியபோது அதில் மருத்துவக் கல்லூரியே சிறந்ததாகத் தோன்றியது.எனவே, சமுதாய மக்கள் கல்லூரி துவங்க எண்ணினால் அதற்கு தமிழ்நாடு வக்ப் வாரியம் துணை நிற்கும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு அதற்கு பலரும் முன் வந்துள்ள நிலையில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கான இடங்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேரில் கண்டு ஆய்வு செய்கிற வேளையில்

நீடூர்-நெய்வாசல் JMH அரபிக் கல்லூரிக்கு வந்திருந்தபோது JMH அரபிக் கல்லூரியின் நிர்வாகத்தினர் தங்களிடம் 30 ஏக்கர் இடம் இருப்பதாக் கூறி அதில் கல்லூரித் துவங்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.
அதன் விளைவுதான் இன்றைய (13-11-2010 சனிக்கிழமை) வரலாறு போற்றும் ஆலோசனைக்கூட்டமும் அதன் தீர்மானங்களும்.

” விளக்கவுரையாற்றிய தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் முயற்சி இறைவினின் பொறுத்தத்திற்குரியது.

தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சி இதுவரை நீடூர்-நெய்வாசல் வரலாற்றில் யாரும் செய்திடாத ஒரு புதுமையான முயற்சியின் தொடர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

J.M.H.அரபிக்கல்லூரியின் தலைவர் T.S.R.நஜிமுத்தீன் ஹாஜியார் அவர்களின் தலைமையில் இன்று காலை J.M.H நிக்காஹ் மஹாலில் துவங்கிய நிகழ்ச்சியில் புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் A.M.H.நாஜிம், காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் முஹம்மது இஸ்மாயீல், அன்னைக் கல்லூரி தாளாளர் நஜிமுத்தீன், மயிலாடுதுறை நகரமன்றத் தலைவர் லிங்கராஜன், சச்சா முபாரக் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் உரையாற்றினார்கள்.

மருத்துவக் கல்லூரிக்கான அரசு அனுமதியை வாங்குவதற்கு முதலில் கல்லூரிக்கானக் கட்டிடம் கட்டப்பட வேண்டும். அங்கு 2 ஆண்டு காலம் மருத்துவமனையை நடத்த வேண்டும். அதன் பின்னர்தான் முறையான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும்.
கல்லூரித் துவங்க ஆரம்ப கால நிதியாக ரூபாய்.50 கோடி தேவைப் படுகிறது. இந்த 50 கோடியை ஒரு பங்கின் விலை ரூபாய் 10 லட்சம் என்று 500 பங்குகளாக பிரித்து சமுதாய மக்களில் வசதிக்கேற்ப வாங்குவதற்கு வழி செய்யலாம் என்றும், ஜமாத் ரீதியாகவும் தனி நபர்கள் பலர் சேர்ந்தும் பங்குகளை வாங்க வழி செய்யலாம் என்றும் ஆலோசித்து முடிவு செய்யப் பட்டது.
பங்குதாரர்கள் நிர்வாகக்குழு அங்கத்தினர்களாக தகுதி பெறுவார்கள்.

இன்ஷா அல்லாஹ் நமக்கு கிடைக்கும் மருத்துவ சீட்டுகளில் பங்குதாரர்கள் மூலம் சமுதாய மாணவர்கள், குறிப்பாக வசதி வாய்ப்பற்ற மாணவர்கள் பயனடைய செய்ய வேண்டும் என்பதே இத்திட்டதின் குறிக்கோள்.

கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய தினமே வாங்கப் பட்டுவிட்டன. தமிழகத்தை 4 மணடலங்களாகப் பிரித்து அனைத்து தமிழக முஸ்லிம்களின் பங்களிப்பில் நீடூர் J.M.H.A-வக்ப் மருத்துவக் கல்லூரியை வெற்றிகரமாக துவங்கியபின் இதை முன்மாதிரியாக வைத்து இதர பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி சமுதாய மருத்துவர்களை உருவாக்க எடுக்கப் பட்டிருக்கும் இம்முயற்சி சாதாரணமான விஷயமல்ல.

இவை அனைத்தும் தீர்மானங்களாய் நிறைவேற்றப் பட்டபோது சமுதாயமே ஆனந்தத்தில் மகிழ்ந்தது.

இந்த லட்சியக் கனவு நனவாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.

நம்மாலான முயற்சியில் கல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்.சகோதரர் அக்பர் அலி மெயிலிலிருந்து

http://niduronline.com/?p=3719#more-3719

தீவிரவாதத் தொடர்புடைய இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்.காரர்களே!

தீவிரவாதத் தொடர்புடைய இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்.காரர்களே!

தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என்று இதுவரை கைது செய்யபட்ட இந்துக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடையவர்களே என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

முஸ்லிம்களை தேச விரோதிகள் என்று எப்போதுமே ஆர்.எஸ்.எஸ். முத்திரை குத்துவதுண்டு. ஆனால், தீவிரவாதத் தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்ட அனைத்து இந்துக்களுமே ஆர்.எஸ்.எஸ். தொடர்புடையவர்கள்தான் என்று திக் விஜய் சிங் கூறினார்.

முஸ்லிம்கள் தீவிரவாதத்தைப் பரப்புவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். இதுவரை கூறி வந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத தொடர்பு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்படும் நிலையில் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்றும் அவர் கூறினார்.

நீதிபதி சச்சார் குழுவின் பரிந்துரைகள் பற்றிக் கூறிய அவர், இந்த அறிக்கை ஆதாரப்பூர்வமானவது. இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உண்மை நிலையை பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான அரசு, சச்சார் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முயன்று கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வெள்ளிக் கிழமையன்று நடைபெற்ற முஸ்லிம் தலைவர்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திக் விஜய் சிங், நாட்டின் வறுமை ஒழிப்பில் மதச்சார்பற்ற சக்திகளுடன் முஸ்லிம் அறிஞர்களும் இணைந்து பாடுபட வேண்டும் என்று கோரினார்.

Thanks to: http://www.inneram.com அநீதி

வெள்ளி, நவம்பர் 12

பித்தப்பை கற்களுக்கு தீர்வு!

பித்தப்பை கற்களுக்கு தீர்வு!

[ நிறையப் பேர் பித்தப் பை கல் பிரச்சினை ஏற்பட்டு, சாதாரண வயிற்று வலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால் எந்த பலனும் அளிக்காமல் இறுதியாகத்தான் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள். பித்தப் பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சைதான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும், 100ல் 10பேருக்கே மருந்து குணமளிக்கிறது.

தற்போது 'லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை' நல்ல பலனை அளித்து வருகிறது. வயிற்றைக் கிழிக்காமல், ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.]
பித்தப்பை என்றால் என்ன?

பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் இணைந்திருக்கும். பித்தப்பை என்பது நமது உடலில் பேரிக்காய் வடிவம் போன்று காணப்படும் ஒரு உறுப்பு. இது கல்லீரலின் ஒரு பகுதியுடன் இணைந்து இருக்கும். 7 முதல் 12 செ.மீ. நீளம் இருக்கும். அதன் கொள்ளளவு 50 மி.மீ. இதன் மற்றொரு பகுதி வயிற்றுடன் இணைந்து இருக்கும். நாம் ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும்போதும் அதில் உள்ள கொழுப்பு சத்து, கால்சியம், தண்ர், பித்தநீர், உருவாகிற போது பித்தப்பை செயல்படுகிறது. இது கல்லீரலில் இருந்து ஒரு மணிநேரத்தில் சுரக்கும் 40 மி.லி. பித்தநீரை சேகரிக்கும் பணியை செய்கிறது. இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.

நாம் உணவு உண்டதும், இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால், பித்தப் பையில் சுரங்கும் ஜீரண நீர் தேங்கி கற்களாக மாறுகிறது.

இந்த பித்தப் பையில் ஏற்படும் கற்களுக்கும், நாம் உணவில் தெரியாமல் சாப்பிட்டுவிடும் கற்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

எதனால் உருவாகிறது?

பல்வேறு காரணங்களால் பித்தபையில் கற்கள் உருவாகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் பித்தப்பை கற்கள் வரலாம். பித்தப்பையில் சுரக்கும் உமிழ்நீரில் ஏற்படும் வேதியியல் மாற்றத்திற்கு ஏற்ப கட்டிகள் உருவாகலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பித்தப்பை கற்கள் உருவாகின்றன. இதில் பலவகை உண்டு. உதாரணமாக கொழுப்பு கற்கள், கால்சியம், பித்தநீர் கலந்த கற்கள் ஆகும்.
பெண்களை குறிவைக்கும் பித்தப்பை கற்கள்

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது பெண்களைத்தான் அதிகம் தாக்குகிறது. 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேதியியல் மாற்றத்தினால் ஏற்படும் உடல்பருமன், பிறநோய்களுக்கு அதிகமாக சாப்பிடும் மாத்திரைகளாலும், கர்ப்பத்தடை மாத்திரைகள் அதிகம் உட்கொள்வதாலும், கிட்னி, கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் குடல்நோய் உள்ளவர்களுக்கும், டைபாயிடு மற்றும் பலநோய் கிருமிகளால் ஏற்படும் உபாதைகளின் போதும் குடல்புண் தொடர்ச்சியாக இருப்பது, குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் போதும் வரலாம்.

பித்தநீர் சுரப்பதில் குறைபாடு உள்ளவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள் மற்றும் வேறுசில காரணங்களாலும் பித்தப்பை கல் வர வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்:

வயிற்றில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாய்வு மற்றும் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் மாற்றம் போன்றவை நோயின் அறிகுறி.

பித்தக் கற்கள் மூன்று வகைப்படும். ஒவ்வொரு வகை கற்களும் ஒவ்வொரு காரணத்தினால் உண்டாகின்றன.

பொதுவாக, உடல் பருமனாக இருப்பது, உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது, கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பது போன்றவற்றாலும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ, பித்த நீர்ப் பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்வதாலோ பித்தப் பையில் கற்கள் உண்டாகின்றன.

பித்தப் பையில் கற்கள் உண்டான ஒருவருக்கு, வாயுத் தொல்லை ஏற்படுவது, சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் வலி உண்டாவது, மஞ்சள் காமாலை நோய் தாக்குவது, கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம்.

நிறையப் பேர் பித்தப் பை கல் பிரச்சினை ஏற்பட்டு, சாதாரண வயிற்று வலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால் எந்த பலனும் அளிக்காமல் இறுதியாகத்தான் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள்.

சிகிச்சை: பித்தப் பை கற்களை அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். அப்படி கண்டறிய முடியாதவர்களுக்கு மட்டுமே சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படுகிறது.

பித்தப் பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சைதான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும், 100-ல் 10-பேருக்கே மருந்து குணமளிக்கிறது.
அதிலும் மருந்தை தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவார்கள். மருந்தை நிறுத்தினால் மீண்டும் பிரச்சினை துவங்கிவிடும். மேலும் மாத்திரைகளினால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே பித்தப் பை கற்களுக்கு அறுவை சிகிச்சையே பூரண குணமளிக்கும்.

அறுவை சிகிச்சை என்றால் வயிற்றுக் கிழித்து செய்யப்படும் சிகிச்சை அல்ல. தற்போது லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நல்ல பலனை அளித்து வருகிறது. வயிற்றைக் கிழிக்காமல், ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.

மிக்க நன்றி: Dr. ராஜ்குமார்

www.nidur.info