Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், ஜனவரி 30

முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறைமைகள் (Teaching Methodology of prophet Muhammed (sal) As Sheikh S.M.M. Mazahir

மனித வாழ்வு முழுமைக்குமான முன்மாதிரியாவார். அவரது வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களில் மனிதனின் வாழ்வு முறைக்கான பரிபூரண வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் மாணவர்களை சிறந்த மனிதர்களாகவும் சிறந்த பிரஜைகளாகவும் மாற்றுவதற்குத் துணை நிற்கின்ற உன்னதமான கற்பித்தல் முறைமைகளையும் நாம் அவர்களின் ஸுன்னாவிலிருந்து பெறலாம்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் கைக்கொண்ட சிறந்த கற்பித்தல் முறைமைகள் வரலாறு காணாத பெறும் சமூக மாற்றத்தை அந்த ஜாஹிலியா - சமூகத்திற்குள் தோற்றுவித்தது. முறைசார்ந்த கல்வி (Formal Education) என்ற வாசகத்திற்கு உரித்தான கலாநிலையமோ சர்வகலாசாலையோ இல்லாத ஒரு காலப்பகுதியில், அறிவு வீழ்ச்சியும் ஒழக்க வீழ்ச்சியும் மிகவும்; கீழ்மட்டத்திலிருந்த மக்கள் மத்தியிலேயே அவர் தனது தூதை முன்வைத்தார். இத்தகைய சூழ்நிலையில் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு, கற்பித்தல் முறைமைகளை உபயோகித்ததன் விளைவாக, மறுமை நாள்வரை அத்தகைய ஒரு சமுதாயத்தை எவராலும் உருவாக்க முடியாது என்று கூறுமளவுக்கு மனிதப் புனிதர்கள் கொண்ட சீரிய சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடிந்தது. அத்தோடு அவரது நுட்பமான கற்பித்தல் உத்திகள் தான்; அல்குர்ஆனினதும் சுன்னாவினதும் அறிவுக் கருவூலங்களை பாரெங்கும் பரப்புவதற்குத் துணை நின்றன அறிவியல், தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சாணியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ;இன்றைய காலத்திலும் இஸ்லாத்தின் கொள்கைகள் பலவீனமடைந்து போகாமைக்கும் இவை காரணமாக அமைந்தன.
இன்றைய கல்வியியலாளர்கள், கல்விஉளவியலாளர்கள் கோட்பாடுகளாக (concepts) முன்வைக்கின்ற பல்வேறு கற்பித்தல் முறைகளை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியிருப்பதோடு அவர்களது வாழ்க்கையின் முன்மாதிரி என்ற வகையிலும் அவை புனிதத்துவத்தோடு பின்பற்றுவதற்கும்; உரியனவாகும். அவற்றுள் பிரதானமான சிலவற்றை சுருக்கமாக இக்கட்டுரை அலசுகின்றது.

நபியின் பிரதான பணி கற்பித்தல்
முஹம்மத் (ஸல்) பிரதானமான பணி, தனது சமூகத்தினருக்கு தேவையானவற்றைக் கற்றுக் கொடுப்பதோடு அவர்களை நன்மை, சிறந்ததின் பக்கம் வழிகாட்டுவதாகும். இறைதூதரின் பொறுப்புகள் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகி;றது. அவன்தான் எழுத்தறிவில்லாத சமூகத்தார்களின் மத்தியில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதி காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி தீர்க்கமான அறிவை (சுன்னா) யும் கற்றுக் கொடுக்கின்றார்.(ஸுரா:ஜம்ஆ-2)

இவ்விறை வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

01. அல்லாஹ்வுடைய வேத வாக்கியங்களை அம்மக்களுக்கு ஓதிக் ;காண்பி;க்க வேண்டும்
02. அவர்களை ஒழுக்கரீதியாக சீர்மைப்படுத்தி, பண்படுத்தி புனிதர்களாக மாற்றுதல் வேண்டும்.
03.இறை வேதத்தை (அல்குர்ஆன்) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தல் வேண்டும்.
04. 'அல் ஹிக்மா' வையும் அம்மக்களுக்குக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். 'அல் - ஹிக்மா' என்பது பெரும்பாலான தப்ஸீர் ஆசிரியர்களின் கருத்துப்படி நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைக் குறிக்கும். எனவே, அவருடைய நடைமுறை வாழ்வியலையும் அவர் அவர்களுக்கு கற்பித்தல் வேண்டும்.
இந்நான்கு பொறுப்புகளும் 'கற்பித்தல்' என்ற அம்சத்திற்குள் அடங்கிவிடுவதையும் நாம் அவதானிக்கலாம்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்கள் அல்குர்ஆனை ஓதிக் கொண்டும் படித்துக்கொண்டும் இருக்ககும் சந்தர்ப்பத்தில் 'நான் ஓர் ஆசிரியனாகவே அனுப்பப் பட்டுள்ளேன்' எனக் கூறினார்கள்
(இப்னு மாஜா - 229)

ஓர் ஆசிரியர் பெற்றிருக்க வேண்டிய பண்புகள்:

வெற்றிகரமாகச் செயற்படும் ஓர் ஆசிரியர்; பெற்றிருக்க வேண்டிய பண்புகளை முஹம்மத் (ஸல்) அவர்கள் தன்னகத்தே கொண்டிருந்தார்கள் அவரிடம் காணப்பட்ட உயர்ந்த ஒழுக்க மாண்புகளும் ;இதற்கு உறு துணையாக அமைந்தன நபி (ஸல்) அவர்களைப் போன்று வெற்றிகரமான ஆசிரியராகத் தொழிற்பட விரும்புபவர் பின்வரும் அவரது பண்புகளை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

1 - கவனமும் கரிசனையும்
நபி(ஸல்) அவர்களின் இந்தப் பண்பு பற்றி அல்குர்ஆன் கீழ்வருமாறு பிரதாபிக்கின்றது. ஷஷ(விசுவாசிகளே) திட்டமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். .நீங்கள் கஷ;டப்படுவது அவருக்கு வருத்தமாக இருக்கும். உங்கள் மீது மிக்க கரிசனை கொண்டவர் அவர் விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர், மிகக் கிருபையுடையவர்' (சூறதுத் தௌபா 128) அபூதர் (றழி) அவர்களிடம்; இறைதூதர்; (ஸல்) ஒருமுறை கூறினார்கள் ;'அபூதர்ரே நான் உன்னைப் பலவீனராகக் காண்கிறேன். நிச்சயமாக நான் எனக்கு எதனை விரும்புகின்றேனோ அதனையே உமக்கும் விரும்புகின்றேன்.' (முஸ்லிம் 1826)
முஸ்லிம் சமூகத்தை சீர்கேட்டிலிருந்தும் அழிவிலிருந்தும் பாதுகாப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனத்தைப் பற்றி பின்வரும் ஹதீஸ் போதிக்கின்றது, 'எனக்கும் எனது சமூகத்தினத்தினருக்கும்; உதாரணம் நெருப்பு மூட்டிய ஒரு மனிதனைப் போன்றதாகும். பூச்சிகளும் ஏனைய உயிரினங்களும் அதிலே விழுந்து (உயிரை மாய்த்துக்) கொள்கின்றன. நீங்கள் அதில் விழுவதற்காக முண்டியடித்துக் கொண்டு போகும் போது உங்களை நான்பிடித்து, தடுத்து நிறுத்துகின்றேன்.' (முஸ்லிம் - 2284)
எனவே ஓர்ஆசிரியர் தனது மாணவர்களின் விடயங்களில் அக்கறை காட்டுவதோடு, அவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் அம்சங்களை விட்டு அவர்களைத் தடுத்து அவர்களை நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டும், என்ற வேட்கையோடு பணிபுரிய வேண்டும்.
02 - வழிகாட்டுவதில் மென்மையும் இரக்க சுபாவமும்
இறைதூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு வழிகாட்டும் போது மிக இரக்கத்தோடு இளகுத் தன்மையோடும் நடந்து கொள்வார்கள்.
அனஸ் பின் மாலிக் (றழி) அவர்களை 'எனது சிறிய மகனே' என நபியவர்கள் அழைப்பார்கள் (அஹ்மத் - 12648). இறுதிக் தூதருக்கு பல வருடங்கள் பணிவிடை புரிந்தஅனஸ் பின் மாலிக் (றழி) பின்வருமாறு கூறுகின்றார்கனள். ஷஷஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த ஒழுக்கம் நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். ஒருநாள் என்னை ஒரு விடயமாக அனுப்பி வைத்தார்கள் நான் அவர் சொன்ன விடயத்தைச் செய்வதற்குக் போவதாக மனதில் எண்ணிக்கொண்டு நான் போக மாட்டேன்' எனக் கூறினேன் . பின்னர் சந்தையில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் ஓர் இடத்தைக் கடந்து செல்லும் போது திடீரென நபியவர்கள் என் பின்னாலிருந்து எனது பிடரியைப் பிடித்தார்கள். நான் திரும்பிப் பார்த்த போது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள் அப்போது 'நான் ஏவிய விடயத்தைச்; செய்வதற்காகப் போகின்றாய் தானே என என்னிடம் கேட்டார்கள் அதற்கு நான் ஆம், அல்லாஹ்வின் தூதரே எனப்; பதிலளித்தேன்.
நபி (ஸல்) அவர்களின் இரக்க சுபாவம் ;ஒவ்வொரு தோழரையும் தான் தான் அல்லாஹ்வின் தூதரிடத்தில் மிகச் சிறந்தவன் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. அம்ருப்னுல் ஆஸ் (றழி) பின்வருமாறு கூறுகின்றார்; இறைதூதர் (ஸல்) என்னை நோக்கி முகங்கொடுத்துப் பேசுவார்கள் சமூகத்திலேயே நான் தான் சிறந்தவன் என நான் நினைக்கும் வகையில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது.. (திர்மீதி - 295)
அனஸ் பின் மாலிக் (றழி) அவர்கள் கீழ்வருமாறு கூறுகின்றார்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் நபியவர்களுக்கு ஒன்பது வருடங்கள் பணிபுரிந்துள்ளேன், நான் ஒன்றைச் செய்ததற்காக ஏன் இதனைச் சய்தீர் என அவர்கள் வினவியது கிடையாது. ஒன்றைச் செய்யாது விட்டதற்காக இப்படிச் செய்திருக்கக் கூடாதா எனக் கேட்டதுவும் கிடையாது. (முஸ்லிம் - 2310) அல்லாஹ்வின் மீது சத்தியமாக எனக்கு எந்த ஒரு வார்த்தையாலும் ஏசியது கிடையாது சீ என்று கூட சொன்னதில்லை.(முஸ்லிம் 12622) நபி (ஸல்) அவர்கள் தான் கற்பித்தவர்களுக்கு மாணவர்கள் என்று பயன்படுத்தாமல் தோழர்கள் என்று பிரயோகித்தமை இங்கு கவனிக்கத்தக்கது. ஆசிரியர் தன்னோடு இரக்கமாக இருக்கிறார் என்ற எண்ணம், அவரிடம் எதனையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற தாராள மனப்பான்மை ஆசிரியருடனான நெருங்கிய உறவு மாணவர்களை அதிகம் கற்கத் தூண்டும்.

03 - பணிவு
ஒர்; ஆசிரியர்; அறிவைப் பெற்று அதில் வளர்ச்சி காணும்போது பணிவுஎன்ற பண்பும் அவருடன் சேர்ந்திருக்க்; வேண்டும். மாணவர்களில் பல தரப்பட்ட அறிவு மட்டங்களைக் கொண்டவர்கள் இருப்பார்கள். பலவீனமானவர்கள் விடயத்தில் கூடுதல் அக்கறை காட்டப்படல் வேண்டும்.

அபூ ர்pபாஆ (றழி) கீழ்வரும் சம்பவத்தைக் கூறுகின்றார்; நபி (ஸல்) அவர்கள் பிரசங்கம்; நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது நான் அவரிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே தனது மார்க்கம் எதுஎன்று தெரியாத அறிமுகமில்லாத ஒரு மனிதன் தனது மார்க்கம் பற்றிக் கேட்டு வந்திருக்கின்றான். என்றேன். உட்னே அவர்கள் தனது பிரசங்கத்தை நிறுத்தி விட்டு என்னிடம் வந்தார்கள் இரும்பிலான கால்கள் கொண்டதென்று நான் நினைக்க கூடிய ஒரு கதிரையும் கொண்டு வரப்பட்டது. அதிலே அவர்கள் அமர்ந்து அவருக:கு அல்லாஹ் கற்றுக் கொடுத்ததை எனக்குக் கற்றுத் தர தொடங்கினார்கள் பின்னர் பிரசங்கத்தை மீண்டும். தொடர்ந்து முடிவு செய்தார்கள். (முஸ்லிம் - 876) இதனால் தான் (ஸல்) அவர்கள் அவருக்காக எழுந்து நிற்பதையோ மன்னர்கள் போன்று கௌவரமளிக்கப்படுவதையோ விரும்பவில்லை.

04 - மாணவர்களைப் புரிந்து, அவர்களை இனங்காணல்
நபி (ஸல்) அவர்கள்; தனது தோழர்களின் பெயர்கள், அவர்களின் சிறப்புப் பண்புகள், அவர்களது கோத்திரங்களின் பெயர்கள் அவர்களின் பொருளாதார, சமூக, தனிநபர் விபரங்கள் போன்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார்கள். அத்தோடு சிறப்புத்; திறமைகள் கொண்டவர்களை அத் துறையிலேயே ஈடுபடுத்தியமையையும் அவர்களது வரலாற்றில் நாம் காணமுடியும் ஒவ்வொரு நபரோடும் பேசும் போதும் கூட்டாகச் செயற்படுத்தும் போதும் ஒரு செயலில்; ஈடுபடுத்தும் போதும் அவரது தனித் தன்மைகளை பேணியவகையில் அமைந் திருந்தததை அவதானிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் சில ஸஹாபாக்களுக்குச் சூட்டியிருந்த சிறப்புப் பெயர்களும் இதனைப்பிரதிபலிக்கின்றன. அபூ பக்ர் (றழி) அவர்களுடைய ஈமானியப் பலமே அவருக்கு ஸித்தீக் (உண்மைப்படுத்துபவர்) என்றும் உமர் (றழி) அவர்களின் சத்தியத்தின் மீதான உறுதியே அவருக்கு 'பாரூக்' (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுபவர்) என்றும், காலித் இப்னு வலீத் (றழி) அவர்களின் வீரமே அவருக்கு 'ஸைபுல்லாஹ' (அல்லாஹ்வின் வாள்) என்றும் நபியவர்கள் சிறப்புப்; பெயர்களை முன்வைப்பதற்கு காரணங்களாக அமைந்தன.

இதனை மேலும் வலியுறுத்துவதாக பின்வரும் ஹதீஸ் அமைகின்றது. எனது உம்மத்தில் எனதுஉம்மத்தின் மீது அதிக இரக்கமுடையவர் அபூபக்ர், அல்லாஹ்வின் மார்;க்கத்தின் விடயத்தில் மிகுந்த உறுதியோடு நடந்து கொள்பவர் உமர். உண்மையாக அதிக வெட்க உணர்வுஉடையவர் உஸ்மான், மிகச் சிறந்த தீர்ப்பு வழங்குபவர் அலிஇப்னு அபீதாலிப் அல்லாஹ்வின் வேதத்தை சிறப்பாக ஓதுபவர் உபைஇப்னு கஅப், ஹலால், ஹராம் விடயங்களில் மிகவும் அறிவுடையவர் முஆத் இப்னு ஜாபல், வாரிசுரிமைச் சட்டங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவுள்ளவர் ஸைத் பின் ஸாபித், நிச்சயமாக ஒவ்வொரு சமூகத்தினருக்கும் நம்பிக்கையாளர் ஒருவர் இருப்பார் இந்த சமூகத்தின் நம்பிக்கையாளர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (றழி) ஆவார். (இப்னு மாஜா - 125)

மாணவர்களின் தனித் திறமைகளையும் ஆர்வத்தையும் கருத்திற் கொண்டு, அவர்களுக்குரிய துறைகள் தீர்மானிக்கப்படல் வேண்டும் என்ற தற்கால கல்விச் சிந்தனையை நபி (ஸல்) அவர்கள் செயற்படுத்திக் காட்டியுள்ளமை இங்கு ஈன்று நபி (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறைமைகள்
இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட இறையறிவை தனது தோழர்களுக்கு மத்தியில் பரப்புவதற்கு பல்வேறு கற்பித்தல் முறைமைகளைப் பயன்படுத்தினார்கள் அவர்கள் உபயோகித்த அந்த உத்திகளும் வழிமுறைகளும் சீரிய முறையில் அறிவைப் பரப்பத் துணை நின்றன. அவற்றுள் மிக முக்கியமானவற்றைக் கீழ்வருமாறு தொகுத்துத் தருகின்றோம்:

01 - மாணவர்களிடம் வினாத் தொடுத்தல்
மாணவர்களின் அறிவு பெறும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவும் அவர்களின் கவனத்தை கற்றலின்பால் ஒருமுகப்படுத்துவதற்காகவும், முதலில் அவர்களிடம் கேள்வி ஒன்றைக் கேட்பது சிறந்த கற்பித்தல் உத்தியாகக் கருதப்படுகின்றது. இறைதூதர் (ஸல்) அவர்கள் இந்த முறையைப் பல்வேறு இடங்களில் பிரயோகித்துள்ளார்கள்.

'வாங்குரோத்து நிலையை அடைந்தவன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?..' (முஸ்லிம் - 2581)' புறம் பேசுதல் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?.. (முஸ்லிம் - 2589) இது எத்தகைய (சிறப்புமிக்க) நாள் என்று உங்களுக்குத் தெரியுமா? (புகாரி- 1654)
02 - கேள்வி கேட்கத் தூண்டுதல்
இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்கள் கேள்வி கேட்பதை வரவேற்றார்கள் அவர்கள் தொடுக்கும் வினாக்களுக்குரிய தெளிவை வழங்குவதோடு மாத்திரமன்றி அவர்களின் உள்ளத்தில் மேலதிகமாக எஞ்சியிருக்கும் சந்தேகங்களுக்கும் சேர்த்து நபியவர்கள் விளக்கம் தருவார்கள்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் அல்லாஹ்வின் தூதரே நாம் கடலில் பயணம் செய்யும் வேளையில் சிறிதளவு தண்ணீரைக் கொண்டு செல்கின்றோம். நாங்கள் அதனைக் கொண்டு வுழூ செய்தால் எங்களுக்குத் தாகத்தின் போது தண்ணீரில்லாது போய்விடும் அவ்வேளையில் நாம் கடல் நீரைக் கொண்டு வுழூ செய்யலாமா? எனக் கேட்டார். அதற்கு இறைத் தூதர் (ஸல்) 'அதன் நீர் மிகத் தூய்மையானது அதிலுள்ளவை இறந்தாலும் ஹலாலானது என்று பதில் கூறினார்கள்' (புகாரி - 69)
ஹஜ்ஜிக்காக இஹ்ராம் கட்டியவர் எதனை அணிய வேண்டும் என ஒரு மனிதர் நபியவர்களிடம் வினவிய போது அவர் சட்டை, தலைப்பாகை, காற்சட்டை வாசனைத் திரவியம் அல்லது குங்குமம் பூசப்பட்ட உடை. (புகாரி - 134, முஸ்லிம் -1177) என மேலதிகமான பல விளக்கங்களையும் முன்வைக்கின்றார்.
03 - தெரியாததைச் சொல்லாது தவிர்த்தல்
நபி (ஸல்) அவர்கள் அல்லாவுடைய வஹியைப் பெற்று அறிவிக்கின்ற இறுதி நபியாக இருந்தும் கூட தனக்குத் தெரியாத விடயத்தைத் தெரியாது எனக் கூறுவதற்கு வெட்கப்படவில்லை.
நபி அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே எனது செல்வத்தில் நான் என்ன செய்யட்டும்? எப்படி செல்வத்தின் கடமைகளை நிறைவேற்றுவது? எனக் கேட்ட போது வாரிசுச்சொத்துப் பற்றிய இறைவசனம் இறங்கும் வரை அவர்கள் எனக்குப் பதிலேதும் சொல்லவில்லை என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (றழி) கூறுகிறார்கள்.
(புகாரி - 6723, முஸ்லிம் - 1616)
ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே மோசமான ஊர் எது? எனக் கேட்டார். அதற்கவர்கள் எனது இரட்சகனிடம் கேட்டுச் சொல்லும் வரைஎனக்கு ஏதும் தெரியாது என்றார்கள். ஜிப்ரில் (அலை) அவர்களிடம் வந்தபோது அவரிடம் மோசமான ஊர் எது? என வினவினார்கள் (அஹ்மத் - 16302)
ஹதீஸ் ஜிப்ரீல் எனப் பிரபல்யமான ஹதிஸிலும், மறுமை நாள் எப்போது வரும்? என ஜிப்ரீல் (அலை) நபியவர்களிடம் வினவ கேள்வி கேட்பவரை விட கேட்கப்படுபவர் இது பற்றி அதிகம் அறிந்தவரில்லை எனப்பதிலிறுத்தார்;

04 - மீட்டி மீட்டிச் சொல்லுதல்
நபி (ஸல்) அவர்கள் அழகாகவும் தெளிவாகவும்; பேசுவார்கள் அவர்களது வார்த்தைகள் தெளிவுமிக்கவையாக அமைந்திருக்கும் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய இடங்களில் சுருக்கமாகச் சொல்வார். தேவையேற்படின் மீட்டி மீட்டிச் சொல்வார்கள் மாணவர்களிடம்; ஆழமாகப்பதிய வைப்பதற்கு இம்முறைமை பயன்படுத்தப் படுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் பேசும் போது அதனை எண்ணிப் பார்த்தால் எண்ணிக் கொள்ள முடியுமானதாக அமைந்திருக்கும் என்று ஆயிஷh (றழி) அவர்கள் கூறுகின்றார்கள் (புகாரி - 3567) 'அவன் நாசமாகிப் போகட்டும் (மூன்றுமுறை) அல்லாஹ்வின் தூதரே அவன் யார்? என வினவப்பட்டது அதற்கவர் யாருக்கு பெற்றோர்களில் ஒருவரோ இருவருமோ வயது முதிர்ந்த நிலையில் கிடைத்துஅதன் மூலம் அவர் சுவர்க்கம் போகாதவர் எனப் பதில் கூறினார்கள்' (முஸ்லிம் - 3551)

சிலNபுhது அல்hஹ்வின் மீது சத்தியமாக என்ற வாசகத்தையும் இணைத்து மூன்று முறை கூறியுள்ள ஹதீஸ்களையும் நாம் காணலாம்.

05 - உரையாடல், கலந்துரையாடல்
இன்றைய கல்விச் சிந்தனைகளுள் மாணவர் மையக்கல்வி மிகவும் முக்கியமானது அதிலும் மாணவர்களும் கற்றல் செயற்பாடுகளில் ஆசிரியரோடு கலந்துறவாடி (inter active) அறிவுபெறல் பிரதானமான தாகும். இறுதித் தூதர் (ஸல்) இந்த முறைமையை உபயோகித்திருக்கிறார்கள்.

ஜிப்ரீல் (அலை) மனித உருவில் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்துசில கேள்விகள் கேட்பதும் பின்னர் அதற்குப் பதிலளிப்பதுமாக அமைந்த ஹதீஸு ஜிப்ரீலின் இறுதிப் பகுதியில் இவர் ஜிப்ரீல் உங்களது மார்க்கத்தை உங்களுக்குத் கற்றுக் கொடுப்பதற்காக வந்தார். என வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நபி (ஸல்) அவர்களின் எல்லாக் கட்டங்களிலும் போல கலந்துரையாடல் (ஷ{றா) அமைந்திருந்தததைப் பார்க்கலாம். அவர்களது அரசியல்ஷ, சமய, போர்ச்சூழல், தனிநபர் வாழ்வியல் அனைத்து பகுதிகளிலும் இது செயற்பட்ட முறையை அவரது சரித்திரத்தின் பக்கங்கள் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

6 - உதாரணம் கூறி விளக்குதல்
இறுதி நபி (ஸல்) அவர்கள் தமது ஹதீஸ்கள் பலவற்றில் குறிப்பிட்ட விடயத்தை விளக்குவதற்கு உதாரணங்களை முன் வைத்துள்ளமையைக் காணலாம். மாணவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் இம்முறைமை உதவுகின்றது.
முஃமினை ஈச்சமரத்துக்கும் (புகாரி - 61) சமூகத்தை கப்பலுக்கும் (புகாரி - 2540) தீய பண்பு கொண்ட நண்பனை கரி ஊதும் கொல்லனுக்கும் (புகாரி-5214) ஒப்பிட்டு வந்துள்ள ஹதீஸ்களை இதற்கு சான்றாகக் கூறலாம்.

07 - காட்சிப்படுத்தல்
ஒரு விடயத்தை விளக்க முனையும் போது அங்க அசைவுகளாலேயோ அல்லது குறிப்பிட்ட பொருட்களை நேரடியாக எடுத்துக் காட்டுவதினூடாகவோ மாணவர்கள் உள்ளங்களில் நன்கு பதிப்பிக்க முடியும் நபி (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறையில் இதனையும்; நாம்; அவதானிக்கலாம் தற்காலத்தில் கல்வியியலாளர்கள் மிகவும் வலியுறுத்திச் சொல்லும் ஒரு முறைமையாக இது காணப்படுகின்றது. உதாரணமாக யானை என்பதை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி, எழுதிக் காட்டலாம். வரைந்து காட்டலாம், அதன் படத்தைக் காட்டலாம். அதனை நேரடியாகக் காட்டலாம் இவற்றுள் நான்காவது முறையே மாணவர்களுக்கு சிறப்பானதுவும் தாக்கம் விளைவிக்க கூடியதும் (Effective) ஆகும்.
ரசூல்லாஹ் (ஸல்) அவர்கள் நானும் அநாதையை ஆதரிப்பரும் சுவர்க்கத்தில் இவ்வாறிருப்போம் என தனது சுட்டு விரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள் (புகாரி, முஸ்லிம்)

ரசூல் (ஸல்) அவர்கள் தனது இடது கையில் பட்டையும் வலது கையில் தங்கத்தையும் எடுத்து, கைகளை உயர்த்திக் காட்டி இவை இரண்டும்; எனது சமூகத்தின் ஆண்களுக்கு ஹராமானவை பெண்களுக்கு ஹலாலாவை என்றார்கள் (அபூ தாவூத், நாஸாயி, இப்னு மாஜா, அல்ஜாமி உஸ் ஸகீர் - 2274)

08 - செயற்படுத்திக் காட்டல்
மாணவர்கள் எப்போதும் செயற்பாட்டு மாதிரியை (Model) விரும்புவார்கள் அறிவைப் பெறுவதற்குரிய பலம்பொருந்திய ஒரு முறையாக இது இன்று கையாளப்படுகின்றது. உண்மையில்; நபி (ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதும் ஒரு செயற்பாட்டு மாதிரியேயாகும். எவ்வாறு அமுல்படுத்துவது என்பதற்குரிய நடைமுறை ரீதியான வழிமுறைகளை இறைதூதர் (ஸல்) அவர்கள் செயற்படுத்திக் காட்டினார்கள் அதுவே சுன்னா என்ற அமைப்பில் முஸ்லிம் சமூகத்தால் கௌரவமாக மதித்துச் செயற்படுத்துகின்ற அவர்களின் வாழ்வுமுறையாக அமைந் துள்ளது. குறிப்பாக சிலஅடிப்படைக் கடமைகளில் வெளிப்படையாகவே இக்கருத்தை நபியவர்கள் தெளிவுப்படுத்தி யுள்ளார்கள். 'நான் எவ்வாறு தொழுவதை நீங்கள் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' (புகாரி) 'ஹஜ்ஜினுடைய கிரியைகளை நீங்கள் என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்' (முஸ்லிம்)

09 - செயற்பட வைத்தல்
இன்றைய கல்விச் சிந்தனைகளில் செயற்பாட்டு அறிவை (Practical knowledge) வளர்த்தல் முக்கிய விடயமாகக் கருதப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இத்துறையில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள் இஸ்லாம் வெறுமனே ஒருகோட்பாடாக மாத்திரம் இருந்து விடாமல் மனித வாழ்வில் செயற்படுத்த முடியுமான ஒரு மார்க்கமாக அது மாற வேண்டும் என்பதில் இறுதி நபி (ஸல்) கவனமாக இருந்தார்கள் அதனால் அல்லாஹ்வினதும் அவனதுதூதரினதும் கட்டளைகளும் போதனைகளும்; ஸஹாபாக்களின் வாழ்வில் அரங்கேறின.

நபி (ஸல்) ஒரு மனிதனை மூன்று முறை மீட்டி மீட்டித் தொழச் செய்தார்கள் அம்மனிதன் இறுதியில் அல்லாஹ்வின் தூதரே எனக்குத் கற்றுத் தாருங்கள் என்று கூறினான்.

10 - தவறு செய்பவர்கள், குறைவிடுபவர் களோடு நடந்து கொள்ளும் முறை
மாணவர்கள் மத்தியில் அறிவுமட்டத்தில் குறைபாடுள்ளவர்கள் உளவியல் பாதிப்புக் குள்ளானவர்கள் சோம்பலினால் தவறு விடுபவர்கள் என பலதரப்பட்டவர்கள் இருக்க முடியும் இத்தகையவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் நபி(ஸல்) அவர்கள் முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.

ஆயிஷh (றழி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்: அறப் போராட்டங்களின் போதன்றி வேறு எந்த வேளையிலும் அல்லாஹ்வின் தூதர் தனது கரத்தால் ஒரு பெண்ணுக்கோ பணியாளருக்கோ எதற்கும் அடித்ததுகிடையாது (முஸ்லிம் - 2328)

கஃப் இப்னு மாலிக் தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாது பின்வாங்கிய போது, நபி (ஸல்) அவர்கள் யுத்தத்திலிருந்து திரும்பி வந்ததும் கஃப் அவரைச் சந்தித்த வேளை என்ன நடந்தது என்பதை அவரே கூறுகின்றார். 'நான் அவர்களிடம் சென்றபோது அவர்கள் கோபத்துடன் புன்முறுவல் பூத்தார்கள்'
(புகாரி - 4156)

நபி (ஸல்) அவர்கள் தனது பள்ளிவாசலில் இருந்த போது ஒரு நாட்டுப்புற அறபி அங்கு வந்து, பள்ளிவாசலுக்குள் சிறுநீர்க்கழிக்கத் தொடங்கினார். அவரது தோழர்கள் நிறுத்து, நிறுத்து என்றார்கள். இறைதூதர் (ஸல்) அவர்கள் அவரை விடுங்கள் என்றார்கள் அவர் சிறுநீர் கழித்து முடியுமட்டும் ஸஹாபாக்கள் பேசாதிருந்தார்கள் அந்த சிறு நீரின் மீது தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றும்படி தனது தோழர்களுக்குப் பணித்துவிட்டு, அந்த நாட்டுப்புற அறபியை அருகில் அழைத்து இப்படியான பள்ளிவாசல்கள் சிறுநீர் அசுத்தங்களுக்குரிய இடங்களன்று இவை அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதற்கும் தொழுவதற்கும் அல்குர்ஆன் ஓதுவதற்கும் .. உரிய இடங்களாகும். என இங்கிதமாக எடுத்தியம்பினார்கள் (முஸ்லிம் - 285)

ஓர் இளைஞன் நபியவர்களிடம் தனக்கு விபச்சாரம் செய்வதற்கு அனுமதி தருமாறு கேட்டான், நபித் தோழர்கள் அவரை அச்சுறுத்தினார்கள் உடனே இறுதி நபி (ஸல்) அவர்கள் அவனை நோக்கி நெருங்கி வரச் சொன்னார்கள் அவனும் சிறிது நெருங்கி வரவே அவர்களுடன் கூட அமரச் சொன்னார்கள் அமர்ந்ததும் நீ விபச்சாரத்தை உனது தாயாருடன் விரும்புவாயா? எனக் கேட்க அல்லாஹ்வின் மீது ஆணையாக இல்லை என்றான் உனது புதல்வியுடன் விரும்புவாயா? எனக் கேட்டார்.. பின்னர் அல்;லாஹ்வே இவரது பாவத்தை மன்னிப்பாயாக, உள்ளத்தை தூய்மை படுத்துவாயாக கற்பை உறுதிப்படுத்துவாயாக எனவும் பிரார்த்தித்தார்கள் (அஹ்மத் - 21708)

எனவே மிகவும் நிதானமான அன்னியோன்யமான வழிமுறைகள் மூலமே குறைவிடுபவர்கள், தவறிழைப்பவர்கள் சீர்செய்யப் பட்டார்கள் என்பதை இவற்றிலிருந்து புரியலாம்.
முடிவுரை:
முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டியா வார்கள் அந்த வகையில் கல்வித் துறைக்கும் அவர்களது வழிகாட்டல்கள் மிகவும் சிறப்புடையன அவை இறைவழிகாட்டல்கள் மூலம் பெறப்பட்டவை அமுல்படுத்தி, பரீட்சிக்கப்பட்டு வெற்றியளித்தவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் இத்தகைய முறைமைகளை நடை முறைப்படுத்துவது சுன்னாவைப் பின்பற்று வதுவுமாகும். அதனால் உலகில் அபிவிருத்தி உண்டாவதோடு மறுமையிலும் அபரிமிதமான நன்மைகள் கிடைக்கப் பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
-நன்றி நகர்வு இதழ்

சனி, ஜனவரி 21

அவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான் உங்களை உயர்த்தற படிக்கட்டுகள் - சகோதரி ரைஹானாஅவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான் உங்களை உயர்த்தற படிக்கட்டுகள் - சகோதரி ரைஹானா'ஒரு படி மட்டன் பிரியாணி 1,100 ரூபாய்... கோழி பிரியாணி 1,000 ரூபாய்..! எலும்பு, கத்தரிக்காய், பருப்பு போட்ட தாழ்ச்சா, ரெய்தா இலவச இணைப்பு!'- அமர்க்களமாக அசத்திக்கொண்டுஇருக்கிறது, மதுரை கே.கே.நகரிலிருக்கும் ரைஹானாவின் 'எம்.எஸ்.ஆர். கேட்டரிங் சர்வீஸ்'! 'அதென்ன வித்தியாசமா படி கணக்கு..?' என்று ஆர்ச்சர் யத்துடனேயே ஆரம்பித்தோம் ரைஹானாவிடம்.

"சிறியவர், பெரியவர், முதியவர்னு கலந்துக்கற விசேஷங்கள்ல தலை கணக்கோ, இலை கணக்கோ, பிளேட் கணக்கோ சார்ஜ் செஞ்சா வீட்டுக்காரருக்கு நஷ்டம்தான் வரும். படி கணக்குங்கறது, நியாயமான விலையில நிக்கும். அதாவது, ஒரு படி பிரியாணி அரிசி, ஒண்ணரை கிலோ எடையிருக்கும். அதுக்கு ஒண்ணரை கிலோ தனிக்கறி, அதோட தரமான வீட்டு நெய், அவ்வப்போது தயார் செய்ற மசாலா... இத்தனையும் சேர்ந்ததுதான் ஒரு படி பிரியாணி.

வெறும் பிரியாணி மட்டும்னா ஒரு படி பிரியாணியை பதினஞ்சு பேர் வரை சாப்பிடலாம். நிறைய சைட் டிஷ், ரசம் சாதம், தயிர் சாதம்னு இருந்தா, இருபத்தி அஞ்சு பேர் வரை சாப்பிடலாம்!" என்று கணக்கு சொல்லும் ரைஹானா, கொடைக்கானலில் விவசாயத்துறையில் தொடர்ந்து 13 முறை விருதுகள் வாங்கிய 'கரிக்கல் எஸ்டேட்' உரிமையாளர் முகமது சுலைமான் ராவுத்தரின் மூத்த மகள்.

மூன்று சகோதரிகளுடன் பிறந்த ரைஹானாவுக்கு, சமையல் விருப்பமான ஒன்று! சிறு வயதிலேயே அவர் செய்யும் பிரியாணி, தாழ்ச்சா, ரெய்தா காம்பினேஷனுக்கு உறவினர்கள், நண்பர்களின் நாக்கு அடிமை! ஆனால், அவருடைய சமையல் சுவைத்த அளவுக்கு, வாழ்க்கை சுவையாக அமையவில்லை! குடும்பநல கோர்ட் படியேற வைத்துவிட்டது.


"ஒன்பதாம் வகுப்பு முடிச்ச அடுத்த ஆறே மாசத்துல எனக்குக் கல்யாணம். அடுத்த ஆண்டே முதல் பையன்... தொடர்ந்து ரெண்டு பையன்கள்! முப்பத்தேழு வயசுல என்னோட வாழ்க்கையை நானே, நான் மட்டும் சந்திக்க வேண்டிய கட்டாயத்துல சிக்கிட்டேன். அதுவரை எனக்கு பாதுகாப்பா இருந்த அப்பாவும் இறந்துபோக... சொத்து சம்பந்தமான வழக்குகளை சந்திக்கவேண்டியிருந்தது. இன்னொரு பக்கம், குழந்தைகளோட படிப்பும், அவங்க வளர வளர சேர்ந்து வளர்ந்த செலவுகளும் என்னை சுழற்றியடிக்க... ஏற்கெனவே கைவசம் இருந்த 'ஆப்டிக்கல்' கடை மூலமா வந்த வருமானம் அதுக்கு ஈடுகொடுக்க முடியாம திணற... ஒருவழியும் தெரியாம தவிச்சேன். எந்த ஓடத்தப் பிடிச்சு கரையேறலாம்னு யோசிச்சப்போ, 'சமையலைத் தவிர ஒண்ணும் தெரியாத நம்மளால, என்ன பண்ணிடமுடியும்'னு மனசு சோர்வாச்சு. ஆனா, 'அந்த சமையலையே தொழிலா செஞ்சா என்ன?'னு சடார்னு மனசுக்குள்ள வெளிச்சம் வர, தெரிஞ்சவங்க வீட்டு விசேஷத்துக்கு சமைச்சுக் கொடுக்கறதுனு முடிவு பண்ணி, கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பிச்சேன்.

"ஒரு நாள் சித்திரை திருவிழாவப்போ ஃப்ரெண்ட் ஒருத்தவங்ககிட்ட இருந்து போன். 'திருவிழாவுக்கு திடீர்னு வீட்டுக்கு விருந்தாளிங்க வந்துட்டாங்க... சைவ சாப்பாடு சமைச்சுக் கொடு'னு சொல்ல, அதுதான் ஆரம்பம். பிறகு... கற்கண்டு சாதம், வெஜிடபிள் ரைஸ், ஃப்ரைடு ரைஸ்னு சைவம்; பிரியாணி, சிக்கன் மசாலா, சுக்கா, மட்டன் மசாலா, மதுரை ஸ்பெஷல் தலைக்கறி இறால்னு அசைவம்... இது ரெண்டுலயும் ஏகப்பட்ட மெனுக்களோட வளர்ந்து நிக்குது இந்தத் தொழில்'' என்று ரைஹானா சுருக்கமாக சொன்னாலும், அவரின் ஆழ்மன நெருப்புக்கும்... அடுப்போடு சேர்ந்து கொழுந்துவிட்ட அவரின் வைராக்கியத்துக்கும் கிடைத்த பெருவெற்றி இது என்பது நமக்கு நன்றாகவே புரிந்தது!

'டச்சிங் த ஹார்ட் த்ரூ த ஸ்டொமக் (Touching the heart through the stomach) என்பதுதான் ரைஹைனாவின் பிஸினஸ் மந்திரம். தரமாக, சுத்தமாக, சுவையாக, வீட்டு முறையில் சமைத்ததால் விரிந்திருக்கும் அவரின் வாடிக்கையாளர் வட்டத்துக்கு, ரைஹானாவின் சமையல் போலவே விலையும் சுவையாகத்தான் இருக்கிறது. பிரியாணிகள் படி கணக்கு. சைடு டிஷ்கள், கிரேவிகள் கிலோ கணக்கு. ஒரு கிலோ ஆட்டுக்கறியில் எந்த உணவு தயார் செய்தாலும் விலை ரூ.350. கோழிக் கறி என்றால் ரூ.250. ஒரு கிலோவுக்கு விலை.

அலுவலகப் பெண்களின் அவசர சமையலுக்கான வத்தல், வடகம், ஊறுகாய் வகைகளுடன் புளியோதரை சாதம், தக்காளி சாதம், பூண்டு சாதம், வத்தக் குழம்பு, மல்லி சாதம், கறிவேப்பிலை சாதம், புதினா சாதம், வெங்காய சாதம், உடனடி முட்டை மசால், ரசம் ஆகியவை பேஸ்ட் வடிவத்திலும், உடனடி பிரியாணி, சில்லி சிக்கன் மசாலா, கிரேவி போன்ற இன்ஸ்டன்ட் வகைகளையும் தயாரித்து விற்கிறார். இருந்தாலும், அவரின் கேட்டரிங் அயிட்டங்களுக்கு, இந்த இன்ஸ்டன்ட்களை அனுமதிப்பது இல்லை!

"இன்ஸ்டன்ட் என்பது இயலாதவங்களுக்குத்தான். நாக்குக்கு ருசியா சாப்பாடு வேணும்னா அப்பப்போ வறுத்து, அரைச்சுதான் சமைக்கணும்!" என்று சிரிக்கும்  ரைஹானா, நிறைவாகச் சொன்னது.

'' 'அவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான் உங்களை உயர்த்தற படிக்கட்டுகள். நம்மள அவமானப்படுத்தினவங்க முன்னால நாம வாழ்ந்து காட்டணும்ங் கற வேகம், உறுதி, பிடிவாதம் பெண்களுக்கு கண்டிப்பாக தேவை'னு ஒரு கூட்டத்துல கேட்ட வாசகங்கள்தான்... இன்னிக்கு வரை என்னை தெம்போட வலம் வர வெச்சுக்கிட்டிருக்கு!''

-- 
With Best Regards,

Umar Farook

from Tamil Muslim Brothers Google Groups

ஞாயிறு, ஜனவரி 15

அல்லாஹ் பெயரால் பதவிபிரமாணம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


அல்லாஹ் பெயரால் பதவிபிரமாணம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
"அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம் எடுத்தது அரசியல் சட்டப்படி செல்லும்" என அதற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு தொடுத்தவர்மீது 1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக சையதுஅஹ்மது "அல்லாஹ் கே நாம் பர்" (அல்லாஹ் வின் திருப்பெயரால்) என்று கூறி பதவிபிரமாணம் செய்தார். அரசியல் சட்டப் பிரிவு 159ன் கீழ் அல்லாஹ் பெயரால் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி கமல் நாயன் பிரபாகர் என்ற மாணவர் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு தொடுத்த அந்த மாணவர் சமூகங்களில் வேற்றுமையை ஏற்படுத்த முனைகிறார் என்றும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியது. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவர் கமல் நாயன் பிரபாகர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோ பாத்தியாயா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

அவர்களுடைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"அரசியல் சட்டப் பிரிவு 159, ஒரு ஆளுநர் கடவுளின் பெயரால் அல்லது உளமாற உறுதி அளிக்கிறேன் என்று கூறிபதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கிறது. ஜார்கண்ட் கவர்னராக சையது அஹ்மது 'அல்லாஹ் பெயரால்' பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரது செயல் அரசியல் சட்டப் பிரிவு 159-ன் கீழ் எதிரானது அல்ல. அல்லாஹ் பெயரால் ஆளுநர் பதவி ஏற்றுக்கொண்டது அரசியல் சட்டப்படி செல்லத் தக்கதாகும்.

வழக்கு தொடர்ந்திருப்பவர் தீய எண்ணத்தோடு இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாக கருத இடம் இருக்கிறது. உலகம் முழுவதும் கடவுள் உருவமற்றவராகவே கருதப்படுகிறவர். அப்படி இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட உருவத்தின் பெயரால் ஆளுநர் பதவிப் பிரமாணம் ஏற்றிருக்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 159-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட கடவுள் வடிவங்களை மட்டும் கட்டுப்படுத்தாது. கடவுள் என்ற வார்த்தை அரசியல் சட்டப் பிரிவு 159-ல் மதசார்பற்ற முறையிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்திருப்பவர் கடவுள் என்ற வார்த்தையை ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது உருவத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று விவாதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம். கெட்ட நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதால் வழக்குதொடர்ந்திருப்பவர் 1லட்ச ரூபாய் செலவுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறோம்."
இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

-க.கா.செ(பிறைமேடையிலிருந்து)

திங்கள், ஜனவரி 9

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மைஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை


வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.
 இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும். அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்டகோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.
* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன்டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்'செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

சனி, ஜனவரி 7

Islam chat-நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு பயணம்


Islam chat-நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு பயணம்

புரிந்தவர்கள் போற்றுகிறார்கள், 
பிடித்தவர்கள் தழுவுகிறார்கள், 
புரியாதவர்கள் குழம்புகிறார்கள், 
பிடிக்காதவர்கள் தூற்றுகிறார்கள். 

இதுதான் இன்று இஸ்லாம் நோக்கியுள்ள காட்சிகள். 
எங்கே தெளியும் என்று ஏக இறைவனுக்கே வெளிச்சம் 
உடனே டக்குனு I Accept Islam அப்படினு சொல்லி ஜாகிர்நாயக் முன்னிலையிலோ சவுதி பேரரசிலோ தனது விருப்பத்தை தெரிவித்து கலிமா சொல்லிவிடுகிறார்கள்.
எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் குர்ஆன் படிக்கும் வாய்ப்பு கிடைத்து ஆள் எஸ்கேப் From Eternal Life's Punishment. 
பாவம் சில பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் நரக நெருப்புக்கு முழு உடலையும் தானம் செய்து விடுகிறார்கள். 
அந்த அளவுக்கெல்லாம் நமக்கு தியாகம் செய்ய முடியாதுப்பா.

Wayne Parnell, Cricket Player இஸ்லாத்தை தழுவியதை சமீபத்தில் படித்திருப்பீர்கள். ஆனால் எனக்கு தெரியாது, லேட்டாதான் அறிந்தேன். (தமிழ் வாழ்க)
ஜனவரியில் தழுவினார், ஜூலையில் அறிவித்தார். இரண்டுமே 2011ல்தான்...விளையாட்டு பிள்ளைதானே....விளையாட்டாய் சொல்றாங்களோ என்னவோனு கூட...
அதன் நிமித்தமாக.....
You tube ல்அந்த Player ரின் Video Play பன்னி பார்க்கும்போது, இறுதியில் ஒரு இணையமுகவரியை பரிந்துரைத்தார். அது ஏற்கனவே பிரபலமான ஒன்று என்றாலும், எனக்கு தெரியாமல் போனது ஒரு பிராப்ளம்தான். 

அந்த இணைய முகவரிதான் இது


இஸ்லாம் என்ற வெளிச்சத்திலிருந்து விலகி இருப்போருக்கு இஸ்லாத்தில்இணைய இந்த இணையம் கூட காரணமாகலாம். 
இதை அவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் நாமும் ஒரு மூலகாரணமாகலாம். 
அப்பறம் என்ன கியாமத் டேய்ஸ்ல ஒரே ஜாலிதான் :-)
எனக்கும் ஒரு ப்ளாக் இருந்தால் இதை அதில் டிஸ்ப்ளே பன்னுவேன். இப்ப இங்கே Supply பன்றேன்.

நானும் இந்த சைட்ல போயி பார்த்தேனே..,Live Chat la போனவுடனே ஒருத்தங்க வந்து Welcome பன்றாங்க. ஒரு வேள அல்ரெடி Auto Message சா இருக்குமோனு Typical ல இல்லாமல் ஒரு டைப்பா சில கேள்விகள் கேட்டு பாத்தேன். கரெக்ட்டான ரியாக்‌ஷந்தான் வந்துச்சு. 
Non Muslim க்குதான் அங்கே முக்கியத்துவம், நான் முஸ்லீம்தானே Non Muslim இல்லையே.... அதனால் அயம் எஸ்கேப் From there.

Non Muslim & New Muslim களுடன் இஸ்லாம் குறித்து சந்தேகங்கள் குறித்து சாட்டிங்க பன்றதுக்கு 24 நேரமும் யாராவது காத்துகிட்டு இருக்காங்க. 
மாஷாஅல்லாஹ். அருமையான சேவை. இதை அப்படியே பாஸ் பண்ணினால், மறுமையில் நாம் பாஸ் இன்ஷாஅல்லாஹ்...

_______________________
என் நண்பன் மெயிலில் எனக்கு supply பண்ணத நான் என் ப்ளாக்கில் டிஸ்ப்ளே பண்றேனுங்க :-)

-சகோதரி.ஆமினா

வெள்ளி, ஜனவரி 6

உலகின் 5 மிகச்சிறிய நாடுகள்!


உலகின் 5 மிகச்சிறிய நாடுகள்!


1. வாடிகன் நகரம்

அளவு: 0.17 சதுர மைல். (0.44 கி.மீ.)

மக்கள் தொகை: 783 (2005 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி)

இடம்: ரோம், இத்தாலி_______________________________________________________________2. மொனாக்கோ

அளவு: 0.8 சதுர மைல். (1.96 கி.மீ.)

மக்கள் தொகை: 35,657 (2006 மதிப்பீடு)

இடம்: மத்திய தரைப்பகுதியில் பிரஞ்சு ரிவியராவின்._______________________________________________________________3. நவ்ரூ

அளவு: 8 சதுர மைல் (21 கி.மீ.)

மக்கள் தொகை: 13,005 (2005 மதிப்பீடு)

இடம்: மேற்கு பசிபிக் பெருங்கடல்.

 

_____________________________________________________4. துவாலு

அளவு: 9 சதுர மைல். (26 கி.மீ.)

மக்கள் தொகை: 10,441 (2005 மதிப்பீடு)

இடம்: தென் பசுபிக்._______________________________________________________________5. சான் மரீனோ

அளவு: 24 சதுர மைல். (61 கி.மீ.)

மக்கள் தொகை: 28,117 (2005 மதிப்பீடு)

இடம்: அட்ரியாடி கடற்கரைக்கு அருகில் 
வடக்கு-மத்திய இத்தாலி.
நன்றி:http://wwwnathiyalai.blogspot.com/2011/12/5_26.html

ஞாயிறு, ஜனவரி 1

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-2
அறியாத சில விசயங்களை 
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-2

இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறார்.

* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.

* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.

* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.

* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.

* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.

* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.

* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.

* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.

*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.

*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.

*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.

*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.

அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.

*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரேசில், கொலம்பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும். 

*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின்றன.

*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.

*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும். 


ஜஸாக்கல்லாஹ்:
Engr.Sulthan
Mohammad Sultan
er_sulthan@yahoo.com