Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, டிசம்பர் 31

அழைப்புப் பணியே அனைத்திற்கும் தீர்வு!

அழைப்புப் பணியே அனைத்திற்கும் தீர்வு!
CMNசலீம்,சமூகநீதிமுரசு


பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் இந்திய நிலப்பரப்பிற்கு அறிமுகமாகிவிட்டது. இந்தியாவில் எண்ணற்ற மொழி பேசக்கூடிய மக்கள் வாழ்கிறார்கள். அதில் பல்வேறு மொழிகள் பாரம்பரியமும் பண்பாடும் இலக்கிய, இலக்கணச் செழுமைகளும் நிறைந்து காணப்படுகிறது.

ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் பேசிய மொழி நமது தாய்மொழியான தமிழ் என்று உலகளாவிய ஆய்வாளர்களும் பல்வேறு வரலாற்று, தொல்லியல், மொழியியல், மானுடவியல் அறிஞர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மிகத்தொன்மையான மொழிகளில் சமஸ்கிருதமும் இடம் பெற்றுள்ளது. வேதங்களும், உபநிடதங்களும் நிறைந்து இந்திய மக்களில் ஒரு பிரிவின் இறைவழிபாட்டு மொழியாக இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

இதுபோன்ற பல மொழிகளைச் சொல்லலாம். இஸ்லாம் அரபு மொழியில் அறிமுகமானாலும்கூட உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இஸ்லாம் அறிமுகமானபோது, அந்த அந்த பிராந்திய மொழிகளில் அல்குர்ஆனும், ஹதீஸ்களும், இஸ்லாமிய தத்துவங்களும் மொழியாக்கம் செய்யப்பட்டு அதன் வீரியமான கருத்துக்கள் மக்களின் உள்ளங்களில் ஊடுருவிச் செல்வதற்கு வழிவகுக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவில் மட்டும் தான் இந்த வேலைகள் நடைபெறவில்லை. தொடக்கத்தில் கீழக்கரையில் அரபுத் தமிழ் எனும் இரு மொழி வடிவில் அல்குர்ஆன் வெளியானது. ஆயினும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் அல்குர்ஆனின் சில அத்தியாயங்கள் தமிழிலேயே மொழியாக்கம் செய்யப்பட்டன. 20-ஆம் நூற்றாண்டில்தான் அல்குர்ஆன் முழுமையாக மொழியாக்கம் செய்யப்பட்டது. அதுவும் முஸ்லிம்களின் பெரும் எதிர்ப்புக்கிடையேதான் நடந்தது!

1400 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றிருக்க வேண்டிய ஒரு ஆக்கப்பூர்வமான வேலை 14 நூற்றாண்டுகள் கழித்து நடைபெற்றுள்ளது. இது அழைப்புப் பணியில் முஸ்லிம்களின் அலட்சியம் எந்த அளவிற்கு உள்ளது என்பதையே இந்தத் தேக்கம் காட்டுகிறது. இத்தகைய அலட்சியத்திற்கு நாளை இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அதே வேளை முஸ்லிம் அல்லாத மக்களுக்கு அல்குர்ஆனைக் கொடுக்கக்கூடாது என்று கூறும் “அறிவாளிகள்” சமுதாயத்தில் இன்னமும் உள்ளனர். மனித வாழ்வியல் வழிகாட்டி என்று இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்கள் நிராகரிப்பாளர்களிடம் தான் முதலில் ஓதி காட்டினார்கள். முஸ்லிம் அல்லாத அரசர்களுக்கு அல்குர்ஆன் வசனங்கள் எழுதி அனுப்பினார்கள். ஆனால் இங்கே முஸ்லிம் அல்லாதவர்கள், ஓத தெரியாதவர்கள் தொடலாமா? கூடாதா? என்கிற மண்டையைப் பிளக்கும் வெட்டி விவாதங்கள் நடைபெறுகின்றன.

காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பதை இதுபோல வீண் விவாதங்கள் நடத்தும் அறிஞர்களும் இதைப் போய் வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்து அதையே சிடிகளாக வாங்கிப் பார்த்து ரசிக்கும் சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் இஸ்லாத்தின் அனைத்துப் பண்பாடுசார்ந்த வாழ்க்கை நெறிகளை முஸ்லிம்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இன்றையகாலத்திற்கேற்ப இஸ்லாமிய மார்க்கத்தைப் பிற மக்களிடம் முன்னிறுத்தி இஸ்லாத்தின்பால் அழைக்கும் பணியை மிக வேகமாக நாம் செய்ய வேண்டும்.

இஸ்லாமியக் கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் பிற மக்களிடம் எடுத்துச் சொல்லி நம்மோடு சேர்ந்து பள்ளிவாசல்களில் வழிபாடு நடத்த அழைக்க வேண்டும். தினந்தோறும் தொழுகையிலும் நம்மோடு வாழும் முஸ்லிம் அல்லாதவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று தொழ வைக்க வேண்டும். நமது திருமணங்களை இஸ்லாமிய வழியில் நடத்துகின்ற போது?! கண்டிப்பாக அவர்களையும் அழைத்து இஸ்லாமிய திருமணங்கள் எவ்வளவு எளிமையானது என்பதை நேரில் உணர்த்த வேண்டும்.

மீலாது விழாக்கள் அதன் நோக்கம் சிதைந்துவிடாமல் அதிகம் அதிகம் நடத்தப்பட வேண்டும். அதில் முஸ்லிம் அல்லாத பிற அறிஞர்களைத்தான் அதில் பங்கேற்க வைக்க வேண்டும். அவர்கள் தப்பும் தவறுமாகப் பேசினாலும் பரவாயில்லை. அவர்களை நேர்வழி நடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் உள்ளது. தந்தைப் பெரியார் கலந்து கொண்ட மீலாது விழாக்கள் மூலம் கிராமம் கிராமமாக மக்கள் இஸ்லாத்தைத் தழுவிய வரலாறு தமிழகத்திற்கு உண்டு.

காஃபிர்களாக இருந்து சத்தியவழிக்கு மாறியுள்ள நாம் நம்மோடு காஃபிர்களாக உள்ளவர்களை அரவணைக்காமல் இருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

இன்னமும் “முஸ்லிம்கள்” என்று பெருமை பேசும் சிலர் நாங்கள் உயர்ந்த குலம் நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாரிசுகள் என்று வீண் பெருமை பேசி, சாதி, குலம், மொழி போன்ற இஸ்லாம் வெறுக்கின்ற காட்டுமிராண்டித்தனத்தை கடைபிடித்து வருகின்றனர். இவற்றை அடியோடு கிள்ளி எறிய வேண்டும்.

எந்த ஒரு முஸ்லிமும் மற்றொரு முஸ்லிமை விட சிறந்தவன் கிடையாது. சிறந்தவன் என்பதற்கு இறையச்சம் மட்டும்தான் அளவீடு என்று இறைவன் பறைசாற்றுகின்றான்.

முஸ்லிம்கள் மார்க்கப் பிடிப்புள்ள முஸ்லிம்களாக மாற மாற இஸ்லாத்தின் வீச்சும் வேகமும் அதிகரிக்கும்.

திருந்தினால் திரை விலகும்...!

திருந்தினால் திரை விலகும்...!
ஆக்கம்: ஆர். நூர்ஜஹான் ரஹீம் (கல்லை).

தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன்மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப்பேசிய ஜீனத்பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம் புரிந்தது ஜாபர்அலிக்கு.

"என்ன பாத்திமா, ஷாகிராவிடமிருந்து செய்தி வந்திருக்கா? என்ன சொல்றா உன் மக?"

"பேசியது நம்ம பொண்ணுதான்னு எப்படி கண்டு பிடிச்சீங்க!" கண்கள் மலர குழந்தைத் தனமாகக் கேட்டாள் பாத்திமா.

"இதென்ன பெரிய விஷயமா? ஷாகிராவை பெங்களூர் காலேஜ்லே சேர்த்ததிலிருந்து பார்த்துகிட்டு தானே இருக்கேன்.மககிட்டே பேசும்போது உன் முகத்தில் காணும் சந்தோஷத்தை!"

"இருக்காதாபின்னே! மூன்று பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே ஆசை மவளாச்சே. வருஷம் போனதே தெரியலைங்க.ஷாகிராவுக்கு எம்.சி.ஏ பரிட்சை ஆரம்பமாகப்போகுதாம்.முடிஞ்சதும் போன்செய்றாளாம்.. அழைத்துப்போக உங்களை வரச் சொன்னாள்."

"அதுக்கென்ன போயிட்டு வரேன்.சரக்கு எடுக்க சீக்கிரமாக போகணும்.டிபன் எடுத்து வை".

இரவு படுக்கையில் மெல்ல பேச்செடுத்தாள் பாத்திமா. எந்தக் குடும்ப விஷயமாக இருந்தாலும் இரவு நேரத்தில்தான் ஜாபர் அலி ஓய்வாக செவி கொடுத்து கேட்பார். மற்ற நேரங்களில் டென்ஷன் பார்ட்டிதான். 45 வருடதாம்பத்யத்திய அனுபவம் பாத்திமாவிற்கு.

"என்னங்க நம்ம பொண்ணுக்கு படிப்பு முடிஞ்சிப்போச்சு. இனி நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து கல்யாணம் நடத்திவிடுவதுதான் நல்லது. இப்போதே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிடுச்சிடுங்க. சரியா இருக்கும். "

"ஷாகிரா படிச்ச பொண்ணு. அவ படிப்புக்கு ஏற்ற மாப்பிள்ளையை நம்ப பிள்ளைங்கதான் பார்க்கணும். எனக்கு என்ன விபரம் தெரியும். அவங்க மூன்று பேரையும் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லி போனில் சொல்லிடு."

அடுத்து பேசுவதற்குள் குறட்டைச் சத்தம்தான் அவரிடமிருந்து பதிலாக வந்தது. கணவருக்கு வியாபார அலைச்சல் அதிகம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை...........

மூன்று மகன்களும் தொலைபேசி தொடர்பின் காரணமாக அவரவர்களுடைய விலையுர்ந்த கார்களில் முகமதியார்பேட்டை வந்து இறங்கினர். மகன்களை ஒருசேரக்கண்டதில் ஜாபர் அலிக்கு மட்டில்லா மகிழ்ச்சி. இருக்காதா பின்னே..........

படிப்பு,பதவி, பெரிய இடத்து மாப்பிள்ளைகள் என்ற அந்தஸ்த்து ஆகிய முகாந்திரம் எல்லாம் ஒரு சேரக்கண்டதில் பரம திருப்தி அவருக்கு.

மூத்த மகன் அப்துல் சலீம் பி.இ (சிவில்) படித்துவிட்டு சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் சலீம் கன்ஸ்ட்ரகஷன் தொழிலை நடத்திக்கொண்டு குடும்பத்துடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டான்.

இரண்டாவது மகன் அப்துல் மாலிக் பி.காம் முடித்துவிட்டு மதுரைஅரசு பதிவுத்துறை அலுவகத்தில் சார்பதிவாளராக பணிபுரிகின்றான்.மதுரைவாசியாகிவிட்டான்.

மூன்றாவது மகன் அப்துல் வஹாப் பி.எஸ்சி (கெமிஸ்ட்ரி) முடித்துவிட்டு திருச்சியிலுள்ள பால்வளத்துறை நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகின்றான். வீட்டு மாப்பிள்ளையாக இருக்கிறான்.

தங்கையின் திருமணப்பேச்சு சம்பந்தமான விவாதம் நடந்தது. எல்லோருடைய ஒட்டுமொத்தமான கருத்துக்களும் தங்களுடைய அந்தஸ்த்துக்கேற்ற பணக்கார மாப்பிள்ளையை தேடுவதில்தான் இருந்தது. ஜாபர் அலியின் விருப்பமும் அதுதான். தன் மகளுக்கு ஒழுக்க குணமுள்ள மாப்பிள்ளைதான் வேண்டும் என்ற ஜீனத் - பாத்திமாவின் வேண்டுகோள் எடுபடவில்லை. இறை நாட்டப்படி நடக்கட்டும் என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தன்கைமணச்சுவையோடு வயிறார உணவு பறிமாறி மகன்களை அனுப்பி வைத்தாள் பாத்திமா.

படிப்பு முடித்துவிட்டு வந்த மகளுக்கு வாய்க்கு ருசியாக வித விதமாகச் சமைத்துப் போட்டு மகிழ்ந்தாள் பாத்திமா. அண்ணன்கள் வந்ததையும் மாப்பிள்ளையைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்களும் தலையசைக்கும் தந்தையைப்பற்றியும் கூறினாள் பாத்திமா. அதைக்கேட்ட ஷாகிராவின் முகம் வாடியது.

"ஏம்மா, எல்லோரும் தீன் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்காங்க. அவர்கள் மார்க்கக்கல்வி படிக்கலையா?வாப்பாவும் அவர்கள் வழி செல்கிறாரே?"

"என்னம்மா செய்யறது, உன்னை மதரஸாவில் சேர்த்து படிக்க வைத்தது போலத்தான் அண்ணன்களையும் படிக்க வச்சேன். நீ கருத்தாகப் படிச்சே, பட்டப்படிப்பையும் இஸ்லாமியக்கல்லூரியிலேயே சேர்ந்து படிச்சதாலே தீன் பற்று உனக்கு அதிகமா இருக்கு. ஆனா உன் அண்ணன்கள் சரியா படிக்கலன்னா ஹஜரத் தலையில் ஓங்கிக் கொட்டுவார்னு சாக்கு சொல்லி படிக்காம நின்னுட்டாங்க. ஹஜரத் கொஞ்சம் கண்டிப்பானவர். ஓதுறதுல அசிரத்தையா இருந்தா அவருக்குக் கோபம் வரும். நம்ம நல்லதுக்குத்தானே!. வாப்பாகிட்டேயும் சொல்லிப் பாத்துட்டேன். அவர் வியாபாரம் மூலம் பணம் சேர்ப்பதில்தான் குறியாக இருந்தார். உன் மனசு நோகக் கூடாதுன்னுதான் ஊறுகாய் தொட்டுக்கொள்வதைப்போல பள்ளிக்குப் போய் வருவார்."

(வாழ்க்கை) வசதிகள் அதிகமா இருப்பது செல்வமல்ல;மாறாக போதுமென்ற மனமே (உண்மையான)செல்வமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), நூல்: புகாரி)

"அரபியில் ஓத வரலைன்னா என்னம்மா? நம்ம உம்மத்துக்களுக்கு மார்க்கம் எவ்வளவு எளிமைப்படுத்தி கொடுக்க முடியுமோ அப்படி கொடுத்துள்ளது. தமிழிலியே இஸ்லாமிய கருத்துக்களையும் மார்க்க நெறிமுறைகளையும் ஆய்வுகளையும் சூராக்களையும் படித்து கடைப்பிடிக்கலாமே! அண்ணிங்க கூடவா எடுத்து சொல்லமாட்டாங்க"

"அட போம்மா,பூவோட சேர்ந்த நாறும் மணம் வீசும் என்பாங்க". இவங்க பூவா இருந்தால்தானே!. இவர்கள் மறுமை வாழ்க்கைக்கு அமல் செய்வதை விட, இவ்வுலக நாகரீக மோகமும் பணம் சம்பாதிக்க கணவன்களுக்கு தவறான வழி காட்டுவதில்தான் ஆர்வமா இருக்காங்க. அவங்க பிள்ளைகளை ஆண்டவன் தான் காப்பாத்தணும்."

சந்திரனை மேகம் மறைத்தது போல பாத்திமாவின் முகத்தில் கவலையின் ரேகைகள் படிந்தன. மனவருத்தத்தை மறைத்துக்கொண்டு தாய்க்கு ஆறுதல் கூறினாள் ஷாகிரா.

ஓய்வு நேரத்தை பயனுள்ள விதத்தில் செலவிடவும் மார்க்கக் கல்வி பற்றிய செய்திகளை அதிகமா தெரிந்து கொள்ளவும் ஒரு கம்ப்யூட்டர் தேவையென வாப்பாவிடம் கூறினாள் ஷாகிரா. மகளின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாத ஜாபர் அலி அவள் விருப்பப்பத்தை நிறைவேற்றி வைத்தார். மகன்களிடம் இருந்து மாப்பிள்ளைகளின் விபரங்கள்,புகைப்படத்துடன் பதிவுத்தபாலில் வந்து சேர்ந்தன. ஜாபர் அலி மகளைக் கூப்பிட்டார்.

"ஷாகிரா,மாப்பிள்ளைகளின் பயோடேட்டா, போட்டோ எல்லாம் வந்திருக்கு. பெரிய இடம் போலிருக்கு, போட்டோவைப் பார்த்தாலே தெரியுது".

ஷாகிரா பயோடேட்டாவை மட்டும் வாங்கிப் பார்த்தாள். அதில் படித்த, அழகான, வசதியான பெண் வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"வாப்பா,எனக்கு இந்த மாப்பிள்ளைகள் பிடிக்கவில்லை"என்றாள் ஷாகிரா.

"என்னம்மா சொல்றே, எந்த போட்டோவையும் பார்க்காமலேயே எப்படிம்மா பிடிக்கலைன்னு சொல்றே?"

"பயோடேட்டாங்கிறது முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி, மாப்பிள்ளைகளுடைய குணம், நோக்கம், எதிர்பார்ப்பு எல்லாம் அதிலேயே தெரிஞ்சுக்கலாம். எனக்கு மார்க்கப்பற்றுள்ள, படித்த, எளிமையான மாப்பிள்ளை போதும், வாப்பா; பணம், வசதி எல்லாம் வேண்டாம்".

"என்னம்மா, புரியாத பொண்ணா இருக்கியே! குணம் மட்டும் பத்தாது, பணம் தாம்மா நம்மை வாழவைக்கும்".

"வாப்பா, நீங்க புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான். நமக்கெல்லாம் வழிக்காட்டியாக விளங்கும் நாயகமும் அவர்களின் வழித்தோன்றல்களும் பெண்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழும் பாத்திமா நாயகமும் அவர்களின் எளிமையான வாழ்க்கை நெறிமுறைகளும் தான் இஸ்லாத்திற்கு பெருமையைச் சேர்க்கிறது. நீங்கள் நினைப்பதுபோல் இல்லே."

"நம்ம பொண்ணு சொல்றது சரிதாங்க. அவள் விருப்பப்படியே மாப்பிள்ளைப் பார்ப்போம்" என்று ஆதரவாகப் பேசினாள் பாத்திமா.

"சரிம்மா, நீ சொல்றமாதிரி பையனை எங்கேபோய் தேடுவது சொல்லு."

"ஒண்ணும் கஷ்டம் இல்லே வாப்பா, இன்டர்நெட்லே இல்லாத விஷயமே இல்லே. நீங்க அனுமதி கொடுத்தா தேடிப்பார்க்கிறேன்" என்றாள்.

"இதெல்லாம் கூட கம்ப்யூட்டர் செய்யுதா என்ன! புரோக்கருக்கு வேலையே இல்லைன்னு நினைக்கிறேன்."

தந்தையின் அனுமதி கிடைத்தது ஷாகிராவுக்கு.

"என் மனம் நாடும் மணாளனை மணம் முடித்து வை." என்று இறைவனிடம் துவா கேட்டாள். நாட்கள், வாரங்கள், மாதங்கள் நகர்ந்தன.

"தொழுகை தூக்கத்தை விட சிறந்தது" என்பதால் ஃபஜர் தொழுதுவிட்டு அம்மாவுக்குச் சமையலில் உதவி செய்த பின் கம்ப்யூட்டர் முன்அமர்ந்தாள். இஸ்லாமிய இணையதளம் ஒன்றில் அவள் பார்த்த மாப்பிள்ளையின் விவரம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. மார்க்கப்பறுள்ள, ஐவேளைதொழுகும் தன் பெற்றோர்களைப் பராமரிக்கும் பெண் தேவையென குறிப்பிட்டு இருந்தது.

"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. செல்வத்திற்காக 2.குடும்ப வம்ச பாரம்பரியத்திற்காக 3.அழகிற்காக 4.மார்க்க நல்லொழுக்கத்திற்காக. எனவே மார்க்க நல்லொழுக்கத்திற்காக பெண்ணை மணந்து வெற்றி அடைந்துக்கொள்.(இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்." (அறிவிப்பாளர்: அபு ஹுரைரா(ரலி), நூல்: புகாரி. எண்; 5090)

மாப்பிள்ளையின் விவரங்களை ஷாகிரா பெற்றோர்களிடம் தெரிவித்தாள். அவள் முகத்தில் சந்தோஷத்தைக் காண தவறவில்லை ஜாபர்அலி. வாழப்போகும் மகளின் விருப்பம்தான் முக்கியம் எனக்கருதி மாப்பிள்ளையைப் பார்க்கப் புறப்பட்டார். ஊரிலிருந்து திரும்பிவந்த ஜாபர்அலியின் முகத்தில் மட்டில்லா மகிழ்ச்சியும் மனநிறையும் தென்பட்டது. சொல்லப்போகும் செய்தியைக் கேட்க பாத்திமா ஆவலுடன் கணவரின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

"பாத்திமா, நம்ம பொண்ணு தேர்வு செய்த மாப்பிள்ளை அவள் எதிர்ப்பார்த்த மாதிரியே இருக்கார். எளிமையான குடும்பமாக இருந்தாலும் நல்லபெயரைச் சம்பாதித்து வைத்துள்ளார். தொழுகையாளி, அடக்கம், சாந்தமான பேச்சு, பெற்றோர்கள் பழகும் விதம் எல்லாம் மனசு நிறைஞ்சு இருக்கு. நம்முடைய பணமும் அவர்களுடைய குணமும் நம்ம பொண்ணைச் சந்தோஷமாக வாழவைக்கும்!".

அவருடைய உள்மனம் ஒரு கணக்குப் போட்டது. தொலைபேசிமூலம் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் மாப்பிள்ளை பற்றிய விவரங்களையும் தங்களுடய விருப்பத்தையும் தெரிவித்தார். மூவரும் குடும்பத்துடன் வந்து திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி சொல்லி முடித்தார். மூன்று குடும்பங்களும் வந்து இறங்கினார்கள் சுனாமிபோல் ஆவேசமாக. காரசாரமான விவாதங்கள் நடந்தன. தாங்கள் பார்த்த வரன்களை நிராகரித்ததன் காரணமாக தங்கள் கௌரவம், அந்தஸ்த்து எல்லாம் பஞ்சாக பறந்து விட்டது என ஆர்ப்பரித்தனர். அண்ணிகள் தங்கள் பங்குக்கு உபதேசம்செய்தனர். தன் நிலையிலிருந்து தளரவேயில்லை ஷாகிரா.

"அண்ணா, எனக்கு ஆடம்பரமான பணக்கார குடும்பம் வேண்டாம். சொத்துக்களோ, நகைநட்டோ வேண்டாம். மனசுக்கு நிறைந்த வாழ்க்கையே போதும். மூவரும் ஒன்று சேர்ந்து நடத்தி வைங்க" என்று உருக்கமாக வேண்டினாள்.

அவர்கள் மனம் இரும்பாக இருந்தால்தானே உருக வாய்ப்பிருக்கும்; அதுதான் கல்லாகி விட்டதே.! பிடிவாதமாக எல்லோரும் புறப்பட்டுச் சென்று விட்டனர். பலமுறை நேரில் அழைத்தும் வர மறுத்து விடவே உறவினர்கள், நண்பர்களை வைத்து படைத்தவன்மேல் பாரத்தைப் போட்டு திருமணத்தை முடித்து விட்டார் ஜாபர் அலி. மறுவீடு வந்த மருமகனிடம் மகளுடன் வீட்டோடு தங்கிவிடும்படி கேட்டார்.

அதற்குச் சாதிக், "மாமா, உங்களுக்குத் தெரியாதது ஒண்ணும் இல்லே. மகன்கள் இருக்கும்போது வீட்டு மாப்பிள்ளையாக இருப்பது உகந்தது இல்லே. அது முறையும் இல்லே. நான் என் சொந்த காலில் நிற்கவே ஆசைப்படுகிறேன். என் பெற்றோர்களைப் பராமரிக்கும் கடமையும் இருக்கு. மனைவி ஷாகிராவை மட்டும் என்னுடன் அனுப்பினால் போதும். வேறு எதுவும் வேண்டாம். தவறாக நினக்காதீங்க; அல்லாஹ் போதுமானவன்" என்று பதில் கூறினான்.

கணவரின் கருத்தையே ஆமோதிப்பதுப்போல் மகளும், "வாப்பா புகுந்த வீடுதான் பெண்களுக்கு சொர்க்கம். அவருக்கும் அவரைப்பெற்றவர்களுக்கும் பணிவிடை செய்யவே விரும்புகிறேன். ஆண்டவன் துணையும் உங்களின் துவா பரகத்தும் போதுமானது" என்றாள்.

பாசம் ஒன்றையே சீதனமாகக்கொண்டு விடைப்பெற்றுச் செல்லும் மகளையும் மருமகனையும் பெருமிதத்தோடுப் பார்த்துக்கொண்டு நின்றார் ஜாபர் அலி. ஜீனத் பாத்திமாவுக்கு கண்கள் குளமாயின. ஜாபர் அலியின் மனக்கணக்கு பொய்த்ததில் அவருக்கு வருத்தமே இல்லை.

பணக்கார வீட்டுப்பெண் என்ற சுவடு தெரியாமல் மன நிறைவோடு குடும்பம் நடத்தினாள் ஷாகிரா. அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுக்கு ஓதவும் தொழவும் கற்றுக் கொடுத்தாள். பெண்களைக்கூட்டி இஸ்லாமிய நெறிமுறைகளை எடுத்துக்கூறினாள். எல்லோருடைய மனதிலும் நிறைந்து நின்றாள். கணவனின் வேலைக்காக நாளிதழ்களைப் புரட்டவும் தவறுவதில்லை. எல்லா பட்டதாரிகளையும் போல சாதிக்கும் வேலை கிடக்காமல் அல்லாடினான். கணவனின் நிலை கண்டு கண்கலங்கிய ஷாகிராவின் பார்வை அன்றைய செய்தித்தாளில் நிலைத்தது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான விண்ணப்பம் ஒன்றை கண்டாள்.

"குருடனுக்குப் பார்வை கிடைத்ததைப்போல" மனம் துள்ளியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கணவனை வற்புறுத்தினாள். "ஷாகிரா, இந்தத் தேர்வு எழுத நிறைய செலவாகும். நம் சக்திக்கு ஒத்து வராதும்மா" என்றான் சாதிக்.

இருவரும் பேசியதைக்கேட்ட அவனது பெற்றோர்கள், "சாதிக், கவலைப்படாதே, நம்முடைய பூர்வீக நிலம் கொஞ்சம் இருக்கு. அவசரத்துக்கு உதவும் என்று தான் வைத்துள்ளோம். அதை விற்று மருமகளின் ஆசையை நிறைவேற்றுப்பா" என்று கூறினார்கள்.

ஈடுபாட்டுடன் படித்து தேர்வு எழுதிய சாதிக் மாநிலத்தில் ஏழாவது இடத்தில் தேர்ச்சி பெற்றான். ஷாகிரா ஐவேளை தொழுகையிலும் துவா கேட்டதும் ஸலவாத்து ஓதியதும் மற்றவர்களுக்கு உதவியதும் வீண் போகவில்லை. மட்டுமின்றி, சாதிக்கின் தேர்வுக்குத் தேவையான விஷயங்களைச் சேகரித்துக் கொடுப்பதிலும் ஷாகிரா நிறைந்து நின்றாள். சாதிக் முகமதுவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. டேராடூனில் பயிற்சி முடிந்து திருச்சியில் கூடுதல் கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டான். பங்களாவில் தன் பெற்றோர்களுடன் குடியேறினான்.

மருமகனின் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் பதவியும் கண்டு ஷாகிராவின் பெற்றோர்கள் பூரித்துப் போனார்கள். மைத்துனரின் முன்னேற்றத்தைக் கண்ட ஷாகிராவின் சகோதரர்கள் மூவரும் பொறாமைப்பட்டார்கள்; எரிச்சலடைந்தார்கள். வாழ்க்கையில் வேகமாக முன்னேற வேண்டும் என்ற வெறி அதிகமாகியது. மனைவிகளின் தூண்டுதல்களின் பேரில் பதவியைப் பயன்படுத்தி தவறான பாதையில் செல்ல ஆரம்பித்து, பிடிபட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர். கேள்விப்பட்ட ஜாபர் அலியும் பாத்திமாவும் நிலைகுலைந்து போனார்கள்.

இறைவழி நின்று எல்லோருடைய பாராட்டுகளோடு உயர்ந்து வரும் மருமகன் ஒருபுறம்; பொறாமைத்தீயில் வெந்து, பதவியை இழந்து நிற்கும் பிள்ளைகள் ஒருபுறம். இஸ்லாத்தில் பிறந்து, ஐவேளை தொழுகையை மறந்து, செல்வத்தைச் சேர்ப்பதில் கவனமாக இருந்த தனக்கு அல்லாஹ் பாடம் புகட்டிவிட்டான் என்று எண்ணினார். முதன் முறையாக அவருடைய உடல் இறையச்சத்தால் நடுங்கியது; கண்கள் கலங்கியது. இரு கைகளையும் ஏந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மூவரும் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். அண்ணன்களின் செய்தியறிந்து ஷாகிரா கணவருடன் தாய்வீடு வந்தாள். மூவருக்கும் ஆறுதல் கூறினார்கள்.

சாதிக் முகமது தன் மைத்துனர்களைப்பார்த்து, "நான் வயதில் உங்களை விட வயதில் சிறியவன். நான் சொல்லப்போவதை யாரும் தவறாக எண்ண வேண்டாம்; சொல்லுவதை என்னுடைய கடமையாக எண்ணுகின்றேன். நீங்கள் மூவரும் பதவியைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கியது, கலப்படம் செய்தது, நம்பியவர்களை ஏமாற்றியது எனப் பல குற்றங்களை செய்துள்ளீர்கள். இதற்கெல்லாம் காரணம் மார்க்கத்தைப்பற்றிய அறிவும் இறையச்சமும் இல்லாததுதான்."

"நபிகள் நாயகம் கூறுகிறார்கள்: லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும்.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி), நூல்: இப்னுமாஜா).

ஒவ்வொரு முஃமீனுக்கும் புனித குர்ஆனையும் முகமதுநபி(ஸல்) அவர்களின் போதனையையும் படித்து பின்பற்றுவது, மார்க்க அறிவைப்பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.

"எவன் தூய்மையான அச்சமுடையவனாக இருக்கிறானோ அவன்தான் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவன்" (அல் குர்ஆன் 49:13)

"பயபக்தி உடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்; வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்" (அல் குர்ஆன் 29:90-91)


முதலில் மைத்துனருடைய அறிவுரைகளை அலட்சியப்படுத்தியவர்கள், பின்னர் அவருடைய பேச்சையும் குர்ஆன் வசனத்தையும் கேட்க ஆரம்பித்தப்பிறகு உண்மையிலேயே இறையச்சத்திற்கு ஆளானார்கள்; முகம் வியர்த்தது.

சாதிக் முகமது மேலும் தொடர்ந்தான்... "உங்களின் தவறான போக்குக்குக் காரணம் நீங்கள் மட்டுமல்ல; சரியான பாதையைக் காட்டத்தவறிய பெரியவர்களும்தான்."

ஜாபர் அலி தன் குற்ற உணர்வால் தலை நிமிரவே இல்லே.

"மச்சான் எங்களின் இந்நிலைக்கு முழுக்காரணமும் நாங்கள்தான். எங்களின் தங்கையைப்போலவே எங்கள் மனைவிகள் இருந்து இருந்தால் கூட இந்நிலை வந்திருக்காது." என வருந்தினார்கள்.

"இனி ஒருவர் மேல் ஒருவர் பழி சொல்லிப் பயனில்லை. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும்."

"எங்களை அல்லாஹ் மன்னிப்பானா?" மூவரின் குரல்களும் தழுதழுத்தது.

"உங்கள் தவறுகளை எப்போது உணர்ந்தீர்களோ, அப்போதே அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். இறையச்சம் உடையவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். கவலை வேண்டாம்."

மூவரின் இதயங்களின் இருள் திரை விலகி கரையைக்கடந்ததுப் போன்ற ஓர் தெளிவு பிறந்தது.

"முடிந்தவரை மூவரும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு காணுங்கள். தண்டனை காலம் முடிந்ததும் வேலைக்கு முயற்சி செய்கிறேன்." என்றான் சாதிக்.

"வேண்டாம் மச்சான். இனி எங்களுக்கு வேலைக்குப் போக விருப்பமில்லை. எங்களை நல்வழிப்படுத்தியதே போதும். இனி வாப்பாவுக்கு உதவியாக இருந்து, தீனுக்காக உழைக்கப்போகிறோம். எங்கள் ஊர் பள்ளிவாசலை பெரிதுபடுத்தி மார்க்கக்கல்வியை விரிவாக்குவோம். மறுமை வாழ்வுக்கு அமல்கள் செய்வோம்", மூவரும் மனநிறைவோடு கூறினார்கள்.

தன் பிள்ளைகளின் மாற்றங்களைக்கண்டு மகிழ்ந்த ஜாபர் அலி மருமகனின் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டார். இதனைக் கண்ட ஷாகிராவின் கண்கள் பனித்தன. சாதிக் முகமதுவின் முகத்தில் நிறைவான புன்னகை தவழ்ந்தது.

"அனைத்திற்கும் ஆண்டவன் போதுமானவன்!"

"எவர்கள் நேர்வழியில் செல்லுகின்றார்களோ, அவர்களுடைய நேர் வழியை (இன்னும்)அதிகப்படுத்தி அவருக்கு தக்வாவை-பயபக்தியை(இறைவன்)அளிக்கிறான்". (அல் குர்ஆன் 47:17)


Source: satyamargam. com

இஸ்லாத்தை ஏன் பின்பற்ற வேண்டும்?

இஸ்லாத்தை ஏன் பின்பற்ற வேண்டும்?
ஜாகிர் நாய்க் (ZAKIR NAYK)

கேள்வி:
உலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது - ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மட்டும் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!.

பதில்: 1.

இஸ்லாமிய மார்க்கத்திற்கும் - பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:

எல்லா மதங்களும் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையேப் பின் பற்ற வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையேப் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதோடு நின்று விடாமல் - தனிமனிதனிடமும் - முழு மனித சமுதாயத்திடமும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்துகிறது.

இஸ்லாம். நன்மையை ஏவி - தீமையைத் தடுக்கக் கூடிய செயலை செய்யும் போது மனித சமுதாயத்தில் இருக்கும் மனிதத் தன்மையையும், சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்கும் நடைமுறைச் சிக்கலையும் கணக்கில் கொள்கிறது.

மனிதர்களை படைத்த இறைவனால் வழிகாட்டப்பட்ட மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் - தீனுல் ஃபித்ர் - அதாவது இயற்கையான மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.


2. உதாரணம்:

மனிதர்கள் திருட்டை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்வதோடு, சமுதாயத்திலிருந்து திருட்டை எப்படி ஒழிக்க முடியும் என்பத தீர்வையும் வைத்திருக்கிறது.

அ. இஸ்லாம் திருட்டை ஒழிக்கும் வழிவகைகளை நமக்கு கற்றுத் தருகிறது.

எல்லா முக்கிய மதங்களும் திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிக்கின்றன. இஸ்லாமும் அதனைத்தான் போதிக்கின்றது. அப்படியெனில் மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன?. திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிப்பதோடு நின்று விடாமல் - நடைமுறையில் திருடர்களே இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்றும் வழிகாட்டுகின்றது இஸ்லாம்.

ஆ. இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் தர்மம் வழங்க வலியுறுத்துகிறது.

இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை ஒவ்வொரு இஸ்லாமியர் மீதும் கடமையாக்கியுள்ளது. இஸ்லாமியர்களில் யாரெல்லாம் 85 கிராம் தங்கம் அல்லது அதற்குரிய விலை அளவில் சேமித்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டரை சதவீதம் அளவிற்கு 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு பணக்காரரும் தமக்குள்ள சொத்துக்களில் இரண்டரை சதவீதம் தர்மமாக கொடுத்தால், உலகத்தில் ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் போகும். இவ்வுலகில் ஓரு மனித உயிர் கூட பசியால் மரணிக்கக் கூடிய நிலை இருக்காது.

இ. திருடுபவனுக்கு தண்டனையாக அவனது கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது.

திருடினாhன் என்று நிருபிக்கப்பட்டவனின் கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் ஐந்து ஸுரத்துல் மாயிதாவின் 38வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது:


'திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.' (அல்-குர்ஆன் 5 : 38)

'ஆ!. இருபதாம் நூற்றாண்டில் திருடியவனுக்கு கையை வெட்டுவதா?. இஸ்லாம் கருணையில்லாத, காட்டுமிராண்டித் தனமான மார்க்கம்' என்று இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் சொல்லலாம்


ஈ. இஸ்லாமிய சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டிருந்தால் - சரியான பலன் கிடைத்திருக்கும்:

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் மிக முன்னேறியுள்ள நாடாக இருக்க வேண்டும். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக அமெரிக்காதான் குற்றங்களும், திருட்டுக்களும், கொள்ளைகளும் நிறைந்துள்ள நாடாகவும் இருக்கின்றது.

அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், அதாவது எல்லா செல்வந்தர்களும் ஜக்காத் என்னும் தர்மம் வழங்க வேண்டும் (ஒவ்வொரு வருடமும் தமக்குள்ள சொத்துக்களில் 2.5 சதவீதம் தர்மமாக கொடுத்தல்) என்ற சட்டமும், திருடப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையாக அவர்களது கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற சட்டமும் அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் திருட்டுக் குற்றம் குறையுமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதே போன்றுதான் இருக்குமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்குமா?.

கண்டிப்பாக அமெரிக்காவின் திருட்டுக் குற்றங்கள் குறையத்தான் செய்யும். இஸ்லாம் வகுத்துள்ள கடுமையான சட்டங்கள் இருப்பதன் காரணத்தால் மேலும் திருட வேண்டும் என்று எண்ணமுள்ளவர்களும் திருடுவதற்கு தயங்கும் நிலைதான் உருவாகும்.


இன்றைக்கு உலகில் இருக்கும் திருட்டுக் குற்றங்களுக்கு தண்டனை என்ற பெயரில் கைகளை வெட்டுவோம் எனில் இன்று உலகில் லட்சக் கணக்கானோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற உங்களது வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். - ஆனால் நான் இங்கே வலியுறுத்த விரும்பும் கருத்து என்னவெனில் திருடுவோருக்கு தண்டனையாக கைகள் வெட்டப்படும் என்கிற சட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே திருட்டுக் குற்றங்கள் குறைய ஆரம்பித்துவிடும் என்பதைத்தான்.

திருட்டுத்தொழிலை வழக்கமாகக் கொண்டிருக்கும் திருடர்கள் கூட, திருடுவதற்கு முன்பு மிகவும் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். திருடுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டாலே - திருட்டு தொழில் செய்பவர்கள் பலர் திருடுவதை விட்டு விடுவார்கள். அதனையும் மீறி ஒரு சிலர் மாத்திரம் திருட்டுத் தொழிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் பிடிபட்டால் அவர்களின் கைகள் மாத்திரம் வெட்டப்படும். இவ்வாறு ஒரு சிலரின் கைகள் வேண்டுமெனில் வெட்டப்படலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியவையும், மனித சமுதாயத்திற்கு பலன்களை தரக் கூடியவையும்தான்.


மூன்றாவது உதாரணம்:

இஸ்லாம் பெண்கள் மானபங்கபடுத்தப்படுவதையும், வல்லுறவு கொள்ளப்படுவதையும் கடுமையான குற்றங்கள் என தடை செய்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய ஆடை முறைகளை பின்பற்ற சொல்வதோடு, வல்லறவு குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படுபவருக்கு கடுமையான தண்டனைகளையும் வலியுறுத்துகிறது.

அ. வல்லுறவு கொள்வதையும், மானபங்கப் படுத்தப்படுவதையும் தடுக்கும் முறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

பெண்களோடு வல்லுறவு கொள்வதையும், பெண்கள் மானபங்கப்படுத்தப் படுவதையும் எல்லா மதங்களும் கொடுமையான பாவம் என்றுதான் சொல்லுகின்றன. இஸ்லாமிய மார்க்கமும் அதைத்தான் போதிக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மற்றுமுள்ள மதங்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?. பெண்களை மதிக்க வேண்டும் அறிவுரை கூறுவதோடு நின்று விடாமல் அல்லது பெண்களை மானபங்கப்படுத்துவதை வெறுத்துத் தள்ளுவதோடு நின்று விடாமல், வல்லுறவு கொள்வது மகாப்பெரிய பாவம் என்று சொல்வதொடு நின்று விடாமல், மேற்படி குற்றங்கள் சமுதாயத்தில் இல்லாமல் செய்வது எப்படி என்று வழிகாட்டவும் செய்கிறது.

ஆ. இஸ்லாம் வலியுறுத்தும் ஆண்களுக்கான ஆடைமுறையும் - நடை முறையும்.

இஸ்லாம் மனிதர்கள் முறையாக அணிய வேண்டிய ஆடைகளை (ஹிஜாப்) வலியுறுத்துகின்றது. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான 'ஹிஜாப்' பற்றி அறிவிப்பதற்கு முன்பாக, ஆண்களுக்கான 'ஹிஜாப்' பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் '(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்:


அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 24 : 30)

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.


இ. பெண்களுக்குரிய 'ஹிஜாப்'

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் '(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர, (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்.....ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.


ஹிஜாப் அணிவதற்கான வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.


ஈ. ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:

பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.


நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.


உ. இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:

இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.

கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். உடல் உறுப்புகளை மறைப்பதைவிட அதிகம் வெளியில் தெரியும்படியான ஆடைகளை பெண்கள் அணிவது - ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஊ. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.

இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். ஒருசிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன்.

தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?.

நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து அவனைக் கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லுறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.

எ. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.


உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்காவில் 1,02,555 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை தெரிவிக்கிறது.

நடந்த வல்லுறவு குற்றங்களில்; 16 சதவீதம் குற்றங்கள் மாத்திரமே புகார் செய்யப்பட்டதாகவும் மேற்படி அறிக்கை தெரிவிக்கிறது. அப்படியெனில் அமெரிக்காவில் 1990 ஆம் ஆண்டில் மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்கள் எத்தனை என்று அறிய மேற்படி தொகையை (102,555) 6.25 கொண்டு பெருக்கினால் மொத்த வல்லுறவு குற்றத்தின் எண்ணிக்கை 640,968 ஆகும். மேற்படி கிடைக்கும் தொகையை 365 நாட்களை கொண்டு வகுக்கும் போது 1990 ஆம் ஆண்டு மாத்திரம் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நடந்த வல்லுறவு குற்றங்களின் எண்ணிக்கை 1,756 ஆகும்.

அதன் பிறகு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு மாத்திரம் 307,000 வல்லுறவு குற்றங்கள் புகார் செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறையின் மற்றொரு பிரிவான குற்றம் இழைக்கப்பட்டோர் பற்றி தேசிய அளவில் ஆய்வு செய்யும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்களில், 31 சதவீதம் மாத்திரமே புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் மேற்படி அறிக்கை கூறுகிறது. அவ்வாறெனில் 1996 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த மொத்த வல்லுறவு குற்றங்கள் (307,000 ஒ 3.226) 990,322. ஆகும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு 32 வினாடிக்கு ஒரு வல்லுறவு குற்றம் நிகழ்ந்திருக்கிறது.

மற்றுமுள்ள வருடங்களில் அமெரிக்கர்கள் இன்னும் கூடுதலாக வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 10 சதவீதம் பேர்கள்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக 1990ஆம் ஆண்டு எஃப். பி. ஐ. வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 1.6 சதவீதம்தான்.

மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம்பேர் அவர்கள் செய்த வல்லுறவு குற்றம் நீதி மன்றத்தின் முன்பு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு அர்த்தம் 0.8 சதவீதம் குற்றவாளிகள்தான் நீதி விசாரனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் 125 பேர் வல்லறவு குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டனை வழங்கப்படுவது ஒரேயொரு குற்றத்திற்கு மாத்திரம்தான். இவ்வாறான சட்டங்கள் இருந்தால் மனிதர்களில் பலர் வல்லுறவு குற்றம் புரிவதை ஒரு தொழிலாகவே வைத்திருப்பார்கள்.

இவ்வாறு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டபின் 1 வருடத்திற்கும் குறைவான சிறை தண்டனையைத்தான் பெறுகின்றனர் என மேற்படி அறிக்கை மேலும் கூறுகிறது. இவ்வளவுக்கும் ஒரு வல்லுறவு குற்றம் புரிந்த குற்றவாளிக்கு அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும். முதன் முறையாக வல்லறவு குற்றம் புரிந்த ஒருவனுக்கு கடுமையான தண்டனைகள் இன்றி நீதிபதி விடுதலை செய்யலாம் என்பது அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின் விதி. கற்பனை செய்து பாருங்கள்!. ஒரு மனிதன் 125 முறை வல்லுறவு குற்றம் செய்தாலும், அவன் தண்டனை பெறுவதற்குரிய சாத்தியக்கூறு ஒரேயொரு முறைதான். அந்த ஒரு முறையிலும் நீதிபதியின் கருணையினால் விடுதலை செய்யப்படலாம். அல்லது ஒரு வருடத்திற்கும் குறைந்த சிறை தண்டனையைப் பெறலாம்.


ஏ. இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால் சரியான பலன்களைப் பெறலாம்:

அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார்.

அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும்.

மேற்கண்டவாறு இஸ்லாமிய சட்டங்கள் அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் வல்லுறவு குற்றங்கள் குறையத்தான் செய்யும்.

4. மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு, இஸ்லாமிய மார்க்கம் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய தீர்வுகளை கொண்டுள்ளது.

இஸ்லாம் உலக வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகும் . ஏனெனில் அதன் கொள்கைகள் நடைமுறைக்கு ஒத்து வராத வாய் வார்த்தைகளை கொண்டதல்ல. மாறாக இஸ்லாமிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. தனி மனித அளவிலும், முழு மனித சமுதாய அளவிலும் இஸ்லாமிய மார்க்கம் சிறந்த தீர்வுகளை கொண்டுள்ளது.

இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் சிறந்த மார்க்கமாக திகழ்வதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியக் கூறான அதன் கொள்கைள்தான். இஸ்லாமிய மார்க்கம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேசத்தினருக்கோ சொந்தமானதல்ல. மாறாக இஸ்லாமிய மார்க்கம் அகிலம் முழுவதற்கும் சொந்தமானது.தமிழில் : அபு இஸாரா


source: http://ottrumai.net/IslamicQA/25-WhyShouldWeFollowIslam.htm

2011 காலண்​டர் வேண்​டாம்,​​ 2005 போதும்!

2011 காலண்​டர் வேண்​டாம்,​​ 2005 போதும்!


வரும் 2011-ம் ஆண்டு காலண்டரும் 2005 காலண்டர் போலவே தேதி-கிழமை மாறாமல் வருகிறது.

புத்தாண்டு என்றவுடன் புது காலண்டர், புதிய டயரிதான் எல்லோர் நினைவுக்கும் வரும். எங்கிருந்தாவது ஒரு புதிய காலண்டர் கிடைக்காதா என்று பறப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஓசி டயரி கிடைக்கவில்லையே என ஏங்குபவர்கள் இன்னொருபுறம். ஆனால் 2011 காலண்டர் கிடைக்கவில்லையா? கவலையைவிடுங்கள்! அதில் அப்படியொன்றும் புதுமை இல்லை. காரணம் 2005-ம் ஆண்டு காலண்டரும், வரப் போகும் 2011-ம் ஆண்டு காலண்டரும் ஒன்று போல இருக்கிறது – நாள் தேதி மாறாமல்.

இரண்டு ஆண்டுகளும் சனிக்கிழமை தொடங்குகிறது. அதாவது ஜனவரி 1 வருவது சனிக்கிழமையில். அது போலவே ஒவ்வொரு மாதத்தின் தேதிகளும் ஒற்றுமையுடன் வருகின்றன. இரண்டு வருடங்களிலும் ஜனவரி 26 குடியரசு தினம் புதன்கிழமையன்று வருகிறது. சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 திங்கள்கிழமை வருகிறது.

இது குறித்து மத்தியப்பிரதேச மாநில உஜ்ஜயினியில் உள்ள ஜீவஜி வானியல் நிலையத்தின் இயக்குநர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியபோது, “”காலச்சக்கரத்தின் சுழற்சியில் இதுபோன்ற ஒரு சுவையான நிகழ்வு நடந்துள்ளது,” என்றார்.

இரு ஆண்டுகளிலும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை கிடையாது.
காரணம், அது வந்த நாளும் வரப்போகும் நாளும் ஞாயிற்றுக்கிழமை!
வருடம் முடிவது – அதாவது டிசம்பர் 31- வருவது சனிக்கிழமை.
அப்படியானால் 2012-ம் ஆண்டு தொடங்குவது ஞாயிற்றுக்கிழமை
எனவே 2012 ஆங்கிலப் புத்தாண்டுக்கு விடுமுறை கிடையாது!

Source: http://site4any.wordpress.com/2010/12/30/2011

இஸ்லாமிய பங்கு வர்த்தகம்

இஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்

மும்பை பங்கு சந்தையில் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதியை தக்வா அட்வைசரி & சரீஅத் சொலுசன்ஸ் என்ற அமைப்புடன் இனைந்து மும்பை பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் இஸ்லாமிய நிதி கொள்கைகளை பின்பற்ற கூடியவையாக இருக்கும். இதில் தற்போது டாடா கன்ஷல்டன்ஸி சர்வீஸஸ், பாரதி டெல், ரிலையன்ஸ், மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் இனணைந்துள்ளன.

இஸ்லாமிய பங்கு வர்த்தகத்தில் இணையும் நிறுவனங்கள், தக்வா அட்வைசரி நிறுவனத்தின் கடுமையான பரிசீலனைக்கு பிறகே வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இதில் இனைய விரும்பும் நிறுவனங்கள், மது, சூதாட்டம், வட்டி போன்ற வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

இந்த பங்கு வர்த்தகத்தில் மத ரீதியான எந்த வித தடங்கலும் இல்லை. யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். ஆரம்பித்த நாள் முதல் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து இருப்பதாக மும்பை பங்கு சந்தை தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு, இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்கள் முதலீட்டு விவகாரங்களில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று கூறியிருந்தது.


நன்றி: இந்நேரம்.காம்

வியாழன், டிசம்பர் 30

நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு

மக்களை மொட்டையடிக்கும் சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்!PrintE-mail

[ நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் ]
"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.
இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?"
இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.
ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை.
இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.
FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?.
அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.
பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:
ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள்.
அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை.
இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.
இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.
இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.
ஏமாற்றும் வழிகள்:
இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.
நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.
►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய் (கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).
►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய் (விளம்பரதாரர், விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே!)
மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.
TOOTHBRUSH(1)        -19 ரூபாய்
HAIR OIL(500 ML)      -95 ரூபாய்
SHAVING CREAM(70G)   -86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE)    -400 ரூபாய்
FACE WASH          -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்
மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.
நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?
► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)
►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)
► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.
இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:
►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.
►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .
►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.
இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.
►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)
100 x 995 = 99500 ரூபாய்
இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.
3000 x 100 = 300000 ரூபாய்
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).
இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.
இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.
300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.
லட்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.
இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.
இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:
தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.
source from nidur .info & thoppi thoppi 

புதன், டிசம்பர் 29

உடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவர

உடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவர
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்,

1. உணவுக்கட்டுப்பாடு

2. உடற்பயிற்சி

உடல் எடையைக் குறைக்க உண்ணும் பழக்கவழக்கங்களையும் உடற்பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது,

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் செய்ய வேண்டியன

1. உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

2. தற்போதைய தங்கள் எடையை ஒரு டைரியில் குறித்து வையுங்கள்.

3. உங்கள் உணவுப்பட்டியலையும் அந்த டைரியில் குறித்துக் கொள்ளுங்கள்.

4. எடையைக் குறைக்க முயற்சிக்கத் தொடங்குங்கள்.

5. உங்கள் எடையை வாரம் ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.

6. உங்கள் உணவுப்பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் மெதுவான மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். தடாலடியாக கடுமையான சோதனை முயற்சிகளில் இறங்குவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்..

7. கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள்,இளம்பெண்கள்,நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைகளின்றி கீழ்க்கண்ட இவ்விதிமுறைகளைப் பின்பற்றக் கூடாது.உடல் எடையைக் குறைக்க கண்ட மாத்திரை,மருந்துகளை உண்ணக் கூடாது.

8. உணவுப்பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் சிற்சில மாற்றங்களைக் கொண்டு வந்தாலே, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். உங்களால் முடியும் என்று நம்புங்கள்.

9. உங்களைப் போலவே உடல் எடையைக் குறைக்க விரும்புவரின் நட்பைப் பேணுங்கள்,முடிந்தால் நடைப்பயிற்சியில் அவர்களையும் உங்களுடன் பங்கு பெறச் செய்யுங்கள்.

10. முயற்சி+பயிற்சி=வெற்றி என்ற தாரகமந்திரத்தை மனதில் கொள்ளுங்கள். கேலிகளைப் பொருட்படுத்தாமல் உங்கள் லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.


உணவுப்பழக்கங்கள்

1. முட்டைக்கோஸ்,குடமிளகாய்,பாகற்காய்,கேரட்,முருங்கைக்காய்,
வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது
உடல் எடையைக் குறைக்க உதவும்.

2. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே உண்பது,செல்பேசியில் பேசிக் கொண்டே உண்பது,புத்தகங்கள் வாசித்துக் கொண்டே உண்பது போன்ற பழக்கங்களை நிறுத்துங்கள்.

3. கிழங்கு வகை உணவுகள்,எண்ணெயில் பொறித்த உணவுகள், கொழுப்புச்சத்து மிகுந்த பண்டங்கள்,ஐஸ்கிரீம்,நெய்,சீஸ்,வெண்ணெய்,சர்க்கரையில் செய்த பதார்த்தங்கள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்.

4. சிறிய தட்டில் உணவை உண்ணுங்கள்.(உளவியல் ரீதியாகப் பெரிய தட்டில் உண்டால் அதிகம் சாப்பிட வாய்ப்பிருக்கிறது)

5 .மூன்று வேளை அதிகம் உண்பதற்குப் பதில் ஐந்து வேளை குறைவாக உண்ணுங்கள்.

6. ஒரு நாளைக்கு 10கப் தண்ணீர் அருந்துங்கள்.

7. காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.காலையில் அதிகம் உண்டு நடப்பது,அன்றைய நாள் முழுவதும் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

8. இரவு உணவில் வயிறு முட்ட உண்ணாதீர்கள். அரை வயிறு உணவும்,கால் வயிறு தண்ணீரும்,கால் வயிறு வெற்றிடமாகவும் இருக்கட்டும்.

9. உணவு உண்டபின் உறங்கக் கூடாது. ஒரு மணி நேரம் கழித்தே படுக்கச் செல்லுங்கள்.

10. விரதம் என்றோ,நேரமின்மை காரணமாகவோ எந்த வேளை உணவையும் தவிர்க்காதீர்கள்.ஒரு வேளை உணவைத் தவிர்த்தால் அடுத்த வேளை உணவை அதிகம் சாப்பிட நேரிடும்.

11. காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

12. உங்கள் வயிறு ஓரளவிற்கு நிறைந்து விட்டது போல் தோன்றினால் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் வயிறு நிறைந்தது என்பதை மூளைக்குக் கூற குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும்.

13. வாழைப்பழம்,ஆப்பிள் போன்ற பழங்களைச் சேர்க்காமல் முலாம்பழம் மற்றும் தர்ப்பூசணிப்பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

14. உணவு உண்ட பின் ஒரு டம்ளர் மோரைக் குடித்தால் உண்ட உணவு ஜீரணம் ஆகி விடும், எடை கூடாது.

15. உணவு உண்டபின் குறைந்தது அரைமணி நேரமாவது நடக்க வேண்டும்.(பசிப்பது போல் உணர்வு ஏற்படும் வரை நடந்தால் உணவுப் பொருட்கள் ஜீரணமாகி விட்டது என்று பொருள், எடை கூடாது)

16. அரிசி உணவுகளும் கிழங்கு உணவுகளும் கார்போஹைட்ரேட் என்பதால் அவற்றை அதிகம் உட்கொள்ளாமல் கோதுமை,ஓட்ஸ்,பாஸ்தா,ராகி போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

17. கொழுப்புச்சத்து நீக்கிய பால்,தயிரைப் பயன்படுத்துங்கள்.சர்க்கரைக்குப் பதில்,ஸ்பெலெண்டா,ஈகுவல் போன்ற மாற்று இனிப்புகளை அளவாகப் பயன்படுத்துங்கள்.

18. காப்பி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்தக் கூடாது. கபைன் இன்சுலினை அதிகரிக்கச் செய்து செரிமானத்தைத் தாமதமாக்குகிறது. அதற்குப் பதில் ஹெர்பல் டீ,லெமன் டீ,பழச்சாறுகளை அருந்தலாம்.

19. உணவில் பச்சைக்காய்கறி சாலட்கள்,பழசாலட்கள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.

20. பொறித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தவை.

21. உடல் எடை மெலிய பட்டினி இருக்காதீர்கள்.சமச்சீரான சரிவிகித உணவை உண்ணுங்கள்.

22. திருமண வைபவங்களில் கலந்து கொள்ளும் போதும் விருந்தினர் இல்லத்திற்குச் செல்லும் போதும் விருந்தை அதிகம் உண்ணாமல் உங்கள் கொள்கைப்பிடிப்பில் உறுதியாக இருங்கள்.

23. இஞ்சிச்சாறு,இஞ்சிரசம் என்று உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

24. சமையல் செய்ய நான்ஸ்டிக் பேனைப் பயன்படுத்துங்கள், குறைந்த எண்ணெய் செலவாகும்.

25. வாய்ப்பும் நேரமும் இருப்பவர்கள் குக்கரில் சாதம் செய்து உண்ணாமல் சாதம் செய்து கஞ்சியை வடித்துச் செய்யும் அந்த கால முறையைப் பின்பற்றலாம்.


உடற்பயிற்சி

1. சுறுசுறுப்பாக இருப்பது உடல் எடையைக் குறைக்க உதவும்.

2. காலையில் 45 நிமிடங்கள் மாலையில் 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புதிதாக நடைப்பயிற்சி செய்பவர்கள் தங்கள் வேகத்தை மெதுவாகத் தான்அதிகமாக்க வேண்டும்.

3. பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே செல்வது,சந்தை,கடைகளுக்கு வண்டியில் செல்லாமல் நடந்தே செல்வது என்று செய்யும் வியர்வை சிந்தும் காரியங்கள் அனைத்தும் நல்ல பலன் அளிக்கும்.

4. நடைப்பயிற்சி,உடற்பயிற்சி,நீச்சல்,மிதிவண்டி ஓட்டுதல் ஆகியன உடல் எடையைக் குறைக்க உதவும்.

5. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் பூப்பந்து,கால்பந்து,கிரிக்கெட் போன்ற தங்களுக்குப்
பிடித்தமான வெளிப்புற விளையாட்டில் ஈடுபடலாம்.

6. லிப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டுகள் பயன்படுத்துவது மூட்டுகளுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

7. உடற்பயிற்சிக்கூடத்தில் சேர வாய்ப்பிருந்தால் சேர்ந்து டிரட்மில்லர் பயன்படுத்தி பயன் பெறலாம்.

8. கணிப்பொறி முன்பு அதிக நேரம் உட்காராமல் அவ்வப்போது நடக்க வேண்டும்.

9. வெகு நேரம் ஒரே இடத்தில் உட்காருவதோ நிற்பதோ கூடாது.

10. வீட்டைச் சுத்தப்படுத்துவது,குளியலறையைச் சுத்தம் செய்வது,சமையல் செய்வது போன்ற வீட்டுவேலைகளை இழுத்துப் போட்டு செய்தால் உடல் எடை குறையும்.

11. வெளியில் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வீட்டிற்குள்ளேயே நடக்கலாம்.

12. உடற்பயிற்சி செய்வதானால் தானாகச் செய்யாமல் அனுபவசாலிகளின் அறிவுரைப்படியோ மருத்துவரின் ஆலோசனைப்படியோ செய்யலாம்.

13. யோகா நிலையங்களில் சேர்ந்து யோகா பயிற்சி செய்வதும் உடல் எடை குறைக்க உதவும்.

14. ஆரம்ப நிலையில் மெதுவாகவே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

15. அளவாக உண்பதும் சுறுசுறுப்புடன் இருப்பதும் உடலை அளவாகவும் அழகாகவும் வைக்க உதவும்.

16. உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றாது. மன அழுத்தம் உடற்பயிற்சி செய்பவரை அண்டாது.

17. தொளதொள என்று ஆடைகளை அணியாமல் சரியான அளவு ஆடைகளை அணிய வேண்டும். கண்டிப்பாக உடல் எடை குறையும் என்ற நம்பிக்கையைத் தரும்.

18. ஒரு மாதத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு எடை குறையவில்லை என்றாலும் விடாமல் உணவுக்கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் தொடர வேண்டும்.

19. எடையை இரு வாரங்களுக்கு ஒரு முறை சோதித்து உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதோ உங்கள் நண்பர்களிடம் கூறி ஊக்கம் பெறவோ செய்யலாம்.

20. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். மது அதிக உடல் பருமனை வழங்கும்.

Source: http://palanirahul.blogspot.com/2010/09/blog-post_07.html

செவ்வாய், டிசம்பர் 28

உச்சா போகலாம் வாங்க !


நீர்க்கடுப்பு பிரச்சனை


டாக்டர் சௌந்தர ராஜன்[ பொதுவாக, சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணிர், இளநீர், வாழைத்தண்டு, ஜூஸ், மோர், பார்லி மற்றும் ஜவ்வரிசி கஞ்சி போன்றவற்றைச் சாப்பிடுங்கள்.] சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் வலியுடன் அசௌகரியமான உணர்வு ஏற்படுவதுதான் நீர்கக்டுப்பு. சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, தண்ணிர் அதிகம் குடிக்காமல் இருப்பது.... போன்ற காரணங்களால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். இது பச்சிளம் குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக் கூடிய பிரச்னைதான். நாம் உண்ணும் உணவை செரிப்பதற்கும், நம் உடலில் உள்ள கழிவுகளை அவ்வப்போது சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதற்கும் தண்ணிர் தேவை. போதுமான அளவு தண்ணிர் குடிக்கமால் இருக்கும்போது, சிறுநீராக பிரிந்து வரும் நீரின் அடர்த்தி அதிகமாகி நீர்க்கடுப்பு (Strangury) ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு நிறைய தண்ணிர் குடிப்பதுதான். சில சமயம் நீர்க்கடுப்பு, சர்க்கரை நோயின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். அதனால் நிறைய தண்ணிர் குடித்தும் நீர்க்கடுப்பு அடிக்கடி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
பொதுவாக சிறுநீர் வருகிற மாதிரி தோன்றியதுமே சிறுநீர் கழித்து விட வேண்டும். மணிக்கணக்கில் அளவுக்கு அதிகமாக அடக்கி வைக்கக் கூடாது. அப்படி அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பை விரிவடைந்து அந்தப் பையில் கண்ணுக்குத் தெரியாத சின்னச் சின்ன விரிசல்கள் ஏற்பட்டு, அங்கிருக்கும் கிருமிகள் அந்த விரிசல்கள் மூலமாக ரத்தத்தில கலந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனவே, எப்போதும் சிறுநீரை அடக்கி வைக்கவே வைக்காதீர்கள். இதைத்தான் அந்தக் காலத்திலேயே பெரியவர்கள்''ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதே'' என்று சொன்னார்கள். சிலருக்கு நீர்க்கடுப்பு போலவே நீர் எரிச்சலும் இருக்கும். பொதுவாக அனைவருக்கும் சிறுநீர்ப்பாதை வழவழவென்று இருக்கும். உடலில் போதுமான நீர் இருக்கும்போது அந்தப் பாதையில் சிறுநீர் எளிதாக பயணித்து வெளியே வந்து விடும்.

ஆனால், தண்ணிர் அதிகம் குடிக்காமல் இருக்கும்போது சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி, அதிலுள்ள கழிவுகளும் படிமங்களும் அந்தப் பாதையை அரிப்பதுடன் அங்கேயே தங்கியும் விடும். இப்படி தங்கும் படிமங்களும் கழிவுகளும் கிருமிகள் அங்கே தாக்குவதற்கு வசதியாக அமைந்து விடுவதுடன் அங்கிருக்கும் நரம்புகளைத் தூண்டி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம்.
சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், நுண்கிருமிகளால் தொற்று ஏற்பட்டு விடும். இதை சிறுநீர்த் தொற்று (யூரினரி இன்ஃபெக்ஷன்) என்பார்கள். எனவே எப்போது சிறுநீர் கழித்தாலும் நன்றாக சுத்தம் செய்வது நல்லது.திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்திய உறவின் காரணமாக நீர்க்கடுப்பு ஏற்படலாம். பொதுவாக மலக்குடலில் இருந்து மலம் வெளியேறும் இடத்தில் எப்போதும் சில கிருமிகள் இருக்கும். தாம்பத்திய உறவின் போது, சிலருக்கு அந்தக் கிருமிகளில் சில சிறுநீர்ப் பாதைக்குள் சென்று விட வாய்ப்பு இருப்பதால், உறவு முடிந்ததும் பெண்கள் கண்டிப்பாக பிறப்புறுப்பை தண்ணிரால் சுத்தம் செய்வதோடு சிறுநீரும் கழிப்பது நல்லது.
சிலருக்கு பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது இருமும்போதோ தானாகவே சிறுநீர் வெளிவந்து விடும். சிறுநீர்ப்பையின் வாயை திறந்து மூடும் தசைகள் பலமிழந்து போவதால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. உடல் பருமன், பிறப்புறுப்பு இறங்குதல் உள்ளிட்ட சில காரணங்களால் இப்படி நேரலாம். சிறுநீர்ப் பையின் தசைகள் இயல்பு நிலைக்கு வருவதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் சர்ஜரி மூலமும் இதை குணப்படுத்தி விடலாம்.
பொதுவாக, சுகப் பிரசவத்தைச் சந்திக்கும் பெண்களில் சிலருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படக் கூடும். குழந்தைப் பிறப்பின்போது விரிவடையும் சிறுநீர்ப்பையின் வாய்ப்பகுதி, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பாததுதான் இதற்குக் காரணம். இவர்கள் பிரசவம் முடிந்ததும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடிவயிற்று தசைகளை பலப்படுத்துவது போன்ற சில பிரத்யேக உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இதைச் சரிசெய்து விடலாம்.
பொதுவாக, சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணிர், இளநீர், வாழைத்தண்டு, ஜூஸ், மோர், பார்லி மற்றும் ஜவ்வரிசி கஞ்சி போன்றவற்றைச் சாப்பிடுங்கள். இவையெல்லாம் அருமையான நம் பாட்டி வைத்தியமுறை சிறுநீர் பெருக்கிகள், பிறகு இதுபோன்ற எந்தப் பிரச்சினையும் உங்களை அண்டவே அண்டாது.'' 
நன்றி: கூடல்.காம்

இஸ்லாத்தில் மனித உரிமைகள்

இஸ்லாத்தில் மனித உரிமைகள் Print E-mail

வானத்தையும், வளம் மிக்க இந்த பூமியையும் உருவாக்கி காத்து, அதன்பால் மனித குலத்தை தழைக்கச்செய்து, அவர்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, ஒருவருடன் ஒருவர் வாஞ்சையுடன் வாழ வழி வகுத்த வல்ல அல்லாஹ்வின் கருணையால் இந்த உலகம் அமைதி பெற வேண்டுமானால், அதற்கு ஒரே வழி இஸ்லாம்தான். ஆம்! உலக அமைதி என்றாவது ஒரு நாள் இஸ்லாத்தினூடாகத்தான் நிறைவேறும். காரணம், இஸ்லாம் மட்டுமே முழுமையான மனித உரிமையை பாதுகாக்கிறது.

இஸ்லாத்தில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்ட விதம் எல்லோரையும் பிரமிக்க வைக்கிறது,

1. ஒருவர் மற்றொருவரின் உயிர் மற்றும் உரிமையை பறிக்கக்கூடாது.

2. யாரும் யாரையும் கேலி செய்யக்கூடாது.

3. அவதூறு கற்பிக்கக்கூடாது.

4. தேவையற்ற பட்டப் பெயர் சூட்டி இழிவு படுத்தக்கூடாது.

5. புறங்கூறக் கூடாது - தரக்குறைவாகப் பேசக்கூடாது.

6. உளவு பார்க்கக் கூடாது.

7. உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கக் கூடாது.

8. ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்னர் சிறையில் அடைக்கக் கூடாது.

9. அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராக வாதிடும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

10. அரசை நடத்துபவர்கள் மக்களின் முன் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.

11. மக்களின் பேச்சிற்கும் கருத்துக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

12. பொது நல விதி முறைகளுக்கு உட்பட்டு கட்சிகள், மன்றங்கள் மூலம் மக்கள் கூடி வாழ உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

13. இறை மார்க்கத்தில் நிர்பந்தமில்லாத தீர்மானிக்கும் உரிமை உள்ளது.

14. பிற சமய உணர்வுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

15. செய்யாத குற்றத்திற்கான தண்டனையிலிருந்து தப்பிக்கப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

16. வறியோர்க்கு வாழ்வாதார உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

17. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை உள்ளது.

18. மக்களால் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் அவர்கள் பங்கு பெற்றுச் செயலாற்றும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

19. சட்டபூர்வமான பாதுகாப்பு அனைவருக்கும் கிட்ட ஏற்பாடுகள் உள்ளன.

20. மனித நேயம், மனித மாண்புகள் பாதுகாக்கப்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

21. அனைவரும் பரந்த மனப்பான்மையுடன் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.

22. சர்வதேச சகோதரத்துவத்தை நிறுவி வாழ இஸ்லாம் அழைக்கின்றது.

23. சமூகத்திற்கு ஊறு விளைவிப்பதை ஒழுக்கக்கேடாக அறிவிக்கின்றது.

24. விபச்சாரம் பெரும் குற்றமாக்கப்பட்டுள்ளது.

25. நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

26. மது, சூது அறவே தடுக்கப்பட்டுள்ளது.

27. எல்லோரும் எத்தருணத்திலும் பொறுமையைக் கடை பிடிக்கப் போதிக்கின்றது.

28. பிறர் நலம் பேணுதல் வலியுறுத்தப்பட்டுள்ளது

29. திருட்டு, பொய், கொலை, மற்றும் கையூட்டு அறவே தடுக்கப்பட்டுள்ளது.

30. இருப்போர் கண்டிப்பாக இல்லாதோர்க்குக் கொடுத்தல் கடமையாக்கப்பட்டுள்ளது.

31. ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

32. பெற்றோர், உடன் பிறந்தோர், உறவினர், அண்டை வீட்டார் உறவுகள் மற்றும் உரிமைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது.

33. நல்வாழ்வை நாட வைக்கும் மரணசிந்தனை, மறுமை நம்பிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

34. விதவைகள் மறுமணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

35. வட்டி வாங்குவதும், கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

36 வரதட்சணை கேட்பதும்,கொடுப்பதும் பெருந்தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட மனித உரிமைகள் எல்லா நாடுகளிலும் பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே இஸ்லாம் கூறும் அமைதி உலகில் ஏற்படும் என்பது திண்ணம்.


source: http://satyamargam.com/1274

திங்கள், டிசம்பர் 27

சாரி ஸ்டாக் இல்லை !

சாரி ஸ்டாக் இல்லை !

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.


எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக PDS 01 BE014என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும். அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

நன்றி
Rafeek A.R.
tamilmuslimbrothers@googlegroups.com

ஞாயிறு, டிசம்பர் 26

பதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ் தலைமையை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

குற்றவாளிகளை மேலும் விசாரணைச் செய்வதால் தங்களின் தலைவர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற கவலையில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆழ்ந்துள்ளது.


1998 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்திய ஸஹசம்பர்க்கா பிரமுக்கும், 2007 முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்திரேஷ் குமார் இந்தியாவில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளுக்கு பண உதவி அளித்ததும், சதித் திட்டங்களை தீட்ட நடந்த ரகசிய கூட்டங்களில் பங்கேற்றதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமைக்கு தெரியாது என்பதை சி.பி.ஐ நம்பவில்லை.

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மட்டுமல்ல அவர்கள் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு திட்டம் தீட்டியதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நெட்வொர்க்கை பயன்படுத்தித்தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


அஸிமானந்தாவை விசாரணைச் செய்தபொழுது சி.பி.ஐக்கு பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரமுகர்களின் பெயர்களும் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. இவர்களிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்டால் மேலும் பல தலைவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகும்.


கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 செப்டம்பர் 29 வரை நீண்ட சதித்திட்டம் இந்திரேஷ் குமாரின் தலைமையில் நடந்திருக்கிறது என்பதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. இதற்காக தயார்செய்த பட்டியலில் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்.


ரகசிய கூட்டங்கள் முதல் குற்றவாளிகளை பாதுகாக்க நடந்த முயற்சி வரை இந்திரெஷிற்கு பங்குண்டு என சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.


சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டன் முதல் மூத்த தலைவர்கள் வரை குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகளாவர்.

குண்டுவெடிப்புகளுக்கு பொருளாதார உதவி, திட்டமிடல், ஒருங்கிணைத்தல், பதுங்கியிருக்க இடங்களை ஏற்பாடுச் செய்தல் உள்ளிட்ட சுப்ரீம் கமாண்டரின் ரோலை வகித்தது இந்திரேஷ்குமார் என்பது சி.பி.ஐயின் விசாரணை அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.


இந்திரேஷ் குமாரை விசாரிப்பதன் மூலம் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு மேலும் தெளிவாகும் என சி.பி.ஐ கருதுகிறது.


தற்போது மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹரியானா, குஜராத் என பல்வேறு மாநிலங்களில் பரந்து கிடக்கும் இவ்வழக்குகளில் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகளின் விசாரணை அறிக்கைகளை ஒன்றிணைத்து கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சியில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது.

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே

ஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே
by செங்கொடி


கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமரிடம் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை விட பழமைவாத இந்து அமைப்புகள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்திருந்தாராம்.
உலகில் பலருடைய, பல நாடுகளுடைய இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருக்கும் விக்கிலீக்ஸ் இதையும் வெளிக் கொண்டுவந்திருக்கிறது. இதுவும் ஒருவிதத்தில் இரட்டை வேடம்தான் என்றாலும் அந்தக் கூற்றில் தவறேதும் இல்லை, சரியானது தான். ஆனாலும், அது முழு உண்மையையும் வெளிப்படுத்திவிட்டதாக கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்து அமைப்புகள் எனும் சொல்லின் பொருளில் காங்கிரசும் உள்ளடங்கியுள்ளது.

பாஜக தொடங்கி ஆர்.எஸ்.எஸ், சிவசேனா உட்பட அனைத்து இந்து அமைப்புகளும், ராகுல் ஒரு கத்துக்குட்டி என்பது முதல் காங்கிரஸ் பொறுப்பற்ற கட்சி என்பது வரை நாளிதழ்களில் அறிக்கைவிட்டு ‘உள்ளேன் ஐயா’ கூறியுள்ளன.

தொண்டர்களோ உருவ பொம்மை எரிப்பதுவரை போய்விட்டனர்.
மோடி, “ராகுல் பாகிஸ்தான் ஆதரவாளர்” என்கிறார்;
வெங்கையா நாயுடு, “பொறுப்பற்ற பேச்சு, இந்தியாவை பலவீனப்படுத்தும்” என்கிறார்:
பால் தாக்கரே, “இந்து மதத்திற்கு எதிரான சகிக்க முடியாத கருத்து” என்கிறார்;
உமாபாரதி, “நேரு குடியரசு அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் க்கு இடம் கொடுத்தார் தெரியுமா?” என்கிறார்;
ஆர்.எஸ்.எஸ், “உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டு தூதரிடம் பேசலாமா?” என்கிறது.
ஆனால் மறந்தும் கூட ஒருவராவது, அவர் சொன்னது தவறு இந்து அமைப்புகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பில்லை என்று கூற மறுக்கிறார்கள். ஏனென்றால் அப்படிக் கூறினால் மக்கள் வேறொரு வாயால் சிரிப்பார்கள் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.

பின் எதற்கு இந்த கூச்சல்?

பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக அடிவாங்கி முடங்கிக்கிடந்த பாஜகவை ஸ்பெக்ட்ரம் ஊழல் விழித்தெழ வைத்தது ஊழலை எதிர்த்து ஏனையோருடன் இணைந்து இருபது நாட்களுக்கும் அதிகமாக இவர்கள் நடத்திய ‘கூச்சல் குழப்ப’ போராட்டத்தினால்(!) மக்கள் மத்தியில் ஊழலை எதிர்ப்பவர்கள் என்று தங்களுக்கு மதிப்பு வந்துவிட்டதாக மிதந்து கொண்டிருந்தவர்களுக்கு, குளிர்கால கூட்டத்தொடர் முடிந்துவிட்டது ஒரு ஆற்றாமையை ஏற்படுத்தியிருந்தது. அதிலிருந்து விடுபட சரியான நேரத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ராகுல் பேச்சை பயன்படுத்திக்கொண்டு அடுத்த சுற்றை தொடங்கிவிட்டனர்.பண்டைக்காலம் முதல் இன்றுவரை இந்துமத அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாகவே இருந்துள்ளன என்பதை யாரால் மறுக்க முடியும்?
பார்ப்பனீயத்தை எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட பௌத்தம், சாங்கியம் போன்றவற்றை தின்று செரித்தது பயங்கரவாதமில்லையா?
நந்தன், வள்ளலாரை எரித்துக்கொன்றுவிட்டு ஜோதியில் கலந்ததாக கதை கட்டிவிட்டது பயங்கரவாதமில்லையா?
வில்லை இனி தொடக்கூடாது என்பதற்காக ஏகலைவன் கட்டைவிரலை வெட்டியெறிந்துவிட்டு குருதட்சனை என்று கூசாமல் கூறியது பயங்கரவாதமில்லையா?
ஒரு கிழவனை இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக்கொண்டு கொன்றது பயங்கரவாதமில்லையா?
இந்தியாவெங்கும் கொலைவெறிபிடித்து நடத்திய கலவரங்கள் பயங்கரவாதமில்லையா?
யாருக்குச் சொந்தமான இடம் என அறுபது ஆண்டுகளாக நடந்த வழக்கில் நாங்கள் அப்படி நம்புகிறோம் ஆகவே உங்களுக்கு இடமில்லை என கட்டப்பஞ்சாயத்து செய்ய‌ வைத்தது பயங்கரவாதமில்லையா?
காலிஃபிளவர் வயலுக்கு இரத்தப்பாசனம் செய்த பகல்பூர் படுகொலைகள் பயங்கரவாதமில்லையா?
எப்படி உயிருடன் எரித்தோம், எப்படி வன்புணர்ச்சி செய்தோம் என செய்முறை விளக்கங்களுடன் சொல்லிக்காட்டிய குஜராத் வெறியாட்டங்கள் பயங்கரவாதமில்லையா?

மக்களில் பெரும்பாலானோரை தீண்டத்தகாதவன் என ஒதுக்கிவைத்திருக்கும் இந்துமதமே பயங்கரவாதமில்லையா?


பிஜேபியினரும் இந்து அமைப்பினரும் குதிக்கத்தொடங்கியதும், நான் அப்படிக் கூறவில்லை எல்லா பயங்கரவாதங்களும் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று தான் கூறினேன் என்று பின்வாங்கியிருக்கிறார் ராகுல். காங்கிரசோ இதில் ஏதோ சதி இருக்கிறது என்று ஐயப்பட்டிருக்கிறது. ஆனால் இதை இவர்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன் சிமியும், ஆர்.எஸ்.எஸ் ம் பயங்கரவாத அமைப்புகள் தான் என்று ராகுல் பேட்டியளித்தார்.
காவி பயங்கரவாதம் என சிதம்பரம் கூறினார். ஆக இது வெளிப்பட்ட ரகசியமல்ல, காங்கிரஸின் தற்போதைய வேலைத்திட்டமே, இந்து அமைப்புகளை பயங்கரவாத அமைப்புக‌ள் என்று தாக்குவது தான்.
இது ஒரு ஓட்டுப்பொறுக்கி அரசியல் உத்தி தானேயன்றி, இந்து அமைப்புகள் என்று தன்னிலிருந்து பிரித்துக்காட்ட காங்கிரஸுக்கு எந்த தகுதியும் இல்லை.தான் ஒரு இந்து சனாதனி என காந்தி அறிவித்துக் கொள்ளவில்லையா?

ஆர்.எஸ்.எஸில் உறுப்பினராக இருந்தவர்கள் காங்கிரஸிலும் உறுப்பினர்களாக, தலைவர்களாக, பிரதமராக‌ இருக்கவில்லையா?காந்தி கொலையினால் தடைவிதிக்கப்பட்டிருந்த R.S.S உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடையை விலக்க காய் நகர்த்தியது காங்கிரஸ்காரகளில்லையா?முஸ்லீம்களா கொள்ளையடிக்கப்பட்ட கோவில் என்று சோமநாத ஆலயத்தை புதுப்பிக்கும் அரசியலைக் கையிலெடுத்து இந்து வெறியை ஊட்டியது இராஜேந்திர பிரசாத் இல்லையா?தற்போதைய பிஜேபி யின் வசனமான பசுவதை தடைச்சட்டம் என்பதை வடமாநிலங்களில் அமலுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் இல்லையா?


உபி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ் டன் இளைஞர் காங்கிரஸும், காங்கிரஸ் சேவாதளமும் இணைந்து படுகொலைகள் புரியவில்லையா?


திருட்டுத்தனமாய் பாபர் மசூதியில் வைக்கப்பட்ட ராமர் பொம்மையை வழிபட கதவைத்திறந்தது ராஜீவ் இல்லையா?


1992 மசூதி இடிப்பின் போது ஒரு லட்சம் ராணுவத்தினர் மசூதியை இடிப்பதற்கு பாதுகாப்பு வழங்கவில்லையா?


பிஜேபி இந்து அமைப்புகளுக்கும், காங்கிரஸுக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்லை. இஸ்லாமிய மக்கள் மீது காங்கிரஸுக்கு எவ்வித அக்கரையும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு இந்து மக்கள் மீது பிஜேபி க்கும் ஒரு அக்கரையும் இல்லை என்பதும் உண்மையே.
எதிரும் புதிருமான கொள்கைகளை கொண்டிருப்பதைப்போல் படம் காண்பிக்கும் இந்த இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது செயல்படுத்திய கொள்கை ஒன்றுதான்.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம். விலைவாசி எட்டமுடியாத உயரத்தில் நிற்பது தொடங்கி, இன்று மலைக்க வைத்திருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல்வரை அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாய் இருப்பது இரண்டு கட்சிகளும் தட்டாமல் செயல்படுத்தும் இந்த பொருளாதாரக் கொள்கைகள் தான். இந்து என்றும் முஸ்லிம் என்றும் கிருஸ்தவம் என்றும் பேதம் பார்க்காமல் லவ்ஹூல் மஹ்பூழ் ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் தீர்க்க தரிசனம் நிறைவேறும் நிமித்தமாக ஏவப்படும் பிரம்மாஸ்திரமாய் உழைக்கும் மக்களைத் தாக்கும் தனியார்மய கொள்கைகளை அட்டியின்றி நிறைவேற்றிவரும் இக்கட்சிகள் நடத்தும் நாடகத்தை சிந்திக்கும் மக்களால் மதிக்க முடியுமா?
மக்கள் கழுத்தறுக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றிக்கொண்டு இந்து என்றும் முஸ்லீம் என்றும் கிருஸ்தவம் என்றும் பக்கம் பிரித்து வரும் இவர்கள் முகத்தில் காறி உமிழாமல் மக்களுக்கு ஒரு விடிவும் இல்லை.

Source;
http://senkodi.wordpress.com/2010/12/20/indu-terrerism

கோபம் செய்யும் கோலம்....

கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மன அழுத்தம். இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார் தான் மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்? காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

எந்திரகதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது!

நம்மை நாமே வெறுக்க நமக்குள் எழும் கோபமே போதுமானது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் `சீரியசாக’ எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரபரப்பின்றி அமைதியாக அணுகிப் பாருங்கள். மனஅழுத்தம் நெருங்காது. மொத்த வேலைகளையும் ஒரே நேரத்தில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லா தவற்றை சாவகாசமாகவும் செய்யுங்கள். இதனால் மன உளைச்சலை தவிர்த்து விட முடியும். பிறகு ஏன் கோபம் வரப் போகிறது?

சில வேலைகள் நீண்டகாலம் இழுத்துக் கொண்டு போகும். அந்த தாமதம் சில நேரங்களில் எரிச்சலைக் கிளப்பும். அப்போது உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாதுதான். எனினும் கோபம் என்பது மற்ற உணர்வுகளைப் போன்று சாதாரண உணர்வுதான் என்று புரிந்து கொண்டு அந்த கோபத்தினையும் பக்குவமாக வெளிப்படுத்துவது புத்திசாலித்தனம். நீங்கள் எதையும் குறித்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் மிகுந்தவராக இருந்தால் வழக்கமாகச் செய்ய வேண்டிய காரியங்களை உங்களால் நிறைவேற்ற முடியாது. அது உங்களுக்கு மனஉளைச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். அதனால் முக்கியமான வேலைகளை முறையாகச் செய்யாமல் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக செய்து பிரச்சினைக்குள்ளாவீர்கள்.

“வேலைக்கு கிளம்பும்போது கடைசி பஸ், ரெயிலை தவறவிட்டுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறதா? அலுவலகத்தில் உயர் அதிகாரியோ, உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? உறவினர்கள், நண்பர்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா? அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா? இப்படி நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு எளிதாக கோபம் வந்துவிடும்.

கோபம் ஏற்படுவதற்கான உள்ளார்ந்த அடிப்படைக் காரணங்களை நீங்கள் புரிந்து கொண்டால் அவற்றிலிருந்து உங்களை எளிதாக விடுவித்துக் கொள்ள முடியும். கோபம் ஏற்படும் சூழ்நிலைகளைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருக்கச் சொல்லும் உங்கள் அறிவுதான் உங்களது கோபத்தினை அடக்குவதற்கான முதற்படியாகும்.

கோபப்படும் போது உங்கள் உடலில் ஏற்படும் அங்க அசைவுகளைக் கவனியுங்கள். நரம்புகள் முறுக்கேறுதல், அதிகப்படியான இதயத்துடிப்பு, வியர்வை வழிந்தோடல் ஆகியவற்றினை கோபப்படும் போது உணரலாம். இத்தகைய அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் போதே நீங்கள் கோபத்தினை அடக்க முயற்சி செய்வது நல்லது.

கோபம் ஏற்படும் இம் மாதிரியான சூழ்நிலைகளில் இருந்து விலகி நீங்கள் வேறு இடத்திற்கு சிறிதுநேரம் கால்நடையாக உலாவச் செல்லலாம். உங்கள் நண்பர்களுள் ஒருவரைச் சந்தித்து சிறிது நேரம் அரட்டையடிக்கலாம். அல்லது நாம் இனிமேல் கோபப்படவே கூடாது என்று உங்களுக்குள்ளாகவே உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம்.

கோபம் தான் சிறைகளை நிரப்புகிறது. கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது என்பதை உணருங்கள்.நன்றி
மொஹம்மட் நவாஸ் மொஹம்மட் ஸமீர்

நதியலை

பெண்ணுக்கு நாணம் வேண்டும்

பெண்ணுக்கு நாணம் வேண்டும்
வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும் ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும்.

இறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம், நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமான செயல்களில் பெண்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர். மேலை நாடுகளில் விடை பெற்று விட்ட இந்த வெட்க உணர்வு தற்போது கீழை நாடுகளிலும் விடைபெறத் துவங்கி விட்டது. அதன் அதிவேக வளர்ச்சி இஸ்லாமியப் பெண்களையும் தொட்டுவிட்டது. அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர் சுற்றுவது கவர்ச்சிகரமான அலங்காரங்களை செய்து கொண்டு வீதிகளில் உலா வருவது என்று பல அநாகரீகச் செயல்கள் இஸ்லாமிய பெண்களிடம் ஒட்டிக் கொண்டு விட்டது. வெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஈமான் உள்ளவரிடம் வெட்கம் இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களும். அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும் உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள் அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா? அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா? கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அலங்காரத்தை உலகமறியக் காட்டுவது தான் நாகரீகமா? நங்கையர்களின் நாட்டம் தான் என்ன?

கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் அனுமதி பெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, கன்னிப் பெண்ணின் அனுமதி எப்படி? (அவள் வெட்கப் படுவாளே) என்று நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவள் மவுனமாக இருப்பதே அனுமதி என்று கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5136

அனுமதிக்கப்பட்ட ஒன்றிற்குக் கூட ஆம் என்று பதில் சொல்ல வெட்கப்பட்ட தீன்குலப் பெண்களின் நாணம் எங்கே? இந்தப் பெண்கள் எங்கே?

நல்ல ஆண்களைக் கூட கெடுக்கும் வண்ணம் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டும் நறுமணப் பொருட்களை பூசிக் கொண்டும் செல்வதால் கெட்டுப் போவது பெண் மட்டுமா? நல்ல ஆண்களும் கூடத் தானே? வெட்கமில்லாமல் அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தும் இப்பெண்கள் அண்ணலாரின் பொன் மொழிக்குச் செவி சாய்ப்பார்களா?

நறுமணம் பூசி, தன் கணவனை மயக்கச் செய்யவே ஒரு பெண்ணுக்கு அனுமதியுண்டு. அதை விடுத்து தெருத் தெருவாக வீட்டில் உள்ளவர்களை வெளியில் வரவழைக்கும் வண்ணம் நறுமணம் பூசிச் செல்வது விபச்சாரியின் செயலுக்குச் சமமில்லையா? ஊரிலுள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பார்க்கின்றார்கள் என்ற வெட்க உணர்வும் இல்லையா? எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோ அப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 760

கடமையான தொழுகையில் கூட நறுமணம் பூசிக் கொண்டு பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்குக் காரணம், அதனால் மற்ற ஆண்களின் பார்வை அங்கு செல்லும் என்பதை விட வேறு என்னவாக இருக்கும்? வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன? வெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர் சுற்றியது தானே!

எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத் 109)

ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 3281

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் தன் வேலையைக் காட்டுகிறான். இதை நிதர்சனமாக நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

(அல்குர்ஆன் 24:31)

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண் களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 33:32-35)


தீன்குலப் பெண்களாக நாம் வாழ வேண்டுமானால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம் மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும் அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடிப்பவர்களாகவும், ஜகாத் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டபடி நடக்க வேண்டும். தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையை விடக் கனமானது எதுவும் இருக்காது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹ்மத் (26245), அபூதாவூத் (4166)

நன்மையும் தீமையும் நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டைத் தாழ்த்தும் பணியில் ஒழுக்கவியலின் பங்கு ஒப்பிட முடியாதது என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது. மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, இறையச்சமும் நன்னடத்தையுமே என பதிலளித்தார்கள். நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்? என கேட்கப்பட்ட போது, வாயும் பாலுறுப்பும் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: அஹ்மத் (7566), திர்மிதீ (1927), இப்னு மாஜா (4236)

நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நடக்கும் நல்லொழுக்கமுள்ள பெண்களாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!

thanks
deengulappenmani.