Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

Labels

.

இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 7

Islam chat-நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு பயணம்


Islam chat-நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு பயணம்

புரிந்தவர்கள் போற்றுகிறார்கள், 
பிடித்தவர்கள் தழுவுகிறார்கள், 
புரியாதவர்கள் குழம்புகிறார்கள், 
பிடிக்காதவர்கள் தூற்றுகிறார்கள். 

இதுதான் இன்று இஸ்லாம் நோக்கியுள்ள காட்சிகள். 
எங்கே தெளியும் என்று ஏக இறைவனுக்கே வெளிச்சம் 
உடனே டக்குனு I Accept Islam அப்படினு சொல்லி ஜாகிர்நாயக் முன்னிலையிலோ சவுதி பேரரசிலோ தனது விருப்பத்தை தெரிவித்து கலிமா சொல்லிவிடுகிறார்கள்.
எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் குர்ஆன் படிக்கும் வாய்ப்பு கிடைத்து ஆள் எஸ்கேப் From Eternal Life's Punishment. 
பாவம் சில பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் நரக நெருப்புக்கு முழு உடலையும் தானம் செய்து விடுகிறார்கள். 
அந்த அளவுக்கெல்லாம் நமக்கு தியாகம் செய்ய முடியாதுப்பா.

Wayne Parnell, Cricket Player இஸ்லாத்தை தழுவியதை சமீபத்தில் படித்திருப்பீர்கள். ஆனால் எனக்கு தெரியாது, லேட்டாதான் அறிந்தேன். (தமிழ் வாழ்க)
ஜனவரியில் தழுவினார், ஜூலையில் அறிவித்தார். இரண்டுமே 2011ல்தான்...விளையாட்டு பிள்ளைதானே....விளையாட்டாய் சொல்றாங்களோ என்னவோனு கூட...
அதன் நிமித்தமாக.....
You tube ல்அந்த Player ரின் Video Play பன்னி பார்க்கும்போது, இறுதியில் ஒரு இணையமுகவரியை பரிந்துரைத்தார். அது ஏற்கனவே பிரபலமான ஒன்று என்றாலும், எனக்கு தெரியாமல் போனது ஒரு பிராப்ளம்தான். 

அந்த இணைய முகவரிதான் இது


இஸ்லாம் என்ற வெளிச்சத்திலிருந்து விலகி இருப்போருக்கு இஸ்லாத்தில்இணைய இந்த இணையம் கூட காரணமாகலாம். 
இதை அவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் நாமும் ஒரு மூலகாரணமாகலாம். 
அப்பறம் என்ன கியாமத் டேய்ஸ்ல ஒரே ஜாலிதான் :-)
எனக்கும் ஒரு ப்ளாக் இருந்தால் இதை அதில் டிஸ்ப்ளே பன்னுவேன். இப்ப இங்கே Supply பன்றேன்.

நானும் இந்த சைட்ல போயி பார்த்தேனே..,Live Chat la போனவுடனே ஒருத்தங்க வந்து Welcome பன்றாங்க. ஒரு வேள அல்ரெடி Auto Message சா இருக்குமோனு Typical ல இல்லாமல் ஒரு டைப்பா சில கேள்விகள் கேட்டு பாத்தேன். கரெக்ட்டான ரியாக்‌ஷந்தான் வந்துச்சு. 
Non Muslim க்குதான் அங்கே முக்கியத்துவம், நான் முஸ்லீம்தானே Non Muslim இல்லையே.... அதனால் அயம் எஸ்கேப் From there.

Non Muslim & New Muslim களுடன் இஸ்லாம் குறித்து சந்தேகங்கள் குறித்து சாட்டிங்க பன்றதுக்கு 24 நேரமும் யாராவது காத்துகிட்டு இருக்காங்க. 
மாஷாஅல்லாஹ். அருமையான சேவை. இதை அப்படியே பாஸ் பண்ணினால், மறுமையில் நாம் பாஸ் இன்ஷாஅல்லாஹ்...

_______________________
என் நண்பன் மெயிலில் எனக்கு supply பண்ணத நான் என் ப்ளாக்கில் டிஸ்ப்ளே பண்றேனுங்க :-)

-சகோதரி.ஆமினா

சனி, செப்டம்பர் 10

முன்மாதிரி கிராமம்- வி.களத்தூர்


வரதட்சணை என்ற கொடி நோயை விரட்டி நாட்டிற்கே நல்ல முன் மாதிரியாகவும் பல ஊர்களுக்கும் முன்னோடியாக விளங்கி வருவது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.களத்தூர் கிராமம்.

1999-லேயே வி.களத்தூரில் வரதட்சணை ஒழிப்புக்கான கருத்தாய்வு செய்யபட்பட்டு இதற்கான முன்வடிவை ஐமாஅத் ஒருங்கிணைந்த வி.களத்தூர் முஸ்லிம் பொதுமக்கள் கொண்டுவந்தனர். இது பலவிதமான பரீட்சார்த்த முறைகளை கண்டறிந்து சோதனைக் காலமாக இரண்டு வருடம் நடைமுறைப்படுத்திää பின் இறுதிகட்ட வடிவைக் கண்டது. இறுதிக் கட்டவடிவை ஒரு சட்ட நூலைப் போல் உண்டாக்கி அதை வி.களத்தூர் முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் விநியோகித்தனர். அதன் பிறகு வரதட்சணை எனும் கொடிய நோய் அல்லாஹ்வின் அருளால் வி.களத்தூரிலிருந்;து விரட்டியடிக்கப்பட்டு விட்டது.

திருமணத்தின்போதே வரதட்சணை வாங்கவோ கொடுக்கவோ இல்லை என்றும் இனியும் வாங்கவோ கொடுக்கவோ மாட்டோம்  என்றும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதிமொழி வாங்கிவிடுகின்றனர்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சி; தேநீர் பிஸ்கட்டுடன் எளிமையான முறையில் நடைபெற முறைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் அழைப்புதிருமணத்திற்கு பிறகான விருந்து போன்ற இன்னபிற ஆடம்பர செலவினங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது அங்கே பெண் கொடுப்பதும் வாங்குவதும் எளிதாகிவிட்டது. இவ்வூரின் சமுதாய சீர்திருத்தத்தைக் கண்ட பெரம்பலூர் மாவட்டத்தின் பிற ஊர்களும் நடைமுறைப் படுத்திவருகின்றனர். அங்கும் வரதட்சனை ஒழிப்பு நூல் வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்பது வி.களத்தூர் ஐமாஅத் மற்றும் இளைஞர்களின் முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

இவை அனைத்தும் வி.களத்தூரில் நடைமுறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு
வருகிறது.  தற்போது ரமளானில் இருந்து  ஜகாத் பவுண்டேஷன் செயல் பட துவக்கியுள்ளார்கள்.இந்நடைமுறைகள் அனைத்து ஜமாஅத்களிலும் செயல்படுத்தபட வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி துஆ செய்தவனாக வி.களத்தூர் ஜமாஅத்தினர்களையும் எமது திருபுவனம் வலைதளம் சார்பாக பாராட்டுகிறேன்.

தனக்கு என்று வாழ்வதைவிட நமக்கு என்று வாழ்வது சிறப்பு, அதனினும் நம் சுற்றத்தாரின் துயர் துடைக்க பொதுநலனுக்காக வாழ்வது சிறப்பு. அந்த நல்ல சிந்தனையை மனதில் கொண்டு நமதூர் சகோதரர்களால் வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஜக்காத் பவுண்டேஷன் நமதூரில் ஒரு புதிய புரட்சி ஒன்றை மலரச்செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ்…
இந்த ஜக்காத் பவுண்டேஷன் அமைப்பதற்காக கடந்த வாரம் புஷ்ரா, ஐஎம்சிடி மற்றும் பொதுச்சேவையில் நாட்டம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பினை ஏற்று அனைவரும் வருகை தந்தனர். வெள்ளிக்கிழமை (05.08.2011) இரவு துபை பிஸ்மில்லா ரூம் மாடியில் கூட்டம் நடந்தது. சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் என்ற அமைப்பு உறுவாக்கப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த ஜக்காத் பவுண்டேஷன் மூலமாக நமதூர் மக்களிடம் அவர் அவர்களின் ஜக்காத் தொகை மற்றும் சதக்காவினை வசூல் செய்து நமதூரில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு கொடுத்து அவர்களை ஏழ்மையில் இருந்த வெளிவரச்செய்வது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த அரவனைப்பின் மூலம் அடுத்த அடுத்த ஆண்டுகளில் அவர்கள் மற்றவர்களுக்கு ஜக்காத் தரக்கூடிய சூழலை உருவாக்க நாடியுள்ளது. இன்ஷா அல்லாஹ்..
இந்த ஜக்காத் பவுண்டேஷன் பற்றி உங்களுக்கு சில கேள்விகள் தோன்றும் அதாவது முதலில் நமது சொந்த பந்தங்களுக்கு ஜக்காத் கொடுப்பது தானே சிறப்பு. இந்த அமைப்பிற்கு நாம் நம்முடைய ஜக்காத் தொகையை கொடுத்துவிட்டால் ஜக்காத் வாங்குவதற்காக நமது வீடு தேடி வரும் நமது சொந்த பந்தங்களுக்கு என்ன செய்வது, அவர்களுக்கு எப்படி இல்லை என்று சொல்வது, நாம் கொடுக்கும் தொகையை நமது சொந்த பந்தங்களுக்கு கொடுப்பார்களா? என்று என்ன தோன்றும். ஜக்காத் தொகையை நமது சொந்த பந்தங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் அது தான் சிறந்ததும் ஆகும். ஆனால் நீங்கள் கொடுக்கும் சிறு தொகையை வைத்து அவர்களுக்கு அன்றாட வாழ்விற்குத்தான் சரியாக இருக்கும். அதுவே அனைத்து ஜக்காத் தொகையும் ஒன்றாக இனைத்து கொடுக்கும் போது அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுவதோடல்லாமல் ஏழ்மையில் இருந்து விடு பட ஏதுவாக இருக்கும்.
அதற்காக இதுவரைவந்து ஜக்காத்தை வாங்கி சென்றவர்களிடம் இல்லை என்று சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் கொடுங்கள் உங்களுடைய ஜக்காத் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது சதக்காவாக நமது ஜக்காத் பவுண்டேஷனுக்கு கொடுங்கள். இந்த வருடம் நாம் செய்ய இருக்கும் வினியோக முறைகளைப் பார்த்து அடுத்தடுத்த வருடங்களில் ஜக்காத் தொகை கூடுதலாக வரும்போது நமதூரை எழைகளே இல்லாத ஊராக மாற்றலாம். இது சற்றென்று முடியும் காரியமல்ல என்பது எல்லோருக்கும் தெரியும் சில வருடங்கள் ஆகலாம் ஆனால் மாற்ற முடியும் ஆண்டவன் உதவியுடன்.
நீண்ட, நெடிய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த ஜக்காத் பவுண்டேஷன் நிறுவப்பட்டுள்ளது. இது எந்த ஒரு சேவை அமைப்பையும் சார்ந்ததல்ல நமதூருக்கு பொதுவானது. நமதூரின் சேவை அமைப்புகளின் பிரதிநிதிகளையும் பொதுச்சேவை மணம் கொண்டவர்களையும் மார்க்க ஆலோசனைகளுக்காக ஆலிம்களையும் இனைத்து நமதூருக்காக துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வசூல் செய்யப்படும் அனைத்து ஜக்காத் மற்றும் சதக்காக்களை முறையாக வினியோகம் செய்ய இருக்கிறார்கள். வரவு செலவுகள் முறையாக ஆடிட்டிங் செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
இந்த வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் தலைவராக மௌலவி. எம்.ஹெச். நூருல்லாஹ், அவர்கள் செயல்படுவார்கள். துபையில் ஜனாப். எப். அலிராஜா, ஜனாப். சேட் சர்புதீன் (வி.களத்தூர் துபை சங்க துணை தலைவர்) சகோதரர் பி. அஹமது அலி (தலைவர் ஐஎம்சிடி), எப். அப்துர் ரஹ்மான் (பொருளாளர் புஷ்ரா சேவை அமைப்பு) ஆகியோர் நிர்வாகிகளாக செயல் படுவார்கள்.
2:277 إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
1403. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய புதையல்” என்று கூறும்.”
இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆதாரம் : ஸஹீஹ் புஹாரி 1403
உங்களுடைய ஜக்காத் தொகை கீழ்கண்ட நபர்களிடம் கொடுக்கவும்.
துபை
1. எப். அலிராஜா மொபைல் – 050 6523501
2. சேட் சர்புதீன் மொபைல் – 055 9828616
3. பி. அஹமது அலி மொபைல் – 050 5848935
4. எப். அப்துர் ரஹ்மான் மொபைல் – 050 6402386
அபுதாபி
1. நூருல் ஹக் மொபைல் – 050 5660780
2. கெ. அப்துல் ஹக்கீம் மொபைல் – 050 3440786
3. எம். ஜாபர் சாதிக் மொபைல் – 050 7565955
ராசல் கைமா
1. ஜெ. பாருக் மொபைல் – 055 4434452
2. எஸ். சாதிக் பாஷா மொபைல் – 050 3230329
சார்ஜா
1. எ. சேக் தாவுத் மொபைல் – 055 4813518
சவுதி அரேபியா
1. பி. அப்துல் காதர் மொபைல் – +966558930403
2. நூர் முஹம்மது மொபைல் – +966595957492
கத்தார்
1. அப்துல் சுபஹான் மொபைல் – +97455201235
குவைத்
1. முஹம்மது யூனுஸ் மொபைல் – +96597239359
பஹ்ரின்
1. அன்ஸர் பாஷா மொபைல் – +97339774852
தாங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்களோ அந்தந்த நபர்களை தொடர்பு கொண்டு உங்களின் ஜக்காத் தொகை அல்லது சதக்காவை கொடுக்கவும். முக்கியமா ஜக்காத் கொடுத்தால் ஜக்காத்திற்கா என்றும் சதக்கா கொடுப்பதாக இருந்தால் சதக்கா என்றும் தெளிவாக சொல்லி கொடுக்கவும்.
உங்களுடைய ஜக்காத் தொகையை கணக்கிடுவதில் ஏதும் சந்தேகம் இருந்தால் மௌலவி எம்.ஹெச் நூருல்லாஹ் ஹஜ்ரத் அவர்களிடம் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு 050 3486824
ஜஸாக்கல்லாஹ் கைர்:

முஸ்லிம்கள் பெரும்பாண்மையான ஜமாஅத்களில் இது நடைமுறை சாத்தியம்தான். 
முயற்சி செய்யுங்கள் சகோதரர்களே! 
வல்ல அல்லாஹ் துணையிருப்பானாக! 

வெள்ளி, ஆகஸ்ட் 19

வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ரமழான் புகட்டும் பாடமிது


வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ரமழான் புகட்டும் பாடமிது


Poor

புனித ரமழான் முஃமின்களுக்கு புகட்டி நிற்கும் பாடங்கள், படிப்பினைகள் அது வழங்கும் பயிற்சிகள் மிக மகத்தானவை.

உண்மையில் முஃமின்கள் புனித நோன்பினால் அடையும் நன்மைகள் ஏராளம். நோன்பானது உடல் உள, ஆன்மிக ரீதியாகவும் முஃமின்களுக்கு பயன் அளிப்பதனை, பல் நன்மைகளை வழங்குவதனை காண்கின்றோம்.

புனித நோன்பு பசியின் கொடுமையை, வறுமையின் வன்மையை ஒவ்வொருவருக்கும் மானசீகமாக, செயல்முறையில் உணர்த்தி நிற்கும் பாங்கு எவ்வளவு அற்புதமானது? பசியின் ருசியை அறியாது தாகத்தின் கசப்பை உணராது சுக போகத்தில் வாழ்ந்த ஒருவன் எல்லா மனிதர்களும் தன்னைப் போன்றே வாழ்கின்றார்கள் என்று நினைக்கலாம். ஆனால், நோன்பு இத்தகைய மனிதனுக்கும் பல உண்மைகளை நிதர்சனமாக உணர்த்தவல்லதாக அமைகின்றது.

உண்மையான சமவுடைமைக்கும் பூரண சமத்துவத்திற்குமான தெளிவான வெளிப்பாடாக நோன்பு இருக்கின்றது என்றால் அது மிகைப்படக் கூறியதாக அமையாது. அல்லாஹ் நோன்பை அறிமுகப்படுத்தி அனைவருக்குமான வரியாக விதித்துள்ளான். இந்த வரியை மாட மாளிகையில் வாழும் குபேரனும் செலுத்த வேண்டும். குடிசையில் வாழும் பாமர ஏழையும் கொடுக்க வேண்டும்.

காய்ந்த குடல்களை, காலியான வயிறுகளை, பசியின் அகோரத்தை தணித்துக் கொள்ளத் துடிக்கும் ஜீவன்களை அனைவரும் நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது. நோன்பு உள்ளம் உருகி, மனம் கசிந்து, ஏழைகளின் கண்ணீர் துடைக்க வேண்டும் என்ற உணர்வு எல்லோர் உள்ளங்களிலும் பிரவாகம் எடுக்க புனித நோன்பு வழி அமைக்கின்றது.


நபி யூஸுப் (அலை) அவர்கள் எகிப்து நாட்டின் வளங்களுக்கும் நிதித்துறைக்கும் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் அதிகம் நோன்பு நோற்று வந்தார்கள். இதற்கான காரணம் அவர்களிடம் வினவப்பட்ட போது அவர்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்தது.'நான் சாப்பிட்டு பசியாறிய நிலையில் இருந்தால் ஏழையின் பசியை மறந்து விடுவேனோ என்று பயப்படுகின்றேன். அதனால் அதிகம் நோன்பு நோற்று வருகின்றேன்' என்றார்கள்.

புனித ரமழானில் நாங்கள் அனுஷ்டிக்கும் நோன்பு சமூகத்தில் உள்ள ஏழைகள், அநாதைகள், அகதிகள் போன்றோர் மீது எங்களில் கருணை பிறக்க வழியமைக்க வேண்டும். அது எங்களில் ஈகையை வளர்க்க வேண்டும். நபி(ஸல்) அவர்களும் ஏனைய காலங்களை விட ரமழானில் அதிகமாக தானதர்மங்களை செய்பவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கொடை கொடுப்பதில் மனிதர்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள். குறிப்பாக அன்னார் ரமழானில் மிகக் கூடுதலாக வாரி வழங்கும் தன்மை படைத்தவர்களாக இருந்தார்கள் என அறிவிக்கின்றார்கள் நபித்தோழர்கள்.

'தர்மத்தில் சிறந்தது ரமழானில் வழங்கப்படும் தர்மமாகும்' என்றும் நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சமூகத்தில் அனாதரவற்றோரின் அவலங்களை நினைத்துப் பார்ப்பது, அவர்களின் துயர் துடைக்க முடியுமான வழிகளில் முனைப்புடன் செயற்படுவது ஒரு பொறுப்பான சன்மார்க்கக் கடமையாகும் என்பதனை நாம் உணராமல் இருக்கக் கூடாது.

வறுமை மிகவும் கொடியது. அதனால் விளையும் ஆபத்துக்கள் பயங்கரமானவை.

வறுமையானது ஈமானுக்கே சவால் விடக்கூடியதாகும். பயங்கர வறுமையானது ஒருவனின் ஈமானையே பறித்து விடாது என்று கூறுவதற்கில்லை. இதனால்தான்

'வறுமையானது குப்ரையும் ஏற்படுத்திவிடக் கூடியது' என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

குப்ரிலிருந்து பாதுகாப்புத் தேடிய நபியவர்கள் அதனுடன் இணைத்து 'பக்ர்' என்ற வறுமையில் இருந்தும் பாதுகாப்புத் தேடியமை அவையிரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பையே எடுத்துக் காட்டுகின்றது.

வறுமையானது மனிதனின் ஈமானுக்கு மாத்திரமன்றி அவனது நடத்தைக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்தாக அமைவதுண்டு.

வறுமை ஒருவனை இழிசெயல்களுக்குத் தூண்டலாம். பண்பாடற்ற துர்நடத்தைகளுக்குத் தூண்டலாம். முறைகேடான விடயங்களில் ஈடுபடத் தூண்டலாம்.

'ஒருவன் கடன்காரனாகி விட்டால் பேசினால் பொய் சொல்லக் கூடும், வாக்களித்தால் மாறு செய்யக் கூடும்' என்று சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள்.

கொடிய வறுமையானது மனிதனின் சிந்தனையையும் அறிவையும் கூட பாதிக்க முடியும். இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: 'வீட்டில் உண்பதற்கு கோதுமை மா இல்லாத நிலையில் இருப்பவனிடம் சென்று ஆலோசனை கேட்காதே'

ஏனெனில் வீட்டில் உண்ண உணவின்றி இருப்பவன் சிந்தனை சிதறி அறிவு கெட்ட நிலையில்தான் இருப்பான். இந்த அடிப்படையில்தான் ஒரு நீதிபதி பசியுடன் இருக்கும் போது தீர்ப்புகள் வழங்கக் கூடாது என இஸ்லாமியச் சட்ட அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

குடும்ப அமைப்பின் சீர்குலைவுக்கும் வறுமையானது பல வழிகளிலும் காரணமாக அமைவதுண்டு. ஆரம்பமாக திருமணத்திற்கே தடையாக அமையும் வறுமை பின்னர் குடும்பங்கள் சிதறுவதற்கும் சீரழிவதற்கும் எவ்வளவு தூரம் வழி கோலுகின்றது என்பதனை நாம் அறிவோம்.

இத்தகைய பேராபத்துக்களை விளைவிக்கக் கூடிய வறுமை, ஒரு சமூகத்தில் நிலவுவது எவ்வளவு பயங்கரமானது? என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தப் பாரதூரமான ஆபத்தை நீக்க முயல்வது எத்தகைய மகத்தான பணியாக, நன்மையைத் தரக் கூடிய அமலாக அமையுமென்பதை நாம் உணரத் தவறக்கூடாது.

சமூகத்தில் உள்ள அநாதரவானவர்களை அரவணைக்காதவர்கள் அநாதைகளைப் பராமரிக்காதவர்கள் மார்க்கத்தையே பொய்ப்படுத்துபவர்கள் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். இத்தகையவர்கள் தொழுபவர்களாகவும் நோன்பு நோற்பவர்களாகவும் இருந்தாலும் சரியே.

இஸ்லாம் அநாதைகள் விடயத்தில் கூடிய கரிசனை காட்டுகின்றது. ஸூறதுல் அன்பியாவின் 41 வது வசனம், ஸூறதுல் ஹஷ்ரின் 7வது வசனம், ஸூறதுல் பகராவின் 177, 215, 82, ஸூறதுன்னிஸாவின் 36வது வசனம் போன்ற பல அல்குர்ஆன் வசனங்கள் அநாதைப் பராமரிப்பின் அவசியம் பற்றி வலியுறுத்துகின்றன.

தீனைப் பொய்ப்பிக்கின்றவன் யார்? என்பதனை விளக்க வந்த ஸூறா அல்மாஊன்:

''அவன்தான் அநாதைகளைக் கடிந்து விரட்டுபவன்'' என்று கூறுகின்றது.

ஏழைகளை ஆதரிக்காதவனும் வறுமையை ஒழித்துக் கட்டத் தனது பங்களிப்பைச் செலுத்தாதவனும் தீனை உண்மைப்படுத்தாதவனாகவே கொள்ளப்படுகின்றான். மார்க்கத்தைப் பொய்ப்பிக்கின்றவனைப் பற்றி குறிப்பிடும் ஸூறா அல்மாஊன்:

''அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டவும் மாட்டான்'' என்று கூறுகின்றது.

இங்கு, அல்லாஹுத்தஆலா தானும் ஏழைகளுக்கு உணவளித்து பிறரையும் அதன் பால் தூண்டி வறுமையை ஒழித்து பசியை விரட்டும் பணியில் ஈடுபடாதவரைப் பற்றியே குறிப்பிடுகின்றான். தனிப்பட்ட முறையில் தானும் ஏழைகளுக்கு உணவளிக்கும் அதே நேரத்தில் பிறரையும் பிறரையும் அதற்காகத் தூண்டி வறுமை ஒழிப்பு முயற்சியை ஓர் அமைப்பாக கூட்டாக மேற்கொள்ளும் விடயத்தில் ஒருவர் தனது பங்களிப்பை செலுத்தாத வரை மார்க்கத்தைப் பொய்ப்பிப்பவராகவே கருதப்படுகின்றார்.

அல்குர்ஆன் மற்றும் பல இடங்களிலும் இதே கருத்தை வலியுறுத்துகின்றமையைக் காண முடிகின்றது.


''நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை விசுவாசிக்கவில்லை. ஏழைகளுக்கு ஆகாரமளிக்கும் படி தூண்டவுமில்லை. ஆகவே, இன்று அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இல்லை. புண்களில் வடியும் சீழைத் தவிர அவனுக்கு வேறு ஆகாரமும் இல்லை எனக் கூறப்படும். அதனைக் குற்றவாளிகளைத் தவிர வேறு எவரும் புசிக்க மாட்டார்கள்''

''ஜாக்கிரதை! நீங்கள் அநாதைகளை கண்ணியப்படுத்து வதில்லை. ஏழைகளுக்கு உணவளிக்கும் படி தூண்டுவதும் இல்லை. பிறருடைய வாரிசுப் பொருளைப் பேராசையுடன் விழுங்குகின்றீர்கள். மேலும், நீங்கள் மிகவும் அளவு கடந்து பொருளை நேசிக்கின்றீர்கள்''என்றெல்லாம் அல்குர்ஆன் கண்டிக்கின்றது.


தான் தனிப்பட்ட முறையில் தனி மனிதன் என்ற வகையில் தன் மீதுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றினால் போதுமானது, சமூகக் கடமைகளை நிறைவேற்றும் தேவை தனக்கில்லை என நினைத்துச் செயற்படுவோருக்கு இந்த வசனங்கள் பெரும் சாட்டையடி கொடுக்கின்றன.

உண்மையில் அநாதைகளை அரவணைக்கத் தூண்டாத வணக்கங்கள், ஏழைகளை ஆதரிக்கத் தூண்டாத இபாதத்கள் போலியானவையும் பகட்டானவையுமாகும். இத்தகைய வணக்கங்களால் நன்மையன்றி கேடே விளையும் எனக் கூறுகின்றது அல்குர்ஆன்.

நாம் நிறைவேற்றும் தொழுகையும் அனுஷ்டிக்கும் நோன்பும் பிற வணக்கவழிபாடுகளும் எமது உள்ளங்களுக்கு பக்குவத்தையும் பண்பாட்டையும் வழங்கி சகோதர மனிதர்களுக்கு நன்மை செய்ய, நல்லது செய்ய தூண்டுபவையாக அமைய வேண்டும். அப்போதுதான் இபாதத்துகள் அர்த்தமுள்ளவையாக, நன்மை பயக்கக் கூடியவையாக அமையும்.

'எவர் ஒரு முஃமினின் இவ்வுலக கஷ்டமொன்றை நீக்கி வைக்கின்றாரோ அல்லாஹ் அவரை விட்டும் மறுமையின் கஷ்டமொன்றை நீக்கி வைப்பான். எவர் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவுகின்றாரோ அல்லாஹ் அவருக்கு உலகிலும் மறுமையிலும் கஷ்டங்களை நீக்கி வைத்து உதவுவான். மேலும், எவர் (ஆடை கொடுத்தோ அல்லது குறைகளை மறைத்தோ) ஒரு முஸ்லிமின் மானத்தை மறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது மானத்தை ஈருலகிலும் மறைப்பான். ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கின்றான்'

ஈகையினதும் கருணையினதும் மாதமான இந்த புனித ரமழானில் சமூகத்தில் உள்ள வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி இந்த நபிமொழி குறிப்பிடும் ஈருலக பாக்கியங்களை நிறைவாகப் பெற்றுக் கொள்ள முயல்வோமாக.

திங்கள், ஆகஸ்ட் 15

இனியாவது விழித்து கொள்வோமா?

இனியாவது விழித்து கொள்வோமா?






வருடத்திற்கு ஒரு ரமளான் வருகிறது. முப்பது நாட்கள் நோன்பு வைக்கிறோம். இறுதியாக ஒருபெருநாள் தொழுகை. எல்லாம் முடிந்து விட்டது. இனி என்ன வேலை? என்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புபவர்கள் நிறைய பேர் நம்மிலே உள்ளார்கள்.

இதற்குக் காரணம் என்னவெனில் ரமளானின் முக்கியத்துவம் தெரியவில்லை. ரமழானில் நாம் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை.

ஆம் சகோதரர்களே! ரமளானில் நாம் ஜெயிக்க வேண்டாமா?

ஒவ்வொரு வருடமும் நம்மைத் தாண்டிச் செல்லும் புனிதமிக்க ரமளானை நாம் சரியாகப் பயன்படுத்துவதே ரமளானில் நாம் ஜெயித்துவிட்டோம் என்பதற்கான சரியான பதிலாக இருக்க முடியும்.

பொதுவாக நாம் ஒவ்வொரு வருட ரமளானிலும் செய்யும் காரியங்களை பட்டியல் போட்டுப் பாருங்கள். என்னெவெல்லாம் கடந்த ரமளானின் தினங்களில் செய்தோம் என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள முடியும்.

அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து ஸஹர் உணவை நேர காலத்தோடு உண்டுவிட்டு அவசர அவசரமாக சென்று படுத்துறங்குகிறோம்/அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படியானால் சுப்ஹுத் தொழுகை? அதன் கதி அதோ கதிதான்.

பகலில் லுஹர் தொழுகைக்கு முன் எழுந்து, அதன் பின்னர் நம்முடைய மற்ற காரியங்களை செய்ய ஆரம்பிக்கிறோம். பெரும்பாலும் லுஹர், அசர், மஃரிப், இஷாவுடன் சேர்த்து இரவுத் தொழுகை என்று மற்ற தொழுகைகளை எப்படியோ தொழுது விடுகிறோம்.
அதிலும் சிலருக்கு லுஹர் தொழுகை உண்டு. அதன் பின் ஒரு தூக்கம் போட்டால் அசர் இல்லை. நோன்பு திறப்பதற்குத் தான் கண் விழிப்பார்கள்.

இஷா தொழுகையுடன் சேர்த்து இரவுத் தொழுகையையும் தொழுதுவிட்டு நிம்மதியாக கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் தூக்கத்தில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால் பெரும்பாலானவர்களின் நிலை அதுவன்று.

ரமளான் காலம் என்றால் இரவு முழுவதும் கூத்தும் கும்மாளமும் நிறைந்திருக்கும். கேரம் போர்டு, கிளித்தட்டு, இன்ன பிற தேவையற்ற வீண் கேளிக்கைகளில் இந்த புனிதமிக்க இரவை கழித்துக் கொண்டிருப்பார்கள் பிறகு பகல் முழுவதும் ஊரே அடங்கிப் போகும் அளவுக்கு தூக்கத்தில் மூழ்கியிருக்கும்.

இன்னும் சிலரின் பகல் நேர - இரவு நேர வேலையாக - பொழுது போக்கும் காரியமாக தொலைக்காட்சி பார்த்தல், சீட்டு விளையாடுதல், அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் கூடி தேவையில்லாத வீண் பேச்சுக்களில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள்.

அன்பான சகோதர சகோதரிகளே...

ரமளான் மாதம் என்பது நமது வாழ்வை சரியாக அமைத்துக் கொள்வதற்கான ஒரு பயிற்சிக் களமாகும். அந்தப் பயிற்சிக் களத்தை சரியாக நாம் பயன்படுத்த முனைய வேண்டும்.

அந்த அடிப்படையில் தொழுகையை சரியாகப் பேணுவதற்கு நாம் நம்மை பழக்கிக் கொள்வதற்கு ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைவது இந்த ரமளானுடைய காலம். சரியான நேரத்தில் ஜமாத்துடன் சேர்ந்து நாம் தொழுவதால் நமது வாழ்வை சரியாக வழப்படுத்திக் கொள்ள அது பெரிதும் உதவியாக இருக்கும்.

திருமறைக் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனிதமிக்க மாதமாக இந்த ரமளான் மாதம் இருக்கிறது. இம்மாதத்தில் அதிகமதிகம் நாம் குர்ஆனை ஓத வேண்டும். இதனால் நமது வீடுகளில் திருமறைக் குர்ஆனை ஓதுவதின் மூலமாக நமது பிள்ளைகளும் அதைப் பார்த்து பழகுவதற்கு ஒரு வாய்ப்பாக அது மாறிவிடுகிறது.

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு “ஜுஸ்வு” ஓதினால் முப்பது நாட்களில் முழுக் குர்ஆனையும் ஓதி முடித்த நன்மையை நாம் பெற்றுவிட முடியும்.

கிடைக்கும் நேரங்களில் நமது உறவினர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய செய்திகளை எத்தி வைப்பதற்கு முனைய வேண்டும். அது காலை நேரமாக இருக்கலாம். அல்லது இரவுத் தொழுகைக்குப் பின் கண்டவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை விடுத்து அந் நேரத்தில் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு மார்க்கத்தின் முக்கியத்துவம் பற்றிய செய்திகளை, நன்மையான காரியங்களை நாம் சொல்லிக் கொடுக்கும் போது அவர்களும் அதன்படி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொடுத்த நன்மையை அடைந்து கொள்வோம்.

நண்பர்களுடன் மார்க்க விஷயங்களை மட்டும் பேச பழகிக்கொள்ள இந்த மாதத்தை தேர்தெடுக்கலாம்.

லைலத்துல் கத்ரு என்னும் புனித மிக்க இரவு நம்மை அடைய இருக்கிறது. அந்த இரவில் இறை பேற்றை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்  சில பள்ளிகளில் இஃதிகாஃப் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும். வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 ஆவது செய்தி ஆதாரமாக உள்ளது.

இதன் அடிப்படையில் நாமும் அந்த நாட்களில் இஃதிகாஃப் இருந்து நன்மைகளை அடைந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே.. இந்த புனித மிக்க ரமளான் இன்னும் ஓரிரூ வாரங்களில் நம்மை விட்டு பிரியப்போகிறது. அடுத்து வரும் காலங்களில் நாம் எங்கிருப்போம் என்று நம்மால் கூற இயலாது. எனவே இந்த புனித மிக்க ரமளான் மாதத்தில் நல்ல பல அமல்கள் செய்து இறைப் பொருத்தத்துடன் வாழ எல்லாம் வல்ல ரஹ்மான் நம்மை ஆக்கி அருள் புரிய துஆ செய்ய வேண்டுகிறேன்.
http://adiraixpress.blogspot.com

புதன், ஆகஸ்ட் 10

புண்ணியமிக்க மாதத்தை சந்தைமயமாக்கிவிடாதீர்கள்!

மனித வாழ்வின் எல்லா துறைகளிலும் சந்தையியல் சக்திகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. சந்தை வசப்படுத்துவது தயாரிப்புகளையும், சேவைகளையும் மட்டுமல்ல. மாறாக, ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டமாக வீட்டு முற்றத்தில் உற்றாரும், உறவினர்களும் சேர்ந்து நடத்தும் திருமணங்களை கூட நகைக்கடைகளும், துணிக்கடைகளும் தங்களின் சரக்குகளை விற்றுத்தீர்க்கும் களமாக மாற்றிவருகின்றன.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதிச் செய்யப்பட்ட காதலர் தினமும்(வேலண்டைன்ஸ் டே), பெற்றோர் தினமும் அதுபோல தற்போது பிரபலமாகி வரும் அக்‌ஷய திதியும் விற்பனைக்காக காத்திருக்கும் தினங்களாகும். கல்வித்துறை கூட சந்தைமயமாகிவிட்டது. அனைத்துமே சந்தைமயமாக்கப்பட்டு வரும் காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்துவருகிறோம்.


புண்ணியங்கள் பூத்துக்குலுங்கும், இறையச்சத்தின் மாதமான ரமலானின் புனித தினங்களில் அதுவும் சந்தைமயமாக்கப்படும் சாத்தியம் அதிகமாகும்.பல்வேறு ஆஃபர்களுடன் சந்தை இப்பொழுதே தயாராகிவருகிறது. நட்சத்திர ஹோட்டல்களில் இஃப்தார் பார்டிகளின் புக்கிங் துவங்கிவிட்டது. பல்வேறு வீட்டு உபயோக-எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சிறப்பு சலுகையுடன் விற்பனை தூள் கிளப்புகிறது. அரசியல் கட்சிகளும் இஃப்தார் பார்டிக்காக தயாராகும் வேளை இது.


நோன்பின் உச்சபட்ச நோக்கம் இறையச்சமாகும்.

இதர சிறப்பு தினங்களைப் போலவே ரமலானையும் சந்தை தன்வசப்படுத்த திட்டமிடுகிறது. பக்தி என்பது விற்பனை பொருளாக மாறிவிடக்கூடாது. பசியையும்,தாகத்தையும் கட்டுப்படுத்துவதோடு தனது ஐம்புலன்களையும் அனைத்து விதமான இச்சைகளை விட்டும், தீயச்செயல்களை விட்டும் பாதுகாத்து மனிதனை மாண்புமிக்கவனாக பண்படுத்தி இறைவனுக்கு அஞ்சும் உண்மையான அடியானாக மாற்றுவதுதான் நோன்பின் லட்சியம் என்றால், சந்தையோ ஊணும், உறக்கமும், பொழுதுபோக்கும், அலங்காரத்தையும், ஆடம்பரத்தையும் நமக்கு போதிக்கிறது.


உலகியல் மோகங்களை கட்டுப்படுத்தும் பக்திரீதியிலான வழிகளை கூட சந்தை சும்மாவிடாது என்பதைத்தான் இவை நமக்கு எடுத்தியம்புகிறது.தொலைக்காட்சி சேனல்கள் இப்பொழுதே நிகழ்ச்சி நிரல்களை தயாராக்கிவிட்டன. இரவின் இறுதிப்பகுதியில் இறைவனிடம் மன்றாடி தனது பாவக்கறைகளை போக்கும் நேரத்தில்தான் தொலைக்காட்சியில் ஸஹ்ர் நேர நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகின்றன.இடைக்கு இடையே அவ்வப்போது இசையுடன் கலந்த விளம்பரங்களையும் நாம் காணலாம்.


எவ்வளவுதான் நாம் இவற்றிற்கு நியாயம் கற்பித்தாலும், இழந்த இரவுகளை நம்மால் மீட்டமுடியுமா? என்பதை நாம் இங்கு சிந்திக்கவேண்டும். சொற்பொழிவுகளையும், கேள்வி-பதில்களையும் நாம் அவ்வப்போது கேட்கத்தான் செய்கிறோம். இவற்றை பின்னர் பதிவுச்செய்த சி.டிக்களிலும் கேட்கலாம். ஆனால் மீண்டும் இதே ரமலானை நாம் அடையமுடியுமா? அல்லது அடுத்த ரமலான் வரை நமது ஆயுள் நீட்டப்படும் என்பது குறித்த உத்தரவாதம் நமக்கு இருக்கிறதா?


கடைசி 10 தினங்களில்தாம் லைலத்துல் கத்ர் எனும் ஆயிரம் மாதங்களை விட சிறப்பானதொரு இரவு வருகிறது.மஸ்ஜிதுகளில் தனிமையில் அமர்ந்து இறைவனுடனான் நெருக்கத்தை அதிகப்படுத்தும் இத்தினங்களில்தாம் துணிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். முந்தைய நாட்களில் அனைத்து தேவைகளையும் முடித்துவிட்டு ரமலானை அமல்களுக்காக பயன்படுத்துவோம் என்ற சிந்தனை நம்மில் மறைந்துப்போய்விட்டதா? அல்லது மரத்துப்போய்விட்டதா? ஆடம்பரங்கள் மற்றும் வீண்விரயத்தின் மாதமா ரமலான்?


வெறும் பட்டினியாலும், தாகத்தாலும் இம்மாதத்தில் நாம் இறையச்சத்தை பெற முடியுமா? இங்கு நபி(ஸல்…) அவர்களின் பொன்மொழி நமது சிந்தனையை சீராக்க உதவும்! “எத்தனையோ நோன்பாளிகள் உள்ளனர். அவர்களுக்கு, அவர்களின் நோன்பின் வாயிலாக பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை. மேலும் இரவில் நின்று வணங்குபவர்கள் பலர் உள்ளனர்.கண் விழித்திருந்ததை தவிர வேறெதுவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை(நூல்:தாரமி).

அ.செய்யது அலீ

http://muthupet.org/

சனி, ஆகஸ்ட் 6

எல்லாப் பெண்களுமே மகாராணிகளே!




ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?''
ந்நியப் பெ
முஸ்லிம் கேட்டார்; 'உங்கள் நாட்டு எலிஸபெத் ரானியின் கரங்களைஉங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா...?''
அவசர அவசரமாக ம்றுத்தார் அந்த ஆங்கிலேயர்; ''அதெப்படி முடியும்?அவர்கள் மகாராணியாயிற்றே....!''
முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ''எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.' எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குளுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.'']
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையைக் காயப்படுத்திக்கொள்வது கிறந்ததாகும்.'' (நூல்:- தபரானி)
மேற்கூறப்பட்ட நபி மொழியை உற்றுநோக்கும்போது முஸ்லிம் சமூகத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர் மார்க்கக் கட்டளையை புறக்கணித்து விட்டு மேல்நாட்டு கலாசாரங்களை பின்பற்றுகின்றனர்.
சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன்மகள், சகோரனின் மனைவி, சாச்சி, மாமி, போன்றோருடன் கைக்குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நாம் தவிர்ந்துகொள்வது நன்று. இது கையின் விபசாரங்களில் ஒன்றாகும்.
பின்வரும் ஹதிஸ்களை சற்று கவனித்தல் நன்று.
''இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. இரு கைகளும் விபசாரம் செய்கின்றன. இரு கால்களும் விபசாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபசாரம் செய்கிறது.'' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்)
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்: ''நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாபஹா செய்ய கைகுலுக்க மாட்டேன்.'' (அறிவிப்பாளர்: உமைமா பிர்த் ருகைகா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: இப்னுமாஜா)
மேலும்: ''நிச்சயமாக நான் பெண்களின் கைகளைத் தொடமாட்டேன்.'' (நூல்: தபரானி)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கை, எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)
mail from reeshma yasar

வெள்ளி, ஆகஸ்ட் 5

ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம்

ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம்


‘யார் பொய்யான பேச்சையும் பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ-ஹுரைரா (ரலி), ஆதார நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூ-தாவூத்).

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்று தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமழான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீள வேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.

எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு நம்மீது கடமையாக்கப்பட்டதோ, இந்த உன்னத இலட்சியத்தை மறந்து விடுகிறோம். எல்லோரும் நோன்பு நோற்கிறார்கள் என்பதற்காக நாமும் நோன்பு நோற்று, பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் எத்தகைய நன்மையும் கிட்டுவதில்லை. எனவே, நோன்பாளிகள் எவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமோ, அவற்றைத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினூடாக மனிதனிடம் என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் ஒவ்வொரு கனப் பொழுதிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதோடு, தீமைகளை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டம், தவறான நடவடிக்கைகள் போற்றவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். அதே போல் நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய நடவடிக்கைகளிலிருந்து மிகத் தூரமாகி இருக்க வேண்டும் என்பதையே மேற்குறிப்பிட்ட நபிமொழி நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் ரமளான் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நோன்பைப் பாழ்படுத்தும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் சர்வ சாதாரணமாக ஈடுபட்டுக் கொண்டே தாங்கள் நோன்பாளிகள் என்கின்றனர். அதனால்தான், பல ரமளான் மாதங்கள் நம்மைக் கடந்து சென்றாலும் நம்மில் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை. எப்போது அல்லாஹ் அருளிய வேதம் அல்-குர்ஆனும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியும் புறக்கணிக்கப்படுகின்றதோ, அப்போது நாம் பெறும் பேறுகள் வெறும் பூஜ்ஜியமாகவே இருக்கும். எனவே நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து நம்முடைய நல் அமல்களை நாம் வீணாக்கி விடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இறையச்சமில்லாத எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான். சிறிய அளவே அமல் செய்தாலும், செய்த அந்த அமல் இறையச்சத்துடன் அமைந்து விடுமானால் இறைவன் பூரண திருப்தி அடைவான்.

இறை திருப்தியை மட்டும் நாடி நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வணக்க வழிபாட்டை, அற்பமான தீய நடிவடிக்கைகளால் வீணாக்கி விடக்கூடாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகிறான்:

‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்’ (ஸூரத்துல் பகரா).

இவ்வசனத்தின் மூலம் நோன்பு எதற்காக என்பதை வல்ல அல்லாஹ் தெளிவாகக் சுட்டிக் காட்டுகிறான். எனவே நோன்பு நோற்பதால் சிறந்த இறையச்சம் ஏற்பட வேண்டும்.

நோன்பு நோற்றிருக்கும் வேளையில் நமது வீட்டிலிருக்கும் உணவை இறையச்சத்தின் காரணமாக உண்ணாமல் தவிர்த்து விடுகிறோம். நாம் தனியே இருக்கும் போது யாரும் பார்ப்பதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் தனியே இருக்கும் வேளையில் யாரும் பார்க்கமாட்டார்கள் என்றாலும், எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு கனமும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்ட காரணத்தால் நாம் நோன்புடைய வேளைகளில் சாப்பிடுவதில்லை.

இதேபோல் ரமழான் அல்லாத காலங்களிலும் வல்ல அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று உறுதியாக நம்ப வேண்டும். ரமழானில் விலக்கப்பட்ட காரியங்களைச் செய்ய முயலும்போது, இறைவனுக்குப் பயந்து அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதையே நாம் தவிர்ந்து கொண்டதை சிந்திக்க வேண்டும். நம்மிடம் ஹலாலான உணவு இருந்தும், நோன்புடைய காலங்களில் நாம் உண்ணுவதில்லை. கட்டிய மனைவி இருந்தும் நோன்புடைய பகல் வேளைகளில் மனைவியைத் தீண்டுவதில்லை. இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப் பட்டதற்கான காரணம். இந்த ஆன்மீகப் பயிற்சியைப் பற்றிதான் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள். ‘பசித்திருப்பதல்ல நோன்பின் நோக்கம்’ என்பதை ஆழமாக விளக்குவதோடு, நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி எத்தகைய மாற்றங்களை நம்மிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

ரமழான் இறையச்சத்தையும், இபாதத்களையும் நம்மிடம் அதிகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாம் நஷ்டவாழிகள். ரமழானில்தான் முஸ்லிம்கள் மத்தியில் சண்டையும், சச்சரவும் அதிகமாக ஏற்படுகிறது. சமூகம் பிளவுண்டு சின்னா பின்னமாகிறது. அதுவும் மார்க்கம் அல்லாததை மார்க்கம் என்று கருதி பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. வீண் வம்பு கூடாது என்ற மார்க்கத்தில் அதுவும் மார்க்கம் என்ற பெயரால், மற்ற முஸ்லிம்களின் இரத்தத்தைக் கூட ஓட்டத் துணியும் அயோக்கியத்தனம் மாற வேண்டும். இறை இல்லங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. அங்கு தூய முறையில் வணங்கவும், வழிபடவும் முஃமீன்களுக்கு உரிமையுண்டு. அதைத் தடுக்க இவ்வுலகில் யாருக்கும் உரிமையில்லை. சுதந்திரமாக வழிபட எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆகவே பள்ளியில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும்போதுதான் பிரச்னைகள் எழுகின்றன. எல்லோருக்கும் சம உரிமை உண்டு. மக்கள் உண்மைக்குத் தலைவணங்கும் காலம் கனிந்து வருகிறது. எனவே, தவறான சிந்தனையில் மூழ்கியிருப்பவர்கள் இந்த ரமழானிலாவது தமது நிலையை மாற்றிக்கொள்ள முனைவதோடு தவறான அணுகுமுறைகளை விட்டு அறிவு வழியில் அமைதியான விடயங்களைக் கருத்தாடலுக்கு வழிவகுக்க உடன்பட வேண்டும்.

‘உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள் தனமாக நடந்து கொண்டால், நான் நோன்பாளி என்று கூறட்டும்’ என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி, திர்மிதி).

நம்முடன் யாரேனும் சண்டைக்கு வந்தால், அல்லது திட்டினால் பொறுமை செய்வது அவசியமாகும். ரமழானில் நோன்பு நோற்று பயிற்சி பெற்றவர்கள், நோன்பை நிறைவு செய்தவுடன் பெருநாள் அன்று இஸ்லாம் ஹராமாக்கிய காரியங்களில் (அதாவது திரைப்படங்களை பார்ப்பது, மது அருந்துவது, இன்னும் பல கேலிக் கூத்துக்களில் ஈடுபடுவது) ஈடுபடவும் செய்வார்கள் என்றால், இவர்கள் வீணாக பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமேத் தவிர, இவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது. ரமழானுக்கு முன்னர் எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில்தான் இனியும் இருக்கப் போகிறார்கள் என்றால் புனித ரமழானால் எந்தவித பயனையும் பெறவில்லை என்பதுதான் இதன் பொருள்.

புனிதமிகு ரமழான் நம்மிடம் இறையச்சத்தை வேண்டி நிற்கிறது. அடுத்த ரமழானை நாம் அடைவோமா இல்லையா என்பதை யாரும் அறியோம். இந்த ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்தி, நல்லமல்கள் செய்து நல்லவர்களாக வாழ பயிற்சி பெறுவோமாக..!

நன்றி: தேன் துளி

http://ipcblogger.net/mjabir/?p=7

புதன், ஆகஸ்ட் 3

கூகுள் வழங்கும் ரமலான் பரிசு



கூகுள் வழங்கும் ரமலான் பரிசு

நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் மாத வாழ்த்துக்கள்.


முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த ரமலான் மாதம் மிகவும் புனிதமான நாட்களாகும். இந்த நாட்களில் அவர்கள் இறைவனுக்காக கடும் விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவர். இஸ்லாம் நண்பர்கள் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஜீத்-அல்-ஹரம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும்.

உலகிலேயே மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து நேரடி லைவில் பார்ப்பது அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.

இந்த லிங்கில் உள் நுழையவும்

http://www.youtube.com/user/MakkahLive
 
 
இஸ்லாம் நண்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்.


நன்றி; http://www.vandhemadharam.com/2011/08/live-telecast-from-al-masjid-al-haram.html#more

புதன், ஜூலை 13

அருட்கொடை மாதமே வருக!!!

அருட்கொடை மாதமே வருக!!!



நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நற்செயல்களால் சொர்க்கத்தின் வாசலை திறக்கச் செய்யும் சங்கைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நரகத்தின் வாயிலை மூடச்செய்கின்ற அல்லாஹ்வின் அருள்மழைப் பொழியும் அருமைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானுக்கு விலங்கிட்டு மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்துவமிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானின் தூண்டுதலால் நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு நிரந்தர சுவனத்தின் எல்லை இல்லா இன்பத்தை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

கை நீட்டியவர்களுக்கு கையிலுள்ளதைக் கொடுத்து கண்ணீரைத் துடைக்கத் தூண்டும் காருண்ய மிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

நன்மை – தீமைகளைப் பிரித்தறிவித்த மனிதவள மேம்பாட்டிற்கு வழி வகுத்த மாமறைக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

தலையில் பிறந்தோன் – காலில் பிறந்தோன், என்று ஆதிக்க வர்க்கத்தினர் பூட்டிய அடிமை விலங்கை உடைத்தெறிந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்றுக்கூறி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திய சங்கைமிகு குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,


கருப்பன் - சிவப்பன் என்ற நிறவெறியை காலில் போட்டு மிதித்து அனைவரும் ஆதம் என்ற ஒரு மனிதரின் பிறப்புகளே என்று முழங்கிய அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அழகிய உபதேசங்களை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,


பெண் இனத்தின் உடலில் உயிரோட்டம் இருக்கிறதா ? என்ற ஆய்வுக்குட்படுத்திய சித்ரவதையிலிருந்து மீட்டெடுத்து அவளும் உன்னைப் போன்ற மனித இனமே என்று முழங்கி பெண் இனத்தை அழிவிலிருந்து மீட்டி சமூக நீதிக்காத்த திருமறைக்குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,


ஆண்டவன் பெயரால் அப்பாவி மக்களை சுரண்டி வயிறு வளர்த்த புரோகிதக் கூட்டங்களை ஒழித்துக்கட்டி அல்லாஹ் ஒருவன் என்றக் கொள்கையை முழங்கிய மாமறைக் குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,


அன்புள்ள சகோதரர்களே !நன்மைகள் அதிகரிக்கவும் பாவங்கள் மன்னிகப்படவும், நல்ல எண்ணத்துடன் ரமளான் மாதத்தை அணுகுங்கள்.

ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.' நூல்: புகாரி. 1899.


ரமலான் மாதத்தில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) கூறினார். நூல்: புகாரி.1901


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


அதிரை ஏ.எம்.பாரூக்