Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், ஜூன் 28

மூன் தொலைக் காட்சி


பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். வப.)

வல்ல அல்லாஹ் தங்களுக்கு அனைத்து நலனும் வளனும் நல்கியருளத் துஆ செய்கிறோம்.

பல்வேறு சமயச் சகோதரர்களும் தமிழ்த் தொலைக் காட்சி சேனல்களைச் சொந்தமாக நடத்திவரும் சூழலும், அவர்கள்தம் கருத்துகளை அச் சேனல்களின் வாயிலாக வெளிப்படுத்தும் நிலையும் கண்டு நமது சமுதாயத்தைச் சார்ந்தவர் நடத்தும் சேனல் ஒன்றுகூட பெரிய அளவில் உலகம் தழுவிய வகையில் இல்லையே என்ற குறை வெகுகாலமாகவே தமிழக இஸ்லாமியருக்கு இருந்து வந்தது.

தமிழக முஸ்லிம்களின் வாட்டத்தையும் தேட்டத்தையும் போக்கும்வகையில் மூன் தொலைக் காட்சி (Moon T.V.) கடந்த 20-03-2009 முதல் தனது 24 மணிநேர ஒளிபரப்பை வெற்றிகரமாகத் தொடங்கிச் செயல்பட்டுவருகிறது.

சனி, ஜூன் 25

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).

சம்பவம் 1:

தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் ‘நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்’ என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார்.

வெள்ளி, ஜூன் 24

ஆடையில் தான் உள்ளது நாகரிகம்


ஆடையில் தான் உள்ளது நாகரிகம் - டாக்டர் டி. நாராயண ரெட்டி!

சென்னை.
பரபரப்பான நந்தனம் சிக்னல்.
பச்சை விளக்குக்காகக் காத்திருக்கிறேன்.

"விர்ர்ரூம்ம்ம் விர்ர்ரூம்ம்ம்..."

சத்தத்துடன் என் காரை உரசிவிடுவது மாதிரி பக்கத்தில் வந்து நின்றது அந்த பைக். ஓட்டி வந்த இளைஞனின் பின் இருக்கையில் ஒரு பெண்.
இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். காற்றைக் கிழிக்கும் கூந்தல். ஸ்லீவ்லெஸ் லோகட் டாப்ஸ் - ஜீன்ஸில் இருந்தாள். முதுகுப்பக்கம் டாப்சுக்கும் ஜீன்சுக்கும் இடைவெளியில் பளீர் எனத் தேகம் தெரிய, கூடவே அவள் அணிந்திருந்த பேன்ட்டீஸின் லேபிளும் எட்டிப் பார்த்தது. தோள்பட்டையிலும் இடுப்பிலும் டாட்டூஸ் மின்னல்கள்.
சிக்னலில் நின்ற வாகனங்களின் கண்கள் அந்தப் பெண்ணையே மொய்த்தன. பச்சை சிக்னல் விழுந்து சில விநாடிகள் கழித்துத்தான் சக்கரங்கள் சுழலவே ஆரம்பித்தன. இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.

வியாழன், ஜூன் 23

பசியைத் தூண்டும் புடலங்காய்…

பசியைத் தூண்டும் புடலங்காய்…


நம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து பயன்பெற்று வந்தனர். இன்னும் கூட கிராமங்களில் கொல்லைப் புறத்தில் கீரைகள், கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அவரை, புடலை, கத்தரி, வெண்டை, எலுமிச்சை, தென்னை என பலவற்றை வளர்த்து அதன் பயன்களை முழுமையாகப் பெற்று வந்தனர். அதனால் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். ஆனால் தற்போது வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளங்களை அமைத்துவிட்டோம். தோட்டம் ஏற்படுத்தி மேற்கண்ட செடி கொடிகளை வளர்ப்பதற்கு யாருக்கும் பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை.

இப்படி நம் வீட்டில் விளைந்த இயற்கையான காய்கறிகளை உதறிவிட்டு செயற்கை ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய் கறிகளை வாங்கி உண்ண வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இதனால் நோயின் பிடியில் சிக்கி அன்றாடம் மருந்து மாத்திரைகளுடன் அலைகின்றோம். காய்கறிகளில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நேரடியாகக் கிடைக்கின்றன.

திங்கள், ஜூன் 20

ப‌ள்ளிக்கூட‌க‌ல்வியும்,ப‌ரித‌விக்கும் பெற்றோர்க‌ளும்.

ப‌டாத‌ பாடும் ப‌ள்ளிக்கூட‌ க‌ல்வியும், ப‌ரித‌விக்கும் பெற்றோர்க‌ளும்.


முந்தைய அரசு பல கல்வியாளர்களையும், உயர் அதிகாரிகளையும் கலந்தாலோசித்து பல ஆய்வுகளுக்குப்பின் கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறை இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு முந்தைய அரசு கொண்டு வந்த காரணத்தாலோ? என்னவோ? சமச்சீர் கல்வி முறையில் பல குறைகள் உள்ளன என சுட்டிக்காட்டி அதை அப்படியே முடக்க முயல்கிறதா? அல்லது அதில் திருத்தம் கொண்டு வந்து நீக்கப்பட வேண்டிய பாடங்களை நீக்கி மேலும் சிறப்புடன் வெளியிட்டு மாணவர்களின் கல்வியை செம்மைபடுத்த விரும்புகிறதா? என்று ஒன்றும் புரியாத புதிராகவும், பேயரைந்த நிகழ்வாகவும் தான் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இன்று இருந்து வருகிறது.

இல்லத்தரசி​களே! இது உங்களுக்கா​க...

இல்லத்தரசி​களே! இது உங்களுக்கா​க...

இன்றைய காலகட்டத்தில் மனிதன் ஏராளமான பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. பொதுவாக திருமணமானவுடன் பெண்கள் தன் கணவரின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

சனி, ஜூன் 18

நபிமொழி அறிவோம்!

நபிமொழி அறிவோம்!
"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவ+த் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி

வெள்ளி, ஜூன் 17

அல்லாஹ்விடம் கையேந்துவோம்...

அல்லாஹ்விடம் கையேந்துவோம்...


بسم الله الرحمن الرحيم

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

யா அல்லாஹ் ! என் பாவங்களில் சிறியது, பெரியது, முதலாவது, கடைசியானது, பகிரங்கமானது, மறைவானது ஆகியவற்றை எனக்காகப் பொருத்தருள்வாயாக.(முஸ்லிம்)

வியாழன், ஜூன் 16

சிரிப்பு

"சிரிப்பு" என்பது சிநேகத்திற்கான முதல் தூது. இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமே சிரிப்பு. சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் "நகைச்சுவை"யும் ஒன்று. "நிச்சயமாக அவனே (மனிதனை) சிரிக்க வைக்கிறான்". (அல்-குர்ஆன் 53:43).

விடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும் !

விடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும் !



இரண்டு மாத விடுமுறையை மாணவர்கள் நன்றாகவே அனுபவித்தார்கள். அதன் பலனையும் பெற்றோர் நன்கு அனுபவித்துவிட்டனர். தேர்வுகள் நடக்கும்போது விடுமுறை வராதா என்று மாணவர்கள் எண்ணுவதும், விடுமுறை வந்தபின் பள்ளி திறக்கமாட்டர்களா என்று பெற்றோர் ஏங்குவதும் ஒரு வேடிக்கையான வாடிக்கை!

பெற்றோரின் ஏக்கத்தில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது சமச்சீர் கல்விப் பிரச்சினை. வந்தது அறிவிப்பு: பள்ளி திறப்பு, தள்ளி வைப்பு! இந்த இரண்டு மாத விடுமுறைக் காலத்திற்குள் எத்தனை நிகழ்வுகள் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தின!

தேர்தல் வந்தது. பெற்றோர் பிள்ளைகள் மீது வைத்திருந்த கவனம் சிதறியது. பிள்ளைகளின் அன்றாடச் செயல், ஒழுங்கு இவற்றின்மீதுள்ள கவனம் மாறியது. இதே விடுமுறைக் காலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டும் 51 நாட்கள் நடந்தது. மாணவர்களின் உள்ளத்தை ஆட்கொண்டு, அவர்களின் செயல்களையும் பள்ளிச் சிந்தனைகளையும் முடக்கி வைத்தது. இதில் பழகிவிட்ட மாணவர்கள் மேலும் விளையாட்டுகளையே தேடி அலைகின்றனர். விளையாடுவதற்காக அவர்கள் வீட்டை விட்டு அவுட்டாகிவிட்டால் பின் அவர்கள் கேட்சு ஆவது மிகவும் சிரமம்.

பள்ளிகள் திறந்தாயிற்று. என்ன பாடத்திட்டம் என்று அறியாமல் பெற்றோரும் ஆசிரியர்களும் குழம்பிக் கொண்டிருக்கும் நிலை. மூன்று வாரங்களுக்குப் பின்தான் பாடத்திட்டம் பற்றிய உண்மை நிலை புரியும்.

மற்ற ஆண்டுகளைவிட பெற்றோர் இந்த ஆண்டு பிரச்சினைகளை எதிர் நோக்கி இருக்கிறார்கள். மூன்று வாரங்களுக்குப் பிறகு சமச்சீர் புத்தகங்கள் நடை முறைக்கு வந்தால் எதிர்பார்ப்பு இருப்பதால் பாதிப்பு இருக்காது. பழைய பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் புத்தகங்கள் இனி அச்சாகி மாணவர் கைக்குக் கிடைக்க தாமதமாகும. குறிப்பாகப் பாதிக்கப்படுபவர்கள் புதிய பாடப் புத்தகங்களை முன்கூட்டிடே படித்துக் கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்தான். எனவே மாணவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர் பொறுப்பாகிவிட்டது.

கல்வி தொடர்பாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பெற்றோர், செய்திகள், செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொள்ளவேண்டும். பாடங்கள் நடக்காத இந்த மூன்று வாரங்களில் வகுப்பு எப்படி நடக்கிறது என்பதை மாணவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

மாணாக்கரை வீணாக்கும் சாதனங்களில் முக்கியமானது தொலைக்காட்சி. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும. செல்போனை அவர்களிடமிருந்து பிடுங்கிவிடவேண்டும். பெற்றோர் மாணவர்களை மாலையில் மட்டும் விளையாட அனுமதிக்கவேண்டும்.

பெண் மக்களின் கல்வியைப் பற்றி பெற்றோர் கவலைப்படும் சூழ்நிலை இல்லை. தனக்கு உதவியாக இல்லாமல் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கிறாளே என்பதுதான் தாயின் கவலை. அதற்கு மாறாக மகனைப் பார்த்து, “நீ வெளி வேலைக்கெல்லாம் போகவேண்டாம்; வீட்டிலிருந்து படி” என்று பெற்றோர் சொல்லும் நிலை!

இனி எந்தப் பாடத் திட்டம் வந்தாலும் அதை நன்கு படித்து வெற்றி பெற எல்லா உதவிகளையும் பெற்றோர் செய்யவேண்டும். வீட்டின் உயர்வில் மட்டுமல்ல, நாட்டின் உயர்விலும் மாணவர்களின் பங்கு அதிகம். அவர்களை நெறிமுறைப் படுத்துவது பெற்றோர் என்ற முறையிலும், குடிமக்கள் என்ற முறையிலும் மக்களுக்குக் கடமை. கடமை உணர்ந்து மக்கள் செயலாற்றுவார்களாக!

உமர்தம்பி அண்ணன்

நன்றி: உமர் தென்றல்

புதன், ஜூன் 15

செல்ஃபோன்களால் அதிகரிக்கும் விமான விபத்துகள்

செல்ஃபோன்களால் அதிகரிக்கும் விமான விபத்துகள்

விமானத்தில் பயணிக்கும் போது கைத்தொலைபேசிகளை பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கைத்தொலைபேசிகளில் உள்ள மைக்ரே அலைகள் விமானத்தில் உள்ள மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை பழுதடைய செய்வதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் நடத்திய ஆய்வில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இதில் 75 விமான விபத்துக்கள் கைத்தொலைபேசிகளால் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது யாரேனும் கைத்தொலைபேசியில் பேசினால் விமானத்தில் முக்கிய சாதனங்கள் அனைத்தும் மின்னணுவால் இயங்குபவை என்பதால் அவை பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதனால் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு முதலில் துண்டிக்கப்படும் எனவும் இதனால் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் ஐபேடு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைத்தொலைபேசிகள் போன்று சில உயர் ரக போன்கள் பெரும் ஆபத்தை விளைவிக்ககூடியன. இவை போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்களில் உள்ள விமான ஓட்டிகள் அமரும் கேபின் பகுதிகளில் ஜி.பி.எஸ்.கருவி உள்ளதால் முதலில் அவைகளைத்தான் ‌தாக்கும்.

இவை ஓடுதளத்திலிருந்து உயர பறப்பதற்கு முன்பே தனது சிக்கனல்களை துண்டித்துவிடும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனவே விமானப்பயணிகள் தங்களது கைத்தொலைபேசிகளை முதலில் ஓப் செய்து கொள்ள வேண்டும் என விமானஓட்டிகள் அறிவுறுத்த வேண்டும்.

நன்றி : newsonews

சனி, ஜூன் 11

சன்மார்க்கக் கல்வியின் அவசியம்!

சன்மார்க்கக் கல்வியின் அவசியம்!


வணக்கத்துக்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான்.ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை! (அல்குர்ஆன்: 2:269)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமைநாள் வரும்வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்த தீங்கும் செய்துவிட முடியாது. (முஆவியா(ரலி) புகாரி 71)

கல்வி என்பது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும் மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்துப் பிரித்துக் காட்டும். பல அம்சங்களில் இந்த கல்வியும் முக்கியமான ஒன்று.

மனிதன் சிந்திக்கவும் செயல்படவும், கண்டுபிடிக்கவும் ஆற்றல் தரப்பெற்ற அற்புதமானப் படைப்பு.அவன் சிந்திக்கவும் செயல்படவும் தேவையானது முதலில் அறிவு. அந்த அறிவைப் பெற்றிட இறையருளால் அவன் நாட வேண்டியது கல்வியாகும்.

சரியான கல்வியைக் கற்கும் மனிதன் அதுதரும் அறிவைக் கொண்டு தனக்கென ஒருதனி அந்தஸ்தைப் பெறுகிறான்.

அந்த நல்லக் கல்வியை தனக்கும் பிறர்க்கும் பயன் தரும் வகையில் அம்மனிதன் செயல்படுத்தும் போது அவனது வாழ்க்கைத்தரம் இறையருளால் உயர்ந்த கட்டமைப்பை நோக்கி நகர்கிறது.

உலகக்கல்வி மார்க்கக்கல்வியென்று மக்கள் கல்வியை தரம் பிரித்து வைத்திருந்தாலும் மனித வாழ்க்கையின் அஸ்திவாரம், மார்க்கக் கல்வியாக அமைய வேண்டும்.

அப்போது தான் இம்மை மறுமை வாழ்க்கை பாதுகாக்கப் பட்டதாக இன்ஷாஅல்லாஹ் அமைந்து விடும்.

இதனால் உலகக் கல்வியை கற்கக் கூடாதென்றோ கல்லூரிகளுக்குச் சென்று பட்டம் பதவிகள் பெறக் கூடாதென்றோ நாம் சொல்வதாக யாரும் கருதி விடக்கூடாது.

பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும், உயர்கல்விகளும் கற்க வேண்டும். அதிலும் குறிப்பாக கல்வியில் பின்தங்கியுள்ள இஸ்லாமியச் சமூகம் கல்லூரி படிப்பில் சிறப்புக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் உலக கல்வியே முக்கியமென்று கருதி சன்மார்க்க அறிவைப் பெறுவதற்கு ஒரு நாளின் சிறு நேரத்தைக் கூட ஒதுக்காமல் வாழ்தல் கூடாது.

அதே சமயம் மார்க்கக் கல்வி கற்கிறோமென்ற பெயரில் வெறும் தியானம் செய்யும் ஒரு துறவியைப் போன்று ஆகி விடுதலும் கூடாது. இவ்விரண்டிற்க்கும் இடைப்பட்ட ஓர்வழியை இஸ்லாம் எடுத்துறைக்கிறது.

அதாவது உலகக் கல்வியும் வாழ்க்கையும் மார்க்க அறிவை அடிப்படையாகக் கொண்டதாக, மார்க்கக்கண் கொண்டே பார்ப்பதாக, சிந்திப்பதாக அமைதல் வேண்டும்.

ஏனெனில் உலகக் கல்வியை மட்டும் கவனம் கொள்ளும் பலர் இறைநம்பிக்கை விஷயத்தில் மூடநம்பிக்கைகளையே தங்களுக்குள் வளர்த்துக் வைத்திருப்பதைப் பார்க்கிறோம்.

அல்லது பகுத்தறிவாய் பேசுவதாய் நினைத்துக் கொண்டு இறைநம்பிக்கையை, கொள்கையை காயப்படுத்தும் வன்மம் கொண்டவர்களாகப் பேசி திரிவதைக் காண்கின்றோம்.

மார்க்கம் பேசும் பலரோ படைத்த ஏகநாயனின் அத்தாட்சிகளை சரிவரப் பார்க்காமல், சிந்திக்காமல் ஆய்வுகள் செய்யாமல் குறுகிய கண்ணோட்டத்துடன் அல்லாஹ்வின் ஆயத்துகளை ஹதீஸ்களை அணுகி இந்த அழகிய மார்க்கத்தை ஒரு மதமாக சித்தரிக்கும் அவலத்தை நாம் காண்கிறோம்.

எனவே சரியான கல்வியைத் தேடுவதும் அதைக் கற்பதும் மனிதர்களின் கடைசி நிமிடம் வரை கடமையாக உள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்:
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.(அல்குர்ஆன்: 39:9)
குருடனும் பாhவையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக( அல்குர்ஆன்: 6:50)

என்றெல்லாம் உதாரணங்களைக் கூறி கல்வி ஞானம் வழங்கப்பட்டவர்களுக்கு தனி அந்தஸ்து உள்ளதை அல்லாஹ் விளக்குகிறான்.

எழுத்தறிவு இறைவனின் அருள்:

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். கல்வி ஞானம் என்பது தங்களைப் படைத்த இறைவன் புறத்திலிருந்தே கிடைத்ததாகும் என்பதை மனித சமுதாயம் தன் துவக்கத்திலிருந்தே அறிந்தும் உணர்ந்தும் வைத்துள்ளது. அந்த அறிவின் துணையின்றி தனது வாழ்க்கைப்பாதையை சரியான முறையில் செப்பனிட முடியாது என்பதை மனித சமுதாயம் தெளிவாகவே உணர்ந்து வைத்துள்ளது. அதனால் தான் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற வாக்கை மனித சமுதாயம் தொன்றுதொட்டே கூறி வருகிறது. இதையே தான் இறைமறை திருக்குர்ஆனும் எழுத்தறிவு இறைவனின் அருள் என்றே கூறுகிறது. முதன் முதலாக அருளப்பட்ட இறைவசனமே கல்வியைப்பற்றியும், மனிதன் அறியாததையெல்லாம் அவனுக்கு ஏக இறைவனாகிய அல்லாஹ் தான் கற்றுக் கொடுத்தான் என்பதையும் கூறுகிறது.

(முஹம்மதே) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான் (அல் குர்ஆன்: 96 : 1-5)

படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டே கல்வியறிவை துவங்கச் சொல்கிறது திருமறை தான் எதிலிருந்து படைக்கப்பட்டோம். தன்னைப் படைத்த இரட்சகன் எத்தகைய கண்ணியமிக்கவன் என்ற முதலும் முக்கியமுமான அடிப்படையான கல்வியைப் பெற்றுக் கொள்ள மனித சமூகத்தை இம் மாமறை அழைக்கிறது.

மனிதனுக்கு எழுதுகோலையும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அதனுடன் மனிதன் அறியாத விஷயங்களையெல்லாம் மகத்தான அல்லாஹ் தான் கற்றுத் தந்ததைக் கூறுகிறான். எனவே திருமறை திருக்குர்ஆன் அருளப்பட்டது மனிதர்கள் கல்வி ஞானம் பெறுவதற்கேஎன்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிமார்கள் அனுப்பப்பட்டதும் கல்வி கற்பிப்பதற்கே!

உங்களுக்கு உங்களிலிருந்தே தூதரை அனுப்பியது போல் (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்),அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார். (அல்குர்ஆன்: 2:151)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கல்வி கற்பிக்கவே அனுப்பப்பட்டார்கள்.

இவ்வசனத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள் என்றுக் கூறும் போது மூன்று பண்புகளைச் செய்ய அவர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

1. வசனங்களை கூறுதல்
2. வேதத்தைக் கற்றுக்கொடுத்தல்.
3. ஞானத்தைக் கற்றுக் கொடுத்தல்.

இம்மூன்று சொற்றொடர்களும் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை.
முஸ்லீம் சமுதாயம் இவ்விஷயத்தில் கவனமற்றிருக்கிறது. மறையும் மாநபியும் அருளப்பட்டது யாருக்கோ எவருக்கோ என்ற கவனமற்ற தன்மை முஸ்லிம்களிடமே குடி கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

அல்லது மார்க்க விஷயத்தைவிட உலக பலாபலன்களே மேலானது என்ற எண்ணப் போக்குக்கு முக்கியத்துவம் தருவதனால் மறுமை வரை பயன்தரும் மார்க்கக் கல்வியில் தானும் திறனின்றி பிறர்க்கு எத்தி வைப்பதிலும் சுரத்தின்றி வாழ்ந்து வருகிறது. இது உடனடியாக களையெடுக்கப்பட வேண்டிய தன்மையாகும்.

கல்வி என்பது விழிப்புணர்வை எற்படுத்துவதாக இருத்தல் வேண்டும். தொலை தூர நோக்கோடு மனிதர்களை நல்வழிப்படுத்துவதாகஇருத்தல் வேண்டும். சரியான நிலையா பயன்தரும் இலக்கைச் சுட்டிக் காட்டவதந்காக இருக்க வேண்டும். எந்த நிலை வந்தபோதும் அந்தப் பயன்மிக்க இலக்கை அடைவதை உயிர்மூச்சாகக் கொள்ளும் பக்குவத்தை மனிதர்களுக்கு தரும் விதமாக கல்வி இருக்க வேண்டும்.

இன்றைக்கு நாட்டில் இருக்கும் மேதைகள், மெத்தப்படித்த வர்கள், ஜீனியஸ்கள் என்றெல்லாம் போற்றப்படும் பெரும்பாலானோர் எல்லாம் மூடநம்பிக்கைகளையும், களவுச் சிந்தனைகளையும் தற்கொலை எண்ணங்களையுமே ,மக்களிடம் கடை பரப்புகின்றனர்.சினிமா, டிராமா மற்றும் மீசடியாக்களின் வாயிலாக அவர்கள் கொடுக்கும் செய்திகள் நடவடிக்கைகள் எல்லாம் மக்களிடையே கீழ்மையான உணர்வுகளையே தோற்றுவிப்பதாக இருக்கின்றன.அவர்கள் கற்ற கல்வியைக் கொண்டு தாங்களும் விழிப்புணர்வு அடையாமல் மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாமல் தடுமாறுவதைப் பார்க்கிறோம்.

வெளிச்சமும் விழிப்புணர்வும் தரும் கல்வி எதிலுள்ளது? அகமும் புறமும் பலம் பெரும் கல்வி எதிலுள்ளது? தான் அருளிய திருமறையில் உள்ளது என்பதை அல்லாஹ் பின் வருமாறு கூறுகிறான்.

இருள்களிலிருந்து ஒளிக்கு உங்களை கொண்டு செல்வதற்காக அவனே தனது அடியார் மீது தெளிவான சான்றுகளை இறக்குகிறான். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவன். நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 57:9)

அஞ்ஞான இருள் அறியாமை என்ற இருள் பாவங்கள் என்றும் இருள்களிலிருந்தெல்லாம் மனித இனத்தை வெளியேற்றி உண்மை என்ற ஒளியின் பக்கம் கொண்டு செல்வதற்காகவே தனது நபியின் மீது சான்றுகளை இறக்குவதாக அல்லாஹ் கூறுகிறான்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவருக்கு அல்லாஹ் நன்மையை அளிக்க நாடுகின்றானோ அவருக்குத் தன் மார்க்கத்தைப் பற்றிய ஞானத்தை வழங்குகின்றான். (அறிவிப்பவர்: முஆவியா(ரலி) புகாரி முஸ்லீம்)

மார்க்க அறிவும், ஞானமும் எல்லா நன்மைகளுக்கும் ஊற்றாக விளங்குவது வெளிப்படை. எவருக்கு மார்க்க அறிவு கிடைத்து விட்டதோ அவருக்கு இம்மை மறுமை பேறுகள் அனைத்தும் கிட்டிவிட்டன என்று பொருள். அதனைக் கொண்டு அவர் தம்மைதாமே சீர்திருத்திக் கொள்வார். இன்னும் பிறமக்களின் வாழ்க்கையையும் சீர்திருத்த முயல்வார்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் கல்வி பெறுவதற்காக பயணம் புரிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதையை இலகுவாக்கித் தருவான். எவர்கள் அல்லாஹ்வின் ஏதேனுமோர் இல்லத்தில் (மஸ்ஜித்) ஒன்றுகூடி இறைமறையை ஒதுகின்றார்களோ அதில் விவாதங்களும் ஆய்வுகளும் நடத்துகின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து இறைநம்பிக்கையினால் கிட்டும் அமைதி இறங்குகின்றது. இறைக்கருணை அவர்களை அரவணைத்துக் கொள்கிறது. வானவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அவர்களை அல்லாஹ் தன் வானவர்களின்அவையில் நினைவு கூறுகின்றான். எவனை அவனது செயல் பின்தள்ளி விடுகின்றதோ அவனது குலச்சிறப்பு அவனை முன்னேற்றத்துக்குக் கொண்டு சென்று விடாது. (அறிவிப்பவர்: அபூபக்கர்(ரலி) முஸ்லிம்)

ஒரு மனிதன் தன்னிடம் ஒரு கல்விக் கருஊலத்தையே வைத்திருந்தாலும் சரி, மிகப் பெரும் குடும்ப பாரம்பரியமும், சிறப்பும் பெற்றிருந்தாலும் சரி அவன் மார்க்கக் கல்வி கற்று அதன்படி செயல்படவில்லையானால் வேறு எந்தச் சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலும் அவைகள் அவனுக்குப் பலனளிக்காது. அவனை உயர்த்தக் கூடியது செயல்மட்டுமேயாகும்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் இந்த நபிமொழியில் ஒரு புறம் மாhக்கக் கல்வி பயில்பவருக்கு நற்செய்தி அளித்திருப்பதுடன் மற்றொருபுறம் ஓர் அபாயத்தைக் குறித்தும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அதாவது மார்க்கக் கல்வி கற்பதன் நோக்கம் அதன்படி செயலாற்றுவதேயாகும்.

(கற்றுக் கொள்வதற்கு) வெட்கப்படுபவனும், (தனக்கு எல்லாம் தெரிந்து விட்டது எனக் கருதி) அகந்தை கொள்பவனும் (ஒருக்காலும்) கல்வியைக் கற்றுக் கொள்ள மாட்டான்.

ஆகவே எனதருமை முஸ்லிம் சமுதாயமே! மார்க்கக் கல்வி நம்மை படைத்த இரட்சகனின் மேலான அருட்கொடையாகும். அது இம்மை மறுமை நல்வாழ்விற்கு துணை செய்வதாகும். அதைப்பற்றிப் பிடிப்பது நம் உயிரைவிட மேலானதாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபைச் செய்வானாக.

Thanks to Dubaitntj

புதன், ஜூன் 8

நாவின் விபரீதம்

நாவின் விபரீதம்

மௌலவி அலிஅக்பர் உமரி

அல்லாஹ் மனிதனுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவைகளில் மிக முக்கியமானது பேசும் நாவாகும்.
நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம். கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம். இதே போன்றது தான் நாவும். நாவைக் கொண்டு சொர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம். ஆகவே நாவை பேணிப் பாதுகாப்போம்
.
மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது நாவு என்று சொன்னால் அது மிகையாகாது. இதை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதன் படியே முடிவும் இருக்கும். சிலர் இந்த நாவை சரியாகப் பயன்படுத்தி மனிதர்களில் ‘சிறப்பிடத்தைப்’ பெற்று விடுகிறார்கள். சிலர் இதே நாவை முறையற்ற வழியில் பயன்படுத்தி ‘மனிதர்களில் தரம் தாழ்ந்தவர்கள்’ பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட நாவைப் பற்றி திருக்குர்ஆனும் நபி மொழியும் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போம்.

‘எதைப் பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைப் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலன், பார்வை இதயம் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்பற்றி) கேள்வி கேட்கப்படும்’. (அல்குர்ஆன் 17:36)

‘ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை’. (அல்குர்ஆன் 50:18)

நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கு உரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) அல்லாஹ், அதற்காக அவன் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)

ஓர் அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

‘(நாளை மறுமையில்) மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)

அரைகுறை ஞானமுள்ள எந்த விஷயத்தையும் நாம் வெளிப்படுத்தக் கூடாது! ஏனென்றால் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தவறாகப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய தண்டனை வழங்கப்படும்.

நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த்தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும் என நபி ஸல் அவர்கள் கூறியதை மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த ஹதீஸ் நாவை எந்த அளவிற்கு கவனமாகக் கையாள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.

நாவினால் நிகழும் சில தவறுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. அவற்றைத் தெரிந்து முற்றிலும் அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

1. புறம் பேசுதல்

மனிதர்கள் கூட்டமாக கூடி விட்டாலே அங்கு யாரையாவது குறை கூறி விடுகின்றனர். ஆண், பெண் இருபாலாரும் அடுத்தவரைப் பற்றி குறிப்பிட்டு புறம் பேசுவது வாடிக்கையான செயலாக மாறி விட்டது. இப்படி அடுத்தவரைக் குறை கூறி பேசுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.
சிலர் நாங்கள் உண்மையைத்தானே கூறுகிறோம், இதில் தவறென்ன இருக்கிறது? என்று கேட்கலாம். ஒருவரிடத்தில் இருக்கும் தவறைக் கூறுவதே புறமாகும். ஒருவரிடத்தில் தவறிருக்கக் கண்டால் அந்த தவறை உரியவரிடம் நேரடியாகக் கூறி அவரது தவறை நீக்க முயல வேண்டுமே தவிர ஊர் முழுக்கப் பறைசாற்றக் கூடாது.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுவது என்றால் என்ன? என தோழர்களிடம் வினவினார்கள். அதற்கு தோழர்கள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே இதனை நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுவது என்பது) நீர் உம் சகோதரரைப் பற்றி அவர் வெறுப்பதைக் கூறுவதாகும் என பகர்ந்தார்கள். நான் கூறும் விஷயம் என் சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நீர் கூறும் விஷயம் அவரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர். நீர் கூறும் விஷயம் அவரிடம் இல்லையென்றால் நிச்சயமாக நீர் அவரைப்பற்றி அவதூறு கூறிவிட்டீர் எனப் பகர்ந்தார்கள். (நூல்: முஸ்லிம்)

புறம் பேசுவது தனது சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதைப் போன்றது என்று திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றது.

‘மேலும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்’. (49:12)

புறம் பேசுதலைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது புறம் பேசுபவரின் வார்த்தையைக் கடலில் போட்டால் இதனுடைய கடுமையான சொல்லின் காரணத்தால் கடல் நீரின் தன்மையே மாறிவிடும் என்றார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம், சஃபிய்யா (ரலி) அவர்களுடைய இன்னன்ன விஷயங்கள் உங்களுக்குப் போதுமானதாகும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ கூறிய அந்த வார்த்தையை கடல் நீரில் கலந்தால் (அதனுடைய தன்மையையே) மாற்றி விடும் என்றார்கள். (நூல்: அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)
புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களாலேயே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தை கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினால் ஆன நகங்கள் இருந்தன. அவற்றின மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் (தாமே) காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே இவர்கள் யார்? என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தை சாப்பிட்டார்கள் (அதாவது புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் பங்கம் விளைவித்தவர்கள் என விளக்கமளித்தார்கள். (நூல்: அஹ்மத், அபூதாவூத்)

இப்படிப்பட்ட பெரும் பாவமான புறம் பேசுதலை நாமும் தவிர்ந்து கொண்டு, அவை பேசப்படும் இடத்தை விட்டு விலகி விடவும் வேண்டும்.

‘(முஃமின்கள்) வீணானதை செவியுற்றால் அதைப் புறக்கணித்து, எங்களுக்கு எங்கள் அமல்கள், உங்களுக்கு உங்கள் அமல்கள்! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள்’. (அல்குர்ஆன் 25:55)

‘(ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்திற்குரியவர்கள்) வீணானவற்றை விட்டு விலகி இருப்பார்கள்’ (அல்குர்ஆன் 23:3)

புறம் பேசுதலைத் தவிர்ந்து கொள்வதற்கு நபி ஸல் அவர்கள் கூறிய மணிமொழிகளை மனதில் பதிய வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

1. முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

2. எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

3. நான் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளத் தக்க ஒரு விஷயத்தை அறிவியுங்கள்! என்று கேட்டேன். ‘எனது இறைவன் அல்லாஹ் என்று கூறி, பிறகு அதிலேயே உறுதியாக இருப்பீராக’ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது என்ன? என்று கேட்டேன். அப்போது தனது நாவை பிடித்துக் காட்டி இது தான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: திர்மிதி)

2. அவதூறு

நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர், இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 24:23)

3. கோள்

‘ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை’ சிலர் தொழிலாகவே கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட செய்யப்பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்வார்களே தவிர, சுவர்க்கம் செல்லவே முடியாது.

குறை சொல்லி புறம் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)

கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்லும் போது இந்தப் கப்ருகளில் உள்ள இருவரும் வேதனை செய்யப்படுகின்றார்கள், அவர்கள் இருவரும் (அவர்களின் எண்ணத்தில்) பெரும் பாவத்தினால் வேதனை செய்யப்படவில்லை. என்றாலும் அது பெரும் பாவம் தான். அவ்விருவரில் ஒருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார். மற்றவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார் எனக் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

4. பொய் சாட்சி

அவர்கள் (அல்லாஹ்வின் அடியார்கள்) பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள். மேலும் அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவர்களாக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள். (அல்குர்ஆன் 25:72)

பெரும் பாவங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘அல்லாஹ்விற்கு இணை வைப்பது, பெற்றோருக்கு நோவினை செய்வது, பொய் சாட்சி சொல்வது’ என்று பதிலளித்தார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

5. தர்மம் செய்ததை சொல்லிக் காட்டுதல்

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தம் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததை சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் தர்மங்களை, பாழக்கி விடாதீர்கள். (அல்குர்ஆன் 2:264)

மறுமை நாளில் அல்லாஹ் மூன்று சாரார்களுடன் பேசவும மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். கைசேதப்பட்ட, நஷ்டமடைந்த அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். (தனது) கீழாடையை (பெருமைக்காக, கரண்டைக் காலுக்கு கீழ்) தொங்க விடுபவன், (தான் செய்த தர்மத்தை) சொல்லிக் காட்டுபவன், பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம்)

6. சபித்தல்

ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி, அபூதாவூது)

ஒருவர் இன்னொருவரை ‘பாவி’ என்றோ ‘காஃபிர்’ என்றோ கடுஞ்சொல் கூற வேண்டாம். (ஏனெனில்) குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் (சொன்னவர்) பக்கமே திரும்பி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)

7. இறந்தவர்களை ஏசக்கூடாது

இறந்தவர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் முற்படுத்தியதற்குரியதை பெற்றுக் கொண்டார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)

8. பக்கத்து வீட்டுக்காரருக்கு துன்பம் தருதல்

யார் அல்லாவையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும், இல்லையெனில் மௌனமாக இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

9. காலத்தைத் திட்டுதல்

காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்தி விடுகிறார்கள், காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறி வரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)

இதுவரை நாம் நாவினால் ஏற்படும் தீங்குகளையும் அவற்றைப் பற்றிய திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் எச்சரிக்கைகளையும் கண்டோம்.
சொர்க்கம் செல்வதற்கு நாவு தடையாகிறது என்பதை எச்சரித்த நபி (ஸல்) அவர்கள் நாவை சரியாக பயன் பயன்படுத்துவோருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதையும் கூறுகிறார்கள்.

எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

இதுவரை நாவின் விபரீதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இதே நாவை நல்ல காரியங்களில் பயன்படுத்தினால் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன.

நாவைக் கொண்டு தஸ்பீஹ் செய்யலாம், குர்ஆன் ஓதலாம், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கலாம். இன்னும் இவைகள் போன்ற எத்தனையோ நல்ல காரியங்களில் ஈடுபடலாம்.

நாவை நல்ல வழிகளில் பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகளில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

1. குர்ஆன் ஓதுதல்

நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்கு (அதை ஓதியவர்களுக்கு) பரிந்துரை செய்யக்கூடியதாக வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். ‘அலிஃப், லாம், மீம் என்பது ஓர் எழுத்து’ என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)

2. தஸ்பீஹ் செய்தல்

இரு வார்த்தைகள் (சொல்வதற்கு) நாவுக்கு மிக இலகுவானவை, இறைவனின் தராசில் மிக கனமானவை, இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை (அவ்விரு வார்த்தை) ‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

3. நன்மையை ஏவி தீமையை தடுத்தல்

(விசுவாசங் கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களில் எல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும் நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 3:110)

நாவு மனிதனை சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ கொண்டு செல்லக்கூடிய உறுப்பு என்பதை தெரிந்து கொண்டோம். ஆகவே நரகம் செல்லக் கூடிய (சொல்) செயல்களிலிருந்து நாம் நாவைப் பாதுகாத்து சுவர்க்கம் செல்லக்கூடிய (சொல்) செயல்களைச் செய்து நாவினால் சுவர்க்கம் செல்ல நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

நன்றி: http://lptislam.blogspot.com

சனி, ஜூன் 4

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்

அதிகாலையில் துயில் எழும் பழக்கம் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன.

''அதிகாலையில் எழுவது ஆரோக்கியம்'' என்பதுமட்டுமின்றி அறிவையும் வளப்படுத்தும்.

அதிகாலையில் எழுந்து ''ஸுப்ஹுத்தொழுகையை தொழுது விட்டவர்களுக்கு அன்று முழுவதும் நல்ல நாளே'' என்றல்லவா இஸ்லாம் கூறுகிறது. இதில்தான் எவ்வளவு கருத்துக்கள் அடங்கியுள்ளன! மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா?

o அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது. வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது!

நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால் இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க விடி காலையிலேயே விழித்தெழுங்கள்.

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்

o சீக்கிரம் எழுந்தால் அதிகாலையை போன்ற அமைதி உங்களிடமும் ஒட்டிக் கொள்ளும். வாகன இயக்கம், ரேடியோ, டி.வி. இரைச்சல், பக்கத்து வீடுகளின் கூச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்று எதுவும் உங்களுக்குத் தொந்தரவு செய்யாது.

o எங்கும் அமைதி நிலவ நீங்கள் நிம்மதியாக செயல்படலாம். அதிகாலையை போன்ற அருமையான பொழுதை வேறு எப்போதும் அனுபவிக்கவே முடியாது. அந்த வேளைதான் சிந்திக்க, செயல்பட, படிக்க, சுவாசிக்க என பலவற்றுக்கும் ஏற்றது.

o காலையில் படுக்கையில் இருந்து துள்ளிக்குதித்து எழுந்திருங்கள். சோம்பேறித்தனமாக எழுந்தால் அன்றைய தினமே சோம்பலாகத்தான் இருக்கும். அவசரம் அவசரமாக வேலைகளை செய்ய வேண்டிவரும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படும். பிறகு அலுவலகத்திற்கு கிளம்ப தாமதம் ஆகும். இப்படி அடுக்கடுக்கான சிரமங்கள் தொடர, நிம்மதியே போய்விடும்.

o சீக்கிரமாக எழுந்துவிட்டால் பாதி வேலையை சூரியன் உதிக்கும் முன்பே முடித்துவிட்டு நிதானமாக இருக்கலாம். இதனால் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் நாள், இறுதிவரை இன்பமாகவே தொடரும்.

o காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் காலை உணவை நிதானமாக சமைத்து ருசித்து சாப்பிடலாம். காலை உணவு, நலமான வாழ்வுக்கு தினமும் சாப்பிடும் உற்சாக டானிக் போன்றது. சுறுசுறுப்புக்கும் உதவும். சோம்பேறித்தனமாக படுத்திருந்து காலை உணவை சாப்பிடும் நேரத்திற்கு எழுந்திருந்தால், பணிக்குச் செல்லும் அவசரத்தில் உணவை தவிர்க்கும் சூழல் கூட வரும். இதனால் எரிச்சலும், சோம்பலும் ஒட்டிக் கொள்ளும்.

o காலையில் எழுந்து `ஹாயாக’ அமர்ந்து டீ குடித்துக் கொண்டே பேப்பர் படித்துவிட்டு பரபரப்பில்லாமல் காலை உணவைச் சாப்பிட்டால் கிடைக்கும் சுகமே சுகம்.

o தேகபயிற்சி செய்ய உகந்ததும் காலை பொழுதுதான். மற்ற நேரங்களைவிட அதிகாலை வேளை தான் உடற்பயிற்சிக்கு ஏற்ற வேளை. நலமாக வாழ்வதற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று உடற்பயிற்சி. அதனால் கிடைக்கும் பலன்களும் பலபல. காலையில் உடற்பயிற்சி செய்வதை எந்தக் காரணத்திற்காகவும் நிறுத்தாதீர்கள்

o காலை வேளையிலேயே எழுதுவது, மெயில் பார்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்து முடித்தால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். அந்த நேரத்தை குடும்பத்தினருடன் ஜாலியாகக் கழிக்கலாம்.

o உங்கள் லட்சியத் திட்டங்கள் பற்றி அதிகாலையில் சிந்தியுங்கள். அப்போது குழப்பங்களுக்குக் கூட தெளிவான வழி கிடைக்கும். எழுந்தவுடன் அன்று முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். உடனே லட்சிய பயணத்தை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

o ஒவ்வொரு வேலையையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டுமானால் அதற்கு காலையில் எழுவது தான் சரியான செயல். ஒரு வேலையில் தாமதமானாலும் அடுத்தடுத்த தாமதங்கள் உங்கள் மதிப்பை குறைப்பதோடு, வேலைகளையும் முடக்கும்.

o நீங்கள் சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத்தான் முடியவில்லை என்கிறீர்களா? அது ஒன்றும் பெரிய காரியமில்லை. முதலில் சில நாட்கள் அலாரம் வைத்து எழுந்திருக்கலாம். அலாரத்தை படுக்கையில் வைத்தால் மனம் அணைத்துவிட்டு தூங்கத்தான் சொல்லும். எனவே எழுந்து சென்று `ஆஃப்’ செய்யும் தொலைவில் அலாரத்தை வையுங்கள்.

இரவில் 2 டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு படுத்தால் காலையில் தானாகவே எழுந்திருப்பீர்கள். எழுந்தவுடன் மீண்டும் படுக்காமல் வேலை செய்யத் தொடங்கிவிட்டால் சோம்பல் ஓடியே போகும்.

நன்றி: www.nidur.info

வெள்ளி, ஜூன் 3

நம்மிடமிருந்து கோடிகளைச் சுருட்டும் டெலிகாம் நிறுவனங்கள்!

நம்மிடமிருந்து கோடிகளைச் சுருட்டும் டெலிகாம் நிறுவனங்கள்!


37,00,80,000 ரூபாய் சுருட்டல்!
சுருட்டியது யார்?
செல்போன் சேவை தரும் நிறுவனங்கள்.
சுருட்டியது யாரிடமிருந்து?
செல்போன் பயன்படுத்தும் நம்மிடமிருந்து.

நிஜமாகவா என்று அதிர்ச்சி அடைபவர்களுக்கு ஒரு கேள்வி. VAS என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டாலும் பரவாயில்லை. VAS என்ற பெயரில் உங்களுக்கே தெரியாமல் அவ்வப்போது பணம் திருடப்படுகிறது என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

Value Added Service என்பதின் சுருக்கமே VAS.
மாதம் இருபது ரூபாயில் இருந்து தினமும் இருபது ரூபாய் வரை பணம் கறக்கும் இந்த வசதிகளைப் பற்றி நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

உங்களுக்கு ஃபோன் செய்யும்போது குறிப்பிட்ட பாடலை காலர் டியுனாக ஒலிக்க விடுவது, தூங்கி எழுந்தவுடன் ராசிபலன் சொல்வது, காதல் டிப்ஸ் கொடுப்பது, மருத்துவ ஆலோசனை சொல்வது, கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது, டிராபிக் ஜாம் என அலறுவது உட்பட ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கட்டணம்.

இப்படி பல சேவைகள் இருப்பதும், அதற்க்கென்று தனித்தனி கட்டணங்கள் இருப்பதும் தவறில்லை. ஆனால் இந்த சேவைகளை நீங்கள் கேட்காமலேயே, உங்கள் தலையில் கட்டி, உங்களிடம் சொல்லாமலேயே, பணத்தையும் எடுத்துக் கொள்வதில்தான் புத்திசாலித்தனமான சுருட்டல் துவங்குகிறது.

இராஜபாளையத்தை அடுத்துள்ள சொக்கநாதன் புத்தூர் என்ற சின்ன கிராமத்திலிருந்து என் சித்தப்பா சென்னை வந்தார். வேட்டி மடிப்புக்குள் செல்போன் வைத்திருக்கும் அவரை மொபைலில் அழைத்தபோது, லேட்டஸ்ட் பாடல் காலர் டியுனாக ஒலித்தது. அவரிடம் எப்படி இந்தப் பாட்டை காலர் டியுனா வச்சீங்க என்றேன். அவ்வளவுதான் பொங்கிவிட்டார்.

அட நீ வேறப்பா..இந்த பச்சை பட்டனை அமுக்கினா பேசலாம். சிவப்பு பட்டனை அழுத்தினா கட் பண்ணலாம். இதுதான் எனக்குத் தெரியும். என்கிட்ட போய் இந்த பாட்டு எப்படி வந்ததுன்னு கேட்டா எனக்கு எபபடித் தெரியும்? நான் இந்தப் பாட்டையெல்லாம் கேக்கறதே இல்ல. ஆனா அப்பப்போ பாட்டு மாறிக்கிட்டே இருக்கு. திடீர் திடீர்னு 30 ரூபா போயிடுது. இத எப்படி தடுக்கறதுப்பா என்றார் பரிதாபமாக..


கடந்த வாரம் ஐதராபாத் செல்ல வேண்டியிருந்தது. புறப்படும் முன் எனது மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். 98ரூபாய்க்கு ஏதோ பாக்கேஜ் இருக்கிறது, ஒரு மாதம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்கள். நானும் பணத்தை கட்டிவிட்டு, எப்போது ஆக்டிவேட் ஆகும் என்றேன். ஈஸி ரீசார்ஜ் செய்தாச்சு சார். நீங்க உங்க போனில் என்னைக்கு செட்டப் செய்கிறீர்களோ, அன்றிலிருந்து ஒரு மாதம் வேலிடிட்டி என்றார்கள். காரில்தான் பயணம். உடன் வந்த நண்பர் டாட்டா கார்ட் இணைப்புடன் லேப்டாப் கொண்டு வந்திருந்ததால், நான் எனது ஃபோனில் இன்டர்நெட்டை ஆக்டிவேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று.

பயணமெல்லாம் முடிந்து திடீரென மொபைல் இன்டர்நெட்டுக்கு பணம் கட்டியது ஞாபகம் வந்தது. உடனே கஸ்டமர் கேர் ஆலோசனையின் படி இன்டர்நெட்டை ஆக்டிவேட் செய்தேன். செய்தவுடனேயே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இன்னும் ஒரு நாள்தான் வேலிடிட்டி இருக்கிறது என்றது ஒரு குரல். உடனே இன்டர்நெட் ரீசார்ஜ் செய்த கடையை தொடர்பு கொண்டேன். கடைக்காரரோ கூலாக, ரீ சார்ஜ் செய்த அன்றிலிருந்து ஒரு மாதம் கணக்கு சார். வாங்கின அன்னைக்கே ஆக்டிவேட் செய்து பயன்படுத்தாதது உங்க தப்பு என்றார். சிறிய வாக்குவாதத்திற்குப் பின் கஸ்டமர் கேரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்றார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், அரை நாள் முயற்சித்தால், ஒரே ஒரு முறைதான் கஸ்டமர் கேர் நபரை லைனில் பிடிக்க முடிகிறது. எனது 98 ரூபாய் போயே போச்.

குமார் என்கிற சேல்ஸ் மேனேஜர். ஊர் ஊராக பயணம் செய்பவர். ஊரிலிருந்தால் மோட்டர் பைக்கிலேயே சுற்றுபவர். இனி மிஸ்டு கால் பற்றி கவலைப் படவேண்டாம். மிஸ்டு கால் நம்பர்கள் எல்லாம் உங்களுக்கு எஸ்எம்எஸ்ஆக வரும் சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வந்ததாம். நாம் கேட்காமலேயே இந்த சேவை நமக்கு வந்தது எப்படி என்று குழம்பிய நண்பர், பேலன்ஸ் செய்திருக்கிறார். 30 ரூபாய் அபேஸ் ஆகியிருந்ததாம். எரிச்சலடைந்த குமார், திரும்பத் திரும்ப கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டாராம். பலன் ஏதுமில்லை. மாதம் 30 ரூபாய் அவருடைய மொபைலில் இருந்து கரைந்து கொண்டே இருக்கிறது.

2005ல் இருந்து இந்த புற வழி சுருட்டல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்போதெல்லாம் ஏதாவது ஒரு சேவை 3 மாதத்துக்கு இலவசம் என்பார்கள். இலவசம் தானே என்று நீங்களும் 3 மாதமும் பயன்படுத்துவீர்கள். நான்காவது மாதம், உங்கள் அக்கவுண்டிலிருந்து அந்த சேவைக்காக பணம் உங்களைக் கேட்காமலேயே உருவப்பட்டுவிடும். இதை நீங்கள் கண்டுபிடித்து கேட்டால் உருவுதல் நிற்கும். இல்லையென்றால் துளித் துளியாக உங்கள் பணத்தை சுரண்டுவார்கள்.

செல்போன் சேவை நிறுவனங்களின் இது போன்ற அராஜகங்களை எல்லாம் கட்டுக்குள் வைக்கத்தான் TRAI (Telecom Regulatory Authority of India) என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. இலவசமாக ஒரு சேவையை சில காலம் வழங்கிவிட்டு, வாடிக்கையாளரின் சம்மதத்தை கேட்காமலேயே திடீரென பணம் வசூலிப்பது கூடாது என்று ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. ஆனால் செல்போன் சேவை கொள்ளையர்கள் அசரவில்லை. இந்த சேவை வேண்டாம். இதற்கு நான் பணம் கட்ட மாட்டேன் என்று வாடிக்கையாளர்கள் SMS அனுப்பினால் பணம் பிடுங்கப்படமாட்டாது என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னார்கள்.

ஒரு பெரிய செல்போன் சேவை நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருந்த நண்பர் ஒருவர் (பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன்) கூறிய தகவல் என்ன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் கேட்காமலேயே பணத்தை உருவிக் கொண்டு, ஒரு சேவையை திணிக்கிறோம். இதை கவனித்துவிட்டு, எனக்கு வேண்டாம் என்று எங்களை அணுகுபவர்கள் 200-300 பேர்களே. அவர்களிலும் 50-60 பேர்தான் எங்களுடைய எல்லா இழுத்தடிப்புக்கும் அசராமல், தங்கள் பணத்தை வாபஸ் பெறுகிறார்கள். மற்றவர்கள் அலுத்துப் போய் விட்டுவிடுகிறார்கள் என்றார். ஒரு இலட்சம் பேரிடம், அவர்களின் சம்மதம் இன்றி மாதம் 30 ரூபாய் உருவப்பட்டால் அதற்குப் பெயர் சேவையா? கொள்ளையா?

TRAI சர்வ வல்லமை பொருந்தியதாக கூறப்பட்டாலும், அவ்வப்போது சில அறிக்கைகளுடன் நின்றுவிடுகிறது. செல்போன் சேவை நிறுவனங்களின் இந்த அராஜக பணச் சுருட்டலை கண்டும் காணாதது போலத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தங்கள் மேல் திணிக்கப்படும் இந்த சேவை தேவை இல்லை என்று வாடிக்கையாளர்கள் SMS அனுப்ப வேண்டியதில்லை, என்று ஒரு திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் கில்லாடி கிரிமினல் செல்போன் நிறுவனங்கள், அதற்கும் ஒரு சால்ஜாப்பு கண்டுபிடித்தன. நாங்கள் வாடிக்கையாளருக்கு போன் செய்தோம். அவர் ஆமாம் என்றார். அதனால்தான் இந்த சேவையைத் தந்தோம் என்று புதுக்கதை சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களோ, எங்களுக்கு எந்த போனும் வரவில்லை என்றார்கள். சிலரோ போன் வந்தது, நான் வேண்டாம் என்றேன். ஆனாலும் எனக்கு அந்த சேவை திணிக்கப்பட்டு பணம் உருவப்பட்டுவிட்டது என்றார்கள்.

வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டதாக கூறிக் கொள்ளும் செல்போன் நிறுவனங்கள், அவற்றை பதிவு செய்து வைப்பது இல்லை. வேண்டுமென்றே அவை இப்படிச் செயல்படுவதால் இவற்றை சரி பார்க்கவும் வழியில்லை. எனவே TRAI மீண்டும் தன் கட்டுப்பாடுகளை இறுக்கியது. இனிமேல் ஏதாவது சேவையை ஒரு வாடிக்கையாளருக்கு தந்தால், SMS, Email அல்லது Fax வழியாக எழுத்து பூர்வமாக சம்மதம் பெற வேண்டும். சம்மதம் தரும்போது சேவை பற்றிய முழு விபரங்களையும், கட்டணம் உட்பட அனைத்தையும் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். SMS மற்றும் Email மூலமாக Acknowledgement பெற வேண்டும். எனறு புது விதிகளை உருவாக்கியது. ஆனால் செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த விதிகள் எதையும் கடைபிடிப்பதாகத் தெரியவில்லை. TRAIக்கு அஞ்சுவதாகத் தெரியவில்லை.

ஒரு காய்கறி எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் மாதம் 4000 ரூபாய் சொற்ப வருமானத்திற்கு, காய்கறிகளை சுத்தம் செய்யும் வேலையில் உள்ள கவிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவருடைய மொபைல் போனிலிருந்து தினமும் 20 ரூபாய் போய்க் கொண்டே இருந்ததாம். நண்பர்கள் யாரோ விளையாடுகிறார்கள் என்று அசட்டையாக இருந்தவர், பாதிச் சம்பளம் வெட்டியாக கரைவதை உணர்ந்தவுடன், விஷயம் தெரிந்த பக்கத்துவீட்டுக் காரரிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். அவர் விசாரித்து தெரிந்து கொண்டது என்ன தெரியுமா? கல்பனா GPRS வேண்டுமென்று கேட்டுக் கொண்டாராம். அதனால் தினமும் 20 ரூபாய் பிடித்துக் கொண்டார்களாம். GPRSனா என்ன என்று கேட்கும் அந்த பரிதாபப் பெண்ணை போல பணம் பறிகொடுப்பவர்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கான பேர்.

தினமும் பூ விற்று பிழைப்பு நடத்தும் ஜெயாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
அண்ணா கொஞ்சம் இத இன்னான்னு பாரேன். யாரோ ஒரு பொண்ணு போன் பண்ணுச்சு. இங்கிலீஷ்ல இன்னா பேசுச்சுன்னே புரியல. நான் கட் பண்ணிட்டேன். இப்போ இன்னாடான்னா, 30 ரூபாய் பூடுச்சு என்றாள். போனை வாங்கிப் பார்த்தால் அதில் ஒரு SMS வந்திருந்தது. அதாவது தினசரி மெடிக்கல் டிப்ஸ் தருவதற்க்காக 30 ரூபாய் வசூலிக்கப்பட்டுவிட்டதாம். ஆங்கிலம் தெரியாத ஒரு பெண்ணிடம், ஆங்கிலத்தில் பேசி பணத்தை உருவும் இந்த அராஜகத்துக்கு என்ன பெயர்?

மொபைல் வைத்திருக்கும் அனைவருக்கும், இது போல பணத்தை பறிகொடுத்த சம்பவம் ஒன்றாவது இருக்கும். நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாடலை உங்கள் காலர் டியூனாக்க விரும்பினால், ஸ்டார் பட்டனை அழுத்துங்கள், என்ற குரலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். நான் தான் ஸ்டார் பட்டனை அழுத்தவே இல்லையே. அப்புறம் எப்படி இந்தப் பாட்டு வந்துச்சு. எனக்கு 30 ரூபா போயிடுச்சே என்று புலம்புபம் இலட்சக் கணக்கானவர்களின் குரலை எங்காவது கேட்டிருக்கிறீர்களா? இது பற்றி எழுதப் போகிறேன் என்றவுடன் இது போல பல புலம்பல்களைக் கேட்டேன்.

TRAI இது குறித்தும் ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தது. ஸ்டார் பட்டனை அழுத்தியதாலேயே வாடிக்கையாளர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று அர்த்தமில்லை. வாடிக்கையாளரிடம் பேசி, அவரை SMS. Email அல்லது Fax வழியாக சம்மதம் பெற வேண்டும் என்று கூறியது. 2009ல் வெளிவந்த இந்த கட்டுப்பாட்டுக்கு எந்த செல்போன் சேவை நிறுவனமும் மதிப்பளிக்கவில்லை.

அதுவும் இந்த ஸ்டார் பட்டன் விவகாரம் வாடிக்கையாளருக்கே மிகத் தாமதமாகத்தான் தெரியவருகிறது. அவருக்கு ஃபோன் செய்யும் யாராவது, பாட்டு மாறியது பற்றி சொன்னால் மட்டுமே அவருக்குத் தெரியும். அதுவரையில் அவருக்கு பணம் பறிபோனதே தெரியாது. தெரியவரும்போது, அந்த சேவை ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்திருப்பதால், அந்த தொகையை திரும்பப் பெற்றதாக ஒரு உதாரணம் கூட கிடையாது.

வாடிக்கையாளர் புகார் தந்தால் ஒரு மாதத்துக்குள் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சேவை நிறுவனத்தின் மேல் தவறு இருந்தால், அடுத்த இரண்டு மாதத்துக்குள் பிரச்சனையை தீர்க்க வேண்டும். TRAIயின் இந்த விதி முறைகளை மேலோட்டமாகப் பார்த்தால் சேவை நிறுவனங்கள் தப்ப முடியாது என்பது போலத் தோன்றும். ஆனால், அடுத்த வரியை படித்தால் உங்களுக்கு நம்பிக்கையே போய்விடும். அதாவது சேவை நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை குறித்த காலத்துக்குள் எடுக்கத் தவறினால், அவர்களுக்கு அபராதமோ, தண்டனையோ எதுவுமே கிடையாது, என்பது தான் அது. அதாவது TRAI என்பது அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று செல்போன் சேவை நிறுவனங்களைப் பார்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறது. அதற்கு மேல் எதையும் செய்வதற்கு TRAIக்கு அதிகாரமில்லை.

மொபைல் சேவை நிறுவனங்களின் இந்த அராஜக போக்கால் எவ்வளவு பணம் சுருட்டப்படுகிறது என்பது பற்றி ஒரு சிறிய புள்ளி விபரம் பார்ப்போம். ஒரு சேவையை வழங்குவதற்கு முன்னால் உங்களிடம் அதற்க்கான அனுமதி பெற்ப்படுகிறதா? என்ற கேள்வியுடன், இந்தியா முழுவதும் மாநிலம் வாரியாக ஒரு புள்ளிவிபரக் கணக்கு எடுக்கப்பட்டது. அதன்படி 23.89% சதவிகித மக்களிடம், அவர்களின் அனுமதி இல்லாமலேயே சேவை(VAS) வழங்கப்பட்டு பணமும் சுரண்டப்படுகிறது. அதாவது 18504000 நபர்களிடம எந்த அனுமதியும் இன்றி குறைந்தது ஆளுக்கு 20 ரூபாய் உருவப்படுகிறது. கணக்கிட்டால் பகீர் என்றிருக்கும். 18504000 x 20 = 37,00,80,000 ரூபாய்.

இந்த கூட்டுக் கொள்ளையில் Airtel, Aircel, Idea, Vodfone உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு. இவர்களை தட்டிக் கேட்க வேண்டிய TRAI அமைப்பு, அவ்வப்போது சில சட்ட திட்டங்களை கூறிவிட்டு, வேடிக்கை பார்க்கிறது.

இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், கடந்த ஆண்டு (2010) TRAI அமைப்பால் 3285 புகார்கள் பெறப்பட்டு அவை சம்பந்தப்பட்ட செல்போன் சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக, பாராளுமன்றத்தில் திரு.சச்சின் பைலட்(Minister of State for Communications and Information Technology) கூறினார். 771 மில்லியன் மக்களில் எத்தனை பேருக்கு TRAI என்ற அமைப்பு தெரியும். கரிசல்காட்டு விவசாயிக்கும், காய்கறியும், பூவும் விற்றுப் பிழைக்கும் சாதாரணர்களுக்கும் பணம் பறிபோனதே தெரியவில்லை.அவர்கள் TRAIக்கு இமெயில் அனுப்பி புகார் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தம். எனவே நமது அரசாங்கம் இந்த பணச் சுருட்டலை தடுக்க, கடுமையான சட்ட திட்டங்கள் வகுத்து, செல்போன் சேவை நிறுவனங்களை அடக்கி வைக்க வேண்டும்.

அது வரையில் வாடிக்கையாளர்களாகிய நாம்தான் விழிப்புடன் இருந்து, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும். செல்போன் சேவை என்ற பெயரில் கொள்ளையடிப்பவர்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.
கம்ப்யூட்டர் உலகம் (மே ) இதழில் எழுதிய கட்டுரை

இறைவா! நீயே என் எஜமான்.நான் உனது அடிமை.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்-

Thanks to Brother அபூயாசிர், உடன்குடி

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதேஎன்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர்(ரழி) நூல்:திர்மிதி.

எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக்கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது. இந்த அவல நிலைக்கு 7 வருடம் அரபு மதரஸாக்களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவிமார்களும் ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை, நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ஷிர்க்என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்றஉண்மையை மறைப்பது ஏன்?

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.

பிரார்த்தனையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்:
பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் இறைவனைப் பணிவுடனும்,இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) நபி ஜகாரிய்யா (அலை) அவர்கள் இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 19:3)

அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)

வலியுறுத்திக்கேட்பது:
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக, ‘இதை நீ தந்து ஆகவேண்டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாதுஎன்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று கேட்க வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை) நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை. அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: புகாரி.

பாவமானதைக் கேட்கக் கூடாது:
அல்லாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படவில்லைஎன்று மனிதன் கூறுகின்றான். உறவை துண்டிக்கும் விஷயத்திலும் பாவ மானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்கு (பிரார்த்தனை செய்பவருக்கு)ப் பதில் அளிக்கப்படாது.
அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்

அவசரப்படக்கூடாது:
பிரார்த்தனை செய்யும்போது அவசரப்படக்கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தனை செய்தேன் எனக்கு இறைவன் எதுவும் தரவில்லை என்று கூறி பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த் தனை செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப் படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப் படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்க ப்படும்’. என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு:அபூஹுரைரா(ரழி)நூல்: புகாரி.

நிராசை அடையக்கூடாது:
சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள் கேட்கும் அந்த காரியம் நிறைவேறவில்லையென்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாதுஅல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன்12:87)

என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன் என் று (அல்லாஹ் கூறுவதை) (39:53) தெரிவிப்பீராக!

உணவு உடை ஹலாலாக இருத்தல்:
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங் களுக்கு அளித்து உள்ளவற்றிலிருந்து தூய் மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப் பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங் கள். (2:172) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மை யானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறிவிட்டு, ‘தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலி ஹான) நல்ல அமல்களைச் செய்யுங்கள்! நிச் சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (23:51)

ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதிபடிந்த பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின்பால் கைகளை உயர்த்தி, எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவு அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனோ ஹராமில் மூழ்கிவிட்டான். இந்த நிலையில் அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தீங்கு தரக்கூடியதைக் கேட்பான். உதாரணமாக, தனக்கு அதி கப்படியான, செல்வம்ஃபணம் வேண்டுமென்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்த செல்வம் பணம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கிறான். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் அதைக் கொடுப்பதற்கு பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகிறான். அதுவும் இல்லையென்றால் அவன் கேட்டதைக்கொடுக்காமல் அதற்கு பகரமாக மறுமையில் அவனது நிலையை உயர்த்துவான்.

உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியம் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்த னையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்த பிரார்த்தனை விரைவாகப் பதில் அளிக்கப்படும் அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகிறான் அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்க வாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன? என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு அல்லாஹ் அதிகமாக்குவான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஸயீத்(ரழி) நூல்: அஹ்மத்.

ஒரு அடியான் அல்லாஹ்விடம் பிரார்த் தனை செய்யும்போது அவனை வெறுங்கையு டன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான். உங்களுடைய இறைவன் சங்கையானவன் அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அறிவிப்பு: சல்மான்(ரழி) நூல்:இப்னு மாஜா.

பதிலளிக்கப்படும்பிரார்த்தனைகள்:
கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகை யையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் பிரா ர்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரவின் கடைசியிலும்,கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பு: அபூஉமாமா(ரழி) நூல்: திர்மிதீ

இரவின் கடைசி நேரத்தில்
இரவின் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனை பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகளில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரவை மூன்றாக பிரித்து கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு தினமும் இற ங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்புக் கேட்டால் நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி 11145 அல்லாஹ் தன்னுடைய நெறிநூலாகிய அல்குர்ஆனில் இறை நம்பிக்கை உடையவர் இரவின் கடைசி நேரத்தில் மன்னிப்பு கேட்பவராக இருப்பார் என்று கூறுகின்றான். (அல்குர்ஆன் 3:17)

ஸஜ்தாவின்போது….
ஓர்அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக் கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன் னுடைய இறைவனை நெருங்குகின்றான் எனவே ஸஜ்தாவில் பிரார்த்தனையை அதிகப் படுத்துங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்.

பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்..
பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: அபூதாவுத்.

தந்தை பிள்ளைகளுக்கான பிரார்த்தனையின் போது….
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1.அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3.தந்தை தனது பிள்ளைகளுக்காகச் செய் யும் பிரார்த்தனை. அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னு மாஜா

ஜும்ஆ நாளில்…..
வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் அவருக்கு கொடுக்காமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை காட் டினார்கள். அபூஹுரைரா(ரழி) புகாரி.

நோன்பாளி நோன்பு திறக்கும் போது
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று நபர்களின் பிரார்த்தனை மறுக்கப்படாது. 1. நீதியானஅரசன், 2. பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை 3. நோன்பாளி நோன்பு திறக்கும்போதுகேட்கும் பிரார்த்தனை. அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னுமாஜா.

எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த அல்லாஹ்வை மட்டுமே அழைத்து முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது மேற்கண்ட குர்ஆன் ஹதஃத் ஒழுங்கு முறைகளுடன் பிரார்த்திப்போமாக! வல்ல இறைவன் நம்முடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்.

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இதன் பொருள் :

இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306

இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்

அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )