சனி, ஏப்ரல் 30
கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!
வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.
சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.
வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:
தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.
உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.
ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்
Source: http://www.sinthikkavum.net/
உங்கள் நோய்க்கு மருந்து தண்ணீரில் உள்ளது முயற்சி செய்யுங்கள்
உங்கள் நோய்க்கு மருந்து தண்ணீரில் உள்ளது முயற்சி செய்யுங்கள்
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.
1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160 ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.
5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:
உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்.
வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்.
சர்க்கரை வியாதி – 30 நாட்கள்.
புற்றுநோய் – 180 நாட்கள்.
காசநோய் – 90 நாட்கள்.
Jashakkallah: http://www.thoothuonline.com
புதன், ஏப்ரல் 27
அரசியல் சட்டம் திருக்குர்ஆனின் அடிப்படையில் அமையவேண்டும்-
அரசியல் சட்டம் திருக்குர்ஆனின் அடிப்படையில் அமையவேண்டும்-எகிப்து நாட்டு மக்கள் விருப்பம்
கெய்ரோ:எகிப்தில் இயற்றப்படவிருக்கும் அரசியல் சட்டத்தின் அடிப்படை திருக்குர்ஆனாக இருக்கவேண்டும் என பெரும்பாலான எகிப்தியர்களும் வலியுறுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசு அமையவேண்டும் என எகிப்து நாட்டு மக்கள் விரும்புகின்றார்கள்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ப்யூ ரிசர்ச் செண்டர் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. இச்செய்தினை அஸோஸியேட் ப்ரஸ் வெளியிட்டுள்ளது.இஸ்ரேலுக்கு ஆதரவாக 32 ஆண்டுகளுக்கு முன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்துஸ் செய்யவேண்டுமென 54 சதவீத எகிப்து நாட்டு மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மீதும், அந்நாட்டு அதிபர் ஒபாமா மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என 64 சதவீத எகிப்திய மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் நடை பெறவிருக்கவே இந்த ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன. எகிப்தின் பல்வேறு பகுதிகளில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
http://www.thoothuonline.com/