Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

புதன், ஏப்ரல் 17

பன்மொழிகள் கற்றுக் கொள்ள ஆர்வமா?


பன்மொழிகள் கற்றுக் கொள்ள ஆர்வமா?

புரனவுன்சியேட்டர் (Pronunciator) என்ற இணையதளம் 60க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக்கொள்ளும் வசதியை வழங்குகிறது.பிற மொழியைக் கற்க உதவும் மற்ற இணையதளங்களில் இருந்து இந்தத் தளம் மாறுபட்டது. நாம் எந்த மொழியைப் பயில விரும்புகிகின்றோமோ, அந்த மொழியை, நம் தாய்மொழியிலிருந்தே கற்கலாம்.

www.pronunciator.com என்ற இத்தளத்திற்குச் சென்று I speak என்பதில் நாம் எந்த மொழி பேசுபவர் அல்லது எந்த மொழியில் இருந்து கற்க விரும்புகின்றோமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து இருக்கும் I want to learn கட்டத்திற்குள் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஹீப்ரு, ஸ்பானிஷ் என 60க்கும் மேற்பட்ட உலக மொழிகள், நம் நாட்டு மொழிகள் இருக்கும். எந்த மொழி கற்க விரும்புகின்றோமோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சொற்கள் தொகுப்பு, முக்கிய வினைச்சொற்கள், எளிய சொற்றொடர்கள், சுற்றுலா பயணிகளுக்கான சொற்றொடர்கள், உரையாடல்கள் என 5 பகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் 1,000க்கும் மேற்பட்ட பயிற்சிகளும், பாடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்தையும் அது வார்த்தைக்கு வார்த்தை அழகாக சொல்லிக் கொடுக்கிறது. கற்றுத்தரும் வார்த்தைகள் தேர்வு செய்த மொழியிலும், ஆங்கிலத்திலும் வரும்.

உதாரணமாக, நாம் தமிழ் மொழியிலிருந்து, பிரெஞ்ச் மொழி பயிலுகின்றோம் என்றால்,Bonjour (வணக்கம்)Excusez - moi (என்னை மன்னியுங்கள்)
Silvous plait (தயவு செய்து) என வரும். கூடவே கார்ட்டூன் படமும் நமக்கு செய்கை மூலம் வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை அழகாக விளக்கிக் காட்டுகிறது. அதனால், புரிந்துகொள்ளுதல் மிக எளிதாகிறது.

புரனவுன்சியேட்டர் தளத்தைப் பயன்படுத்த, உறுப்பினர் கணக்கு தொடங்க வேண்டும் என்று அவசியமில்லை. உறுப்பினர் கணக்கு வைத்துக்கொண்டால், கூடுதல் வசதிகளைப் பெற முடியும். கொஞ்சம் ‘சின்சியரா’ உட்கார்ந்து படித்தால் ஆண்டிற்கு, குறைந்தது 5 மொழிகள் கற்றுக்கொள்வது சாத்தியமே...  
                                                                                                              —Mohamed Uwais Uwais முகநூல் பதிவிலிருந்து....

4 comments:

கே.முருகபூபதி இலக்கியவட்டம் சொன்னது…

மிகவும் நன்றி சார். நான் உடனே தொடங்கி விட்டேன்.
http://kmurugaboopathy.blogspot.in/

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி...

enrenrum16 சொன்னது…

புதிய தகவலுக்கு நன்றி.

Abu Nadeem சொன்னது…

என் வலைப்பூவில் பயன்படுத்தியுள்ள CODE - களை உங்கள் இணையதளத்திற்கு தேவைப்பட்டால். நீங்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

http://ungalblog.blogspot.com/p/codes.html