Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

கண்டுபிடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டுபிடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 14

கடலில் இருந்து மின்சாரம்

கடலில் இருந்து மின்சாரம்!




உலகளவில் கடந்த இருபது ஆண்டுகளில் மின்சக்தியின் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மக்கள் பெருக்கத்தின் காரணமாகவும், தொழில் முன்னேற்றத்தினாலும் மின்சக்திப் பயன்பாடு கூடிக்கொண்டே போகிறது.

சக்திக்கான இயற்கை மூலங்களான பெட்ரோலியம், எரி வாயுக்கள், நிலக்கரி போன்றவை தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.

தற்போது பூமியில் புதைந்திருக்கும் நிலக்கரிப் படிவுகள், வரும் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.

நீர் மின்சார உற்பத்திக்கும் ஓர் அளவுண்டு என்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். கோடைக் காலத்தில் அணைகளில் தண்ணீர் மட்டம் குறையும்போது நீர் மின்சார உற்பத்தியும் குறைந்துவிடுகிறது. எனவே செலவு குறைவாக உள்ளதும், தொடர்ந்து மின்சக்தியைத் தருவதுமான புதிய ஆற்றல் மூலத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு அமைந்த புதிய வழிமுறைதான் கடலில் இருந்து மின்சக்தியை உற்பத்தி செய்வதாகும்.

அலை வீச்சு, கடலில் ஏற்படும் வெப்ப வேறுபாடுகள், ஆறுகள் கடலில் பாய்ந்து கலப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஆற்றலை நாம் இதுவரை பயன்படுத்திக்கொள்ளவில்லை.

கடல் அலைகளில் இயங்கு ஆற்றலும், நிலை ஆற்றலும் அடங்கியிருக்கின்றன.

அலை உயரும்போது நிலை ஆற்றலையும், விழுந்து பாயும்போது இயங்கு ஆற்றலையும் கொண்டிருக்கிறது. அலைகள் எழும்பித் தாழ்ந்து பாயும் பாய்ச்சலைப் பயன் படுத்தி, `டர்பைன்களை’ சுழலச் செய்து, ஜெனரேட்டர் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ட்பத்தை மின்சாரப் பொறியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு கடல் அலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் பிரான்ஸ் நாடு முன்னணியில் திகழ்கிறது. தற்போது உள்ள கடல் மின்சார உற்பத்திச் சாதனங்களை விட செலவு குறைவான, செயலாற்றல் அதிகமுள்ள சாதனங்களை
உருவாக்கும் தொழில்ட்ப ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Source:
http://wwwnathiyalai.blogspot.com/

ஞாயிறு, டிசம்பர் 5

உலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட இடம் கண்டுபிடிப்பு!



உலகின் மிகச் சிறந்த வான் ஆராய்ச்சி மையத்திற்கான தேடலில் கிடைத்ததென்னவோ உலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட, மிக அமைதியான, இதுவரை எந்த மனிதனின் காலடியும் படாத ஒரு இடம். வான் ஆராய்ச்சிக்கான மிக கச்சிதமான இடத்தினை தேர்வு செய்ய புறப்பட்ட அமெரிக்க- ஆஸ்திரேலிய ஆராய்ச்சி குழு ஒன்று இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

வான் ஆராய்ச்சியை பாதிக்கும் மேகமூட்டம், சீதோஷ்ணம், நீராவி, வெளிர்ந்த வானம், வேக காற்று மற்றும் வளிமண்டல சுருள்கள் போன்றவற்றினை பற்றி ஆராய இந்த குழு திட்டமிட்டிருந்தது. பூமி உருண்டையின் அடிமட்டத்தில் அண்டார்டிகா கண்டத்தின் ஓர் பீடபூமியில் 13297 அடி (4053 மீட்டர்) உயரத்தில் அமைந்த அப்படியான ஒரு இடத்திற்கு அவர்கள் ரிட்ஜ் எ (Ridge A ) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த இடத்தில் சராசரி குளிர்கால வெப்பநிலை மைனஸ் 70 டிகிரி செண்டிக்ரட் எனவும்காற்றின் ஈரப்பதம் மிகவும் குறைவு எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

"இங்கே மிகவும் அமைதியாக இருக்கிறது. காற்று வீசுதல் மற்றும் சீதோஷ்ண மாற்றம் என்பதே கிட்டத்தட்ட கிடையாது" என்று இந்த ஆராய்ச்சி குழுவின் தலைவர் வில் சான்டேர்ஸ் தெரிவித்தார்.

இந்த கூறுகள் அனைத்தும் மிகச்சிறந்த ஒரு வான் ஆராய்ச்சி மையம் ஒன்றிற்கான அடித்தளத்தினை அமைக்கிறது. இங்கிருந்து எடுக்கப்படும் வான் ஆராய்ச்சிப் புகைப்படங்கள் உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்படும் வான் ஆராய்ச்சி புகைப்படங்களை விடவும் குறைந்த பட்சம் மூன்று மடங்கு துல்லியமாக இருக்கும் என்றும், இங்கு வானம் மிகவும் தனது இயல்பு கரு நிறத்திலும், வறண்டும் இருப்பதால் ஒரு சாதாரண தொலைநோக்கி (telescope) என்பது இங்கே உலகின் மிகச்சிறந்த ஒரு தொலைநோக்கியை போன்ற வீச்சுடன் இருக்கும் என்றும் சாண்டர்ஸ் மேலும் தெரிவித்தார்.

நன்றி:சகோதரர் இளவரசு, இந்நேரம்.காம் அறிவியல்