Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

பயங்கரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயங்கரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், நவம்பர் 1

லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'


லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'


மக்களால்  தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு) 
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு) 
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..! 
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாத வரை..!

இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..! அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!
  • 'ஒவ்வொரு லிபியரிடமும் ஒரு வீடு இருந்தாக வேண்டும்' என்று அறைகூவி, அப்படியே அரசின் மூலம் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தும் வந்தார்..! எப்படி..?புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு அரசு மொய் வைக்கும்..! எவ்வளவு தெரியுமா..? 60,000 லிபிய தினார் (50,000 அமெரிக்க டாலர் = அதாகப்பட்டது... சுமார் 24 லட்ச ரூபாய்ங்க சகோ..!) எதுக்காம்..? அவர்களுக்கான ஒரு வீடு வாங்க..!
  • மதுவை தடை செய்த கடாஃபி, லிபியாவில் கல்வி முற்றிலும் இலவசம் என்றார். அவர், 1969-ல் ஆட்சியை கைப்பற்றியபோது 25 % இருந்த லிபிய நாட்டின் கல்வி கற்றோர் எண்ணிக்கை... இப்போது... 83 %..! நாட்டின் மக்கள் தொகையில் 25%லிபியர்கள் பல்கலைக்கழக பட்டம் பயின்றவர்கள்..! 
  • லிபியருக்கு தேவைப்படும் கல்வியோ மருத்துவமோ லிபியாவால் தர இயலவில்லை எனில், லிபிய அரசு செலவில் இலவசமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்து அவை தரப்படும்..! அதுமட்டுமா..? அகாலத்தில்... மாசத்துக்கு 2,300 அமெரிக்க டாலர் (சுமார்1,12,000 ரூபாய்) பயணப்படியாகவும் அவர்களுக்கு அளிக்கப்படும்..!
  • லிபியாவில்  படித்து பட்டம் பெற்ற ஒரு லிபிய பட்டதாரிக்கு 'வேலை இல்லை' எனில், அந்த பட்டப்படிப்புக்கு தக்க வேலை கிடைத்தால் என்ன சம்பளம் அவருக்கு கிடைக்குமோ, அது அப்படியே அரசின் கஜானாவிலிருந்து அந்த வேலை இல்லா பட்டதாரிக்கு 'படி'-யாக வந்து சேர்ந்துவிடும்..!
  • EB பில் என்றால் என்னவென்றே லிபியர்களுக்கு தெரியாதாம்..! லிபியாவில் தடை இல்லாத மின்சாரம் உண்டு... முற்றிலும் இலவசமாக..!
  • மாதம் தோறும் அரசு ரேஷன் கடையில் பொருட்கள் மிகக்குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த சலுகை குடிமகன்களுக்கு மட்டுமல்ல..!வெளிநாட்டிலிருந்து அங்கே சென்று வேலை பார்ப்பவர்களுக்கும்..! (இத்தகவல்- லிபியாவில் வேலை செய்துவிட்டு பின்னர் என் நிறுவனத்தில் வேலை செய்த பொறியாளர் திரு.D.S.V.பிரசாத் சொன்னது)
  • லிபியாவின் எந்த வங்கியிலும் கடன் பெற்ற லிபியரிடம் அந்த கடனுக்கானவட்டியே வசூலிப்பது கிடையாது..! அசலை மட்டும் அவர் திருப்பித்தந்தால் போதும்..!
  • ஒரு லிபியர் விவசாயம் செய்ய நாடினால்... 'வாங்க வாங்க' என்று அரசே வரவேற்று அவருக்கு தேவையான நிலம் தந்து, பண்ணை வீடு தந்து, விதை தந்து, உரம் தந்து, பாசன வசதி தந்து... ம்ம்ம்... எல்லாமே இலவசம்ங்க சகோ..!
  • ஒரு லிபியர் கார் வாங்க எண்ணினால்... என்ன வகை காராக இருந்தாலும் சரி... உடனே அரசு  50% பில்லை கட்டிவிடும்..!
  • அப்போ...பெட்ரோல் விலை..? ஹி... ஹி... லிட்டர் ஆறேமுக்கால் ரூபாய்ங்க சகோ..! (அட..! சவூதியை விட முப்பது பைசா விலை குறைவா இருக்கே..!)
  • லிபியாவுக்கு பிறநாட்டிலோ... IMF-இலோ எங்குமே கடனே இல்லையாம்..! ஆனால், 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கு லிபியாவுக்கு வரவேண்டிய பணம்தான் வெளியே  நிற்கிறதாம்..!
  • ஆட்சியை கைப்பற்றியவுடனேயே, லிபியாவில் இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய விமானதளத்தை மூடச்செய்து, எண்ணெய் கம்பெனிகளை பன்னாட்டு ஏகாதிபத்திய கம்பெனிகளின் கரங்களிலிருந்து பறித்து அரசின் பங்குகளை உயர்த்தி அவற்றை லிபிய அரசு வசமாக்கினார்., கடாஃபி.  அதிலிருந்து உலகிற்கு விற்கின்ற எண்ணெயில்ஒவ்வொரு லிபியருக்கும் கூட அவருக்கு உரிய பங்கு உண்டு என்றார். அது மக்களின் தனி வங்கிக்கணக்கில் சேர்ந்து விடும்.
  • ஒரு  தாய் ஒரு குழந்தையை ஈன்றேடுத்தால் அவருக்கான லிபிய அரசின் சன்மானம் சுமார் 2.5 லட்சம் ரூபாய்..!
  • நீரற்ற வறண்ட நாடான லிபியாவின் முழுப்பாலைவன மக்களும் தண்ணீர் பெற வேண்டி... உலகிலேயே மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம் (Great Man-Made River project) நிறைவேற்றியவர் கடாஃபி மட்டுமே..!
கடாஃபி..! ஒருகாலத்தில் லிபிய மக்களின் புரட்சித்தலைவர்..!
இப்பேர்பட்ட சிறந்த ஆட்சியாளர்தான்... சிறந்த ஆட்சியாளராக இருந்தவர்தான் கடாஃபி..! எகிப்தின் ஹோஸ்னி முபாரக் போலவோ, டுனிசியாவின் பென் அலி போலவோ நிர்வாகத்திறமை அற்றவரோ... ஊழல்வாதியோ அல்லர்..! இவர்களுக்கு இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம்... அமெரிக்க-பிரிட்டிஷ்-ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கு முழுமையாக எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அடிபணியாதது மட்டுமே..! 

இவரைப்போயா... இவ்வளவு சிறந்த சர்வாதிகாரியையா(!?)  லிபிய மக்கள் எதிர்த்தனர்..? அல்லது எதிர்த்த புரட்சியாளர்களை கொல்லவும் அனுமதித்தனர்..? ஆமாம்..! ஏன்..?

லிபிய புரட்சியாளர்கள்...
அவர்களும் மிகவும் நல்லவர்கள் தான்..!
ஒரு கொலைகார சர்வாதிகாரியை கொல்ல இன்னொரு கொலைபாதக நேட்டோ பயங்கரவாதிகளின் உதவியை ஒப்புக்கொள்ளும் வரை..!

கதாஃபி...
(அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கு)
மோசமான ஆட்சியாளர் ஆனார்..! எப்போது..?

"லிபிய மற்றும் அரபுலக எண்ணெய்க்கான வர்த்தகம் இனி அமெரிக்க டாலரில் அல்ல... தங்கத்தில் தான் இருக்க வேண்டும்" என்று சொல்லும் வரை..!

முன்னர் நடந்த இதையும் கூட... மறந்திருக்க மாட்டீர்கள் சகோ..!

அன்று... அமெரிக்காவின் நண்பனாக இருந்து அவர்களின் ஆயுதங்கள் மூலம் ரஷ்ய ஆயுதங்கள் வைத்திருந்த ஈரானுடன் போர் புரிந்த இராக்கின் அதிபர் சதாம் ஹுசேன், தன் எண்ணெய் வெறியால் பின்னர் குவைத்தை ஆக்கிரமித்ததால் அமெரிக்காவின் எதிரியானார்..! 

விளைவு..? 

அமெரிக்க "நவீன ஆயுதங்களுக்கும்", அமெரிக்க "அதிநவீன ஆயுதங்களுக்கும்" இடையே வளைகுடா போர் மூண்டது..!  அதன் முடிவில், குவைத் விடுதலை அடைந்தவுடன், அந்த ஆத்திரம்... "இனி இராக்கிய எண்ணெய் பரிவர்த்தனை புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் 'ஈரோ' நாணயத்தில்தான் நடைபெறும்" என்று சதாம் ஹுசேன் அறிவித்த பின்னர், "WMD(Weapons of Mass Destruction) வைத்திருக்கிறார் சதாம் ஹுசேன்" என்று பொய்கூறி இராக்கில் நுழைந்ததே அமெரிக்க பிரிட்டிஷ் படைகள்..! (ராஜீவ் சந்திரசேகரனின் Green Zone என்ற ஹாலிவுட் படம் பாருங்கள் சகோ..!)

'ஈரோ'விற்கே அந்த கதி என்றால்... கடாஃபி, தங்கம் கேட்டால்..? இதோ... ஆப்ரிக்காவில் ஒரு இராக்/ஆப்கானிஸ்தான்... உருவாக்கப்படுறது..! முன்னர் தாலிபானிடம் ரஷ்ய ஆதரவு ஆப்கானிய நஜிபுல்லா அரசை எதிர்த்து போரிடச்சொல்லி டன் டன்னாக வெடி பொருட்களையும் நவீன ஆயுதங்களையும் ஒசாமா மூலம் கொண்டு போய் ஆப்கானில் கொட்டி... நடுத்தெருவில் நஜிபுல்லாவை தூக்கில் போடவைத்தது போலவே... இப்போதும்  ஆயுதங்களை கொட்டியுள்ளார்கள் லிபியாவில்..! அதேபோல நடுத்தெருவில் அடிபட்டு, உதைபட்டு, இழுபட்டு, சுடப்பட்டு கொல்லப்பட்டார் கடாஃபி..!

ஆட்சியாளர்களுக்கு  ஒரு படிப்பினையாக...!
சில மாதங்களுக்கு முன்னர் நிராயுதபாணியாக தெருவில் இறங்கி புரட்சி செய்த குடுகுடு கிழவன் முதல், நடக்கத்தெரிந்த சிறுவன் கைகளில் எல்லாம் இன்று புதுப்புது நவீனரக ஆயுதங்கள்,  வெடிகுண்டுகள் எல்லாம் எப்படி முளைத்தன..?  இங்கே photo gallery பாருங்கள்.

மகிழ்ச்சியில் குதித்து குதித்து வானத்தை நோக்கி "டம்... டம்" என்று சுடுகிறார்கள்..! அதில் ஒரு அதிபயங்கர துப்பாக்கி குண்டு வானில் சென்று வெடிக்கிறது..!!! என்னவொரு பயங்கர ஆயுதம்..!!! இந்த குண்டை உடலில் ஒருவன் வாங்கினால் பிழைக்க வழியே இல்லையே சகோ..? யு-ட்யூபில் அணிவகுக்கும் ஆதாரங்கள் இவை..! 

Libya Rebels had NATO Weapons from Day 1 - Brand New
இவைகளை எல்லாம் தயாரித்து அன்போடும் பாசத்தோடும் நிராயுதபாணியாக நின்ற லிபியர்கள் கைகளில் அளித்த அந்த அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இப்போது அவற்றை திரும்பியா வாங்கிக் கொள்வார்கள்..? பதிலுக்கு அந்த பயங்கரவாதிகள் இந்த கொலைகார புரட்சியாளர்களிடம்  பிரதியுபகாரமாக கச்சா எண்ணெய் அல்லவா கேட்பார்கள்..? இதோ... இப்போதே ஆரம்பித்தும் விட்டார்களே..!

Stolen National Libyan Oil Exported By CIA Run Al-Qaeda Rebel Forces For Illegal Arms

இதனை லிபியர்கள் எதிர்த்தால்..? அப்போது, தங்கள் கைகளில் இருக்கும் அந்த ஆயுதங்களை லிபியர்கள் இனி என்னதான் செய்வார்கள்..? அடப்பாவமே..! இதோ... ஆப்ரிக்காவில் இன்னொரு ஆப்கன்/இராக் உருவாக்கப்பட்டு விட்டதா..!? இனி அமைதி காக்கும் நேட்டோ கூட்டுப்படைகள் லிபியாவில்  நிரந்தரமாக தங்கிவிடுமா..?

லிபியர்கள் தங்கள் தலையில் அள்ளிப்போட்டுக்கொண்டது அமெரிக்க மண் அல்ல... அவர்களின் மலம்..! எத்தனை முறை குளித்தாலும் பல வருடங்கள் ஆகுமே... பயங்கரவாதம் எனும் அந்த துர்நாற்றம் நீங்கி... அமைதி எனும் அந்த வாசனை மீண்டும் வீச..!

எகிப்திலும்  துனிசியாவிலும் அமெரிக்க நேட்டோ பயங்கவாதிகள் நுழையாததற்கு அங்கே லிபியா மாதிரி எண்ணெய் வளம் இல்லாமை மட்டுமே காரணம் அல்ல சகோ..! அந்தந்த நாட்டு அறிவுடைய ராணுவங்களும் மக்களும்தான் காரணம்..!

அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட பென் அலியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை துனிசியாவின் ராணுவம் ஏற்கவில்லை. 

அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை எகிப்தின் ராணுவமும் ஏற்கவில்லை.

அதனால்... அங்கே மக்கள் புரட்சியும் வெற்றிபெற்றது..! சர்வாதிகார ஆட்சியாளர்களும் உயிரோடு நாட்டைவிட்டு தப்பித்தார்கள்..!     

ஆனால், லிபியாவின் ராணுவம் கடாஃபியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை ஏற்றது..! நிராயுதபாணியாக நின்ற புரட்சியாளர்களையும் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி அநியாயமாக சுட்டுக்கொன்றது..!      இதன்  விளைவுதான் பழிதீர்க்க பொதுமக்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் ஆயுதங்கள் தேவைப்பட்டது. 

திடுமென அவை அவர்களின் கைகளில் விதம் விதமாக தரப்பட்டன..! வெடித்தன..! பழிவாங்கும் உணர்ச்சிக்கு முன்னால்... கற்ற கல்வியோ... அனுபவித்த வாழ்க்கையோ... எதுவுமே அவர்களை சிந்திக்க வைக்கவில்லை..! லிபியர்களின் அறிவு அப்போது ஏனோ வேலை செய்யவில்லை..!     

அதனால்... கடாஃபி,
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் 'கொல்லவைக்கப்பட்டார்'...!   
அல்லது...    
புரட்சியாளர்களால் நேரடியாக கொல்லப்பட்டார்..!   
அல்லது...  
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் மறைமுகமாக கொல்லப்பட்டார்..!   

பின்வருவன எல்லாமே இனி... மற்ற சர்வாதிகாரிகளுக்கு சிறந்த படிப்பினைகள்..! 
  • தான்மட்டுமே நாட்டை ஆளவேண்டும் என்று எண்ணாதீர்கள்..!      
  • என்னதான் சிறப்பாக ஆட்சி செய்தாலும், தம்மைவிட வேறொருவர் இன்னும் சிறப்பாக ஆட்சி செய்வார் என்று நம்புங்கள்..!      
  • மக்களில் ஒரு சாரார் தம்மை- தம் ஆட்சியை எதிர்த்தால்... பேசாமல் அதையே ஒரு வழக்காக நீதி மன்றத்தில் வைத்து, ஆட்சியாளர் குற்றவாளிக்கூண்டில் ஏறி தம் தரப்பு வாதங்களை வைத்து இருவருக்கும் பொதுவான நம்பகமான நீதிபதி கொண்டு அமைதியான முறையில் தீர்வு காணுங்கள்..! அதை நேரடி ஒளிபரப்பில் நாட்டு மக்களுக்கு காண-கேட்க அளியுங்கள்..!       
  • எக்காரணம் கொண்டும் எதிர்க்கும் பொதுமக்கள் மீது கொலைபாதக அடக்குமுறை செலுத்தி கொன்று குவிக்காதீர்கள்..!      
  • தன்னை சுற்றி எப்போதும் பெண்களை (பாதுகாவலர்கள் எனும் பெயரில்) வைத்துக்கொண்டு ஆடம்பரமாகவும் அசிங்கமாகவும் மக்களுக்கிடையே அநீதி இழைத்துக்கொண்டு வாழ்ந்தால்... மக்கள் உங்களை அடியோடு வெறுத்து விடுவார்கள்... நீங்கள் எவ்வளவுதான் சிறந்த ஆட்சியாளர் என்றாலும் கூட..!  
அடுத்து...  

இன்னொரு கேடுகெட்ட மோசமான படிப்பினை ஒன்றும் உள்ளது..!

  • எண்ணெய்  வளம் கொண்ட ஆட்சியாளர்களின் தலை மயிர்கூட இனி அமெரிக்க - பிரிட்டிஷ் - ஐரோப்பிய  ஏகாதிபத்திய நலனுக்கு எதிராக அவர்களின் விருப்பத்துக்கு எதிராக ஆடிவிடக்கூடாது..! அப்படி மீறி ஆடினால்... அந்த தலையே கொய்யப்படும்..! அல்லது... கொய்யவைக்கப்படும்..!  
மக்களே..! உலகின் பயங்கரவாதங்களுக்கு எல்லாம் மூலகர்த்தாவான... ஆயுதவியாபாரம் செய்யும் அமெரிக்க -ஐரோப்பிய- சியோனிஸ நேட்டோ பயங்கரவாதிகளை நாம் எப்போது இனங்கண்டு கொள்வது..? அமெரிக்கர்களே இவ்வுண்மையை புரிந்து கொண்டு "WALL STREET ஆக்கிரமிப்பு போராட்டம்" என்று ஆரம்பித்து விட்டார்களே..!

கடாஃபியின் இறப்புக்கு பின்னர், அவரின் ஆட்சி பற்றியும் நிகழ்கால லிபியா  பற்றியுமான ஒரு 'அலசல்' அல்லது அதுபற்றியான ஒரு 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்', முற்றும்..!

நன்றி: சகோதரர் முஹம்மத் ஆஷிக்,

சனி, மே 14

ஓ.! பயங்கரவாத சைத்தானே.! உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..!

ஓ.! பயங்கரவாத சைத்தானே.! உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..!


http://pinnoottavaathi.blogspot.com வலைபக்கத்திலிருந்து

ஜப்பான்- ஹிரோஷிமா- 1945- ஆகஸ்ட்-6 காலை 8.15.

அன்றுதான்... அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், கலாச்சாராத்திலும்,
கல்வியிலும் முன்னேறிய... அமெரிக்கா என்ற உலக மக்கள் விரும்பும் ஒரு
அதி புத்திசாலி நாடு, இந்த நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் அப்பாவி மக்கள்
மண்டையில் அணுகுண்டு போட்டு மனிதம் இழந்து பயங்கரவாதி ஆன நாள்..!
அந்த அணுகுண்டிற்கு அது ஜாலியாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy).
அன்று அந்த ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 அப்பாவி
பொதுமக்கள் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள். சுமார் 16
கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக ஒன்றுமின்றி
முற்றாக அழிந்தது.



இவ்வளவு பெரிய நாசத்தை கண்டு விட்டு, கதிகலங்கி உலகமே நிலை குலைந்து
திக்பிரமை பிடித்து செயலற்று நெஞ்சு விம்ம துக்கத்தில் இருக்க, ஜப்பனோ... என்ன
செய்வது என்றே புரியாமல் அப்படியே உறைநிலையில் சிலையாகிக் கிடக்க...
மூன்று நாட்கள் கழித்து...

ஜப்பான்- நாகசாகி- 1945- ஆகஸ்ட்-9.

0.0000000000....1% கூட மனிததன்மையோ, குற்ற உணர்ச்சியோ... இன்னும் மனிதன்
என்றால் அவனிடம் குறைந்த பட்சம் என்ன என்ன தன்மைகள் எல்லாம்
இருக்க வேண்டுமோ அதெல்லாம் எதுவுமே இல்லாத ஒரு சாத்தானாய்...
"உலகத்தின் அதிகாரபூர்வ பயங்கரவாதி-அமெரிக்கா" மீண்டும் இங்கே
இன்னொரு அணுகுண்டை போட்டான். முன்பை விட இங்கே அழிவு கூட
இருக்க வேண்டும் என்று ‘குண்டு மனிதன்’ (fat man) என தெனாவட்டாய்
இதற்கு பெயரும் இட்டான். அதன் தீ ஜுவாலை மேகத்தை தாண்டி,
குண்டு போட்ட விமானத்தின் உயரத்தையும் கூட தாண்டியது..! 74,000
அப்பாவி பொதுமக்கள் நாகசாகியில் நாசமாகினர்.


மனித வரலாற்றில் நினைத்தும் பார்த்திராத இந்த அகோர குண்டு வீச்சுகள் மூலம்
ஏற்பட்ட மனித இறப்பும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட
முயன்றும் முடியவில்லை. குண்டு விழுந்த பிறகு வருடக்கணக்காக மக்கள்
குற்றுயிரும் குலையுயிருமாக இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால்
மடிந்தனர். கதிர்வீச்சு பாதிப்புகள் இன்றும் தலைமுறையாக
தலைமுறையாக தொடர்கிறது.

1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டு கதிர்வீச்சின்
நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது.
பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான
பின்பும் கூட சதைப்பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு
போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாக குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றை
வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

இந்த குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை இப்படி சொன்னது:
“சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடுகளாக ஹிரோஷிமா மற்றும் நாகசாகி
நகரங்கள் காணப்பட்டன”என்று..! இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் மூன்றாம்
வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டை போடத்தயார் நிலையில்
இருந்தது..! இதனை எப்படியோ அறிந்து கொண்ட ஜப்பான், 1945, ஆகஸ்ட் 15 ஆம்
தேதி தான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவுப்
பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு
வந்ததாக அறிவித்தான் சாத்தான் அமெரிக்கா.

“அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான்
அமெரிக்கா இச்செயலை செய்தது. பொதுமக்கள் மீது அமெரிக்காவுக்கு
அணுகுண்டைப்போட எந்தத்தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று
ஜப்பான் தன் உள்ளக்குமுறலை முன்வைத்தது.

அப்போது, அந்த பயங்கரவாதி சாத்தான் என்ன சொன்னான் தெரியுமா..?
"அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமல் இருந்திருந்தால்
இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம்
இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல்
அமெரிக்கா பார்த்துக்கொண்டது" என அமெரிக்க அரசின் அறிக்கையில்
குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதக படுகொலையை நியாயப்படுத்தும்
அமெரிக்க அரசின் நிலை குறித்து பெரும் சர்ச்சை உலகெங்கும்
இன்றும் தொடர்கிறது..! ...இப்போது இந்த நம் பதிவிலும் கூட..!

அதன் பிறகு உலகம் இவனை "World's Official Terrorist"-ஆக மானசீகமாய்
அங்கீகரித்தது. இவன் என்ன செய்தாலும் கண்டு கொள்வதில்லை. இவனை
எதிர்த்தது ரஷ்யா. நோக்கம்,தானும் ஒரு "World's Official Terrorist" ஆக வேண்டும்
என்பதே..! இருவர் பக்கமும் அணிகள் சேர்ந்தன.

அப்போது உலகில் சில நாடுகளில் 'மனிதர்கள்' ஆட்சி செய்தனர். அவர்கள் எல்லாரும்
கூட்டு சேர்ந்து 'அணிசேரா நாடுகள் அமைப்பு' என்று ஒரு அணியை ஏற்படுத்தினர்.
அதில் நான் பிறந்த ஒரு நாடும் முன்னணியில் இருந்தது என்று நினைக்கும்போது
மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஆனாலும் இவர்கள் சற்று ஆயுத பலமில்லாதவர்களாகவே இருந்தனர். பின்னாளில்,
அந்த இரண்டு 'official பயங்கரவாதிகளும்' செய்த 'official பயங்கரவாதங்களை'
இவர்களால் தடுக்க இயலவில்லை. இருவருக்கும் மத்தியில் புதிய புதிய
ஆயுதங்கள் உற்பத்தி செய்வதில் கடும் போட்டி நடந்தது. இதற்கு 'பனிப்போர்' (cold-war)
என்று 'கூலாக' பெயரிட்டனர் கோமாளிகள்.

அப்போட்டியில் ஒரு ஆயுதம் கண்டுபிடிக்கப்பட, அதை அளவுக்கு மிகுதியாக
உற்பத்தி செய்துவிட்ட பின்னர், (அழிவு)அறிவு முன்னேற்றத்தால் இப்போது
முன்னதைவிட சக்தி வாய்ந்த புதிய ஆயுதம் கண்டுபிடிக்கப்பட... பழையதை
என்ன செய்வது..? அழிக்கவோ தூக்கிவீசவோ அதனால் நஷ்டப்படவோ
விரும்பவில்லை இந்த பயங்கரவாதிகள். எனவே...

இருவரும் தனித்தனியே யோசித்ததன் விளைவுதான், "தானே போரில்
ஈடுபடக்கூடாது; வேறு யாரையாவது போரிட தூண்டி விட்டு அவர்களிடம்
தங்கள் ஆயுதங்களை கொடுத்து, அதன்மூலம் ஏற்படும் நாசத்தின் மூலம் தங்களின்
எந்த ஆயுதம் 'வலியது' என்று அறிந்து கொள்வது" என்று முடிவு எடுத்தனர்.

இவர்களுக்கு இதில் 'போரிட்டு உதவுவதற்கு' என, உலக வரலாற்றில்
அக்கிரம ஆட்சியாளர்களாய் பலர் வாழ்ந்தனர். (இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்).

இதற்கு உலகில் நமக்கு நன்கு அறிந்த உதாரணங்கள் சில:

அமெரிக்க-இராக் Vs. ரஷ்ய-ஈரான்
அமெரிக்க-பாகிஸ்தான் Vs. ரஷ்ய-இந்தியா
அமெரிக்க-இஸ்ரேல் Vs. ரஷ்ய-எகிப்து

இப்படி மனிதம் இழந்த சுயநல இளிச்சவாயர்கள் கிடைக்காவிட்டால் என்ன செய்வது..?

அடுத்து... மீண்டும்-யோசனை- ம்ம்ம்ம்...ஐடியா..!

இந்த இருவரும் தம் படை ஆயுத பலத்தால் உலகில் எங்காவது ஏதாவது ஒரு
அக்கிரமத்தை ஏதாவது பகுதியில் செய்துகொண்டு இருந்தனர் அல்லவா..? இப்போது,
இந்த வல்லரசுகளுக்கு எதிராக அந்த ஆக்கிரமிப்பு பகுதியில் யாராவது அரசுக்கு
எதிராக போராட ஆரம்பித்து விட்டால் உச்சி குளிர்ந்து விடும் இவர்களுக்கு.
உடனே ரகசியமாக அந்த புரட்சியாளர்களுக்கு ஆயுத சப்ளை செய்துபோரை
ஊதி ஊதி அணையாமல் பார்த்துக்கொண்டு இவர்களின் வயிறை
வளர்த்துக்கொண்டு இருப்பார்கள்.

இதற்கும் நிறைய உதாரணங்கள் உள்ளன. எதிர்க்கப்படும் அரசு எதாவது
ஒரு வல்லரசின் அணியில் இருந்தால்... அதற்கு official ஆயுத சப்ளை செய்வது
அந்த வல்லரசுதான்.

அதேசமயம், எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு/பயங்கரவாதிகளுக்கு unofficial ஆயுத
சப்ளை செய்வது எதிர் வல்லரசு..! இப்படி, பயங்கரவாதிகளுக்கு unofficial ஆயுத சப்ளை
பற்றி உலகில் ஒருத்தணும் வாயை திறக்க மாட்டான்..!

சிந்தியுங்கள் சகோ.....!

இந்தியாவுடன் போரிட காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதம் தருவது யார்?

இலங்கையுடன் போரிட விடுதலைப்புலிகள் ஆயுதம் பெற்றது யாரிடமிருந்து..?

இஸ்ரேலுடன் போரிட PLO/ஹமாஸ் இவர்களுக்கு ஆயுதம் வழங்குவது யார்?

ரஷ்யாவுடன் போரிட தலிபானுக்கு/அல்கைதாவுக்கு ஆயுத சப்ளை யார்..?

இதனால் உலகெங்கும் வரலாற்றில் எங்காவது இரண்டு மூன்று இடங்களில் போர்கள்
என்ற பெயரில் பயங்கரவாதங்கள் நடந்த வண்ணம் இருந்தன; நடத்திய வண்ணம்
இருந்தனர் இந்த இரண்டு சாத்தான்களும்.

இன்னும்... இதுபோல "வல்லரசுகள் sponsored terrorism" ஏகப்பட்டவை
உள்ளன உலகில்..! இதற்கெல்லாம் ஒருத்தரும் ஒரு சிறு எதிர்ப்பை கூட சொல்வதில்லை..!
ஐநா என்று ஒரு தூங்குமூஞ்சி "மாற்றுத்திறனாளி" அமைப்பு உண்டு.

இவர்களின் வேலை:- போர் ஓய்ந்த பின்னர் சாவகாசமாக வந்து போர் நடந்த
இடங்களை பார்வையிட்டு... "இத்தனை ஆயிரம் பேர் இறந்தனர்... இவ்வளவு
சேதம்... இதெல்லாம் போர்குற்றம்..." என்று அறிக்கை மட்டும் அளிப்பது. தட்ஸ்ஆல்..!

பிற்காலத்தில் ஒரு ரஷ்ய அதிபர் அமெரிக்க கைக்கூலியாகி தன் நாட்டின்
இரும்புத்திரையை உடைத்து விட்டு அதற்கு பிரதியுபகாரமாக அமைதிக்கான
நோபல் பரிசு பெற்றுக்கொண்டு... அங்கேயே சொகுசாக தங்கியும் விட்டார்.

இப்பொது, அந்த அமெரிக்கா எனும் சாத்தான் தனக்கு போட்டியே இல்லாமல்
போய்விட... இனி தன் ஆயுதத்தை தானே பரிசோதிக்க ஆரம்பித்தது. அதாவது
தன் பழைய ஆயுதத்தை எவரெல்லாம் வாங்கி வைத்து இருக்கிறார்களோ..
அவர்களிடம் வலிய சென்று தன் புதிய ஆயுதங்கள் மூலம் சண்டை போட்டு ஜெயிப்பது..!
இது ஒரு நோய். அமெரிக்கா எனும் சைத்தானை பிடித்து ஆட்டும் மன நோய்.
இதன் அடிப்படையில் புதிய ஸ்கட் ஏவுகணை தன் பழைய பேட்ரியாட் ஏவுகணையை
விட பலம் வாய்ந்தது என்று அறிய ஒரு போர்.

( இங்கே நம் வயிற்றில் புளியை கரைக்கும் ஒரு செய்தி:
2010-ம் ஆண்டின் நம்பர் ஒன் ஆயுத ஏற்றுமதியாளர் அமெரிககா..!
நம்பர் ஒன் ஆயுத இறக்குமதியாளர் இந்தியா..! )

தான் தந்த பழைய ஆயுதத்தை விட தன் புதிய ஆயுதத்தை பரிசோதிக்க மட்டும்
அல்லாது ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வித்தையாக எண்ணைய் வளம்,
எரிவாயு வளம், கனிம வளம் என்று பலவற்றுக்காகவும் போர் என்ற பெயரில்
தன் பயங்கரவாதத்தை நடத்தும் அமெரிக்கா..! இதனை எதிர்த்து எவனாவது
கேள்வி கேட்டால் அவன் மீதும் போர் நடத்தும்.

இந்த 'மனிதக்கொல்லி வைரஸ் நோய்' முற்றி... கடைசியில் தன் சொந்த நாட்டு
மக்களையே கொஞ்சமும் ஈவு இறக்கம் இன்றி WTC-இல் விமானம் மூலம் தாக்கி
பின்னர் குண்டுகள் வைத்து கட்டிடத்தை இடித்து, மக்களை கொன்று, (ஆதாரம்)
அந்த பழியை தான் ஒழிக்க நினைக்கும் தன் பயங்கரவாத அடியாள் மீது போட்டு,
(ஆதாரம்) அவனை உலகத்துக்கே எதிரியாக்கி, சமீபத்தில் கனிம
வளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்கனில் (ஆதாரம்) அவன் இருப்பதாக தன்
காலணி -அதாவது- செருப்பு நாடான பாகிஸ்தானில் "ஒபாமா-ஒசாமா-டிராமா"-வை வெற்றிகரமாக அரங்கேற்றி உள்ளது. (ஆதாரம்)
ஊடக பலத்தினால் உலகத்தையே நம்பவைத்து... ஆப்கானை பிடித்துக்கொண்ட
பின்னர், அடியாளின் அவசியம் தேவை இல்லை என்றாகிவிட்ட பின், இப்போது

மிக நுணுக்கமாக ஒவ்வொரு சினிமாவையும் அலசி பிச்சு கூறு போட்டு விருது
கொடுக்கும் அகாடமிகளிடம்... ஏகப்பட்ட ஓட்டைகள், முரண்கள் உள்ள
நம்பகத்தன்மை அதாவது கொஞ்சமும் லாஜிக்கே இல்லாத இந்த சூப்பர் ஹிட்
படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கலாம்..! இப்படி ஒரு
"ஒபாமா-ஒசாமா-சினிமா"-வை தன் மண்ணில் அனுமதித்ததற்கு
சர்தாரி-கிலானிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கூட கிடைக்கலாம்..!

ஆச்சர்யப்பட அவசியம் இல்லை சகோ...!

இரண்டாம் உலகப்போர் சமயம் அப்போதைய பிரிட்டிஷ் அரசால்
'dead-or-alive'பிடித்துக்கொடுத்தால் bounty prize £10,000 என அறிவிக்கப்பட்ட
மேநாச்சம் பெகின் என்ற ஒர் உலக மகா யூத வெடிகுண்டு பயங்கரவாதிக்கு,
பிற்காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்து அழகு பார்த்தது இந்த
அமெரிக்க சைத்தான்.

இதுபோல, அமெரிக்காவின் "முன்னாள் பயங்கரவாத நண்பன்" ஆன,
பின்னால் 'பயங்கரவாதி' என அறிவிக்கப்பட்டு தலைக்கு 25 மில்லியன்
டாலர் விலை வைக்கப்பட்ட, இவ்வாரம் ஃபைல் குளோஸ் பண்ணப்பட்ட,
ஒசாமா பின் லாடன் கூட, கொஞ்சம் அமெரிக்காவிற்கு வளைந்து கொடுத்து
இருந்திருந்தால், அன்று ஆப்கன் அதிபராய் ஆக்கப்பட்டு, இன்று
நோபல் பரிசும் கொடுக்கப்பட்டும் இருந்திருக்கலாம்..!

ஊடகம் மூலம் அமெரிக்கா சொன்னால், எதையும் நம்பும் மக்கள் உள்ள இவ்வுலகில்,
அது நினைத்தால் எதுவும் நடக்கும் இன்றைய உலகில்..!

உலகத்திற்கு "World's Official Terrorist" ஆன இந்த அமெரிக்காவை 'கொல்வது' யார்..?

'கொல்வது' என்றால்...

"இனி நான் ஆயுதங்கள் செய்து பயங்கரவாதிகளுக்குவிற்க மாட்டேன்..."

"எந்த நாட்டையும் என் ஆயுதங்கள்மூலம் அநீதமாய் ஆக்கிரமிக்க மாட்டேன்"

"எந்த நாட்டு மக்களையும் இனி நான் குண்டுகள் போட்டு கொல்ல மாட்டேன்"

என ஒவ்வோர் அமெரிக்க அதிபரும் இறைவனிடம் சத்தியம் செய்து
பதவிப்பிரமாணம் எடுத்து, அதன்படி நடந்து... அப்படி அமெரிக்கா மனம்
திருந்தினால் மட்டுமே உலகத்தில் இனி அமைதி நிலவும்..! வேறு வழி இல்லை..!

இதுவரை உலகம் முழுக்க அமெரிக்கா சாகடித்த மனித உயிர்களை
கணக்கிட்டால்... கோடிகளில் தான் இருக்கும். பிரபஞ்ச மகா பயங்கரவாதி இவன்..!

உலகம் இன்னும் உன்னை நம்புதேடா...! ஓ..! பயங்கரவாத சைத்தானே..!


நன்றி: சகோ.முஹம்மத் ஆஷிக்
http://pinnoottavaathi.blogspot.com